பிளாக்கர் ஐடி பாஸ்வேர் காணமல் போகுது அதை எல்லாம் எடுப்பவர்கள் யார் என்று எல்லோரும் தேடிக்கிட்டு இருக்க, அப்படி செய்தவர்கள் யார் என்று நான் கண்டுபிடுத்துவிட்டேன்.
நம்பர்1) இளா
நம்பர் 2) சிபி
நம்பர் 3) நாகை சிவா
மூளையாக செயல்பட்டவர் தேவ்!!!
கீழே ஆதாரம்
"பின்னூட்டம் போடலாம்.. பின்னி எடுக்கலாம்.. இப்போத் தான் வெட்டியோட எல்லா ஐடியும் வேற உன் கைக்கு வந்துருச்சே... " (இது சிபி சொன்னது)
சோ முதலில் வெட்டியோட ஐடியை எடுத்துட்டாங்க.
"ம்ம்ம் ஒரு பதிவர் கிட்டயே இத்தனைப் பதிவு.. இத்தனை ஐடி... இத்தனை ஆன்லைன் காண்டக்ட்ன்னு இருந்தா... இந்த மொத்தக் கும்மி கேங்கையும் புடிச்சா எத்தனைப் பதிவு எத்தனைஐடி சிக்கும்...." இது இளா சொன்னது.
"இதோ நாம கைப்பற்றுன எல்லா ஐடியையும் அமெரிக்காவுல்ல இருக்க என் நண்பர்கள் கிட்ட கொடுத்து அப்படியே உலகம் பூரா இருக்க அவஙக் நண்பர்கள்கிட்ட கொடுத்து அங்கங்கே இருந்து என் பதிவுல்ல பின்னூட்டம் போடச் சொல்லி சொல்லப் போறேன்..." இதுவும் இளா சொன்னது.
இப்படி அவுங்க விவாஜி என்கிற பதிவில் பேசி இருக்காங்க. மேலும் விவங்களுக்கு
http://chennaicutchery.blogspot.com/2007/10/8.html
என்ன மக்களே எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா!!!
பின் குறிப்பு: சிகப்பு கலரில் இருப்பது ஆதாரம் அவர்களின் பேச்சு.
Saturday, October 27, 2007
Wednesday, October 24, 2007
டமார்ன்னு மனைவியின் மனதை கவர சில டிப்ஸ்
நேற்று G பதிவில் கும்மி அடிக்கும் பொழுது என் கமெண்டுக்கு பதில் சொல்லி இருந்த திவ்யா என்பவர்கள் லிங்கை கிளிக் செஞ்சா
சில உபயோகமான சில டிப்ஸ் கண்ணில் பட்டது. சரி நம்ம பையன் ஒருத்தன் கல்யாணம் செய்து கஷ்டபடுகிறான் டிப்ஸ் கொடுக்கலாம் என்று அவனிடம் போன் போட்டு எலேய் இன்னைக்கு ஒரு உனக்காக உருப்படியான ஒரு விசயம் பிளாக்கில் படிச்சேன் டா? திவ்யா என்ற பதிவர் அருமையாக எழுதி இருக்கிறார்கள் என்றேன்.
பிளாக்கிலா? ன்னு நக்கலாக கேட்டான்?
ஏன்னா அவனிடம் முன்பு அய்யனார் பதிவின் லிங்கை கொடுத்து படின்னு சொல்லி இருந்தேன் அந்த கோபம் அவனுக்கு என் மேல்
நான் சொல்வதால் அவன் நம்பவில்லை அவனிடம் எலேய் உன் மனைவி மனைதை கவருவது எப்படின்னு உனக்கு சில டிப்ஸ் கொடுக்கிறேன் அது போல் செய் எல்லாம் சரி ஆகிடும் என்றேன். அரை குறையான மனதோடு மண்டையை ஆட்டினான். அவனிடம் சொன்ன முதல் டிப்ஸ் திவ்யா அவர்கள் எழுதி இருந்தது
டிப்ஸ் -1:ஒரு மனைவி தான் பேசும் போது'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.
இத அவனிடம் சொன்னேன் அவனும் ஆமான் டா நான் பாட்டுக்கு எப்ப பார்த்தாலும் லேப் டாப் தட்டிக்கிட்டே உம் போடுவேன் திட்டிட்டு போய் விடுவா, நீ சொல்வதிலும் உண்மை இருக்கு அது போலவே செய்துவிடுகிறேன் என்றான்.
ஒரு 2 மணி நேரம் கழித்து போன் மச்சான் கை என் கை ஒடிஞ்சு போன மாதிரி வலிக்குது டா வந்து ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போடான்னு சொன்னான் என்னா விசயம் என்று விசாரிச்சா?
இனி ஓவர் டூ ஹோம்:
மனைவி: என்னங்க?
நண்பன்: உம் (சொன்னபிறகு நான் சொன்னது நினைவுக்கு வர லேப் டாப்பை மூடி விட்டு) என்னம்மா?
மனைவி: ஊரில் எங்க அப்பா பாத்ரூமில் குளிக்கும் பொழுது....
நண்பன்: ஓ! அப்படியா?
மனைவி: என்ன அப்படியா எங்க அப்பா குளிக்க மாட்டாரா? ரொம்ப ஆச்சர்யமா கேட்குறீங்க? கீழ விழுந்து கையை முறிச்சிக்கிட்டாராம்.
நண்பன்: (ரெண்டாவதா என்ன சொல்ல சொல்லி இருக்கான் .ம்ம்ம்ம்ம்)ஆஹா!இப்படியா?
மனைவி: இல்ல எப்படின்னு நான் காட்டுறேன்...
இதான் டா நடந்துச்சு என்றான் :)
டிப்ஸ்-2
பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!
இதை சொன்னேன் செஞ்சிட்டா போச்சு என்று குஜாலா சென்றான்.
கொஞ்ச நேரத்தில் போன் மச்சான் நீ என் நண்பனா? எதிரியா? ஏன் இப்படி அடி வாங்க விடுகிறாய் என்றான்.
இனி ஓவர் டூ ஹோம்:
நண்பன்: டென் டொடடய்ங் (சமையல் வேலையாக இருக்கும் மனைவியிடம்) மீயுஜிக்கோடு உள்ளே போய் இருக்கான்.
மனைவி: என்ன மீயுஜிக் எல்லாம் பலமாக இருக்கு!
நண்பன்: என் கையில் என்ன இருக்கு கண்டுபிடி என்று (பின்னாடி கையை ஒளிய வெச்சிட்டு).
மனைவி: விளையாடாம சொல்லுங்க.
நண்பன்: திரும்ப மியூஜிக்கோடு டன் டடன் என்று பின்னாடி ஓளிய வெச்சு இருந்த புடவையை காட்ட..
மனைவி: என்ன இது?
நண்பன்: புடவை
மனைவி: அது தெரியுது! பீரோவில் மடிச்சி வெச்சிருந்த புடவையை ஏன் இப்ப எடுத்து வந்தீங்க?
நண்பன்: நான் சொன்னதை சொல்ல............அம்மான்னு அவன் கத்தும் சவுண்ட் உங்க காதில் விழுதா?
டிப்ஸ்-3: செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை] அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்..
மனைவி: என்னங்க இந்த மேக்கபில் எப்படி இருக்கேன்.?
நண்பன்: பொய் சொன்னா எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று சொல்லி இருக்கான்... சோ உண்மையாகவே வர்னித்துவிடலாம்.
உனக்கு என்னம்மா பவுடர் பூசின பன்னி குட்டி மாதிரி இருக்க...
நண்பன்:....................
மச்சான் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க வாடா துனைக்கு.
டேய் இருடா இன்னும் மூனு டிப்ஸ் இருக்கு என்று நான் சொன்னதும் போனை கட் செஞ்சுட்டான் அதன் பிறகு போன் செஞ்சாலும் சுவிச் ஆப் என்று வருது...
பி.கு: கல்யாணம் ஆகி மனைவியுடன் இருக்கும் ஒரே அமீரக பதிவர் லொடுக்குக்கு இந்த பதிவு சமர்பனம்.

Monday, October 22, 2007
என்னை டென்சன் ஆக்கும் சில விசயங்கள்
ஒவ்வொருவருக்கு சில விசயங்கள் பிடிக்காது, அதை பார்த்தால் சுல் என்று கோவம் தலைக்கு ஏறும் அது போல் எனக்கு தலைக்கு ஏறும் சில ...
1) டாக்டர் என் பெயர் ....வயது 26 கடந்த வருடம் திருமணம் ஆனது இந்த வருடமே எனக்கு குழந்தை பெற்றுக்கனும் என்று ஆசை ஆனால் கணவருக்கு இல்லை இதுக்கு என்ன செய்வது?
நான் திருமணம் ஆகி கணவனை பிரிந்து இருக்கும் பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழியின் கணவன் என்னை அடைய முயற்ச்சிக்கிறார், நாம் ஓடி போய் விடலாம் என்று சொல்கிறார் என்ன செய்வது நான்?
இது போன்ற கேள்விகள் படிக்க நேரும் பொழுது
2) ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கை கழுவ போகும் பொழுது நமக்கு முன்பு இருப்பவர் கை கழுவி பல் விளக்கி, முகம் கழுவி விட்டா குளிச்சிடுவார் போல இருக்கும் அப்பொழுது ஏன் இங்கயே குளிச்சிட்டு போங்க என்று ஒரு துண்டை எடுத்து கொடுக்கனும் போல இருக்கும். அப்பொழுதும்...
3) ஹலோ பெப்ஸி உமாவா? அய்ய்யோ எத்தனை நாள உங்க கிட்ட பேசனும் என்று...இருங்க எங்க அம்மா பேசனும் என்கிறாங்க, இருங்க என் தம்பி பேசனும் என்கிறான்....என்னால நம்பவே முடியலைங்க உங்க கிட்ட பேசுகிறேன் என்று...குரல்களை காதில் கேட்கும் பொழுது
4) அட்டு பிகரு உலக அழகி ரேஞ்சுக்கு ரவுசு கொடுக்கும் பொழுதும்.
5) பாரு அந்த பொண்ணு என்னமா மார்க் வாங்குறா நீயும் தான் இருக்கீயே என்று சொல்லும் பொழுதும்.
6) தான் ஏறி உட்கார்ந்த உடன் எல்லா ஸ்டாப்பிலும் நிறுத்தும் பஸ் டிரைவரிடம் சண்டை போடும் ஆட்களை பார்க்கும் பொழுதும்.
7) சில்லரை இல்ல இறங்கு என்று சொல்லும் நடத்துனரை பார்க்கும் பொழுதும்.
8) கரெக்ட்டா நான் கைய உட்டு ரெண்டு டிக்கெட் என்று சொல்லும் பொழுது ஹைவுஸ் புல் என்று போர்ட் மாட்டும் பொழுதும்.
கோவம் வரும். அது போல் உங்களுக்கு எப்பொழுது கோவம் வரும்?
டிஸ்கி: தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்கும் பொழுது கோவம் வரும் என்று பின்னூட்டம் போட்ட ரிலீஸ் செய்ய மாட்டேன் ஆமா.

ஓசை செல்லாவுக்கு ஒரு அட்வைஸ்!!!! திருந்துங்க பிளீஸ்
ஓசை செல்லாவே உங்களுக்கு அட்வைஸ் செய்யும் அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை, இருந்தாலும் காலையில் உங்க வலை பூவை பார்த்த எனக்கு அதிர்ச்சி பார்த்ததும் சொல்லனும் என்று நினைத்தேன்.
அப்படி என்னாத்த பார்த்த நீ அட்வைஸ் சொல்ல வந்துட்ட என்று நீங்க எல்லாம் என்ன முறைப்பது தெரிகிறது!!!
மக்களே நீங்களே சொல்லுங்க இப்படி படுக்கலாமான்னு?
இப்படி பார்கடலில் படுத்து இருக்கும் கிருஷ்னன் போல படுத்து இருந்தா கழுத்து வலி வரும், முதுகு வலி வரும் ஆகையால் இது போல் படுக்காதீங்க!!! இதுதாங்க நான் சொல்ல நினைக்கும் அட்வைஸ்:)டிஸ்கி: உங்க படத்தை அனுமதி இல்லாமல் இங்கு போட்டு இருக்கேன் தயவு செய்து போலீஸ்க்கு போக வேண்டாம்!!!
போஸ் கொடுங்க வேண்டாங்கல ஆனா இனி அந்த கண்ணாடிய கழட்டிட்டு கொடுங்க:)
ஆமா இது மொக்கையா? இல்ல சீரியஸா?
Sunday, October 21, 2007
ஆயுத பூஜை வந்தா கொண்டாட்டம் ஏன்?
டேய் தம்பி !!!
என்னம்மா?
அந்த கதவு சன்னல் நிலை எல்லாத்துக்கும் பட்டை போட்டு பொட்டு வை, அந்த மாவிலை தோரணத்தை எடுத்து கட்டு.
உன் சைக்கிள துடைச்சு பூ போடு..
சரிம்மா.அப்புறம் அந்த மம்புட்டி, அருவா, ஏர் கலப்பை எல்லாத்தையும் எடுத்து சாமி படத்துக்கு கீழ வை.
சரிம்மா
அப்புறம் உன் புக்கஸ்ல ஒன்னு ரெண்டு எடுத்து வை. அதை நாளை வரை திரும்ப எடுக்க கூடாது.
டேய் தம்பி எங்க பொழுது போன நேரத்தில் கிளம்புற...
கேரம் விளையாடம்மா...
டேய் பொழுது போன நேரத்தில் புக்க எடுத்து வெச்சு படிப்பா.
நீதானம்மா நாளை வரை புக் எல்லாம் எடுக்க கூடாதுன்னு சொன்ன. அதான் எல்லா புக்கையும் அங்க வெச்சுட்டேன்.
அம்மா:??????????????????????????
(புள்ளன்னா என்ன மாதிரி இருக்கனும் என்ன நான் சொல்வது)

எல்லோருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
Saturday, October 20, 2007
போட்டோகிராபி என்பது கடினமான வேலை அல்ல சில சமயங்களில்!!!
போட்டோகிராபி என்பது மிகவும் கடினமான வேலை போல, ஒரு போட்டோ எடுக்க இத்தனை கஷ்டங்களா?
இப்படி கஷ்டமே இல்லாமல் சில சமயம் மிகவும் அழகான புகை படங்கள் போட்டோ கிராப்பருக்கு கிடைத்துவிடும் அப்படி எடுக்கபட்டது
பூக்களுக்கு நடுவே ஒரு ரோஜா
டிஸ்கி: கண்மணி டீச்சர், அபி அப்பா மற்றும் தம்பி கதிர் ஆகியோருக்காக கைராசி வைத்தியரும் குடும்ப டாக்டருமான டால்பின் சாரி சாரி டெல்பின் அவர்களால் பரிந்துரை செய்யபட்டு இருக்கும் மாத்திரை
நன்றி: போட்டோகளை மெயில் அனுப்பிய சந்தோஷ்

Thursday, October 18, 2007
டக்குன்னு ஹிட் ஆக செய்யவேண்டிய ஐந்து
நீங்கள் தமிழ் பதிவுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது நம் பதிவை யாரும் சீண்டவே மாட்டேங்கிறாங்க என்று ரூம் போட்டு அழுபவராக இருந்தாலும் அதுக்கு நீங்கள் செய்யவேண்டியது.
1) "கண்டனம்" இது மிக முக்கியமான வார்த்தை. சும்மா அப்படியே உள்ள என்ன வேண்டும் என்றாலும் எழுதுங்க. தலைப்பில் இந்த வார்த்தை இருப்பது அவசியம்.
எடுத்துக்காட்டாக:
1) மாலனுக்கும் என் கண்டனம்,
2) ஜமாலனுக்கு என் கண்டனம்,
3) டவுசரை கிழிக்கும் லக்கிக்கு கண்டனம்,
4) தோழி தமிழச்சிக்கு கண்டனம்
5) மாசில்லாவுக்கு கண்டனம்
(இதுக்காக மாலன், ஜமாலன் பதிவு எல்லாம் படிச்சு இருக்கனும் என்றே, அல்லது அவுங்க எல்லாம் என்ன சொல்லி இருக்காங்க என்றோ தெரிஞ்சு இருக்க வேண்டும் என்ற அவசியம் கொஞ்சம் கூட இல்லை)
பெரிய ஆளுங்களுக்கு கண்டனம் என்று தலைப்பு வைக்கனும், அரசியல் தலைவர்களுக்கு கூட கண்டனம் தெரிவிக்கலாம் இப்ப பார்த்தீங்கன்னா அமெரிக்கா புஷ்சுக்கு கண்டனம் தெரிவிச்சு தஞ்சாவூர் மணி மண்டபத்துக்கு பக்கத்தில் 10 cm by 5 cmக்கு ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி இருப்பாங்க:)) அது போல் இல்லாமல் கண்டனம் தெரிவிக்கும் பொழுது ஆள் பார்த்து இடம் பார்த்து கண்டனம் தெரிவிக்கனும்.
சரி கண்டனம் என்று தலைப்பு வெச்சாச்சு உள்ள என்ன எழுதனும் என்று பிரச்சினையா அதெல்லாம் நமக்கு எதுக்கு? உள்ள இவுங்க எல்லாம் ஏன் என் பதிவை படிப்பதில்லை அதனால் தான் என் கண்டனம் என்று ஒரு நாலு வரி எழுதுங்க.
முக்கிய குறிப்பு:
குசும்பனுக்கு கண்டனம்,
கோபிக்கு கண்டனம்,
சோமுவுக்கு கண்டனம்,
என்று எல்லாம் தலைப்பு வெச்சா வியாபாரம் ஆகாது.
2) பகிரங்க கடிதம்: இதுவும் முக்கியமான வார்த்தை மேல் சொன்னது போல்
1) ஓசை செல்லாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
2) தமிழ்மணத்துக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
3) பெயரிலிக்கு ஒரு கடிதம்!!!
4) ஞாநிக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
இப்படி கடிதம் எழுதலாம் , போஸ்ட் செய்யும் செலவும் இல்லை, அவுங்களும் படிக்க போவது இல்லை, ஆனால் நீ எப்படி இப்படி கடிதம் எழுதப்போச்சு என்று பின்னாடி பிரச்சினை வந்தாலும் வரலாம்!!
3)ஒரு கேள்வி?
1) ஓசை செல்லாவுக்கு ஒரு கேள்வி?
2) கோவி கண்ணனுக்கு ஒரு கேள்வி?
3) செந்தழல் ரவிக்கு ஒரு கேள்வி?
4) நட்சத்திரத்துக்கு ஒரு கேள்வி?
5) தமிழ்மணம் நிர்வாகத்துக்கு ஒரு கேள்வி?
காசாபணமா அது என்னா ஒரு கேள்விதான் கேட்கனுமா நிறைய கேள்வி எல்லாம் கேட்க கூடாதான்னு நீங்க அதிக பிரசங்கி தனமாக எல்லாம் யோசிக்க கூடாது, உள்ள எத்தனை கேள்வி வேண்டும் என்றாலும் கேளுங்க ஆனா தலைப்பை இப்படிதான் வைக்கனும்.
இல்ல முதலில் ஒரு பின்னூட்டம் யாருக்காவது போடுங்க அவுங்க பதில் போட்டா பாருங்க இல்லையா? டக்குன்னு கேள்வி கேட்டுவிடுங்க.
இல்ல அவுங்க பதில் சொல்லி இருந்தா எப்படி அவுங்க இப்படி சொல்லலாம் என்று ஒரு பதிவு போட்டுவிடுங்க.
4) வீக் end ஜொள்ளு
வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்
கவர்ச்சி புகைபடங்கள்
தலைப்பை இப்படி வெச்சுட்டு உள்ள படம் போட்டாலும் பார்த்து ரசித்துவிட்டு திட்டு விழும், ஏன் இப்படி பொது இடத்தில் படம் போடுறீங்கன்னு.
படம் போடவில்லை என்றாலும் அனானியாக வந்து திட்டு விழும் ஆனால் இதுபோன்ற தலைப்புக்கு அதிக பின்னூட்டம் கிடைக்காது ஆனால் ரகசியமாக எல்லாம் வந்து பார்த்துவிட்டு போவாங்க நிச்சயம் ஒரு 250 ஹிட்டாவது அதிகமாகும்.
5) ..................எதால் அடிக்கலாம்?
.....................இந்த ஜென்மங்களை எதால் அடிக்கலாம்?
தலைப்பை இப்படி வெச்சுட்டு கொசுவை எதால் அடிக்கலாம், மாட்டை எதால் அடிக்கலாம் என்று டவுட் கேட்டு எழுதுங்க ஆனால் தலைப்பை மட்டும் இப்படி வெச்சுடுங்க.
டிஸ்கி: உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டமாக கூட தெரிவிக்கலாம். இந்த பதிவை தமிழ்மண வழிகாட்டி, துறை சார்ந்த பதிவுகளில் இடம் பிடிக்க இருப்பதால் உங்கள் பெயர் அதில் வரக்கூடும்.

Wednesday, October 17, 2007
அனிமேசனில் வாலட்டுவதை பாருங்களேன்!!! நான் செய்தது.
படத்தின் மேல் கிளிக் செய்யவும் சூப்பராக வால் ஆட்டும் பாருங்க, போட்டோ ஷாப்பில் செய்தது.
முன்னாள் முதல் அமைச்சர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளுக்கு போதிய பாதுகாப்பினை காவல் துறை தருவதுஇல்லை.
கண்டனைத்தை இங்கு தெரிவிப்பதோடு அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறேன்.
சற்றுமுன் செய்தி:
முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலித்தாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீய நோக்கத்தோடு நுழைந்துஅவன் ஜெயலலிதாவிற்கு ஆபத்து விளைவித்திருக்க கூடும் என்று நினைக்கும் போதேபதட்டமும், கவலையும் அளிக்கிறது.
முன்னாள் முதல் அமைச்சர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளுக்கு போதிய பாதுகாப்பினை காவல் துறை தருவதுஇல்லை.
கண்டனைத்தை இங்கு தெரிவிப்பதோடு அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறேன்.
டிஸ்கி: பதிவுக்கும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை. தனி தனி பதிவாக போட்டேன் பிளாக்கர் சதி செய்துவிட்டது. :)))
பிறகு அந்த செய்தியை சொன்னவர் யார் சொல்லுங்க பார்கலாம்!!!!
Monday, October 15, 2007
பெண்ணீயம் பேசும் பெண்களே எங்க போனீங்க?
இயக்குனர் சாமி நடிகை பத்மபிரியாவை அடித்துவிட்டாராம், சரி என்ன இப்ப அதனால என்று நினைக்கிறீங்களா? எல்லோரும் அதை பற்றி பேசும் பொழுது
ஆ ஊன்னா பெண் விடுதலை பெண் அடிமை என்று கூச்சல் போடும் பெண்களும், நடிகைகளும் எங்கே போனாங்க? யார் அடிச்சா என்னா?
ஏன் அதை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை?
யார் அடி வாங்கினா என்னா வாங்கா விட்டால் என்ன நம்மை யாரும் அடிக்காமல் இருந்தா சரி என்று நினைக்கும் பெண்களின் மனநிலையையே இது காட்டுவதாக எனக்கு தோன்றுகிறது. எங்கே இதுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அடுத்த பட வாய்பு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற சுய நலம் ஒரு காரணமா?
நரி இடம் போனா என்னா வலம் போனா என்னா தன் மேல விழுந்து புடுங்காம இருந்தா சரி என்று நினைக்கும் மனோபாவம் தான் இதுக்கு காரணமா? அல்லது அவள் நடிகைதானே என்ற இளக்காரமா?
ஒரு போராட்டம் நடத்தி அடுத்தமுறை யாரவது அடிக்க கை ஓங்கும் பொழுது யோசிக்கும் படி செய்து இருக்க வேண்டாமா?
ஏன் ஏன் ஏன்?
டிஸ்கி: இந்த பதிவை குரு ஆசிப் அண்ணாச்சிக்கும் மோகன்தாஸுக்காகவும்!!!

யாரும் உங்களை போடா(டி) .......................அப்படி திட்டினா???
யாரும் உங்களை பார்த்து போடா(டி) .......................................அப்படி திட்டினா நீங்க என்ன செய்யனும் என்று சொல்லவே இந்த பதிவு.
அப்படி என்னா அந்த ........................................வரும் என்றுதானே நினைக்கிறீங்க. இருங்க இருங்க சொல்றேன். அந்த டேசில் "டியுப் லைட்" என்று வரும்.
அப்படி திட்டினா என்ன தெரியுமா சொல்லனும்.
சிரிச்சிக்கிட்டே நான் பூமியோட சூட்டை குறைக்கிறேனாக்கும் என்று சொல்லுங்க.
என்ன டா லூசு மாதிரி ஏதோ சொல்றானேன்னூ பார்க்குறீங்களா இல்லீங்க இந்த தகவலை நம்ம ஆயில்யன் தான் அவரோட பதிவில் சொல்லி இருக்கிறார்.
"முதல்ல குண்டு பல்புகள ஆப்(பு) பண்ணுங்க அப்பத்தான் 4% விகிதம் வரைக்கும் வர்ற கார்பன் டை ஆக்சைடு கட்டுபடுத்தலாம்"
இதனால் பூமி சூடாவதை தடுக்கலாம் என்று சொல்லி இருக்காருங்க.
டிஸ்கி1: என்னை யாரும் அப்படி திட்டுவது இல்லை இதைவிட மோசமாகதான் திட்டுவார்கள் என்றும் அப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றும் நீங்க தெரிஞ்சுக்க ஆசைபட்டா நம்ம அபி அப்பாவை கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
டிஸ்கி2: காலையில் இருந்து பார்த்துக்கிட்டு இருப்பேன் யாரும் பதிவு போடாம நேற்று போட்ட பதிவு மேலேயே இருக்கும், சரி இதுதான் தக்க சமயம் என்று நானும் பதிவு போட்டா ...டபுக்கு டபுக்குன்னு எங்கிருந்துதான் பதிவு போடுவாங்களோ தெரியாது எல்லோரும் பதிவு போட்டு என் பதிவை முதல் பக்கத்தில் இருந்து தூக்கிடுவாங்க இப்படிதான் நேற்று நான் ஒரு பதிவு போட்டா பதிவே போடாத சந்தோஷ் பழய பதிவு எல்லாம் மீண்டு வந்து என் பதிவை முதல் பக்கதில் இருந்து தூக்கிடுச்சு... எங்க போய் சொல்வது இந்த கொடுமையை!!!

Sunday, October 14, 2007
கற்றது தமிழ்
சபாஷ்: முதலில் ஒரு சபாஷ் இயக்குனர் ராம்க்கு முதல் படம் என்பதால் நாலு சண்டை, ரெண்டு குத்து பாட்டு என்று எல்லாம் சதையை நம்பி படம் எடுக்காமல் கதையை நம்பி படம் எடுக்க வந்திருக்கிறார். அடுத்த சபாஷ் ஜீவாவுக்கு பஞ்ச் டயலாக் இல்லை, புகழ் பாடும் பாட்டு இல்லை என்று தெரிந்தும் நடிக்க ஒத்துக்கொண்டதுக்கு.
கதை சுருக்கம்:
அசத்தல் :
டங் டங் என்று தலையில் மணி அடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும் அப்படி கேட்க ஆரம்பித்தால் கொலை செய்ய வேண்டும் எனக்குஅதுதான் எனக்கு எல்லையில்லா ஆனந்தத்தை தரும் உடல் உறவை போல. என்று சொல்லும் ஜீவாவின் நடிப்பு அசத்தல்.
நீ காதலிச்சு இருக்கியா என்று ஜீவா கேட்கும் பொழுது காதலிச்சா பொண்ணு கிடைக்கும் சார் பொருள் கிடைக்காது சார் என்று கருணாஸ் சொல்லும் பொழுது ஏன் என்று தெரியவில்லை தியேட்டரில் விசில் பறந்தது.
கதை கரு:
தமிழ் படிச்சா தமிழ்நாட்டில் நல்ல வசதியோடு வாழமுடியவில்லை என்பதற்காக சாக துணியும் ஒரு இளைஞன் அவன் காதல்.
சின்ன வயதில் இருந்து உறவுகள் ஒவொன்றாக பலி கொடுக்கும் சிறுவன் பிரபாகராக ஜீவா, அவனுக்கு பிரியமான தோழி ஆனந்தியாக அஞ்சலி.தமிழ் ஆசிரியரால் வளர்க்கபடும் பிரபாகர் அவரும் இறந்து விட அவரை போல் தமிழ் ஆசிரியர் ஆக விருப்பபட்டு தமிழை படித்து முடித்து 2000 ரூபாய்க்கு வேலைக்கு சேருகிறான், ஒரு முறை சிகரெட் பிடிக்க போய் அதனால் போலீஸ் ஸ்டேசன் போகிறான், அங்கு அவன் படும் அவமானங்கள் அதனால் தற்கொலைக்கு முயற்சிக்கிறான் திரும்ப போலீஸ் பிடித்து கஞ்சா கேஸ் போட முயற்சிக்க அதில் இருந்து தப்பிக்கும் பொழுது டிரைன் டிக்கெட் எடுக்க 5 ரூபாய் இல்லாததால் சட்டென்று ஒரு கொலை , பின் மன நிலை சரி இல்லாதவன் ஆகிறான் தொடந்து பல கொலைகள் செய்ததாகவும் எதனால் செய்தேன் என்பதை கருணாஸை விட்டு ரெக்காட் செய்ய சொல்லி விட்டு எல்லாத்தையும் சொல்கிறான், சின்ன வயது காதல் முதல் கடைசி கொலை வரை. கடைசியில் அதை சன் டீவி ஒளிபரப்ப அதனால் மக்களிடம் ஏற்படும் மாற்றம் நல்லவேளை மக்கள் எல்லாம் போராடுவது போல் காட்டாமல் அதற்கு தீர்வாக எதையும் சொல்லாமல் நம்மிடமே முடிவை விட்டு விட்டது டச்சிங்.
அசத்தல் :
டங் டங் என்று தலையில் மணி அடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும் அப்படி கேட்க ஆரம்பித்தால் கொலை செய்ய வேண்டும் எனக்குஅதுதான் எனக்கு எல்லையில்லா ஆனந்தத்தை தரும் உடல் உறவை போல. என்று சொல்லும் ஜீவாவின் நடிப்பு அசத்தல்.
உனக்கு பூனை பிரண்ட் என்றால் எனக்கு புலி பிரண்ட் என்று சொல்லும் பொழுது "நிஜமாதான் சொல்றீயா" என்ற இடமாகட்டும்கடைசியில் நான் உன்னை கூட்டிக்கிட்டு போய்விடுகிறேன் என்று ஜீவா சொல்லும் பொழுதும் "நிஜமாதான் சொல்றீயா" என்று கேட்கும்பொழுதும் அஞ்சலி நடிப்பு அசத்தல். நடிக்க தெரிந்த ஒரு ஹீரோயின் கிடைச்சாச்சு.
நீ காதலிச்சு இருக்கியா என்று ஜீவா கேட்கும் பொழுது காதலிச்சா பொண்ணு கிடைக்கும் சார் பொருள் கிடைக்காது சார் என்று கருணாஸ் சொல்லும் பொழுது ஏன் என்று தெரியவில்லை தியேட்டரில் விசில் பறந்தது.
ஓளிபதிவு யார் என்று தெரியவில்லை மிக அருமையாக இருக்கிறது.
சொதப்பல்:
டயலாக்
B.P.O வில் வேலை செய்யும் ஒருவனிடம் 40,000 ஆயிரம் கொடுப்பதால் உன் பேரை மாற்றிக்கிட்ட 4 லட்சம் கொடுத்தா அம்மாவை மாற்றிப்பீயா என்று கேட்பது.
இருபத்தி ஆறு வயசு ஆகுது இன்னும் ஒரு பெண்ணை கூட ஒன்னும் செஞ்சது இல்லை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பாத்ரூமீலேயே....
அதான் ஜோடியா பீச்சில் உட்கார்ந்து இருந்தவங்களை சுட்டு கொன்னுட்டேன்
என்பது போல் கொலைக்கு காரணம் சொல்வது சரி சொதப்பல்.
நடிகர்கள்:
பிரபாகராக : ஜீவா
ஆனந்தியாக: அஞ்சலி
தமிழ் ஆசிரியராக: அழகன் பெருமாள் & கருணாஸ்
டிஸ்கி: படம் முழுவதும் பல நிறைகள் இருந்தும் சட்டென்று சூப்பர் படம் என்று சொல்ல முடியவில்லை அது ஏன் என்று தெரியவில்லை, நல்ல கதை கரு என்றுதான் சொல்ல முடிகிறது.
Thursday, October 11, 2007
Subscribe to:
Posts (Atom)