Wednesday, February 4, 2009

பப்ளிக்கா ஒண்ணுக்கு அடிக்காதீங்க! (அடல்ட் “ஒன்”லி பதிவு)

ஆத்திரத்தை அடக்கினாலும் உச்சாவை அடக்காதீங்க என்று ஒரு சொல் வழக்கு உண்டு! எதை எதையோ மறந்த நம்ம பயபுள்ளைங்க இதை மட்டும் கரெக்ட்டா கடைப்பிடிச்சுக்கிட்டுவரானுங்க. ஊரில் எத்தனை எத்தனையோ மாற்றம் ஆனால் பஸ் ஸ்டாண்ட், முட்டு சந்து, தெருமுக்கு, குட்டி சுவரு, என்று எந்த பாரபடசமும் இன்றி நம்ம ஆளுங்க யூரின் டேங்கைகாலி செஞ்சுட்டு போய்டுறானுங்க அது மட்டும் மாறவே இல்லை. அதுவும் போகும் பொழுது ரவுண்ட் ரவுண்டா டிசைன் போட்டுக்கிட்டு, சில பேர்
என்னமோ போனாவை புடிச்சு செக்கில் கையெழுத்து போடுவது போல் படம் வரைவானுங்க. குட்டி சுவர் என்றால் ஈ.ஸி.ஜி மாதிரி லைன் லைனா போடுவானுங்க. சில சமயம் யார் ரொம்ப தூரம் எட்டி அடிக்கிறானுங்க என்று போட்டி வேற!


நம்ம பயபுள்ளைங்களுக்கு இருக்கும் ஒரு பழக்கம் ஒருத்தன் ஒண்ணுக்கு அடிக்க ஆரம்பிச்சா டக்கு டக்குன்னு மத்தவனுங்களுக்கும் ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வந்து அப்படியே லைன் கட்டிநின்னு ஒரு சின்ன ஓடைய உருவாக்கிவிட்டு விட்டு போய்டுவானுங்க.இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் ஒண்ணுக்கு அடிக்கும் பொழுதுதான் நம்ம தல நர்சிம் உள்ளேவருகிறார் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று!. ச்சே அவுங்க ஒண்ணுக்கு அடிக்கிற இடத்துக்கு இல்லைங்க. என் நினைவில் வருகிறார் என்று சொல்ல வந்தேன்.

இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் எல்லாம் ஒண்ணுக்கு அடிச்சு இடத்தை நாற அடிப்பதை எப்படி எல்லாம் தடுக்கலாம் என்று மல்லாக்க படுத்துக்கிட்டுயோசிச்சதில் பல ஐடியா தோன்றியது.

1) எங்க ஊரில் திறமையான பசங்க நிறைய பேர் இருக்கானுங்க சும்மா டைம் பாஸ்க்கு ஸ்கூலுக்கு போய்ட்டு படிப்பு வராம ஒரு நிலையான வருமானமும் இல்லாமசுத்திக்கிட்டு இருப்பானுங்க, அவனுங்களுக்கு பொழுது போக்கு வேலியில் போகும் ஓணானை எட்டி நின்னு ஒரு சின்ன கல்லால் அடிச்சு அது வாயில புகையிலை வெச்சு டான்ஸ் ஆட உடுவது, அது வாயில் பீடிய வெச்சு பீடி அடிக்கவிடுவது என்று பைசா பிரோஜனம் இல்லாத வேலைய பார்த்துக்கிட்டு இருக்கானுங்க. அப்படி ஓணான் அடிப்பதில் திறமையான ஆளுங்களை கொண்டு வந்து பஸ் ஸ்டாண்ட் பக்கம் உட்கார வெச்சு கையில கொஞ்சம் கல்லை கொடுத்தோம் என்று வெச்சுக்குங்க எவனாவது ஒண்ணுக்கு அடிக்க ஜிப்பை திறந்து வெளியே எடுத்தானுங்க “டிங்காண”வை ஓணான் அடிப்பது போல் ஒரே அடி அடிச்சுடுவானுங்க. இப்படி அதிகமாகஅடிச்சு விரட்டுபவர்களுக்கு மாதம் ஒரு சம்பளம் போட்டு கொடுத்தா அவன் பொழப்பும் ஓடும் பஸ் ஸ்டாண்டும் கிளீனா இருக்கும். (ஓணான் பிடிக்க இன்னொரு முறை வெளக்கமாத்து குச்சியில் சுருக்கு போட்டு புடிப்பது அந்த முறையில் கை தேர்ந்தவர்கள் இந்த வேலையில் வாய்ப்பு வழங்கபடாது)

2) முதலில் சொன்ன யோசனையில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம் கல்லு கொஞ்சம் வேகமாக போய் பட்டுவிட்டால், அதனால் அதுக்கு பதில் பிளாஸ்டிக் குண்டுகள் நிறப்பிய டுப்பாக்கி கொடுக்கலாம், பிளாஸ்டிக் குண்டு என்பதால் ரிஸ்க் கம்மி, அதோடு மட்டும் இன்றி விவேக்கிடம் கேட்பது போல் எதடா சுட்ட? என்று கேட்டால் மைனர் குஞ்ச சுட்டேன் என்று டயலாக் வேற சொல்லிக்கலாம். (இதுக்கு டிரைனிங் அக்டாமி ஆரம்பிப்பது, ”குறி” தவறாமல் சுடுபவர்களுக்கு பதக்கம் வழங்குவது என்று பல ஐடியா இருக்கு)

3) கால் வெச்சா வெடிக்கும் கண்ணி வெடி போல் ஜொய்ங்ங்ங் என்று உச்சா அடிக்கும் பொழுது உச்சா பட்டா ”டமார்” என்று வெடிக்கும் சில பல வெடிகளை கண்டுபிடிக்கவேண்டும், அப்படி வெடிச்சுது என்றால் பயத்தில் வந்த உச்சாவும் ரிவர்ஸ் கியர்போட்டு உள்ளே ஓடிவிடும்.

4)ஒருவித கெமிக்கல் கண்டுபிடிக்கவேண்டும் அதை பொது இடங்களில் தூவ வேண்டும் அந்த கெமிக்கலுக்கு இரு பயன்கள் இருக்கவேண்டும்

4.1) டிங்கானாவின் அளவு ஒருமுறை பப்ளிக்கா உச்சா போனால் ஒரு மி.மீ குறையவேண்டும். நம்ம பயபுள்ளைங்களுக்கு எப்பொழுதுமே இருக்கும் ஒரு டவுட் “அளவை” பற்றியது இது போதுமா போதாதா? இதை வெச்சு வாழ்கைய ஓட்டமுடியுமா? எத்தனை முறை மாத்ரூபூதம் டீவியில் தோன்றி யானைய அடக்கும் அங்குசம் சின்னதுதான் என்று சொன்னாலும் என்று ஒருவித குழப்பத்தோடயே உலாவிக்கிட்டு இருப்பானுங்க அப்படி இருக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஒரு மி.மீ குறையும் என்றால் உள்ளதும் போச்சுடாநொல்லகண்ணா என்று பப்ளிக்கா வெளியே எடுக்கவே பயப்படுவானுங்க!

4.2) இரண்டாவது பலனாக ஒரு முறை பப்ளிக்கா உச்சா போனால் ஒரு மூன்று நாளைக்கு ”ஒன்னியும்” செய்யமுடியாதபடி அந்த கெமிக்கல் பவுடர் வேலை செய்யனும்.

5) பஸ் ஸ்டாண்டில் பெரிய ஸ்கிரீன் வெச்சு மாய லென்ஸ் மூலம் ரொம்ப சின்னதா புரோஜெக்ட் செஞ்சா பயந்து போய் ஓடி போய்டுவானுங்க.

இப்படி டிராப்பிக்கை, எச்சில் துப்புவதை, சிகரெட் பிடிப்பதை எல்லா தடுக்க பல யோசனை வெச்சு இருக்கேன், இதுக்கு மேலும் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று யாராவது கேட்டிங்கன்னா ஒன்னு ஒன்னாக வெளியே வரும்.


டிஸ்கி: உங்களுக்கும் ஏதும் இதுபோல் யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கூச்சப்படாம சொல்லுங்க பாஸ்!

58 comments:

said...

உம்மை மொத்தணும் பாஸ்! :) :)

said...

ஏன்யா அந்தாளு எவ்வளவு சீரியஸா ஒரு பதிவு போட்டு, அதுக்கு பலரும் தொடர் பதிவு போட்டுகிட்டிருக்காங்க.. நீங்க என்னடாண்னா சைஸைச் சின்னது பண்றதுலயே இருக்கீங்களே :)

said...

நான் போறதில்லை..
செம அடல்ட் பதிவு..
குசும்பரே.. சும்மாவே இருக்க மாட்டீரா?

said...

என்ன கொடுமை சரவணா! எனக்கு தெரிந்தே நீ 7329 டைம் அப்படி அடிச்சு இருக்கியே கண்ணா!

என்ன கணக்கு அது ஒரு மில்லி மீட்டரா! சரி நான் கொஞ்சம் கணக்குல வீக்! யாராவது போட்டு சொல்லுங்கப்பா:-))

குறிப்பு: இதுவும் ஒரு அடல்ஸ் பிகாரி வாஜ்பாய் பின்னூட்டம்.சின்ன பசங்களும் பலகீன(இதயம்ப்பா)ஆளுங்களும் படிக்காதீங்க!

Anonymous said...

வி.வி.சி. [விழுந்து விழுந்து சிரிச்சேன்]
இதெல்லாம் விடுங்க.. உண்மையிலயே இந்தியாவுல எங்கயோ இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு குட்டிச்சுவருல கண்ணாடி போட்டிருக்கானுங்களாம்.. (forward வந்ததா நெனைவு)
கண்ணாடி எல்லாம் நம்ம ஊருக்கு சரிப்பட்டு வராது.. வெலைகுறைவா எதாவது தகடு போட்டுறனும்.. அப்புறம் ஒண்ணுக்கடிக்கறது ஊருக்கே தெரியும்! :D

said...

:)))

அதிலும் நம்ம பசங்க சிறுநீர் கழிக்காதீர் என்ற இடத்தில் தான் கர்மம் கண்ணாயிரமாக பம்பை திறந்து விடுவாங்க....

@ அபி அப்பா! குறிப்பை போட்டுட்டு மேட்டருக்கு போகனும். மேட்டரை சொல்லிட்டு குறிப்பு போட்டா என்ன அர்த்தம்

said...

சிதம்பரம்! பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் உச்சா போறவங்களை துரத்தி துரத்தி ஒரு ஆள் காசு வாங்கிட்டு இருப்பாரு. காண்ட்ராக்ட் எடுத்த ஆளு போல. ஆனால் இப்பொழுது இல்லை.

said...

//அதுவும் போகும் பொழுது ரவுண்ட் ரவுண்டா டிசைன் போட்டுக்கிட்டு//

ஹா ஹா ஹா

// குட்டி சுவர் என்றால் ஈ.ஸி.ஜி மாதிரி லைன் லைனா போடுவானுங்க. //

இதுல குசும்பனுக்கும் பங்கு உண்டா :-))))))

உங்க ஐடியா வா இம்ப்ளிமென்ட் செய்தா அப்புறம் சிவராஜ் சித்த வைத்திய சாலைக்கு கூட்டம் அலை மோதும் ஹா ஹா ஹா

//Anonymous said...
உண்மையிலயே இந்தியாவுல எங்கயோ இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு குட்டிச்சுவருல கண்ணாடி போட்டிருக்கானுங்களாம்..//

செம ஐடியா வா இருக்கே.. :-) கண்ணாடிய ஒடைக்காம இருந்தா சரி

said...

யோவ்.. சந்தேகம் கேட்டா பதில் தெரிஞ்சா சொல்லு தெரியலைனா தெரியலைனு போ.. இது என்ன பழக்கம் இது பதிலே சொல்லாம எஸ்கேப் ஆகுறது?

தொல்ஸ்.. நீங்க தான் இந்த பிரச்சனைக்கு நியாயம் சொல்லனும்!

said...

// நாகை சிவா said...
யோவ்.. சந்தேகம் கேட்டா பதில் தெரிஞ்சா சொல்லு தெரியலைனா தெரியலைனு போ.. இது என்ன பழக்கம் இது பதிலே சொல்லாம எஸ்கேப் ஆகுறது?

தொல்ஸ்.. நீங்க தான் இந்த பிரச்சனைக்கு நியாயம் சொல்லனும்!//

நான் என்னத்த சொல்ல! நீங்க இப்படி டபார்ன்னு கால்குலேட்டர் தட்டி ஆன்லைன்ல இருந்த குசும்பனை சந்தேகம் கேட்டிருக்க கூடாது! நான் இதை கண்டிக்கிறேன்! இப்ப பாருங்க தம்பி வெட்கப்பட்டு கைலிய எடுத்து மூஞ்சிய மூடிகிட்டு ஆஃப் லைன்க்கு ஓடிடுச்சு:-))

said...

ஒன் குசும்புக்கு வரவர அளாவே இல்லாம போச்சுய்யா.. ஆஃபீஸ்ல ஒக்கார்ந்து படிச்சு சிரிச்சு சிரிச்சு மூச்சா வருது,.. இரு.. போய்ட்டு வரேன்.. (வாஷ்ரூம்லதான்..)

said...

ஜ்யோவ்ராம் ஏன் பாஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக் மெச்சனும் என்றுதானே சொல்ல வந்தீங்க:)))

இதுவும் சீரியஸ் பதிவுதான் பாஸ்:))

**************************
நன்றி ரங்கன், சும்மா மனசை லைட்டாக்கிக்க ஒரு ஜாலி பதிவு!
***************************
அபி அப்பா said...
என்ன கொடுமை சரவணா! எனக்கு தெரிந்தே நீ 7329 டைம் அப்படி அடிச்சு இருக்கியே கண்ணா!//

அபி அப்பா ஸ்டோரில் கணக்கு எடுக்கும் வேலை என்று சொன்னது எல்லாம் சும்மாவா?
(அப்ப வடிவேலு கதைதானா?))
*****************************
நன்றி அனானி

ஆமாம் புலி எங்கே போகாதே என்றால் அங்கேதான் போவாங்க!

*****************************
கிரி said...
//அதுவும் போகும் பொழுது ரவுண்ட் ரவுண்டா டிசைன் போட்டுக்கிட்டு//

ஹா ஹா ஹா

// குட்டி சுவர் என்றால் ஈ.ஸி.ஜி மாதிரி லைன் லைனா போடுவானுங்க. //

இதுல குசும்பனுக்கும் பங்கு உண்டா :-))))))//

சின்ன புள்ளையா இருக்கச்ச:)))

***********************************

said...

//ஒண்ணுக்கு அடிக்க ஆரம்பிச்சா டக்கு டக்குன்னு மத்தவனுங்களுக்கும் ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வந்து அப்படியே லைன் கட்டி நின்னு//

உட்கார்ந்துட்டும் கொஞ்ச பேரு போவாங்களே...

said...

//நான் என்னத்த சொல்ல! நீங்க இப்படி டபார்ன்னு கால்குலேட்டர் தட்டி//

அந்த அளவுக்கு இது ஒன்னும் கஷ்டமான கணக்கு இல்ல. மனக்கணக்கு தான்!

//ஆன்லைன்ல இருந்த குசும்பனை சந்தேகம் கேட்டிருக்க கூடாது! //

அவரை கேட்டா தானே பதில் கிடைக்கும்! அதான் கேட்டேன்!

//நான் இதை கண்டிக்கிறேன்! //

யோவ் உமக்காக தானே இந்த சந்தேகமே... இப்ப என்னவே கண்டிக்கிறேன் என்றால் என்ன அர்த்தம்!

//இப்ப பாருங்க தம்பி வெட்கப்பட்டு கைலிய எடுத்து மூஞ்சிய மூடிகிட்டு ஆஃப் லைன்க்கு ஓடிடுச்சு:-))//

டீம் லேடி கூப்பிட்டுச்சாம் அதான் ஒடினேன் என்று சொல்லுறார்... என்னிக்கு இவங்க எல்லாம் பசங்கள மதிச்சு பேசி இருக்காங்க சொல்லுங்க...
நாம் வாங்கி வந்த வரம் அப்படி :(

said...

நீங்க இருக்கிற துபாய் எப்படி க்ளீனா இருக்குதுன்னு இப்ப தானே தெரியுது

said...

//4.1) டிங்கானாவின் அளவு ஒருமுறை பப்ளிக்கா உச்சா போனால் ஒரு மி.மீ குறையவேண்டும்.//

இத கொஞ்சம் மைக்ரான் ரேஞ்சுக்கு குறைச்சா நல்லா இருக்கும். ஏன்னா நம்ம பயலுக ஒரு பத்து பதினைஞ்சு தடவை பட்டா தான் திருந்துவாய்ன்ங்க...பாவம்

said...

//(அப்ப வடிவேலு கதைதானா?))//

அந்த கதை என்னானு சொல்லு... அவருக்கும் ஒரு கால்குலேஷ்சன் போடுவோம் ;)

said...

//5) பஸ் ஸ்டாண்டில் பெரிய ஸ்கிரீன் வெச்சு மாய லென்ஸ் மூலம் ரொம்ப சின்னதா புரோஜெக்ட் செஞ்சா பயந்து போய் ஓடி போய்டுவானுங்க.//

தலீவா இதுக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

Anonymous said...

சின்னதா ஒரு அணகோண்டா பாம்பு மாதிரி செட் செய்ஞ்சு வைக்கலாம். தொறந்த உடனே கப்புன்னு புடிச்சுக்கிற மாதிரி.

இதால ரெண்டு லாபம். பயல் வேற எங்கயும் பப்ளிக்கா போக மாட்டான்.

பாம்பு கவ்வியிருக்கிற்தால நீளம் அதிகமா தெரியும் அதனால கவுரவ பங்கமும் ஏற்படாது

said...

// நான் ஆதவன் said...
நீங்க இருக்கிற துபாய் எப்படி க்ளீனா இருக்குதுன்னு இப்ப தானே தெரியுது//

அவரு மட்டும் இங்க இப்படி செஞ்சார்னா டிங்கானாவை லேப்டாப் பேக்ல தான் ஊருக்கு எடுத்து வரணும்:-))

said...

:-))))))))))))))))))))))))))))

சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.

said...

ஏனுங்ணா.. ஒரே கப்படிக்குது.. பதிவுல கொஞ்சம் ப்ளீச்சிங் பவுடர் தூவறது. எட்டிப்பாக்கறவங்களுக்கு இன்ஃபெக்ஷன் ஆகிடப் போகுது!!

said...

ம்ஹூம் ச்சான்ஸே இல்ல.. சிரிச்சு சிரிச்சு கண்ல இருந்து தண்ணி(தண்ணி..அதுவும் கண்ல இருந்துதான் தல பவுடர தடவிராதீங்க) வந்துட்டே இருக்கு.. கலக்கல்.. நக்கல்..கலக்கல்

said...

அலுவலகத்தில் படிக்ககூடிய பதிவா இது!!! சிரிப்பை எப்படி அடக்குவதாம். :-))

எச்சில் துப்புவதை பற்றிய யோஜனையை துபாய் முனிசிபாலிடிக்கு வேணுமாம்,ஒரு விலை போடு கொடுத்திடுங்க.

இப்ப தான் மெல்லிய திரை தொலைக்காட்சி எல்லாம் சீப்பாக வந்திட்டதால் அந்த யோஜனை தான் இந்த ஒன்னுக்கு விஷயத்துக்கு சரியாக வரும் என்று நினைக்கிறேன்.

said...

//நீங்க இருக்கிற துபாய் எப்படி க்ளீனா இருக்குதுன்னு இப்ப தானே தெரியுது//
ஹா ஹா ஹா

said...

ரசித்துச் சிரித்தேன் ..

said...

நல்ல நகைச்சுவையா இருக்கு குசும்பன் ஐயா!
அந்த கட்டண டாயிலெட் நாத்தம் தாங்க முடியாமத் தானே அவன் வெளியில ஒன்னுக்கு அடிக்கிறான்.

அந்த டாயிலேட்டு சுத்தத்தைப் பத்தி கொஞ்சம் யோசிச்சு ஒரு பதிவு போடுங்களேன் பாசு!

said...

குசும்புக்கு அளவே கிடையாதா? அதுக்கும் ஒவ்வொரு குசும்புக்கும் ஒரு மி.மீ. குறைக்க வேண்டும். :)))))

கலக்கல் குசும்பா.

அனுஜன்யா

said...

சென்னை வாசத்தால் கடன் கழியவில்லை
http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_29.html

said...

//(ஓணான் பிடிக்க இன்னொரு முறை வெளக்கமாத்து குச்சியில் சுருக்கு போட்டு புடிப்பது அந்த முறையில் கை தேர்ந்தவர்கள் இந்த வேலையில் வாய்ப்பு வழங்கபடாது)//

--நீங்க உண்மையிலேயே ரொம்ப குசும்பு சார்...

said...

துபாயிக்கிப் போயியும் ஓணான்(பச்சோந்திகளுக்கு)களுக்குப் போயிலை வச்சு நார்கோடிக் அனலிசிஸ் பன்றது இன்னும் மறக்கலையா? சூப்பர் குசும்பு சாமியோவ்!

said...

ஆண்களுக்கு சிறுநீரகங்கள் இரண்டு இருந்தாலும் ப்ளாடர் ஒன்று தான், வந்துவிட்டால் அடக்குவது கடினம்.
அப்படியே அடிக்கினால் அவ்விடத்தில் தொற்று வர வாய்ப்பிருக்கிறது.

கண்ட இடத்தில் அடிப்பது தவறு தான், ஆனால் ஒரு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது அவசரம் என்றால் இதற்க்காக யார் கதவையும் தட்ட முடியாது. ஆங்காங்கே மூத்திர பிறை வைக்க வேண்டியது அரசின் கடமை.

குசும்பர் என்பதால் இந்த பதிவு நகைச்சுவை நோக்கில் மன்னிக்கப்படுகிறது. இல்லையென்றால் அபிஅப்பா மறைவில் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கும்

said...

எங்கள் வீட்டிற்கு எதிரில் பெரிய பார்க் ஒன்று இருக்கிறது. எங்கள் வீட்டிற்கு பக்கத்து பில்டிங் குழந்தைகள் மருத்துவமனை. ஆனாலும் அடிச்சுகிட்டுத்தான் இருக்காங்க.

கேவலமா கேக்கணும்னு தோணுது.
ஒண்ணே ஒண்ணு மாத்திரம் சொல்லிக்கறேன்.

பப்ளிக்ல போறவங்க எல்லாம் வெக்கம், மானம்,சூடு சொறனை கெட்ட ஜென்மங்கள்.

said...

நாங்க ஸ்கூல்ல படிக்கும்போது, சுவர் விளம்பரங்களில் எங்க ஊர் பேரை எழுதியிருப்பாங்க...அதுக்கு மேல "அடிச்சுகிட்டு" பாத்தியாடா ஊரையே சுத்தம் பண்ணிட்டேன் என்ற டயலாக் அடித்ததுண்டு.

ஆனா நீங்க மேல சொன்ன மேட்டர் இந்திய குடிமகனுக்கு எதிரானது. இந்திய குடிமகனின் அடையாளங்களில் ஒன்று பப்ளிக்-ல் ஒன்ஸ் அடிப்பது. அதற்கு தடைபோட திட்டம் தீட்டும் குசும்பனாகிய உம்மை ஒரு தேசதுரோகியாக அறிவிக்கிறேன்.

said...

//குசும்பர் என்பதால் இந்த பதிவு நகைச்சுவை நோக்கில் மன்னிக்கப்படுகிறது. இல்லையென்றால் அபிஅப்பா மறைவில் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கும்//

வாலு, என் பாட்டுக்கு செவனேன்னு தான போய்கிட்டு இருந்தேன், ஏன்யா தேரை இழுத்து தெருவிலெ விடுற:-))

said...

:-)))))))))))))))))

said...

சிரிப்பா சொல்லி சிந்திக்க வச்சிட்டீக

said...

ஆபிஸில் தெரியாத்தனமா இந்த பதிவ திறந்து படிச்சு சிர்ச்சிகிட்டு இருக்கிறத பாத்தவங்க...

எதுக்கு சிரிக்கிறீங்கன்னு கேட்கராங்க....

இதெயெல்லாம் இங்க சொல்லி நம்ம ஊர் மானத்த வாங்க முடியுமா என்ன?

உமக்கு குசும்பு ஆனாலும் அதிகமய்யா....

said...

அடங்க மாட்டீங்க..

நர்சிம் த்திரத்த அடக்காம அடிச்சிட போறாரு.. ஐ மீன் ஆத்திரத்த அடக்காம உங்கள அடிச்சிட போறாரு

said...

”இங்கு சிறுநீர் கழிக்க கூடாது ;
மீறினால் துண்டிப்பு மற்றும் ஜப்தி
நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்ஙனம்
கம்பெனி நிர்வாகம்”

எங்கள் ஃபேக்டரி காம்பெளண்ட் சுவற்றில் எழுதியது...

எப்படி இருக்கு..?

said...

ரூம்போட்டு, யோசிப்பீங்களா????? நல்லா சிந்திக்கிறீங்கப்பா....

தலைப்பில இருந்த "ஒன்" ஐ ரசித்தேன்....

said...

இதுக்கு (இமயமலையில்) ரூம் போட்டு யோசிச்சீங்களா, பாஸ் ;-) கலக்கல்ஸ் :)

said...

//இதுக்கு மேலும் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று யாராவது கேட்டிங்கன்னா ஒன்னு ஒன்னாக வெளியே வரும்.
//
காத்துக்கிட்டு இருக்கோமில்ல :)

said...

நல்ல யோசனை....ஆனால் விவேக் ஒரு படதில் சொல்வதுபோல்..இதெல்லாம் "தமிழ் நாட்டின் கலாச்சாரம்"...இதை போய் நிறூத்தூவதற்கு யோசனையா...!!!...கஷ்ட்டம் தான்...!!! முயற்சி செய்து பார்ககலாம்....!!!!

said...

பாஸ்... சூப்பர் காமடி... நம்ம நாட்டின் சுகாதார கேட்டை நினைக்கும் போது எனக்கும் அந்த ஆத்திரம் வரும்.. . உங்க அமீரகத்திலேயோ அல்லது இந்த அமெரிக்காவிலோ.. அர்ஜன்ட் என்றால், எந்த ஒரு McD அல்லது சூப்பர் மார்க்கெட் சென்று கூட Rest room உபயோகிக்கலாம்... நமது ஊர்களில் உபயோகபடுத்தக்கூடிய பொது கழிப்பிடங்கள் எத்தனை உள்ளன பாஸூ... வெளியே உச்சா போவதை நான் சரி என சொல்லவில்லை... ஆனால், போதுமான அளவு வசதிகள் இல்லாததால் தான் அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்...

வெளியே உச்சா போவதை தடுக்க ஒரே வழி... உச்சா போக ஒழுங்கான, ஒழுங்காக பராமரிக்கப்படும் கழிவறைகளை கட்டி தருவதுதான்...

said...

வெளியே உச்சா போவதை தடுக்க ஒரே வழி... உச்சா போக ஒழுங்கான, ஒழுங்காக பராமரிக்கப்படும் கழிவறைகளை கட்டி தருவதுதான்...//

ஐயோ ஐயோ! நகைச்சுவையா இருக்குதுப்பா!!

இங்கே ஹைதையில் பொதுமக்களுக்கு வசதியாக கழிவறைகள் எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறார்கள். அங்கே போறது யாரு? எல்லாம் கருமமும் நடு ரோட்டில் தான்.
தனி மனித ஒழுக்கம் இல்லாதவரை ஏசி டாய்லட்டே கட்டிக் கொடுத்தாலும் மக்கள் புத்தி மாறாது. நாடுதான் நாறும்.

Anonymous said...

இத பாரு தம்பி,
இது எங்க கலாச்சாரம்.
அதுல கொண்டு போய் தீ வைக்க பாக்குரியெப்பா !!!

இப்ப புதுசா நாங்க கண்டு புடிச்சிருக்கோம்

டிங்கானா ல பைப் சொருவி on த வே ல அடிச்சிகிட்டே போற

மாதிரி.

இன்னொரு தடவ எங்க சொதந்தரத்துல தலை இட்ட???

மவனே!!! அம்புட்டுதேன் !!! சாக்கிரதை>>>

by--- solaikkuyil.

said...

குசும்பரே..

வரிக்கு, வரி பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை..

ஐயோ வருது.. மொதல்ல பாத்ரூம் போயி்ட்டு அப்புறமா வரேன்..

பதிவைத் தொறந்தவுடனேயே கப்பு அடிக்குதுய்யா.. தாங்க முடியல..

மொதல்ல பினாயில போட்டு கழுவி வை.. சொல்லிட்டேன்..

said...

50

said...

/
யானைய அடக்கும் அங்குசம் சின்னதுதான்
/

யார் யானை என்ன அங்குசம் ஒன்னும் பிரியலையே மாமு
:)))))

said...

குசும்பா, 'நட்டுல' நெல்லு பட்டு செத்துருக்காங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். கல்லு பட்டாஆஆஆ... அதனால யோசிச்சு செய்யவும் :)

ஜோதிபாரதி சொல்றது மாதிரி, அங்கங்கே சுத்தமான டாய்லெட் இருந்தா ஏன் பப்ளிக் பப்ளிக்கா போவுது??

said...

/
இதுவும் ஒரு அடல்ஸ் பிகாரி வாஜ்பாய் பின்னூட்டம்.சின்ன பசங்களும் பலகீன(இதயம்ப்பா)ஆளுங்களும் படிக்காதீங்க!
/

ROTFL
:))

said...

/
அபி அப்பா said...

// நான் ஆதவன் said...
நீங்க இருக்கிற துபாய் எப்படி க்ளீனா இருக்குதுன்னு இப்ப தானே தெரியுது//

அவரு மட்டும் இங்க இப்படி செஞ்சார்னா டிங்கானாவை லேப்டாப் பேக்ல தான் ஊருக்கு எடுத்து வரணும்:-))
/

ROTFL
:))))))))))

Anonymous said...

சிரிச்சு சிரிச்சு கொஞ்சம் லீக்காயிடுச்சு.
சே! எப்படி மாத்தறது?
ஆமாம்!முன்னேயெல்லாம் ஓரம்,மரத்தடி,சுவருன்னு அடிப்பானுங்க!
இப்பெல்லாம் பட்டப் பகல்ல ரோட்டிலே நின்னுக்கிட்ட பேண்ட் சிப்பரை அவுக்கர்ரனுங்க!
சின்னப் பிள்ளைங்க பப்ளிக்கா போமாட்டேங்குது,இந்த பெரிசுங்க அவுக்கறது அசிங்கமோ அசிங்கம்!
அறுத்துர வேண்டியது தான்.

said...

வரிக்கு வரி நையாண்டி குசும்பா.. கலக்கல்..

இன்னும் சென்னையில இருந்தால் ஒரு கால் பண்ணவும்..

said...

/// பப்ளிக்கா ஒண்ணுக்கு அடிக்காதீங்க! (அடல்ட் “ஒன்”லி பதிவு) ///


ஐயோ.. சாமி.. தென்னோ.. இப்புடி சொல்லிபோட்ட... இது நெம்ப தப்பு .. நெம்ப தப்பு ......


// ஆத்திரத்தை அடக்கினாலும் உச்சாவை அடக்காதீங்க என்று ஒரு சொல் வழக்கு உண்டு! எதை எதையோ மறந்த நம்ம பயபுள்ளைங்க இதை மட்டும் கரெக்ட்டா கடைப்பிடிச்சுக்கிட்டுவரானுங்க. //பின்னோ... இல்லீனா ரீசஸ் போற யடுத்துல கல்லு மொளைக்குஞ்சாமி.......!!!!
அப்பரோ உளிக்கே உளி வேணும் பாத்துக்கோ......... !!!!!// ஊரில் எத்தனை எத்தனையோ மாற்றம் ஆனால் பஸ் ஸ்டாண்ட், முட்டு சந்து, தெருமுக்கு, குட்டி சுவரு, என்று எந்த பாரபடசமும் இன்றி நம்ம ஆளுங்க யூரின் டேங்கைகாலி செஞ்சுட்டு போய்டுறானுங்க அது மட்டும் மாறவே இல்லை. அதுவும் போகும் பொழுது ரவுண்ட் ரவுண்டா டிசைன் போட்டுக்கிட்டு //தென்னோ இப்புடி சொல்லிபோட்ட... அதுனாலதே .... நெம்ப நாட்டுல நொம்பபேரு இன்சிநீரா இருக்காங்கோ... தெருஞ்சுகோ........


// சில பேர்
என்னமோ போனாவை புடிச்சு செக்கில் கையெழுத்து போடுவது போல் படம் வரைவானுங்க. குட்டி சுவர் என்றால் ஈ.ஸி.ஜி மாதிரி லைன் லைனா போடுவானுங்க. சில சமயம் யார் ரொம்ப தூரம் எட்டி அடிக்கிறானுங்க என்று போட்டி வேற! //


பின்னோ தெப்பிடி டாக்குடாரு ஆவறது.... உனக்கென்னோ.. நீ நெம்ப படுச்சுபோட்ட .... நாங்கெல்லா இத பாத்தாதேன் ஈ.சி.ஜி 'நே ..... தெரியு ........


// நம்ம பயபுள்ளைங்களுக்கு இருக்கும் ஒரு பழக்கம் ஒருத்தன் ஒண்ணுக்கு அடிக்க ஆரம்பிச்சா டக்கு டக்குன்னு மத்தவனுங்களுக்கும் ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வந்து அப்படியே லைன் கட்டிநின்னு ஒரு சின்ன ஓடைய உருவாக்கிவிட்டு விட்டு போய்டுவானுங்க. //


தென்னசாமி பன்றது... " ஷகிலா படம் பாத்துட்டு ஒருத்தமட்டு நெம்ப நல்லாற்குதுன்னு சொன்னா போதுமா ......? ஊரே சொல்ல வேண்டா ....? " அது மாதிரித்தேன் இதுவும் ... ஒருத்தன பாத்தா இநோர்த்தனுக்கும் முட்டிகிட்டு வந்துரும் .... இது தொத்து வியாதி கண்ணு .... "


//
இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் ஒண்ணுக்கு அடிக்கும் பொழுதுதான் நம்ம தல நர்சிம் உள்ளேவருகிறார் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று!. ச்சே அவுங்க ஒண்ணுக்கு அடிக்கிற இடத்துக்கு இல்லைங்க. என் நினைவில் வருகிறார் என்று சொல்ல வந்தேன்.

இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் எல்லாம் ஒண்ணுக்கு அடிச்சு இடத்தை நாற அடிப்பதை எப்படி எல்லாம் தடுக்கலாம் என்று மல்லாக்க படுத்துக்கிட்டுயோசிச்சதில் பல ஐடியா தோன்றியது. //


இதெல்லாம் நெம்ப தப்பு .....// எங்க ஊரில் திறமையான பசங்க நிறைய பேர் இருக்கானுங்க சும்மா டைம் பாஸ்க்கு ஸ்கூலுக்கு போய்ட்டு படிப்பு வராம ஒரு நிலையான வருமானமும் இல்லாமசுத்திக்கிட்டு இருப்பானுங்க, அவனுங்களுக்கு பொழுது போக்கு வேலியில் போகும் ஓணானை எட்டி நின்னு ஒரு சின்ன கல்லால் அடிச்சு அது வாயில புகையிலை வெச்சு டான்ஸ் ஆட உடுவது, அது வாயில் பீடிய வெச்சு பீடி அடிக்கவிடுவது என்று பைசா பிரோஜனம் இல்லாத வேலைய பார்த்துக்கிட்டு இருக்கானுங்க. //


கிழிஞ்சுது போ .... அட கண்ணு இதெல்லாம் காசு பாக்குற பொழப்பா ...?!!!?? இதெல்லாம் ஒரு சாலிக்கு கண்ணு ... இதெல்லாம் நெம்ப தமிழ்நாட்டு கலாசாரம் ..... இத மாத்த நெனச்ச ... தெய்வ குத்தமா போயிரும்...........


// அப்படி ஓணான் அடிப்பதில் திறமையான ஆளுங்களை கொண்டு வந்து பஸ் ஸ்டாண்ட் பக்கம் உட்கார வெச்சு கையில கொஞ்சம் கல்லை கொடுத்தோம் என்று வெச்சுக்குங்க எவனாவது ஒண்ணுக்கு அடிக்க ஜிப்பை திறந்து வெளியே எடுத்தானுங்க “டிங்காண”வை ஓணான் அடிப்பது போல் ஒரே அடி அடிச்சுடுவானுங்க. இப்படி அதிகமாகஅடிச்சு விரட்டுபவர்களுக்கு மாதம் ஒரு சம்பளம் போட்டு கொடுத்தா அவன் பொழப்பும் ஓடும் பஸ் ஸ்டாண்டும் கிளீனா இருக்கும். (ஓணான் பிடிக்க இன்னொரு முறை வெளக்கமாத்து குச்சியில் சுருக்கு போட்டு புடிப்பது அந்த முறையில் கை தேர்ந்தவர்கள் இந்த வேலையில் வாய்ப்பு வழங்கபடாது) //


ம்ம்க்கும் ... இப்புடி அடிக்கறவரைக்கும் அவன் சும்மாவா இருப்பன் .... அவனும் பதில்லுக்கு கல்லெடுத்து ரெண்டு இருக்கு இருக்குனானா அப்பறம் தெரியும்.....
அப்பொறம் உங்க அம்பானி பிசிநெசு குப்பற படுத்துகிட்டு குழி பரச்சுகிட்டு இருக்கும் ........// 3) கால் வெச்சா வெடிக்கும் கண்ணி வெடி போல் ஜொய்ங்ங்ங் என்று உச்சா அடிக்கும் பொழுது உச்சா பட்டா ”டமார்” என்று வெடிக்கும் சில பல வெடிகளை கண்டுபிடிக்கவேண்டும், அப்படி வெடிச்சுது என்றால் பயத்தில் வந்த உச்சாவும் ரிவர்ஸ் கியர்போட்டு உள்ளே ஓடிவிடும். //உட்டா தீவிரவாதி ரேஞ்சுக்கு பொச்சுக்கு பின்னாடி பாம் வெச்சு பத்து பேர கொன்னுபோட்டு .. அப்பொறம் அதுக்கு நாங்கதான் காரணமுன்னு பொறுப்பு
ஏத்துக்குவீங்கலாட்ட ..... இதெல்லாம் நெம்ப தப்பு .........// 5) பஸ் ஸ்டாண்டில் பெரிய ஸ்கிரீன் வெச்சு மாய லென்ஸ் மூலம் ரொம்ப சின்னதா புரோஜெக்ட் செஞ்சா பயந்து போய் ஓடி போய்டுவானுங்க. //


ஏஞ்சாமி... அதுக்கு பொட்டாட்ட எல்லா பொது இடத்துலயும் ரன்னிங் கேமரா
வெச்சுருங்களேன் ... நெம்ப சவுரியமா போயிரும் .......// இப்படி டிராப்பிக்கை, எச்சில் துப்புவதை, சிகரெட் பிடிப்பதை எல்லா தடுக்க பல யோசனை வெச்சு இருக்கேன், இதுக்கு மேலும் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று யாராவது கேட்டிங்கன்னா ஒன்னு ஒன்னாக வெளியே வரும். //


ம்ம்க்கும் ... உனகென்னோ ...... நீ துபாய் 'ல இருந்துக்கிட்டு இத்தனயும் பேசுவ ...
அங்கெல்லாம் இப்புடி அடிக்க உடமாட்டேங்கராங்கனு உனக்கு வவுதெருச்ச்சலு சாமி, அதேன் இப்படி பேசிபோட்ட ..........


" ஊருக்கு கொத்துகாரு ,

நோம்பிக்கு பிச்சகாரு ' ன்னு எங்கூருல ஒரு பழமொழி சொல்லுவாங்கோ ...

அதுமாதிரி இத்தன பேசுற நீயே கண்ணு ீ .. சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் பொது எடத்துல ஒன்னுக்கே அடுசதில்லயா .... ?இத மனசுல வெச்சுபோட்டு அடுத்த பதிவ போடுசாமி ........ஏடாகூடமா பேசியிருந்தா நெம்ப சாரி கண்ணு ...

Anonymous said...

:))

::))))))))

Anonymous said...

குசும்பு உங்களுக்கு ரெம்ப ரெம்ப குசும்பு.சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சு.நட்டுக்காகவும் மக்களுக்காகவும் யோசிச்சதுக்கு பாராட்டனும் பாஸ்