Wednesday, February 13, 2008

இலங்கை தமிழ் நண்பர்களே கொஞ்சம் பதில் சொல்லுங்க!!!

ராஜ்தாக்ரே விவகாரம் விசயமாக அறையில் விவாதம் செய்ய போய் அது இலங்கை பிரச்சினையில் வந்து நின்றது, அப்பொழுது அறை நண்பர் இலங்கை தமிழர்கள் இங்கிருந்து போனவர்கள் என்று நினைக்காதீங்க என்றார், அதுபற்றி விவரம் எனக்கு எதுவும் தெரியாததால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வரலாற்றில் இராஜ இராஜ சோழன் ஆண்டதாக சொல்ல படுகிறது, அதன் மூலம் அங்கு சென்றவர்களா?இல்லை அதுக்கு முன்பே அங்கிருந்தவர்கள் என்றால் எப்படி சென்றார்கள்?

மற்றொரு நண்பர் சொன்னார் மலேசியா, இலங்கைக்கு ஆங்கிலேயரால் தமிழகத்தில் இருந்து அழைத்து செல்லபட்டவர்கள் என்கிறார்.

மற்றொரு நண்பர் இலங்கை இந்தியாவுடன் இனைந்து இருந்தது காலபோக்கில் கடல் கொண்டதால் தீவு ஆகிவிட்டது என்கிறார்.

எது உண்மை? வரலாறு என்ன? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.

(இப்படி ஒரு சந்தேகம் அல்லது கேள்வியை நம் சகோதர்களை பார்த்து கேட்க வெட்கபடதான் வேண்டும் தெரியாமல் இருப்பது இதை விட வெட்கம் என்பதால் கேட்கிறேன் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).

11 comments:

Anonymous said...

//மலேசியா, இலங்கைக்கு ஆங்கிலேயரால் தமிழகத்தில் இருந்து அழைத்து செல்லபட்டவர்கள் என்கிறார்.//

அப்படி சென்றவர்கள்...மலையக தமிழர்கள் என்றும் கூறப்படுகிறது... ? இருக்குமோ???

Anonymous said...

இலங்கை வரலாற்றைக்கூறும் மகாவம்சம் (ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது) சிங்கள இனத்தின் மூதாதையர்கள் வட இந்தியாவில் இருந்து இலங்கையில் கரை ஒதுங்கியபோது (கி.மு 5) இலங்கையில் குவேனி என்ற பெண்ணின் ஆட்சி நடைபெற்றதாகக் கூறுகின்றது.

இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கி வந்த விஜயனின் தம்பியார் கி.மு 5இல் கோகர்ணம் (திருகோணமலை)வழியாக இலங்கை வந்தபோது இந்துத் துறவிகளின் ஆட்சி நடந்ததால் தான் இந்து மதத் துறவிபோல வேடம் அணிந்து வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. யார் அந்த‌ இந்துக்க‌ள்?

இதில் வேடிக்கை என்னவென்றால், இலங்கையில் இருந்த மூதாதையர்களை திராவிடர்களாகவோ அல்லது மனிதர்களாகவோ பௌத்த பாளி நூலான மகாவம்சம் ஏற்கவில்லை. இதுதான் சிங்கள பௌத்தர்களின் சதி.

தமிழர்களின் ஆட்சி நடைபெற்றத்ற்கு ஆயிரம் ஆதாரங்கள் உண்டு. இறுதியாக‌ 1505 இல் இல‌ங்கை போர்த்துகீச‌ர‌து கையில் இல‌ங்கை விழும்போது இல‌ங்கையின் வ‌ட‌ கிழ‌க்கு பிரான்திய‌த்தில் த‌மிழ‌ர் இராட்சிய‌ம் இருன்த‌தை அனைத்து நூல்க‌ளும் கூற்கின்ற‌ன‌.

வாசிக்க‌ வேண்டிய‌ முக்கிய‌ நூல்க‌ள்:

1. Portugesu Rule- Dr Abeyasinga,
2. Ancient Land and Revenue in Ceylon ( A.W. Codrington 1938)
3. Jaffana Kingdom Prof s.Pathmanathan.
4. History of Trincomalee . Col. G.P. Thomas.(1940

ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

said...

நண்பரே இதனை நான் ஒரு வரியில் விளக்கிட முடியாது ஆனால் நாம் காலம் காலமாக இல்ங்கையில் வாழ்கின்றோம் ஆங்கிலேயரால் இங்கே தோட்டவேலைக்கெனக் கொண்டுவரப்பட்டவர்கள் மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஆவார்கள். நாகர்கள், இயக்கர்கள் என்பவர்களே இலங்கையின் மூத்த குடிகள். சிங்களவர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சிங்கல விஜயன் என்ற அரசனின் வழித்தோன்றல்கள்.

said...

இது பற்றி நான் எழுதியிருந்த பதிவு
தெளிவு கிடைக்கக் கூடும்
http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_21.html

Anonymous said...

Check this

நூல் இலங்கைத் தமிழர் - யார், எவர்?
ஆசிரியர்: கார்த்திகேசு சிவத்தம்பி
URL: http://noolaham.net/project/01/40/40.htm

said...

குசும்பா, மாடரேசன் வச்சியிருக்கியா..?

said...

நான் அறிந்தவரைக்கும் சுருக்கமாக...

//வரலாற்றில் இராஜ இராஜ சோழன் ஆண்டதாக சொல்ல படுகிறது, அதன் மூலம் அங்கு சென்றவர்களா? // அவ்வாறானவர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் பலர் சிங்களவர்களுடன் கலந்துவிட்டார்கள்.

//ஆங்கிலேயரால் தமிழகத்தில் இருந்து அழைத்து செல்லபட்டவர்கள் //
இந்தவகையினர் மலையகத் தமிழர்கள் எனப்படுவோர். இவர்கள் பலகாலமாக இரு நாட்டு அரசுகளாலும் புறக்கணிக்கப்பட்டு இன்றும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகிறார்கள்.

மற்றையோர்... வரலாறுகளை எழுத தவறியதால் இதிகாசங்களும் காப்பியங்களும் வரலாறாகும் திராவிட வரலாற்றின் ஓர் அங்கமாக இருப்போர்...!

ஆனாலும் சரியான தகவல்களுக்கு மற்றவர்கள் கொடுக்கும் தொடுப்புக்களில் வாசிக்கவும்...!

said...

பதில் சொன்ன புனிதா,
அனானி
வந்தியதேவன்
சயந்தன்
கிருத்திகா
நிமல் அனைவருக்கும் நன்றி:)))

அய்யா TBCD மாடுரேசன் எப்பொழுதும் உண்டு:))

said...

i end up to your page through - maraneri. this post is good and one of the reply by anonymous is wonderful with links to books.