Monday, February 16, 2009

சென்னையில் நாள் சம்பளம் ஒரு லட்சத்தில் வேலை வேண்டுமா?

சென்னையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் சம்பளமாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் அதுக்கு ஆள் தேவை என்றும் நண்பர் ஒருவர் சொன்னார். என்ன என்ன சலுகைகள் என்று முதலில்சொல்லிவிடுகிறேன் இஷ்டம் இருப்பின் அவரை நீங்கள் அணுகலாம்.

சம்பளம்: நாள் ஒன்றுக்கு 1 லட்சம்.

சலுகைகள்: நல்ல புதிய கார், நல்ல சாப்பாடு, பெசண்ட் நகரில் ஒரு இடம், வேலை முடிந்ததும் உங்களை டிராப் செய்ய துணைக்கு நான்கு பேர்.

முக்கிய குறிப்பு: சம்பளம் உங்களிடம் மட்டுமே தப்படும்.

நீங்கள் செய்யவேண்டியது இதுதான். உங்களிடம் கார் கொடுத்துவிடுவார்கள் ECR ரோட்டிலோ அல்லது வேளச்சேரி 100 அடி ரோட்டிலோ வேகமாக ஓட்டிக்கிட்டு செல்லவேண்டியதுதான். இதுதான் உங்க வேலை. வேலையை ஆரம்பிக்கும் முன் நல்ல உயர்தர ஹோட்டலில் உணவு வழங்கப்படும்.

உங்கள் வேலை காரை ஓட்டுவது மட்டும்தான்!

முன்பு சொன்னது போல் வேகமாக ஓட்டிக்கொண்டு செல்லும் பொழுது எதிரே ஒரு லாரியையோ அல்லது டேங்கரையோ மோதவிடுவார்கள் கம்பெனி நிறுவனத்தார்கள்அப்படி மோதிய பொழுது உங்கள் அனுபவம் எப்படி இருந்தது அந்த கார் பாடி எதுவரை அழுத்தத்தை தாங்குகிறது. அல்லது அதன் பாடியில் வேறு மாற்றத்தை கொண்டுவரவேண்டுமா?அல்லது உபயோகப்படுத்தும் உலோகத்தை மாற்றவேண்டுமா என்று எல்லாம் ஆராய்சி செய்வார்கள்.
FAQ:
1)வேலைக்கு போகும் முன் எதற்கு நல்ல சாப்பாடு மட்டும் கொடுக்கிறீர்கள் அதன் பிறகு ஒன்றும் கிடையாதா?
நிச்சயமா வேலை முடிந்த பிறகு மறு நாள் ”பால்”

2)பெசண்ட் நகரில் எந்த ஏரியாவில் இடம், வசதியாக இருக்குமா?
பெசண்ட் நகர் மெயின் ஏரியாவில் இடம்,5 அடி ஆழத்தில் 6 அடி நீளத்தில் உள்ள படுக்கை அறை, நல்ல வசதியாக இருக்கும்.

3)வேலை முடிந்ததும் கூட நான்கு பேர் மட்டும்தான் வருவார்களா?
அடிப்படை தேவைக்காக நான்கு பேர் மட்டுமே வருவார்கள் உங்களுக்கு நண்பர்கள், சொந்தங்கள் அதிகம் இருப்பின் யார் வேண்டும் என்றாலும் பின்னாடி வரலாம்.

4) மோதிய கார் பாடியை எப்படி திரும்ப எடுத்துவந்து உங்களிடமே ஒப்படைப்பது?
முதலில் உங்க பாடிய யாரிடம் ஒப்படைப்பது என்று சொல்லுங்கள்.

5) வேலை கிடைக்க முன்னுரிமை யாருக்கேனும் உண்டா? அப்படி எனில் என்ன தகுதி இருக்கவேண்டும்?
நீங்கள் பின் நவீனத்துவ பிடாரியாக இருந்தால் முன்னுரிமை முதலில் வழங்கப்படும். ”சொந்த”கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 லட்சமும் முன்னுரிமையும் உண்டு.

டிஸ்கி:
இந்த பதிவு ஏன் புரியாமல் விழிப்பவர்களுக்குக்காக ஒரு செய்தி நண்பர் முரளிகண்ணன் அவர்கள் கார்கள் விபத்துக்குள்ளாகும் பொழுது அதிக சேதத்தை தவிர்ப்பது என்று ஆராய்ச்சி செய்கிறார்.

ஆராய்சியில் பங்கு பெறுங்கள்!

20 comments:

said...

nan thaan 1st aa ?

said...

நீங்க எனக்கு ஒரு வாட்டி கார ஓட்டி காட்டி வேலய கத்து கொடுப்பீங்களாம்.

(நான் பின் சீட்டிலலாம் உக்கார மாட்டேன்..ஒரு ஓரமா நின்னு பாத்துக்கறேன்.)

இந்த விளையாட்டு எனக்கு புடிச்சிருந்தா நானும் சேர்ந்துக்கறேன்.

said...

கலாய்ச்சிட்டீங்களே

said...

இதென்ன செத்து செத்து விளையாடுற விளையாட்டா?

said...

ங்கொய்யால

said...

ஹா...ஹா...

said...

சென்னையில் வைத்து அடி வேண்டுமா?

said...

ஹி..ஹி.. ட்ரெய்னிங்கெல்லாம் கிடையாதா?

said...

அதானே இதானாக்கும் செத்து செத்து விளையாடற விளையாட்டு?!!!இப்படி எல்லாம் எப்படி யோசிச்சு பதிவு போட முடியுது!!!:(

said...

ரெக்கமெண்டேஷனுக்கு யாரையும் தெரியாதே, நம்பல்லாம் சேர முடியுமான்னு நினைக்காதீங்க குசும்பன் அண்ணே. யாரையாவது புடுச்சு உங்கள சேர்த்து விடுறேன். ஓ.கே!!!

:))

said...

ஹெலோ...
நல்லாதானே இருக்கீங்க...
ஒன்னும் பிரச்சனை இல்லயே....

அப்புறம் ஏன் இப்படியெல்லாம்..??

said...

ஷப்பா, தாங்கலையே உன் குசும்பு.

அனுஜன்யா

said...

eaan enga mela intha kolaveri

said...

இது தான் உண்மையான கொலைவெறி

said...

ஹா...ஹா...குசும்பு?|

said...

ஆனாலும் இதெல்லாம் ஓவர்

Anonymous said...

ஏம்பா? யார் மேல இந்தக் கொல வெறி?

said...

நல்லா கெளப்பறாங்கய்யா பீதிய :))))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

said...

தனியா உக்காந்து விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டு இருக்கேன் நண்பா.

said...

//அப்படி மோதிய பொழுது உங்கள் அனுபவம் எப்படி இருந்தது//
கம்பெனி நிர்வாகத்தினருக்குத்தான் உங்கள்மேல் எவ்வளவு அக்கறை பாருங்கள். :-)