Tuesday, March 31, 2009

காமத்தில் இருந்து கடவுளுக்கு

ஓஷோவை பற்றி எனக்கு அறிமுகம் கொடுத்தது என் சித்தப்பா, ஒஷோவை எல்லோரும் செக்ஸ் சாமியார் என்று சொல்வாங்க ஆனால் நிஜம் அதுவல்ல, அவரின் புத்தங்களை படிஎன்று சித்தப்பா கொடுத்த அறிமுகத்தினால் ஓஷோவின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். முதலில் படித்தது, ”நான் உனக்கு சொல்கிறேன்” என்ற புத்தகம்.

பைபிள் வாசகத்துக்கு இவர் கொடுக்கும் விளக்கங்களால் கவரப்பட்டு இவரை பற்றிய புத்தங்களை தேடி, தேடி வாங்கினேன் ஒரு கட்டத்தில் ஓஷோவின் புத்தங்களுக்குமட்டும் என்று ஒரு அலமாரி ஒதுக்கும் படி ஆனது! அடிக்கடி திரும்ப திரும்ப படிக்கும் புத்தங்கள்

1)காமத்திலிருந்து கடவுளுக்கு

2)நான் உனக்கு சொல்கிறேன் 1&2

3)புத்தரின் பக்தி சூத்திரம்

என் அறை என் கம்யூட்டர் டெஸ்க்டாப் என்று, எங்கும் ஓஷோவின் படங்கள் நிறைய ஆரம்பித்த நேரம் வீட்டில் கொஞ்சம் கலவரமாக பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஆன்மீகம் என்றால் சாமியாராய் போவது மட்டும் தான் தெரியும்! ஒரு முறை அம்மாவே கேட்டுவிட்டார் என்னடா..? இப்படியே போனால் சாமியாரா போய்டுவே போல் இருக்கிறதே என்று.

காமத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்த்த மனிதர்களில் ஒருவர்! அல்லது ஒருவரே ஒருவர் என்றும் சொல்லலாம் ஓஷோவை! அவரின் ”காமத்திலிருந்து கடவுளுக்கு...!” என்ற புத்தகம் ஒன்று போதும் காமத்தை பற்றி சரியான விளக்கம் கிடைக்க,காமத்தை பற்றி பேசினால்பாவம் என்று நினைக்கும் கால கட்டத்தில் சாமியார் ஆன்மீக குரு என்று அழைக்கப்படும் ஒருவர் செக்ஸை பற்றி பேசுவது என்பது அத்தனை எளிது அல்ல.அதில் அவர் சொல்லியதில் இருந்து சில...ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான் அவனுக்கு ரொட்டியின் வாடை தெரியும்.

அதுபோல் தான் காமமும், காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை விட அதிகமாக காமத்தை பற்றியநினைவில் இருப்பார்கள், ஒருநாள் அவர்களால் காமத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்றால், உள்ளே அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் காமம் வெளிவந்துவிடும் அதனாலேயே சதா காமத்தை அடக்குவதை பற்றியும் அதுக்கு எதிராக கருத்துக்களை சொல்லியும், அந்த எண்ணத்தை அழுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறார். வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினை பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அதுபோல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவன் மட்டுமே அந்த சிந்தனை இன்றி இருக்கமுடியும் என்கிறார். அதுபோல, உடலுறவு கொள்ளும் கணம் மட்டுமே ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை ”நான்” மறந்த கணம். அந்த “நான்” மறைந்த எந்த சிந்தனையும் இல்லாத கணம் ஒரு உடலுறவில் ஒரு நிமிடம்தான் நீடிக்கும், அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிட கணத்தின் மேல் உள்ள ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. உடலுறவால் அந்த கணத்தை நீட்டிக்கமுடியாது தியானம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்கமுடியும் என்று கொடுக்கும் விளக்கம். காமத்தை பற்றி ஒரு புதிய பார்வையை கொடுக்கும்!

மேலும் இந்த புத்தகத்தில் எங்கும் ஆன்மீகத்தை பற்றியோ கடவுளை பற்றியோ எதுவும் இல்லாததால் நாத்தீகர்கள் கூட படிக்கலாம் இதை.

ஓஷோவை சாமியாராக அனுகவேண்டாம் ஒரு ஆசிரியராக அனுகவும் எவ்வித முன் முடிவுகளும் இல்லாமல் காமத்திலிருந்து கடவுளுக்கு புத்தகதை வாங்கி படியுங்கள் காமத்தை பற்றி பல புரிதல் கிடைக்கும். ஏன் மனிதனுக்கு காமம் மேல் அத்தனை ஆசை என்று.

70 comments:

Vidya Poshak said...

firstu

Vidya Poshak said...

me the secondu

Vidya Poshak said...

I am the thirdu

Vidya Poshak said...

pathivu superu

கோவி.கண்ணன் said...

எந்த ஊரு காமத் ? நான் பெங்களூரீல் காமத்தில் சாப்பிட்டு இருக்கிறேன். சென்னை காமத் சகிக்காது. கல்லாவுக்கு மேலே கடவுள்(கள்) படம் இருக்கும்

Vidya Poshak said...

நல்ல கருத்து

Vidya Poshak said...

ஆழ்ந்த தத்துவம்

Vidya Poshak said...

சரி வேற ஆள் வந்தாச்சி அதனால் பதிவு படிச்சிட்டு வரேன்

குடுகுடுப்பை said...

படிச்சிருவோம்.

Vidya Poshak said...

why no one for kummi

நாமக்கல் சிபி said...

குட் போஸ்ட்!

Vidya Poshak said...

ஓஷோவை சாமியாராக அனுகவேண்டாம் ஒரு ஆசிரியராக அனுகவும் எவ்வித முன் முடிவுகளும் இல்லாமல் காமத்திலிருந்து கடவுளுக்கு புத்தகதை வாங்கி படியுங்கள் காமத்தை பற்றி பல புரிதல் கிடைக்கும். ஏன் மனிதனுக்கு

ok boss

Ungalranga said...

அருமையான பதிவு..
கலக்கிட்டீங்கா..
அடுத்த வார ஸ்டாரும் நீங்கதான்..
அடிச்சு சொல்றேன்.

anujanya said...

என்ன வரைட்டி! நல்ல பதிவு. அய்யனாருக்கும் பிடிக்கும் :)

அனுஜன்யா

Vidya Poshak said...

குட் போஸ்ட்!

repeatei

Vidya Poshak said...

கோவி.கண்ணன் said...
எந்த ஊரு காமத் ? நான் பெங்களூரீல் காமத்தில் சாப்பிட்டு இருக்கிறேன். சென்னை காமத் சகிக்காது. கல்லாவுக்கு மேலே கடவுள்(கள்) படம் இருக்கு

repeatei

Vidya Poshak said...

அனுஜன்யா said...
என்ன வரைட்டி! நல்ல பதிவு. அய்யனாருக்கும் பிடிக்கும் :)

repeatei

Vidya Poshak said...

ரங்கன் said...
அருமையான பதிவு..
கலக்கிட்டீங்கா..
அடுத்த வார ஸ்டாரும் நீங்கதான்..
அடிச்சு சொல்றேன்.

repeatei

Ungalranga said...

//நாமக்கல் சிபி said...

குட் போஸ்ட்!//

நல்ல பதிவுன்னு சொல்ல வரீங்க சரிதானே?

நாங்களெல்லாம் மொழிபெயர்ப்பு மன்னர்களாக்கும்.

Vidya Poshak said...

ஆமா ஸ்டார் ஆனா இப்படி சீரியஸ் பதிவு போடனும்னு யாரு சொன்னது.... புலி பசிச்சாலும் புல்ல சாப்பிடகூடாது

Ungalranga said...

//Venky said...

ரங்கன் said...
அருமையான பதிவு..
கலக்கிட்டீங்கா..
அடுத்த வார ஸ்டாரும் நீங்கதான்..
அடிச்சு சொல்றேன்.

repeatei//

ஏன்..ஏன் வெங்கி உங்களுக்கு இந்த கொலைவெறி.?!

Ungalranga said...

//Venky said...

ஆமா ஸ்டார் ஆனா இப்படி சீரியஸ் பதிவு போடனும்னு யாரு சொன்னது.... புலி பசிச்சாலும் புல்ல சாப்பிடகூடாது//

இதை நான் வழிமொழிகிறேன்.

Thamiz Priyan said...

நல்ல அறிமுகம்! Nice!

Vidya Poshak said...

ரங்கன் said...
//Venky said...

ரங்கன் said...
//Venky said...

ரங்கன் said...
அருமையான பதிவு..
கலக்கிட்டீங்கா..
அடுத்த வார ஸ்டாரும் நீங்கதான்..
அடிச்சு சொல்றேன்.

repeatei//

ஏன்..ஏன் வெங்கி உங்களுக்கு இந்த கொலைவெறி.?!

யாருக்கு கொலைவெறி...

ஆயில்யன் said...

நல்லதொரு அறிமுகம்!

ஐய்ய என்று ஒதுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களாக இருந்த ஒஷோ புத்தகங்கள் மீண்டும் மறு பார்வைக்குட்படுத்தபட அருமையான பதிவு :)

Sivamjothi said...

You are right. Dont restrict yourself with osho. try to learn from other masters.

VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கு ஓஷோவின் கடவுள் உங்கள் உள்ளே தான் இருக்கிறார் மற்றும் பிரபஞ்ச இரகசியம் எனும் ஸென் ஹைக்கு புத்தகமும் பிடிக்கும். காமத்தில் இருந்து கடவுளுக்கு எனும் புத்தகதின் சாரத்தை அடிக்கடி பேசக் கேட்டிருக்கிறேன். படித்ததில்லை. நிச்சயம் படிப்பேன். எனக்கும் என் மாமா தான் ஓஷோவின் புத்தகங்களை அறிமுகப் படுத்தினார்.

Vidya Poshak said...

ரங்கன் said...
//Venky said...

ஆமா ஸ்டார் ஆனா இப்படி சீரியஸ் பதிவு போடனும்னு யாரு சொன்னது.... புலி பசிச்சாலும் புல்ல சாப்பிடகூடாது//

இதை நான் வழிமொழிகிறேன்

repeatei

Vidya Poshak said...

VIKNESHWARAN said...
எனக்கு ஓஷோவின் கடவுள் உங்கள் உள்ளே தான் இருக்கிறார் மற்றும் பிரபஞ்ச இரகசியம் எனும் ஸென் ஹைக்கு புத்தகமும் பிடிக்கும். காமத்தில் இருந்து கடவுளுக்கு எனும் புத்தகதின் சாரத்தை அடிக்கடி பேசக் கேட்டிருக்கிறேன். படித்ததில்லை. நிச்சயம் படிப்பேன். எனக்கும் என் மாமா தான் ஓஷோவின் புத்தகங்களை அறிமுகப் படுத்தினார்.

repeatei...

எனக்கு இப்ப தான் குசும்பன் அறிமுக படுத்தி இருக்காரு

Vidya Poshak said...

ஆயில்யன் said...
நல்லதொரு அறிமுகம்!

ஐய்ய என்று ஒதுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களாக இருந்த ஒஷோ புத்தகங்கள் மீண்டும் மறு பார்வைக்குட்படுத்தபட அருமையான பதிவு :)

நான் இதை கன்னா பின்னான்னு வழிமொழிகறேன்

யாத்ரீகன் said...

>>> அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிட கணத்தின் மேல் உள்ள ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. <<<

this concept also used to be in many other preachings too.. it'l also come in the DaVinCi Code book

Vidya Poshak said...

Yaro said...
You are right. Dont restrict yourself with osho. try to learn from other masters.


good... keep it up

ராஜ நடராஜன் said...

இயல்பாய் இருப்பவனே மனிதன்.ஓசோவின் கருத்துக்களும்,ஆசிரமும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே.

வால்பையன் said...

//உடலுறவால் அந்த கணத்தை நீட்டிக்கமுடியாது தியானம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்கமுடியும் என்று கொடுக்கும் விளக்கம். காமத்தை பற்றி ஒரு புதிய பார்வையை கொடுக்கும்!//

இதே தான்!
சரி தான்!
ஆனால் தியானம் பண்ணி ”நான்” மறைந்து விட்டால் நான் எங்கே இருப்பேன்.
”நான்” மறைந்தால் வேறு என்னவாக இருப்பேன்.
வேறு யாராக என்னால் ஆகமுடியும். ஒஷோ இப்படி யாராக மாறினார்?

தியானம் மூலம் கடவுளை அடைவதை விட காமத்தின் மூலம் அடைவது எளிது போலவே!

நிறைய கடவுள் போல இதிலும் நிறைய குட்டி தியானம் பண்ண வழியுண்டு தானே!

அபி அப்பா said...

சூப்பர் நானும் மழை பெய்யுது மழை பெய்யூதுன்னு சொல்றேன், ஆனா பைத்தியகாரன்ன்னு சொல்றாங்க!

சூப்பர் பதிவு! ஆனா இந்த ஞானம் எல்லாம் நட்சத்திர வாரத்தில தான் தோணுமா??

வெட்டிப்பயல் said...

ஸ்டார் ஆனா தினமும் ஒரு கார்ட்டூன் போஸ்ட் போடுவீங்கனு பார்த்தா, சீரியஸ் போஸ்டாவே வந்துட்டு இருக்கு. தினமும் ஒரு கார்ட்டூன் போஸ்ட் போடுங்க பாஸ்.உங்களுக்காகவே எலக்ஷன் வேற வந்திருக்கு.

Sampath said...

ஒரு ஓஷோ புக் வாங்கி ரொம்ப நாளா படிக்காம வெச்சிருக்கேன் .... அது என்னமோ கதை புத்தகம் படிக்குறப்ப இருக்க இண்டரஸ்ட் இத படிக்கும்போது வர மாட்டேங்குது ... சொல்லிட்டீங்கல்ல இன்னொருதடவை ட்ரை பண்ணி பாக்குறேன் ....

தமிழன்-கறுப்பி... said...

ஓஷோ ?!

ம்ம்ம்ம....

காமம் மோட்சத்தின் முதல் படி! தன்முனைப்புகள் அறுந்து போகிற இன்னுமொரு தருணம் அந்த காமம்...

சின்னப் பையன் said...

சூப்பர் பதிவு!

Thamira said...

சூப்பர் பதிவு.. (ஆம்மா.. இந்த வாரம் முழுக்க இப்பிடித்தான் போகப்போகுதா.. சீரியஸா..?)

ஜோசப் பால்ராஜ் said...

ஒஷோ உண்மையிலேயே மாறுபட்டப் பார்வையில் அணுகப்பட வேண்டியவர். அவர் வாழ்ந்த விதம், ஆசிரமத்து ஆடம்பரங்களையெல்லாம், அமெரிக்க ஆசிரமத்தில் அவர் வைத்திருந்த பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும்( 97 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்தார், ஆனால் 364 என்று சொல்லுவார்கள்) குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவரது கருத்துகளை படிப்பதையே ஏதோ தீண்டத்தகாத செயலாக பலர் கருதுவது அவர்களது அறியாமை.

பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் எனப்படும் யூத மதத் தலைவர்களைக் குறித்துக் கேட்கும் போது இயேசு சொன்னது “ பரிசேயர்கள் சொல்வதையெல்லாம் செய்யுங்கள், ஆனால் அவர்கள் செய்வதையெல்லாம் செய்யாதீர்கள்”
அது தான் ஓஷோ விசயத்திலும், அவர் சொன்னதையெல்லாம் செய்யலாம், ஆனால் அவர் செய்ததையெல்லாம் செய்யக்கூடாது.

நிகழ்காலத்தில்... said...

நட்சத்திர வாரத்தில் எழுதுவது பொருத்தமே அதிகம் பேருக்கு இவ் விசயம் போய் சேரும்..

வாழ்த்துக்கள்...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சரவணன்,

ஓஷோவை பற்றிய அறிமுகம் அருமை.

வலையுலகில் அவரை பற்றி பேசுபவர்கள் குறைவு. ஆனால் அதிகம் படிக்கிறோம் அதிகம் படிக்கிறோம் என்கிறார்கள். ஓஷோவை படிக்காமல் எதை படிக்கிறார்கள் என எனக்கு சந்தேகம்.

20ஆம் நூற்றாண்டின் தவர்க்க முடியாத நபர் எனும் அடையாளத்தை டைம்ஸ் இதழ் இவரை சிறப்பித்திருந்தது.

ஓஷோ தனது ஸ்டைலுக்கு காப்பி ரைட் வாங்கி இருந்தால் ,நவீன கார்ப்ரேட் குருமார்கள் கப்பம் கட்டியே அழிந்திருப்பார்கள்.

ஓஷோவை அனைவருக்கும் தெரியாதது இவர்களின் பலம்.

இவரை பற்றி மேலும் எழுதுவீர்கள் என எண்ணுகிறேன்.

Dr.Rudhran said...

good. he is an excellent teacher- a great sign post not destination

பரிசல்காரன் said...

அருமையான பதிவு.

உண்மைத்தமிழன் said...

அப்படியா..?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாமியாராப்போயிடுவானோன்னு பயத்தை அம்மாக்கு கிரியேட் செய்து வச்சிட்டு அப்பறமா வீட்டம்மா பத்தி சொன்னீங்களோ :)


ஓஷோ ஒரு குருவுக்குரிய தகுதியாக ... அவர் வழி நடப்பவர்களுக்குள்ளயே ஒரு குருவை கண்டுக்க சொன்னார்...இவங்க வழக்கம் போல கூட்டம் சேர்த்து பின்னாடி அவருக்கே கெட்ட பேரும் வாங்கிக்குடுத்துட்டாங்க...

Anonymous said...

நல்ல பதிவு.

நந்தா said...

மிக அருமையான பதிவு குசும்பன். மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். உங்களினுள்ளே இருக்கும் சீரியஸ் மனிதனுக்கு தொடர்ச்சியாய் தீனி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

ALIF AHAMED said...

50


:)

ஊர்சுற்றி said...

அப்போ கட்டாயமா படிக்கணுமே!!!

Muthu said...

அடடா அடடா .... கைகொடுங்கள் குசும்பு.

சென்னையின் சேவல் பண்ணையொன்றில் தங்கியிருந்த காலகட்டத்தில் சக பண்ணைவாசியொருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் ஓஷோவை மேற்கோள் காட்டி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அசூசைப்பட்டபோது அவர் சொன்னார் : 'தவறா புரிந்துகொள்ளப்பட்ட ஒரு சரியான மனிதர் அவர். ஊரெல்லாம் அவர செக்ஸ் சாமியார்னு மட்டும்தான் பேசும். அவரபத்தி சரியா தெரிஞ்சுக்கணும்னா நா ஒரு புத்தகம் தரேன் படிங்க என்று காமத்திலிருந்து கடவுளுக்கு கொடுத்தார். படித்துவிட்டு திகைப்பூண்டை மிதித்ததுபோலானது.

அதில் அவர் சொன்ன இன்னொரு மிக முக்கியமான விஷயம். காமம் என்னும் விஷயத்தை மிக மரியாதையோடு அணுகவேண்டும்.

அதாவது (வால், இது உங்களுக்கான பதில்) காமத்தை கடவுள் வழிபாடுபோல செய்தல் வேண்டும். கோயிலுக்குள் செல்வதுபோல படுக்கையறைக்குள் செல்லவேண்டும். (இது இயன்றால் காமம் வழியே கடந்து கடவுளை அடைதல் இயலுமாக இருக்கும்)

என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை. எந்த ஒரு துறவியால் இவ்வாறு சொல்ல இயலும் ?

உன் அற்புத ரோஜா மலரட்டும் எனக்குப்பிடித்த மற்றொரு நூல்.

நன்றிகள்.

அன்புடன்
முத்துக்குமார்

வால்பையன் said...

//அதாவது (வால், இது உங்களுக்கான பதில்) காமத்தை கடவுள் வழிபாடுபோல செய்தல் வேண்டும். கோயிலுக்குள் செல்வதுபோல படுக்கையறைக்குள் செல்லவேண்டும். (இது இயன்றால் காமம் வழியே கடந்து கடவுளை அடைதல் இயலுமாக இருக்கும்)//

அதெல்லாம் பயபக்தோடு செய்வோம்!
என் கேள்வி எத்தனை சாமி வேண்டுமானுலும் கும்பிட்டு கொள்ளலாமா? புரியுதா குசும்பனை வைத்து விளக்க வேண்டுமா?

வடுவூர் குமார் said...

இதுவரை ஓஷோவின் புத்தகங்களில் ஒரே ஒன்று தான் படித்திருக்கேன்,பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை.நீங்கள் சொல்லிய புத்தகத்தை இனிமேல் தான் தேடனும்.

G3 said...

//ஸ்டார் ஆனா தினமும் ஒரு கார்ட்டூன் போஸ்ட் போடுவீங்கனு பார்த்தா, சீரியஸ் போஸ்டாவே வந்துட்டு இருக்கு.//

Repeatae :)

கார்க்கிபவா said...

தல, அவரை முதலில் படிப்பவர்கள் நான் ஒரு வெண்மேகத்திலிருந்து ஆரம்பித்தல் நலம் என நினைக்கிரேன்.. இங்கு ஆடும் கல்கி, சிவசங்கர் பாபாவெல்லாம் அவரை பார்த்து சூடு போட்டுக் கொண்டவர்கள். அவர் சொன்ன கதைகளத்தான் கல்கி சொல்லிக் கொண்டிருக்கிறார்

கவிதா | Kavitha said...

நல்ல பதிவு குசும்பன்..

butterfly Surya said...

நன்றி

Ananda said...

Really Super

தருமி said...

சரமாரியான அவரது ஜோக்குகள் பிடிக்கும்

குசும்பன் said...

வெங்கி ரொம்ப ரொம்ப நன்றி:)

நன்றி கோவி எப்ப பாரு ஹோட்டல் பற்றியே நினைப்புதான்
பானை உடைய போவுது!

நன்றி குடுகுடுப்பை

நன்றி சிபி

நன்றி ரங்கன்

நன்றி அனுஜன்யா

நன்றி தமிழ் பிரியன்

நன்றி ஆயில்யன்

நன்றி யாரோ--ஜக்கி, மகரிஷி ஆகியோர் புத்தகங்களும் படிச்சு இருக்கிறேன்!

நன்றி விக்னேஷ்வரன் -படிச்சு பார்த்துவிட்டு சொல்லுங்கள்

நன்றி யாத்ரீகன் - தகவலுக்கு நன்றி

நன்றி ராஜ நடராஜன் -இயல்பு என்பது எப்படி இருக்கனும்?

நன்றி வால் உங்களுக்கு ஒரு நிமிடம் போதும் என்றால் என்ன செய்யமுடியும்? தேடுதல் உள்ளவர்களுக்கே அதை நீடிக்கமுடியும். பல குட்டி தெய்வங்களிடமும் போகலாம் ஆனால் வரத்துக்கு பதில் சாபம் எயிட்ஸ் வழியில் வரும்!

நன்றி அபி அப்பா பழசை கொஞ்சம் யோசிச்சு பார்க்கனும்:)

நன்றி வெட்டி என்னையும் கொஞ்சம் அனத்த விடுங்க:)

நன்றி sampth எந்த புத்தகம்?

நன்றி தமிழன்-கறுப்பி

நன்றி ச்சின்னப் பையன்

நன்றி ஆதி ஒரு போஸ்டுக்கே இப்படி அழுதா இன்னும் ஒரு 10 இதுபோல் எழுதிவைத்து இருக்கிறேனே அதை என்ன செய்வது?:)))


நன்றி அவரு எத்தனை காரு வெச்சுயிருந்தா என்னா இல்லை என்றால் என்னா நல்ல கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் ஏத்துக்கனும்!

நன்றி அறிவே தெய்வம் மிக்க சரி

நன்றி ஸ்வாமி ஓம்கார்- எப்படி உங்களை பொறி வெச்சு புடிச்சேன் பார்த்தீங்களா? தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!பல படிப்பது கதைகள், அவர்களுக்கு ஆன்மீகம் என்பது 50க்கு பிறகு என்ற நினைப்பு இருக்கலாம்,ஓஷோவின் கருத்துக்களை சொல்லிதான் பாதி கார்ப்ரேட் சாமியார்கள் காசு பார்க்கிறார்கள் ஆனால் அவை ஓஷோவின் கருத்துக்கள் என்று சொல்லாமல் இருப்பதுதான் வேதனை! தங்களின் ஆதரவுக்கு நன்றி! தங்கள் மேல் இன்னும் மதிப்பு உயருகிறது.

நன்றி டாக்டர்.ருத்ரன் சார், இதை எழுதும் பொழுது உங்கள் புரொபைல் முகம் நினைவுக்கு வந்தது.தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி


நன்றி பரிசல்


நன்றி உண்மை தமிழன் அண்ணாச்சி அப்படியேதான்!

நன்றி முத்துலெட்சுமி எல்லோர் ஆசிரமத்திலும் அவர்களுக்கு நடப்பதுதான்.

நன்றி வடகரை வேலன் அண்ணாச்சி

நன்றி நந்தா--தொடர்ந்து தீனி போட்டால் என்னை போட்டுவிடுவார்கள் போல:)

நன்றி மின்னல்

நன்றி ஊர் சுற்றி கண்டிப்பா படிங்க!

நன்றி முத்துக்குமார்

நன்றி வடுவூர் குமார்

நன்றி G3

நன்றி கார்க்கி மிக சரியாக சொன்னாய் எல்லோரும் அவரை வைத்து காசு பார்ப்பவர்கள் தான்!


நன்றி கவிதா

நன்றி வண்ணத்துபூச்சியார்

நன்றி ஆதிரை

நன்றி தருமி

"உழவன்" "Uzhavan" said...

"நான்" என்பதற்கான சரியான விளக்கத்தை ஓஷோ மூலமாக தந்துள்ளீர்கள். நன்று

மங்களூர் சிவா said...

குசும்பா உன் குசும்புக்கு அளவே இல்லாம போச்சுப்பா இப்ப ஓஷோதான் மாட்டினாரா கலாய்க்கிறதுக்கு!?!?

:)))))))))))

?!!!@#%* said...

குசும்ப‌ன்,

வாய்ப்புக்கு ந‌ன்றி.

ஒசோ ப‌டிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஓரு வேண்டுகோள் ,


அவ‌ர் கூறிய‌ யாவும் (பெரும்பால‌ன‌வை), அவ‌ர் முன் அம‌ர்ந்த‌ சீட‌ர்க‌ளுக்கான கேள்வி ப‌தில்க‌ள்
எல்லாருக்கும் அல்ல‌,

ந‌ன்றி,

ச‌ஹ்ரித‌ய‌ன்

suthan said...

அருமையான பதிவு..

p.suthan

Unknown said...

yosikka vekkum vishayam....

Hardware & Trouble shooting said...

Just Read the book and give the comment .....This book is not for inducing your sexuality, it is to go beyond the sex...........

Entirely New dimension about Sex which was not spoken to public by enlightened beings.... Sorry for the pdf quality, i think it is readable

Here it is .................KAMATHIL IRUNTHU KADAVULUKKU
http://rapidshare.com/files/1697991080/OshoTamilebook.pdf

Unknown said...

can i get in pdf form

Premraj said...
This comment has been removed by the author.
Unknown said...

மகிழ்ச்சி