Tuesday, June 3, 2008

A டன்டனக்கா A டனக்குனக்கா A டன் டன்

1001

பூரியை பொறித்து எடுக்கும்
முயற்சிகள்
தோல்வியில் முடிந்தன.
உருண்டையாய் உருட்டிவைக்கப்பட்ட
கோதுமை மாவில்
இருந்து சப்பாத்தியை வரவழைக்க
முடிந்தது.

படிந்திருந்த மாவின் இடுக்கிலிருந்து
பிரித்து எடுக்க முடியவில்லை
பூரிக்கான உருண்டை முனையை
குண்டன் ஒருவனின் டுர்ர்ர்ர்
காற்று மாவினை அகற்றியதில்
மாவின் நுனியை பற்றிவிட
முடிந்தது
பூரி கேட்ட என் வீட்டுகாரிக்கு
பசியான அத்தருணத்தில்
என்னால் இயன்றது
வெறும் மாவுமட்டுமே!!!

-----------------------***********-----------------------
1002
லோக்கல் பஸ் ஸ்டாண்டில்
நோட்டிஸ் ஒட்டாதே ஏரியாவில்
எனக்கு முன்னால் அவள்
நோட்டிஸ் ஒட்டிக்கிட்டு இருந்தாள்
பான்பராக்கினால்
சிவந்து இருந்தது
அவள் உதடு.

ஒட்டிமுடித்துவிட்டு நகரும் பொழுது
பாத்தேன் “ரகசிய இரவுகள்”
போஸ்டரை
கண்ணை இமைக்காமல் வெறித்து
பார்த்துகொண்டு இருந்தபொழுது
குனிந்து என் முகத்தின் அருகே
காறி துப்பியபடி போன
சைனாகாரியின் அரை கால் டவுசர்
என் பேண்ட் அளவே இருந்தது.

-----------------------***********-----------------------

1003
தமிழர்களே தமிழர்களே
என்னை தூக்கி கடலில் போட்டாலும்
கட்டுமரமாய் மாறி மிதப்பேன்
என்மேல் நீங்கள் ஏறி
மீன்பிடிக்க போகலாம்
மீன் பிடிக்காதவர்கள் விவேகானந்தர்
பாறைக்கும் போகலாம்.

-----------------------***********-----------------------
பின்னூட்டம்

ஐயோ ராம் சுந்தர்.சி

வெறும்மாவா (இல்லை அரைத்தமாவா?)
வெறும் மாவே பிடித்துஇருக்கிறது.

வைத்தியகாரன்

கால்கழுவ போகும் குளக்கரையில் கன்றாவியாய் தங்களை சந்திப்பதில்மகிழ்ச்சி.

கோழிவாத்

வந்தாச்சு இம்சை வந்தாச்சு:(((

வளர்சூரியன்

முதலில் வந்து இருக்கும் சப்பாத்தி மாவு அருமையாக இருக்கிறது,
இரண்டாவது “இரகசிய இரவுகள்” படம் சுமார் ரகமே!

டிஸ்கி: இந்த பதிவு புரியாதவர்கள் இங்கு (எச்சரிக்கை அது அய்யனாரின் வலை பக்கம், நீங்கள் அங்கு போவது உங்கள் சொந்த ஆர்வத்தினாலேயே, அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், இழப்புகளுக்கும் எவ்விதத்திலும் நான் பொறுப்பு இல்லை) போய் இதை படித்துவிட்டு வந்தால் புரியும், அதில் எனக்கு புரியாத 3 வது கவிதையை உல்டா அடிக்கமுடியாத என் தோல்வியை ஒத்துக்கிறேன்.

35 comments:

said...

:)

said...

பின்நவீனத்துவ மாவை எடுத்து சைனாக்காரியுடன் (சீப்பாச்சே) பூரி சுட நினைத்து கடைசியில் வி.பாறையில் ஒதுங்கிய குசுமபனாரின் முப்பரிணாமத்துடன் கூடிய சொல்லாட்சி பிரமிக்க வைக்கின்றது. வாழ்த்துக்கள்....
தொடர்ந்து இது போன்ற பி.ந. கவிதைகளை எதிர்பார்த்திருக்கும்...
(போதுமா? இன்னும் வேணுமா?)

said...

enna kodumai kusumba athellam.. onneme piriyala..

said...

கலக்கல்....கல்யாணம் ஆகியும் நீ மாறல அப்பு ..... மாறல !

:)

said...

நல்ல ஜோடி நீங்க .. டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி.. அவரு போடற ஒரு பதிவை விடறதா இல்லைபோல.. :))

said...

உள்ளேன் அய்யா!


//மீன் பிடிக்காதவர்கள் விவேகானந்தர்
பாறைக்கும் போகலாம்.//


ஹய் சூப்பரப்பு :))

said...

குசும்பா... உங்கள் குசும்புக்கு அளவே இல்லையா?!

காலையில் அலுவலகத்துக்கு வந்ததுமே தங்கள் பதிவுதான் முதலில் கண்களில் பட்டது. படித்தேன். வாய்விட்டு சிரித்தேன்...

இன்றைய பொழுதின் முதல் சந்தோஷத்தை தந்த உங்களுக்கு நன்றி!

தோழமையுடன்
வைத்தியக்காரன்!!!

said...

கவிதைக்குத் தான் எதிர் கவுஜ எழுதுவீர்கள் என்று பார்த்தால், பின்னூட்டங்கள் மற்றும் அவர்கள் பெயருக்குமா ?

இது கொஞ்சம் அதிகம் தான் :)

said...

///ஒட்டிமுடித்துவிட்டு நகரும் பொழுது
பாத்தேன் “ரகசிய இரவுகள்” போஸ்டரை
கண்ணை இமைக்காமல் வெறித்து
பார்த்துகொண்டு இருந்தபொழுது
காறி துப்பியபடி போன
சைனாகாரிக்கு கால்சட்டை அரை டவுசர்
என் பேண்ட் அளவே இருந்தது.///



கால்சட்டை அரை டவுசர் போட்ட சைனாகாரி காரி உமிழ்ந்தது உன்னைப் பார்த்து அல்ல நண்பரே.

said...

ஜெகதீசன் நன்றி!

தமிழ் பிரியன் said...
//குசுமபனாரின் முப்பரிணாமத்துடன் கூடிய சொல்லாட்சி பிரமிக்க வைக்கின்றது. வாழ்த்துக்கள்....
தொடர்ந்து இது போன்ற பி.ந. கவிதைகளை எதிர்பார்த்திருக்கும்...
(போதுமா? இன்னும் வேணுமா?)//

போதும் போதும்:)))

said...

//சந்தோஷ் = Santhosh said...
enna kodumai kusumba athellam.. onneme piriyala..//

தம்பி அங்க பாரு அதை சூப்பர் என்று சொல்ல 4 பேர் இருப்பாங்க அங்க போய் புரியவில்லை என்று சொல்ல கூடாது, புரிஞ்சுதோ இல்லையோ சன் டீவி திரைவிமர்சனத்தில் கடைசியாக சொல்லுவாங்கல்ல அதுபோல

கவிதை சூப்பர், ஒரு முறை படிக்கலாம் என்று ஏதாச்சும் சொல்லிட்டு வரவேண்டும்!!!

said...

// கோவி.கண்ணன் said...
கலக்கல்....கல்யாணம் ஆகியும் நீ மாறல அப்பு ..... மாறல !

:)//

அது ஏன் சித்தப்பு மாறனும்:)

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
நல்ல ஜோடி நீங்க .. டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி.. அவரு போடற ஒரு பதிவை விடறதா இல்லைபோல.. :))//

ஹி ஹி நடுவுல கொஞ்சம் மிஸ் ஆயிட்டு:(

said...

// ஆயில்யன் said...
உள்ளேன் அய்யா!


//மீன் பிடிக்காதவர்கள் விவேகானந்தர்
பாறைக்கும் போகலாம்.//


ஹய் சூப்பரப்பு :))//

நன்றி

said...

பைத்தியக்காரன் மிக்க நன்றி, உங்களுல் மகிழ்ச்சிக்கு நான் ஒரு காரணம் எனும்பொழுது எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கவிதைக்குத் தான் எதிர் கவுஜ எழுதுவீர்கள் என்று பார்த்தால், பின்னூட்டங்கள் மற்றும் அவர்கள் பெயருக்குமா ?//

ஒரு சேஞ்சுக்குதான்:))


இது கொஞ்சம் அதிகம் தான் :)//

நல்லவேலை கடைசியா ஒரு ஸ்மைலி போட்டீங்க:)

said...

ஜிம்ஷா said...
கால்சட்டை அரை டவுசர் போட்ட சைனாகாரி காரி உமிழ்ந்தது உன்னைப் பார்த்து அல்ல நண்பரே.//

ஏதோ என்னை திட்டுறீங்கன்னு தெரியுது ஆனா என்னான்னு புரியமாட்டேங்குது.

said...

கவிமட தளபதி பினாத்தலார் எழுதி
கொடுத்த மூன்றாவது கவிதை.

//சாப்பிடாமை தந்த கிளர்ச்சிகள்
உட்குடல் செயல்பாட்டின் மேல்
பெருங்கோபத்துடன் ஆக்கிரமிக்கிறது
சமையாக்கடுகு எண்ணெயில் ஆர்த்தெழுந்து
வெடித்தலால் சமைந்ததை
ஒலிக்கோப்பாய் உணர்த்துகிறது.
இதுவரை இருந்த உண்ணும் ஆர்வம்
தாளித்தல் ஓசையில்
புதிதாய்ப் பூத்து மலர்கிறது.
இலைமுழுக்க நிரம்பிய
பண்டங்களின் நிறங்கள்
பலவாய் மாறி வயிற்றுள் செல்கிறது.
வெளியேறும் வாயுவென்றும்
ஏப்பத்தின் சத்தமென்றும்
நீங்கள் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம்//

said...

புள்ளைக்கு மந்திரிக்கனும். புதுக் கல்யாணம்... அடிக்கடி வெளிய முக்கியமா அய்யணார் பக்கமெல்லாம் போகாத முனி அடிச்சிடும்னு சொன்னா கேட்டா தானே... இப்ப இப்படிக் கிடந்து தவிக்குதே...

Anonymous said...

அடங்கவே மாட்டியா நீ!! இரு அய்யனார் கிட்டயே மாட்டிவிடறேன்!!

அன்புடன்
அபிஅப்பா

said...

பின்நவீனத்துவ கவிதை சூப்பர்

said...

எத்தனை முறை முயன்றாலும்
இந்த அவித்த உருளை கிழங்கு
எனக்கு அடங்கவே மாட்டிங்க்கிறது.

ஒத்தையாய் காயும் சப்பாத்தியை
பார்த்தபடி

வால்பையன்

said...

/
எச்சரிக்கை அது அய்யனாரின் வலை பக்கம், நீங்கள் அங்கு போவது உங்கள் சொந்த ஆர்வத்தினாலேயே, அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், இழப்புகளுக்கும் எவ்விதத்திலும் நான் பொறுப்பு இல்லை
/

டிஸ்கி சூப்பர்.

said...

அண்ணே பதிவு போட்ட உடனேயே படிச்சேன் ஆனாலும் நீங்க குடுத்த "லிங்குக்கு" போனதில திரும்ப இங்க வரமுடியாப்போயிட்டேன் :(

said...

முன்றாவது கவிதையை விடுங்க.... நீங்களே நல்லா கவிதை எழுதுறிங்களே குசும்பன்...
கொஞ்சம் முயற்சிக்கலாமே...

said...

:))

கலக்கிட்டீங்க புது மாப்ள.. உண்மையிலேயே மிகச்சரியான எதிர்வினை வரிசையில் ஒரு வைர மகுடம்..

பின்னூட்ட நாயகர்கள் வரிசை அசத்தல்.. :))

said...

கொலைவெறி பதிவு....;)))))))

said...

Jeeves said...
இப்ப இப்படிக் கிடந்து தவிக்குதே...//

ஆமாங்க உங்க கதையையும் படிச்சு இப்படி ஆகிட்டேன்:(((

*******************************
Anonymous said...
அடங்கவே மாட்டியா நீ!! இரு அய்யனார் கிட்டயே மாட்டிவிடறேன்!!

அன்புடன்
அபிஅப்பா//

அபி அப்பா யூ டூ:(

said...

புகழன் said...
பின்நவீனத்துவ கவிதை சூப்பர்//

புகழன் என்ன கொடுமைங்க இது இப்படி என்னை பார்த்து சொல்லிட்டீங்க!

*******************************
வால்பையன் said...
எத்தனை முறை முயன்றாலும்
இந்த அவித்த உருளை கிழங்கு
எனக்கு அடங்கவே மாட்டிங்க்கிறது.//

டெக்னிக்கல் பால்ட்:)

***************************
மங்களூர் சிவா said...
டிஸ்கி சூப்பர்.
//

நல்லா இருய்யா நல்லா இரு!

said...

தமிழன்... said...
அண்ணே பதிவு போட்ட உடனேயே படிச்சேன் ஆனாலும் நீங்க குடுத்த "லிங்குக்கு" போனதில திரும்ப இங்க வரமுடியாப்போயிட்டேன் :(//

இதுக்குதான் சின்னபுள்ளைங்க பேச்சை பெரியவங்க கேட்கனும் என்று சொல்வது!!

***********************

தமிழன்... said...
முன்றாவது கவிதையை விடுங்க.... நீங்களே நல்லா கவிதை எழுதுறிங்களே குசும்பன்...
கொஞ்சம் முயற்சிக்கலாமே...//

முயற்சி செஞ்சேன் பக்கத்து வீட்டு பிகரு அடிக்கவருது!

said...

சென்ஷி said...
:))

கலக்கிட்டீங்க புது மாப்ள.. உண்மையிலேயே மிகச்சரியான எதிர்வினை வரிசையில் ஒரு வைர மகுடம்..

பின்னூட்ட நாயகர்கள் வரிசை அசத்தல்.. :))//

நன்றி மாப்பி!

****************************

கோபிநாத் said...
கொலைவெறி பதிவு....;)))))))//

அவ்வ்வ் ஏன் தம்பி?

said...

என்ன சொல்லுறதுன்னே தெரியல:)

said...

nonsense!

said...

நிஜமா நல்லவன் said...
என்ன சொல்லுறதுன்னே தெரியல:)//

அட அட்லீஸ்ட் கீழ மிதக்கும்வெளி சொல்லி இருக்கிறார் பாருங்க அதுபோலயாச்சும் சொல்லுங்க:)))

**************
மிதக்கும்வெளி said...
nonsense!///

அட நம்ம எதிர்கவுஜயில் என்னைக்கு sense இருந்து இருக்கு?:)

said...

//குசுமபனாரின் முப்பரிணாமத்துடன் கூடிய சொல்லாட்சி பிரமிக்க வைக்கின்றது. வாழ்த்துக்கள்....
//

:)))))))))))))