Friday, September 18, 2009

உன்னைபோல் ஒருவன் - விமர்சனம்

துபாயில் எப்பொழுதும் ஒரு நாள் முன்னதாகவே புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிவிடுவதால், நேற்று இரவு 10மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்துவிட்டு சென்றோம். கமல் படம் + வென்ஸ்டேயின் ரீமேக் என்பதால்கொஞ்சம் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

எங்கும் எதிலும் குறைவைக்காமல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது, படம் வெளிவரும் முன்பே கமல் நிச்சயம் சொதப்ப போகிறார், இதில் பாட்டு வெச்சது பிளண்டர் மிஸ்டேக் இந்த மாதிரி படத்துக்கு பாட்டு ஒத்துவராது என்று ஆருடம் சொன்னவர்கள் முகத்தில் கரி, படம் பார்க்கும் நமக்கே ஒத்துவரும் ஒத்துவராது என்று தெரிகிறது என்றால் கமல் போல் 50வருடமாக சினிமாவில் வாழும் கலைஞனுக்கு தெரியாதா? படத்தில் பாட்டு கிடையாது. (இரண்டு இடங்களில் மட்டும் ஜானே அல்லா ஒரு நிமிடத்துக்கும் குறைவாக வருகிறது).


ராகவன் மறாராக மோகன்லால், ஹோம் செகரட்டரியாக லெட்சுமி(கொடுமை), இவர்கள் இருவரும் பேசும் இடங்களில் வசனங்கள் பட்டாசு, இங்கு தியேட்டரில் வசனத்துக்கு கைதட்டல் கேட்டது புதுமையாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இரா.முருகன் வசனத்தில் பட்டைய கிளப்பி இருக்கிறார். பிளாக் ஹீயுமர் வகையில் மோகன் லால் லெட்சுமியிடம்பேசும் வசனங்கள் உங்களை அறியாமல் சிரிக்கவைப்பதோடு கை தட்டவும் வைக்கிறது, மிகவும் சென்ஸ்டிவானகளம் இந்த கதை, இதில் கத்தியில் நடப்பதுபோல் வசனங்கள் இரா.முருகனுக்கு மிகப்பெரிய ஓப்பனிங், நிச்சயம்இனி அடுத்து பெரிய பெரிய இயக்குனர்களோடு இவர் பணியாற்ற போவது உறுதி. சில இடங்களில் சறுக்கி இருக்கிறார். குஜராத் பிரச்சினை பற்றி தீவிரவாதி பேசும் வசனத்துக்கு தமிழக பி.ஜே.பியில் இருக்கும் நான்கு பேரும் இன்று படத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வென்ஸ்டேவையும் இதை ஒப்பிட்டு பார்த்து கருத்துசொல்வது தேவையற்றது, தமிழில் சிறப்பாக வந்திருக்கிறது, கடைசியாக உங்க பேர் என்ன சொன்னீங்க என்று நஸ்ருதின் ஷாவிடம் கேட்கும் காட்சி சிறப்பாக இருக்கும் இதில்அது மிஸ்ஸிங். படம் ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடம் ஓடுகிறது.

சுருதி இசையும் பக்காவாக இருக்கிறது முதல் படம் போல் தெரியவே இல்லை, நடஷா ராஜ்குமார் மோகன் லாலிடம் இங்க தம் அடிக்கலாமா என்று கேட்கும் காட்சி போன்றவை ஒரு தேவையற்ற இடைசொருகள். இதுபோல் சின்ன சின்ன குறைகள் தான்.

கலைஞரை படத்தில் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டாங்க:), பாதுகாப்பு காரணங்களுக்காக தீவிரவாதிகளை இடம் மாற்றம் செய்கிறோம் என்றுதமிழில் சொல் CM டீவி பார்த்துக்கிட்டு இருக்கார் என்று சொல்லும் இடம், இனி கடவுள் கையில் தான் இருக்கு என்று மோகன்லால் சொல்லும் பொழுதுCM அடா அடா அவர் ரொம்ப சிக்கலான ஆளாச்சே என்று சொல்லும் இடங்கள் எல்லாம் அருமை. ஆங்கிலத்தில் அதிகம் வரும் வசனங்களை தவிர்த்து இருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.

மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்பது போல் இருக்கிறது. அவசியம் பாருங்கள்.

39 comments:

said...

ஆஹா தலைவா நீங்கள் பார்த்துவிட்டீர்களா? எங்களுக்கு நாளைக்குத்தான்.

said...

என்ன திடீர்னு சினிமா விமர்சனம் கேபிளுக்கு போட்டியா sunday போய் பாக்கணும்

said...

ஸுப்பர் விமர்சனம் குசும்பன்... நான் நாளைக்கு தான் படம் பார்க்க முடியும்.. :(

Anonymous said...

thamizthoughts.blogspot.com/2009/09/blog-post_18.html

said...

இன்னாபா இது குசும்பன் அப்படி, இப்படின்னு நமக்குப் போட்டியா வந்துட்டான்.. அப்ப நம்ம கல்லா கட்ட வேண்டியதுதானா..?

said...

நல்லதொரு நடுநிலையான விமர்சனம் நண்பரே...

said...

நல்ல விமர்சனம்

said...

//கலைஞரை படத்தில் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டாங்க:), //

:)))))))))))

said...
This comment has been removed by the author.
said...

ivvalavu hottaana vimarsanamaa...vimarsanam super

said...

படத்தில வசனம் தான் சூடு என்பது இந்தியில் பார்க்கும் போதே தெரிந்துவிட்டது. நம் டிரையலரிலும் அது தெரிந்தது!

said...

தல நீங்களுமா?

said...

sure boss....

said...

"வெட்னெஸ் டே" படம் பாக்காதவங்க இன்னும் நல்லா ரசிக்க முடியும்னு நினைக்கிறேன்.

said...

படம் நல்லா இருக்கும்போல இருக்கே. அப்போ பதிவுலகத்துல நிறய பேரு விமர்சனம் எழுத மாட்டாங்க.

said...

எங்களை விட்டுபுட்டு பார்த்திட்டீங்களே இந்த படத்தை

சரி
சரியான நடுநிலை விமர்சனம் குசும்பரே

said...

One of the best reviews.

கதை என்னனு சொல்லாம இவ்வளவு அழகா சொல்ல முடியும்னு சொல்லிட்டீங்க :)

said...

அருமை நண்பர் குசும்பன்,
நல்லா சொல்லியிருகீங்க.
ய வெட்னெஸ்டே பார்க்காதவர்களுக்கு இதில் ஒரு ப்ளஸ் பாயிண்ட்.கடைசி வரை சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கும்.
குஜராத் கலவரத்தில் கருசிதைவு செய்யப்பட்ட இசுலாமியப் பெண்ணை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கமல் துப்பாக்கியால் கண்களை துடைப்பார் அருமையான நடிப்பு.மனிதம் தான் முக்கியம் மதம் அல்ல என்பதை நறுக்கென்று கொட்டி சொன்ன படம்.தீவிரவாதிக்கு ஆயுத சப்ளை செய்யும் சந்தானபாரதியை ஒரு இந்துவாக சித்தரித்ததும் சமயோஜிதம்.நம் நாட்டில் சிறுபான்மையினரை தொடர்ந்து குற்றம் சாட்டும் போக்கை இது மாற்றும்.
நல்ல வேளை இந்த படத்திற்கு ஒரு கேசு தான் போட்டனர்,
தசாவதாரம் போல 40 கேசுகள் போட்டால் என்ன ஆயிருக்கும்?படம் ஒரு வருடம் இழுத்திருக்கும்.படத்தில் லாலு அட்டன் பங்கு அற்புதம்.
ஒரு தராசில் இருவர் நடிப்பையும் வைத்தால் இரண்டும் சமம் என்று காட்டும்.அதிரடி போலிஸு ஆசிப்பும் கலக்கியிருந்தார்.
இது போல தரமான இரண்டுமணி நேர படங்கள் நிறைய வரனும்.

நீங்க சொன்னது போல பெண்கள் சிகரெட் பிடிக்க ஆரம்பித்திருப்பதை சகஜமாக்கும் போக்கை அதிகமாக்கும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
லட்சுமி மேக்கப் ரொம்ப பயமுறுத்தியது.
தமிழில் கமலைப் போல ரீமேக்கில் கலக்க ஆள் கிடையாது.
உங்க கலைஞரை கலாய்சிடாங்களே?

said...

//பெண்கள் சிகரெட் பிடிக்க ஆரம்பித்திருப்பதை சகஜமாக்கும் போக்கை அதிகமாக்கும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.//

ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பது போல் சினிமாவில் வரக்கூடாதுன்னு சொன்னதுக்காக வீம்புக்கு இணைத்தது அது!

அப்படி சொன்னவர் யாருன்னு தெரியுமுல்ல!

said...

//எங்கும் எதிலும் குறைவைக்காமல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது, படம் வெளிவரும் முன்பே கமல் நிச்சயம் சொதப்ப போகிறார், இதில் பாட்டு வெச்சது பிளண்டர் மிஸ்டேக் இந்த மாதிரி படத்துக்கு பாட்டு ஒத்துவராது என்று ஆருடம் சொன்னவர்கள் முகத்தில் கரி, படம் பார்க்கும் நமக்கே ஒத்துவரும் ஒத்துவராது என்று தெரிகிறது என்றால் கமல் போல் 50வருடமாக சினிமாவில் வாழும் கலைஞனுக்கு தெரியாதா? படத்தில் பாட்டு கிடையாது.//

அப்படிப் போடுங்க தலைவரே :)

said...

கலக்கல் குசும்பா :-))))

said...

விமர்சனத்துக்கு நன்றி தலைவா!!! கேபிள் கூட பார்க்க வேண்டிய படம்னு சொல்லி இருக்காரு!!

நாளைக்கு காலைல 200 மைல் வண்டி எடுத்து Detroit போய் பார்க்க போறேன்!! DVD-ல பார்க்க மனசு கேட்கல!!

பார்த்துட்டு சொல்றேன்!!

said...

Super review.. :)

Ready my review at http://kaluguppaarvai.blogspot.com/

said...

ரொம்ப காலமாய் ரீடர் ல உங்க பதிவுகளை எல்லாம் படிப்பேன் ...... ஆனால் இது தான் என் முதல் பின்னோட்டம் ....


விமர்சனம் அருமை

said...

உண்மையில் படத்தின் நாயகன் திரு. இரா.முருகன் தான் மனுஷன் கலக்கியிருக்காரு ;))

\\\மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்பது போல் இருக்கிறது. அவசியம் பாருங்கள்\\

அதான் மீண்டும் நாளையும்...;))

said...

நிச்சயம் பார்ப்போம்

said...

விமர்சனம் கச்சிதம்.

said...

அருமை குசும்பரே.. நல்லா சொன்னீங்க.. வசனம், கமல்,மோகன்லால்.. மூன்று முத்துக்கள்..

உங்கள் விமர்சனம் தான் முதலில் வந்தது என நினைக்கிறேன்.. படம் பார்க்காமல் வாசிப்பதில்லை என புக்மார்க் செய்து வைத்து இப்போது தான் வாசித்தேன்..:)

நான் பார்த்தேன் எங்கேயாவது வழமையான குசும்புப் பாணியைக் காட்டிடுவீங்களோ என்று.. ;)

said...

குசும்புகளற்ற ஒரு பதிவு.

:)

said...

குசும்பன் ப்ளாக்தானா இது??

said...

குசும்பா உன் வளர்ச்சி கண்டு பொறுக்காத யாரோ செய்வினை வச்சுட்டாங்க...

said...

டேய் மாப்பி
உடம்பு சரியில்லையா? என்னாச்சு ? ஏன் விமர்சனம் எல்லாம் எழுதுற?

said...

நல்ல விமர்சனம்

said...

படம் பார்க்கலை. பார்த்துட்டு சொல்றனே.

said...

//நான் பார்த்தேன் எங்கேயாவது வழமையான குசும்புப் பாணியைக் காட்டிடுவீங்களோ என்று.. ;)//

ரிபீட்டே சொல்லி ரொம்ப நாளாச்சு:)

said...

:))

said...

கலைஞரை படத்தில் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டாங்க:)

படத்துல எல்லாம் எதார்த்தமா நடிகிறாங்கள்ள .. அதன் அவரையும் எதார்த்தமா காட்டி இருக்காங்க.

said...

நன்றி நன்றி நன்றி! படிச்சு கருத்து சொன்ன மக்கள் அனைவருக்கும் நன்றி!

said...

உங்கள் விமர்சனம் படித்தேன்.
நானும் இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)