Tuesday, February 24, 2009

தேடலில் காமசூத்ரா, சரோஜாதேவியும்!!!

ஆங்கில அகராதியில் அதிகம் தேடப்படும் வார்த்தை “செக்ஸ்” என்பது உங்களுக்கு தெரியும் அதுபோல் தமிழில் காமசூத்ராவும், சரோஜாதேவியும்.

காமசூத்ராவை பற்றி பலருக்கும் தெரியும் அது டெக்னிக்கலாக காமத்தை பற்றி விவரிப்பது ஆனால் சரோஜாதேவி மலிவு விலை மது மாதிரி ஒன்லி ஆக்சன் காட்சிகளுக்கு வரிவடிவம் கொடுப்பது கூடுதல் இணைப்பாக சில படங்களுடன். உதாரணத்துக்கு ஒயினை போல் கொஞ்சமாக போதை தருவது காமசூத்ரா அது படிப்பவனின் கற்பனைகளை விரிவுபடுத்துகிறது ஆனால் சரோஜா தேவிவேலிமுட்டி போல் (லோக்கல் பட்ட சாராயம்) குப்புன்னு கிக் ஏற்றுவது. இதுதான் சரோஜா தேவி புத்தகத்தை பற்றி ஒன்னுமே தெரியாத பச்ச புள்ளைகள் அப்துல்லா,சஞ்சய் போன்றவர்களுக்காக நான் கொடுக்கும்(கெடுக்கும்) விளக்கம்.என்ன திடிர் என்று இந்த விளக்கம் எல்லாம் என்று கேட்கிறீர்களா? என் பிளாக்குக்கும் தினம் பத்து பதினைந்து புது புது வருகையாளர்கள் வருவதாக ஹிட் கவுண்டர் காட்டும், என்னடா இதுக்கு சாத்தியமே இல்லையே, வந்தவங்களே திரும்ப வராத பொழுது இது யாரு புதுசா? வழித்தெரியாம வந்து இருப்பார்களோ என்று நினைத்துக்கொள்வேன், ஆனால் இது தொடர்கதையாக எனக்கு அதில் ஒரு சந்தேகம் இருந்து வந்தது இது எப்படி சாத்தியம் என்று...அதுபோல் புது பதிவு போடாத பொழுதுகூட தினம் தினம் எங்கேயிருந்து இப்படி புது புது மக்கள் அதுவும் நம்மை தேடி வருகிறார்கள் என்று வியந்துப்போய் இருக்கிறேன்.

எங்கிருந்து வருகிறார்கள் என்பதை இருதினங்களுக்கு முன் என் வலைப்பூவில் நான் நிறுவிய Google Analytics எங்கிருந்து வருகிறார்கள், எப்படி தேடியதால் எத்தனை நபர்கள் வந்தார்கள், எத்தனை நேரம் இருந்தார்கள் என்ற விவரத்தை எல்லாம் தருகிறது சரோஜா தேவி என்று தேடும் பலருக்கு என் பிளாக் லிங் போகிறது போல முன்பு பரிசல்காரர் கேபிள் சங்கரோடு மல்லுகட்டிய பொழுது நான் எழுதிய எதிர்பதிவை தேடிதான் பலர் வருகிறார்கள். காமசூத்ராவை பற்றி எப்பொழுது எழுதினேன் என்று நினைவு இல்லை, சாருவின் குட்டிக்கதைகளுக்கும் நான் லிங் கொடுக்கவில்லை, ஜ்யோராம் கதைகளுக்கும் நான் லிங் கொடுக்கவில்லை அப்படி இருக்கும் பொழுது எப்படி காமசூத்ராவினை தேடி என் பதிவுகளுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை.இனி என் வலைப்பூவுக்கு சரோஜாதேவியை தேடி வருகிறவர்களுக்கு சாருவின் O டிகிரி புத்தகம் பரிசாக வழங்கப்படும்! ஜாக்கிரதை!

*********************###################*******************
காமத்தை பதிவு லேசாக டச் செய்வதால் ஒரு ஜோக் சமீபத்தில் குமுதத்தில்
படித்தது என்று நினைவு.

பெரும்பாலும் மன்னரை பற்றி வரும் ஜோக்குகள் 95% பாடாவதியாக இருக்கும் , மன்னா புறா ஓலை கொண்டுவந்து இருக்கிறது என்று மந்திரி சொல்வார் அதை 65 போட்டு கொண்டுவா என்று மன்னர் சொல்வார் இதுபோன்று ஜோக்குகள் படிப்பவர்களை டரியள் ஆக்கும் ஆனால் இந்த ஜோக் என்னை கொஞ்சம் சிரிக்கவைத்தது.

அமைச்சர் கணக்குப்பிள்ளையிடம்: மன்னரின் பாதுக்காப்பை
பலப்படுத்திய வகையில் செலவு என்று எழுதியிருக்கிறீர்கள் என்ன செலவு அப்படி?
கணக்குப்பிள்ளை: மன்னருக்கு ஆணுறை வாங்கிய செலவு அமைச்சரே!

28 comments:

said...

//ஒன்னுமே தெரியாத பச்ச புள்ளைகள் அப்துல்லா,சஞ்சய் போன்றவர்களுக்காக நான் கொடுக்கும்(கெடுக்கும்) விளக்கம்.//

பார்த்துகோங்க!
நானும் குழந்தை தான்.
நானும் குழந்தை தான்.
நானும் குழந்தை தான்.

said...

Google Analytics என்றால் என்ன?
அதை எப்படி பயன்படுத்துவது?

said...

// இதுதான் சரோஜா தேவி புத்தகத்தை பற்றி ஒன்னுமே தெரியாத பச்ச புள்ளைகள் அப்துல்லா,சஞ்சய் போன்றவர்களுக்காக நான் கொடுக்கும்(கெடுக்கும்) விளக்கம்//
ரொம்ப முக்கியம்.
யாரும் தலை காட்டாத பக்கத்துல, ஆள் சேர்க்க இப்படி எழுதுவாங்க. உங்களுக்கு என்னாத்துக்கு?

said...

:)

இப்படியும் டெக்னிக் இருக்கிறதா ?

said...

ஹய்யோ ஹய்யோ.. தமிழச்சின்னு தேடி கூட என் ப்ளாக் வந்திருக்காங்க மாம்ஸ்.. :))

உங்களுக்கு சரோஜா தேவி.. எனக்கு தமிழச்சி..
//"tamizachi" sent 2 total visits//

தமிழச்சி 2 பேரை என் ப்ளாக் பக்கம் அனுப்பி இருக்காங்களாம்.. :))

said...

வால் ரைட்டு ஒத்துக்கிறேன் நீங்க பீர் குடிக்கும் குழந்தை என்று:))

http://www.google.com/analytics/ என்று டைப் செய்து அதில் லாகிங் செஞ்சால் அங்கு ஒரு கோடிங் கிடைக்கும் அதை காப்பி செய்து நம்முடைய பக்கத்தில் பேஸ்ட் செஞ்சுவிடனும், பின் நாம் எப்பொழுது வேண்டும் என்றாலும் எங்கிருந்து யார் யார் மூலமாக எல்லாம் ஆள் வந்தார்கள் என்று தெரிஞ்சுக்கலாம்! நன்றி சஞ்சய் (அவர் தான் சொல்லிக்கொடுத்தார்!)

***************************
சுல்தான் said...
யாரும் தலை காட்டாத பக்கத்துல, ஆள் சேர்க்க இப்படி எழுதுவாங்க. உங்களுக்கு என்னாத்துக்கு?//

எப்படி எப்படி எல்லாம் தேடுறாங்க என்று சொல்லவே இந்த பதிவு:) பிடிக்கலையா இனி இப்படி மொக்கை போடல சுல்தான் பாய்:)
****************************
கோவி உங்களுக்கு தெரியாததா?

said...

கூகுள் அனலிடிக்ஸ் பத்தி எழுதினதுக்கு நார்கோ அனாலிசிஸ் என்று நக்கல் அடித்ததும் இல்லாமல் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் என்னிடம் கெஞ்சி அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு தான் இந்த பதிவே எழுத முடிந்தது என்பதை குறிப்பிடாமல் போனதால் --- “இனை”ப்பாக உதார”ன”த்துக்கு--- எல்லாம் எழுத்தாணி சித்தர் ஜீவ்ஸ் பார்வைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

said...

:)) அண்ணே நீங்க பெரியா அளுண்ணே...

said...

அண்ணா! உங்கள பத்தி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ? உங்களோட கலக்கல் குசும்ப பார்த்து யார்ரா இதுனு பாக்கலாம்னு வந்தோம். நீங்க என்னடானா எங்கள சந்தேகப்பட்றீங்களே? நியாயமா சொல்லுங்க? நாங்களும் பச்சபுள்ளைங்கதான் ...... நம்புங்கண்ணா....

said...

அண்ணா! உங்கள பத்தி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ? உங்களோட கலக்கல் குசும்ப பார்த்து யார்ரா இதுனு பாக்கலாம்னு வந்தோம். நீங்க என்னடானா எங்கள சந்தேகப்பட்றீங்களே? நியாயமா சொல்லுங்க? நாங்களும் பச்சபுள்ளைங்கதான் ...... நம்புங்கண்ணா....

said...

அண்ணா! உங்கள பத்தி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ? உங்களோட கலக்கல் குசும்ப பார்த்து யார்ரா இதுனு பாக்கலாம்னு வந்தோம். நீங்க என்னடானா எங்கள சந்தேகப்பட்றீங்களே? நியாயமா சொல்லுங்க? நாங்களும் பச்சபுள்ளைங்கதான் ...... நம்புங்கண்ணா....

said...

யோவ் என்னைய ஏன்யா வம்புக்கு இழுக்குற???

said...

சஞ்சய் அவசரகுடுக்கை பின்னூட்டத்தை பாரும்:))
******************
விக்கி ஏன் இப்படி?
******************
பிரியா சும்மா நம்ம மக்களோட தேடுதல்களை சொல்லாம் என்றுதான் வேற ஒன்னும் இல்லை.
நம்ம மக்களுக்குதான் என்னோட லிங் தெரியுமே அவங்களை எல்லாம் சந்தேகப்படுவேனா? இது சும்மா லூலுலாய்க்கு:)

(இதையே மூன்று முறை படிச்சுக்குங்க, ஏன்னா நீங்க 3 பின்னூட்டம் போட்டு இருக்கீங்க)
***************************
அப்துல்லா அண்ணே சும்மா ஒரு டைம் பாஸ்குதான், நீங்க ரொம்ப நல்லவருன்னு சகா கார்கி சொன்னார் அதான் டெஸ்டிங்! :)))
***************************

said...

குட் குசும்ப்ஸ் ...

said...

அப்ப அது வதந்தியா? அப்ப யாரு சரோஜா தேவிக்கு agent?,

said...

இன்னொரு கைக்குழந்தை ப்ரசண்ட் சார்வாள்!!!

said...

///இதுதான் சரோஜா தேவி புத்தகத்தை பற்றி ஒன்னுமே தெரியாத பச்ச புள்ளைகள் அப்துல்லா,சஞ்சய் போன்றவர்களுக்காக நான் கொடுக்கும்(கெடுக்கும்) விளக்கம்.////
மீ ஆல்சோ! ஏற்கனவே பழைய பதிவில் கூட கேட்டேன்.. யாருமே சொல்ல்லை... :( இப்பவாவது சொல்லுங்க தல.

said...

//கணக்குப்பிள்ளை: மன்னருக்கு ஆணுறை வாங்கிய செலவு அமைச்சரே!//

ஹி ஹி ஹி

said...

குசும்பா, சரோஜாதேவின்னா ஆரு?
இப்போ விருது வாங்குனாங்களே அவங்களா? :)

said...

//மன்னருக்கு ஆணுறை வாங்கிய செலவு அமைச்சரே! // இதில் பாதுகாப்பு மன்னருக்கா? இல்லை மன்னிக்கா?

said...

ஏம்பா உனக்கு நியாமா இருக்கா சஞ்சய்லாம் சின்னப்பையன்கிற என்னையெல்லாம் கண்ணுக்கு தெரியலையா நான்தான் ரொம்ப சின்னப்பையன்..

said...

இப்ப இன்னும் புதியவர்களின் எண்ணிக்கை கூடிடுமே...;)

said...

//Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்//

ரிப்பீட்டேய்!!!!!!!!!!!!!

said...

ஐயையோ...

ஏதோ தெரியாம கண்டதுக்கும் ரிப்ப்பீட்டே போட்டுட்டேன்... இருங்க பதிவப் படிச்சுட்டு வாரேன்!

said...

வந்தவங்களே திரும்ப வராத பொழுது இது யாரு புதுசா?

என்ன இப்படி சொல்லிடீங்க குசும்பனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் :))))))

said...

என்ன கொடுமைங்க இது?

said...

//இனி இப்படி மொக்கை போடல சுல்தான் பாய்:)//
அது. எல்லோரும் விரும்புகிற பதிவர் தன் தனித்துவத்தை இழந்து விடக்கூடாதல்லவா?

said...

பச்சப்புள்ளக அப்துல்லா சஞ்செய் - பாவம்பா - அவங்களையும் கெடுத்துடாதேப்பா