Wednesday, March 4, 2009

கிங் பிஷர் ஏர்ஹோஸ்டஸும் நானும்!

சில பல மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது, சிறுநீரக கல் பிரச்சினையால் டாக்டரிடம் சென்ற பொழுது அவரும் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு இடது கிட்னியில் 2 கல்,வலது கிட்னியில் ஒரு கல், பிளாடரில் ஒன்று, பிளாடருக்கும் கிட்னிக்கும் இடையே ஒன்று என்று வீடு கட்ட தேவையான அளவுக்கு கல் இருக்கும் நல்ல செய்தியை சொன்னார்! வலி நாளுக்கு நாள் அதிகமாகவே ஊருக்கு போய்விடலாம் என்றால் சென்னை டிக்கெட் அனைத்தும் முடிந்துவிட்டன!

சரி மும்பை போய் அங்கிருந்து சென்னை போய்விடலாம் என்று முடிவெடுத்து மும்பைக்கும் அங்கிருந்து சென்னைக்கு கிங் பிஷரிலும் டிக்கெட் புக் செய்து இரவே மும்பை கிளம்பினேன்.மும்பையில் இருந்து சென்னை விமானத்துக்காக 3 மணி நேரம் காத்துக்கொண்டு இருக்கனும். வலி வேறு பிரிச்சு எடுக்குது எப்படி 3 மணி நேரத்தை ஓட்டபோகிறோமே என்று வந்தால் பிளைட் 1 மணி நேரம் தாமதம் என்றார்கள் என்ன கொடுமை இது என்று அங்கு வெயிட்டிங் ஏரியாவில் உட்காந்து இருந்தேன்.


(படத்தில் இருப்பவர்கள் அனைவரும் என் கேர்ள் பிரண்டுகளே, மாடல்கள் அல்ல!!!)

என்னே ஆச்சர்யம் எல்லா வலியும் குறைந்து போய்விட்டது, அன்று தான் உணர்ந்தேன் இயற்கையை ரசித்தால் எல்லாம் மறந்து போகும் என்று, ஆம் ஏர்போர்ட்டு உள்ளே கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர்வேன், பாராமவுண்ட்என்று பல நிறுவனங்களில் வேலை செய்யும் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அங்கு இங்கும் போய் கொண்டு வந்தார்கள் அடா அடா என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கொட்டிய அழகு என்று அத்தனை அழகு பதுமைகள், அடா அடா எத விடுவது எத பார்ப்பது? இப்படி இயற்கையை ரசித்துக்கொண்டு இருந்ததில் வலி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை. பொழுதும் நன்றாக போய்கொண்டு இருந்தது, இது பத்தாததுக்கு பெங்களூரில் இருந்து வந்த கல்லூரி மாணவியர் கூட்டமும் ...எதற்கு வந்தோம் என்றே மறந்து போய்விட்டது!!!

அப்பொழுதுதான் என்னை கடந்து கிங் பிஷரில் வேலை செய்யும் ஏர் ஹோஸ்டஸ் கூட்டம் கடந்து சென்றது அதில் ஒரு பெண்ணின் அழகு வெகுவாக கவர அட இந்த பொண்ணும் நாம போகும் பிளைட்டிலேயே வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்! என் ராசி தான் எனக்கு தெரியுமே அதனால் ரொம்ப ஆசைப்படாமல் இயற்கையை ரசிக்க ஆரம்பித்தேன்.

நான் போக வேண்டிய விமானத்துக்கான அழைப்பு வரவே கிளம்பி போனேன், பிளைட்டில் ஏறினால் வெல்கம் செஞ்சது நான் பார்த்த அதே பெண்! என்ன ஆச்சர்யம் முதன் முதலாக நாம் நினைத்தது எல்லம் நடக்கிறதே என்று நினைச்சு சீட் நம்பர் தெரிஞ்சாலும் அவர்களே சொல்லி காதால் கேட்டு போய் உட்காரலாம் என்று நினைத்தேன் அது போலவே அவர்களும் நான் அமரவேண்டிய இடத்தை சொல்ல போய் அமர்ந்தேன். அப்பொழுதுதான் நினைத்தேன் குஷியில் விவேக் போட்டு வரும் ஒரு கருப்பு கண்ணாடியபோட்டு வந்திருந்தாலவது மும்தாஜ் கூட போவது போல் இவுங்க கூட போய் இருக்கலாமே என்று!

பிளைட் கிளம்பியதும் வாட்டர் பாட்டில் கொடுக்க அந்த பெண் ஒரு டிராலிய தள்ளிக்கிட்டு வர,என் இதயம் துள்ளிக்குதிக்க, டக் டக் என்று அந்த பெண் நடக்க என் இதயம் திக்திக் என்று துடிக்க...(கொஞ்சம் ஓவராத்தான் தோணும் ஆனா அந்த பெண்ணை பார்த்தா இது எல்லாம் பத்தாதுன்னு தோனும்!)ஒவ்வொருவரா கொடுத்துக்கிட்டு வந்த பெண் எனக்கு முதல் வரிசையோடு சடன் பிரேக் போட்டு நின்றுவிட்டு திரும்ப போய்விட்டது, சரி தீர்ந்து விட்டது போல அதான் எடுக்க போய் இருப்பார்கள்என்று நினைச்சேன், பின்னாடி இருந்து வந்த இட்லி குண்டன் தண்ணி பாட்டிலை கொடுத்தான் நான் அமர்ந்து இருக்கும் வரிசை வரைக்கும் அவன் ”சப்ளையர்” என்று!

ம்ம்ம் என்ன கொடுமைங்க இது!

அதன் பிறகு யூட்ரோஸ்கோப்பி செஞ்சு கல்லை எல்லாம் உடைச்சு என் வீடு கட்டும் கனவையும் தகர்த்துவிட்டார்கள் டாக்டர்கள்!
**************************************************
நேற்று நண்பர் ஒருவரிடம் சாட்டிக்கிட்டு இருக்கும் பொழுது தல நீங்க எப்பொழுது பாலோயர்சில் எப்பொழுது 200 போட போறீங்க என்றார்!

அட போங்க தல, இதுவரைக்கு பாலோயரா ஆயி அதன் பிறகு அத்துக்கிட்டு ஓடி போனவர்கள் எண்ணிக்கைய சேர்த்தாலே இன்னேரம் 200 தாண்டி இருக்கும் என்றேன்!

என்ன தல ஏன் அப்படி சொல்றீங்க என்றார்!

ஆமாம் தல ஏதாவது ஒரு பதிவை படிச்சுட்டு ஆர்வத்தில் சரி இவன் ஒழுங்கா எழுதுவான் போல என்று பாலோயரா ஆயிடுறாங்க, அதன் பிறகு நம்மை பற்றி உண்மை தெரிஞ்சதும் இவன் சகவாசமே வேண்டாம் என்று அத்துக்கிட்டு ஓடி போய்விடுகிறார்கள் என்றேன்.

கவலைய விடுங்க தல நான் உங்க பாலோயரா ஆகிறேன் என்றார்...

அவரிடம் சொன்னே, குறைந்த பட்சம் என் மொக்கையை எல்லாம் பொருத்துக்கிட்டு 3 மாசமாவது அத்துக்கிட்டு போக மாட்டேன் என்று உறுதி கொடுக்கவேண்டும் என்றேன்!

அவரு இறுதி மூச்சு வரை என்றார்!

அவரின் நம்பிக்கை சல்யூட்!!

53 comments:

said...

//பின்னாடி இருந்து வந்த இட்லி குண்டன் தண்ணி பாட்டிலை கொடுத்தான் நான் அமர்ந்து இருக்கும் வரிசை வரைக்கும் அவன் ”சப்ளையர்” என்று!

ம்ம்ம் என்ன கொடுமைங்க இது!//

:-)))))

said...

//பிளாடரில் ஒன்று, பிளாடருக்கும் கிட்னிக்கும் இடையே ஒன்று என்று வீடு கட்ட தேவையான அளவுக்கு கல் இருக்கும் நல்ல செய்தியை சொன்னார்! //

இதையும் ஜோவிய‌லாவே சொல்றீங்க‌ளே ...எப்ப‌டீங்க‌ அது?

said...

//ராசி தான் எனக்கு தெரியுமே அதனால் ரொம்ப ஆசைப்படாமல் இயற்கையை ரசிக்க ஆரம்பித்தேன்//

ஏர்போட்ல இயற்கை?..ஓ..ஹோ.. வாழ்க தலைவா.

said...

//எல்லாம் உடைச்சு என் வீடு கட்டும் கனவையும் தகர்த்துவிட்டார்கள் டாக்டர்கள்!//

அய்யோ பாவ‌ம்:‍))க‌வ‌லைப்ப‌டாதீங்க‌..இப்ப‌டியே எல்லார்கிட்ட‌யும் வ‌ம்பு வ‌ள‌த்தீங்க‌ன்னா..க‌ண்டிப்பா ஒரு நாள் க‌ல்லடி விழும்.அப்போ கிடைக்கிற‌ க‌ல்லை வ‌ச்சி வீடு க‌ட்டிட‌லாம்:‍)))))

said...

கல்யாணம் பண்ணிட்டு துபை வந்துட்டு ஒரே ஓட்டமா ஊருக்கு ஓடினீர். அந்த வலியிலும் இந்த லொள்ளா.
உங்க வீட்டிலிருக்கிற பொறுமையின் சிகரத்துகிட்ட நம்ம தங்கமணிக்கு கொஞ்சம் ட்ரெனியிங் தர சொல்லனும். முடியுமா? இதுக்காகவே ஒரு மாசம் ஊரிலிருந்து வரவழைக்கவும் தயார்.

said...

///படத்தில் இருப்பவர்கள் அனைவரும் என் கேர்ள் பிரண்டுகளே, மாடல்கள் அல்ல!!!)///அப்ப நடுவுல நிக்கிற‌தும் உங்க கேர்ள் ஃபிரண்டா?..

said...

நீங்க ஒன்னும் அவ்வளவு மோசம் இல்ல குசும்பு

said...

கிங் ஃபிஷரில் தான் இப்போது அழகு தேவதைகள் அதிகம் என கேள்விப்பட்டேன்.

எப்படி இட்லி குண்டன்களும் இருக்காங்க?

said...

உங்கள் பதிவை தொடர்ந்து பார்க்கவைப்பதற்கான (followers) யுக்தி நன்றாக இருக்கிறது.

நானும் இணைந்துக்கொண்டேன்.

said...

:))

said...

அடங்கவே மாட்டான்றான்யா இந்த குசும்பன்கிற புலம்பல் சென்னையிலிருந்து கேட்கிறது...
;)

said...

:-)))

said...

உண்மையிலேயே இந்த விமான நிலைய இயற்கை என்பது அழகுகாளல் நிரம்பி வழிகிற அற்புதங்கள் நிகழ்கிறதாய் இருக்கிறது-

இதனை சொல்லச்சொன்னது, வேலைக்கு லீவு போட்டு டுபாய் விமான நிலையங்களை ரசிக்கச்செல்லும் சென்ஷி

:))

said...

உங்கள ஃபாலோ பண்றோம்னா நாங்க எவ்வளவு கொடூரமானவங்கன்னு நினைச்சு பாருங்க...

said...

ம்ம்ம் கிங்பிஷரா? ஏர் இந்தியால நாங்க போனபோது ஒரே சவுகார் ஜானகிகளாகத்தான் இருந்தார்கள் என ரங்க்ஸ் ஒரே ஃபீலிங்க்ஸ்:)

said...

200 எல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரா தல? எத்தனை பேர் சைலண்டா உங்களை ஃபாலோ பண்றாங்க தெரியுமா?

said...

:))

said...

'கிங் ஃபிஷரில் தான் இப்போது அழகு தேவதைகள் அதிகம் என கேள்விப்பட்டேன்.

எப்படி இட்லி குண்டன்களும் இருக்காங்க?'

நடுவில் நிற்கிறார்.

said...

//படத்தில் இருப்பவர்கள் அனைவரும் என் கேர்ள் பிரண்டுகளே, மாடல்கள் அல்ல!!!//

இப்படி ஒரு நப்பாசையா?

said...

//இதுவரைக்கு பாலோயரா ஆயி அதன் பிறகு அத்துக்கிட்டு ஓடி போனவர்கள் எண்ணிக்கைய சேர்த்தாலே இன்னேரம் 200 தாண்டி இருக்கும் என்றேன்!//

அதே அதே

said...

//அவரு இறுதி மூச்சு வரை என்றார்!//

உங்களுக்கு ஒரு அடிம சிக்கிருச்சுன்னு சொல்லுங்க

said...

ஏர் இந்தியாவைத் தவிர மற்ற எல்லாம் கொள்ளாமே.... நாங்க Google Reader ல் உங்களைத் தொடர்கின்ற ஆட்கள்.. ;-)

said...

பரிசல்காரன் said...
200 எல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரா தல? எத்தனை பேர் சைலண்டா உங்களை ஃபாலோ பண்றாங்க தெரியுமா?//

இதுல‌ ஏதாச்சும் உள்குத்து இருக்குதா.?

said...

ஆமா.. அதென்ன இட்லி குண்டன்? இட்லி அவிக்கும் குண்டானா? இட்லி சாப்பிட்டு குண்டானவனா?

said...

//200 எல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரா தல? எத்தனை பேர் சைலண்டா உங்களை ஃபாலோ பண்றாங்க தெரியுமா?//

முதல் முறையா ஒரு ரிபீட்டேய்!

said...

//ஆமா.. அதென்ன இட்லி குண்டன்? இட்லி அவிக்கும் குண்டானா? இட்லி சாப்பிட்டு குண்டானவனா?//

ம்!இட்லி சாப்பிட்டு இட்லி ஆட்டி குண்டானவன்.

said...

மல்லையா தான் லக்கின்னு பாத்தா, குசும்பைய்யாவும் லக்கிதான் (படத்துல மட்டும்!!) :) கல்லை(கற்களை) நெசமாவே டாக்டர்கள்தான் எடுத்தாங்களா? ;) :)

said...

அடுத்த மாசம் முதல் திருமணநாள் வருதுன்னு மட்டும் ஞாபகப்படுத்தறேன் தம்பி.

:))

said...

அவரு இறுதி மூச்சு வரை என்றார்!

அவரின் நம்பிக்கை சல்யூட்!! //

யாருங்க அந்த மாவீரன்???

said...

ஐயா!
கொன்னுட்டீங்க போங்க!
உங்க சோத்துக் கையி எங்க சாமியோவ்!?
சோனியா காந்திக்கு கடன் கொடுத்திட்டியளா!?
பரவாஇல்லை அந்த கைய வைச்சு அந்தம்மா இந்த தேர்தல்ல பொழச்சுப் போவட்டும்.

said...

"தியாகதீபம்" என் தங்கச்சி இந்த பதிவப் பாத்துச்சாப்பா???

said...

//ம்.எம்.அப்துல்லா said...

"தியாகதீபம்" என் தங்கச்சி இந்த பதிவப் பாத்துச்சாப்பா???//

இப்படியெல்லாம் வசமா மாட்டிவிடக் கூடாது!

said...

மார்ச் 7ம் தேதியில் இருந்து துபாயில் கிங்பிஷ்சர் வரபோகுதாம்....இனிமே இங்கிருந்தே பார்த்துட்டு போலாம்.

said...

//அவரிடம் சொன்னே, குறைந்த பட்சம் என் மொக்கையை எல்லாம் பொருத்துக்கிட்டு 3 மாசமாவது அத்துக்கிட்டு போக மாட்டேன் என்று உறுதி கொடுக்கவேண்டும் என்றேன்!

//

:-))))))))))

said...

எங்கெல்லாம் வீடு கட்ட முயற்சிக்கிறார்கள்- துபாயில்!!

said...

என் நண்பரொருவர்,மோதிரக்கல் அளவுக்கு இருந்ததுக்கே, அவர் பட்டப் பாட்டையும்,துடிச்சத் துடிப்பையும் , கேள்விப்பட்டதுக்கே நான் நொந்துபோனேன். ரொம்பத்தான் குசும்பு புடிச்சவரா இருப்பீங்கப்போல..

said...

சோழன் இமயத்துல இருந்து கல் எடுத்துட்டு வந்தான்... நீங்க துபாய்ல இருந்தா? பெரிய ஆளுங்க நீங்க....

said...

ரைட்டு மாமு! அந்த கிங் பிஷர் பார்ட்டி என் பக்கத்து வீடுதான்.

:)))

said...

//
புதுகைத் தென்றல் said...

அடுத்த மாசம் முதல் திருமணநாள் வருதுன்னு மட்டும் ஞாபகப்படுத்தறேன் தம்பி.

:))
//

//
எம்.எம்.அப்துல்லா said...

"தியாகதீபம்" என் தங்கச்சி இந்த பதிவப் பாத்துச்சாப்பா???
//

ஒரு அஞ்சா நெஞ்சனை பாத்து கேக்குற கேள்விங்களை பாருங்கய்யா
:)))))))

said...

(படத்தில் இருப்பவர்கள் அனைவரும் என் கேர்ள் பிரண்டுகளே, மாடல்கள் அல்ல!!!)

intha lollukku mattum korachal illai!! Vazhga valamudan!!

said...

பின்னாடி இருந்து வந்த இட்லி குண்டன் தண்ணி பாட்டிலை கொடுத்தான் நான் அமர்ந்து இருக்கும் வரிசை வரைக்கும் அவன் ”சப்ளையர்” என்று!

ம்ம்ம் என்ன கொடுமைங்க இது!

:)))))))))))

said...

// Mahesh said...
சோழன் இமயத்துல இருந்து கல் எடுத்துட்டு வந்தான்... நீங்க துபாய்ல இருந்தா? பெரிய ஆளுங்க நீங்க....

//

கண்ணகி கோயில் கட்டுறதுக்காக கனகவிஜயனின் தலையில் கல்லை எடுத்து வந்தவன் சேரன்னு நினைவு..

said...

//எம்.எம்.அப்துல்லா said...
// Mahesh said...
சோழன் இமயத்துல இருந்து கல் எடுத்துட்டு வந்தான்... நீங்க துபாய்ல இருந்தா? பெரிய ஆளுங்க நீங்க....

//

கண்ணகி கோயில் கட்டுறதுக்காக கனகவிஜயனின் தலையில் கல்லை எடுத்து வந்தவன் சேரன்னு நினைவு..
//

aamam.. Acham enbathu madamaiya paatula kooda ithu varume :)

said...

Thala, naanga ellam intha followers varathuku munnadi irunthe ungalai follow pannitu thaan varoam ;)

said...

//இட்லி குண்டன்//..... வெறும் இரண்டு வார்த்தை.... நெடுநேரம் சிரிப்பை அடக்கமுடியவில்லை...

said...

// கிங் பிஷர் ஏர்ஹோஸ்டஸும் நானும்! //


தம்பி குசும்பு .... பாவமய்யா அதுக......!! அதுங்களே பிளைட்டுல கக்கூச கழுவி வயித்து பொழப்பு நடத்துதுங்க ....!! அந்த பொலப்புலையும் மண்ணள்ளி போடுறியே...!!

உநெக்கேல்லாம் ..... நரகத்துல பல்லு வெலக்காத வால்பையன்கிட்டதான்யா சீட் போடுவாங்க..........!!!!!// கிட்னியில் 2 கல்,வலது கிட்னியில் ஒரு கல், பிளாடரில் ஒன்று, பிளாடருக்கும் கிட்னிக்கும் இடையே ஒன்று என்று வீடு கட்ட தேவையான அளவுக்கு கல் இருக்கும் //


ரேட்டு சீப்பா இருந்தா சொல்லு தம்பி ..... நானுமும் ரெண்டு லோடு அடுச்சுக்குறேன் .........!!!
// (படத்தில் இருப்பவர்கள் அனைவரும் என் கேர்ள் பிரண்டுகளே, மாடல்கள் அல்ல!!!) //அட....!!! நடுவுல நிக்குற ரெண்டு புள்ளைங்களுக்கு எடையில எதுக்கு இவ்வளவு கேப்பு .... !!! அந்த எடத்துல கொஞ்சம் பெட்ரமாஸ் லைட்ட அடிங்கப்பா ..... , யாரோ நிக்கறமாதிரி தெரியுது....!!!!!!!

// ஏர்போர்ட்டு உள்ளே கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர்வேன், பாராமவுண்ட்என்று பல நிறுவனங்களில் வேலை செய்யும் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அங்கு இங்கும் போய் கொண்டு வந்தார்கள் //உனக்கெதுக்கு அப்புச்சி வயசான காலத்துல இந்த வேலையெல்லாம் .....!!!//பெங்களூரில் இருந்து வந்த கல்லூரி மாணவியர் கூட்டமும் ... //பேத்திங்க எல்லாம் அப்புச்சி ... !! அப்புச்சி ... !! 'னு நச்ச்சருச்சுட்டாங்கலாமே...????//எல்லாம் பத்தாதுன்னு தோனும்!)ஒவ்வொருவரா கொடுத்துக்கிட்டு வந்த பெண் எனக்கு முதல் வரிசையோடு சடன் பிரேக் போட்டு நின்றுவிட்டு திரும்ப போய்விட்டது, சரி தீர்ந்து விட்டது போல அதான் எடுக்க போய் இருப்பார்கள்என்று நினைச்சேன், பின்னாடி இருந்து வந்த இட்லி குண்டன் தண்ணி பாட்டிலை கொடுத்தான் நான் அமர்ந்து இருக்கும் வரிசை வரைக்கும் அவன் ”சப்ளையர்” என்று!//
எங்கூருல ஒரு பழமொழி சொல்லுவாங்க தம்பி.......

" பந்திக்கே கூப்புடுலையாமா .......

எலை ஓட்ட ... எலை ஓட்டைன்னு கத்துனானாமா........."


அப்புடியொரு கூத்து போ தம்பி........!!!!!

said...

அனைவருக்கும் நன்றி!

//லவ்டேல் மேடி said...
// கிங் பிஷர் ஏர்ஹோஸ்டஸும் நானும்! //

தம்பி குசும்பு .... பாவமய்யா அதுக......!! அதுங்களே பிளைட்டுல கக்கூச கழுவி வயித்து பொழப்பு நடத்துதுங்க ....!! அந்த பொலப்புலையும் மண்ணள்ளி போடுறியே...!! //

அண்ணே தாங்கள் நகைச்சுவைக்காகதான் சொல்றீங்க என்றாலும் இந்த வரிகள் கொஞ்சம் கடுமையாக இருக்கு அண்ணே! :(

said...

// அண்ணே தாங்கள் நகைச்சுவைக்காகதான் சொல்றீங்க என்றாலும் இந்த வரிகள் கொஞ்சம் கடுமையாக இருக்கு அண்ணே! :( //


நெம்ப சாரி தம்பி..!!! ஏதோ நாலெழுத்து படுச்சிருந்தா எனக்கும் எப்படி எழுதறதுன்னு தெரியும் ........!!! படுச்ச புள்ள நீ சொன்னா சரி தம்பி .....!!!

Anonymous said...

ஹய்யோ ஹய்யோ..

said...

வயித்த பிசையுதே குசும்பா....
கல்லுக்கும் கேர்லுக்கும் சேர்துத்தான்.

said...

ஆகா ஆகா - கல்லெ எடுத்துட்டாங்க - சரி - அடுத்த மாதம் முதல் திருமண நாளாம் - இப்ப கேர்ள் ஃப்ரெண்ட்டா ......இட்லி குண்டன் தான் இனி உனக்கு ஃப்ரெண்டெல்லாம் ஆமா

said...

:)))

said...

புது விளையாட்டு!
தொப்புலிள் பம்பரம் விடுவது:
தேவையான பொருட்கள்
அரை /அல்லது முக்கால் கிழம்
பழய பம்பரம்
தொப்புல்(அ)சுகன்யா
பழய அரை ஙான் கவுறு
னாட்டு/வெளினாட்டு சரக்கு