Sunday, September 27, 2009

ஸ்வைன் ப்ளூ சில சந்தேகங்கள்???


இங்கே நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ போன வாரம் வந்துவிட்டது, இவர்களும் பயந்து போய் அவர் கூட இருந்த அனைவருக்கும் ஒருவாரத்துக்கு மேல் லீவ் கொடுத்துவிட்டு, ஆபிஸ் பக்கம் வரவேண்டாம் என்று அனைவரையும் சொல்லி விட்டார்கள்.
அவரை இங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள், இங்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பது இல்லை என்று சொல்லி அரசு மருத்துமனைக்கு அழைத்து செல்ல சொல்லி இருக்கிறார்கள், அங்கு சென்றதும் டாக்டர்கள் ரொம்ப கூலாக ஒன்னும் பயப்படவேண்டியது இல்லை, தனியாக இவரை ஒருவாரம் வைத்திருங்கள் இந்த மாத்திரைகளை எல்லாம் கொடுங்கள் சாதாரண ப்ளூ மாதிரிதான் இதுவும் சரி ஆகிவிடும். குழந்தைகள், கர்பிணிகளுக்குதான் பாதிப்பு அதிகம் கொஞ்சம் அதிகம் கேர் எடுத்துக்கனும் என்று சொல்லிவிட்டு மாத்திரைகள் கொடுத்து இருக்கிறார்கள், இப்பொழுது ஒருவாரத்தில் நல்ல அவருக்கு பரவாயில்லையாம், அடுத்த வாரத்தில் இருந்து வேலைக்கு வரலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க ஏன் இத்தனை பீதி? எது உண்மை?

இங்கு நேற்றுமுதல் ஒரு லோக்கல் கமெணிக்கு ஸ்வைன் ப்ளூவுக்கான மருந்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார்கள், இங்கு இனி அந்த லோக்கல் கம்பெணிதான் ஸ்வைன் ப்ளூவுக்கான மருந்தை தயாரிக்க போகிறது. நம்மை விட மருத்துவதுறையில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று சொல்லமுடியாது அப்படி இருந்தும் இவர்களால் தயாரிக்கும் பொழுது நாம் ஏன் வெளிநாடில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும்?

22 comments:

said...

எனக்கு தெரிஞ்ச Staff Nurse ஒருத்தவங்க துபாய் ஹாஸ்பிடல்ல வேலை பாக்குறாங்க. அவங்களும் இதெல்லாம் ரொம்ப சாதாரணம்தான்னு சொல்றாங்க. இந்தியாவுலதான் ரொம்ப பயமுறுத்துறாங்க.

said...

ஒருவேளை இந்திய அரசாங்கம், ஸ்வைன் ஃப்ளூ வெளிநாட்டுலேந்து வந்த நோய்ங்கறதால மருந்தையும் வெளிநாட்டுலயே தேடுறாங்களோ என்னமோ?!

said...

குசும்பரே.. அதுக்கெல்லாம் மருந்துக்கம்பெனிக செய்ய வேண்டியத(??) செய்யனுமாம் :)

said...

அதானே!

said...

****
ஒருவேளை இந்திய அரசாங்கம், ஸ்வைன் ஃப்ளூ வெளிநாட்டுலேந்து வந்த நோய்ங்கறதால மருந்தையும் வெளிநாட்டுலயே தேடுறாங்களோ என்னமோ?!
*****

:)-

said...

உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளை எப்படிதான் விற்கிறது?

said...

இதுவும் சாதாரண் ஃப்ளூ போல்தான். ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்பது உண்மையே. ஆனால் எளிதில் பரவும் மற்றும் இதயக் கோளாறு,மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு ஆபத்தான விஷயம். எனவேதான் இந்த அலப்பறை. வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு அதிகம்.
சாதரண ஆரோக்கியமான மனிதர்களுக்கு வந்தால் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டால் மட்டும் போதும்.

இந்தியாவில் மட்டும் பயமுறுத்துகிறார்கள் என்பது உண்மையல்ல. இங்கே சிங்கப்பூரிலும் ஏக களேபரம் நடந்தது.

said...

//அப்படி இருந்தும் இவர்களால் தயாரிக்கும் பொழுது நாம் ஏன் வெளிநாடில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும்?

//

தம்பி குசும்பா நீ இன்னும் அரசியல் நிறைய கத்துக்கோணும். உள்ளூர் கம்பெனி தயாரிப்ப வாங்குனா அமைச்சரு கட்டிங்கா நம்பூரு ரூவாயைத்தான் வாங்கோணும்.அப்பிடி வாங்குற ரூவாயை கணக்குன வைக்கிறது கஷ்டம். அடுத்த ஆட்சி வந்து அந்த பணத்தை கண்டுபுடுச்சா அதுவேற ஒரு தனி தலைவலி. அதுக்குபதிலா வெளிநாட்டு கம்பெனிகிட்ட பர்சேஸ் போட்டா கட்டிங் டாலரா அவன் நாட்டுலேந்து சுவிஸ்சுக்கு அய்யா அகவுண்ட்டுக்கு போயிரும். இங்கயும் எந்த நாய்க்கும் கணக்குகாட்டாம அமைச்சர் அய்யா நிம்மதியா இருக்கலாம். இப்பபிரியிதா சூட்சமம்??

said...

ஒருவேளை இந்திய அரசாங்கம், ஸ்வைன் ஃப்ளூ வெளிநாட்டுலேந்து வந்த நோய்ங்கறதால மருந்தையும் வெளிநாட்டுலயே தேடுறாங்களோ என்னமோ?!
//

கலக்கல் சென்ஷி :)

said...

உலக சுகாதார மையம் பன்றிக் காய்ச்சலுக்கு pandemic level 6 அபாய அளவு கொடுத்திருக்கிறது என்றால் சாதாரண விஷயமில்லை.

WHO Report

படித்துப் பாருங்கள். அப்புறமாக கருத்து கேட்கவோ / சொல்லவோ செல்லுங்கள். :)

said...

அடிப்படை வசதியில்லாத, இதைப்பற்றி சரியான தகவல் தெரியாத கடைக்கோடி மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். உடனடி சிகிச்சை எடுத்தால் பரவாயில்லை..அதுவே சற்று காலம்தாழ்ந்தால் விபரீதம்தான்.

said...

இந்தியா மட்டுமல்ல, எல்லா ஊரிலும் பயந்துதான் இருக்காங்க.

said...

அப்படிதான் இருக்கு இந்த நோய். ஆனால் மிகச்சிலர் கொடுத்து வைக்காதவர்கள், எனக்கு தெரிந்த ஒருவரின் மனைவி, இன்று இந்த நோயால் இறந்து போனார் பாவம். காய்ச்சல் வரவே இல்லை. காலையில் அசதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார், சாயந்திரம் கடுமையான மூச்சு திணறல் மூன்று நாட்களில் இறந்துவிட்டார். ஆறு மாத பெண் குழந்தை இருக்கு, திருமணம் ஆகி ஒன்றரை வருடம் தான் ஆகிறது. அன்னாரின் குடும்பத்துக்கு ஏன் ஆழ்ந்த அனுதாபங்கள்.

said...

நம்ம பயலுகளுக்கு இந்த அறிவெல்லாம் கிடையாதுங்க. எல்லாம் ஊழல் பெருச்சாளிங்க.

said...

ம்ம்ம்.......
உண்மையில் இப்படியான பீதிக்கு காரணம் ஒரு வகையான அறியாமையும் பென்னாம் பெரிய பயமும் தான்,வேறொன்றுமில்லை குசும்பரே

ஆனால் உங்கள் கேள்வியின் அர்த்தம் வாசகர்களுக்கு புரிந்திருக்கும்

said...

அறியாத புள்ள கேள்வி கேக்குது... யாராவது பதில் தெரிஞ்சா சொல்லுங்கப்பா!!

said...

எல்லாத்துலயும் அரசியல் இருக்கு!

said...

என்ன அங்கு கிடைக்குதா? அதை வாங்கி அப்படியே இந்தியாவுக்கு ஏற்றுமதி பண்ணி 4 காசை பாப்பீங்களா,இந்த மாதிரி பதிவு போட்டு வர வரலட்சுமியை விரட்டுகிறீர்களே!! :-))

said...

திரு.மதிமாறன் வலைத்தளத்திலிருந்து ஸ்வைன்ப்ளு மருந்து தயாரிக்கவென பேடண்ட் பெற்ற இரண்டு கம்பெனிகள் எவ்வாறெல்லாம் இலாபங்களை வாரிக்குவிக்கின்றன பின்னர் பேருக்கு மிகச் சிலவற்றை தானமாகக் கொடுத்து பெயர் பெறுகின்றன எனவும் படித்ததாக நினைவு.

மற்றபடி இந்தியாவின் ஒரு மருந்து நிறுவனம் இந்நோய்க்கு ஒரு மருந்தைத் தயாரித்து விற்பதாகவும், பேடண்ட் விதிகளிலிருந்து சிறிது விலக்கு பெற்று அதை இந்தியாவில் மட்டும் விற்றுக் கொள்ள உலக நிறுவன அனுமதி பெற்றுள்ளதாகவும் எங்கோ படித்த நினைவு. சிறிது தேடிப் பாருங்கள் குசும்பரே.

said...

எல்லா நாட்டுலையும் பயமுறுத்தல் இருக்கத்தான் செயுது...இங்க அமெரிக்காவுலையும் கூட!!!

//ஒருவேளை இந்திய அரசாங்கம், ஸ்வைன் ஃப்ளூ வெளிநாட்டுலேந்து வந்த நோய்ங்கறதால மருந்தையும் வெளிநாட்டுலயே தேடுறாங்களோ என்னமோ?//

இது அருமை சென்ஷி!!!

said...

கார்த்திக்

சென்ஷி

ச.செந்தில்வேலன்

நான் ஆதவன்

மணிகண்டன்

அபுஅஃப்ஸர்

அறிவிலி

எம்.எம்.அப்துல்லா

மின்னுது மின்னல்

Sridhar Narayanan

கும்க்கி

மஞ்சூர் ராசா

சித்து

பாலகுமாரன்

கரவைக்குரல்

கலையரசன்

வால்பையன்

வடுவூர் குமார்

சுல்தான்

செந்தில் நாதன் அனைவருக்கும் நன்றி சாமியோவ்

said...

/
சென்ஷி said...

ஒருவேளை இந்திய அரசாங்கம், ஸ்வைன் ஃப்ளூ வெளிநாட்டுலேந்து வந்த நோய்ங்கறதால மருந்தையும் வெளிநாட்டுலயே தேடுறாங்களோ என்னமோ?!
/

கரெக்ட் சென்ஷி!
சூப்பர்!