Wednesday, February 18, 2009

காத்துவாங்கும் கடைக்காரனும் -பின்நவீனத்துவ பீரங்கியும்!

என்னடா குசும்பா ரொம்ப சோகமாக இருக்க என்ன பிரச்சினை? என்று கேட்டப்படியே உள்ளே வந்தார் அய்யனார்.

இல்லய்யா ஒன்னும் இல்ல போஸ்ட் போட்டா ஒருத்தரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க, பின்னூட்டமும் வருவது இல்லை, கூட்டமும் கூடுவது இல்லை காத்துவாங்கும் கடைக்காரன் ஆகிவிட்டேன் கூடிய சீக்கிரம் கடைய இழுத்து மூடிவிடலாமான்னு கூட தோனுது!

டேய் மண்டையா இதுக்கெல்லாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆவப்போவது இல்லை. எப்படி எழுதினா கூட்டம் கூடும் என்று சொல்றேன். என்று என்னை அழைத்துக்கொண்டு கடற்கரை பக்கம் போனார்.போய்இருவரும் அப்படியே வெளியே போய் ஒரு புல் தரையில் அமர்ந்தோம்.

டேய் நீ இதுவரை எழுதி இருக்கிறது எல்லாமே மொக்கை இப்படி எல்லாம் எழுதினா ஒரு பயபுள்ளையும் மதிக்கமாட்டானுங்க! அப்ப அப்ப லைட்டா பின்நவீனத்துவம் எழுத ஆரம்பி என்றார் அதற்கு நான் யோவ் நீ வேற எனக்கு பின் நவீனத்துவம் என்றால் என்னான்னே தெரியாது! அதைப்போய் எழுது எழுதுன்னுன்னு சொன்னா? நான் என்ன செய்வேன்.

டேய் பின்நவீனத்துவம் என்பது ஒன்னுமில்லை!--அய்யனார்.
ரைட்டு விடு ஒன்னும் இல்லாததை பற்றி எழுதி ஒன்னும் ஆகப்போவது இல்லை--நான்

டக்கென்று கீழே இருந்து ஒரு புல்லை புடுங்கி இது என்ன இதைப்பற்றி என்ன எழுதுவாய் என்றார்? அதற்கு நான் இந்த புல்லை பற்றி எழுத என்னா இருக்கு? புல்ல அறுத்து மாட்டுக்கு போட்டா மாடு பால் கொடுக்கும் அதை வேண்டும் என்றால் எழுதலாம்.

அதற்கு டேய் இப்படி எல்லாம் எழுதினா ஒருத்தனும் படிக்கமாட்டானுங்க! இதை எப்படி எழுதனும் தெரியுமா

தரையில் சிறிதும் பெரிதுமாய்
குறிகள் நீட்டிக்கொண்டு
இருக்கின்றன இரவில் நிலவை புணர!

இப்படி எழுதிட்டு ஏங்கும் ஆண் குறி என்று தலைப்பு வெச்சேன்னா பதிவு பிச்சுக்கிட்டு போகும்.

யோவ் என்னய்யா செக்ஸ் பாட்டு எழுத சொல்லுற என்று கேட்டதுக்கு டேய் இதுல எங்க செக்ஸ் வந்துச்சு,இது செக்ஸ் பாட்டு இல்லடா புனைவு இந்த புல்லை குறியாக நினைச்சு பாரு கவிதை புரியும்.

டக்கென்று எழுந்திரிச்ச என்னை ஏன் டா எழுந்திருச்சுட்ட என்றார், இதுக்கு மேல இந்த புல்லு மேல உட்கார என்னமோ மாதிரி இருக்கு வா அங்கபோய் மணல் மேட்டில் உட்காரலாம் என்று அழைத்து போனேன். டேய் இங்க பாருடா எதை பற்றி எழுதினாலும் ஒரு பிரமாண்டம் இருக்கனும்..என்று அவர் சொல்ல

எனக்கு தெரிஞ்சு பிரமாண்டம் என்றால் நமீதாதான் என்று சொல்ல அதுக்கு அவர் என் காதில் சொன்னதும் அந்த மணல் மேட்டிலும் உட்கார என்னமோ மாதிரி இருந்தது சரி வா நடந்துக்கிட்டே பேசுவோம் என்று அழைத்துச்சென்றேன்.

நடந்துக்கிட்டே டேய் முதலில் எழுதக்கூடாதது எழுதக்கூடியது என்று எல்லாம் எதுவும் இல்லை, எதைப்பற்றி வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம். இதைதான் எழுதனும் என்று இருக்கும் கட்டை அவிழ்க்கனும்! அல்லது கட்டுடைக்கனும்!அதுக்கு பேருதான் புனைவு.

புரிஞ்சு போச்சு முடிச்ச அவிழ்கனும் என்று சொல்ற கரீட்டா? என்று கேட்ட என்னை முறைச்சு பார்த்துவிட்டு டேய் இங்க பாருடா கொஞ்ச நாட்களுக்கு முன் எங்க வீட்டு பால்கனிக்கு புறா வந்துச்சு அதை பற்றி எப்படி எழுதினே தெரியுமா? என்று கேட்டுவிட்டு அவர் சொன்ன தலைப்பை கேட்டதும் நல்ல வேளை உங்க வீட்டுக்கு மயில் வரவில்லை என்றேன்.

டேய் உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா! புனைவு என்பது என்னன்னா?

இரு இரு நான் சொல்றேன்
1) படிக்கிறவனுக்கு ஒன்னும் புரியக்கூடாது
2) கொஞ்சம் கிளு கிளுப்பா கெட்டவார்த்தை எல்லாம் இருக்கனும்
3)சொல்ல வருவதை நேரா சொல்லக்கூடாது,சொன்னவனுக்கும் என்ன சொன்னோம் என்று தெரியக்கூடாது, கேட்டவனுக்கும் ஒன்னும் புரியக்கூடாது.
4) தமிழுக்கே அகராதி தேடும் அளவுக்கு கடினமான வார்த்தைய யூஸ் செய்யனும்!
இதானே இரு நானே ஒரு புனைவு கவிதை எழுதுகிறேன் என்று எழுத ஆரம்பிக்க...

டேய் என்னை கொஞ்சம் அனத்த விடுடா என்று அய்யனார் பாய்ஸ் விவேக் போல கத்த... நான் தூக்கத்தில் இருந்து விழித்தேன்.

மக்களே இந்த கனவு நான் கண்டது இன்று காலை 4 மணிக்கு விடியல் காலை கனவு பலிக்குமாமே, அது நிஜமா? அப்படி நிஜம் என்றால் நான் புனைவு எழுதுவது போல் கண்ட கனவு நடக்காமல் இருக்க ஏதும் பரிகாரம் இருக்கா?

82 comments:

said...

hi me the first :)

said...

இந்த விசயம் அந்த பின்நவீனத்துவ பீரங்கிக்கு தெரியுமா ?

said...

//அப்படி நிஜம் என்றால் நான் புனைவு எழுதுவது போல் கண்ட கனவு நடக்காமல் இருக்க ஏதும் பரிகாரம் இருக்கா?
//
நல்லதா ஒரு கத்தி எடுத்து விரல் ஒரத்தில எல்லாம் ரத்தம் வர்ற மாதிரி அறுத்துகோங்க. கொஞ்ச நாளைக்கு எதுவுமே எழுத முடியாது :)

said...

//
தரையில் சிறிதும் பெரிதுமாய்
குறிகள் நீட்டிக்கொண்டு
இருக்கின்றன இரவில் நிலவை புணர!
//


பின் நவீனத்துவம் உங்களுக்கு நல்லா வருது தல..

சீக்கிரமே ஒரு புது கடய தொறங்க..

said...

குசும்பா! நீ புல்லு மேல உக்காந்த 'அனுபவம்' பத்தி பினா நானா எதுனா எழுதி போடு! யாவாரம் பிச்சுக்கும்:-))

said...

பாவம் அந்த் புல்லு..

said...
This comment has been removed by the author.
said...

புல்லு ஒன்லி நோ? நாட் ஃபுல்லு?

said...

தாரணி பிரியா said...
//அப்படி நிஜம் என்றால் நான் புனைவு எழுதுவது போல் கண்ட கனவு நடக்காமல் இருக்க ஏதும் பரிகாரம் இருக்கா?
//
நல்லதா ஒரு கத்தி எடுத்து விரல் ஒரத்தில எல்லாம் ரத்தம் வர்ற மாதிரி அறுத்துகோங்க. கொஞ்ச நாளைக்கு எதுவுமே எழுத முடியாது :)

rrrrrrrreeeeeepppppppeeeeetttttttttuuuu

said...

me they 10th

said...

//மக்களே இந்த கனவு நான் கண்டது இன்று காலை 4 மணிக்கு விடியல் காலை கனவு பலிக்குமாமே, அது நிஜமா? அப்படி நிஜம் என்றால் நான் புனைவு எழுதுவது போல் கண்ட கனவு நடக்காமல் இருக்க ஏதும் பரிகாரம் இருக்கா? //

'பிம்பிலிக்கி பிலாபி' இதை வைத்து ஒரு புனைவு கவிதை எழுதி, அய்யானாருக்கு
டெடிகேட் செய்தல் வேண்டும்.

said...

சென்ஷிக்கு அப்புறம் நீங்களாய்யா.
அதை என்னென்னவோ சொல்லிட்டு அது மேலேயே உட்கார்ந்தா அது நிலவைப் பு*ரும் முன் உட்கார்ந்தவனை பு*ருவது போல இருந்திருக்கும். அதுதான் எழுந்து விட்டீர்களோ. :))
ஐயோ. கனவே இவ்வளவு பயங்கரமா?

said...

:-)))))))))

said...

me they 15

said...

என்னா வில்லத்தனம்.

said...

\\ஒரு புல்\\

சரியா சொல்லுங்க

Anonymous said...

குசும்பா,

வேணும்னா நான் துபாய் வந்துகூட பின்னூட்டம் இடுகிறேன்.

நீ பி ந வாதி ஆனா, உன்னால சிரிக்கிற எல்லோரும் அப்புறம் உன்னப் பாத்துச் சிரிக்கிற மாதிரி ஆயிடும் பாத்துக்க.

said...

:-))))))))))))))

said...

//இதுக்கு மேல இந்த புல்லு மேல உட்கார என்னமோ மாதிரி இருக்கு//

ஹா ஹா ஹா

said...

எனக்கு தெரிஞ்சு பிரமாண்டம் என்றால் நமீதாதான் என்று சொல்ல அதுக்கு அவர் என் காதில் சொன்னதும் அந்த மணல் மேட்டிலும் உட்கார என்னமோ மாதிரி இருந்தது//

அப்படி என்னதாம்பா சொன்னாரு
சஸ்பென்ஸ் தாங்க முடியலையே
உடனே சாட்டுக்கு வந்து சொல்லவும்

said...

//டேய் என்னை கொஞ்சம் அனத்த விடுடா என்று அய்யனார் பாய்ஸ் விவேக் போல கத்த//

அய்யனாரை வரைமுறையில்லாமல்
கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்

said...

//நான் புனைவு எழுதுவது போல் கண்ட கனவு நடக்காமல் இருக்க ஏதும் பரிகாரம் இருக்கா?//

இருக்கு,
ஈரோட்டுக்கு ஒரு பாரின் ஃபுல் பாட்டில் ஒன்னு பார்சல் அனுப்புங்க சொல்றேன்

said...

//தரையில் சிறிதும் பெரிதுமாய்
குறிகள் நீட்டிக்கொண்டு
இருக்கின்றன இரவில் நிலவை புணர!
//

Anne.. Kalakkitteenga... :-)


Ayyanar yosichalum ippadithan irukkum polarukku... :-)

said...

adada Me the 25th Miss ahiduchu :-(

said...

//ஈரோட்டுக்கு ஒரு பாரின் ஃபுல் பாட்டில் ஒன்னு பார்சல் அனுப்புங்க சொல்றேன்//

குசும்பன் நீங்க உட்கார்ந்த 'புல்'லை ஒரு பாட்டில போட்டு ஏன் வால்பையன் பார்சல்ல அனுப்ப சொல்றாரு???

said...

//பாரின் ஃபுல்//

நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்.....

said...

// இதுக்கு மேல இந்த புல்லு மேல உட்கார என்னமோ மாதிரி இருக்கு

//


ச்சீய்...நீ ரொம்ப ஆய் பையன் :)

Anonymous said...

கிகிகிகி

said...

:))))))

ஆனாலும் ஓவர் குசும்பு. அய்ஸ் ரசிகர் மன்ற சார்பில் கண்டனங்கள். இருகருபெரு விழிகளால் நாங்கள் உற்றுப்பார்ப்பது உனக்கு உறைக்கக்கூடும் ஒரு நாள்.

அனுஜன்யா

said...

அடிங்க மாமா.. யாரைக் கேட்டு இந்த தலைப்பு வச்சிங்க? இங்க ஒரே காத்து வாங்கும் கடைக்காரன் நான் தான்.. மரியாதையா ராயல்டி குடுங்க. :)

said...
This comment has been removed by the author.
said...

புல் தரை???!!!........,
மணல் மேடு???!!!.....,
பின்நவீனத்துவம் தெரியாத சின்னப்புள்ள நம்பனும் ம்.....

said...

/அடிங்க மாமா.. யாரைக் கேட்டு இந்த தலைப்பு வச்சிங்க? இங்க ஒரே காத்து வாங்கும் கடைக்காரன் நான் தான்.. மரியாதையா ராயல்டி குடுங்க. :)

//


இங்க மட்டும் என்ன வாழுதாம்???

said...

/இதுக்கு மேல இந்த புல்லு மேல உட்கார என்னமோ மாதிரி இருக்கு வா அங்கபோய் மணல் மேட்டில் உட்காரலாம் /

சிரிச்சுட்டேன்.

/1) படிக்கிறவனுக்கு ஒன்னும் புரியக்கூடாது
2) கொஞ்சம் கிளு கிளுப்பா கெட்டவார்த்தை எல்லாம் இருக்கனும்
3)சொல்ல வருவதை நேரா சொல்லக்கூடாது,சொன்னவனுக்கும் என்ன சொன்னோம் என்று தெரியக்கூடாது, கேட்டவனுக்கும் ஒன்னும் புரியக்கூடாது.
4) தமிழுக்கே அகராதி தேடும் அளவுக்கு கடினமான வார்த்தைய யூஸ் செய்யனும்!/

நான் பேச நினைப்பதெல்லாம்...

ஆனாலும் பொறாமையாத்தானிருக்கு. முக்காக் கிணறு தாண்டிட்டீங்க போலயிருக்கே.

said...

:))

said...

நன்றி தாரணி பிரியா! பரிகாரம் கேட்டா கைய வெட்டிக்க சொல்றீங்களே இது நல்லா இருக்கா?
******************************
அ.மு.செய்யது அவரோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கேன் ஒரு வருடத்துக்கு கலாய்த்துக்கொள்ள அதுவரை பிரச்சினை இல்லை,
புதுசா கடை ஓப்பன் செய்யுற அளவுக்கு பொருளாதார நிலை சரி இல்லை! பொருளாதார தேக்க நிலை!
*******************************
அபி அப்பா அப்படி எழுதினா அதை என் பிளாக்கில் போட முடியாது, தமிழ்.....பிளாக்ஸ்பார்.காமில்தான் போடமுடியும்.
*******************************
நன்றி கார்க்கி
******************************
பரிசல் ஒன்லி புல்லு:))
**************************
நன்றி நிஜமா நல்லவன்
**************************
செய்யது அய்யனாருக்கு டெடிக்கேட் செய்யனுமா? திருநெல்வேலிக்கே அல்வாவா?
***************************
ஆமாம் சுல்தான் பாய் கனவே இம்புட்டு பயங்கரம்:((
****************************

said...

நன்றி முரளி கண்ணன்,

நன்றி ஜமால்

வடகரை வேலன் said...
நீ பி ந வாதி ஆனா, உன்னால சிரிக்கிற எல்லோரும் அப்புறம் உன்னப் பாத்துச் சிரிக்கிற மாதிரி ஆயிடும் பாத்துக்க.//

அய்யய்யோ அப்படி எல்லாம் ஆகிட கூடாதுன்னுதானே பரிகாரம் கேட்டு பதிவு போடு இருக்கேன்!

*****************************
நன்றி படகு!

(பரிசல், படகு நல்லா வெக்கிறாங்கப்பா பேரு, நானும் வெக்கிறேன் கத்தி கப்பல் என்று இருங்க:))))
*******************************
நன்றி வால்
//அய்யனாரை வரைமுறையில்லாமல்
கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்//

வால் அவர்தான் எதிலும் வரைமுறை இருக்ககூடாதுன்னு சொல்லுவார்.

குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும் அதனால் நோ ஆல்கஹால்!
****************************

Valaipookkal said...
Hi... இதற்கு பிறகு இருப்பது எனக்கே மனப்பாடம் ஆகிட்டுங்க!

நீங்க போடவில்லை என்றாலும் நானே எல்லோருக்கும் போட்டுவிடுவேன் போல அந்த அளவுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது!

லேட்டோ லாட்டரி போய்,சாப்ட்வேர் போய் இப்ப வலைப்பூ குழுவினர்:((

********************************
சென்ஷி நன்றி, அய்யனார் இன்னும் பல பல சிந்தனைகள் வெச்சு இருப்பார்:))
*******************************

நன்றி ஆதவன், ஒருவேளை என் நினைவாக வெச்சுக்க இருக்குமோ!
*****************************

said...

உங்கடை காத்துவாங்குனா அய்யனார வம்புக்கு இழுப்பியா? அவரு பாட்டுக்கு பாவம் செவனேன்னு கிடக்காரு.

said...

அடுத்த போஸ்ட் தலைப்பு தமிழச்சியும் பின்நவீனத்துவமும் மா? :

said...

எம்.எம்.அப்துல்லா said...
ச்சீய்...நீ ரொம்ப ஆய் பையன் :)//

அண்ணே சொக்க தங்கம் அண்ணாச்சி நான்:)))
******************************
நன்றி தூயா
********************************
அனுஜன்யா said...
// இருகருபெரு விழிகளால் நாங்கள் உற்றுப்பார்ப்பது உனக்கு உறைக்கக்கூடும் ஒரு நாள். //

திஸ் ஈஸ் பர்பெக்ட் எக்ஸாம்பில் பார்
4) தமிழுக்கே அகராதி தேடும் அளவுக்கு கடினமான வார்த்தைய யூஸ் செய்யனும்!

********************************
நன்றி மாம்ஸ் ராயல்டி இல்லை டிப்டன் டீதான் இருக்கு தரவா?
*****************************
நன்றி சங்கர், ஆமாங்கோ நம்பிதான் ஆகனும்:)))
*******************************
அப்துல்லா அண்ணாசி உங்களுக்கே ஓவரா தெரியலை, நீங்க பதிவு போட்டா நான் தான் முதல்ல படிப்பேன் நான் தான் முதல்ல படிப்பேன் என்று முண்டி அடிச்சதில்
கடந்த வாரம் 10க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தது மறந்து போச்சா?
*******************************
ச.முத்துவேல் நன்றி, முக்காகிணறா
அவ்வ்வ் நான் பினா வானா இல்லை!
*******************************
நன்றி தாமிரா
******************************
நந்து அப்ப உங்களை வம்புக்கு இழுக்கவா?

அண்ணே ஏன்னே நான் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா? திரும்ப அவங்களிடம் நான் பம்மி எஸ்கேப் ஆகனும் அத பார்த்து நீங்க சிரிக்கனும் இதுதானே உங்க ஆசை!!!
என்ன ஒரு வில்லதனம்!

said...

//குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும் அதனால் நோ ஆல்கஹால்!//

இது பொது புத்தி!

தமிழ்நாட்டில் குடிப்பது தமிழ்நாட்டை வளர்க்கும் என்பது தான் பி.ந புத்தி

Anonymous said...

மாம்ஸ் ராயல்டி இல்லை டிப்டன் டீதான் இருக்கு தரவா?
//


புது டீயா இருக்கே ஒண்ணு குடுங்களேன்

:)

Anonymous said...

என்னடா குசும்பா ரொம்ப சோகமாக இருக்க என்ன பிரச்சினை? என்று கேட்டப்படியே உள்ளே வந்தார் அய்யனார்.
//

சோகமா இருந்தா
உடனே சரக்கு அடிச்சிடுவாரு அய்யனார்

நீங்க சோகமா இருந்தா உடனே அவர கலாய்ச்சிடுவீங்களே..!!

Anonymous said...

இல்லய்யா ஒன்னும் இல்ல போஸ்ட் போட்டா ஒருத்தரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க, பின்னூட்டமும் வருவது இல்லை,
//


எங்க கிட்ட சொன்னா போதுமே

நாங்க வந்து கும்மிட்டு போவோமே

Anonymous said...

டேய் நீ
இதுவரை
எழுதி இருக்கிறது
எல்லாமே

மொக்கை

Anonymous said...

ஒன்னும் இல்லாததை பற்றி எழுதி ஒன்னும் ஆகப்போவது இல்லை-
ரைட்டு விடு :)

Anonymous said...

நல்லதா ஒரு கத்தி எடுத்து விரல் ஒரத்தில எல்லாம் ரத்தம் வர்ற மாதிரி அறுத்துகோங்க. கொஞ்ச நாளைக்கு எதுவுமே எழுத முடியாது//விரல்கள் என திருத்தி படிக்கவும்

:)

said...

// கடற்கரை பக்கம் போனார்.போய்இருவரும் அப்படியே வெளியே போய் ஒரு புல் தரையில் அமர்ந்தோம். //கடற்கரையில புள் தரையா ......... நெம்ப சந்தோசமுங்கோ ......
// தரையில் சிறிதும் பெரிதுமாய்
குறிகள் நீட்டிக்கொண்டு
இருக்கின்றன இரவில் நிலவை புணர!

இப்படி எழுதிட்டு ஏங்கும் ஆண் குறி என்று தலைப்பு வெச்சேன்னா பதிவு பிச்சுக்கிட்டு போகும். //
இத நீங்க உங்க வலை பதிவுல போடிங்கனா பின்நூட்டத்த தவிர ஒரு மண்ணும் வராது .....

இதயவே ஒரு மாத இதழா " அந்தபுரத்தில் ஒரு அம்புஜம் " , " அடிவானில் ஒரு அமலா " , " குசும்பனும் அலமேலும் " இப்படி பல பல பளபளக்கும் தலைல்ப்புகளில் வெளி விட்டிங்கனா.... ச்சுகூலு பசங்க நெறிய பேரு உங்களுக்கு விசிறி ஆயிருவாங்க ..... அப்புறம் காசுக்கு காசும் ஆச்சு ... " இளைய தலைமுறைகளின் கதாநாயகன் " அப்புடீன்கிற மாபெரும் பட்டமும் உங்குளுக்கு கெடைக்கும் ......

சிறப்பா யோசிச்சு பாருங்க .......

// இந்த புல்லை குறியாக நினைச்சு பாரு கவிதை புரியும். //
அப்போ அதுக்கு ஜோடியா எத நினைக்கிறது தம்பி .... இப்பிடியீ பாக்குற ஒவ்வொன்னையும் நெனச்சீனா ....... அப்பொறம் கூடிய சீகரம் நீ அந்நியன் மாதிரி மல்டி பர்சனாலிட்டி ஆளா மாறிடுவா ..........


// எதை பற்றி எழுதினாலும் ஒரு பிரமாண்டம் இருக்கனும். //
ஆமாங்கோவ் .. பிரமாண்டம் வேணுமுங்கோ .... தேவபட்டா நம்ப டையரெக்டர்
சங்கர்கோடா டையப்பு வெச்சுக்கோ கண்ணு ....... ஏன்னா அவருகிட்டதான் நெறிய பிரமாண்டம் இருக்குது ......

// எனக்கு தெரிஞ்சு பிரமாண்டம் என்றால் நமீதாதான் //

சீரியஸா பேசிகிட்டு இருக்கும்போது இப்படி மொக்கைய போடுறதே உனக்கு வேலையாபோச்சு தம்பி ...........

// அதுக்கு அவர் என் காதில் சொன்னதும் அந்த மணல் மேட்டிலும் உட்கார என்னமோ மாதிரி இருந்தது //சபாஸ் ... சுமாரான ஜோடி .............
// எதைப்பற்றி வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம். இதைதான் எழுதனும் என்று இருக்கும் கட்டை அவிழ்க்கனும்! அல்லது கட்டுடைக்கனும்!அதுக்கு பேருதான் புனைவு. ///
இப்பவே கதைய ஸ்டார்ட் பண்நீடிங்கலாட்ட .......... நெம்ப சந்தோசம் .... டபுள் மீனிங் இல்லாமா .... கதையோட பீச மட்டும் சொல்லுங்க .............


// 1) படிக்கிறவனுக்கு ஒன்னும் புரியக்கூடாது //இப்பவே ஒன்னும் புரியில.............

// 2) கொஞ்சம் கிளு கிளுப்பா கெட்டவார்த்தை எல்லாம் இருக்கனும் //
அது சரி ....... இடையில ... இடையில .... சகிலா படம் , சிலுக்கு படம் , பாபிலோனா படம் ..... இப்படியும் கொஞ்சம் சேர்த்துக்கோங்க ..... அப்பத்தான் பதிவ படுச்சிட்டு புரியாதவங்ககூட படத்த பாத்துட்டு ஜொள்ளு விட்டிட்டு போவாங்க .......

// 3)சொல்ல வருவதை நேரா சொல்லக்கூடாது,சொன்னவனுக்கும் என்ன சொன்னோம் என்று தெரியக்கூடாது, கேட்டவனுக்கும் ஒன்னும் புரியக்கூடாது. //

ஆமா ....... ரொம்ப நல்ல எண்ணம் உங்களுக்கு ....... நல்லாஇருங்க ..... நல்லாஇருங்க .....

// 4) தமிழுக்கே அகராதி தேடும் அளவுக்கு கடினமான வார்த்தைய யூஸ் செய்யனும்! //
ஆமா .. எலாரும் பதிவ படுச்சு மண்டைய பிச்சுகிட்டு ... 1st இயர் பி . ஏ . தமிழ் ல்ல போய் சேரனும் ...............


// அப்படி நிஜம் என்றால் நான் புனைவு எழுதுவது போல் கண்ட கனவு நடக்காமல் இருக்க ஏதும் பரிகாரம் இருக்கா? ///
இருக்குது மாப்ள .......பரிகாரம் இருக்குது ..... ஈரோட்டுக்கு வந்து இங்க இருக்குற
வலைப்பதிவர்கள் எல்லார்த்துக்கும் நெறஞ்ச பவுர்ணமியன்னைக்கி ..............

ஸ்ரீ . ஸ்ரீ . ஸ்ரீ . ஓல்ட் மங்கானந்தாவ வேண்டிகிட்டு எல்லார்த்துக்கும் சரக்கு வாங்கி குடுத்தீனா ..... இந்த மாதிரி நடக்காது ..... அப்பிடி செய்யாமபோனா சுவாமிஜி அருளால ரத்தங்கக்குவ ...... ஆமா சொல்லிபோட்டன்..... உம்பட சாய்ஸ் பாத்துக்கோ ....................

Anonymous said...

இதுக்கு மேல இந்த புல்லு மேல உட்கார என்னமோ மாதிரி இருக்கு
//


அதான் எல்ல்லாம் முடிஞ்சுடிச்சே அப்புறம் ஒக்காந்தா என்ன நின்னா என்ன?

Anonymous said...

கடற்கரையில புள் தரையா ......... நெம்ப சந்தோசமுங்கோ ......

//


துபாய் பீச்சுல இருக்குமோ என்னவோ

குசும்பனுக்கே "வெளிச்சம்"

said...

// கைபுள்ள said...

துபாய் பீச்சுல இருக்குமோ என்னவோ

குசும்பனுக்கே "வெளிச்சம்" //நெம்ப வெளிச்சம் வேண்டாமுங்கோவ் ....


அப்பொறம் பப்பி சேம் ஆயிருமுங்கோவ் ......

Anonymous said...

" அந்தபுரத்தில் ஒரு அம்புஜம் " , " அடிவானில் ஒரு அமலா " , " குசும்பனும் அலமேலும் " இப்படி பல பல பளபளக்கும் தலைல்ப்புகளில் வெளி விட்டிங்கனா.

//


குசும்பா யார் அந்த அலமேலு..??
இது என்ன புது ரூட்டுல போகுது கத ???

Anonymous said...

நெம்ப வெளிச்சம் வேண்டாமுங்கோவ் ....
அப்பொறம் பப்பி சேம் ஆயிருமுங்கோவ் ......
///


ஹி ஹி குசும்பன் எப்பவுமே ரூம்ல அப்படிதான் இருப்பாரு :)(எத சொல்ல கூடாதுனு மூடிவைச்சிருந்தோனோ அதை இப்படி பத்தவைச்சிட்டியே இம்சை - குசும்பன்)

Anonymous said...

// எனக்கு தெரிஞ்சு பிரமாண்டம் என்றால் நமீதாதான் //அப்ப சகிலாவை என்னனு சொல்லுறது

??

Anonymous said...

இருக்குது மாப்ள .......பரிகாரம் இருக்குது ..... ஈரோட்டுக்கு வந்து இங்க இருக்குற
வலைப்பதிவர்கள் எல்லார்த்துக்கும் நெறஞ்ச பவுர்ணமியன்னைக்கி ..............
//


அம்மணமா.... காட்சி தர வேண்டியிருக்கும் :)

Anonymous said...

அபி அப்பா said...

குசும்பா! நீ புல்லு மேல உக்காந்த 'அனுபவம்' பத்தி பினா நானா எதுனா எழுதி போடு! யாவாரம் பிச்சுக்கும்:-))

//


ஏற்கனவே பிச்சிகிட்டூ தான் 2க்கு போன குசும்பன் 2 மணி நேரமா காணும்
இன்னும் பிச்சிகனுமா..??

said...

அய்யா அனானி ராசாக்களே யாரு இந்த கும்மு கும்முறது, தனியா சாட்டில் வந்தாவது சொல்லிடுங்கப்பா!

டேட்டல் டேமேஜ் ஆக்கியாச்சு இன்னும் மிச்ச மீதி ஒன்னும் இல்லை!

கொஞ்சம் அது யாருன்னு வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டா ரொம்ப நல்லதுங்க!

Anonymous said...

குசும்பன் said...

அய்யா அனானி ராசாக்களே யாரு இந்த கும்மு கும்முறது,
//


நீங்க தான் எந்த பதிவு போட்டலும் காத்து வாங்குதுனு சொன்னீங்க

:)

Anonymous said...

தனியா சாட்டில் வந்தாவது சொல்லிடுங்கப்பா!
//

தனியா வரலாம் தான்...

ஆனா சாட்டுல நிறையா பேரு ஆன்லயனில் இருக்காங்க அவங்கள மொதல ஆப் லயனுக்கு போக சொல்லுங்க

Anonymous said...

கொஞ்சம் அது யாருன்னு வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டா ரொம்ப நல்லதுங்க!
//

ஒரு க்ளு தரவா..???

said...

:))

Anonymous said...

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?


இந்த பதிலில் முதல் நான்கு எழுத்தோடு

வெளிச்ச பதிவருடைய கடைசி நான்கு எழுத்தும் சேர

பின்னுட்ட அனானி பெயர் கிடைக்கும் :)

Anonymous said...

ஜெகதீசன் said...

:))
//


அவரு இவரா இருக்கொமோ..:??

Anonymous said...

// அதுக்கு அவர் என் காதில் சொன்னதும் அந்த மணல் மேட்டிலும் உட்கார என்னமோ மாதிரி இருந்தது //
//அய்யனார் என்னா சொல்லி இருப்பாருனு எனக்கும் தெரியும்..

உடனே நீ அந்த மலை மேட்டுல படுத்து உருண்டுயிருப்பே.... அதுவும் தெரியும் :)

Anonymous said...

மக்களே இந்த கனவு நான் கண்டது இன்று காலை 4 மணிக்கு விடியல் காலை கனவு பலிக்குமாமே, அது நிஜமா? அப்படி நிஜம் என்றால் நான் புனைவு எழுதுவது போல் கண்ட கனவு நடக்காமல் இருக்க ஏதும் பரிகாரம் இருக்கா?
///


இதுல எனக்கு டவுட் இருக்கு குசும்பர் :)

பரிகாரம் பண்ணிட்டா கனவு பலிகாதுனா...

விடிய்ல் காலையில் கண்ட கனவு பலிக்காதுனு தானே அர்த்தம் :)

said...

அய்யா ராசா போதும்! இனி காத்துவாங்குதுன்னே சொல்லமாட்டேன்! ரொம்ப அதிகமா போவுது!

Anonymous said...

குசும்பன் said...

அய்யா ராசா போதும்! இனி காத்துவாங்குதுன்னே சொல்லமாட்டேன்! ரொம்ப அதிகமா போவுது!
//

ஒகே ஒகே

இப்ப போறேன் அடுத்த பதிவுக்கு கூப்பிடனும் இல்லைனா...
ஆட்டய கலைப்பேன் :) ஒகே

said...

குசும்பன் என்ன சொன்னாலும் விடாதிங்க. நல்லா கும்முங்க. இந்தாளு என் மேலையே சந்தேகப் பட்டுட்டார். அது அப்டியே இருக்கட்டும். நீங்க கும்முங்க தலைவா.. :))

Anonymous said...

SanJai காந்தி said...

குசும்பன் என்ன சொன்னாலும் விடாதிங்க. நல்லா கும்முங்க. இந்தாளு என் மேலையே சந்தேகப் பட்டுட்டார். அது அப்டியே இருக்கட்டும். நீங்க கும்முங்க தலைவா.. :))
//


உங்களை எல்லாம் பாக்க பாவமா இருக்கு...

காந்தி :) உங்க வீட்டுக்கும் வருவேன்

Anonymous said...

பிளிஸ் ஒரு 75 போட்டுட்டு போயிடுறேனே...


அபி அப்பாவேற கூப்பிடுறாரு

Anonymous said...

உங்களை எல்லாம் பாக்க பாவமா இருக்கு...

காந்தி :) உங்க வீட்டுக்கும் வருவேன்
//


இத பார்க்கும் போது அனானி பின்னுட்டம் எல்லாத்தையும் ஏன் குசும்பனே போட்டு இருக்க கூடாது ???

Anonymous said...

எனக்கென்னவோ இது அபிஅப்பா வேலையா இருக்கும்

அவருதான் ஆணி இல்லாமல் இருக்குறாரு

:)

said...

//இத பார்க்கும் போது அனானி பின்னுட்டம் எல்லாத்தையும் ஏன் குசும்பனே போட்டு இருக்க கூடாது ???//

இதான் மாநக்கல் என்பது :))

Anonymous said...

75ஐய்யோ

எனக்கே எனக்கா...

Anonymous said...

யோவ் காந்தி சைடு கேப்புல போடுட்டிய்யா போட்டுட்ட(என்ன 75 தான்)


ஆனா நான் 100 போடம விட மாட்டேன் :)

said...

//யோவ் காந்தி சைடு கேப்புல போடுட்டிய்யா போட்டுட்ட//
நாம தப்பிக்க இன்னொருத்தரை போடறதுல தப்பே இல்லைன்னு எங்க தல சிபி சொல்லி இருக்கார். :))

Anonymous said...

இதான் "மாநக்கல்" என்பது :))
//


அவரா இருக்குமோ..??

:)

Anonymous said...

நாம தப்பிக்க இன்னொருத்தரை போடறதுல தப்பே இல்லைன்னு எங்க தல சிபி சொல்லி இருக்கார். :))
//


"தள" எப்ப "தல" யானாரு :)

தல - பாலபாரதி
தள - புரட்சி புயல் சிபி

:)

said...

செருப்ப தலையாணிக்கு பக்கத்தில வைச்சுக்க.

அப்றம் தினமும் தலை வைச்சு படுக்கிற பக்கம் கால வைச்சுப் படு.

கனவு வராது.

சாமீ, தாங்க முடியல மாப்பு

Anonymous said...

ஜோசப் பால்ராஜ் said...

செருப்ப தலையாணிக்கு பக்கத்தில வைச்சுக்க.

அப்றம் தினமும் தலை வைச்சு படுக்கிற பக்கம் கால வைச்சுப் படு.

கனவு வராது.
//


இது மட்டும் கலாமுக்கு தெரிஞ்சது வைச்சிக்க அம்ம்புட்டுதான்

said...

கனவுலயும் பின்னவீனத்துவமா? ரொம்ப ஓவரா சாரு ஆன்லைன் படிச்சிட்டீங்கன்னு நெனக்கிறேன்.. :)))

said...

// குசும்பன் said......
அம்மணமா.... காட்சி தர வேண்டியிருக்கும் :) //ரொம்ப நல்லதா போச்சு மாப்ள ....... எங்ககிட்ட நெறிய டேலன்ட் போட்டோக்ராபர்கள் இருக்காங்க .... நீ நல்லதா நாலு ஸ்டில்லு குடு ...... " குசும்பனும் அலமேலும் " கதைக்கு எடைல.... எடைல...... போட்டுறலாம் ........ , அலமேலு கதாபாத்திரத்துக்கு யாரு போட்டோவ போடுறதுன்னு நீ கவலப்படாத ..... அதுக்கு ....... நல்ல ஸ்டில்லா எங்கயாச்சும் பொறுகிக்கலாம்........