Sunday, December 20, 2009

என்ன கொடுமை சரவணன் இது?

கடந்த வெள்ளி அன்றுஅண்ணாச்சி வீட்டில் ஏற்பாடு செய்திருந்த கீழைராசா எடுத்த குறும்புபடம் வெளியீட்டுக்கு சென்றோம்.

அண்ணாச்சி வீட்டு கதவில் ஆரம்பிச்சு, பாத்ரூம் வரை அண்ணாச்சி அழைக்கிறார் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஒரு அண்ணாச்சியை பார்ப்பதே கஷ்டம் திரும்பிய பக்கம் எல்லாம் அண்ணாச்சி போஸ்டர் என்றால் சொல்லவா வேண்டும்?...திரையை சுற்றி சீரியல் லைட்,ஹோம்தியேட்டர் சவுண்ட் சிஸ்டம் என்று கலக்கலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

டேஸ்டி பிரியாணி என்றாலே அவ்வளோ அருமையான சுவையாக இருக்கும், அன்றும் அங்கிருந்தே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, அனைவரும் சாப்பிட்டு விட்டு சுல்தான் பாய் வருவதுக்காக காத்திருந்தோம். கூட்டம் வரும் வரை நியூஸ் ரீல்ஓட்டுவது போல், போன வாரம் தேவாவின் இன்னிசையில் அண்ணாச்சி பாடிய பாட்டை போட்டார்கள், அதன் பிறகு ஜெஸிலா அவர்கள் பேசிய பட்டிமன்றத்தில் பேசிய வீடியோவும் போட்டார்கள். எதுக்கு கை தட்டுகிறோம் என்றுதெரியாமல் கை தட்டிக்கிட்டே இருந்தோம்!

பிறகு 2 மணிக்கு படம் ஆரம்பம் ஆனது. நான் ஊரில் இல்லாதப்ப என்னை விட்டு சுற்றுலா சென்ற குறையை சுற்றுலாவுக்கு வராதவர்களுக்கு சமர்பனம் செய்து அதை போக்கிவிட்டார் கீழை ராசா. பாட்டுக்கு பாட்டு போட்டியில் ஆசாத் பாய் பாடி முடிச்சதும் "என்ன கொடுமை சரவணன்" இது என்று பிரபு பேசும் டயலாக் பக்காவாக பொருந்தியது, சிரிக்காதவர்களையும் சிரிக்கவைக்கும். அடுத்து பிரியாணி சட்டியை தூக்கிக்கிட்டு போகும் பொழுது "எங்கே செல்லும் இந்த பாதை?..." பாட்டும், கார்த்தி பேசும் பொழுது "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்" டயலாக்கும் பக்கா மேச்சிங்.. மிகவும் அருமையாக இருந்தது...

இந்த முறை புதிதாக பலர் அபு அப்ஸர், ஹூசைனம்மா, கலைச்சாரல் மலிக்காவும்,அப்துல்மாலிக் ஆகியோர் வந்திருந்தனர், ஆனால் படம் முடிஞ்சதும் பலரும் எஸ்கேப் ஆகியதால் சரியாக யாரிடமும் பேச முடியவில்லை...

பிரியாணி இதில் தான் இருந்தது என்பதுக்கு ஆதாரமாக சட்டி மட்டும் மிச்சம்:)
வீடியோவை பார்த்து சிரிக்க..

http://www.youtube.com/watch?v=3kSjIFIbv7w

42 comments:

said...

ஹஹஹ. குசும்பான் டேஸ்டே தனி....
கடைசி போட்டோ டாப்பு...அண்ணாச்சிக்கு ஒரு மசால் தோசை பார்ச்சல்ல்ல்ல்

said...

:))))))

said...

இதை விடவா உன்னோடது சூப்பரா இருக்குது ;-)

said...

என்னங்க பாத்ரூம் வாசல்ல்யுமா “அண்ணாச்சி அழைக்கிறார்”

அதுகுள்ள எதுக்கு அழைச்சார்

என்ன கொடுமை சரவணன் இது..???!!!!!!!

said...

:))))))))))))))))))))))))))))

said...

யோவ் சென்ஷி லிங்கை மாத்து...

அதை கிளிக் பண்ணா தமிழ்மணத்துக்கு போகுது....

said...

/ கண்ணா.. said...

யோவ் சென்ஷி லிங்கை மாத்து...

அதை கிளிக் பண்ணா தமிழ்மணத்துக்கு போகுது....//

அதுக்கு தானே கொடுத்ததே :)

said...

குசும்பரே

அப்துல் மாலிக் தான் அபு அஃப்ஸர்

அவன் போட்டோ எங்கே ...

அண்ணாச்சி எலெக்‌ஷன்ல நிற்க போறாரோ ...

said...

தல. உங்களையும் மற்ற பிரபல பதிவர்களையும் என்னோட blog-ல் கலாய்சுருக்கேன் .வந்து பாருங்க

said...

:)))))))


//சென்ஷி said...

இதை விடவா உன்னோடது சூப்பரா இருக்குது ;-)//

பயபுள்ள எம்புட்டு டகால்டியா வேலை பாக்குது பாருங்க மக்களே! :)

said...

சந்திரமுகி வந்தப்ப டிரைவரா இருக்குற ஒரு நண்பன், என்னைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திட்டு வந்தான். பச ஸ்டாண்டுல நின்ன என்கிட்டே வந்து என்ன கொடுமை சரவணன் - அப்படின்னு கேட்டான். ஏன் இந்தக் கேள்வின்னு கேட்டேன். டயலாக் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்குன்னு சொல்லிட்டு வேற ஒரு விஷயமும் சொல்லிட்டு போய்ட்டான். அதை பதிவா எழுதப் போறேன். (எங்களுக்கும் கூட்டம் செர்க்கனும்ல?)

அது சரி...சரவணன்னு பேர் வெச்சது எங்க தப்பா? என்ன கொடுமை சரவணன் இது....எல்லாரும் இப்படி கேட்டே கலாய்க்கிறாங்க.

said...

Nice comments!

said...

கடைசி போட்டோ கமெண்ட் கலக்கல் தல.

said...

//இதை விடவா உன்னோடது சூப்பரா இருக்குது ;-)//

பயபுள்ள எம்புட்டு டகால்டியா வேலை பாக்குது பாருங்க மக்களே! :)//

எவ்வளவு டெக்னிகலா யோசிக்கிறாய்ங்க.........

said...

கலை ஆட்டயை போட்டதை பற்றி இன்னும் விரிவாகவே எழுதலாம்.இப்படிக்கு

பதிவர் சந்திப்பில் வடையை பறிகொடுத்த அப்பாவிகள் சங்கம்

அமீரகம்ம்

said...

:))))

said...

//படம் முடிஞ்சதும் பலரும் எஸ்கேப் ஆகியதால் சரியாக யாரிடமும் பேச முடியவில்லை...//

படம் முடிஞ்சதும் வேட்டைக்காரன் பார்க்க எஸ்கேப் ஆனது யாரு? இதுக்கு அதே பரவாயில்லைன்னு போனதா சொல்லிகிட்டாங்களே, அப்படியா?

அதனால அண்ணாச்சி உங்களை ஊரை விட்டு விலக்கி வைக்கிறதா தீர்ப்பெல்லாம் சொன்னாரே?

said...

கொய்யால.. கடசி கமெண்ட் சூப்பர்.. :)))

said...

அடப்பாவி மக்கா இப்படியா சட்டிய வழிச்சி நக்குறது, இதுலே என்னய வேறு பிரியாணி சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தினாங்க, அப்போ மசால் தோசைதானா? ஆஆஅவ்வ்வ்

அந்த கடைசி கமெண்ட் பார்த்தபொரவுதான் மேல் சொன்னது

said...

லாஸ்ட் கமெண்ட் அருமை! (இதையேதான் சஞ்சய் மாபி வேற மாதிரி சொல்றாருல்ல?)

said...

//எதுக்கு கை தட்டுகிறோம் என்றுதெரியாமல் கை தட்டிக்கிட்டே இருந்தோம்!//

அப்பவே உங்களை இரண்டு தட்டு தட்டியிருந்தா சரியா இருந்திருக்கும் ;-)

said...

கலாய்க்கல் தல.

said...

பதிவர் சந்திப்பை பற்றிய கட்டுரை நல்லா இருந்தது , போட்டோ கமெண்ட்ஸ் ரொம்ப அருமை

said...

:-))))

said...

//படம் முடிஞ்சதும் பலரும் எஸ்கேப் ஆகியதால் சரியாக யாரிடமும் பேச முடியவில்லை/

அதேதான் யாரிடமும் அறிமுகப்படுதிக்கலயேன்னு சின்ன வருத்தம்.

தங்களில் குசும்பு ரசிக்கும்படியாக இருக்கு போட்டோக்களில் செய்திருபதை சொன்னேன்..


நாங்களும் போட்டிருக்கோம் பதிவு வந்து பாருங்க..

http://niroodai.blogspot.com/2009/12/blog-post_21.html

said...

சப்பு கொட்ட வெச்சுட்டீங்க.
கடைசி படம் ..ஹா..ஹா..

said...

காலி சட்டிய எல்லா பதிவுலயும் காமிச்சே வெறுப்பேத்துறீங்களேப்பா.

உங்க எல்லாருக்ககும் வயித்த வலிக்க போவுது.

:))))

said...

எல்லாமே கு"பீர்"...

என்கிட்டயிருந்து லெக் பீஸை ஆட்டைய போட்டுட்டு..
பேச்ச பாரு பேச்சை!

said...

//கலை ஆட்டயை போட்டதை பற்றி இன்னும் விரிவாகவே எழுதலாம்.//

அடிங்... நாங்கதான் வடையை பார்சல் கட்டிகிட்டு போனமா???

said...

கலக்கல் கமெண்ட்ஸ்..
வேட்டைக்காரன் டிக்கெட் நல்லவேளை கிடைக்கவில்லை..

said...

எங்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய குசும்பனை வன்மையாக கண்டிக்கிறோம்.

said...

அவருக்கு தோசை எதாவது கிடைச்சுதா ??

said...

வீடியோ சூப்பர் :)

said...

கலக்கல் தல கலை கமெண்டு செம்ம...!

said...

நன்றி பிரதாப்

நன்றி Gulf tamilan

நன்றி சென்ஷி

நன்றி கண்ணா , சென்ஷி லிங் கொடுத்ததே
அதுக்குதானே:)

நன்றி இஸ்மத் பாய்

நன்றி ஆதவா, அது சூதுவாது தெரியாத புள்ள போல

நன்றி ஜமால், வேறு ஒருவர் வந்தார் அவர் பெயர் என்று நினைத்துவிட்டேன்:) சாரி!

நன்றி மோகன் குமார்

நன்றி ஆயில்

நன்றி சரண்

நன்றி கண்ணன்

நன்றி சரவணனக்குமார்

நன்றி ஜெகதீசன்

நன்றி ஹூஸைனம்மா , வேட்டைக்காரனுக்கு
டிக்கெட் ரிசர்வ் செய்யதான் சென்றோம் யாரோ
திரித்து கூறியதால் நாட்டாமை தவறாக தீர்பு
வழங்கிவிட்டார்:)

நன்றி சஞ்சய் மாமோய்

நன்றி அபு அஃப்ஸர், பிரியாணி அனைவருக்கும் இருந்தது
அது சும்மாச்சுக்கும்:)

நன்றி பரிசல்

நன்றி ஜெஸிலா, கை தட்ட தலைக்கு 50 திர்ஹாம் கொடுத்துட்டு
இங்க இப்படி பேசுறீங்க:(


நன்றி நர்சிம்

நன்றி sarusriraj

நன்றி பா.ராஜாராம்

நன்றி மலிக்கா

நன்றி பின்னோக்கி

நன்றி வால்

நன்றி அறிவிலி, அந்த டேஸ்டி பிரியாணி கடையில் இருந்து
வரும் பிரியாணி எப்படி இருக்கும் தெரியுமா? அடா அடா
சான்சே இல்லை:)

நன்றி பீர் முகமது கலை:) வடை திருட்டு, சிக்கன் திருட்டு
என்றாலே நீதான் என்று முடிவாகிவிட்டது.

நன்றி வினோத்கெளதம். ஏன் ராசா?

நன்றி அக்பர் , அது நண்பரின் வேலை:)

நன்றி ரோமியோபாய், அவருக்கும் போனா போவுதுன்னு
கொஞ்சம் இருந்துச்சு:)

நன்றி வெட்டி

நன்றி பிரியமுடன் வசந்த்

said...

நல்லா விமர்சனம் செய்திருக்கீங்க படத்தையும் படவிழாவையும்.. :))

said...

பதிவுகள், பதிவில் உள்ள கமெண்ட், படங்கள் எல்லாம் ரொம்ப அருமை.ரசிக்கும்படியாக‌வும் காம‌டியாக‌வும் இருக்கு,

ஓ சென்னை டேஸ்டி பிரியாணி இந்த போடு போடுதா?

said...

போட்டோவுக்கு போஸ் கொடுக்குறப்போ இனிமே எச்சரிக்கையா இருக்கனும் போல.

கமெண்ட்ஸ் சூப்பர்.

Anonymous said...

கிகிகிகிகிகிகிகிகி

said...

கலக்கல்.

கமெண்ட்ஸில் கொஞ்சம் வீரியம் குறைவு. :-))

said...

நல்ல பதிவு, வாய் விட்டு சிரித்தேன். பாவம் அண்ணாச்சி அவரை இப்படி பிரியானி போட்ட குற்றத்துக்காக அன்னாசி பழம் போல பிழிந்து விட்டீர்கள். நன்றி.

said...

:-)))