சென்னை பதிவர்கள் எல்லாம் ஒன்று கூடி உலக படம் பார்க்கப்போவது தெரிஞ்ச விசயம் அது பற்றி ஒரு கற்பனை! இனி....
ஞாயிறு மாலை ஹால் உள்ளே லக்கி நுழையும் முன்பே இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருக்கிறது, முதல் வரிசையில் சுந்தர், கேபிள் சங்கர், பைத்தியகாரன், அனுஜன்யா, பாலபாரதி என்று ஏகப்பட்ட இளைஞர்கள் பட்டாளம். சரி ஓரமா நின்னாவது படத்தை பார்க்கலாம் என்று ஓரமா நின்னுக்கிட்டு படம் பார்க்கிறார் லக்கி.
லைட் எல்லாம் அணைக்கப்பட்டு படம் கொரியா டைட்டிலோடு ஓட ஆரம்பிக்கிறது. கொஞ்ச நேரத்தில் மர வீட்டில் இருக்கும் பெண்ணிடம் வரும் ஹீரோ, கசமுசா செய்யும் நேரம் பார்த்து லைட் எல்லாம் எரிகிறது எவன்யா...! அது முக்கியமான கட்டத்தில் லைட்ட போட்டது என்று குரல் கொடுக்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர்!
திரும்பினால் அங்க போலீஸ்!
போலீஸ்: நாங்க ஊரல்லாம் ரவுண்டு அடிச்சு பலான படங்களை எல்லாம் புடிச்சுக்கிட்டு இருக்கோம் நீங்க என்னடான்னா தனியா இப்படி ஆரம்பிச்சு இருக்கீங்களா...? பாரு! சின்ன பையன் எவனாவது இருக்கானான்னு பார்த்தா எல்லாம் பெருசுங்க பிட்டு பட தியேட்டரிலும் இதே மாதிரி பெருசுங்கதான் இருக்கும். அதுவும் முதல் வரிசையில்.
போலீஸை பார்த்து சேர்’க்கு அடியில் ஒளிஞ்சிருக்கும் கார்க்கி சார் நான் சின்ன பையன் சார் எனக்குக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை எனக்கான ரோஜாவை தேடிக்கிட்டு இருக்கேன்..!என்று குரல் கொடுக்க...
ஏட்டு சார் சேருக்கு அடியில் ஒருத்தன் ஒளிஞ்சிருக்கான் சார்..! என்று கார்க்கியை புடிச்சு தூக்குகிறார்..
போலீஸ்: என்னது ரோஜாவை தேடிக்கிட்டு இருக்கீயா செல்வமணிக்கு தெரிஞ்சா என்னா ஆகும் தெரியுமா?
பைத்தியகாரன்: சார் என்று சொல்வதே அதிகாரத்தின் குறீயீடு அதனால் யோவ்..! என்றே அழைத்து தொடங்குகிறேன்..
போலீஸ்: என்னது யோவ்வா என்னா கொழுப்பு இருந்தா படம் பாக்குறது மட்டுமில்லாம என்னை யோவ்ன்னு வேற கூப்பிடுவியா...
பைத்தியகாரன்: இங்கே பாருங்கள் இது நீங்க நினைப்பது போல் பலான படம் இல்லை இது உலகபடம். இது கொரிய மொழி படம் .மிஷல் பூக்கோ என்ன சொல்லி இருக்கிறார் என்றால்...
(போலீஸ் வந்ததால் அப்படியே பாஸ் செய்து வைத்திருந்த ஸ்கிரீனை பார்க்கிறார் போலீஸ் அங்கு ஆதாம் ஏவாள் போல ஹீரோ ஹீரோயின் இருவரும் இருக்க...)
போலீஸ்: இதுவாய்யா உலக படம் பூக்கோ அது இதுன்னு யார் காதுல பூ சுத்துற...
பைத்தியகாரன்: இதுவந்து... கிம் கி டுக்...
போலீஸ்: என்னய்யா கெட்ட வார்த்தையில் திட்டுற..?
பைத்தியகாரன்: இல்லீங்க அது இந்த படத்தின் இயக்குநர் பெயர், கொரியாவின் சிறந்த இயக்குநர், இது மட்டும் இன்றி ஒவ்வொரு மாதமும் இப்படி உலகபடம் பார்க்க போகிறோம்.அடுத்த மாதம் சீனா.
போலீஸ்: ஓ...! இன்னைக்கு பார்த்தது மட்டும் இல்லாம இனி ஒவ்வொரு மாசமும் வேறயா..?!
பைத்தியகாரன்: தமிழ் படத்தில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் முதல் இரவு காட்சி என்றால் இருவரும் உள்ளே நுழைந்ததும் லைட்ட ஆப் செஞ்சுவிடுகிறார்கள், ஆனால் உலக படம் என்றால் அப்பதான் லைட்டை அதிகம் போட்டு கட்டை உடைக்கிறார்கள். தமிழ் படம் பார்த்து முதலிரவில் என்ன நடக்கும் என்பது தெரியாமல் லைட்டை அனைக்கும் ஒரு தலைமுறை உருவாகிவிடக்கூடாதே என்பதே எங்கள் நோக்கம்...
போலீஸ்: என்னது லைட்ட போட்டு கட்டை உடைக்கிறாங்களா? இருய்யா கைய உடைக்கிறேன்..
அதிஷா: சார் சும்மா சத்தம் போடாதீங்க நாங்க எல்லாம் எழுத்தாளர்கள், அதுமட்டும் இல்லாம இதோ பாருங்க இவரு பேரு கேபிள் சங்கர்,இவரு ஆதிமூலம் இவங்க எல்லாம் குறும்படம் எடுப்பாங்க..
போலீஸ்: குறும்படமா அப்படின்னா? அது எங்க ரிலீஸ் ஆகும்..
அதிஷா: சார் குறும்படம் எல்லாம் ரிலீஸ் ஆவாது இது 5 நிமிசம் ஓடுற படம்...
போலீஸ்: ம்ம்ம்ம்..! புரியுது புரியுது..இந்த மொபைலில் 5 நிமிடம் ஓடுற மாதிரி படம் எடுக்குற கும்பலாய்யா நீங்க....?? அப்ப அன்னிக்கு திரிஷாவை குளிக்கும் பொழுது எடுத்ததும் நீங்கதானா? ஏட்டு நோட் செஞ்சுக்கய்யா திரிஷா குளியயலை படம் எடுத்த அதிஷான்னு போட்டு கேஸை முடிச்சுடலாம்.. ஆமா அதுனாலதான் நீ பேர அதிஷான்னு வெச்சுக்கிட்டியா?
அதிஷா: சார் உங்களுக்கு எல்லாம் புரியாது சார் நாங்க எல்லாம் பிளாக்கர்ஸ் நெட்டில் எழுதுறவங்க...
போலீஸ்: ஓ நெட்டில் வேற இத எழுதுறீங்களா? என்று போனை போடுகிறார். (சார் பெரிய கேங் ஒன்னு மாட்டி இருக்கு பலான படம் பாக்கிறாங்க அதோட இந்த மொபைல் கிளிப்பிங் எல்லாம் எடுக்கிறாங்க அது மட்டுமில்ல சார் நெட்டில் இதை பற்றி எல்லாம் எழுதுவாங்களாம் பெரிய கேஸ் சார் ஒரு 20 தலை தேறும்)
அதிஷா: சார் புரிஞ்சுக்காம பேசாதீங்க சார், நெட்டில் போய் செக் செஞ்சு பாருங்க...
போலீஸ்: சரி என்னா சொல்லு என்று அருகில் இருந்த லேப் டாப்பை ஓப்பன் செஞ்சு அதிஷாஆன்லைன்.காம் ன்னு அடிக்கிறார்.
“இன்பினிட்டி இன்ப கதைகள் என்று பதிவு இருக்க, படிச்சு பார்த்துவிட்டு டெரர் ஆகிறார்.” யோவ்..! தெரியும்யா இதுமாதிரிதான் எழுதி இருப்பீங்கன்னு..
என்னா தில் இருந்தா ட்ராப்பிக் போலீஸ் பற்றியே பலான கதை எழுதுவேன்னு, நாலு போடு போடுகிறார்.
பாலபாரதி: சார் சும்மா அடிக்காதீங்க சார் அப்புறம் நான் ரிப்பேர்ட் செய்ய வேண்டியிருக்கும் அவன் சின்னபையன் சார்.
போலீஸ்: (சுந்தரை பார்த்து) சரி அப்ப பெரியவரே நீங்களும் எழுத்தாளர் தானே எங்க உங்களோட எழுத்தை எப்படி படிக்கிறது ...
சுந்தர்: jyovramsundar.blogspot.com ன்னு அடிங்க சார்.
ஸ்கிரீனில் காமகதைகள் 44
போலீஸ்: ஒரு கதை மட்டும் இல்லாம இதை தொடராகவே எழுதுறீங்களா?
சுந்தர்: சார் காமம் என்பது ஒதுக்கப்படவேண்டியது இல்ல ஏன் இப்படி காமத்தை பற்றி எழுதினா பதறுகிறீர்கள்?
போலீஸ்: உங்களை எல்லாம் தனியாக கவனிக்க வேண்டி இருக்கும் போல இருக்கே..இருங்க டி.ஐ.ஜி வரட்டும்..
பாலபாரதி: சார் புரிஞ்சுக்காம பேசாதீங்க சார்.. என்னோட பிளாக்கை பாருங்கன்னு அவரோட பிளாக் அட்ரெஸ் கொடுக்கிறார்.
(அவரோட ”பொறாமைப்படுபவர்கள் தவிர்க்க வேண்டிய பதிவு பாகம் II ” போட்டோவை பார்த்துவிட்டு.)
போலீஸ்: ஏன்யா..! அவனவன் யாரோ மேட்டர் செஞ்ச கதையதான் எழுதி இருக்காங்க அதுவாது பரவாயில்லை. சிலர் இன்னொருத்தவன் அரைகுறையா இருக்குற போட்டோவத்தான் போடுவான் நீ என்னடான்னா உன் படத்தையே அறைகுறையா போட்டு இருக்க..?
பாலபாரதி: சார் இல்ல சார்! உங்க படத்தை கூட அப்படி செய்யலாம்...
போலீஸ்: அடிங்க! நீ போஸ் கொடுத்ததும் இல்லாம என்னையும் அப்படி போஸ் கொடுக்க சொல்றீயா..?
பாலபாரதி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க தப்பாவே புரிஞ்சுக்கிறீங்க.
முரளிகண்ணன்: சார் இங்க பாருங்க நாங்க எல்லாம் ஒண்ணு கூடி இதுபோல் உலக அறிவை வளர்த்து படம் எடுக்க போகிறோம் அதுக்கு முன்னோடியாத்தான் சார் இது எல்லாம்! ஹீரோ கூட முடிவாகிவிட்டது இதோ பாருங்க இவருதான் ஹீரோன்னு நர்சிமை காட்டுகிறார், இவரு நல்லா பாடுவாரு என்று அப்துல்லாவை காட்டுகிறார்.பாருங்க சார் இவர் மும்பையில் இருந்து இங்க வந்திருக்கிறார் என்று அனுஜன்யாவை காட்டுகிறார். பாருங்க சார் நாங்க எல்லாம் நோட்டு வெச்சு நோட்ஸ் எழுதிக்கிட்டு இருக்கோம் என்கிறார்...
(அப்துல்லா மனசுக்குள் இதை ரொம்ப முக்கியமா இங்க சொல்லணுமா)
யாருங்க அது மும்பையில் இருந்து வந்தது என்று போலீஸ் கூப்பிட..
பம்பி பதுங்கி வெளியே வருகிறார் அனுஜன்யா...
போலீஸ்: கிண்டியில் இருந்து பரங்கிமலை ஜோதிக்கு போவதே ரொம்ப தூரம் ஆனா நீங்க மும்பையில் இருந்து இங்க வருகிறீர்களோ! உங்களை எல்லாம் பார்த்தா பெரியமனுசன் மாதிரி இருக்கீங்க..
அனுஜன்யா: இல்ல சார் நான் யூத்...
போலீஸ்: சேட்டை...! ம்ம்ம் அப்படியே நாலு போட்டன்னா தெரியும். ஆமா என்னா ஏதோ நோட்ஸ் எடுக்குறீங்களாமே என்னா கருமத்தை எழுதியிருக்கீங்க என்று கார்க்கி நோட்டை வாங்கி பார்க்கிறார்...
போலீஸ்: பார்த்துவிட்டு நாலு சாத்து சாத்துகிறார் கார்க்கிய... இதுவாயா நீங்க சொன்ன குறிப்பு எடுக்கிறது என்ன செஞ்சு வெச்சு இருக்கான் பாருன்னு காட்டுகிறார் முரளியிடம்...(நோட்டில் குறீயிடுகளாக குறிகள்)
கார்க்கி: இல்ல சார் அடிக்காதீங்க சார் இந்த படத்தின் காட்சிகள் குறீயீடுகளா பார்க்கனும் என்று பைத்தியகாரன் அண்ணாச்சி எழுதி இருந்தார், பாம்பு என்பது இந்த படத்தில் ஒரு முக்கிய குறீயிடுன்னு. அதுதான் சார் பாம்பு படம் வரைஞ்சேன் அதுக்கு கண்ணு வைக்கங்காட்டியும் நீங்க வந்துட்டீங்க அதுமட்டும் இல்லாம அத பார்த்து தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க என்று கார்க்கி சொல்ல.
ஆதிமூலம் மொபைல் ரிங் ஆக எடுத்து பேசுகிறார்..ம்ம்ம் ஆரம்பிச்சாச்சு வாங்க வாங்க அப்படியே லெப்டில் ஒரு ”கட்டிங்” அடிச்சா ஒரு பெரிய பச்சை கலர் பெயிண்ட் அடிச்ச இடம் தான் வாங்க வாங்க என்று பேசுகிறார்.
சிறிது நேரத்தில்
விசில் அடிச்சப்படியே உள்ளே நுழையும் வெண்பூ..ஹாய் என்னாய்யா ஆதிமுலம் சீடி சிக்கிக்கிச்சா ஏன் இப்படி ஹேங் ஆகி நிக்குது, முக்கியமான சீன் ஏதும் போச்சா என்று கேட்க..
அப்பொழுதுதான் அங்கிருக்கும் போலீஸை கவனிக்கிறார். ஓ...! போலீஸ் பாதுகாப்பு எல்லாம் கொடுக்குதா வெரி குட் வெரிகுட் ! ஆனந்தவிகடன் புகழ் வெண்பூன்னா சும்மாவா! என்று பேசுபவரை ஆதி வெண்பூ கொஞ்சம் அடக்கி வாசி..!என்று காதை கடிக்கிறார்.
யோவ்..! ஆதி இப்பதானே இரண்டு நிமிஷம் முன்னாடி போன் போட்டு கேட்டேன் அப்பயே வராதன்னு சொல்லி இருந்தா அப்படியே எஸ்கேப் ஆகியிருப்பேனே என்று கேட்க..
ஆதிமூலம்: கம்பெனிக்கு ஆள் வேண்டாமா? அதான் கோத்துவிட்டேன்
வெண்பூ: நல்லா இருய்யா ஆமாம் யாருக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருக்க..?
ஆதிமூலம்: வேலன் அண்ணாச்சிக்குதான் மெட்ராஸ் வந்திருக்கிறாராம் அதான் கொஞ்சம் இங்க வரசொல்ல லொக்கேஷன் அனுப்பிக்கிட்டு இருக்கேன்.
போலீஸ்: இதுக்கு எல்லாம் யாரு ஹெட்ன்னு கேட்க மக்கள் ஒட்டுமொத்தமாக பாலபாரதிதாங்க என்று கோரஸாக சொல்கிறார்கள்.
பாலபாரதி பக்கத்தில் இருந்த சுந்தரிடம் ஏன் அண்ணே நான் எங்க இதுல சம்மந்தப்பட்டேன் என்று கேட்க
சுந்தர்: ஹெட்டுன்னா தலைதானே! அப்படி தலைன்னா அது நீங்கதானே என்கிறார்...
பாலபாரதி வடிவேலு மாதிரி முரளிகண்ணனை பார்க்கிறார் ஏன் என்பது போல!
முரளிகண்ணன்: நான் பைத்தியகாரன் என்றுதான் சொல்லவந்தேன் ஆனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிட்டு என்று சொல்கிறார்.
மக்கள் எல்லோரும் பாலபாரதியை போட்டு கொடுக்க அப்துல்லா போய் போலீஸ் காதில் ஏதோ கிசு கிசுக்கிறார்...
என்ன சொன்னீங்கன்னு கேட்க அண்ணன் பாலபாரதி நாட்டுகட்டை மாதிரி சும்மா அவரை கேவலப்படுத்தும் விதமாக சின்ன லத்தியால எல்லாம் அடிச்சா எங்களுக்கு கேவலம்..அடிச்சா சவுக்குகட்டையால அடிங்கன்னு சொல்லிட்டு வந்தேன்..எதிலும் ஒரு பிரமாண்டம் வேண்டாமா என்று சொல்கிறார்.
போலீஸ்: சரி சரி தப்பு செஞ்சுட்டீங்க ஒரு 500ரூபாய் கொடுங்க நாங்க கிளம்புறோம், இல்லேன்னா இவரை அழைச்சுக்கிட்டு போய் ஒருநாள் முழுக்க லாடம் கட்டுவோம் என்று சொல்ல..
அதெல்லாம் முடியாது 1000 வேண்டும் என்றாலும் கொடுக்கிறோம் இவரை அழைச்சுட்டு போய் ரெண்டு நாள் இல்ல ஒரு வாரம் வெச்சுக்குங்க என்று பாலபாரதியை போலீஸ் வண்டியில் ஏற்றி அனுப்புகிறார்கள்.