Sunday, September 28, 2008
இவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க கூடாது!
இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தியை காண நேர்ந்தது, இருவயது குழந்தையை ஒரு ***மகன் பணத்துக்காக கடத்தி அந்த குழுந்தையை கால்களை பிடித்து ரெயில் தண்டவாளத்தில் தலையை அடித்து கொன்று இருக்கிறான். குழந்தை மூளை சிதறி இறந்து இருக்கிறது, தலை முகம் என்று உரு தெரியாத அளவுக்கு மாறி இருந்து இருக்கிறது, மனதில் வன்மம் எத்தனை இருந்தால் இப்படிப்பட்ட செயலை செய்ய அவனுக்கு மனது வரும்?
நேற்று டெல்லியில் பைக்கில் வந்த இருவர் பையை கீழே விட்டு செல்வதை கண்ட சிறுவன் எடுத்து அவர்களிடம் கொடுக்க ஓடும்பொழுது குண்டு வெடித்து பலியாகி இருக்கிறான். இப்படி எல்லாம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.
ஒரு சாரார் சொல்வது போல் இதுபோல் செயல்களுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது. ஒரு நொடியில் செத்துவிட்டால் அவனுக்கு மற்றவர்களின் வலி தெரியாது. கையை கட்டி விட்டு கொஞ்சமாக ஆண் குறியை வெட்டி விட்டவேண்டும். புண் ஆறுவதற்கு எந்த மருந்தும் தரவும் கூடாது . வேண்டும் என்றால் அதில் மிளாகய் தூளை வேண்டும் என்றால் கூட தடவி விடலாம், தினம் தினம் அந்த வலியாலே அவன் சாகவேண்டும் அப்பொழுதுதான் தவம் இருந்து பெற்ற குழந்தையை இழந்த தாயின் வலி புரியும்.
யார் எங்கு குண்டு வைத்தால் என்ன எவன் எந்த ஏசு சிலையை இடித்தால் என்ன, எவன் கோயிலில் சிலைகளை உடைத்தால் என்ன, இரு மத மக்களும் அடிச்சுக்கிட்டு, வெட்டிக்கிட்டு செத்தால் எவனுக்கு என்ன நஷ்டமாபோச்சு, நமக்கு பதவியும், நாளை அணு ஆயுதஒப்பந்தமும் கையெழுத்து ஆனால் போதும்.
Wednesday, September 24, 2008
வலைபதிவர்களே உங்க பதிவுகள் பத்திரம்- உசார்
இங்கு ஒவ்வொருவரும் அவர் அவர் ஸ்டைலில் பதிவு எழுதினால் எப்படி இருக்கும் என்று இனி இங்கு நானே எழுதப்போகிறேன்.
இன்று கோவி.கண்ணன் விபத்தும் உள்ளுணர்வும்!!!
எப்பொழும் நானும் நண்பர் எம்.எஸ் பாஸ்கரனும் குழந்தைகளுக்கு பென்சில் சீவ தோப்புக்கு செல்வோம்,கடந்த முறை அப்படி பென்சில் சீவ வருகிறேன் என்றார்நானும் என் பொண்ணுக்கு டிராயிங் காம்பெட்டிசன் இருக்கு,நிறைய பென்சில் சீவ வேண்டி இருக்கு நானும்வருகிறேன் என்றேன், தோப்புக்கு வந்தபிறகு அழையுங்கள் என்றேன்.
அதன் படி வந்த பிறகு என்னை அழைத்தார்,பின் நானும் அங்கு சென்றேன்.
அவர் தோப்புக்கு வந்த பிறகு பென்சில் சீவ கத்தியை எடுத்தார்!
கத்தியில் சீவலாமா?-எம்-எஸ் பாஸ்கர்
எனது உள் உணர்வு தடுக்கவே.
இப்பதாங்க சப்பாத்தி போட்டுவிட்டு வந்தேன், கை எல்லா ஆயில் வழுக்கும் கத்தி வேண்டாம் என்றேன்.
அவர் நீங்க வேற நான் பூரி, சப்பாத்தி,புரோட்டா எல்லாம் போட்ட கையோடு எல்லாம் பென்சில் சீவ கத்திதான்பயன்படுத்துவேன் நீங்க என்னாடான்னா சப்பாத்தி போட்டேன் கை வழுக்கும் என்று சொல்றீங்களே என்றார்.
இருந்தாலும் என் உள் உணர்வு தடுக்கவே!
வேண்டாம் பாஸ்கர், நாம் ஷார்பனர் வைத்தே சீவலாம் என்றேன்.
ஷார்பனரில் சீவுனா ரொம்ப நேரம் ஆகும் , நான் வந்தால் எப்பொழுதும் கத்தியை வைத்துதான் சீவுவேன்,நீங்க என்னடான்னா இப்படி பயப்படுறீங்களே என்றார்.
மற்ற நாளில் பயம் இல்லை, இன்று சப்பாத்தி போட்டு கை எண்ணெய் ஆக இருக்கிறது, அது மட்டும் இன்றி மீதி சப்பாதியும், அடுத்தமாதம் முழுவதும் நடக்க இருக்கும்பதிவர் சந்திப்புக்கு வேண்டிய பஜ்ஜியும் இப்பயே போட்டு வைக்கனும். அதான் என்று நான் சொன்னேன்.
இருந்தாலும் நீங்க ரொம்ப பயப்படுறீங்க- எம்.எஸ். பாஸ்கர்.
வேறு வழி இல்லாமல் ஷார்பனரை வைத்து சீவ ஆரம்பித்தோம்.
டக் என்று அருகில் இருந்த ஒருவன் கால் இடறி பாஸ்கர் மேல் விழ அவரோடு சேர்ந்து நானும் கீழே விழ, அவர் கையில் இருந்த ஷார்பர் உடைந்து அவர் கையில் குத்திவிட்டது.என் கையில் இருந்த பென்சில் முனை உடைந்து என் கையை குற்றிவிட்டது.எழுந்து பார்த்தார் அவர் கையில் ஒரு சொட்டு இரத்தம். என் கையிலும் காயம்.சட்டையில் வேறு பென்சில்கோடு போட்டுவிட்டது.
பார்த்தீங்களா பாஸ்கர் ஷார்பனர் வைத்து சீவியதால் தப்பித்தோம், இதுவே கத்தி வைத்து சீவி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? என்று அடிப்பட்ட நிலையிலும் கருத்து சொல்ல ஆரம்பித்தேன்.
ஆமாங்க நீங்க சொல்வது சரிதான் என்றார்- எம்.எஸ். பாஸ்கர்
சரி பரவாயில்லை ஒரு ரூலர் இருந்தால் கொடுங்க என்றேன், அவர் திரு திரு என்று முழித்துவிட்டு எடுத்து கொடுத்தார்.பின் கையில் கீறீயதை அளவு எடுத்து வைத்துக்கிட்டேன் பதிவு எழுத. அடிப்பட்டாலும் அங்கேயே இருந்து பென்சில் சீவிவிட்டுதான் வீட்டுக்குவந்தோம்.
வீட்டுக்கு வந்த பிறகு நடந்ததை சொன்னேன், ஆறுதலா கிடைக்கும். ஒரு பென்சிலை கூட ஒழுங்கா சீவி எடுத்துவரமுடியவில்லை அது இதுன்னு செம டோஸ்.
SMS: பென்சில் சீவினா கையில் கிளவுஸ் போட்டுக்குங்க.
(இனி இதுபோல் ஒவ்வொருவரும் எப்படி பதிவு எழுதுறாங்க என்று இங்கே எழுதப்படும், அடுத்து யார் ?)
இந்த பதிவு புரியாதவர்களுக்கு இங்கே கிளிக் செஞ்சு படிச்சுப்பாருங்க
Tuesday, September 23, 2008
இரு நல்லவர்கள் + ஒப்புதல் வாக்குமூலம் + தமிழ்மணம் கவனத்துக்கு அல்ல!!!
சரி பல்பு வாங்க வைக்கனும் கொஞ்சமும் டவுட் வரக்கூடாது நாதாரிதனம் செஞ்சாலும் நாசுக்காக செய்யனுமே! போன் மூலம் விளையாடுவது அலுத்துப்போச்சு அதுமட்டும் இன்றி அது காஸ்ட்லி விளையாட்டும்கூட.
அதனால் மெயில் மூலம் விளையாடலாம் என்றதும் நினைவுக்கு வந்தது அவர் ஏற்கனவே வால் பையனை நட்சத்திரம் என்று சொல்லி ஏமாற்றியது, சரி அவர் ரூட்டிலே போகவேண்டியதுதான் என்று ஒரு g mail ஐடி கிரியேட் செஞ்சேன்.
ஸ்டார் ஆக தேர்ந்து எடுத்தால் எப்படி மெயில் வரும் என்று தெரியலையே, நாமாக ஒரு மெயில் அனுப்பினால் அதை வைத்து கிராஸ் செக் செய்வார்கள் அப்பொழுது அது தெரியவந்துவிடும் என்று , ஏற்கனவே ஸ்டார் ஆன நண்பர்
ஆயில்யனிடம் கேட்டேன் அவரு எனக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சிட்டார்.
ஆஹா சரி இப்படியே மெயிண்டென் செய்வோம் பரிசலுக்கு பல்பு கொடுக்கும் முன்பு எனக்கும் பல்பு வேண்டும் என்று ஆசைப்படும் ஆயில்யனை நான் தான் அடுத்த ஸ்டார் என்று நம்ப வெச்சபிறகு மெயிலை அனுப்புய்யா என்றால் டெலிட் செஞ்சுட்டேன் என்று சொன்னார்.
சரி என்று அடுத்த ஆள் பினாத்தலாரை கேட்டால் நீ ஜட்டி போட்டு திரிஞ்ச காலத்துலேயே ஸ்டார் ஆகிவிட்டேன் அதனால் இம்புட்டு நாள் எல்லாம் அந்த மெயில் என்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டார், பின் தள சிபி வந்தார் அவரிடம் கேட்டேன் கொடுத்தார் அவரிடம் உண்மையை சொல்லித்தான் கேட்டேன் அவரும் கொடுத்துவிட்டு மற்றவர்கள் வருத்தப்படதா மாதிரி இருக்கனும் என்றார்.
சரி பரிசலுக்கு மெயில் அனுப்பினா அதை அவர் நண்பர் அதிஷாவிடமும் சொல்வார் அப்ப அவரும் நம்பும் படி இருக்கனும் என்பதர்காக அதிஷாவும் சேர்க்கப்பட்டார், தாமிராவையும் சேர்கலாம் என்று நினைச்சேன் ஆனா ஏதோ ஒரு பாசம் கண்ணை மறைத்துவிட்டது.
பின் மெயில் அனுப்பி நடந்த கதையை பரிசல் சொல்லிவிட்டார், சரி விளையாட ஆரம்பிச்ச பிறகு உண்மைய சொல்லிடலாம் என்று திரும்ப சிங்கப்பூர் நண்பர் ஒருவரிடம் பரிசல் நம்பர் கொடுங்க என்றேன் அவரும் அண்ணே அவரை கலாய்கனும் அப்படின்னு நம்பர் கொடுத்தார், பின் இன்னொருவரிடமும் நம்பர் கேட்டு இரண்டும் ஒரே நம்பரா என்று சரி பார்த்த பின் அவருக்கு போன் செஞ்சேன், மனுசன் ஜே.கே ரித்தீஸ் மாதிரி பல முகம் இருக்கு, ஒருவர் பத்திரிக்கை கொண்டு வந்து வைத்து உங்க தலைமையில் தான் கல்யாணம் நடக்கனும் என்றும், ஒருவர் அண்ணே காதுகுத்து உங்க முன்னிலையில் தான் வைக்கனும் என்றும் , ஒருவர் அண்ணே நீங்கதான் என் குழந்தைக்கு பேர் வைக்கனும் என்றும் சொல்லிக்கிட்டு இருந்தனர், நானும் போனில் அண்ணன் இப்பொழுது 2000ரூபாய் மொய் செய்வார் என்று செந்தில் மாதிரி சொல்லிப்பார்த்தேன், ம்ம் அவுங்க காதில் விழவே இல்லை.
பின் அவர் இதுபோல் எனக்கு மெயில் அனுப்பி இருந்தாங்க அது நீங்களா என்றார், ஆம் என்று சொல்ல நினைத்து சொன்னேன் ஆனால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி இல்லை என்று சொல்லிட்டேன், பேசும் பொழுதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்.
பின் நேற்று பதிவில் கும்மி அடிச்சப்ப மை பிரண்ட் யாருன்னு கண்டுபிடித்துவிட்டேன் என்று சொன்னப்ப சரி நம்ம ஆயில்யன் தான் நான் மெயில் கேட்ட விசயத்தை சொல்லிட்டார் போல என்று ஆயில்யனிடம் தம்பி நான் மெயில் கேட்ட விசயத்தை யாரிடமும் சொன்னீயா என்று கேட்டேன், திரும்பவும் அண்ணே எப்ப ஸ்டார் ஆக போறீங்கன்னு சொல்லுங்க என்று திரும்வும் கேட்க ஆரம்பித்தார், சரி இவருக்கு காந்திய சுட்ட விசயம் தெரியவில்லை போல என்று அடுத்த வாரம் என்றேன்.
பரிசல் பதிவை பார்த்துவிட்டு மெயில் அனுப்பியது யார் என்று தெரிஞ்சும் சொல்லாமல் இருந்த பினாத்தல் சுரேஸ்க்கும், மெயில் அனுப்ப உதவிய சிபிக்கும் என் நன்றிகள்.
குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவருக்குதான் தண்டனை அதிகம் என்று சொல்லுவாங்க. அப்படி எல்லாம் செஞ்சு விக்கிக்கும், வால் பையனுக்கும், சஞ்சய்க்கும் அதிக தண்டனை கொடுத்துவிடாதீங்க.
டிஸ்கி: மெயில் அனுப்பி விளையாண்டா அது என்னடான்னா, பெண் பதிவர்கள், போட்டோ அது இதுன்னு ஸ்பின் ஆனப்ப கொஞ்சம் பயமாகதான் இருந்துச்சு. அப்படியே மெயிண்டெய்ன் செஞ்சாச்சு.
Monday, September 22, 2008
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை!!!
பச்சை தென்னை மட்டையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
படம்2
படம் 4
படம் 4: இப்பொழுது கட்டை விரலால் காலை அழுத்தியதால் அதிக இரத்தம் காலுக்கு பாய்ந்துவிட்டது அது போதும், எனவே குதிகாலை அடுத்த கால் மீது அழுத்தாமல் வைத்துக்கொண்டு, கைகளை படத்தில் காட்டியது போல் மாற்றவும், இப்படி செய்வதால் கைகள் ரிலாக்ஸ் ஆகும். அதனால் கைகள் அழகாகும்.
படம் 5
படம்7
படம்7: கால்களை அப்படியே வைத்துக்கொண்டு கைகளை பப்பரக்கா என்று விரித்து வைத்துக்கொண்டு படுத்து ரிலாக்ஸ் செய்யவும். மூச்சை மெதுவாக விடவும், இப்படி இருப்பது நுரையீரல் கல்லீரல் போன்றவை பலன் அடையும், வெளி அழகுக்கும் மட்டும் இன்று இது உள் ஆரோக்கியத்துக்கும் பயன்படும்.
Wednesday, September 17, 2008
தமிழகத்தில் திரும்ப மன்னர் ஆட்சி வருமா?
Monday, September 15, 2008
முட்டை வாங்குவது எப்படி? டிப்ஸ் பதிவு
இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது யார் வேண்டும் என்றாலும் முட்டை வாங்கலாம், என்ன வாங்க தனி தில் வேண்டும்.
நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில், அல்லது சிலேட்டில் முட்டை வாங்குவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை கொடுத்துவிட்டால் முட்டை மார்க் போட்டுவிடப்போகிறார்கள் என்று, அதில் அத்தனை கிக் இருக்காது. நம் திறமையை காட்டி முட்டை மார்க் வாங்குவதில் தான் ஒரு கிக் இருக்கும்.
முட்டைகள் அவை என் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை, தேர்வானாலும் சரி, சாப்பாடானுலும் சரி, பதிவானாலும் சரி முட்டைகள் எனக்கு பிடித்தவை. பதிவில் ஆம்லேட் போடுவதை வைத்து ஜோடி கண்டுபிடிப்பது என்று எழுதியது செம ஹிட் ஆனது, அதை போல் முட்டையை போட்டோ புடிச்சு போட்டது PIT போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு அழைத்து சென்றது இப்படி என் வாழ்கையில் ஒரு முக்கிய அங்கமாக ஆகிவிட்ட முட்டையை பற்றிய கதை!!!
முன்பே சொன்னது போல் முட்டை வாங்குவது ஒரு கலை, அந்த கலை சிறுவயது முதலே என்னிடம் இருந்தது இதைதான் பார்ன் ஜீனியஸ் என்று சொல்லுவாங்க போல்.
எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் தேர்வு சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்துவிடுவார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் பார்த்து எழுத முடியாதாம், (அப்பவே குறிப்பா சொல்லி இருக்காங்க பெண்கள் வாழ்கையில் முன்னேற உதவமாட்டார்கள் என்று) .
உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி(பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடிசனல் பேப்பர் வாங்கும், அடப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள மெயின் பேப்பரை முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த அடிஸ்னல் பேப்பர் கேட்கும் அந்த புள்ள.
ஸ்கூலில் எல்லாம் அடிஸ்னல் பேப்பர் கேட்டு வாங்கினா ஒரு தனி மரியாதை, நமக்கு எழுத தெரிஞ்ச மேட்டருக்கு தேதி, பெயர், தேர்வு எண் என்று மூன்று வரி போதும் இதில் எங்கே இருந்து முப்பது வரி + முப்பது வரி +முப்பது வரி + முப்பது வரி (நான்கு பக்கமும் முப்பதுவரி என்று எழுதிவிட்டால் இந்த பதிவின் பக்கத்தை எப்படி நிறப்புவது???) எழுதி அடிஸ்னல் பேப்பர் வாங்குவது????
இருந்தாலும் ஒரு கூடப்படிக்கும் புள்ளைய பக்கத்தில் வெச்சுக்கிட்டு எழுதாம எப்படி உட்காந்து இருப்பது? அது இழுக்கு என்று எழுத ஆரம்பிச்சா பேனாவுக்கு பேப்பரில் ஏதோ ஸ்பீட் பிரேக் இருப்பது போல் நகரவே நகராது.
இருந்தாலும் பேப்பரை நிறப்பி அடிஸ்னல் பேப்பர் வாங்கனுமே, அதுக்கு நான் கண்டு பிடித்த டெக்னிக் பேப்பரின் நான்கு புறமும் ஸ்கேல் மொத்தத்துக்கு இடம் விட்டு அழகாக ஸ்கெட்ச் வைத்து மார்ஜின் போட்டு பொட்டி கட்டினால்
எழுத வேண்டிய இடம் டக்குன்னு சின்னதாகிவிடும். எல்லோரும் எழுதி முடிச்சுதான் டெக்ரேட் செய்வாங்க ஆனா நாம எல்லாம் வெறும் பேப்பரையே டெக்ரேட் செஞ்சவோம். அதுபோல் எழுதும் பொழுது ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் ஒரு பத்தியே எழுதும் அளவுக்கு இடம் விடுவேன்.
டெக்ரேட் எல்லாம் செஞ்சு முடிஞ்ச பிறகு ஈயத்தின் பயன்கள் என்ன?என்று இருக்கும் கேள்விக்கு இட்லி பானைக்கு ஈயம் பூச பயம் படுகிறது, சட்டி பானைகளுக்கு ஈயம் பூசவும் அப்படி பூசுவதால் பாத்திரம் சீக்கிரம் வீனாகமலும் சூடு எளிதில் பரவவும் பயன் படுகிறது என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் எழுதி பேப்பரை நிறப்புவேன். பக்கத்தில் இருக்கும் புள்ள அடே இவனும் என்னமோ எழுதி மெயின் பேப்பரை முடிச்சுட்டானே என்று பார்க்கும். அப்ப நம்ம கெத்தா எழுந்திருச்சு சார் பேப்பர் என்று கேட்கும் பொழுது அப்படியே கிளாசே நம்ம திரும்பி பார்க்கும் பாருங்க! நொம்ப பெருமையாக இருக்கும், இதுக்காகவே என்ன என்னமோ எழுதி அடிசனல் மேல அடிசனல் வாங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவேன்.
பேப்பரை நிறப்ப நான் செய்த டெக்னிக்ஸ்
1) பேப்பரின் நான்கு புறமும் மார்ஜின் விட்டு பொட்டி கட்டனும்.
2) ஒருவரிக்கும் அடுத்தவரிக்கும் இடையில்
இம்புட்டு கேப்பாவது இருக்கனும்.
3) கொஸ்டின் நம்பரை மட்டும் எழுதி பதில் எழுத கூடாது.
ஏதேனும் 3 க்கு சிறு குறிப்பு வரைக என்று கொஸ்டின் பேப்பரில் இருந்தால் அதையே திரும்ப எழுதி, கேள்வியை எழுதி பின் பதிலை எழுதவேண்டும்.
4)பொருத்துக என்று இருந்தால் கொஸ்டின் பேப்பரில் இருப்பதை அப்படியே எழுதி திரும்ப நாமும் நம் பங்குக்கும் அதை சரி செய்ய முயற்சிக்கனும்.
இப்படி கஸ்டப்பட்டு எல்லா டெக்னிக்கையும் உபயோகித்து எழுதிய பிறகு
பேப்பர் கொடுக்கும் பொழுது முட்டை மார்க் வாங்க எதுக்குடா இத்தனை பேப்பர் வாங்கின என்று அடி விழும் பொழுதுதான் கொஞ்சம் வெட்கமாக இருக்கும், பிறகு அதுவும் பழக்கம் ஆகிவிட்டது.
Tuesday, September 9, 2008
Sunday, September 7, 2008
ஆற்காடு வீராசாமிக்கு சில யோசனைகள்.
உங்களுக்காக பிளான் மாடல் மேலே, ஜட்டி படம் போட்டால் தமிழ்மணத்தில் சட்ட சிக்கல் வரும் அதனால் போடவில்லை.
காதலிப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சினை, கிராமம், நகரம் என்று எங்குமே காதலிப்பவர்கள் உட்காந்து பேச இடம் கிடைப்பது இல்லை.
கிராமத்தில் என்றால் கரும்பு காடு , பருத்தி காடு என்ற இடங்களுக்கு சென்றால் பூச்சி, கரும்பு சுணை என்று ஏகப்பட்ட பிரச்சினை, நகரம் என்றால் கூட்டம் ஒரு பிரச்சினை அடுக்கு மாடி குடியிருப்பு போல ஒருத்தர் மடி மீது ஒருவர் உட்காந்து பேச வேண்டி இருக்கு, அது மட்டும் இன்றி ரோப் கார் பார்கனும் என்றால் பழனிக்கு செல்லவேண்டி இருக்கு ஆகையால் ரோப் கார்களை சும்மாக லையன் கம்பிகளில் தொங்க விட்டு அதை தின வாடகை வாங்கினால் கூட்டம் அதிகமாக வரும், ரோப் கார்களை இயக்க மின்சாரம் தேவை படும் என்று நினைக்கிறேன் ஆனால் இங்கு சும்மா நிறுத்தி வைத்து இருந்தால் போதும்.
பிளான் மாடல் கீழே
என்னை இப்படி சீரியசாக பதிவு எழுத வைத்த பரிசல், கோவி, கார்கி அனைவருக்கும் நீங்கள் சொல்லும் பாராட்டுகள் போய் சேரட்டும்.
டிஸ்கி: பரிசல் பதிவில் சொல்லி இருப்பது போல் ஏதாவது செஞ்சு மின்சாரத்தை மிச்சம் செஞ்சு அதை ஒரு கம்பியில் எடுத்து ஆற்காடார் டிக்கியில் கொடுக்கவும் அப்பயாவது பல்பு எரிஞ்சு ஏதும் செய்கிறாரா என்று பார்க்கலாம்.
சரோஜாதேவி மன்னித்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்!!!
நேற்று சக பதிவர் ஆட்டோ சங்கர் பதிவில் இரவு சுந்தரிகள் பட விமர்சனம் இருந்ததைகண்டு அவரது பதிவை படிக்கப்போனேன். ஷகீலா அவ்வளோவாக திறமை காட்டவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தார், அதை நினைத்து வருத்தப்பட்டேன்.
அவரது பிளாக்கின் ஓரத்தில் இருந்த &@#@#@@# என்றோரு மேட்டர் படத்தை போட்டிருந்தார், எனக்கு அதை பார்க்கும் ஆவல் அதிகரிக்கவே, க்ளிக்கிப்பார்த்தேன். என்னுடையது உண்மைதமிழன் வைத்து இருக்கும் மானிட்டர் போன்றது ஒன்னுமே சரியாக தெரியவில்லை ஆகையால் எங்கு LCD பிளாட் ஸ்கிரீன் இருக்கு என்று தேடி அலைந்து சஞ்சய் வீட்டுக்கு சென்றேன், அங்கு ஏற்கனவே அது ஓப்பன் ஆகி இருந்தது, திரும்ப முதலில் இருந்து ஓடவிட்டு பார்க்கும் பொழுதே என்னால் உட்காரமுடியவில்லை.
அது 1979ல் வந்த சரோஜாதேவி புத்தகத்தின் காவிய படைப்பான சசியின் இரவுகள் அப்பட்டமான காப்பி என்று தெரிந்தது.
அப்படியே அச்சு அசலாக காப்பி அடித்து இருக்கிறார்கள், இதில் கொடுமையின் உச்சக்கட்டமாக காஸ்டியூம் டிசைனிங் ஆட்டோ சங்கர் என்று போட்டு இருந்தது, எங்கேயாவது காஸ்டியூம் இருக்கா அல்லது எங்கேயாவது சரோஜா தேவி பெயர் வருகிறதா என்று பார்க்கவே திரும்பி திரும்பி அதை பத்து முறை பார்த்தேன். (நம்புங்கப்பா அதுக்காகவேதான்திரும்ப திரும்ப பார்த்தேன்).
சரோஜாதேவி புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த புத்தகம் இன்றும் என்னிடம் இருக்கிறது அவ்வளோ அருமையான புத்தகத்தை படமாக்கி இருக்கிறார்களே நன்றி என்று ஒருவார்த்தை போடவில்லையே என்ன செய்யலாம்? டவுன் லோட் செய்து வீட்டில் போய் பார்கலாமா என்று டவுன் லோட் செய்யப்பார்த்தேன் முடியவில்லை, அதனால் நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை.சரி நம்மால் என்ன செய்யமுடியும் இப்படி ஒரு படத்தில் நடிக்கதான் முடியுமா? அல்லது எடுக்கத்தான் முடியுமா என்ற விரக தீயில் அவருக்கு ஒரு பின்னூட்டம்போட்டேன் அந்த வீடியோவை எனக்கு அனுப்பமுடியுமா என்று?
இரவு திரும்ப வந்து பார்த்தால் அந்த பின்னூட்டமும் நீக்கப்பட்டு இருந்தது, அதைவிட கொடுமையாக அந்த படமும் நீக்கப்பட்டு இருந்தது.
ஆட்டோ சங்கர் ஏன் அந்த பின்னூட்டத்தையும் , படத்தையும் நீக்கவேண்டும்?
(ஆட்டோ சங்கர் பெயர் காரணம் : எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ஆட்டோவில் வைத்து காலி செய்வது என்பதால் நான் எங்கும் கேள்வி கேட்கவில்லை!)
பிற்ச்சேர்கை: பதிவு காமத்தை லைட்டாக டச் செய்வதால் பதிவுலநீதிபடி இந்த பதிவை ஆசான் ஜ்வோராம் சுந்தருக்கு டெடிக்கேட் செய்கிறேன்.
(சும்மாச்சுக்கும் தான் எழுத்துகலர் நீலம்:)))
சஞ்சய்க்கு ஒரு அட்வைஸ் + சிவாவுக்கு மொய்
என்னைமாதிரி ஒருவன் கேக் செஞ்சு இருக்கான் போல சஞ்சய் காந்திக்கு பதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ராகுல் காந்தின்னு போட்டு இருக்கான்.
********************************$$$$$$$$$$$*******************************
மங்களூர் மைனர் குஞ்சு சிவா உன் கல்யாணத்துக்கு என்னால் வரமுடியவில்லை என்ற வருத்தத்தைவிட சஞ்சய், நந்து எல்லாம் உன் கல்யாணத்துக்கு வருகிறார்களே என்ற வருத்தம் தான் அதிகமாக இருக்கிறது.(மொய் பணம் உசார்)
நந்து வருகிறார், ஜீவ்ஸ் வருகிறார் என்ற நம்பிக்கையில் போட்டோகிராப்பர்ஸ் யாரையும் வைக்காமல் இருந்து விடாதே, அவர்கள் எடுத்த போட்டோவுக்கு போஸ்ட் புரோடக்ஸன் செய்யுறேன் செய்யுறேன் என்று செய்வார்கள் அதுக்குள் உன் பொண்ணுக்கு புட்டு சுத்தும் விழாவுக்கு போட்டோ எடுக்க திரும்ப கூப்பிடும் படி ஆகிவிடும்.
உன் கல்யாணத்துக்கு பதிவுலக நண்பர்கள் சார்பாக நாங்கள் வைக்க போகும் மொய்.
தலை பாலபாரதி -----10001 ரூபாய்.
குசும்பன் -ரிப்பீட்டேய்
நந்து- ரிப்பீட்டேய்
ஆயில்யன்- ரிப்பீட்டேய்
ஜீவ்ஸ் -ரிப்பீட்டேய்
புதுகைத்தென்றல்-ரிப்பீட்டேய்
நிஜமாநல்லவன் -ரிப்பீட்டேய்
தமிழ்பிரியன் - ரிப்பீட்டேய்
பூங்கொடி அப்பா- ரிப்பீட்டேய்
சஞ்சய்- மொய்யோடு அபீட்டேய்
Wednesday, September 3, 2008
மீண்டும் மீண்டும் சிரிப்பு + காமெடி டைம்!
#### @@@@@@ ***** #### @@@@@@ ***** #### @@@@@@ ***** #### @@@@@@ ***** #### @@@@@@ ***** இப்படி கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுச்சு அட என்ன ஏதுன்னே சொல்லாம இப்படி திட்டினா எப்படி சொல்லிட்டு திட்டுன்னு கேட்டா இனி எவனாவது போன் செஞ்சிங்க அய்யானார் இருக்காரான்னு போலீஸ்க்கு போவேன் என்று சொல்லிட்டு கட் செஞ்சுட்டு.
நான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஒரு சீரிய கொள்கையோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் ஆள். எப்படி இதை அப்படியே விட்டு விடுவது.
உடனே அபி அப்பாவுக்கு போன் போட்டு என்ன அபி அப்பா நம்ம தோஸ்த் ஒருத்தர் ஊருக்கு போறார் அவரைவழி அனுப்பதான் போக முடியாது அட்லீஸ்ட் போன் செஞ்சாவது பேசலாம்ல்ல என்று கேட்க பழய நம்பர் கொடுப்பா என்று அபி அப்பா கேட்க , முன்பு அவர் வைத்து இருந்த நம்பர் தான் என்று சொல்ல சரி செய்கிறேன் என்றார்.
கொஞ்ச நேரம் கழித்து அபி அப்பா என்ன குசும்பா வேற யாரோ எடுக்கிறாங்க என்ன விசயம் என்று கேட்க, அதை எல்லாம் விடுங்க இப்படி இப்படி எல்லாம் திட்டினாங்களா என்று என்னிடம் இருந்த லிஸ்டை வைத்து சரிபார்த்து கேட்க அவரோ ச்சே ச்சே அவுங்க அப்படி யாரும் இல்லை என்று சொல்லிட்டு வெச்சுட்டாங்க என்று சொன்னார். எங்களுக்கா தெரியாது அந்த அம்மணி எப்படி திட்டி இருக்கும் என்று.
இது சரியாவராது திட்டும் வாங்கனும் வாங்கிய திட்டை அப்படியே சொல்லவும் செய்யனும் அப்படி யாரு மாட்டுவா என்று யோசிக்க
உடனே நினைவுக்கு வந்தவர் சென்ஷி.
சென்ஷிக்கு போன் போட்டேன் ஏற்கனவே சென்ஷி என்னிடம் இருந்து வாங்கிய ஆப்பினால் இரண்டு நாட்கள் மொபைலை தொடாமலேயே இருந்தார். அதனால் எப்பொழுதும் நான் போன் செஞ்சாலே உசாரா இருப்பதாக அவருக்கு ஒரு நினைப்பு . அதனால் இந்த முறை வேறு முறையில் டீல் செய்யனும் என்று...
இனி பேசியது அப்படியே!!
நான்: டேய் நீ எல்லாம் ஒரு பிரண்டா?
சென்ஷி: ஏன் மச்சான் திட்டுற? ஏன்?
நான்: நம்ம ஆளு ஒருத்தன் ஊருக்கு போறார், அதுவும் விசா கேன்சல் செஞ்சுட்டு, ஒருத்தராவது போன் செஞ்சு அவரிடம் பேசினீங்களா? அப்படி என்னய்யா தப்பு செஞ்சார்? பின் நவீனத்துவ கவிதை, கதை எழுதினா தப்பா என்று கேட்க?
சென்ஷி: இல்லடா மச்சான் கோவ படதா, அவரு மொபைலை ஆபிஸில் சரண்டர் செஞ்சுடுவேன் என்றார் அதான் செய்யவில்லை!
நான்: ஏன் உன்னிடம் அவரு பழய நம்பர் இல்லையா? அதுக்கு செய்வது என்று கேட்க?
சென்ஷி: ஆமாண்டா மச்சான் இருக்குடா, மச்சான் அப்ப அப்ப நீ சில நல்ல காரியம் செய்யுறடா! ரொம்ப தேங்க்ஸ்டா, உன்னை போய் நான் தப்பா நினைச்சிட்டேன் டா!
நான் : சரி சரி என்னிடம் பேசி டைத்தை வேஸ்ட் செய்யாத அய்யனாரிடம் பேசு என்றேன்.
(கொஞ்சம் நேரம் கழித்து)
சென்ஷி: டேய் மச்சான் நம்பர் சரிதானே போனை எடுக்கவே மாட்டேங்கிறார், இதோட மூன்று முறை செஞ்சுட்டேன் ?
நான்: பேக்கேஜ் செக்கிங் செஞ்சுக்கிட்டு இருப்பார், கொஞ்ச நேரம் கழித்து முயற்சி செய்! (அப்பொழுது அய்யனார் வீட்டில் படுத்து இருந்த விசயத்தை சொல்லவே இல்லை).
சென்ஷி: சரி டா மச்சார், அப்படியே கோபி நம்பரையும் அவருக்கு மெசேஜ் செஞ்சுடுறேன் !
நான்: முடிஞ்சா கோபியையும் பேச சொல்!
சென்ஷி: சரிடா மச்சா பேசிட்டு அப்புறம் பேசுறேன்.
ஒரு 20 நிமிடம் கழித்து சென்ஷியிடம் இருந்து போன்.
சென்ஷி: ஹலோ! ஏன் டா ஏன்?
நான்: இது இது எல்லாம் வாங்கினீயா? (லிஸ்டை சரி பார்த்தேன்) நான் வாங்காததும் அதில் இருந்தது.
சென்ஷி: டேய் நான் திட்டுவாங்கினது கூட பெருசா தெரியலை, அந்த நம்பரில் இருந்து போன் வந்துச்சு பாவம் ஊருக்கு போறவன் எதுக்கு காசை வேஸ்ட் செய்யனும் என்று கால் கட் செஞ்சுட்டு, நான் என் மொபைலில் இருந்து போன் போட்டு திட்டுவாங்கினேன் டா!
நான்: ஏன்னா நீ ரொம்ப நல்லவன் என்று சொல்ல.
அப்ப அழுதுக்கிட்டே போனை வெச்சுட்ட சென்ஷியிடம் பேச திரும்ப போன் செஞ்ச்சாலே எடுக்க மாட்டேங்கிறார், அழுதுக்கிட்டு இருக்கார் யாராவது போன் போட்டு ஆறுதல் சொல்லுங்களேன்:) சென்ஷி நம்பர் யாருக்கும் வேண்டும் என்றால்என்னை தொடர்பு கொள்ளவும்!
(கடைசிவரை அய்யனார் புது நம்பர் என்னிடம் இருந்தது சென்ஷிக்கு தெரியாது, தெரிஞ்சா ரொம்ப பீல் செய்வார்)