Wednesday, December 2, 2009

என்ன கொடுமை இது யுவன்?

(8மணிக்கு வந்திருந்த கூட்டத்தினர்)
லைவ் மியுசிக் புரோகிராம் என்றால் மிகவும் பிடிக்கும், போன முறை அப்பாவுடன் சும்மா வந்திருந்த யுவன் இந்த முறை முதன் முறையாக துபாய்க்கு வருகிறார் கூடவே ஹரிஹரன், சங்கர்மகாதேவன், போன்றவர்களும் வருகிறார்கள் என்பதால் நானும் என் நண்பரும் இரண்டு நாட்களுக்கு முன்பே டிக்கெட் வாங்கினோம், நிகழ்ச்சி நடக்கும் இடம் துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம், சொந்தமாக கார் வைத்து இருப்பவர்கள் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு துபாயை விட்டு அவுட்டரில் இருக்கும் இடம். ஆகையால் டிரைவரிடம் சொல்லி என்னையும் என் நண்பரையும் அங்க ட்ராப் செஞ்சுடு வரும் பொழுது எப்படியாவது வந்துடுறேன் என்று சொல்லி ஆபிஸ் காரிலேயே அங்கு சென்றோம். 5 மணிக்கு கேட் ஓப்பன் ஆகும் என்று போட்டு இருந்தார்கள் நாங்கள் போன பொழுது 6.30. அங்கு காத்திருந்தது மொத்தமாக ஒரு பத்து பேர் இருக்கும், அப்பொழுது லேசாக பயம் ஆரம்பம் ஆனது, ஆஹா தனியா வந்து மாட்டிக்கிட்டோமோ என்று. கடைசியில் 7.45க்கு கேட் ஓப்பன் செய்தார்கள் உள்ளே 30,000 பேர் அமரக்கூடிய ஸ்டேடியத்தில் வந்திருந்தது மொத்தம் 100பேர் இருக்கும், நிகழ்ச்சி 8 மணிக்கு என்று சொல்லி இருந்தார்கள் அனைவருக்கும் 6மணிக்கு ஆபிஸ் முடிந்து வருவது என்றாலும் அட்லீஸ்ட் ஒரு 5000 பேராவது வந்திருக்கனும், எல்லா கேலரியையும் சேர்த்து பார்த்தாலும் மொத்தம் 500 பேருக்குமேல் தாண்டாதே என்று நினைச்சுக்கிட்டு இருக்கும் பொழுது ஆசிப் அண்ணாச்சி போன் செய்தார், டேய் கூட்டம் எப்படி டா என்று அண்ணாச்சி செம கூட்டம் அண்ணாச்சி குறைந்தது ஒரு 5000 பேர் இருக்கும் அவ்வளோ கூட்டம் என்றேன், என்னடா இப்படி சொல்றே என்றார், ஆமாம் அண்ணாச்சி குறைந்தது ஒரு 5000 பேர் செக்கியூரிட்டிங்க இருக்காங்க ஆனா வந்திருப்பது ஒரு 500 பேர் கூட இருக்காது என்றேன். ஆள் இல்லாத ஸ்டேடியத்தில் அவ்வளோ பொருப்பா டீ ஆத்துக்கிறார்கள் என்றேன்.

யாரு பெத்த புள்ளையோ? (தனியாக வந்திருந்த பாக்கிஸ்தானி)

ஸ்டேஜில் பேசியவரும் 30000 டிக்கெட் விற்றுவிட்டது என்று எங்களுக்கு சொன்னார்கள், எல்லோரும் துபாய் ட்ராபிக்கில் மாட்டிக்கிட்டாங்க என்று நினைக்கிறோம், கூட்டம் வரும் என்று நம்புகிறோம் என்றார், அப்பொழுது மணி 9.30. ஒரு வழியாக 10.30க்கு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது ஒரு 4000 பேர் இருந்தாலே ரொம்ப அதிகம். ஸ்டேஜில் இருந்த மிகப்பெரிய ஸ்கிரீனில் இளையராஜா முகத்தில் இருந்து யுவன் முகமாக மாறுவது போன்றும் அதன் பிறகு u 1 (யுவன்) என்று லோகோ கிரியேட் ஆவது போல் ஒரு 5 நிமிடம் ஓடக்கூடிய கிராப்பிக்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருந்தன, யுவன் தவம் செய்கிறார், கத்தி சண்டை போடுகிறார், பறக்கிறார் என்ன என்னமோ செய்கிறார் பக்காவாக இருந்தது அந்த அனிமேசன். அதுவரை தலையில் ரெயின் கோட் போட்டது போல் முகத்தை காட்டாமல் தமிழ் பட ஹீரோயின்கள் போல் ”பேக்கை” காட்டிக்கிட்டு பக்காவா எண்டரி ஆகனும் என்று காத்துக்கொண்டு இருந்தார். அனிமேசனும் முடிந்தது, இவரும் என்ன என்னமோ சொல்லிபார்த்தார் சவுண்ட் சிஸ்டம் வேலை செய்யல...திரும்பி உள்ளே போய்விட்டார். பின் எல்லாம் சரி செஞ்சு திரும்ப அழைத்து வந்து முதல் பாடலை யுவன் பாடினார், என்ன பாட்டு என்று இதுவரை கேட்டதும் இல்லை அது நினைவிலும் இல்லை. அடுத்த பாட்டு சங்கர் மகாதேவன் சரோஜாவில் இருந்து “நிமிர்ந்து நில்..” , ஹரிஹரன் “காதல் செய்தால் பாவம்..”,விஜய் நம்பியார் என்று அனைவரும் பாடினார்கள் என்ன பாடினார்கள் என்று தான் தெரியவில்லை, மியுசிக்கை வைத்து இந்த பாட்டுதான் பாடுகிறார்கள் என்று புரிஞ்சுக்கிட்டோம்.

சிம்புவுக்காக என்ட்ரி மியுசிக் ”வல்லவன் வல்லவன்” என்று ஒரு இரண்டு நிமிடங்கள் போட்டபிறகு வந்து ”நலம் தானா நலம் தானா” பாட்டை பாடினார், பிறகுஅவரே திரும்ப லூசு பெண்ணே பாட்டையும் பாடிவிட்டு பை சொல்லிவிட்டு கிளம்பினார். ரொம்ப எதிர்பார்த்த ”வேர் ஈஸ் த பார்ட்டி” பாட்டை வேறு ஒருவர் பாடினார்...ரொம்ப அடக்கமாகவே வந்துரொம்ப அடக்கமாகவே பேசினார் சிம்பு.

(இவரு பாடினாலே நல்லா இருக்கும்!)

ரொம்ப அட்வான்ஸ் டெக்னாலஜியோடு புரோகிராம் நடத்தனும் என்று வந்திருக்கிறார், அதே டெக்னாலஜிதான் காலைவாரிவிட்டு விட்டது.
ஊரில் நடக்கும் லக்‌ஷ்மன் சுருதி, வானம்பாடிகள் போன்றோர்களின் நிகழ்ச்சி கூட அருமையாக இருக்கும்.


1) என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் முன்கூட்டியே வந்து ரிகர்சல், ஆடிசன் எல்லாம் பார்க்கவில்லை என்றால் இப்படிதான் சொதப்பும்.


2) கூட்டம் இல்லாததால் ஏதோ கடமைக்கே என்று நிகழ்ச்சியை நடத்தியது போன்று ஒரு உணர்வு, காம்பியரிங் யாரும் இல்லை, யார் பாட்டு பாடுகிறார்கள், அடுத்த பாட்டு என்ன போன்று எந்த அறிவிப்பும் கிடையாது. மூன்று தேவதைகள் பாடினார்கள் அவர்கள் பெயர் கூட தெரியவில்லை. (தேவதைகள் ஆல்வேஸ் மேட் இன் கேரளா என்று தனியாக சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.)


3)மிகவும் ரசனையாக இருந்தது பாட்டுக்கு ஏற்றமாதிரி பின்னாடி ஸ்கிரீனில் வந்த கிராப்பிக்ஸ் காட்சிகள், அத்தனை அழகு.

டிஸ்கி: கெஞ்சினேன், கதறினேன் டேய் கொடுத்த காசில் பாதியாச்சும் திரும்ப கொடுங்கடா போய்விடுகிறேன் என்று பாவி பசங்க கொடுக்கவே இல்ல:(

36 comments:

said...

ஏற்கனவே துபாய் வங்கிக் கடனால் ஆட்டம் கண்டு இருப்பதாக (கடன் கொடுத்த) உலக நாடுகள் பீதியில் இருக்கிறார்கள். இதுல பாட்டு கூத்துன்னு நிகழ்ச்சி போட்டால் யார் வருவாங்க.

said...

//கெஞ்சினேன், கதறினேன் டேய் கொடுத்த காசி பாதியாச்சும் திரும்ப கொடுங்கடா போய்விடுகிறேன் என்று பாவி பசங்க கொடுக்கவே இல்ல///

:-))))))))

said...

:) எங்கயுமே கூட்டம் வரமாட்டேங்குது மக்கள்லாம் என்ன பண்ராங்கன்னே தெரியல.. ஆனா டீவி ப்ரோகிராமில் தான் கூட்டம் அலைமோதுது போல.. எந்த மண்ணு ப்ரோக்ராமா இருந்தாலும் பாக்கர கைதட்டற கூட்டம் எக்கசக்கமா இருக்கு..

said...

//ஏற்கனவே துபாய் வங்கிக் கடனால் ஆட்டம் கண்டு இருப்பதாக (கடன் கொடுத்த) உலக நாடுகள் பீதியில் இருக்கிறார்கள். இதுல பாட்டு கூத்துன்னு நிகழ்ச்சி போட்டால் யார் வருவாங்க.//

Ethukku Ithala, Aduthu January 4th nadkura kutha pakkanum

said...

அச்சச்சோ.. சிம்புவிடம் சொல்லி சானா கானை கூட்டு போயிருந்தால் கூட்டம் வந்திருக்கலாம். அட குசும்பனிடம் சொல்லி பதிவு முன்னரே போட்டிருந்தாலும் கூட்டம் வந்திருக்குமே!!!

என்னமோ போங்க பாஸ்..

said...

டோண்ட் ஒர்ரி. ஃபோன் பண்ணி நான் உங்களுக்கு பாடுறேன்.

(குசும்பன் : ங்கொய்யால இதுக்கு நான் தூக்கு மாட்டிக்குவேன்)

:)

said...

//தேவதைகள் ஆல்வேஸ் மேட் இன் கேரளா என்று தனியாக சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.//

மாம்ஸ்க்கு ஒரு லோடு தேங்கா பார்சல்ல்ல்ல்ல்ல்...

said...

//என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் முன்கூட்டியே வந்து ரிகர்சல், ஆடிசன் எல்லாம் பார்க்கவில்லை என்றால் இப்படிதான் சொதப்பும்.//

நாங்கல்லாம் சீனே தெரியாம மூஜிக் போட்றவங்க...

said...

//டிஸ்கி: கெஞ்சினேன், கதறினேன் டேய் கொடுத்த காசில் பாதியாச்சும் திரும்ப கொடுங்கடா போய்விடுகிறேன் என்று பாவி பசங்க கொடுக்கவே இல்ல//

:-)))

said...

ஆஹா என்ன இது யுவன் என்ற பேருக்கு இம்புட்டு மகிமையா? கடை காத்து buying!

கோவி அண்ணாச்சி நீங்க வேற மீடியாதான் எது எதுவோ சொல்லுது இங்க ஒன்னும் பிரச்சினை இல்லை!

எறும்பு ஸ்மைலிங்?:) இருக்கட்டும் இருக்கட்டும்.

நீங்க வேற முத்துலெட்சுமி டமாஸ்,ஆலுகாஸ் பக்கம் பாருங்க எம்புட்டு கூட்டம் நிக்குதுன்னு!

ஜனவரி 4th என்னங்க?பிஸி

கார்க்கி சானாவோ இல்ல சோனாவோ வந்திருந்தாலும் கொஞ்சம் கூட்டம் கூடவந்திருக்கும், இவருவேற மூஞ்ச முக்காடு போட்டுக்கிட்டு (கில்லி விஜய் மாதிரி) போஸ் கொடுத்தாரு ஒருபயபுள்ள வரவில்லை:(

அப்துல்லா அண்ணே ஏன் இப்படி ஒரு மர்டர் வெறி! இப்ப புள்ளகுட்டிகாரன் ஆயாச்சு கொஞ்சம் கருணை காட்டுங்க!

said...

//டிஸ்கி: கெஞ்சினேன், கதறினேன் டேய் கொடுத்த காசில் பாதியாச்சும் திரும்ப கொடுங்கடா போய்விடுகிறேன் என்று பாவி பசங்க கொடுக்கவே இல்ல//
ஹா... ஹா... ஹா...

said...

ஒருவேலை குசும்பன் வர்றாருன்னு தெரிஞ்சுதான் எல்லா ஜனமும் எஸ்கேப்பாகியிருக்குமோ..?

said...

ஹெலோ குசும்பன், அந்த நிகழ்ச்சி உங்களுக்கு நிறைவ தரலைன்னாலும், ஒரு ப்லாக் போட உதவி இருக்குல்ல......

said...

// எங்கயுமே கூட்டம் வரமாட்டேங்குது மக்கள்லாம் என்ன பண்ராங்கன்னே தெரியல.. ஆனா டீவி ப்ரோகிராமில் தான் கூட்டம் அலைமோதுது போல.. எந்த மண்ணு ப்ரோக்ராமா இருந்தாலும் பாக்கர கைதட்டற கூட்டம் எக்கசக்கமா இருக்கு..
//
ஒரு வேளை இந்த நிகழ்ச்சியும் டிவியில வரும்போது, நிறைய கூட்டம் காமிப்பாங்களோ?

said...

தோல்விக்கு சில‌ காரணம் சொல்லலாம்
1. பப்ளிசிட்டி இல்லை
2. நுழைவுக்கட்டணம் மிக மிக அதிகம்
3. லீவு நாளில் வைத்திருக்க வேண்டும்
4. அதிக கூட்டம் இருக்கும் என்று பேமிலிகள் பேய்முழி முழித்தது

said...

விகடனில் இதைப் பற்றி படித்தபோதே மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

சொதப்பிவிட்டதா?

:-(

said...

இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன்.. 10 திர்காம்ஸ்க்கு சி.டி.வாங்கி ரூம்ல போட்டு கேளுன்னு! அமீரகத்துல எங்க எது நடந்தாலும் சொம்ப தூக்கிகிட்டு கிளம்பிட வேண்டியது!! அடுத்த தடவை என்னையும் கூட கூப்பிட்டுபோனாதான் உள்ளையே போக முடியும்.. மைண்ட் இட்!

said...

என்னை மாதிரி சென்ஷிகிட்ட பேசி... ரகசியத்தை கரக்கலாமுன்னு நினைச்சத்துக்கு சரியா சுண்ணாம்பு தடவியிருக்காங்கடி ராசா உனக்கு!!

said...

:-)
ஸ்மைலி போட மறந்துட்டேன் தல...

said...

அடுத்த வாரம் ஷார்ஜா ஸ்டேடியத்துல சினேகாவுக்கு மஞ்ச நீராட்டு விழாவாமுல்ல...? டிக்கெட் கிடைக்குமான்னு பாருங்க! அத மட்டும் ஏன் விட்டுவைக்கனும்.. அங்கயும் போயிட்டு வந்துடுவோம்!

said...

குட்டி மேஸ்ட்ரோவின் நீண்டகால திட்டங்களில் ஒன்றுதான் இந்த துபாய் இசை நிகழ்ச்சி. தமிழ்சினிமாவில் உச்ச இடத்தில் இருந்தாலும், உலகம் முழுவதும் சுற்றி வந்து இசை நிகழ்ச்சி நடத்திவிட வேண்டும் என்பது அவரது கனவு. அதன்படி டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சுமார் 30 ஆயிரம் ரசிகர்கள் சூழு தனது இசைமழையை பொழிந்து கொண்டிருக்கிறார் இந்த குட்டி மேஸ்ட்ரோ.

த‌மிழ்சினிமா.காம்

said...

அன்பின் குசும்பா

நலலவே இருக்கு படமும் இடுகையும்

கெஞ்சினாலும் காசு தரலியா

5000 பேரு இருக்காங்க - அண்ணாச்சிக்குப் பதில் - செகூர்டீயாம்
ம்ம்ம்ம்ம்

பாவம் - இப்படிச் சொதப்பி இருக்கக் கூடாது

நல்லாருக்கு வழக்கம் போல

ம்ம்ம் நல்வாழ்த்துகள்

said...

சகா கார்க்கி சொல்லுற வழிமொழியிறேன்..

said...

இந்த கொடுமையைப் பார்க்க நாங்க கோல்ட் டிக்கெட்டில் வேறே போனோம்...

அந்த டாக்குமெண்டரி படத்தையாவது முன்னால் போட்டு தொலைத்திருக்கலாம்.

உலக வரலாற்றில் முதல் முறையா பாட்டுக்கச்சேரிக்கு குரான் ஓதி ஆரம்பித்தது இதுவாகத்தான் இருக்கும்
( இஸ்லாம் படி இசை ஒரு ஹராம்)

அடுத்து அந்த U1 லோகோ அப்படியே திருப்பதி நாமம் போட்டது போலவே இருந்தது....

said...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா, அங்க ஒரு கொடுமை, திங்கு திங்குன்னு ஆடுச்சாம்.

said...
This comment has been removed by the author.
said...

போட்ட கமெண்ட் விபரீதமா அர்த்தம் வந்துட்டுது தலைவரே..

அதிக எதிர்பார்ப்புடன் போயிருந்தீர்களா?

டிஸ்கி சூப்பர்.

said...

கார்க்கியை வழிமொழிகிறேன்!

பாவம் தல நீங்க!

said...

என்ன கொடுமை இது ?? யுவன் ஏதோ பெரிய டூர் போறாரு ஆடியன்ஸ் நிறைய பேரு வருவாங்கன்னு ரொம்ப பில்ட்அப் குடுத்தாங்க மொத்தமே 4000 தான ??

said...

வீட்டுக்கு எப்படி திரும்பினீர்கள்? அதையாவது சொல்லுங்க.

said...

ச்சோ....

said...

என்ன கொடுமை சரவணா இது?
இதுதானே சரி....
கி.. கி.. கி..

said...

இப்படியெல்லாம் நடக்குமுன்னு எனக்கு தெரியும் அதனாலதான் நான்போகல...(இப்படித்தான் மனசதேத்தனும்)

said...

குசும்பன் பாடுகிறார்ன்னு விளம்பரம் பண்ணிருப்பாங்க, அதான் ஒருத்தரும் வரலை

said...

அடப்பாவமே..

said...

என்ன கொடுமை சரவணன் இது!