Monday, February 18, 2008

வணக்கம் வலையுலக செய்திகள் வாசிப்பது உங்கள் குசும்பன்

உள்ளூர் செய்திகள்:

அமீரக அப்பா பதிவருக்கு போனோ போபியா அதிகமாகிவிட்டதாம், அமீரக நண்பர்கள் அனைவருக்கும் 5 நிமிடத்துக்கு ஒரு முறை போன் போட்டு கதை சொல்லு கவிதை எழுதி கொடு என்று இம்சித்து வருகிறாராம். இதில் அதிகம் பாதிக்கபட்டது கோபியும், சென்ஷியும். இதனால் அவர் போன் செய்வதுக்கு முன்பே சென்ஷி போன் செய்து நான் பிஸி அப்புறம் பேசுகிறேன் என்றும் சொல்லிவிட்டு எஸ் ஆகிவிடுகிறாராம். மற்றவர்கள் எந்த நேரத்தில் போன் வரும் என்ற ஒரு வித பயத்திலேயே இருக்கிறார்கள். போன் வந்தவர்கள் உனக்கு எத்தனை முறை போன் வந்தது, நல்லவேளை எனக்கு 6 முறை தான் என்று துக்கம் விசாரித்த பின்பே ஹலோ சொல்கிறார்கள்.

ஊருக்கு போன எக்ஸ் பிரஸ் திரும்பி துபாய் வந்துவிட்டது, ஆனால் தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுவது போல்நெட், மொபைல் சிக்னல் இல்லாத இடத்தில் தூக்கி போட்டுவிட்டார்கள், பொட்டி தட்டிய கை சும்மா இருக்காது என்பது போல் நேரம் கெட்ட நேரத்தில் போன் போட்டு மலேசியாவில் இருக்கும் சம்மந்தியை இம்சித்து வருகிறார்.

ஊருக்கு போன தம்பி தனியாக தான் திரும்பி வருகிறார், அவர் வந்த பிறகுதான் தாகசாந்தி செய்யனும் என்று பதிவர் அய்யனார் ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்காமல் விரதம் இருந்து வருகிறார்.

அண்ணாச்சி பதிவர் சில சமயம் பாட போறேன் பாட போறேன் என்று குசும்பன் போன்ற சிறு பிள்ளைகளை மிரட்டி வந்தார், கடந்த வியாழன் அன்று இந்தியன் கான்ஸ்லேட்டில் நடந்த விழாவில் காட்டு குயிலு மனசுக்குள்ள என்ற தளபதி பட பாட்டையும், நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாலாம்... என்றபாட்டையும் அசத்தலாக பாடி மக்களை ஆடவைத்துவிட்டார்.

அதே விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற திரு.குசும்பன் குஜராத்தி பெண் பாடிய மதுரைக்கு போகாதடி என்ற பாட்டில் மனதை பறிகொடுத்துவிட்டு நடைபிணமாக திரிகிறாராம், அந்த பெண்ணுக்கு எப்படியாவது தமிழ் சொல்லி கொடுக்கனும் என்ற சபதத்தை எடுத்து இருக்கிறார்.

பதிவு போட மேட்டர் இல்லை மேட்டர் இல்லை என்று ஸ்டேட்டஸ் மெசேஜில் பினாத்திக்கிட்டு இருந்த ஒரு பெரும் பதிவர் சமிபத்தில் ஷார்ஜாவில் நடந்த தேவாவின் இசை நிகழ்ச்சியை காண ஆவலுடன் தனியாக போய் மாட்டிகிட்டு வாங்கி வந்த பல்பு & ஆப்புவே காரணம் என்று நம்ம தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

வெளிநாட்டு செய்திகள்:

மலேசியா சென்று இருக்கும் நாமகல்லார் பிரியாக இருந்தாலும் வெளியில் டூர் செல்வது இல்லையாம், எங்கே டூர் சென்றால் தன்னையும் தாக்கி பதிவு வருமோ என்ற பயத்தில் ரூமிலேயே மட்டையாகிவிடுகிறாராம்.

கோவா போய் குத்து டான்ஸ் ஆடிவிட்டு வந்து குட்டிஸ் கார்னர் சங்க உருப்பினர்கள் இருவருக்கு டான்ஸ் ஆடிய களைப்பு இன்னும் தீரவில்லையாம், அதில் ஒருவர் இரவிலும் கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு டாய்லெட் எங்கு இருக்கு என்று கூட தெரியாமல் சுத்திக்கிட்டு இருந்தையும், மற்றொருவர் ஷவரில் குளிக்கும் பொழுது கூட தலையில் மாட்டி இருந்த தொப்பியை கழட்டாததையும் பார்த்த மக்கள் முதல் நபருக்கு மனசுக்குள்ள பெரிய ஓசை செல்லான்னு நினைப்பு என்றும், இரண்டாம் நபருக்கு மனசுக்குள் பெரிய பாலுமகேந்திரா என்று நினைப்பு என்று பேசிக்கொண்டார்களாம்.

இந்த வாரம் அதிகம் பேச பட்டவை:

கருத்து கந்தசாமி யாரு?

ஜெயமோகனை ஏன் இந்த தாக்கு தாக்குறாங்க?

தமிழச்சி எங்கே?

ஓசை செல்லா எப்ப ரீ என்ட்ரி கொடுப்பார்? (ISD போன் லைன் வேலை செய்யவில்லையா?)

கைப்புள்ளயே இப்பதான் ஸ்டாரா?

அய்யனாரும் சுகுணாவும் புரியும் படி கவுஜ எழுதிகிறார்கள் ஏன் இந்த மாற்றம்?

30 comments:

said...

செய்தி நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா
வாசிச்சிருக்கீங்கோ.

said...

உள்ளேன் ஐயா

said...

//அய்யனாரும் சுகுணாவும் புரியும் படி கவுஜ எழுதிகிறார்கள் ஏன் இந்த மாற்றம்?//

நேற்று இல்லாத மாற்றம் என்னது... காற்று என் காதில் ஏதோ சொன்னது. இதுதான் காதல் என்பதா?? சொல் மனமே ......

Anonymous said...

ungkal seithi vaasippu nantagavum

migavum payanullathaagavum irunthathu

vaasippu thodara vazhthukal.!?

Anonymous said...

ungkal seithi vaasippu nantagavum

migavum payanullathaagavum irunthathu

vaasippu thodara vazhthukal.!?

said...

//
அய்யனாரும் சுகுணாவும் புரியும் படி கவுஜ எழுதிகிறார்கள் ஏன் இந்த மாற்றம்?//

Nalla Mattram than...

Anonymous said...

அய்யனாரும் சுகுணாவும் புரியும் படி கவுஜ எழுதிகிறார்கள் ஏன் இந்த மாற்றம்?//


Thirumana payamo...
vanthavanga ennayya ontum puriyama eluthi vaangi kattikira.. entru sollpadathu paarunga

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஆங்கிலப்பின்னுட்ட கயமை செய்யாதேங்கோ குசும்பா

said...

//புதுகைத் தென்றல் said...
செய்தி நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா
வாசிச்சிருக்கீங்கோ.//

மிக்க நன்றிங்கோகோகோகோகோகோகோ!!!

*****************************
TBCD said...
உள்ளேன் ஐயா//

:((((((((((
***************************
நந்தா said...

நேற்று இல்லாத மாற்றம் என்னது... காற்று என் காதில் ஏதோ சொன்னது. இதுதான் காதல் என்பதா?? சொல் மனமே ......///

நீங்க சொல்வது நிஜமாக இருந்தால் காதல் ரொம்ப பவர் புல்தானுங்கோ!!!
*****************************
அனானி ஏன் இரண்டு முறை ஒரு நாளைக்கு இரு முறை செய்தி வாசிக்க சொல்லியா:)))
*****************************

நெல்லை காந்த் said...
//
அய்யனாரும் சுகுணாவும் புரியும் படி கவுஜ எழுதிகிறார்கள் ஏன் இந்த மாற்றம்?//

Nalla Mattram than...//

திடிர் என்று எலி டவுசர் போட்டுக்கிட்டு ஓடினா ஏன் என்று ஆராயனும்:))))

********************************

அனானி நீங்க சொல்லி இருப்பது புரியவில்லை:(

தங்கிலீஸ் வீக்

******************************
நன்றி ஜெகதீசன்
*****************************
Anonymous said...
ஆங்கிலப்பின்னுட்ட கயமை செய்யாதேங்கோ குசும்பா//

அது நான் இல்லீங்கோ, எங்களுடம் சாட்டும் ஒரு நண்பர்தான் அவர் எல்லோருக்கும் தங்கிலிசில்தான் பின்னூட்டம் இடுவார்.

*******************************

said...

பல உண்மைகள் ;))

said...

//குஜராத்தி பெண் பாடிய மதுரைக்கு போகாதடி என்ற பாட்டில் மனதை பறிகொடுத்துவிட்டு நடைபிணமாக திரிகிறாராம், அந்த பெண்ணுக்கு எப்படியாவது தமிழ் சொல்லி கொடுக்கனும் என்ற சபதத்தை எடுத்து இருக்கிறார்.//

பத்திக்கிச்சு?

said...

எல்லாம் சரி அந்த கோவா மேட்டர்தான் யாருன்னு புரியல மாமா.

said...

எப்புடி இப்புடி?

கலக்கலா...கலாய்ய்க்கிறீகளே!

நல்லா இருப்பீங்க...வாழ்க!

(ஏப்ரலுக்குப்பிறகும்)

said...

//delphine said...

LOLLOOOOOOOOOOOOOOOOO LOLLU///

ஏன் இப்படி லொள் லொள் என்று திட்டுறீங்க?:)))

******************************
கோபிநாத் said...

பல உண்மைகள் ;))/.

:))))))))))))))))))))))
******************************
ஆடுமாடு said...
பத்திக்கிச்சு?///

அய்யய்யோ என்னா அழகு என்னா அழக்கு:) பத்தாம என்னா செய்யும்:)

*****************************
ிலா said...

எல்லாம் சரி அந்த கோவா மேட்டர்தான் யாருன்னு புரியல மாமா.///

நிலா குட்டி நீ உனக்கு மட்டும் சொல்றேன் கேட்டுக்க யாரிடமும் சொல்லாத!!! எந்த பொண்ண பார்கிறோம் என்பது தெரியாம இருக்க கண்ணாடி போட்டுக்கிட்ட இடம் தெரியாம சுத்தின ஆளு உங்க அப்பா நந்து:)))

ஷவரில் குளிக்கும் பொழுதும் தொப்பிய கழட்டாம குளிச்ச ஆளு பொடியன் சஞ்ஜெய்:)))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

அடடா செய்தி வாசிக்கிறதுன்னா இப்படி இல்ல வாசிக்கணும்.

அப்படியே பீஸ் பீஸா கிழிச்சிருக்கீங்க:)))),.
அமீரக செய்தியாளர் குசும்பன் வாழ்க.

said...

"இவ்வளவு பெரிய தமிழ் சமுதாயாத்தைப்பற்றி அறியாமல் இருந்த என் அறியாமை இருளகற்றிய குசும்பன் அவர்களே வாழ்க நும் கொற்றம் வளர்க நும் புகழ்". ரொம்ப நல்லா இருக்கு யாரையும் புண் படுத்தாத அதே சமயம் நல்ல அங்கதமான பதிவு - வாழ்த்துக்கள்

said...

நான் கொஞ்ச காலமா உங்க எல்லோருடைய பதிவுகளையும் படிச்சிகிட்டு வாரேன். சில செய்திகள் மட்டும் நல்லா புரியுது. எல்லாமே படிக்க செமத்தியான செய்திகள் தான்.

said...

நல்லாருக்கு

said...

:)

உள்ளேன் பையா !

:)

said...

:(.. இருடி..இரு... எங்களுக்கும் ஒரு ஏப்ரல் 16 வரும்... :(

said...

:)))))))))))
படிச்சிட்டேணுங்கண்ணா

said...

//நிஜமா நல்லவன் said...

நான் கொஞ்ச காலமா உங்க எல்லோருடைய பதிவுகளையும் படிச்சிகிட்டு வாரேன். சில செய்திகள் மட்டும் நல்லா புரியுது. எல்லாமே படிக்க செமத்தியான செய்திகள் தான்//

குசும்பா உங்களுக்கு போட்டியா காமெடி பண்ண ஒருத்தர் வந்துட்டாரு.குசும்பன் நம்பர் 2. :))

----------
//நிலா said...

எல்லாம் சரி அந்த கோவா மேட்டர்தான் யாருன்னு புரியல மாமா.//

சொ.செ.சூ.
(இந்த பின்னூட்டத்தோட உண்மையான உள்நோக்கம் எங்களுக்கும் தெரியும்.. இதற்கு காலம் பதில் சொல்லும். :((..... )

said...

SanJai said...
//நிஜமா நல்லவன் said...

நான் கொஞ்ச காலமா உங்க எல்லோருடைய பதிவுகளையும் படிச்சிகிட்டு வாரேன். சில செய்திகள் மட்டும் நல்லா புரியுது. எல்லாமே படிக்க செமத்தியான செய்திகள் தான்//

குசும்பா உங்களுக்கு போட்டியா காமெடி பண்ண ஒருத்தர் வந்துட்டாரு.குசும்பன் நம்பர் 2. :))அய்யய்யோ குசும்பனுக்கு போட்டியா? நான் எதோ போறபோக்குல சும்மா அள்ளி விட்டுட்டு போனேன். ஆள விடுங்க சாமியோவ்?

said...

ஆனா கோவால நடந்தது பத்தி வேறேங்கயோ படிச்சேன்.

said...

//நிஜமா நல்லவன் said...

ஆனா கோவால நடந்தது பத்தி வேறேங்கயோ படிச்சேன்.//

நந்துf/oநிலான்னு ஒருத்தர் உலாத்திட்டு இருக்கார். அவர்கிட்ட தான் இதை பத்தி சொல்லனும். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லிகிறெனுங்க :P

said...

மாம்ஸ்... இது கலக்கல்...
இப்டி வாரா வாரம்,இந்த வார வலை செய்திகள் போடுங்களேன்.. :))

//அதே விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற திரு.குசும்பன் குஜராத்தி பெண் பாடிய மதுரைக்கு போகாதடி என்ற பாட்டில் மனதை பறிகொடுத்துவிட்டு நடைபிணமாக திரிகிறாராம், அந்த பெண்ணுக்கு எப்படியாவது தமிழ் சொல்லி கொடுக்கனும் என்ற சபதத்தை எடுத்து இருக்கிறார்.//

இது டாப்பேஇய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:)))))))))

said...

//அண்ணாச்சி பதிவர் சில சமயம் பாட போறேன் பாட போறேன் என்று குசும்பன் போன்ற சிறு பிள்ளைகளை மிரட்டி வந்தார்,//

அவ்வ்வ்வ்வ்..... சிறு பிள்ளைகளா?..
:))))))
இந்த அநியாயத்தை கேற்க யாருமே இல்லையா?..:))))))

said...

//கோவா போய் குத்து டான்ஸ் ஆடிவிட்டு வந்து குட்டிஸ் கார்னர் சங்க உருப்பினர்கள் இருவருக்கு டான்ஸ் ஆடிய களைப்பு இன்னும் தீரவில்லையாம், அதில் ஒருவர் இரவிலும் கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு டாய்லெட் எங்கு இருக்கு என்று கூட தெரியாமல் சுத்திக்கிட்டு இருந்தையும், மற்றொருவர் ஷவரில் குளிக்கும் பொழுது கூட தலையில் மாட்டி இருந்த தொப்பியை கழட்டாததையும் பார்த்த மக்கள் முதல் நபருக்கு மனசுக்குள்ள பெரிய ஓசை செல்லான்னு நினைப்பு என்றும், இரண்டாம் நபருக்கு மனசுக்குள் பெரிய பாலுமகேந்திரா என்று நினைப்பு என்று பேசிக்கொண்டார்களாம்.//

:)))))))