Monday, February 9, 2009

பாழாப்போன ஜோசப் பால்ராஜும் வீனாப்போன அப்துல்லாவும்!---மொக்கை!

ஜோசப் பால்ராஜ் இனியும் நீங்கள் தாங்கள் தங்களுடைய குணத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதுக்கு தக்க தகுந்த தண்டனை உங்களுக்கு உரிய நேரத்தில் தவறாமல் வழங்கப்படும்.

அப்துல்லா என்று சக பதிவர் தாங்களை சந்திக்க சிங்கப்பூர் வந்த விசயம் அனைவரும் அறிந்ததே, அதுவரை ஒழுங்காக இருந்த புதுகை அப்துல்லா தாங்களை சந்தித்தப்பிறகு எம்.எம். அப்துல்லா என்று பெயர் மாற்றியது மட்டும்அல்லாமல் அவரின் எழுத்திலும் சரி பேச்சிலும் சரி பல மாற்றங்கள், அந்த மாற்றங்கள் ஆரோக்கியமானதாக இல்லாததாலேயே இந்த கடிதம்!

இதுவரை புதுகை அப்துல்லா என்ற பெயரில் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் ரிலே ரேசில் ஓடிக்கிட்டு இருந்தவரை தாங்களை சந்தித்த பிறகு யுவான் சுவாங் ரேஞ்சில் பயன கட்டுரையும், திராவிடமும் கம்யூணிசமும் என்று எழுதியது மட்டும் இன்றி ஸ்பீல் பெர்க் படம் எடுப்பது போல் திராவிடமும் கம்யூணிசமும் பார்ட் 2 என்று எல்லாம் வேறு எழுதிவருகிறார். ஒழுங்காக மொக்கை போட்டுக்கிட்டு இருந்தவரை உன்னை போல் உருப்படியாக எழுத வெச்சது அடுக்குமா, நியாயமா இன்னுமும் காலேஜில் இருந்தது போலவே இருக்கிறீயா நண்பா!

மக்களே இந்த ஜோசப் பால்ராஜூம் நானும் MS .IT ஒன்னா படிச்சோம்( அப்பாடா நான் படிச்சதுக்கு இருக்கும் ஒரே சாட்சி நீதான் மாப்பு), படிக்கும் காலத்திலேயே ஜோசப் அவரை போல் என்னையும் நன்றாக படிக்கவைக்கவும், ஒழுங்கா புரோகிராம் எழுதவும், வகுப்பறையில் பாடம் ஒழுங்கா நடக்க ஒத்துழைப்பு கொடுக்கவேண்டியும் பல பகீர முயற்சிகள் எல்லாம் எடுத்துப்பார்த்தார். நான் கடவுளில் பாலா தலை கீழாக நிற்பது போல் நிற்காததுதான் குறை அப்படி எல்லா சவால்களையும் வெற்றிகரமாக முறியடிச்சு இன்றும் அப்படியே இருக்கிறேன் ஆனால் இந்த அப்துல்லா இப்படி ஒரேயடியாக மாறிப்போய்ட்டாரே!

இறுதியாக ஒரு எச்சரிக்கை: அப்துல்லா அண்ணாச்சி இதன்பிறகும் தாங்கள் இப்படிதான் உருப்படியாக எழுதுவீர்கள் என்றால் இனி உங்களோடு இருக்கும் இரு நாட்டு உறவுகளும் துண்டிக்கப்படும்!

மொக்கை மொக்கைமட்டும் அறியேன் வேறொன்றும் அறியேன் பராபரமே!
(நான் கடவுள் விமர்சனம் படிச்சதுக்கே இந்த எபெக்ட்).

புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான் என்பது போல் போடுறது எல்லாமே மொக்கை இதுல எதுக்கு புதுசா மொக்கைன்னு லேபிள் வேற என்று என் உள் மனம் கேட்கிறது இருந்தாலும் ஒரு ஆர்வம்தான்!

58 comments:

said...

எனது கண்டனத்தையும் இத்துடன் பதிவு செய்கிறேன்.. நல்லா கேட்ட குசும்பா.. :)))

said...

நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:)

said...

/ நானும் MS .IT ஒன்னா படிச்சோம்//

a b c d படிக்காம நேரா ஏன் m s i t படிச்சிங்க? மத்த alphabets எல்லாம் இப்பவாது தெரியுமா இல்லையா?

said...

அப்துல்லாவின் இந்த வன்செயலைக் கண்டித்து வருகிற வேலண்டைன்ஸ் டே
அன்று சென்னை மெரினா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

துண்டுசீட்டு பிரசுரித்து விட்டு தீக்குளிப்பவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு
செய்து கொள்ளவும்.

said...

அடிச்சு ஆடுங்கப்பு :)

said...

அண்ணன் எங்கே ஆணி புடுங்குவதில் பிசியா இருக்காரா ??

said...

குசும்பா உன் கல்யாணத்தின் போது மண்டப வாசலில் இருந்த பேனரில் மணமகன்: சரவனன் MS(IT) என்ற வாசகத்தின் அருகே நான், நாகை சிவா, காயத்ரி, G3, சிபி, சுரேகா, வெங்கி, சஞ்சய், இளையகவி, மங்களூர் சிவா எல்லாரும் குழாயடி சண்டை போட்டு கொண்டு போட்டோ எடுத்து கொண்டோம் என்கிற வரலாற்றை இங்கே பதிய வைக்கிறேன்!

said...

ஆனா அப்து அப்படி செஞ்சிருக்க கூடாது தான்! அந்த பதிவை படிச்சுட்டு ரெண்டு நாள் பேஸ்த்தடிச்ச மாதிரி ஆகிட்டேன். கொஞ்சம் சரியான பின்னே வந்து பார்த்தா அதுக்கு பாகம் 2 போட்டிருக்கார். அதான் தெளிய வச்சு அடிப்பது என்பதோ?

Anonymous said...

//பாழாப்போன ஜோசப் பால்ராஜும் //

ANNAWAI IPPADI AWAMATHIPPATHAI KANDIKKINDREN

Anonymous said...

//பாழாப்போன ஜோசப் பால்ராஜும் //

ANNAWAI IPPADI AWAMATHIPPATHAI KANDIKKINDREN

said...

நன்றி வெண்பூ நண்பனுக்கு ஒரு கஷ்டம் என்றால் முதலில் ஓடிவந்த உம்மை நான் மனதாரா பாராட்டுகிறேன்!

**************************
நன்றி வித்யா!
************************
கார்க்கி இப்பயும் A B C D தெரியாது தூள் படத்தில் விக்ரமுக்கு ரீமா சொல்லிக்கொடுப்பது போல் எனக்கு அதை போல் ஒரு பெண்ணை சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்யவும்!

said...

//ANNAWAI IPPADI AWAMATHIPPATHAI KANDIKKINDREN//

ஆமாம் தூயா! அதுவும் அண்ணா நூற்றாண்டு சமயத்திலே இப்படி செய்வது நல்லா இல்லை. கி கி கி(இது தூயா டச்சிங்):-))

said...

அ.மு.செய்யது said...
துண்டுசீட்டு பிரசுரித்து விட்டு தீக்குளிப்பவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு
செய்து கொள்ளவும்.//

இதுவரை பதிவு செய்தவர்கள்
1) அபி அப்பா
2) கார்க்கி
3)வெண்பூ
4) தாமிரா

********************
நன்றி SK

*************************

said...

அபி அப்பா said...
ஆனா அப்து அப்படி செஞ்சிருக்க கூடாது தான்! அந்த பதிவை படிச்சுட்டு ரெண்டு நாள் பேஸ்த்தடிச்ச மாதிரி ஆகிட்டேன்//

அபி அப்பு அது இன்னாது அப்து?

ஓ அப்துல்லாவின் சார்ட் பார்மா? நல்லவேளை என் பெயர் குசும்பனை சுருக்கி கூப்பிடவில்லை!:)))

said...

இன்னாபா இது

said...

:))

said...

:))

said...

அ.மு.செய்யது said...

அப்துல்லாவின் இந்த வன்செயலைக் கண்டித்து வருகிற வேலண்டைன்ஸ் டே
அன்று சென்னை மெரினா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

துண்டுசீட்டு பிரசுரித்து விட்டு தீக்குளிப்பவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு
செய்து கொள்ளவும்.\\

அடப்பாவி

கிளம்பிட்டியா நீய்யீ

said...

கார்க்கி இப்பயும் A B C D தெரியாது தூள் படத்தில் விக்ரமுக்கு ரீமா சொல்லிக்கொடுப்பது போல் எனக்கு அதை போல் ஒரு பெண்ணை சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்யவும்//

அப்படியா சேதி. சொல்ல வேண்டிய இடத்தில் சொல்றேன்.

said...

:-)))))))))))))))

said...

இந்த வெளையாட்டுக்கு நா வல்லீங்க சாமியோவ் .....ஐயா குசும்பு..... இத்தன நாளா அரசியல்ல கொழப்பம் பன்னுநீங்கோ ..... " எனக்கு ரெண்டு அடிம சிக்கீட்டாங்கடா ... அவுங்க எங்க போனாலும் உடக்கூடாது ... " அப்படிங்குற ரேஞ்சுல எறங்கியாச்சா ...... இதல்லாம் நெம்ப தப்பு ....

said...

//மொக்கை மொக்கைமட்டும் அறியேன் வேறொன்றும் அறியேன் பராபரமே!
(நான் கடவுள் விமர்சனம் படிச்சதுக்கே இந்த எபெக்ட்).//

:-))

//கார்க்கி இப்பயும் A B C D தெரியாது தூள் படத்தில் விக்ரமுக்கு ரீமா சொல்லிக்கொடுப்பது போல் எனக்கு அதை போல் ஒரு பெண்ணை சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்யவும்!//

LOL!!

said...

ஆமாமாம்
வர வர அப்துல்லா அண்ணே ரொம்பவே கெட்டு போயிட்டாரு
அவருக்கு தலைவர் பதவியும்
வேண்பூ அண்ணாவுக்கு செயலாளர் பதவியும் கொடுத்தால்,
செயலாளர் வந்து அட்டனென்ஸ் போட்டு போயிட்டார், இஅவர ஆளவே காணோம்.

கொஞ்சம் யாராவது கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்

said...

இரண்டு பேருமே ஒரு மார்க்கமாத்தான் திரியிறாக, சபாஷ் குசும்பன் !

said...

//நான் கடவுளில் பாலா தலை கீழாக நிற்பது போல் நிற்காததுதான் குறை//

அண்ணாத்தே... அது ஆர்யா ..
இதுதான் விமர்சனங்கள படிச்சிட்டு போஸ்ட் போட கூடாதுங்கறேன்..

எப்படியோ கொற கண்டுபுடிச்சாச்சு...
ஹிஹி..

Anonymous said...

இதுக்கப்புறமும் அவரு கம்யூனிசம்னு சொல்லக்க்கூட மாட்டாரு. பாவம்.

said...

:-)))...

said...

//போடுறது எல்லாமே மொக்கை இதுல எதுக்கு புதுசா மொக்கைன்னு லேபிள் வேற என்று என் உள் மனம் கேட்கிறது இருந்தாலும் ஒரு ஆர்வம்தான்!//

உம் ஆர்வத்தை கண்டு உள்ளம் மகிழ்ந்தோம் மற்றும் மெச்சினோம்.

said...

:) எச்சரிக்கை நல்லா இருக்கு..

said...

நானும் அப்துல்லாவை வன்மையாக கணித்துக்கொள்கிறேன்.

said...

சே.. அது...

"நானும் அப்துல்லாவை வன்மையாக கண்டித்துக்கொள்கிறேன்." என்று இருக்கவேண்டும்.!

said...

மானஸ்தனுக்கு ஒத்த வார்த்தை

நான் திருந்திட்டேன்!நான் திருந்திட்டேன்!

said...

யோவ் குசும்பா.... இன்னைக்கு உன்னோட போதைக்கு நான் ஊறுகாய் ஆயிட்டேனேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

said...

உண்மையிலேயே நம்ம 'அண்ணே' எழுதின பதிவுதானா அது? தலைப்ப பார்த்ததும் (அதுவும் இன்னிக்கு பார்ட்-2 வேற), திரும்பவும் 'அண்ணே' (அவரோட ப்ளாக்) கடத்தப்பட்டது அப்பிடின்னு அங்க போகவேயில்ல. வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது.

அனுஜன்யா

said...

பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன்

appadiya

ok methey 1st

wait wait enna muzikurenga unga blogku ithan firstu sonnen ok

said...

அறியாத வயசுல தெரியாத்தனமா நல்லாப் படிக்கிறேன் பேர்வழின்னு சில சேட்டையெல்லாம் செஞ்சேன் தான், ஒத்துக்கிறேன். அதுக்காக இப்டியா மாப்பு சபையில போட்டு உடைச்சு மானத்த வாங்குவா?
சிங்கப்பூர் வந்துட்டுப் போனப்புறம் எல்லாம் அப்துல்லா அண்ணண் நல்லாத்தான் இருந்தாரு. அதுக்கப்பறம் உடனே ஒரு வாரம் துபாய்க்கு வந்தாரு, அதுக்கு அப்பாலத்தான்யா அவரு மாறிப்போயிட்டாரு.

said...

// மானஸ்தனுக்கு ஒத்த வார்த்தை

நான் திருந்திட்டேன்!நான் திருந்திட்டேன்!

February 10, 2009 2:23 AM
Blogger எம்.எம்.அப்துல்லா said...

யோவ் குசும்பா.... இன்னைக்கு உன்னோட போதைக்கு நான் ஊறுகாய் ஆயிட்டேனேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ //

அண்ணே இப்டியா பிரிச்சு பேசுவீங்க? உங்கள மட்டுமா ஊறுகா ஆக்குனாரு நம்ம குசும்பரு?

said...

ok vanthathu than vanthuten oru

said...

me they 40

itha than pottu porenu solla vanthen ok bye.

said...

நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:)

said...

ச்சின்னப் பையன் said...
நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:)

inthe edathula periyavanga kandanam than etru kollapadum.
ச்சின்னப் பையன் kandanamlam etru kolla padathu

said...

நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:):):)

said...

//rapp said...
நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:):):)

//

வந்துட்டியா!!!வந்துட்டியா!!!
இவ்வளவு நாளா காணாப்போய்ட்டு இதுக்கு மட்டும் கரெக்ட்டா வந்துரு
:)))

said...

//நானும் MS .IT ஒன்னா படிச்சோம்( அப்பாடா நான் படிச்சதுக்கு இருக்கும் ஒரே சாட்சி நீதான் மாப்பு), //

நம்பிட்டோம்..நம்பிட்டோம்...

said...

//நான் கடவுளில் பாலா தலை கீழாக நிற்பது போல் நிற்காததுதான் குறை அப்படி எல்லா சவால்களையும் வெற்றிகரமாக முறியடிச்சு இன்றும் அப்படியே இருக்கிறேன் ஆனால் இந்த அப்துல்லா இப்படி ஒரேயடியாக மாறிப்போய்ட்டாரே!//

ஐயா குசும்பா, நான் கடவுள்ல தலைகீழா நின்னது ஆர்யா ராசா..நீங்க MS IT படிச்ச லட்சணம் தெரியுது!! :-)

said...

அப்துல்லா அண்ணாவை திருத்தினதுக்காக ஒரு பெரிய தேங்க்ஸ் :)

said...

அதானே..

ஒருத்தன் கொஞ்சம் நல்லா எழுதற மாதிரி தெரிஞ்சா இப்படி ஆப்பும் வெச்சு, அந்த ஆப்புலயே அவனை ஒக்காரவும் வெச்சுடுவீங்களே..

அண்ணே... நீங்க எழுதுங்கண்ணே... நாங்க இருக்கோம்...

said...

அப்துல்லாஜி..

குசும்பர் கிடக்கார்.. விடுங்க..

நீங்க இதையே எழுதுங்க.. நல்லாத்தான் எழுதுறீங்க..? பிறகென்ன..?

குசும்பன் பேச்சைக் கேட்டீங்கன்னா அவ்ளோதான்.. சொல்லிப்புட்டேன்..

said...

தலைப்பையாவது ஒழுங்கா எழுதத் தெரியுதா.?

//பாழாப்போன ஜோசப் பால்ராஜும் வீனாப்போன அப்துல்லாவும்! மொக்கை!//

"வீணாப்போன" என்று இருக்க வேண்டும். ரெட்டைச் சுழியா.. ஒத்தைச் சுழியான்னே தெரியல..

அதுக்குள்ள கும்மியடிக்க ஆளாய் பறக்குறத பாரு..

மவனே நீ பெல்லி டான்ஸ் ஆடத்தான் லாயக்கு..

said...

\\அண்ணே... நீங்க எழுதுங்கண்ணே... நாங்க இருக்கோம்...\\

நாங்க இருப்போமா என்பது தான் இப்ப கேள்வியே:-))

said...

எனது கண்டனத்தையும் இத்துடன் பதிவு செய்கிறேன்.. நல்லா கேட்ட குசும்பா.. :)))

said...

/ நானும் MS .IT ஒன்னா படிச்சோம்//

a b c d படிக்காம நேரா ஏன் m s i t படிச்சிங்க? மத்த alphabets எல்லாம் இப்பவாது தெரியுமா இல்லையா?

said...

அப்துல்லாவின் இந்த வன்செயலைக் கண்டித்து வருகிற வேலண்டைன்ஸ் டே
அன்று சென்னை மெரினா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

துண்டுசீட்டு பிரசுரித்து விட்டு தீக்குளிப்பவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு
செய்து கொள்ளவும்.

said...

//
அபி அப்பா said...

குசும்பா உன் கல்யாணத்தின் போது மண்டப வாசலில் இருந்த பேனரில் மணமகன்: சரவனன் MS(IT) என்ற வாசகத்தின் அருகே நான், நாகை சிவா, காயத்ரி, G3, சிபி, சுரேகா, வெங்கி, சஞ்சய், இளையகவி, மங்களூர் சிவா எல்லாரும் குழாயடி சண்டை போட்டு கொண்டு போட்டோ எடுத்து கொண்டோம் என்கிற வரலாற்றை இங்கே பதிய வைக்கிறேன்!
//

ஆமாம் ஆமாம்

said...

//
கார்க்கி இப்பயும் A B C D தெரியாது தூள் படத்தில் விக்ரமுக்கு ரீமா சொல்லிக்கொடுப்பது போல் எனக்கு அதை போல் ஒரு பெண்ணை சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்யவும்//

எந்த பெண்ணும் ரெடியில்லை நம்ம சஞ்சய் மாம்ஸ் ரீமா சென் காஸ்ட்யூம்ல சொல்லி குடுக்கிறாராம் எப்படி வசதி????

said...

//a b c d படிக்காம நேரா ஏன் m s i t படிச்சிங்க? மத்த alphabets எல்லாம் இப்பவாது தெரியுமா இல்லையா?//


Super Karki ...or Garkki..!

said...

பின்னூட்ட பிதாமகன்கள் அனைவருக்கும் நன்றியோ நன்றி!

டைம் இல்லாததால் எல்லோருக்கும் தனிதனியாக சொல்லமுடியவில்லை
கும்மி அடிக்க அழைப்பு வருகிறது நன்றி!
பை பை

said...

//நான் கடவுளில் பாலா தலை கீழாக நிற்பது போல்//
உயிரை குடுத்து நடிச்சவன் ஆர்யா.. பாலா நிக்கவும் இல்ல.. தொங்கவும் இல்ல.. ஆளப் பாரு.. :)