Sunday, January 4, 2009

கூறு கெட்ட அரபுதேசங்களும், தமிழகமும்

இதோ இன்றய தினம் வரை பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் நடந்து வரும் தாக்குதலில் பலியானோர் 500 என்றும் 1000க்கும் அதிகமானோர் காயம்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

பாலஸ்தீனத்தை சுற்றி இருப்பது அனைத்தும் இஸ்லாம் நாடுகள், அங்கே தினம் இறந்து கொண்டு இருக்கும் அனைவரம் சகோதரர்கள் ஆனால் எப்படி இங்கிருக்கும் அரசுகள் அதை வேடிக்கை பார்க்க மனசு வருகிறது என்று தெரியவில்லை.

ஈழத்தில் தமிழன் தாக்கப்படும் பொழுது அதை எதிர்த்து 1000 முறை எதிர்கட்சிகூட்டம் நடத்தி ஒன்றும் கிழிக்க முடியாததுக்கு 101 காரணம் இருக்கிறது, பதவியை காப்பாற்றனும், நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும், கண்கள் அடிக்கடி பனிக்கும் பொழுது கண்ணை தொடைக்கனும், காங்கிரசை அனுசரிச்சு போகனும் இப்படி பல காரணங்கள் இருக்கிறது அதனால் தான் ஈழத்துக்காக நம்மால் ஒன்னும் செய்யமுடியாமல் போய்விட்டது.

பிரணாப் முகர்ஜி அங்கு போய் இருந்தால் சிங்கள டாங்கிகளுக்கு முன் தலை வைத்தாவது சண்டையை நிறுத்தி இருப்பார் ஆனால் நம்முடைய போதாத நேரம் அவர் அங்கு போவதற்கு விமான டிக்கெட் கிடைக்கவில்லை.

ஆனால் இந்த பாழாப்போன அரபு நாட்டு ராஜாங்களுக்கு ஒன்னும் பிரச்சினையே இல்லை எதிர்கட்சி இல்லை, எதிர்த்து குரல் கொடுக்க ஆள் இல்லை, உலகமே எரிபொருள்களுக்கு தங்களைதான் அண்டி இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் பொழுது. பாலஸ்தீனத்தில் தினம் சாகும் சகோதர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க திராணி இல்லாத அரபுதேசங்களை என்ன சொல்வது... இன உணர்வு கூட வேண்டாம் மனிதாபிமான உணர்வு கூடவா இல்லாமல் போய்விட்டது.

பாலஸ்தீனத்தில் தாக்குதலை நிறுத்தி அங்கு அமைதியை நிலை நாட்டும் வரை எண்ணெய் பேரல்கள் உற்பத்தி குறைக்கபடும் என்று சொன்னால் ஒரு தீர்வு சீக்கிரம் கிடைக்காதா?

********************************************************************
அம்மாவின் உடல் நிலைக்காக பிராத்தனை செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, நாளை சென்னை வருகிறேன். வந்ததும் தொடர்பில் இருப்பவர்களை தொடர்பு கொள்கிறேன். மற்றவர்கள் தங்கள் நம்பரை மெயில் அனுப்பினால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்!

26 comments:

said...

இஸ்ரேல் ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது என தகவல்,

பாலஸ்தீன ராணுவம் பின்வாங்கி விட்டது. சண்டை ஹமாஸ் அமைப்பின் மீது,

அப்பாவி மக்கள் சாவது கண்டனத்துகுறியது

said...

சென்னையா????????? வருக வருக..

said...

எனது அலைபேசி எண் 9994500540

said...

சீரியஸ் பதிவுகளை மூட்டை கட்டிவிட்டு குசும்பு பதிவுகள் எழுதவும்!

said...

//ரொம்ப பெருமையா இருக்கு! இவுங்க எல்லாம் படிக்கிறாங்களாம்!!! (100)///

பலோயர் பட்டியல் 100 ஆகிவிட்டது.

:))

//பிரணாப் முகர்ஜி அங்கு போய் இருந்தால் சிங்கள டாங்கிகளுக்கு முன் தலை வைத்தாவது சண்டையை நிறுத்தி இருப்பார் ஆனால் நம்முடைய போதாத நேரம் அவர் அங்கு போவதற்கு விமான டிக்கெட் கிடைக்கவில்லை.//

யோவ்.....சீரியஸ், சோகம் கூட நகைச்சுவையாய் செல்றியே. கலக்கல் தான். :))

:(

said...

//வால்பையன் said...
இஸ்ரேல் ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது என தகவல்//

அண்ணே சிங்களர்கள் விடுதலைபுலிகள் மீதுதான் தாக்குதல் நடத்துவது போல்! அங்கு ஹமாஸ் அமைப்பினர்தான் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற அமைப்பினர்!


**************************
கார்க்கி சென்னையே தான்! அந்த மங்கி குல்லா எங்கப்பா உங்க புரைப்பல் போட்டோவில்:))))

**************************
என்ன கோவி உண்மைய சொன்னா கிண்டல் என்று சொல்றீங்க! நிஜமாக முகர்ஜிக்கு டிக்கெட்தான் கிடைக்கவில்லை!

said...

அம்மாவைப் பார்க்க மருத்துவமனை செல்கிறேன். கவலை வேண்டாம் .இறைவன் போதுமானவன்.

said...

இவர்களிடம் நேர்மை இல்லை. Lion's Share Problem. யாரெல்லாம் இவர்களை வெளி(நாட்டினருக்கு)த் தெரியாமல் உள்ளுக்குள் எதிர்க்கிறார்களோ அவர்களெல்லாம் உலகப் போலீஸின் கையினால் அடக்கி வாசிக்கப் பணிக்கப் பட்டிருக்கிறார்கள். உலகப் போலீசுக்கு மாற்றமாக பேசினால் புலிகள் வெளியில்...

இருந்தாலும், தானாடா விட்டாலும் அவ்வப்போது தசையாடத்தான் செய்கிறது. ஒரு resolution கூட கொண்டு வர முடியாமல் அங்கேயும் உலகப்போலீஸின் சட்டாம்பிள்ளைத்தனம். எல்லா நாடுகளுக்ம் தவறென்று தெரிந்தும் வாய் மூடி...

சமீபத்தில் எங்கோ படித்தது. 'இஸ்ரேல்தான் தவறிழைக்கிறதென்று உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் தெரியும். ஆனால் உலகத் தலைவர்கள் எதிர்த்து வாக்களிப்பர் அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள்.'

எரிவாயுவையும் எண்ணெயையும் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். அல்லது ஈரான் மாதிரி குறைந்தது அச்சுறுத்தலுக்காவது பயன்படுத்தலாம் என்று எப்போது புரியப் போகிறார்களோ.

அம்மா நலமடைந்து வீட்டுக்கு வந்து விட்டார்களா?

said...

Hi welcome to chennai... I didn't meet you last time.. because I was in Delhi... This time If I get chance to meet you guys would be nice. Then I hope you mother is fine now... convey my regards to her.

my mobile no 9300042948

said...

அப்பூ எதுக்கு ஜூடாவுற நீ? வந்துட்டு போன் பண்ணு. என் நம்பர் அதே டபுள் ஜீரோ ட்ரிபிள் ஜீரோ ஜீரோஜீரோ தான்

said...

//அந்த மங்கி குல்லா எங்கப்பா //

எங்க இருக்காங்க காணுமே! குளிருல்ல அதான் மங்கி குல்லா போட்டிருப்பாங்க:-))

said...

எனது அலை பேசி எண் 0097150 7495127

Anonymous said...

என்னோட போன் நம்பர் 900400200

Anonymous said...

என்னோட நம்பர் 55 45 55

said...

//என்ன கோவி உண்மைய சொன்னா கிண்டல் என்று சொல்றீங்க! நிஜமாக முகர்ஜிக்கு டிக்கெட்தான் கிடைக்கவில்லை!//

கூடிய சீக்கிரம் பெரியவர் பிரணாப் முகர்ஜிக்கு டிக்கெட் கிடைக்க வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஆங்கிலேயர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, சுப்ரமண்ய சிவா, திருப்பூர் குமரன் போன்ற தீவிரவாதிகளைத் தாக்கினார்கள் என்றதெளிவாக வால்பையன் சொல்கிறார் பாருங்கள்.
அயோக்கியர்களான 'இஸ்ரேல்' என்னும் வார்த்தைக்கு முன்னால் 'தீவிரவாத' என்று போடாமல் தங்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற போராடும் 'ஹமாஸ்' என்னும் அமைப்புக்கு தீவிரவாத அமைப்பு என்ற எழுத இவர் கைகள் கூசவில்லை?
// அப்பாவி மக்கள் சாவது கண்டனத்துக்குறியது//
அப்பாவி மக்களைக் கொல்லும் இஸ்ரேல் தீவிரவாதம் உங்கள் இதயத்தை பாதிக்கவில்லையா?

said...

இருந்தாலும் தமிழ்நாட்டோட கம்பேர் பண்ணி அரபுதேசங்களை அசிங்கப்படுத்திட்டீங்களே :-):-):-)

said...

ஈழத்தில் தமிழன் தாக்கப்படும் பொழுது அதை எதிர்த்து 1000 முறை எதிர்கட்சிகூட்டம் நடத்தி ஒன்றும் கிழிக்க முடியாததுக்கு 101 காரணம் இருக்கிறது, பதவியை காப்பாற்றனும், நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும், கண்கள் அடிக்கடி பனிக்கும் பொழுது கண்ணை தொடைக்கனும், காங்கிரசை அனுசரிச்சு போகனும் இப்படி பல காரணங்கள் இருக்கிறது அதனால் தான் ஈழத்துக்காக நம்மால் ஒன்னும் செய்யமுடியாமல் போய்விட்டது.//

உங்கள் உண்மையான ஆதங்கம்/கவலை எங்கள் மனதையும் தொட்டது.. நன்றி குசும்பரே.

அம்மா நலம் என்பது மகிழ்வைத் தருகிறது.. நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய தேவையில்லை.. கடல் கடந்து வாழ்ந்தாலும் மனத்தினால் நாங்கள் உறவுகளே..

said...

நண்பரே ஸலாம்,

நான் எழுதிருப்பதை நண்ராக பாருங்கள்.
”என தகவல்” என்று தான் குறிப்பிட்டிருக்கிறேன், அதாவது எனக்கு ஊடகங்கள் சொல்லியது அதை தான்.

எனக்கு ஹமாஸ் என்றால் என்ன அர்த்தம் என்று கூட தெரியாது.
ஊடகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டேனே தவிர, பெயரில்லாத மேப்பை காட்டினால் இஸ்ரேல் அங்கிருக்கு, பாலஸ்தீனம் எங்கிருக்குன்னு கூட எனக்கு தெரியாது.

// ஆங்கிலேயர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, சுப்ரமண்ய சிவா, திருப்பூர் குமரன் போன்ற தீவிரவாதிகளைத் தாக்கினார்கள் என்றதெளிவாக வால்பையன் சொல்கிறார் பாருங்கள்.//

இம்மாதிரி உவமைகள் ஒரு நல்ல உரையாடலுக்கு அழகல்ல! என் கருத்தில் தவறிருந்தால் எது உண்மை என்று சொல்லிகொடுங்கள்.
கருத்தை திரிக்காதீர்கள்

நன்றி

said...

Really nice article and we should think whats happening around the world and react.Every human being having their own responsibility on the innocent people,atleast we may pray for them with good intentions.
I pray for your mother.May GOD bless her.

Mukthar/Brunei

said...

அம்மா நலமடைந்து விட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.விசாரித்ததாக சொல்லவும்.அடுத்த முறை சென்னை வரும்போது கொஞ்சம் முன்னமே தெரியப்படுத்தவும்.என்னை போன்ற வெளியூர் நண்பர்களுக்கு உதவியாய் இருக்கும்(வேற எதுக்கு?எல்லாம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யத்தான்.உங்களுக்குத்தான் முன்பதிவு என்ன வேகமாய் முடிந்து போய்விடுகிறது என்று தெரியுமே.)

//வால்பையன் said...

சீரியஸ் பதிவுகளை மூட்டை கட்டிவிட்டு குசும்பு பதிவுகள் எழுதவும்!//

ரிப்பீட்டேய்ய்...
ரொம்ப நாள் ஆச்சுங்க நீங்க குசும்பான பதிவ எழுதி..விரைவில் வெளியிடுங்கள்.

Anonymous said...

These arab kings same as like Manmohan singh, what ever american bush(world police) tell they follows, God watching every things, what happen in palestine. he give proper punishment result to Isreal in future. America done some mistake in past (Iraq), so punishment is going on in form finacial crtisis.

said...

Nice one !!!, Ur 100% correct abt arab govt/princess, they r doing jingja for american, But they will join unionly, they will collapse isreal & america, But !!!!!!!!!, Kings r enjoing his western culture,

Happy to hear, tht ur mother health, Take care

said...

என்னுடைய கைப்பேசி எண். 9894916242

said...

பலஸ்தீனத்துக்கான உங்கள் எழுத்துக்களுக்கு என் பாராட்டுக்கள் குசும்பரே. இஸ்ரேலிய தீவிரவாதத்திற்கு காலம் பதில் சொல்லட்டும்.

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team