Friday, February 8, 2008

என்ன கொடுமைங்க இது? பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லுங்க



காலையில் அனானி ஒருவரும், துளசி டீச்சரும் ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தார்கள் என்னா மேட்டர் என்றால், ஆம்லேட் கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி பற்றிய செய்தியின் சுட்டியை கொடுத்து இருந்தாங்க, ஒரு வாரம் முன்புதான் ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?


என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தேன், அதற்கு இது ஆணிய சிந்தனை ,இது புனைவு என்று எல்லாம் பெண் வலைபதிவர்கள் சொல்லிவிட்டு சென்றார்கள் இப்பொழுது இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்.


இதுல பார்த்தீங்கன்னா அவன் ஆம்லேட் போட சொல்லி கேட்டுவிட்டு மனைவிக்கு வெங்காயமும் வெட்டிக்கிட்டு இருந்து இருக்கான் அப்பொழுதுதான் அந்த கத்திய பிடுங்கி குத்தி இருக்காங்க. ஒருவேளை செய்தி தவறாக இருக்குமோ ஆம்லேட் போட லேட் ஆனதால் குத்தி இருப்பாங்களோ!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இனி ஆம்லேட் போட சொல்லி கேட்கபிடாது, அவுங்களுக்கா மூட் இருந்து செஞ்சு கொடுத்தா சாப்பிடனும் இல்லையா பேசாம சாப்பிட்டு விட்டு படுத்துவிடனும். ஆம்லேட் கேட்டா இனி லேட். xyz என்று ஆக சாத்திய கூறு அதிகம் இருப்பதாக ஆலமர ஜோசியர் சொல்கிறார்.

ஹிந்து பேப்பரில் வந்தது (நன்றி அனானி).

டிஸ்கி:

1) மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்....

2) பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணுமேல ஆசை..

32 comments:

ஜெகதீசன் said...

:))ஆம்லெட் ன்னுற வார்த்தையையே மறந்துட்டேன் நான்....
:P

களவாணி said...

உங்களுக்கு செம "தொலைநோக்குப் பார்வை" தல...

கல்யாணம் ஆனவங்களோட மன நிலையப் பத்தி சும்மா புட்டு புட்டு ஆம்லெட் வக்கிறீங்க...

மனைவியிடம் ஆம்லெட் கேட்கும் கனவாண்களே உஷார்.

இது என்ன கொடுமைனே தெரியலீங்க...

பாச மலர் / Paasa Malar said...

இப்படியும் ஒரு பெண்ணா?

இது மட்டும் இல்லை வேறு காரணம் இருந்திருக்கலாம்..

(கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் ரொம்ப நல்லவங்கதான்..அச்சு அசலாய் என் பெயர் அப்படியே வச்சுருக்காங்களே)

Sanjai Gandhi said...

அடப் பாவிகளா.. அசைவத்துல நான் சாபிடறது இந்த ஆம்லெட் மட்டும் தான். அதுவும் ஒரு நாளைக்கு 2 தான். அப்போ கல்யாணத்துக்கு( இப்படி ஒரு சம்பவம் நடந்தால்) பிறகு இதையும் விடனுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((

ரசிகன் said...

//1) மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்....

2) பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணுமேல ஆசை..//

அவ்வ்வ்... மாம்ஸ் இதுதான் ஹைலைட்டு.. டாப்பு.....
:))

குசும்பன் said...

ஜெகதீசன் said...
:))ஆம்லெட் ன்னுற வார்த்தையையே மறந்துட்டேன் நான்....
:P////

குட் பாய்!!!

**************************
delphine said...
வெங்காயத்தை மட்டும் வச்சு எப்படி ஆம்லெட் போட முடியும்? எண்ணையும் தேவைதானே? பரவாயில்லை அந்த டீச்சர். பாராட்டுக்குரியவள்.சரவணா என்ன ஒரு ஆராய்ச்சி...நோபல் பரிசு கொடுக்க வேண்டிய ஒரு பதிவு. ம்ம்..
:(///

எண்ணையும் இருந்து இருந்தா கொதிக்கவெச்சு வறுத்து எடுத்து இருப்பாங்க புருசனை அம்மே ஏன் இந்த விளையாட்டு நான் இனி சைவம் சைவம் சைவம்!!!

****************************
செந்தில் said...

இது என்ன கொடுமைனே தெரியலீங்க...///

அப்பாவி கணவன் கொடுமை தடுப்பு சட்டம் என்று ஒன்று வேண்டும்!!!

****************************
பாச மலர் said...
இப்படியும் ஒரு பெண்ணா?

இது மட்டும் இல்லை வேறு காரணம் இருந்திருக்கலாம்..///

இருந்து இருக்கும் வெங்காயத்தை மெதுவாக வெட்டியது? தோசை மாவை ஒழுங்காக அரைத்து வைக்காதது, துவைத்த் புடவையை மடித்து வைக்காதது என்று பல குற்றங்கள் செய்து இருப்பார்!!!

என்ன பாசமலர் சரிதானே!!!

***************************
SanJai said...
அடப் பாவிகளா.. அசைவத்துல நான் சாபிடறது இந்த ஆம்லெட் மட்டும் தான். அதுவும் ஒரு நாளைக்கு 2 தான். அப்போ கல்யாணத்துக்கு( இப்படி ஒரு சம்பவம் நடந்தால்) பிறகு இதையும் விடனுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((///

தம்பி ஒரு ஆம்லேட் கேட்டதுக்கே இம்புட்டு சேதாரம், தினம் இரண்டு ஆம்லேட்டா!!! ஹா ஹா ஹா ஹா

உண்மைத்தமிழன் said...

அந்தக் கவிதா எத்தனை நாள் கோபத்தை அடக்கி வைச்சிருந்தாங்கன்னு தெரியலையே.. பாவம்தான் ரெண்டு பேரும்..

Anonymous said...

இதுக்குதான் போலீஸ்காரன் வூட்டுலே
பொண்ணு கட்டக்கூடாது இன்றது..

நந்து f/o நிலா said...

குசும்பா இதெல்லாம் சாம்பிள் நியூஸ்தான். கல்யானம் பண்ணிப்பாரு வெளில சொல்லக்கூட முடியாம எத்தனை பேரு மாட்டிகிட்டு முழிக்கிறானுங்கன்னு அனுபவப்பூர்வமா தெரிஞ்சுக்குவ,

பி.கு லவ் மேரேஜ் பண்றவனுக்குத்தான் சேதாரம் எப்பவும் அதிகமா இருக்குமாம்

மங்களூர் சிவா said...

//
நந்து f/o நிலா said...
குசும்பா இதெல்லாம் சாம்பிள் நியூஸ்தான். கல்யானம் பண்ணிப்பாரு வெளில சொல்லக்கூட முடியாம எத்தனை பேரு மாட்டிகிட்டு முழிக்கிறானுங்கன்னு அனுபவப்பூர்வமா தெரிஞ்சுக்குவ,

பி.கு லவ் மேரேஜ் பண்றவனுக்குத்தான் சேதாரம் எப்பவும் அதிகமா இருக்குமாம்

//
அனுபவஸ்தர்கள் சொன்னா கரெக்டாதான் இருக்கும்.

மங்களூர் சிவா said...

//
செந்தில் said...

மனைவியிடம் ஆம்லெட் கேட்கும் கனவாண்களே உஷார்.

இது என்ன கொடுமைனே தெரியலீங்க...

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

//
ஜெகதீசன் said...
:))ஆம்லெட் ன்னுற வார்த்தையையே மறந்துட்டேன் நான்....
:P
//

ஆம்லெட்டா அப்டினா என்ன????

கைப்புள்ள said...

//ஒருவேளை செய்தி தவறாக இருக்குமோ ஆம்லேட் போட லேட் ஆனதால் குத்தி இருப்பாங்களோ!//

இது பன்ச் :)

ஆம்லெட்டில் அடங்கும் வாழ்க்கையடா :(

Anonymous said...

//பி.கு லவ் மேரேஜ் பண்றவனுக்குத்தான் சேதாரம் எப்பவும் அதிகமா இருக்குமாம்//

மேரேஜ் பண்ணிட்டு காதலிக்கிறவங்களுக்கு( அட பொண்டாட்டிய தானுங்க) அதைவிட கடுமையான சேதாரம் இருக்கிறதே. :P

குசும்பன் said...

ரசிகன் said...
அவ்வ்வ்... மாம்ஸ் இதுதான் ஹைலைட்டு.. டாப்பு.....
:))//

ஹி ஹி இதை இன்னும் ரெண்டுமாசம் கழிச்சு நான் சொன்னா என் டாப்பு எகிறிடுங்கோ:)))

******************************
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அந்தக் கவிதா எத்தனை நாள் கோபத்தை அடக்கி வைச்சிருந்தாங்கன்னு தெரியலையே.. பாவம்தான் ரெண்டு பேரும்..///

என்னங்க குத்தினதுக்கு அப்புறமும் திட்டிக்கிட்டு இருந்து இருக்காங்க அம்புட்டு கோவமா!!!

*****************************
நல்லவனே அப்படி சொல்லிட முடியாது, சிலர் மிகவும் அமைதியாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்!

******************************
மங்களூர் சிவா said...

அனுபவஸ்தர்கள் சொன்னா கரெக்டாதான் இருக்கும்.//

அவரை அனுபவஸ்தர் அவஸ்த்தைகளை அனுபவிக்கிறார் என்று சொல்றீங்களா சிவா? அடுத்த முறை வீட்டுக்கு போகும் பொழுது "நல்லா கவனிச்சு" அனுப்ப சொல்லுறேன்!:)))

***************************
கைப்புள்ள said...
//ஒருவேளை செய்தி தவறாக இருக்குமோ ஆம்லேட் போட லேட் ஆனதால் குத்தி இருப்பாங்களோ!//

இது பன்ச் :)

ஆம்லெட்டில் அடங்கும் வாழ்க்கையடா :(///

நாம எங்க தள பன்ஞ் வெய்க்கிறோம், வெச்ச பன்ஞ் வேலை செய்கிறது:)))

தள இப்படி சொல்லலாமா பாருங்க...

ஆம்"லேட்டால்" வாழ்கை "அடங்கும்" என்று சொன்னால் சரியாக இருக்குமா?

****************************
நந்து பக்கத்து வீட்டுக்காரன் said...
மேரேஜ் பண்ணிட்டு காதலிக்கிறவங்களுக்கு( அட பொண்டாட்டிய தானுங்க) அதைவிட கடுமையான சேதாரம் இருக்கிறதே. :P//

இதுக்குதான் பக்கத்து வீட்டுக்கு கேட்காதபடி சவுண்ட் புரூப் கண்ணாடி ஜன்னல் ரூமில் அடிவாங்கனும், அல்லது அடிவாங்கும் பொழுது வாயில் துணியை வெச்சுக்கனும் என்னா போங்க ஒரு சீனியருக்கு நான் சொல்லவேண்டி இருக்கு:)))

ஆமாம் சஞ்செய்& சிவா நீங்க எப்ப பக்கத்துவீட்டுக்கு குடிபோனிங்க?:))))

Sanjai Gandhi said...

//ஆமாம் சஞ்செய்& சிவா நீங்க எப்ப பக்கத்துவீட்டுக்கு குடிபோனிங்க?:))))//

அதான.. சிவா மாம்ஸ்.. நீங்க எப்போ அவர் பககத்து வீட்டுக்கு குடிக்க சாரி குடி போனிங்க? :P

Unknown said...

குசும்பனுக்கு யோசனை. என்னெவெல்லாம் கேட்கலாம் எதுவெல்லாம் கேட்கப்படாது சொல்லிடுங்க தாய்க்குலமே. கத்திக்குத்தெல்லாமத் நமக்கு ஆவது என்று திருமணத்துக்குப்பின் சந்திக்கும் முதல் நாளிலேயே பேசித்தீர்த்திடுங்க. எப்படி யோசனை?
நீங்கல்லாம் அப்படித்தானான்னு கேட்டு சந்தி சிரிக்க வைக்கப்பிடாது.

அரை பிளேடு said...

//அப்பாவி கணவன் கொடுமை தடுப்பு சட்டம் என்று ஒன்று வேண்டும்!!!
//

வழிமொழிகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா நல்லா புடிக்கிறீங்க நியூஸ் ... நடக்கப்போவதை முன்கூட்டியே சொன்ன சரவணசாமியாருன்னு புரளி கிளப்பிவிடலாமான்னு பாக்கறேன்..

Irai Adimai said...

இந்த நியூச கேட்டதுக்கு பிறகு பக்கத்து வீட்டு தம்பதிங்க பேசிகிட்டது

மவனே இனி ஆம்ப்லேட் கெட்ட
ஆள போட்டுடுவேன்
அதுக்கு கணவன்
M.R.Ratha ஸ்டைலில் என்னடா கொடும இது
ஆம்ப்லேட் போட சொன்னா ஆளையே போட்டு தள்ள ஐடியா பன்னுராளே.............

ALIF AHAMED said...

கவர்மெண்டு சொல்லுது!!!
இனி ஆண்களுக்கான திருமணவயதை 18 ஆக குறைக்கனுமாம்!!!

நல்லா இருங்க மக்கா அதை எனக்கு 27 ஆகும் போது போட்டீங்க பாருங்க!!!

//

35 வயசை இப்படி தொபக்கடீனு குறைச்சிட்டியே மாப்பி

குசும்பன் said...

//SanJai said...
அதான.. சிவா மாம்ஸ்.. நீங்க எப்போ அவர் பககத்து வீட்டுக்கு குடிக்க சாரி குடி போனிங்க? :P//

நீங்க இந்த பக்கத்துவீட்டுக்குள்ள போனப்பா அவர் அந்த பக்கத்துவீட்டுக்குள்ள குடிக்க சாடி குடி போனார்!!!

*****************************
சுல்தான் said...
குசும்பனுக்கு யோசனை. என்னெவெல்லாம் கேட்கலாம் எதுவெல்லாம் கேட்கப்படாது சொல்லிடுங்க தாய்க்குலமே. ///

அல்ரெடி லிஸ்டு வாங்கியாச்சு ஆனா அதை செய்து அவுங்களை சீண்டமட்டுமே!!!

///கத்திக்குத்தெல்லாமத் நமக்கு ஆவது என்று திருமணத்துக்குப்பின் சந்திக்கும் முதல் நாளிலேயே பேசித்தீர்த்திடுங்க. எப்படி யோசனை? ///

தீர்த்துடுவாங்க இல்லைன்னா:)))


///நீங்கல்லாம் அப்படித்தானான்னு கேட்டு சந்தி சிரிக்க வைக்கப்பிடாது.//

ச்சே ச்சே அப்படி எல்லாம் கேட்பேனா:)) சூசகமா புரிஞ்சுப்பேன்!!!

*************************
அரை பிளேடு said...
//அப்பாவி கணவன் கொடுமை தடுப்பு சட்டம் என்று ஒன்று வேண்டும்!!!
//

வழிமொழிகிறேன்.//

நன்றி அரை பிளேடு:)

****************************
கயல்விழி முத்துலெட்சுமி said...
ஆகா நல்லா புடிக்கிறீங்க நியூஸ் ... நடக்கப்போவதை முன்கூட்டியே சொன்ன சரவணசாமியாருன்னு புரளி கிளப்பிவிடலாமான்னு பாக்கறேன்..///

என்னை சாமியார் ஆக்குவது என்று முடிவு செஞ்ச பிறகு அதில் எனக்கு என்ன ஆட்சேபனம், சில சிஷ்யைகள் கிடைத்தால் ஐ ஆம் ரெடி:)

******************************
Irai Adimai said...
M.R.Ratha ஸ்டைலில் என்னடா கொடும இது
ஆம்ப்லேட் போட சொன்னா ஆளையே போட்டு தள்ள ஐடியா பன்னுராளே.............///

ஹா ஹா என்ன செய்வது காலம் அப்படி கெட்டு போய்விட்டது!!!

வெங்கட்ராமன் said...

என்ன தலைவா,
எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்குதா . . . . . . ?

Cool Down
Cool Down
Cool Down

pudugaithendral said...

இது மட்டும் இல்லை வேறு காரணம் இருந்திருக்கலாம்..

ரிப்பீட்ட்டேஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

வருமுன் காப்போம்னு நான் கல்யாணத்துக்கு அப்புறம் ஆம்லேட் சாப்பிடெரத நிறுத்திட்டேன்... எதுக்கு ரிஸ்க்.

Geetha Sambasivam said...

ஹாஹாஹாஹா, சரியான சமயத்தில் "குசும்பனாருக்குக்" கிடைச்ச ஆப்பு, இனிமேல் நடுங்கிட்டே இருப்பாரில்லை? அதுக்கு இது உத்தரவாதம்! :P

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
குசும்பன் said
என்னை சாமியார் ஆக்குவது என்று முடிவு செஞ்ச பிறகு அதில் எனக்கு என்ன ஆட்சேபனம், சில சிஷ்யைகள் கிடைத்தால் ஐ ஆம் ரெடி:)
==>
அப்புரம் சீக்கிரமே இந்த செய்திய எதிர்பார்க்கலாம்
செக்ஸ் சாமியார் குசும்பன் கைது.....
==))))

Anonymous said...

iniyum ayyo namakku innum kalyanam aakalaiyae entu yenkuveerkal..

unka diski la sonnatha konjam ninaithupaarunka

then.. ippadi yellam pathivu eluthi, already fix aaki irukiravanka vayathil puliyai karaikaatheenga paavam avarkal.. at least marriage aakum varaikkumathu nimathi perumoochi vidattum
kusumbar nallavaru.. ini aasai vaipparu...

குசும்பன் said...

//வெங்கட்ராமன் said...
என்ன தலைவா,
எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்குதா . . . . . . ?//

இப்ப நான் ஆமாம் சொன்னா பாதுக்காப்பா or இல்லை சொன்னா பாதுக்காப்பா?

***************************
புதுகைத் தென்றல் said...
இது மட்டும் இல்லை வேறு காரணம் இருந்திருக்கலாம்..

ரிப்பீட்ட்டேஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்///

நான் சொன்ன வேறு காரணத்தையும் படிச்சுட்டுதானே ரிப்பீட்டேய் சொன்னீங்க:)))

*******************************
இம்சை said...
வருமுன் காப்போம்னு நான் கல்யாணத்துக்கு அப்புறம் ஆம்லேட் சாப்பிடெரத நிறுத்திட்டேன்... எதுக்கு ரிஸ்க்///

என்னத்த செய்வது வர வர மக்களுக்கு போராட்ட குணம் குறைஞ்சுக்கிட்டு வருது!!!

*******************************
கீதா சாம்பசிவம் said...
ஹாஹாஹாஹா, சரியான சமயத்தில் "குசும்பனாருக்குக்" கிடைச்ச ஆப்பு, இனிமேல் நடுங்கிட்டே இருப்பாரில்லை? அதுக்கு இது உத்தரவாதம்! :P///

ஹ ஹ பயமா எனக்கா!!!
(ரொம்ப இருக்குங்க வெளியிலகாட்டிக்க முடியல)

கோபிநாத் said...

;)))

அண்ணே...

cheena (சீனா) said...

சாதாரணமாச் சாப்பிடுற ஆம்லெட்டில இவ்வளவு செய்திகளா ?? நாட்லே எல்லாக் கோழிகளூக்கும் பறவைக் காச்சல் வந்து பொசுக்குன்னு போய்ட்ட்டா ஒரு பிரச்னையும் இல்லேல்ல - என்னா நான் சொல்றது

மோகன் கந்தசாமி said...

"குவாட்டருக்கு பணம் தர மறுத்த மனைவி கொலை - கணவன் கைது" இது போன்ற தினசரி செய்திகளுக்கும் ஒரு காமெடி பதிவு போட்டுடுங்கோ.