Wednesday, March 25, 2009

கார்கால நினைவு குறிப்புகளும் -துபாயில் ஆலங்கட்டி மழையும்!

சரியாக அறுவடை நடக்க இருக்கும் சமயம் மழை வந்து வர இருக்கும் நஷ்டத்தை தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்திவிட்டு போகும்,"பேஞ்சும் கெடுக்குது காஞ்சும் கெடுக்குது" என்ற புலம்பல்கள் ஐப்பசி அடைமழை மாதம் என்று தெரிந்தாலும் அனைவர் வீட்டிலும் கேட்கும்.
ஸ்பிக் யூரியா சாக்குகள் தான் மழைக்கால ரெயின் கோட்டுகள் பலருக்கும்.

வடிகால் எல்லாம் தண்ணி நின்னா எப்படி வயல் தண்ணி வடியும், நெல் எல்லாம் தண்ணியில் மூழ்கி கிடக்கு இன்னும் இரண்டு நாள் இப்படியே இருந்தா ஒரு குண்டு மணி நெல் கூட வீட்டுக்கு வராது அப்படியே சேத்து உழவு அடிச்சுட்டு போகவேண்டியதுதான் என்று கவலையோடு சித்தபாவிடம் அப்பா சூடா டீ குடிச்சுக்கிட்டே பேசிக்கிட்டு இருப்பார்.

மாலை 5 மணிக்கு எல்லாம் கும்மிருட்டாக ஆகிவிடும் அதுக்கு முன்பே சிம்னி விளக்குக்கு திரிமாத்துவது,கரி படிஞ்ச அரிக்கேன் விளக்கை பேப்பரும்,விபூதி போட்டு துடைத்துவிட்டு பளிச் என்று ஆக்கி அதில் கொஞ்சம் மண்ணென்ய் ஊற்றி ஏற்றி வைத்து மிகவும் சின்னதாக எறியவிட்டு விடுவார். சாப்பிடும் பொழுது வெளிச்சம் அதிகம் இருக்க காண்டா விளக்கு அதில் சணல்தான் திரியாக இருக்கும், எறிய விட்டால் நல்லா வெளிச்சம் கொடுக்கும், ”காண்டா விளக்கு மண்ணென்னய் அதிகம் குடிக்கும் அதனால் சாப்பிடும் பொழுது மட்டும் ஏத்தினா போதும்” இதுவும் அம்மா.

லைட்டு இருக்கும் பொழுது எல்லாம் படி படின்னா படிக்காத இப்ப இந்த சிம்னி வெளக்கு வெளிச்சத்தில் படிச்சு கண்ண கெடுத்துக்காத என்று அம்மாவின் திட்டு எப்படா விழும் என்று காத்திருந்தவன் போல டக்கென்று மூடி வைத்துவிடுவேன். அக்கா வா தாயக்கட்டை விளையாடலாம் என்று கோலகட்டியால் கோடு போட்டு விளக்கு வெளிச்சத்தில் தாயக்கட்டை விளையாடுவோம். உள்ளே ஒழுவாத இடமாபார்த்து ஆணி அடிச்சு கொடிகயிறு கட்டி ஈர துணியும் காயும். ஒரு நாள் வெக்காளிச்சா காயவெச்சுடலாம் தலைகாட்டுவேனாங்குது என்று சூரியனுக்கும் திட்டு விழும்.

இரவு படுக்க பாய் போடும் பொழுது பாய்க்கு கீழே இரண்டு சணல் சாக்கு போட்டு அதன் மேல் பாய் போட்டுவார் அப்பா, தரையின் ஈரம் பாயில் சட்டென்று ஏறிவிடும் ஆனால் சணல் சாக்கு போட்டு அதன் மேல் போட்டால் கதகதப்பு இருக்கும்.படுத்தபின் இந்த குறுவை நெல்லை போட்டு ஓடு மாற்றிவிடலாம் என்று காலையில் அம்மா திட்டியதுக்கு அப்பா பதிலை என்னிடம் சொல்வார், ”ம்கும்” என்ற ஒரு பதில் அம்மாவிடம் இருந்து வரும்.இப்படியே மழை காலையிலும் பேஞ்சா ஸ்கூல் லீவ் என்று கனவோடு படுக்க போவேன் ஆனால் காலையில் எழுந்தா துடைத்துவிட்டது போல் வானம் பளீர் என்று இருக்கும்.

அடுத்தவருடம் மழை காலத்திலும் மேலே சொன்ன அனைத்தும் தவறாமல் இடம் பெறும் அம்மாவின் ஓடு மாற்றும் புலம்பல் உட்பட.
***********************************************
நேற்று இரவு வீட்டுக்கு காரில் போய் கொண்டு இருக்கும் பொழுது டம் டம் என்று கார் மேலே கல் விழுவது போல் சத்தம்,பார்த்தால் ஆலங்கட்டி மழைஎல்லா கார்களும் நிறுத்தப்பட்டு டிராபிக் ஜாம், ரோடு முழுவது சின்ன சின்ன கல்கண்டு மாதிரி ஐஸ் கட்டிகள் முதன் முதலாக ஆலங்கட்டி மழையை பார்த்தேன்.பின் இரவு முழுவது மழை பெய்தது கார் டயர் மூழ்கும் அளவுக்கு பல இடங்களில் தண்ணீர்.

44 comments:

said...

முதல் பார்ட் ரொம்ப நெகிழ்வு..

செகண்ட் பார்ட்... ஆச்சரியம் !!

said...

முதல் பாகம் மிக அருமை....

Anonymous said...

நல்லாயிருக்குண்ணா..இரண்டு தடவை விரும்பி படித்தேன்..

said...

இந்த மாதிரி தலைப்பு வைக்க அய்யனாருக்கு மட்டுமே ரைட்ஸ் இருக்குறதா சொன்னாங்களே!

said...

//மண்ணென்ய்//

இதை யாராவது சரியா எழுதுங்க பார்ப்போம்!

said...

தலைப்பையும் பதிவையும் மிக ரசித்தேன் குசும்பன்.

said...

good contrast.........

said...

தலைப்பையும் பதிவையும் மிக ரசித்தேன் குசும்பன்.

said...

//லைட்டு இருக்கும் பொழுது எல்லாம் படி படின்னா படிக்காத இப்ப இந்த சிம்னி வெளக்கு வெளிச்சத்தில் படிச்சு கண்ண கெடுத்துக்காத//

இந்த பில்டப்பு எல்லாம் அப்போவே ஆரம்பிச்சாச்சா? :))

எனிவே மாம்ஸ்.. அங்கயும் அப்டி தானா? :)) சேம் பின்ச்.. :)

ஓட்டு வீட்டுல அங்கங்கே மழை நீர் ஒழுகும். அந்த இடத்துல எல்லாம் வீட்ல இருக்கிற எல்லா பாத்திரங்களும் வைப்பாங்க. அதுல சொட்டு சொட்டா தண்ணீர் விழற சத்தம் கூட சங்கீதமே.. :)

ஹ்ம்ம்ம்.. இப்போல்லாம் மழையும் குறைஞ்சிடிச்சி.. ஓட்டு மற்றும் குடிசை வீடுகளும் குறைஞ்சிடிச்சி.. :( :)

said...

அங்க டச் பண்ணி இங்க முடிச்சது நல்லாயிருக்கு குரு...

நேத்து என்னடா வெளியில சத்தம் கேக்குதேன்னு ஜன்னலை திறந்தேன். சரியான மழை.. தண்ணி உள்ள வந்து லேப்டாபை வாட்டர் வாஷ் பன்ணிடுச்சு.

கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..

said...

முதல்ல ஏதோ லந்து விடப் போறீங்கன்னு நினைச்சேன் குசும்பன். 'பொதுப்புத்தி' :)

ஆனா, லந்துல சிரிக்க வைக்கிறா மாதிரியே, இதுல நெகிழ வச்சுட்டீங்க.

ரொம்ப நல்லா இருக்கு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

ஆமா குசும்பா, நம்ம அய்யனாரோட உரையாடலினி இந்த மழைல நனைஞ்சாங்களா? உங்களுக்கு ஏதாவது விவரம் தெரியுமா?

said...

// பாய்க்கு கீழே இரண்டு சணல் சாக்கு போட்டு அதன் மேல் பாய் போடுவார் //

இப்ப இருக்கும் விதவிதமான மெது மெது படுக்கைகளெல்லாம் இதற்கு நிகராகாது.

நல்ல பதிவு குசும்பன்.

said...

கலக்கல் குசும்பா.

said...

//பைத்தியக்காரன் said...

ஆமா குசும்பா, நம்ம அய்யனாரோட உரையாடலினி இந்த மழைல நனைஞ்சாங்களா? உங்களுக்கு ஏதாவது விவரம் தெரியுமா?//

ஆமாம். ஆலங்கட்டி மழையில நனைஞ்சு தலையில அடிபட்டதால இப்ப குணமாகி வீட்டுல அட்மிட் ஆகிட்டாங்களாம்.

said...

குசும்பன் ப்ளாகும் ஹாக் செய்யப்பட்டு விட்டதா?

அனுஜன்யா

said...

மலரும் நினைவுகள்- நல்லாருக்குங்க

said...

எதிர்ப்பார்த்து வந்தது வேறு (தெரியும் என நினைக்கிறேன்)

ஆனால் சந்தோசம் கலந்த ஆச்சரியம் (ஆனந்த அதிர்ச்சி) (pleasant surprise). மிகவும் நெகிழ்வுடன் பழைய நினைவுகளை தூண்டிவிட்டதுடன், நிகழ்கால புகைப்படங்களையும் போட்டு அசத்திவிட்டீர்கள்.

said...

Super Post kusumban
Leo Suresh

said...

அங்கையுமா...?


தல இங்கயும் பின்னியெடுத்துட்டு


fun city லிவு விட்டுடாங்க

:)

said...

உங்கள் நினைவுக் குறிப்புகளின் மூலம், கிராமத்து ஓட்டு வீடும், மழைக்கால இரவுகளும், குழந்தைகளும், விடியலில் அவ்வீடுகளிலிருந்து வெளிவரும் புகையும், காற்றில் கலந்து வரும் ஒரு விதமான வாடையும் மனதில் விரிகிறது.

said...

நல்ல பதிவு.. போட்டோஸ் நல்லா இருக்கு..!!

said...

நல்ல பதிவு ...
மிகவும் இரசித்தேன் .
ஆலங்கட்டி மழையைப் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது .
தொடருங்கள் குசும்பு ...

மண்ணெண்னை.
சரியா வால்பையன் ?

said...

முற்றிலும் எதிர்பார்க்காத நெகிழ்வான பதிவு.. ஆச்சர்யமா இருக்கு குசும்பன்.. உங்களோட வெர்சடாலிடி வெளியே வருது. பாராட்டுக்கள்.

said...

அருமை

said...

நீங்க தான் Gulfnews க்கு இந்த படங்களை கொடுத்ததா? இல்ல அங்கேயிருந்து எடுத்து இங்க போட்டுடீங்களா? :-)
இம்மழை வரும் போது ஆனந்தபவனில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரலாம் என்றிருந்தேன்.செம காத்து+ஆலங்கட்டிகள்.

said...

அது சரி துபாய்ல என் மேல மட்டும் தான் பனீகட்டி மழைன்னு நெனச்சேன்!

said...

பாஸ் சூப்பரூ :))

மழைக்கால நினைவுகள் அப்படியே மாறி மாறி வருது..!

said...

நைஸ்! :)

said...

"கார்கால நினைவு".....
முதல் பாகம் மனதைத் தொட்டது.

said...

அப்பத்தைய வீட்டு கார்காலம் எழுதியவிதம் அருமை..
இப்பத்தைய காரில் கார்காலம் இலவச இணைப்பு..

said...

அருமை... :)

said...

//மண்ணெண்னை.
சரியா வால்பையன் ?//

மிக்க சரி!
மண்+எண்ணை

தனிதனியாக சரியாக எழுதும் நாம் சேர்த்து எழுதும் போது குழப்பி கொள்கிறோம்.

said...

துபாய் பனி(க்கட்டி)விழும் பாலைவனமாகி விட்டது இல்லையா?

said...

சூப்பர்ப்!

அது மண்ணெண்ணெய்
எள் + நெய் = எண்ணெய் :)

said...

நல்ல பதிவு

said...

பழைய நினைவுகள் கலக்கல் மாம்ஸ்!

said...

நல்ல பதிவு.
மண்ணெண்ணெய் எழுத இவ்வளவு போராட்டமா?

said...

நன்றி மகேஷ்

நன்றி லோகு

நன்றி தூயா

நன்றி வால்பையன்

நன்றி புதுகைத் தென்றல்

நன்றி தருமி

நன்றி ஜெகதீசன்

நன்றி மாம்ஸ்

நன்றி ஆதவன்

நன்றி பைதியக்காரன் (உரையாடலினி பற்றி தெரியும் ஆனா சொல்லக்கூடாது:)

நன்றி வெயிலான்

நன்றி சென்ஷி

நன்றி அனுஜன்யா (பழிக்கு பழி வாங்குறீங்களா இருக்கட்டும் இருக்கட்டும்)


நன்றி ரிதன்யா

நன்றி மஞ்சூரார்

நன்றி லியோ

நன்றி மின்னல்

நன்றி சுல்தான்

நன்றி கவிதா

நன்றி மோனி

நன்றி வெண்பூ

நன்றி முரளி

நன்றி வடுவூர் குமார் (இந்த படங்கள் Gulf newsல் இருந்து எடுத்ததுதான்)

நன்றி அபிஅப்பா

நன்றி ஆயில்யன்

நன்றி தமிழ்பிரியன்

நன்றி மாதேவி

நன்றி முத்துலெட்சுமி

நன்றி ராம்

நன்றி கீழை ராசா

நன்றி ரமேஷ்வைத்யா

நன்றி இயற்கை

நன்றி சிவா

நன்றி சுமா

said...

அட ...!!! தம்பி கிராபிக்ஸ் படுச்சிருபீங்கலாட்ட ....?

படங்கள அருமையா கிராபிக்ஸ் பன்னீருக்கிரீங்கோ தம்பி...!!! நெம்ப அருமைங்கோ.....!!

நெம்ப ரியலா இருக்குதுங்கோ தம்பி.......!!!!!!

said...

கலக்கல் அண்ணே..
யாருய்யா சொன்னது குசும்பு மட்டும்தான் தெரியும்னு...?

said...

பதிவுல முதல் பாதியில என் பால்ய கால நினைவுகள மீட்டிட்ட நண்பா.
நாங்களும் இப்டி சனல் சாக்கு மேல பாய் போட்டு தூங்குனவங்க தான்.
அதே புலம்பல்கள கேட்டவனுங்க தான்.

பெய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும் அப்டிங்கிற இந்த வசனம் விவசாயிகளோட தேசிய ஸ்லோகன்.

said...

எங்க கிரமாத்துல இருந்த பழைய வீட்ல வீட்டோட நடுவுல ஒரு முற்றம் இருக்கும். மழை பெஞ்சா அதுல தண்ணி விழுமா, நான் சின்னப்புள்ளைய இருக்கப்ப மழை பெஞ்சா உடனே அதுல போயி விளையாட ஆரம்பிச்சுருவேன். யாராச்சும் பெரியவங்க வந்து பார்த்துட்டு அடிச்சு உக்கார வைக்கிறவரைக்கும் நல்லா ஆடுவோம்ல. இதப் பார்த்துட்டு எங்க வீட்டு பெரியவங்க எல்லாம் சீக்கிரம் இந்த பழைய வீட்ட மாத்தி கட்டணும்னு சொல்லுவாங்க. அதேமாதிரி முற்றம் இல்லாத வீட்டையும் கட்டிப்புட்டாங்க. நத முற்றம் இருந்த வீட்டுல இருந்த வெளிச்சம், சந்தோசம் எல்லாம் இப்ப இருக்க வீட்ல இல்லை.

சாதாரண நாட்கள்ல, நாங்க எல்லாரும் அந்த முற்றத்துல சுத்தி உக்காந்துருப்போம், இராத்திரி எங்க பாட்டி எல்லாருக்கும் சோறு ஊட்டுவாங்க . அந்த சந்தோசம் டைனிங் டேபிள் இருக்க புது வீட்டுல இல்லையே ( ஃபீலிங்ஸ் மச்சி, ஃபீலிங்ஸ்)

said...

ஜோசப் பால்ராஜ் said...

பதிவுல முதல் பாதியில என் பால்ய கால நினைவுகள மீட்டிட்ட நண்பா.
நாங்களும் இப்டி சனல் சாக்கு மேல பாய் போட்டு தூங்குனவங்க தான்.
அதே புலம்பல்கள கேட்டவனுங்க தான்.

பெய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும் அப்டிங்கிற இந்த வசனம் விவசாயிகளோட தேசிய ஸ்லோகன்.
//

எனக்கும்தான் நான் இப்போ பதிவு போட்டா குசும்பன் பதிவை காப்பி அடிச்சிட்ட்டேன்னு சொல்லுவாங்க