Monday, February 18, 2008

முயல் முயல் & முயல் முயல் = முயல் முயல் முயல் முயல் முயல் முயல்

நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில், ஒரு பெரிய ரூம் முழுவதும் சிறிதும் பெரிதுமாக பல முயல்கள் தத்தி தத்தி ஓடிக்கிட்டு இருக்கும் லேசாக கதவைதிறந்து ஒரு கண்ணை அதில் வைத்து பார்த்த பொழுது அழகான காஷ்மீர் பனி கட்டி போல வெள்ளை வெளேர் என்று அழகாக பின் கால்களால் உட்கார்ந்து கொண்டு முன் இரு கால்களைகொண்டு முகத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தது, நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது, அதை பிடிக்க குனிந்த பொழுதுதத்தி ஓடிவிட்டது. அத்தை இரு என்று சொல்லிவிட்டு உள்ளே போய் அதை காதை பிடித்து தூக்கி கொண்டு வந்தார்கள்.
அது அப்படியே பாவமாக முகத்தை வைத்து கொண்டு தொங்கியதை பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது அத்தை அதுக்கு வலிக்க போவுது இங்க கொடுங்க என்று கோயிலில்சுண்டலுக்கு கை நீட்டுவது போல் நீட்டினேன், அத்தை உடம்மை புடிச்சு தூக்க கூடாது தூக்கினால் செத்துவிடும் அதான் காதை புடிச்சு தூக்க வேண்டும் என்றார்கள் பின் காதைபுடிச்சு தூக்கினேன். அழகான அரிசி போல் சிறு சிறு பற்கள், சிகப்பு கலரில் கண் , சர்ப் எக்ஸெல் போட்டு துவைத்ததுபோல் வெண்மையான புசு புசு முடி, கடிக்குமா கடிக்காதஎன்ற பயம் இருந்தது அத்தையிடம் கேட்டேன் கடிக்காது என்றார்கள், பின் அதை மெதுவாக கீழே இறக்கிவிட்டேன் குடு குடுன்னு ஓடி போய் ஒரு மூலையில் உட்காந்து கொண்டது.நானும் ஓடி போய் அது வெளியே போக முடியாத படி குறுக்க படுத்துக்கிட்டு தொட்டு தடவி கொடுத்தேன் அங்கு இருந்த ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு நான் தான்அதுக்கு கேரட்,கல்யாண முருங்கை இலை எல்லாம் கொடுப்பேன். கேரட்டை முன் கால்களால் வாங்கி நறுக் புறுக் என்று சமத்தா சாப்பிட்டுவிட்டு என் அருகில் வந்து அமர்ந்துகொள்ளும்.

ஊருக்கு புறப்படும் பொழுது அத்தை எனக்கும் முயல் கொடுங்க நான் வளர்கிறேன் என்றேன் வீட்டில் எங்க இடம் இருக்கு அது எல்லாம் முடியாது என்றார்கள் அம்மா, அப்பா நாம ஒரு கூண்டுசெஞ்சு பிறகு வந்து எடுத்துக்கிட்டு போகலாம் இல்லை பூனை கடிச்சுடும் என்றார்கள் சரி என்று வீட்டுக்கு வந்து ஒருவாரத்தில் அழுது அடம் புடிச்சு கூண்டு ரெடி ஆனது.போய் முதல் வேளையாக இரு ஜோடி முயலை தூக்கிட்டு வந்தேன். அதன் பிறகு விளையாடும் நேரம் குறைந்தது எப்பொழுதும் படிக்கும் நேரம் குறைவே அதிலும் மேலும் குறைந்தது.

வீட்டு வேலையாள் கூட அலக்கு எடுத்து போய் கல்யாண முருங்கை இலை பறிச்சு எடுத்துவந்து அதை மோட்டார் செட் தொட்டியில் போட்டு ஒரு ஒரு இலையாக அலசிபூச்சு,மொசுக்கட்டை இல்லாமல் எடுத்து ஒன்று ஒன்றாக அதுங்களுக்கு ஊட்டிவிடுவேன் வேறு யாராவது கூண்டை திறந்தா அந்த மூலைக்கு ஓடிவிடும் நான் திறந்தால் மட்டும் ஓடி கிட்டக்க வரும் அதில் ஒன்னு ரெண்டை புடிச்சு வீட்டுக்குள் எடுத்து வந்து ஓடவிட்டு அதன் பின் ஓடி, தவ்வி தவ்வி நானும் அதுங்களோடு ஒரு முயல் போல் விளையாடுவேன்.வீட்டில் அம்மா வாங்கும் கேரட்டையும் அம்மாவுக்கு தெரியாமல் நைசாக எடுத்து போய் அதுங்களுக்கு கொடுப்பேன்.

கூண்டை சுத்தம் செய்யும் பொழுது அம்மா எல்லா முயலையும் எடுத்து வீட்டில் விட்டு விட்டு கூண்டை சுத்தம் செய்வார்கள், சில சமயம் நான் தூங்கி கொண்டு இருந்தாலும்என் அருகில் வந்து முகத்தை உரசி கொண்டு என் அருகில் வந்து உட்கார்ந்துக்கொள்ளும். எனக்கு முன்னாடி யாரும் என் முயல்களை காதை பிடித்து தூக்கிவிட முடியாது.

ஒரு இரண்டு மூன்று மாதம் ஆனது ஒரு முயல் வயிறு மட்டும் பெரியதானது அம்மா சொன்னாங்க டேய் உன் முயல் குட்டி போட போவுது இன்னு ஒரு மாசத்தில் என்றார்கள், ஒரு நாள் பள்ளி கூடம் விட்டு திரும்ப வரும் பொழுது அம்மா கண்ணை பொத்தி அழைத்து சென்று ஒரு அட்டை பெட்டியினை காட்டினார்கள் கண் திறந்தால் அதனுள் பஞ்சு போட்டு அதன் மேல் ஒரு வெள்ளை துணி போட்டு அதில் மிகவும் சிறிதாக எலி குட்டி போல் முடியே இல்லாமல் நான்கு குட்டிகள்உடம்பில் உள்ளே இருக்கு சிறு சிறு நரம்புகள் கூட தெரிந்தது கண்ணே திறக்காமல் நான்கும் ஒன்றேடு ஒன்று ஒட்டியபடி படுத்து கிடந்தன. சிறு எறும்பு கடித்தாலும்இறந்துவிடும் என்று பெட்டியை சுத்தி எறும்பு மருந்து போட்டு பெட்டி மேல் வழியா ஏதும் பூச்சு விழாமல் இருக்க அதை பழய கொசுவலை கொண்டு மூடி பத்திரமாகபாதுகாத்து வைத்தோம்.

சின்ன சின்ன குட்டிங்களுக்கு பசிக்கும் பொழுது அம்மா அந்த பெரிய முயலை பிடிச்சு வந்து காலில் மல்லாக்க போட்டு அந்த சிறு குட்டிகளை எடுத்து அதன்வயிற்றின் மேல் விடுவார்கள் முடிகளின் உள்ளே மறைந்து இருக்கும் பால் காம்புகளை எப்படிதான் தேடி கண்டு பிடிக்கும் என்று தெரியாது, தேடி சமத்தாகபால் குடிச்சுவிட்டு ஏதோ ரொம்ப பெரிய வேலை செஞ்சு டயர்ட் ஆனமாதிரி அங்கேயே படுத்து விடுவார்கள், பின் அதை எடுத்து திரும்ப டப்பாவில் விடுவார்கள்,ஒரு முறை நான் ஆசை பட்டேன் என்று என் காலில் பெரிய முயலை போட்டு பால் கொடுக்கவைத்தார்கள் , ஒரு வாரத்தில் நான்கில் ஒன்று இறந்து போனது.பின் மூன்றும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரியதானது.

இப்படி ஒரு ஆறு மாதத்தில் நான்கு ஜோடிக்கும் மேல் அதிகம் ஆனது அம்மா சொன்னார்கள் ஒரு முயலை 50 ரூபாய்க்கு கேட்கிறார்கள் நம்மிடம் நிறைய இருக்கிறதேகொடுத்துவிடலாம் என்றார்கள் நானும் சரி என்றேன், மறுநாள் அம்மா முயலை வித்த காசு உண்டியலில் போட்டுவை என்று 50 கொடுத்தார்கள்சித்தப்பா வீட்டில் இருந்து சாப்பிட அழைத்து சென்றார்கள் கறி சாதம் சாப்பிட்ட பின் சொன்னார்கள்இது ஆட்டு கறி இல்லை முயல் கறி என்று அன்று நான் அழுத அழுகை வீட்டில் போட்ட சண்டை அன்று இரவு சாப்பிடாமல் அழுதுக்கொண்டே தூங்கினேன்...மறுநாள் இனி முயலே வேண்டாம் என்று எல்லாத்தையும் எடுத்து போய் அத்தை வீட்டில் விட்டு விட்டு வந்துவிட்டேன்.

எங்கேயாவது முயலை டீவியில் பார்த்தாலும் நான் வளர்த்த முயல்களும் அதோடு நான் விளையாடிய நாட்களும் நினைவுக்கு வரும்.

21 comments:

said...

இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே!!!
முயல் தப்புமா?? என் இளவயதிலும் இப்படி ?? நிறைய அழுகைகள் உண்டு.

said...

குசும்பா சேம் ப்ளட், ஆனா எனக்கு கோழி வளர்த்தபோதும், புறா வளர்த்தபோதும்தான் இதெல்லாம் நடந்திருக்கிறது.

said...

ஆனால் சின்னவயசுல காட்டுமுயலை மட்டுமே தெரிஞ்சதால எனக்கு காட்டுமுயலை பாத்துட்டா எப்படி அத அடிக்கறதுன்னுதான் புத்தி போவும் அப்போல்லாம்

said...

காட்டு முயல்கள் வேறு வண்ணங்களில் இருக்கும். ஆனால் வெள்ளை முயல்கள் தான் அழகு.

முயல் கதை முத்தாக இருக்கிறது.

said...

குசும்பன்,

முயல், ஆடு, கோழி எதுவும் இதனால் தான் வளர்ப்பதே இல்லை, வளர்த்து அடித்து சாப்பிடுவது சகிக்க முடியாதது.நான் ரொம்ப நாள் சிக்கன் சாப்பிடாமல் இருந்ததுக்கு காரணமே இது தான், இப்போ ஒரு இரண்டு வருடமாக சிக்கன் சாப்பிடுகிறேன்(சரக்கடிக்கும் போது மட்டும், மற்ற நேரத்தில் பியூர் வெஜ் :-))).

said...

/நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில்/

இந்த வரிகளுக்கு ஒரே ஒரு அர்த்தம்தானே?

said...

முயல் வேண்டாம் என்று அழுதீர்கள்... ஆனால் நீங்கள் பல நல்ல விஷயங்களை முயல வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்....:-)

said...

கொன்னா பாவம் தின்னாப்போச்சுன்னு கதை சொல்லுவாங்க அது மாதிரி பாசமா வளர்த்து சாப்பிட்டுட்டீங்களா >? அய்யோ பாவம்..

said...

ஆகா...அண்ணே அருமையான கொசுவத்தி பதிவுண்ணே ;)

\\ நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது\\

அதற்க்கு பிறகு இறந்தது ;))

said...

நல்லா அனுபவிச்சு எழுதிருக்கீங்க...

said...

குசும்பனுக்குரிய ஏதாவது அடையாளம் டிஸ்கியாகவாவது இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம் எப்போதாவது இப்படி நடக்கும் போல.

said...

// கோபிநாத் said..
\\ நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது\\

அதற்க்கு பிறகு இறந்தது ;))//
இவ்ளோ பவரா? மயக்கமே வருது :)

said...

தமிழ் பிரியன் said...
// கோபிநாத் said..
\\ நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது\\

அதற்க்கு பிறகு இறந்தது ;))//
இவ்ளோ பவரா? மயக்கமே வருது :)

சூரியன்னுக்கே டார்ச்ச !

said...

ஹ்ம்ம்... நானும் ஆடு வளர்த்து அதன் குட்டிகள், எருமை வளர்த்து, தொடர்ந்து அதன் கன்றுகள் (என்ன காரணத்தாலோ) இறக்கும்போது, கண்கலங்கி இருக்கிறேன். கோழி வளர்த்து, அது சாகடிக்கப் படும்போது மட்டும் எஸ்ஸாயிடுவேன். அப்புறம் சாப்பிடும்போது பிரச்சினை வரக்கூடாதுல்ல?

said...

நல்லா சுத்தீருக்கீங்க.

ஆடு, கோழி, நாய், பூனைனு நெறைய வளத்தேன். எல்லாதுக்கு பேர் வச்சிருப்பேன்.

நாயையும், பூனையையும் விட்டுட்டு மீதி எல்லாம் சாப்பிட்டாங்கப்பா.

கேட்டா பழமொழி சொல்றாங்க.
கொன்னா பாவம் தின்னா போச்சுனு சொல்வாங்க.

Anonymous said...

nalla post. enga pasanga schoollil(kg)class room pakathulaye muyal koondu.enga paiyan daily carrot ,cabage illana biscuit kudunu kekkuthu.
-isthri potti thangamani

said...

வாங்க யோகன் பாரிஸ் நீங்க சொல்வதும் சரிதான்.

*************************

நந்து உங்களுக்குமா?

காட்டு முயல் ரொம்ப பெருசா இருக்குமா?

**************************

நன்றி மஞ்சூரார்:)

**************************

வவ்வால் சரக்கடிக்கும் பொழுது மட்டும் நான் வெஜ் என்றால் அப்ப தினமும் நான் வெஜ்ஜா இல்லை வாரம் ஒரு முறை மட்டுமா?:)))

***************************

மிதக்கும்வெளி ஐய்யா அதுக்கு ஒரெ ஒரு அர்த்தம் தான் ஆமாம் வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்???:)))))

***************************
ச்சின்னப் பையன் என்ன மாதிரி முயல வேண்டும்? என்று ஆசை படுகிறீர்கள்!!!

**************************

கயல்விழி முத்துலெட்சுமி said...
கொன்னா பாவம் தின்னாப்போச்சுன்னு கதை சொல்லுவாங்க ///

அப்படி இல்லீங்க எனக்கு தெரியாம நடந்து போச்சு:(((

****************************
கோபி அப்படியும் சொல்லலாம்:))))

*****************************
ஆமாம் பாச மலர் முயல்கள் மேல் இருந்த பிரியம் தான் ரொம்ப பெருசா எழுதவைத்துவிட்டது:))

*******************************
தமிழ் பிரியன் நீங்களும் துபாயா?

அப்ப அப்ப இப்படி நடக்கும் கண்டுக்காதீங்க:))))

******************************

கார்த்திக் said...
இவ்ளோ பவரா? மயக்கமே வருது :)

சூரியன்னுக்கே டார்ச்ச //

நீங்க இன்னும் என் போட்டோவை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் சூரியன் இல்லை அம்மாவாசை:))))

******************************
தஞ்சாவூரான் சேம் பிளட்:)))

********************************

நன்றி JK

************************
நன்றி அனானி

***************************

said...

நல்ல பதிவு. அனுபவபூர்வமான தகவல்கள். வாழ்த்துக்கள்.

// சிறு எறும்பு கடித்தாலும்இறந்துவிடும் என்று பெட்டியை சுத்தி எறும்பு மருந்து போட்டு பெட்டி மேல் வழியா ஏதும் பூச்சு விழாமல் இருக்க அதை பழய கொசுவலை கொண்டு மூடி பத்திரமாகபாதுகாத்து வைத்தோம் //

நிஜமாகவே அவ்வளவு மென்மையானது முயல்.

said...

மனதைத் தொடும் பதிவு.

said...

//RATHNESH said...
நல்ல பதிவு. அனுபவபூர்வமான தகவல்கள். வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி

//நிஜமாகவே அவ்வளவு மென்மையானது முயல்.//

ஆமாங்க பிறந்த முயல் குட்டியை யாரும் பார்த்து இருந்தால் தான் தெரியும்.

****************************
வெங்கட்ராமன் said...
மனதைத் தொடும் பதிவு.//

நன்றி வெங்கட் எங்க அப்ப அப்ப காணாமல் போய்விடுகிறீர்கள்

************************

said...

//
/நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில்/

இந்த வரிகளுக்கு ஒரே ஒரு அர்த்தம்தானே?
//
ithu ulkutha...