Wednesday, June 4, 2008

தமிழ் வலை பதிவர்கள் தயாரிக்க போகும் முதல் திரைப்படம்

எவ்வளோ நாளைக்குதான் ஆனந்தவிகடனில் ஒரு துண்டு இடத்தில் வருவது இனி உலகையே திரும்பி பார்க்கும் படி ஒரு படம் எடுத்துவிடுவது என்று வலைபதிவர்கள் மீட்டிங்கில் கடைசியாக நடந்த கோவி கண்ணன் சந்திப்பில் முடிவு செய்யபடுகிறது. இனி அதன் தொடர்ச்சி.

லக்கி லுக்: பாலா அண்ணே நம்ம பிளான் படி படம் தயாரிக்க ஒரு புரொடியூசர் வேண்டுமே? அதுக்கு யாருன்னே கிடைப்பா அதுவும் நம்பள நம்பி பணம் போட!

பால பாரதி: இங்க இருக்கவனுங்க யாரும் நம்மை நம்பி ஒரு சல்லி காசு கொடுக்கமாட்டானுங்க, NRI யாரையாவதுதான் புடிக்கனும்.

லக்கி லுக்: அப்ப என்னுடைய கழக தோழர் அண்ணன் அபி அப்பா இருக்கிறார் அவரை புடிச்சு கேட்டு பார்க்கவா?

பால பாரதி: கோபமாக யோவ் அவரிடம் ஹீரோயின் வயசுக்கு வந்ததுக்கு புட்டு சுத்தனும், அதுபோல் ஒரு சீன் எடுக்கனும் பணம் கொடு என்றால் கரெட்டா ஹீரோயின் பொண்ணுக்கு புட்டு சுத்தும்பொழுது கொடுப்பார். நீ வேற!

லக்கி லுக்: அப்ப ஆசிப் அண்ணாச்சிய புடிக்கலாமா?

பால பாரதி: யோவ் அவரு கொஞ்சம் விவரமான ஆளு அதுமட்டும் இல்ல காசு வாங்கினா செவத்து மூதி அது இதுன்னு திட்டு வாங்கனும் எதுக்கு அது எல்லாம் ?

லக்கி லுக்: அப்ப அமீரகம் வேண்டாம், இந்த பக்கமா K.R.S, G.ராகவன் இவங்களை புடிக்கலாமா?

பால பாரதி: அட நீ வேற பில்லாவை ரீ மேக் செய்யலாமா என்றால்..வேண்டாம் ஒளவையார், கந்தன் கருனையை ரீமேக் செய்யலாம் என்பார்கள் அவர்களும் ஒத்துவராதுய்யா.

லக்கி லுக்: பாலண்ணே நம்ம கோவி கண்ணன் எப்படி?

பால பாரதி: அடேய் தம்பி சூப்பாரா சொன்னடா, அவருதான் நம்ம புரொடியுசர் அவருதான் ஒத்துவருவாரு.

லக்கி லுக்: எப்படினே!!

பாலபாரதி: தம்பி அவரு ஷேவிங் செய்யவே 1000 கொடுத்தவரு, முடிவெட்ட 10000 கொடுப்பாரு அதுபோல படம் எடுக்க என்றாலும் அவரிடம் இருந்து செமயா காசு வாங்கிடலாம், அதும் இல்லாமா என்னத்த அடிச்சாலும் தாங்குறாரு அவரு ரொம்ப நல்லவரு!!!!

கோவி.கண்ணனும் சம்மதிக்க கதை விவாதத்துக்கு பதிவர்களை அழைக்கிறார் பால பாரதி. பதிவர்கள் அனைவரும் ஒன்று சேருகிறார்கள்.

______________**********************_______________

எல்லாம் பாலபாரதியை திட்டுகிறார்கள் யோவ் உன் பேச்சை கேட்டுக்கிட்டு வந்தோம் பாரு வந்து 3 மணி நேரம் ஆகுது இன்னும் புரொடியூசரை கானும் என்று! பாலபாரதி கோவிக்கு போன்போடுகிறார். இதோ வந்துட்டேன் ஒரு சின்ன வேலையா போய் இருந்தேன் அதான் டிலே ஆகிட்டு என்று வருகிறார்.

பால பாரதி: என்ன கோவி? சிவாஜியில் ஒரு கூடை சன் லைட் பாட்டில் வரும் ரஜினி போல வருகிறீர்கள்.

கிளம்பும் பொழுதுதான் பார்த்தேன் முகத்துக்கு பவுடர் அடிக்கவில்லை என்று அடிக்க சோம்பேறி தனம் அதான் கூட வந்த நண்பனிடம் கேட்டேன் சரி என்று சலூனுக்கு கூட்டிட்டு போனார் அங்க அவன் முகத்துக்கு சாதா பவுடரா , ஸ்பெசல் பவுடரா என்றான் சாதா என்றால் கையில் கொட்டி அடிச்சு விடுவேன், ஸ்பெசல் என்றால் பிரஸ்ஸால் அடிச்சு விடுவேன் என்றான் சரின்னு ஸ்பெசலே சொல்லிட்டேன் பார்த்தா வீட்டுக்கு அடிக்கிற சுண்ணாம்பு பிரஸை வெச்சு சுண்ணாம்பு அடிச்சு விட்டு 100000 வாங்கிட்டான்.

பாலபாரதி: அதான் சுண்ணாம்பு அடிக்கிறான் என்று தெரியுதுல்ல அப்படியே ஓடி வரவேண்டியதுதானே?

கோவி.கண்ணன்: சுண்ணாம்பு அடிக்கும் பொழுது அவன் சொல்றான் என்னத்த அடிச்சாலும் தாங்குறார், இவர் ரொம்ப பழம் பெரும் வலைபதிவர் போலன்னு சொல்லிட்டான் . அவ்வ்வ்வ் என்று வடிவேலு ஸ்டைலில் அழுகிறார்.

அவரை சமாதன படுத்திவிட்டு இனி நடிகர்கள் தேர்வு:
___________________********************_____________________

படத்தின் டைரக்ட்டர்: நம்ம உண்மை தமிழன், இப்படா தம்பி கமல் பத்து வேடத்தில் நடிச்சு அசத்தி இருக்கிறார் அதைவிட பெட்டரா 12 கேரெக்ட்டரில் நடிக்க ஒரு ஆள் வேண்டும் என்னடா செய்யலாம் அப்படி செஞ்சாதான் உலகமே நம்மை திரும்பி பார்க்கும் என்று லக்கியிடம் சொல்ல.

லக்கி: 12 என்ன 24 விதமாகவும் திறமை காட்ட ஒரு ஆள் இருக்கிறார் அவரே பதிவும் போடுவார், அவரே கேள்வியும் கேட்டுப்பார், அவரே பதிலும் சொல்லிப்பார், அவரே பின்னூட்டமும் போட்டுப்பார்,அவரே பின்னூட்டத்துக்கு பதிலும் சொல்லிப்பார் என்று சொல்ல...

உண்மை தமிழன்: நீ அவரை விடவே மாட்டீயா, வேற யாரையாவது சொல்லு.(பால பாரதி உண்மை தமிழனிடம் வந்து அண்ணே மோர் வேணுமா, அண்ணே கூல் டிரிங்ஸ் வேணுமா, அண்ணே சுண்டல் வேண்டுமா? ரொம்ப கவனிக்கிறார்) பாலபாரதி: (லக்கியிடம் கண்ணை காட்ட!) அதை கவனிக்காதது போல் அந்த பக்கம் திரும்புகிறார் லக்கி, கடுப்பான பாலபாரதி லக்கி காலை மிதிக்க ஆஆன்னு கத்துகிறார் லக்கி.

லக்கி : அண்ணே நம்ம வலையுலகில், பார்க்க இளமையா, கொஞ்சம் அழகா, நல்ல கலரா , எல்லாவிதத்திலும் ஹீரோவுக்கு பொருத்தமாக இருக்ககூடிய ஒரே ஒரு ஆள் ....................நான்தான்னே!

பாலபாரதி: அடி ங்கொய்யாலே என்னை ரெக்கமெண்ட் செய்ய சொல்லி சொன்னா நீ உனக்கு சொல்லிக்கிறீயா இருடி...

கடைசியாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து பாலபாரதியே ஹீரோ என்று முடிவாகிறது.

_______________________****************_______________________

கதை விவாதம்:

எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன் என்று உண்மை தமிழன் சொல்ல அப்ப பணத்தையும் நீங்களே போட்டுக்குங்க என்று கோவி டென்சன் ஆகிறார்.

கதை,பாட்டு, பைட்டு எல்லாம் தனி தனியா விட்டு விடலாம் என்று யோசனையை சொல்கிறார்.

படம் திகில் படம் என்றால் வினையூக்கிய எழுத சொல்லிடலாம், காதல் கதை என்றால் சிபியை எழுத சொல்லலாம் ஆனா அவரு மார்கழி மாதத்தையே இன்னும் முடிக்கல. (அதுவும் இல்லாம இந்த ஹீரோவை வெச்சு காதல் கதையும் செய்ய முடியாது ) கிராமத்து கதை என்றால் ஆடுமாடுவை எழுத சொல்லலாம். என்று பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே மழை வர விவாதம் ஒத்திபோட படுகிறது.

67 comments:

said...

தயாரிப்பாளர் கோவியார் வாழ்க!!!

said...

கோவி அண்ணே... அடுத்து நான் ஒரு படம் இயக்கப்போறேன்... அதையும் நீங்க தான் தயாரிக்கனும்.. கதையும் நான் தான்.. நீங்களே கூட ஹீரோவா இருக்கலாம்..

படத்தோட தலைப்பு "கேஎல் பஸ்ட்டாண்டும் பட்டர்வொர்த் பஸ்ட்டாண்டும்" அல்லது "மலேசியால எல்லா பஸ்ட்டாண்டும் ஒரே மாதிரி......"

:P

said...

படத்துல டிபிசிடி கெஸ்ட் ரோல்ல வரார்...

அப்புறம் பாரி.அரசு முக்கிய கதாப்பாத்திரத்தில் வரார்... புக்கிட் பெண்டாரோ மலையில், ABC9898 காரில் வரும் ஒரு பெண் பின்னால் சுற்றும் ரோமியோ ரோல் அவருக்கு..

said...

என்னது மழை வந்ததும் விவாதத்தை ஒத்தி போட்டாச்சா? அப்ப ஸ்டார் ஓட்டல்ல மீட்டிங் நடக்கலையா?

said...

குசும்பு சான்ஸே இல்லை! :-))))))))))))))))

said...

என்கிட்டே ஒரு க்ரைம் ஸ்டோரி இருக்கு ட்ரை பண்றிங்களா

வால்பையன்

said...

கிராமத்து சப்ஜெக்ட் கூட ஒன்னு இருக்கு தலைவா

வால்பையன்

said...

:)))))))))

said...

படத்தயாரிப்பு மற்றும் மல்டி லெவல் மார்கெட்டிங்க்கு ஆள் பிடிப்பவர்கள் கூட அனுகலாம்.

said...

//
பார்த்தா வீட்டுக்கு அடிக்கிற சுண்ணாம்பு பிரஸை வெச்சு சுண்ணாம்பு அடிச்சு விட்டு 100000 வாங்கிட்டான்.
//
அப்படியே வரும்போது அங்க இருந்த 19 வயசுப் பையனுக்கு ஒரு 5000 டிப்ஸ் தந்துருப்பாரே.......

said...

//
வால்பையன் said...
என்கிட்டே ஒரு க்ரைம் ஸ்டோரி இருக்கு ட்ரை பண்றிங்களா

வால்பையன்

//
வால்பையன், கவலைப்படாதீங்க... குறைந்தது ஒரு 10 படமாவது எடுக்குறதா முடிவு பண்ணீட்டார் நம்ம கோவி அண்ணன்..

அதனால உங்க கதைகளையும் அவரே தயாரிப்பார்....
:))

said...

//
படத்தின் டைரக்ட்டர்: நம்ம உண்மை தமிழன்,
//

படத்தையாவது சரியா 3 மணி நேரத்துக்குள்ள முடிப்பாரா இல்லை, அவர் பதிவு மாதிரி ஒரு 12 மணி நேரம் ஓடுற மாதிரி படம் எடுப்பாரா?

:)

said...

ஹீரோயின் செலக்சன் நாந்தான் பண்ணுவேன் டைரக்டர் யாராயிருந்தாலும் அப்பதான் கோவி பைனான்ஸ் பண்ணுவார்

:))))))))))

said...

/
ஜெகதீசன் said...
தயாரிப்பாளர் கோவியார் வாழ்க!!!

/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

said...

//எவ்வளோ நாளைக்குதான் ஆனந்தவிகடனில் ஒரு துண்டு இடத்தில் வருவது.//

வந்தவுடனேயே தனிப் பதிவு போட்டு கலக்குறீங்களே.. இது பத்தாதா..?

said...

//இனி உலகையே திரும்பி பார்க்கும் படி ஒரு படம் எடுத்துவிடுவது என்று வலைபதிவர்கள் மீட்டிங்கில் கடைசியாக நடந்த கோவி கண்ணன் சந்திப்பில் முடிவு செய்யபடுகிறது. இனி அதன் தொடர்ச்சி.//

குசும்பா.. இதுக்கு வேற ஆளே கிடைக்கலையா உனக்கு..?

said...

//லக்கி லுக்: பாலா அண்ணே நம்ம பிளான் படி படம் தயாரிக்க ஒரு புரொடியூசர் வேண்டுமே? அதுக்கு யாருன்னே கிடைப்பா அதுவும் நம்பள நம்பி பணம் போட!//

கரெக்ட்.. போண்டா வாங்கிக் குடுக்கக் கூட ஆளில்லை.. இதுல தயாரிப்பாளரா..?

said...

//பால பாரதி: இங்க இருக்கவனுங்க யாரும் நம்மை நம்பி ஒரு சல்லி காசு கொடுக்கமாட்டானுங்க, NRI யாரையாவதுதான் புடிக்கனும்.//

கரெக்ட்.. அவன்தான் மிளகாய் அரைக்கணும்னு வெளிப்படையா சொன்னாக்கூட என் தலைல அரைங்க என்று குனிந்து தலையைக் காட்டுவான்.. ஸோ.. இது கரெக்ட்டு..

said...

//லக்கி லுக்: அப்ப என்னுடைய கழக தோழர் அண்ணன் அபிஅப்பா இருக்கிறார் அவரை புடிச்சு கேட்டு பார்க்கவா?//

அன்னிக்கு டின்னோட வர்றேன்னு சொல்லிட்டு ஹாயா கை ஆட்டிட்டு வந்தவராச்சே அவரு.. சரிப்படாது..

said...

//பால பாரதி (கோபமாக) : யோவ் அவரிடம் ஹீரோயின் வயசுக்கு வந்ததுக்கு புட்டு சுத்தனும், அதுபோல் ஒரு சீன் எடுக்கனும.் பணம் கொடு என்றால், கரெட்டா ஹீரோயின் பொண்ணுக்கு புட்டு சுத்தும் பொழுது கொடுப்பார். நீ வேற!//

கரெக்ட்டு.. எப்படியும் படம் முடிய ஒரு 16 வருஷமாயிரும்..

said...

//லக்கி லுக்: அப்ப ஆசிப் அண்ணாச்சிய புடிக்கலாமா?//

இது கரெக்ட்டுதான்.. அவர்தான் மெர்சிடிஸ் பென்ஸ்ல உலா வர்றான்னு கேள்விப்பட்டனே..?

said...

//பால பாரதி: யோவ் அவரு கொஞ்சம் விவரமான ஆளு. அது மட்டும் இல்ல.. காசு வாங்கினா செவத்து மூதி. அது இதுன்னு திட்டு வாங்கனும..் எதுக்கு அது எல்லாம்?//

காசு வாங்கும்போது மட்டும் இனிக்குமாக்கும்.. ஆமா அதென்ன 'செவத்து மூதி'..?

said...

//லக்கி லுக்: அப்ப அமீரகம் வேண்டாம், இந்த பக்கமா K.R.S, G.ராகவன் இவங்களை புடிக்கலாமா?//

பணத்தைக் கொட்டுறவுகதான் நமக்கு வேணும்.. சில்லறையை இல்ல தம்பீ..

said...

//பால பாரதி: அட நீ வேற பில்லாவை ரீ மேக் செய்யலாமா என்றால்.. வேண்டாம் ஒளவையார், கந்தன் கருனையை ரீமேக் செய்யலாம் என்பார்கள். அவர்களும் ஒத்துவராதுய்யா.//

ஒளவையாரைவிட, கந்தன் கருணை பெஸ்ட்டோ பெஸ்ட்.. நான் ரெடி.. ஆனா முன்னாடி சொன்ன மாதிரி இதுக்கு சில்லறை பார்ட்டியெல்லாம் கட்டுப்படியாகாது.

said...

//லக்கி லுக்: பாலண்ணே நம்ம கோவி கண்ணன் எப்படி?//

-))

said...

//பால பாரதி: அடேய் தம்பி சூப்பாரா சொன்னடா, அவருதான் நம்ம புரொடியுசர் அவருதான் ஒத்துவருவாரு.//

-))

said...

//லக்கி லுக்: எப்படினே!!//

-))

said...

//பாலபாரதி: தம்பி அவரு ஷேவிங் செய்யவே 1000 கொடுத்தவரு, முடிவெட்ட 10000 கொடுப்பாரு அதுபோல படம் எடுக்க என்றாலும் அவரிடம் இருந்து செமயா காசு வாங்கிடலாம், அதும் இல்லாமா என்னத்த அடிச்சாலும் தாங்குறாரு அவரு ரொம்ப நல்லவரு!!!!//

-))

said...

//எல்லாரும் பாலபாரதியை திட்டுகிறார்கள் "யோவ் உன் பேச்சை கேட்டுக்கிட்டு வந்தோம் பாரு.. வந்து 3 மணி நேரம் ஆகுது.. இன்னும் புரொடியூசரை கானும்" என்று!//

படம் தொடங்குறதுக்கு முன்னாடி இப்படித்தான் தயாரிப்பாளருக்காக எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க.. படம் முடிஞ்ச பின்னாடி..?

said...

//பாலபாரதி கோவிக்கு போன்போடுகிறார். "இதோ வந்துட்டேன் ஒரு சின்ன வேலையா போய் இருந்தேன் அதான் டிலே ஆகிட்டு" என்று வருகிறார்.//

ஆடு தானா வந்து தலைலயைக் கொடுக்கும்பாங்க பாருங்க..

said...

//பால பாரதி: என்ன கோவி? சிவாஜியில் ஒரு கூடை சன் லைட் பாட்டில் வரும் ரஜினி போல வருகிறீர்கள்.//

-))

said...

//"கிளம்பும் பொழுதுதான் பார்த்தேன் முகத்துக்கு பவுடர் அடிக்கவில்லை என்று அடிக்க சோம்பேறி தனம் அதான் கூட வந்த நண்பனிடம் கேட்டேன் சரி என்று சலூனுக்கு கூட்டிட்டு போனார் அங்க அவன் முகத்துக்கு சாதா பவுடரா , ஸ்பெசல் பவுடரா என்றான் சாதா என்றால் கையில் கொட்டி அடிச்சு விடுவேன், ஸ்பெசல் என்றால் பிரஸ்ஸால் அடிச்சு விடுவேன் என்றான் சரின்னு ஸ்பெசலே சொல்லிட்டேன் பார்த்தா வீட்டுக்கு அடிக்கிற சுண்ணாம்பு பிரஸை வெச்சு சுண்ணாம்பு அடிச்சு விட்டு 100000 வாங்கிட்டான்.//

-))

said...

//பாலபாரதி: அதான் சுண்ணாம்பு அடிக்கிறான் என்று தெரியுதுல்ல.. அப்படியே ஓடி வர வேண்டியதுதானே?//

-))

said...

//கோவி.கண்ணன்: சுண்ணாம்பு அடிக்கும் பொழுது அவன் சொல்றான் என்னத்த அடிச்சாலும் தாங்குறார், இவர் ரொம்ப பழம் பெரும் வலைபதிவர் போலன்னு சொல்லிட்டான் . அவ்வ்வ்வ் என்று வடிவேலு ஸ்டைலில் அழுகிறார்.//

-))

said...

//படத்தின் டைரக்ட்டர்: நம்ம உண்மை தமிழன்//

கிழிஞ்சது.. உங்க படம் உருப்பட்ட மாதிரிதான்..

said...

//"இப்படா தம்பி, கமல் பத்து வேடத்தில் நடிச்சு அசத்தி இருக்கிறார.் அதைவிட பெட்டரா 12 கேரெக்ட்டரில் நடிக்க ஒரு ஆள் வேண்டும். என்னடா செய்யலாம?் அப்படி செஞ்சாதான் உலகமே நம்மை திரும்பி பார்க்கும் என்று லக்கியிடம் சொல்ல.//

அதான் ஒருத்தன் இருக்கானே.. பிளேன் ஏறிப் போய் கூட்டியாரட்டுமான்னு கேட்டானா அவன்.. பாவி.. பாவி..

said...

//லக்கி: 12 என்ன 24 விதமாகவும் திறமை காட்ட ஒரு ஆள் இருக்கிறார் அவரே பதிவும் போடுவார், அவரே கேள்வியும் கேட்டுப்பார், அவரே பதிலும் சொல்லிப்பார், அவரே பின்னூட்டமும் போட்டுப்பார், அவரே பின்னூட்டத்துக்கு பதிலும் சொல்லிப் பார் என்று சொல்ல...//

அது சரி.. 'அவரு' தனக்கு ஜோடிக்கு ஷ்ரேயாதான் வேணும்னு சொல்லிட்டா என்ன செய்யறது..? ஷ்ரேயா பாவமில்ல..

said...

//உண்மை தமிழன்: நீ அவரை விடவே மாட்டீயா, வேற யாரையாவது சொல்லு.//

வேலில போற ஓணானை எடுத்து மடில போட்டு அழுகறதுக்கு உண்மைத்தமிழனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..

said...

//பால பாரதி உண்மை தமிழனிடம் வந்து "அண்ணே மோர் வேணுமா, அண்ணே கூல் டிரிங்ஸ் வேணுமா, அண்ணே சுண்டல் வேண்டுமா?" ரொம்ப கவனிக்கிறார்.//

இதெல்லாம் எப்போ சாமி? கனவுலயா..?

said...

//பாலபாரதி: (லக்கியிடம் கண்ணை காட்ட!) அதை கவனிக்காதது போல் அந்த பக்கம் திரும்புகிறார் லக்கி//

இதுதான் டெய்லி நடக்குதே..

said...

//கடுப்பான பாலபாரதி லக்கி காலை மிதிக்க ஆஆன்னு கத்துகிறார் லக்கி.//

இதுவும்தான்.. தம்பீ சும்மாவாச்சும்கூட கத்துவான்..

said...

//லக்கி : அண்ணே நம்ம வலையுலகில், பார்க்க இளமையா, கொஞ்சம் அழகா, நல்ல கலரா, எல்லா விதத்திலும் ஹீரோவுக்கு பொருத்தமாக இருக்ககூடிய ஒரே ஒரு ஆள் ....................நான்தான்னே!//

உண்மையோ உண்மை.. பில்லா செகண்ட் பார்ட்ல பில்லா ஸ்டைலா பி.எம்.டபிள்யூ கார்ல இருந்து இறங்கி " இன்னா கண்ணு.. ச்சும்மா தூக்கலா கீறியே.. என்ன செண்ட் போட்டுக்கின்னு இருக்கே"ன்னு டயலாக் பேசுனா.. தியேட்டர்ல என்ன நடக்கும் தெரியுமா? நான் செத்தேன்..

said...

//பாலபாரதி: அடி ங்கொய்யாலே என்னை ரெக்கமெண்ட் செய்ய சொல்லி சொன்னா, நீ உனக்கு சொல்லிக்கிறீயா இருடி...//

ம்.. என்ன செய்றது.. ஒரு மனுஷனுக்கு நேரம், காலம் சரியில்லைன்னா இப்படித்தான் நடக்குமாம்..

said...

//கடைசியாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து பாலபாரதியே ஹீரோ என்று முடிவாகிறது.//

பின்னணியில் உண்மைத்தமிழனின் அழுகுரலும் கேட்கிறது..

said...

//எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன் என்று உண்மை தமிழன் சொல்ல, அப்ப பணத்தையும் நீங்களே போட்டுக்குங்க என்று கோவி டென்சன் ஆகிறார்.//

டென்ஷனை கூட்டுறியே குசும்பா..

said...

//கதை, பாட்டு, பைட்டு எல்லாம் தனி தனியா விட்டு விடலாம் என்று யோசனையை சொல்கிறார்.//

பின்ன உண்மைத்தமிழனே பாட்டு எழுதி, பைட்டை நடத்தணும்னா உங்க தயாரிப்பாளர் தன் சொத்து முழுசையும் எழுதி வைச்சாகணுமே..?

said...

//படம் திகில் படம் என்றால் வினையூக்கிய எழுத சொல்லிடலாம்//

அப்பிராணி பிள்ளையா அது.. எழுதினதுல ரெண்டோ, மூணோதான் திகில் கதை.. மீதியெல்லாம் டிவிஸ்ட் கதைகள்.. அவருக்கு போய் பி.டி.சாமி ரேஞ்சுக்கு குத்துறீங்களே..?

said...

//காதல் கதை என்றால் சிபியை எழுத சொல்லலாம். ஆனா அவரு மார்கழி மாதத்தையே இன்னும் முடிக்கல.//

வேற ஆளே கிடைக்கலையா..? ஆளை விடுங்கய்யா.. உண்மைத்தமிழன் மாடு மேய்க்கப் போறான்..

said...

//அதுவும் இல்லாம இந்த ஹீரோவை வெச்சு காதல் கதையும் செய்ய முடியாது.//

ஏனுங்க சாமிகளா.. பாண்டியராஜனும், ராமராஜனும் நடிக்கலாம்.. இந்தாளு டூயட் பாடக்கூடாதா..? நான் நடிக்க வைப்பேன்.. கதை காதல் கதைதான்..

said...

//கிராமத்து கதை என்றால் ஆடுமாடுவை எழுத சொல்லலாம்//

முருகா.. ஆடுமாடெல்லாம் கதை எழுதுமா?

said...

//என்று பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே மழை வர விவாதம் ஒத்திபோட படுகிறது.//

அப்பாடா.. இதுவரைக்கும் தப்பிச்சிட்டேன்..

said...

உ த அண்ணே இன்னைக்கு இங்கயா? தினமும் ஒரு ஆள் உங்களுக்கு வசமாச் சிக்கீருறாரு. நடத்துங்க நடத்துங்க 15 ஆம் தேதி தமிழ்மண சந்திப்புல தனி நபர் பின்னூட்ட உயரெல்லை பிரச்சினையை கிளப்பி உங்களை முடக்கறோம்.

said...

'குருவி' யை விட மோசமாகிடாமக் காப்பாத்திடுங்க இந்தப் படத்தை

said...

:)

said...

உண்மைத்தமிழன் அண்ணே! காலை காட்டுங்கண்ணே! எப்படிண்ணே உங்களால மட்டும் இதுமாதிரியெல்லாம் முடியுது... என்னால முடியலை.. அழுகை அழுகையாய் வருது..

Anonymous said...

மிந்தியெல்லாம் பதிவை விட பின்னூட்டங்களை படிக்க பிடிக்கும். இந்த உண்மைத்தமிழன் அடிக்கிற கூத்துல அதுவும் வெறுத்துப் போவுதுப்பா...! மெட்ராஸ்ல வெயில் கூடிப்போச்சா என்ன?

said...

:))))

said...

//முரளிகண்ணன் said...
உ த அண்ணே இன்னைக்கு இங்கயா? தினமும் ஒரு ஆள் உங்களுக்கு வசமாச் சிக்கீருறாரு. நடத்துங்க நடத்துங்க 15 ஆம் தேதி தமிழ்மண சந்திப்புல தனி நபர் பின்னூட்ட உயரெல்லை பிரச்சினையை கிளப்பி உங்களை முடக்கறோம்.//

அதெல்லாம் எதுக்கு முரளி.. உண்மைத்தமிழனின் கமெண்ட்டுகளை பப்ளிஷ் செய்ய மாட்டோம்னு சொல்லிட்டாளே போதுமே..

அடங்கி, ஒடுங்கி, சூதானமா தன் சோலியைப் பார்த்துக்கிட்டுப் போயிர மாட்டானா..?

said...

//லக்கிலுக் said...
உண்மைத்தமிழன் அண்ணே! காலை காட்டுங்கண்ணே! எப்படிண்ணே உங்களால மட்டும் இதுமாதிரியெல்லாம் முடியுது... என்னால முடியலை.. அழுகை அழுகையாய் வருது..//

என்னடா இது.. பேர் போட்டு வந்தா காலைக் குடுன்ற.. பேர் இல்லாம வந்தா வாழ்க்கையே வெறுத்துப் போச்சுன்ற.. ஒண்ணும் புரியல..

said...

//Anonymous said...
மிந்தியெல்லாம் பதிவை விட பின்னூட்டங்களை படிக்க பிடிக்கும். இந்த உண்மைத்தமிழன் அடிக்கிற கூத்துல அதுவும் வெறுத்துப் போவுதுப்பா...!//

பின்ன ஏம்ப்பா படிக்கிற..?

said...

//மெட்ராஸ்ல வெயில் கூடிப்போச்சா என்ன?//

இல்ல.. கொஞ்சம் கம்மிதான்.. அக்னியெல்லாம்கூட முடிஞ்சு போச்சு.. ஆனா மண்டைக்குள்ள ஏதோ ஒண்ணு கனகனன்னு எரிஞ்சுக்கிட்டே இருக்குது..

said...

நன்றி ஜெகதீசன்,

நிஜமா நல்லவன்

லக்கி லுக்

வால்பையன்

பொண்வண்டு

கோவி.கண்ணன்

மங்களூர் சிவா

முரளிகண்ணன்

தமிழ்நெஞ்சம்

கயல்விழி முத்துலெட்சுமி

சென்ஷி

ஆயில்யன்

உண்மை தமிழன் (அண்ணே நீங்க அடிச்சு ஆடுங்க. ஒன்னும் தப்பே இல்லை!)

மற்றும் தமிழச்சிக்காக கமெண்ட் போட்ட அனானிகள்.

அனைவருக்கும் நன்றி

said...

:))

said...

//லக்கி லுக்: அப்ப என்னுடைய கழக தோழர் அண்ணன் அபி அப்பா இருக்கிறார் அவரை புடிச்சு கேட்டு பார்க்கவா?//
ஓ.. துபாய்ல இருந்தாலும் NRI தானா? அமெரிக்கால இருக்கிற்வங்க மட்டும் தான்னு நெனைச்சேன். நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.

...குறிப்பு : ஸ்மைலி போடவில்லை...

said...

இது சூப்பரு...:))

said...

இந்தப்பதிவுக்கு ஸ்கோர் பத்தலை இதுவே 100 தாண்டலைன்னு சொன்னா படம் எப்படிய்யா ஓடும்

said...

;))