குட்டி புள்ள வயசு
எனக்கு ஒரு பெட்டி என் அக்காவுக்கு ஒரு பெட்டி என்று இரண்டு தனி தனி அலுமினிய பெட்டி இருக்கும் அது முழுவதும் வெடியை எடுத்துவெய்யிலில் காயவைக்கும் படலம் ஒரு 10 நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடும்.
தீபாவளி அன்று ஐயாதான் முதல் வெடி வெடிக்கனும். புது சட்டை, அரை டவுசர் போட்டுபோய் முதல் வெடிய வைத்த பிறகுதான் அக்கா வெடி வெடிகனும், கொஞ்சம் கொஞ்சமாக வெடி வெடித்த பிறகு என் பெட்டியில் வெடி குறைஞ்சு இருக்கும், (வெடிச்சா குறையதானே செய்யும்) அதெல்லாம் சாருக்கு அப்ப புரியாது அம்ம்மே என்று பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிப்பேன் அவ பெட்டியில் மட்டும் நிறைய வெடி இருக்கு என்று. பின் தானா அம்மாவின் மேற்பார்வையில் அக்கா பெட்டியில் இருக்கும் வெடி எல்லாம் என் பெட்டிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறும். அப்பொழுது அக்கா முகத்தை பார்கனுமே சென்னை 600026ல் பேட்டை புடிங்கிட்டு போகும் பொழுது அழுவானே அதுபோல் இருக்கும். அதன் பிறகு வெடி வெடிச்ச பிறகு யார் வீட்டி அதிக குப்பை இருக்குன்னு ஒரு சர்வே நடக்கும்.
மறு நாள் ஸ்கூல் போகும் பொழுது தவறாமல் அந்த புது சட்டை புது டவுசரை போட்டு போவது வழக்கம். ஸ்கூலில் உங்க அப்பா எவ்வளோ ரூபாய்க்கு வெடி வாங்கி கொடுத்தார் அதுதான் முதல் கேள்வியாக இருக்கும்.
மீசை முளைக்கும் வயசு
ஊர்ல நமக்கு நல்லா படிச்சு ரப்ஜர் கொடுக்கும் அல்லது ஓவர் ரவுசு கொடுக்கும் பிகருங்க வீட்டுக்கு முன்னாடி திரி கிள்ளி ஒரு சரத்தை ஊது பத்தியில் கட்டி அந்த ஊதுபத்தியை பத்த வெச்சிட்டு ஜன்னல் ஓரமாக போய் வைத்துவிட்டு பசங்களோட ஓடி போய் பதுங்கிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கனிஞ்சு பின் கொஞ்சம் நேரம் கழித்து டம டமான்னு வெடிக்கும் பொழுது பதறி அடிச்சு தூங்கிட்டு இருந்த அந்த பிகர், அவுங்க அப்பா எல்லாம் லைட்டை போட்டு வாசலில்வந்து குய்யோ முய்யோன்னு கத்துவதை பார்கனுமே செம ஜாலியா இருக்கும்.
தீபாவளி அன்று இரவு கும்பகோணம் கடைத்தெருவுக்கு போய் சும்மா ஒன்னும் வாங்காமல் பிகர் வெட்டிட்டு காலையில் 3 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கமாக இருக்கும்
காலேஜ் படிக்கும் பொழுது
டேய் தம்பி சாஸ்த்திரத்துக்கு ஒரு வெடியாவது வைப்பா, என்ற அம்மாவின் கெஞ்சலுக்காக வேண்டா வெறுப்பாக ஒரு வெடி வைத்துவிட்டு அசின் பேட்டியோ அல்லது பிசின் பேட்டியிலோ மூழ்கி விடுவது என்று போகும் தீபாவளி.
வேலை பார்க்கும் பொழுது
என்னம்மா ஒரு நாள்தான் லீவ் இங்க கோயம்பேட்டில் இருந்து பஸ் இடம் கிடைக்க நாய் படாத பாடுபடனும், வந்துட்டு நைட்டே கிளம்பனும் எதுக்கு அப்படி வந்து என்னா செய்ய போறேன்? நாளும் கிழமையுமா உன் முகத்தை பார்காம எப்படிப்பா சாப்பிடுவது என்ற அம்மாவின் கெஞ்சல் குரலுக்காக ஊருக்கு போய் பகல் முழுவது தூங்கிவிட்டு பின் இரவு கிளம்பி சென்னை வருவது வழக்கமாக இருந்தது.
இப்பொழுது
தீபாவளி அன்று போன் போட்டு என்னய்யா புது துணி போட்டு இருக்கியா? என்னது இன்னைக்கும் ஆபிஸ் உண்டா அங்க, லீவ் எல்லாம் கொடுக்க மாட்டாங்களா?வெடி வெடிக்க முடியாதா? அங்க முறுக்கு அதிரசம் ஏதும் கிடைக்குமா? யாரும் வந்தா சொல்லுய்யா கொஞ்சமா கொடுத்து அனுப்புறேன். தம்பி நீ அனுப்பின பணத்தில் அம்மாவுக்கு பட்டு புடவை எடுத்து கொடுத்துவிட்டேன் ஆனா கட்டிக்கமாட்டேங்குதுப்பா நீ ஒரு வார்த்தை சொல்லுப்பா என்று சொல்லும் அப்பா.ஏம்மா என்று கேட்கும் முன்பே உன் முகத்தை பார்காமல் என்னா பெரிய தீபாவளி என்று தழுதழுக்கும் அம்மா.
பக்கத்தில் இருக்கும் வரை எதன் அருமையும் தெரியாது என்பது இப்பொழுதுதான் புரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
/பக்கத்தில் இருக்கும் வரை எதன் அருமையும் தெரியாது என்பது இப்பொழுதுதான் புரிகிறது./
உண்மை....
பதிவு நல்லாயிருக்குங்க... :)
இராம்/Raam said...
//உண்மை....
பதிவு நல்லாயிருக்குங்க... :)///
நன்றி தல.
விளையாட்டா ஆரம்பிச்சு சீரியசா முடிச்சிட்டீங்க பதிவ.. அருமையான பதிவு :)
உங்கள கலாய்ச்சு தான் தீபாவளி போஸ்ட் போடலாம்னு இருந்தேன். செண்டி போஸ்ட் போட்டு கவுத்துட்டீங்க. சரி பரவாயில்ல, உங்க சார்பா கவிதாயினிய கலாய்ச்சிக்கறேன் :)
வழக்கமாய் குறு நகை புரிய வைக்கும் உங்கள் பதிவுகள்.. இந்த முறை மனம் நெகிழச் செய்துவிட்டது.. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா..
தம்பி நீ அனுப்பின பணத்தில் அம்மாவுக்கு பட்டு புடவை எடுத்து கொடுத்துவிட்டேன் ஆனா கட்டிக்கமாட்டேங்குதுப்பா நீ ஒரு வார்த்தை சொல்லுப்பா என்று சொல்லும் அப்பா.ஏம்மா என்று கேட்கும் முன்பே உன் முகத்தை பார்காமல் என்னா பெரிய தீபாவளி என்று தழுதழுக்கும் அம்மா.
//
niraivana kudumbam .. satunnu kannula neer thuirththiruchchu..
nalla iruppaa .. ammavai kEttathaa sollu... mudinja oru ettu paththuttu vandhudu
//என்னம்மா ஒரு நாள்தான் லீவ் இங்க கோயம்பேட்டில் இருந்து பஸில் இடம் கிடைக்க நாய் படாத பாடு படனும், வந்துட்டு நைட்டே கிளம்பனும் எதுக்கு அப்படி வந்து என்னா செய்ய போறேன்? //
சேம் பிளட்.
//பக்கத்தில் இருக்கும் வரை எதன் அருமையும் தெரியாது என்பது இப்பொழுதுதான் புரிகிறது.//
என்னங்க அண்ணே,
கல கல போன பதிவுல இப்படி செண்டிமெண்ட போட்டு தாக்கிட்டீங்களே...
சூப்பர் பதிவு.
இப்புடித்தா நல்லா எழுதுங்க...
அடுத்தவங்க பாத்து திருந்திக்கட்டும்.
ஒங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
//தீபாவளி அன்று போன் போட்டு என்னய்யா புது துணி போட்டு இருக்கியா? என்னது இன்னைக்கும் ஆபிஸ் உண்டா அங்க, லீவ் எல்லாம் கொடுக்க மாட்டாங்களா?வெடி வெடிக்க முடியாதா? அங்க முறுக்கு அதிரசம் ஏதும் கிடைக்குமா? யாரும் வந்தா சொல்லுய்யா கொஞ்சமா கொடுத்து அனுப்புறேன்///
உங்க வீட்லேர்ந்தும் இதே கேள்விகள்தானா??????
கடைசி பாரா படிக்கும் போது கண்கலங்கிருச்சு ... ..
வந்துட்டொம்ல, ... சரி பதிவு படிச்சிட்டு வரென்
சென்னை 600026ல் ....
என்ன இது.... சரி பண்ணுப்பா...
ஒரு நாள்தான் லீவ் இங்க கோயம்பேட்டில் இருந்து பஸில் இடம் கிடைக்க நாய் படாத பாடு படனும், வந்துட்டு நைட்டே கிளம்பனும் எதுக்கு அப்படி வந்து என்னா செய்ய போறேன்? நாளும் கிழையுமா
அண்ணா, நீங்க எனக்கு நிஜமாவெ அண்ணன்னு proof pannarenga, superrrrr.
பக்கத்தில் இருக்கும் வரை எதன் அருமையும் தெரியாது என்பது இப்பொழுதுதான் புரிகிறது.
கலக்கிட்டீங்க , சூப்பர்....
G3 said...
விளையாட்டா ஆரம்பிச்சு சீரியசா முடிச்சிட்டீங்க பதிவ.. அருமையான பதிவு :) ///
என்னங்க எல்லாரும் இப்படியே சொல்லி இருக்கீங்க சீரியசா எல்லாம் எனக்கு வராதே சும்மா அப்படியே உன்மையை எழுத போய் அப்படி ஆயிட்டோ:( சாரி சாரி
///உங்கள கலாய்ச்சு தான் தீபாவளி போஸ்ட் போடலாம்னு இருந்தேன். செண்டி போஸ்ட் போட்டு கவுத்துட்டீங்க. சரி பரவாயில்ல, உங்க சார்பா கவிதாயினிய கலாய்ச்சிக்கறேன் :)////
பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று JK எச்சரித்து இருப்பார்:)
//பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று JK எச்சரித்து இருப்பார்:)//
எதுக்கு? உங்கள கலாய்ச்சு போஸ்ட் போடாம உட்டதுக்கா?
தேவ் | Dev said...
வழக்கமாய் குறு நகை புரிய வைக்கும் உங்கள் பதிவுகள்.. இந்த முறை மனம் நெகிழச் செய்துவிட்டது.. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா..///
நன்றி தேவ்:) இது ஏதேச்சயாக நடந்து விட்ட தவறு.
Anonymous said...
//niraivana kudumbam .. satunnu kannula neer thuirththiruchchu..
nalla iruppaa .. ammavai kEttathaa sollu... mudinja oru ettu paththuttu vandhudu//
போகனும் அனானி ஆனால் இப்பொழுது முடியாது கொஞ்ச நாள் ஆகட்டும்.
அசின் பேட்டியோ அல்லது பிசின் பேட்டியிலோ மூழ்கி விடுவது
intha kathai thaan vendankirathu..neengka college padikkumpothu...Asin naaa..?
irunthalum irukkum...unakkuthaan vayasae yaeraathae..
J K said...
//கல கல போன பதிவுல இப்படி செண்டிமெண்ட போட்டு தாக்கிட்டீங்களே...
சூப்பர் பதிவு.//
நன்றி JK
Anonymous said...
இப்புடித்தா நல்லா எழுதுங்க...
அடுத்தவங்க பாத்து திருந்திக்கட்டும்.
ஒங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.//
இதை பார்த்து திருந்த என்னா இருக்கு அனானி?:)
ஆயில்யன் said...
//உங்க வீட்லேர்ந்தும் இதே கேள்விகள்தானா??????//
ஆமாம் ஆயில்யன்:)
முத்துலெட்சுமி said...
கடைசி பாரா படிக்கும் போது கண்கலங்கிருச்சு ... ..//
அக்கா சாரி:(
Baby Pavan said...
அண்ணா, நீங்க எனக்கு நிஜமாவெ அண்ணன்னு proof pannarenga, superrrrr.///
ஹி ஹி நீங்க ஒருத்தர்தான் பாக்கி நீங்களும் சொல்லிட்டீங்களா? ரைட்டு.
G3 said...
//பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று JK எச்சரித்து இருப்பார்:)//
எதுக்கு? உங்கள கலாய்ச்சு போஸ்ட் போடாம உட்டதுக்கா?//
ஹி ஹி ஆமாம், என்னிடம் சொன்னார் G3க்கு லஞ்சமா ரெண்டு முட்டை போண்டா வாங்கிதாரேன்னு சொல்லி போஸ்ட் போடவிடாம செஞ்சுட்டேன் என்று சொன்னார்:)
/பக்கத்தில் இருக்கும் வரை எதன் அருமையும் தெரியாது என்பது இப்பொழுதுதான் புரிகிறது./
அதே! அதே!!
தீபாவளி வாழ்த்துக்கள்.
சென்டிமெண்ட்.....
திருமணத்துக்கு பிறகுதான் தெரியும் தாயன்பு காசுக்கு எவ்வளவு தேறுமென்பது - என்று சொல்வார்களே.
குசும்பரே.. அட்லீஸ்ட் நீங்க நெனச்ச ஒடனே ஊருக்கு போயி அம்மாவ பாக்க முடியுது.. ஆனாக்கா..எங்க நெலமை.. போனுலயே தீபாவளியை ஓட்ட வேண்டியிருக்கு.. ஆறுதலடையுங்க..
தீபாவளி வாழ்த்துக்கள்..
\\தீபாவளி அன்று போன் போட்டு என்னய்யா புது துணி போட்டு இருக்கியா? என்னது இன்னைக்கும் ஆபிஸ் உண்டா அங்க, லீவ் எல்லாம் கொடுக்க மாட்டாங்களா?வெடி வெடிக்க முடியாதா? அங்க முறுக்கு அதிரசம் ஏதும் கிடைக்குமா? யாரும் வந்தா சொல்லுய்யா கொஞ்சமா கொடுத்து அனுப்புறேன்.\\
எல்லா அம்மாவும் இப்படி தானோ ! ;)
பீலிங்கஸ் போடாதா அண்ணனே.. எல்லாத்தையும் மறந்துட்டுப்புட்டு தான் இங்கன இருக்கோம்.. ஸ்டார்ட் பண்ணி வுடாத சொல்லிட்டேன் :)
குசும்பரே..லேட்டஸ்ட் வாழ்த்துக்கள்.,
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.
எல்லார் வீட்டிலும் கேட்கும் கேள்விகள் குசும்பன்...இதற்கு ஈடாக கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் வராது..
முதல் தடவையாய் கோவையில் இல்லாத தீபாவளி, முதல் தடவை உறவுகள், நண்பர்கள், தினமும் எதிர்கொள்ளும் கதாபாத்திரங்கள் இல்லாத தீபாவளி..ம்ம்ம்..
படிக்க படிக்க கண்கள் கழங்கிவிட்டது..
ஹ்ம்ம்...நாமாக தேடிக்கொண்டது தானே..
Brother!Happy Diwali!!!! appidiye Krishna sweets konjam parcel anuppina nalla irukkum................
நெஞ்சிலே பச்சக் என்று ஒட்டிகொண்டது உங்கள் பதிவு. கடந்தகாலம் நிழலாடுது. நிகழ்காலம் பெருமூச்சு விடுது. கோடி ரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத தாயின் அன்பையும்,குழந்தை பருவத்தையும் பரவசத்தோடு அனுபவிக்க வைத்து விட்டீர்கள். எனக்கும் இன்று தொலைபேசியில் அதேவார்த்தை என் அம்மாவிடம் இருந்து வந்தது. ஹும்... எல்லாம் நாம தானே ஆசைப்பட்டு வந்தோம்? அனுபவிக்கிறோம்....
நல்ல பதிவு..... தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மங்களூர் சிவா said...
தீபாவளி வாழ்த்துக்கள்.//
நன்றி சிவா.
***************
சுல்தான் said...
சென்டிமெண்ட்.....
திருமணத்துக்கு பிறகுதான் தெரியும் தாயன்பு காசுக்கு எவ்வளவு தேறுமென்பது - என்று சொல்வார்களே.//
சுல்தான் சார் நீங்க சொல்வது புரியவில்லை போன் போட்டு கிளியர் செஞ்சுக்கிறேன்!
***********************
ரசிகன் said...
தீபாவளி வாழ்த்துக்கள்..///
நன்றி
*******************
மங்கை said...
எல்லார் வீட்டிலும் கேட்கும் கேள்விகள் குசும்பன்...இதற்கு ஈடாக கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் வராது..
///
ஆமாம் மங்கை நீங்க சொல்வது சரிதான்.
//முதல் தடவையாய் கோவையில் இல்லாத தீபாவளி, முதல் தடவை உறவுகள், நண்பர்கள், தினமும் எதிர்கொள்ளும் கதாபாத்திரங்கள் இல்லாத தீபாவளி..ம்ம்ம்..//
சேம் பிளட்டா?:(
///படிக்க படிக்க கண்கள் கழங்கிவிட்டது..
ஹ்ம்ம்...நாமாக தேடிக்கொண்டது தானே..///
ஆமாம் நாமலாக தேடிக்கொண்டதுதானே என்று சொல்லிதான் மனசை தேற்றிக்க வேண்டி இருக்கு.
jaseela said...
Brother!Happy Diwali!!!! appidiye Krishna sweets konjam parcel anuppina nalla irukkum................///
ஹலோ ஒரு பேமிலிக்கு ஒரு பாக்ஸ்தான் அதை அன்றே நண்பர் லொடுக்குவிடம் கொடுத்து உங்களுக்கும் குட்டி பாப்பாவுக்கும் கொடுக்க சொல்லிவிட்டேன். வரவில்லையா? விசாரனை கமிசன் வைத்துவிடுவோமா? சொல்லுங்க.
***********************
இஞ்சிமொரப்பா said...
நெஞ்சிலே பச்சக் என்று ஒட்டிகொண்டது உங்கள் பதிவு. கடந்தகாலம் நிழலாடுது. நிகழ்காலம் பெருமூச்சு விடுது. கோடி ரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத தாயின் அன்பையும்,குழந்தை பருவத்தையும் பரவசத்தோடு அனுபவிக்க வைத்து விட்டீர்கள். எனக்கும் இன்று தொலைபேசியில் அதேவார்த்தை என் அம்மாவிடம் இருந்து வந்தது. ஹும்... எல்லாம் நாம தானே ஆசைப்பட்டு வந்தோம்? அனுபவிக்கிறோம்....
நல்ல பதிவு..... தீபாவளி நல்வாழ்த்துக்கள்.///
எல்லோரும் ஆசை பட்டா வருகிறார்கள், என்னை போல் சிலரும் வேறு வழி இல்லாமல் வருகிறார்கள்:)
நன்றி தங்கள் வருகைக்கு.
சிரிப்பு, லொல்லு, செண்டிமெண்ட் எல்லாம் இருக்கு
நல்லா இருக்கு.
வெடி வெடிக்காத எங்க அண்ணன் குசும்பன் வாழ்க. . .
Post a Comment