Monday, March 2, 2009

என் கன்னி ராசியும் அனுபவங்களும்!!!

பூவரசு அல்லது கருவேலிக் கிளைய வெட்டி, அழகா தோல் சீவி ஸ்டெம்ப் எல்லாம் ரெடி செஞ்சு, மரத்தில் செதுக்கினபேட்டோடு உமா வீட்டுக்கு முன்னாடி இருக்கும் காலி இடத்தில் ஆட்டத்தப் போடுவது எங்கள் பழக்கம். அந்த புள்ளைக்குமுன்னாடி சீனைப் போடுவோம் என்று கரெக்டா அந்த புள்ள வெளியில் வரும் பொழுது, அதுக்கு முன்னாடி நம்ம திறமைய காட்ட, பவுலிங் செஞ்சுக்கிட்டு இருப்பவனை பேபி கட் ஓவராக்கி மீதி பந்தை நாம போடலாம் என்று போட்டால் அதுவரை தடவிக்கிட்டு இருந்த பன்னாடை இறங்கி வந்து மொடேர் என்று அடிப்பான் சிக்ஸ்ராக போய் அந்த புள்ள வீட்டில் விழும்! என் இதயம் அப்படியே நொறுங்கி கீழே விழும்:(


சரி பவுலிங்கில தான் சொதப்பிட்டோம் அதுக்கு முன்னாடி பேட்டிங்கிலாவது பவரைக் காட்டுவோம் என்றுஇறங்கி வந்து அடிக்கலாம் என்று அடிக்க வந்தா அதுக்குள்ள அந்த பந்து மூனு குச்சியையும் கிளப்பிக்கிட்டுப் பறக்கும் பப்பறக்கான்னு, சரி அவுட் ஆகிட்டோம் வந்ததும் தெரியாம அவுட் ஆனதும் தெரியாம போய்விடலாம் என்று நினைச்சா! கிளீன் போல்ட், அவுட் சாட் என்று ஊருக்கே கேட்கும் படி அலறுவானுங்க அதுவும் டக் அவுட் என்று சொல்லி!


சரி விளையாட்டில் தான் இப்படி முடிஞ்சு போச்சு ஸ்கூல் போகும் பொழுது அப்படியே அய்யா திறமையக் காட்டி உசார் செய்யலாம் என்று நினைப்பேன். ஸ்கூல் முடிஞ்சு வரும் பொழுது அண்ணே அண்ணே நானும் வரேன்னே
உங்க கூட, அந்த முருகன் பய சைக்கிளில் போகும் பொழுது மண்டய தட்டிட்டுப் போறான்னே உங்க சைக்கிளில்அழைச்சுக்கிட்டுப் போங்கன்னே என்பான், நம்மளும் லிப்ட் கொடுத்து அந்தப் பக்கம் போகும் புள்ளைங்க மனசில்ஒரு துண்டை போட்டுவிடலாம் என்று வாடா என்று ஏத்திக்கிட்டு கிளம்பினா, அண்ணே வேகமாப் போண்ணேஅண்ணே வேகமா போண்ணே என்று சவுண்ட் கொடுப்பான், நாமளும் வேகமா ஏறி நின்னு மிதிப்போம் கரீட்டா அந்த புள்ளைக்குப் பக்கத்துல போய் டபக்குன்னு செயின் கழண்டுக்கும் அப்படியே தலைக்குப்புறக்ககீழே விழுந்து எழுந்தாக் கூட வந்த குட்டிசாத்தான் போன்னே போயும் போயும் உன் சைக்கிளில் ஏறினேன்
பாரு என்று இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிடும்!


ஸ்கூலில் கூட படிக்கும் புள்ளைங்களோடதான் ஒட்டோ உறவோ கிடையாதுன்னு காச வெட்டி போட்டு உறவை முறிச்சுக்கிட்டதால பக்கத்து கிளாஸ் காமர்ஸ் பொண்ணுங்களை உசார் செய்யலாம் என்று அதுங்களுக்கு முன்னாடி பந்தா காட்டிக்கிட்டு இருக்கும் பொழுது, கரெக்டா அதுங்க நம் கிளாசை கிராஸ் செய்யும் பொழுதுதான் கணக்கு வாத்தியார் உள்ளே வெச்சு அடிச்சதும் மட்டும் இல்லாம கிளாஸ் ரூமுக்கு வெளியேயும் அடிச்சு இழுத்துட்டு போவார், க்ளுன்னு ஒரு சிரிப்பு சிரிப்பாளுங்க பாருங்க, அப்படியே ஒரு கருங்கல்லைஎடுத்து வாத்தியார் மண்டய உடைச்சுவிடலாம் என்று தோனும். கணக்கு வாத்திக்கும் நமக்கும் ஜென்ம பகை ஏன்னா, கிளாஸில் ஒரு முறை மச்சான் வாத்தியார் புள்ள மக்கு என்றபழமொழிய மாத்த போறேன் டா என்று சொல்ல, எப்படி என்றான் கனேஷ், கணக்கு வாத்தி மருமகனும் மக்கு என்றுமாத்த போறேன் டா என்று சொன்னேன். கூடப்படிக்கும் சுந்தரி அவர் பெண் அது காதில் விழுந்துவிட்டது இதுக்கு மேல என்ன வேண்டும்!


சரி ஸ்கூல் லைப்தான் இப்படி போச்சு காலேஜ்க்கு டிரைனில் போகும் பொழுது கூட வரும் அஞ்சலையம்மாள் காலேஜ் பெண்களுக்கு முன்னாடியாவது ஒரு இத கிரியேட் செஞ்சு வைப்போம் என்று லைப்ரரியில் இருந்து ஆட்டைய போட்ட ஜாவா புக்கை வெச்சுபடம் காட்டிக்கிட்டு வரும் பொழுதுதான் வருவான் ஒரு கிராதகன் மச்சான் முடிஞ்ச செம்மில் 4 ல் கப்பாமே ஆமாம் ஜாவாவில் 90% என்று சொன்ன ஆனால் 4 மார்க்தான் வாங்கி இருக்கியாமே என்பான், அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கிப்பேன்!


சரி இதோட முடிஞ்சுதா என்றால் அதான் இல்லை இந்தியாவை விட்டு துபாய் வந்த பிறகு இப்பொழுது இருக்கும் கம்பெணியில் பிரிண்டிங் அவசரமாக செய்யவேண்டும் என்று வரும் சூப்பர் கில்மாங்கி கல்லூரி பெண்களிடம் நம்ம அப்ரெண்டிஸ் சாரி மேடம் நாங்க பிஸி ரெண்டு நாளைக்கு ஒன்னும் செய்யமுடியாது என்று சொல்லுவானுங்க.

உடனே அந்த பொண்ணுங்களும் உங்க மேனேஜர் கிட்ட பேசனும் என்றதும் நம்மை கை காட்டிவிட்டுவிடுவானுங்க சரி இந்த மாசம் அவனுக்கு சம்பளத்தை ஏத்திக்கொடுக்கனும் என்று நினைச்சுக்கிட்டு எஸ் மேடம் How can i help you என்று கேட்டு பீட்டர் விட்டுக்கிட்டு டேய் அந்த வேலைய நிறுத்தமுடியுமா? என்றால் முடியாது என்பான் இதுவும் பிளீஸ் ஐ நீட் இட் வெரி அர்ஜெண்ட், டூ சம்திங் பார் மீ! என்று கெஞ்சி கொஞ்சி சொல்லும், என்ன டா செய்யலாம் என்று ஒரு பெரிய பில்டப்பை கொடுத்துக்கிட்டு சரி நம்ம பிராஞ்சில் எல்லாம் என்னா செய்யமுடியுமான்னு போன் போட்டு பாரு, அதான் என்னிடம் சொல்லிட்டில்ல கவலைய விடு என்பது போல் ஒரு இமேஜ் கிரியேட் செஞ்சுக்கிட்டு இருக்கும் பொழுது வருவான் ஒரு கிராதகன் டேய் நீதானே 9 மணிக்கு எல்லாத்தையும் முடிச்சு டெலிவரி வேற செய்வோம் என்று சொன்ன, ஆனா இப்பொழுதுதான் பிரிண்டிங் ஓடிக்கிட்டு இருக்கு என்னா டா நினைச்சுக்கிட்டு இருக்க, இது இல்லாம நான் எப்படி ஒபாமை மீட் செய்வது என்ற ரேஞ்சுக்கு பாட்டு விழும்... அப்படியே பம்மி பதுங்கி சாரிங்க நோரிங்க எல்லாம் சொல்லி அவனை தாஜா செஞ்சு அனுப்பிவிட்டு பார்த்தா இந்த புள்ள விடும் பாரு ஒரு கேவலமான லுக்கு....ம்ம்ம்
காசிக்கு போனாலும் கருமம் விடாது என்பது போல துபாய் வந்தாலும் இந்த ராசி விடாது போல!

48 comments:

said...

இன்னா ராசிண்ணே அது ...

இந்தா வர்றேன் ...

said...

// இந்த புள்ள விடும் பாரு ஒரு கேவலமான லுக்//

அடி பலமோ?

said...

ராசி எங்க போனாலும் விடாதுபோல!

said...

Kanni Rasi - which planet?
Even u go the other corner of the world also u will not be spared. :-))

said...

ரைட்டு

said...

\\அதுவரை தடவிக்கிட்டு இருந்த பன்னாடை இறங்கி வந்து மொடேர் என்று அடிப்பான் சிக்ஸ்ராக போய் அந்த புள்ள வீட்டில் விழும்! என் இதயம் அப்படியே நொறுங்கி கீழே விழும்:(\

ஆஹா! எப்படி அண்ணே எப்படி

said...

நாங்களும் வந்துடோம்ல..

said...

வூட்டுக்கார அம்மாவுக்கு இந்த விசயமெல்லாம் தெரியுமா தெரியாதா?

said...

ஓகே ஓகே

said...

ஹாஹா...

வடிவேலு அடிவாங்கிற பகிடிதான் ஞாபகம் வருது...:-)

said...

:-))

said...

நல்ல இருக்குன்னே ....
ரொம்ப நல்ல இருக்கு ...
நானும் உங்க சாதி தான் ..
புது பைக் வாங்கி 8,18,28 போட்ட கூட No Response ...

said...

அசத்தல்.. நட்சத்திர பதிவு..

said...

//அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா//

4/5 வாங்கினா 80%ஆ? 90%ஆ? :-?

said...

சூப்பர்....

அப்படியே என் மனசுல இருக்கற ஃபீலிங்க சொல்லிட்டீங்க.

எனக்கெல்லாம் சொல்ல தெரில( சொல்ல முடில...)

said...

இவ்வளவு கிழிசலும் தையலும் பாவம்யா நீ.
வூட்டுக்கார அம்மாட்ட சொல்லி வை. மொடேர்னு ஒண்ணு போட்டா தையலெல்லாம் சரியாயிரும்.

said...

கவுத்து புட்டிங்களே மக்கா..

said...

கன்னி ராசி நல்ல ராசின்னு நினைச்சேனே!!!!:((
அன்புடன் அருணா

said...

படிச்சுட்டு சிரிப்பை அடக்க முடியலை....ஏன்னா எங்க வீட்டுகாரர் கூட கன்னி ராசி தான்.இதே அனுபவம் தான்.

said...

காமெடி தான்..... உங்க நிலைமைதான் தமிழ் நாட்ல பல பேருக்கு. வளப்பு அப்பிடிண்ணே...

said...

//நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா//

இந்த லாஜிக்-க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.

Anonymous said...

ஆனா,

சப்பைப் பசங்கல்லாம் சூப்பர் பிகர மடக்கும்போது காது ரெண்டுலயும் புகை வருமே.

said...

ஒரு சோகமான விசயத்தை கூட எப்படி நகைச்சுவையா சொல்றிங்க!

உங்க கஷ்டத்த பார்த்து எனக்கு அழுவாச்சியா வருது

said...

விதி வலியதுன்னு சொல்றாங்களே அது இதானோ... ;)

said...

\\அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கிப்பேன்\\

உங்களை அண்ணனு கூப்பிடுறதுல தப்பே இல்லை ;)

said...

:))))))

said...

ha ha nalla rasi, nan ungaluku opposite rasi he he he

said...

ச்சேய்..இனிமே நா ஒங்கூட சேர மாட்டேன். ஒ ராசி ஒட்டிக்கப்போகுது

:))

said...

//நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா//

டுபுக்கு அது 80% தானே வருது... என்னைக்கு தான் கணக்கு வர போகுது உனக்கு

said...

கணக்கு வாத்தி மருமகனும் மக்கு என்றுமாத்த போறேன் டா என்று சொன்னேன். கூடப்படிக்கும் சுந்தரி அவர் பெண் அது காதில் விழுந்துவிட்டது இதுக்கு மேல என்ன வேண்டும்!

:)))))

said...

nan kanni rasi illappa :-)

said...

//கரெக்டா அதுங்க நம் கிளாசை கிராஸ் செய்யும் பொழுதுதான் கணக்கு வாத்தியார் உள்ளே வெச்சு அடிச்சதும் மட்டும் இல்லாம கிளாஸ் ரூமுக்கு வெளியேயும் அடிச்சு இழுத்துட்டு போவார்//

பாவம்ண்ணே நீங்க:((((

கன்னி ராசி பாடாப் படுத்திருச்சு போல!!!!!

said...

நீங்க சந்தித்த (கேவலப்பட்ட) மிதவாதிகளை பற்றி மட்டும் எழுதியிருக்கீங்க ( அது தாங்க வெறும் கேவலமான லுக்கோட மட்டும் முடிஞ்சது..)

நீங்க சந்தித்த தீவிர வாதிகளைப்பற்றி எப்ப எழுதப்போறீங்க...( அது தாங்க பொண்ணுகிட்டே செருப்படி வாங்கியது..பொண்ணு அண்ணன் கிட்டே அருவா வெட்டு வாங்கியது)

said...

:)))

said...

:-)))))))))))))))

said...

தம்பீ..

நீயும் கன்னி ராசியா..?

கன்னி ராசிக்கே இப்படித்தான் நடக்குமா..?

நம்ம கதை இதைவிட மோசமால்ல இருக்கு..

ஒரு நாள் வைச்சுக்குவோம் கச்சேரியை..

மனசைத் தேத்துக்கிட்டு பொழப்ப பாரு..

said...

:) u r super cool!

Anonymous said...

kikikikiki

said...

//How can i help you//

தொர என்னமா இங்கிலீசு எல்லாம் பேசுது.. :))

அதென்னவோ தெரியலை மாமா.. நீங்க ஆப்பு வாங்கின மேட்டரை எல்லாம் படிக்கும் போது அப்டி ஒரு சந்தோஷம் வ்ருது.. :))

உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன் மிஸ்டர் குசும்பன்.. :))

said...

குசும்பா இதெல்லாம் ரொம்ப ஓவரூஊஊஊஊ... அப்புறம் அண்ணி கிட்ட ”அந்த” கதையை சொல்ல வேண்டி வரும்டி.. சொல்லிட்டேன்..

said...

உன்னைய இன்னமும் உலகம் நம்பிட்டு இருக்கு போல.. பின்னூட்டத்த்ல எல்லாம் பிளரி எடுத்து இருக்காங்க.. இதெல்லாம் ஒவர் பில்டப்ப்பு..

said...

நன்றி ஜமால்

நன்றி Rajesh

நன்றி சுரேகா

நன்றி வடுவூர் குமார்

நன்றி சிவா

நன்றி வினோத்

நன்றி மஞ்சூரார்

நன்றி ச்சின்னப் பையன்

நன்றி ’டொன்’ லீ

நன்றி தாமிரா

நன்றி மந்திரன்

நன்றி narsim

நன்றி வித்யா

நன்றி //நிலாக்காலம் said...
4/5 வாங்கினா 80%ஆ? 90%ஆ? :-?//

வாங்க வாங்க மக்கள் யாராவது கண்டு பிடிக்கிறார்களா என்று பார்த்தேன்:))) நீங்க கண்டு பிடிச்சுட்டீங்க!!! வெரி குட்!

said...

அறிவிலி நன்றி

*******************
சுல்தான் பாய் நீங்க எப்பொழுதில் இருந்து
நம் எனிமி?

*******************
அன்புடன் அருணா கன்னி ராசி நல்ல ராசியாக
இருக்கலாம் என் ராசி விருச்சக ராசி! ”இங்க எழுதி இருக்கும் கன்னி ராசி மீன்ஸ்” கன்னி =பெண்கள்

*******************
sindhusubash ரொம்ப நன்றிங்க!
*******************
தமிழ் பிரியன் மிக்க நன்றிங்க!

*******************
pappu நன்றிங்க!
*******************
பட்டாம்பூச்சி ஹி ஹி ஹி ஒரு இத மெயிண்டெய்ன் செய்யவிட மாட்டீங்களே!
*******************
வடகரை வேலன் காதுல மட்டும் இல்ல எல்லா இடத்திலேயும் வரும்?

*******************
வால்பையன் வரும்ய்யா வரும்!
*******************
தமிழன்-கறுப்பி-- நன்றி
*******************
கோபிநாத் நன்றி தம்பி
*******************
தாரணி பிரியா நன்றி
*******************
King நன்றி
*******************
Suresh நல்லாவே இருங்க:)
*******************
எம்.எம்.அப்துல்லா இனி என் ராசி ஒட்டினா என்னா ஒட்டாட்டி என்ன அண்ணே:)
நீங்க எல்லாம் பெருப்பான அப்பா! அப்பா! அப்பா! நாங்க எல்லாம் யூத்:)

*******************
Venky எக்ஸ்கியூஸ் மீ! பதிவில் என்ன சொல்லி இருக்கேன், கணக்கு வாத்தியார் மருமகனும் மக்குன்னு மாத்த போறேன்னு
சொல்லி இருக்கும் பொழுது என்ன இது சின்ன புள்ளதனமா திட்டிக்கிட்டு!

*******************
ஸ்ரீதர்கண்ணன் நன்றி தங்கள் தொடர் வருகைக்கு!

*******************
இரவு கவி நன்றி நண்பா!

*******************
Poornima Saravana kumar நன்றிங்க!

*******************
கீழை ராஸா என்ன ஒரு ஆசை உங்களுக்கு!

*******************
ஜெகதீசன் நன்றி!

*******************
முரளிகண்ணன் நன்றி!

*******************
உண்மைத் தமிழன் அண்ணே நான் விருச்சக ராசின்னே!

*******************
Sundar நன்றி

*******************
Thooya நன்றி

*******************
SanJai காந்தி வரும் மாமா வரும்!

*******************
சந்தோஷ் = Santhosh இன்னுமும் கதை சொல்லிக்கிட்டு இருக்கற ஆளாப்பா நீ:))

said...

இந்த ராசியில மட்டும்தான் 'கன்னி' இருக்கும்ங்குறது என் தாழ்மையான கருத்து. எங்களுக்கும் அந்த ராசிதாம்லே... :(

said...

உனக்கு ஜென்மச்சனி புடுச்சுருக்குதுன்னு நெனைக்கிறேன் தம்பி...........!!!

Anonymous said...

ஜோண்ணா இன்னுமா இந்த பதிவ படிக்கல??!!

said...

/அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கிப்பேன்/
வந்த சிரிப்பை அடக்க ஒரு மணி நேரம் ஆச்சு.. இன்னும் நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன்

said...

புது விளையாட்டு!
தொப்புலிள் பம்பரம் விடுவது:
தேவையான பொருட்கள்
அரை /அல்லது முக்கால் கிழம்
பழய பம்பரம்
தொப்புல்(அ)சுகன்யா
பழய அரை ஙான் கவுறு
னாட்டு/வெளினாட்டு சரக்கு