Monday, June 16, 2008

மிஸ்டர் 7 1/2 ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் பொழுது இதுதான் நினைவுக்கு வரும்!

ஒரு ஊரில் ஒரு வயதான தாத்தா இருந்தாராம்,அவர் குதிரைகளை வளர்த்து விற்று வரும் காசில் வாழ்கையை ஓட்டிக்கொண்டு இருந்தாராம். ஒரு நாள் அவரிடம் இருந்த ஒரு விலை உயர்ந்த குதிரை ஒன்று காட்டுக்குள் ஒடி விட்டதாம்.அதை தெரிந்த பக்கத்து வீட்டுகாரர்கள் தாத்தாவிடம் வந்து என்ன கஷ்ட நேரம் இது இப்படி ஆகிவிட்டதே என்றார்களாம் அதற்கு தாத்தா இது கஷ்ட நேரம் என்று இப்பொழுது எப்படி தெரியும்! என்றாராம்.

ஒரு மாதம் கழித்து ஒடி போன குதிரை ஒரு பத்து பதினைந்து குதிரையை கூட்டிக்கொண்டு வந்து விட்டதாம். திரும்பவும் பக்கத்து வீட்டு காரர்கள் இது உங்களுக்கு நல்ல நேரம் போல அதான்ஓடி போன குதிரை மட்டும் இல்லாமல் கூட ஒரு பதினைந்து குதிரையும் வந்து இருக்கு என்றார்களாம்..அதற்கு தாத்தா இது நல்ல நேரமா என்று உங்களுக்கு இப்பொழுது எப்படி தெரியும் என்றாராம்...

ஒரு நாள் அந்த காட்டு குதிரைகளை பழக்க படுத்த முயன்று கொண்டு இருந்த தாத்தவின் ஒரே பேரனை அந்த குதிரை கீழே தள்ளி மிதித்ததில் பேரனின் இரன்டு கால் எலும்பும் ஒடிந்து விட்டதாம் அதை பார்க்க வந்தவர்கள் என்ன கஷ்ட காலம் இது உங்களுக்கு, உதவியாய் இருந்த ஒரே ஒரு பேரனின் இரண்டு காலும் ஒடிந்து விட்டதே என்றதற்கு வழக்கம் போல் இது கஷ்ட காலம் என்று எப்படி இப்பொழுது தெரியும் என்றார்.

பின் ஒரு வாரம் கழித்து அடுத்த நாட்டு ராஜா நம் நாட்டின் மேல் படை எடுக்க இருப்பதால் இளைஞர்கள் படையில் சேர வேண்டும் என்று முரசு அறிவிக்க பட்டது.அதன் படி அனைவரும் படையில் சேர்ந்தனர்.தாத்தாவின் பேரன் கால் ஒடிந்து இருப்பதால் அவனால் படையில் சேர முடிய வில்லை போரில் தாத்தா நாட்டு ராஜா தோற்று போனார் படை வீரர்களும் கொல்லபட்டனர். ஆனால் இதற்கும் தாத்தாவிடம் எந்த மாற்றமும் இல்லை.

பத்து நாட்களுக்கு முன்பு மனைவியை அழைத்து வர எல்லாம் செய்துவிட்டு
வீட்டுக்கும் போன் செய்து சந்தோசமாய் சொல்லிவிட்டு இரவு தூங்கி காலையில் எழும் பொழுது வீட்டில் இருந்து போன், அம்மாவும் அப்பாவும் சென்ற வண்டியில் அம்மா புடவை மாட்டி கீழே விழுந்து அம்மாவுக்கு கையில் இரண்டு இடத்தில் எலும்பு முறிவு, அப்பாவுக்கு காலில் எலும்பு முறிவு. இதை என்ன நேரம் என்று சொல்வது?

17 comments:

Anonymous said...

dont worry! be happy!!ethu wanthalum!!!:)...ithellam chappai matteru annathey!!!...everyrhing will be alright!:)

said...

:( அய்யோ பாவமே... நல்லபடியாக வேண்டிக்கறேன்..

இப்ப என்ன வீட்டம்மாஅவங்க வர லேட்டாகுதுங்கறதால அடிவாங்கரது லேட்டாகும்ன்னு நல்ல நேரம்ன்னு சொல்லவரீங்களா..

:)))

said...

எல்லாம் நல்லபடியா நடக்கும்ம் அண்ணனே. :-)

said...

மனதுக்கு கஷ்டமா இருக்கு நண்பா!

said...

:(
உங்கள் அம்மா விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்...

said...

இப்போது வருத்தம் அம்மாவும், அப்பாவும் அடிபட்டதாலா.. அல்லாட்டி வீட்டுக்காரம்மா வந்து சேராததலா..?

இதனைத் தெளிவாகச் சொன்னால், கஷ்ட நேரம் எது? கெட்ட நேரம் எது? கஷ்ட காலம் எது என்பதை மிகச் சரியாகச் சொல்லிவிடலாம்..

said...

அப்பா அம்மா இருவரும் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள். கவலைபடாதிங்க.
( நான் கவலையில் இருக்கிறேன் என்று உனக்கு எபப்டி தெரியும் என்று உம் குசும்பை இங்கும் காட்டாதிரும்.)

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு தலைவா.......!

said...

துக்கத்துளையும் உங்களால எப்படிங்க கதை சொல்ல முடியுது,

சீக்கிரம் குணமடைந்து விடுவார்கள்,
உங்கள் மனைவி நல்ல மருமகள் என்று நிரூபிக்க இது நல்ல தருணம்

வால்பையன்

said...

அண்ணே உங்க பெற்றொர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

said...

:(

said...

உங்க பெற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். உம்ம பெட்டர் ஹாஃப் சீக்கிறம் வந்து உம்மை பூரிக்கட்டையால் பிளக்கவும் இப்போதிருந்தே பிரார்த்தனைகள்

said...

இப்போது வருத்தம் அம்மாவும், அப்பாவும் அடிபட்டதாலா.. அல்லாட்டி வீட்டுக்காரம்மா வந்து சேராததலா..?

இதனைத் தெளிவாகச் சொன்னால், கஷ்ட நேரம் எது? கெட்ட நேரம் எது? கஷ்ட காலம் எது என்பதை மிகச் சரியாகச் சொல்லிவிடலாம்..


100 ரிப்பீட்டேஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

சீக்கிரம் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

உண்மை தமிழன், புதுகை தென்றல் எனக்கும் அதுக்கு விடை தெரியவில்லை, நானே குழப்பத்தில் இருப்பதால்:)

வால்பையன் நான் சொன்ன கதை இல்லீங்க ஓசோ சொன்னது அதை அப்ப அப்ப நினைச்சுபார்த்துப்பேன்!

said...

ஆஹா...

இது தெரியாம நான் கேட்டுப்புட்டேனேப்பா!

சீக்கிரம் அம்மாவுக்கு குணமாகி...
உங்க வீட்டம்மா உங்களை வந்தடைய வாழ்த்துக்கள்!

said...

// குசும்பன் said...
அருமையான புது புது தகவல் இது

///பாரத்த்தின் துனை குடியரசுத்த்லைவர் ஹமித்அன்சாரி///

:)))))))))))))))))))))))))))))

June 18, 2008 9:27 PM//
--
Name: Shri Mohammad Hamid Ansari
Father's Name: Shri Mohammad Abdul Aziz Ansari
Mother's Name: Smt. Aasiya Begum

Date of Birth: 1 April 1937
Place of Birth:
Calcutta
Marital Status:
Married
Spouse's Name:
Smt. Salma Ansari
Children:
Two sons and one daughter
Educational Qualifications :
BA (Hons); MA (Political Science)
Address: Vice-President's House,
6, Maulana Azad Road,
New Delhi - 110 011
Telephone - 011-23016422, 23016344
E-mail: vpindia@nic.inPositions Held : Joined the Indian Foreign Service (IFS) in 1961 and served in Indian missions in Baghdad, Rabat, Jeddah and Brussels;
Ambassador to the United Arab Emirates (1976-1979);

Chief of Protocol to Govt. of India (1980-1985);

High Commissioner to Australia (1985-1989);

Ambassador to Afghanistan (1989-1990);

Ambassador to Iran (1990-1992);

Permanent Representative to the UN, New York (1993-1995);

Ambassador to Saudi Arabia (1995-1999);

Visiting Professor, Centre for West Asian and African Studies, Jawaharlal Nehru University, New Delhi (Dec 1999-May 2000);
Vice-Chancellor, Aligarh Muslim University, Aligarh (2000-2002);

Distinguished Fellow at the Observer Research Foundation, New Delhi (2002-2006);
Visiting Professor, Academy for Third World Studies, Jamia Millia Islamia, New Delhi (2003-2005);
Co - Chairman, India-U.K. Round Table (2004-2006);

Member, National Security Advisory Board (2004-2006);

Chairman, Advisory Committee for Oil Diplomacy, Ministry of Petroleum and Natural Gas (2004-2005);
Chairman, Working Group on 'Confidence building measures across segments of society in the State', established by the second Round Table Conference of the Prime Minister on Jammu and Kashmir, held at Srinagar, 24-25 May, 2006; the report of the Working Group was adopted by the 3rd Round Table held at New Delhi, 24 April 2007;
Chairman, Fifth Statutory National Commission for Minorities (March 2006-July 2007);
Vice President of India and ex officio Chairman, Rajya Sabha since 11th August 2007.
Books Published : Written,Travelling through Conflict: Essays on Politics of West Asia, New Delhi, 2008.


Edited, Iran Today: Twenty Five Years After the Islamic Revolution, New Delhi, 2005.


Written, several academic papers and newspaper articles on West Asian Politics.


Awards: Padma Shri (1984)


Sports: Golf and Cricket


Institutes/Clubs: India International Centre
Institute of Defence Studies and Analysis (IDSA)
United Services Institution
Delhi Golf Club
Delhi Gymkhana Club
Noida Golf Club


Countries Visited: Visited many countries during the diplomatic and academic career.

June 19, 2008 8:08 AM

http://pugaippezhai.blogspot.com

said...

ரொம்ப வருத்தமா இருக்குப்பா குசும்பா :((