Wednesday, November 21, 2007

விருப்பம் இல்லை என்றாலும் ரேஷ்மாவுக்காக இது கூட செய்யவில்லை என்றால் எப்படி?

சரியாக தேதி நினைவில்லை ஆனால் அன்றுதான் அவள் என்னிடம் முதன் முதலாக பேசினாள், லைக்யூ லைக்யூ என்ற சிட்டிசன் பாடலை ரிங் டோனாக கொண்ட என் மொபைல் சினிங்கியது, புதிய நம்பராக இருந்ததால் யாராவது கிளைண்ட் தான் போன் போட்டு திட்ட போகிறான் என்ற பயத்திலேயே எடுத்து ஹலோ என்றேன், மறு முனையில் நாய் போல யாராவது கத்துவார்கள் என்று நினைத்தஎனக்கு இனிய ஒரு பெண் குரல் ஹலோ என்றது சரி ராங் நம்பர் தான் போல என்று நினைத்த எனக்கு சராவா என்று கேட்டவுடன்மிகவும் ஆச்சர்யமாக போய்விட்டது.

மொபைலில் லோவாக இருந்த பேட்டரி கூட சர் என்று எகிறி புல் ஜார்ஜ் ஆனது, இருக்காத பின்னே முதன் முதலில் என் மொபைலுக்கு ஒரு பெண் குரல் அதுவும் என் பெயரை சுருக்கமா யாரும் சரா என்று கூப்பிட்டால் உருகி போய்விடுவேன்.மொபைலும் அது பங்கு விசுவாசம் காட்டியது. அழகாய் பேசினாள் மிகவும் இனிய குரல் கேட்டுகொண்டே இருக்கலாம் போன்று இருந்தது. எப்படி என் நம்பர் உங்களுக்கு கிடைத்தது என்னை எப்படி உங்களுக்குதெரியும் என்ற என் கேள்விக்கு சிரிப்பு ஒன்றையே பதிலாக தந்தாள்.

என் பிறந்த நாளை கூட சரியாக சொன்னாள் எதிர் பார்கவில்லை அதை. அவள் பேச்சில் திக்கு முக்காடி போனேன்.

சரி மறுநாள் கூப்பிடுகிறேன் என்று சொன்னால் மனசுக்குள் பட்டாம் பூச்சு பறக்கும் என்றார்கள் அது எல்லாம் வெளியே வந்து பறந்தது. அன்றைய தினம் மிகவும் மகிழ்சியாக தூங்கினேன் எங்களுக்கு இடையேயான பேச்சு மிகவும் நெருங்கியது கடந்த ஒரு வாரமாக இப்பொழுது எல்லாம் ஹாய் டியர் என்றே கூப்பிடும் அந்த இனிய குரலுக்காகவே காத்திருக்க தொடங்கினேன். தினம் ஒரு முறையாவது அவள் என்னிடமும் நான் அவளிடமும்பேசுவது வழக்கம் ஆனது.

என்னிடம் கடைசியாக அவள் கேட்டால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் அவளுக்காக அதை செய்தேன், அதன் பிறகு அவளுக்கும் எனக்குமான உறவு சடார் என்று நின்றுவிட்டது.

இதோ அவள் நினைவாக கையில் ஒரு கிரிடிட் கார்டு.

30 comments:

Anonymous said...

naan ethirparthen........ho.....ho..hi....hi...

said...

jaseela said...
naan ethirparthen........ho.....ho..hi....hi...///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(((((

said...

jaseela said...
naan ethirparthen........ho.....ho..hi....hi...///

சூப்பரு....ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்.

Anonymous said...

ச்சே உங்க நல்ல குணத்தை இப்படி பயன்படுத்திகிட்டாங்களா :((
:))

said...

இப்படி கூட டெலி மார்கெட்டிங் எல்லாம் பண்ணுவாங்களா. . . . ?

ஆகா உசாரா இருக்கனும் போல. . . .

said...

உங்களுக்கு அந்த கிரெடிட் கார்ட யூஸ் பண்ண கஷ்டமா இருந்தா ஒரு ஆட் ஆன் கார்ட இந்த தங்கச்சி பேர்ல வாங்கி அனுப்புங்க. நான் செலவு பண்ணிக்கறேன் :))

said...

அண்ணே ரோடுல தனியாக போவாதிங்க அப்புறம் சரா......ரா ரான்னு பாட போறானுங்க :)

said...

may i come inside??

said...

ஆஹா! இப்படிப்போவுதா கதை!

நீ இவ்வளோ நல்லவன்னு தெரியாம போயிடுச்சே! சரி போகட்டும்.. இனி சுஷ்மா கவிதா மோனுன்னு எனக்கு போன் பண்றவங்களுக்கெல்லாம் உன்னோட நம்பரைக் கொடுத்திடறேன்.. விருப்பம் இல்லாட்டியும் நீ உதவி பண்ணுவேன்னு சொல்லியும் அனுப்பறேன்.. உனக்கும் பொழுது போகும்..

said...

Baby Pavan said...
///சூப்பரு....ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்////

குட்டி பையா நீதான் ஒழுங்கா கமெண்ட் போட்டுக்கிட்டு இருந்த இப்ப நீயும் கெட்டு போய்ட:(

said...

துர்கா|thurgah said...
ச்சே உங்க நல்ல குணத்தை இப்படி பயன்படுத்திகிட்டாங்களா :((////


அவ்வ்வ்வ் :((( அதே அதே!!!

said...

delphine said...
அட பாவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ//

அப்படின்னு நான் சொல்ல வேண்டியது இது:(((

said...

வெங்கட்ராமன் said...
இப்படி கூட டெலி மார்கெட்டிங் எல்லாம் பண்ணுவாங்களா. . . . ?

ஆகா உசாரா இருக்கனும் போல. . . .///

ஹி ஹி அந்த பப்பு எல்லா வேகாது அவுங்க பேசுற பேச்சில் பாறை போல இருந்த நானே உருகி போய்டேன்:)))

said...

G3 said...
உங்களுக்கு அந்த கிரெடிட் கார்ட யூஸ் பண்ண கஷ்டமா இருந்தா ஒரு ஆட் ஆன் கார்ட இந்த தங்கச்சி பேர்ல வாங்கி அனுப்புங்க. நான் செலவு பண்ணிக்கறேன் :))///

வாங்க வாங்க இருக்குற தங்கச்சி பத்தாது என்று நீங்களும் அந்த லிஸ்டிலா? அவ்வ்வ் நல்லா இருங்க தங்கச்சிங்களா தங்கச்சிங்களா :((((

said...

//மங்களூர் சிவா said...
may i come inside??
/


என்ன சிவா சின்னபுள்ளதனமா பர்மிஷன் கேட்டுக்கிட்டு!

said...

கோபிநாத் said...
அண்ணே ரோடுல தனியாக போவாதிங்க அப்புறம் சரா......ரா ரான்னு பாட போறானுங்க :)///

ரா ரான்னு பாடினா பிரச்சினை இல்லை சரசுக்கு ரா ரான்னு பாடினாதான் பிரச்சினை:)))

said...

மங்களூர் சிவா said...
may i come inside??///

வாங்கோ வாங்கோ:)

said...

பினாத்தல் சுரேஷ் said...
ஆஹா! இப்படிப்போவுதா கதை!

நீ இவ்வளோ நல்லவன்னு தெரியாம போயிடுச்சே! சரி போகட்டும்.. இனி சுஷ்மா கவிதா மோனுன்னு எனக்கு போன் பண்றவங்களுக்கெல்லாம் உன்னோட நம்பரைக் கொடுத்திடறேன்.. விருப்பம் இல்லாட்டியும் நீ உதவி பண்ணுவேன்னு சொல்லியும் அனுப்பறேன்.. உனக்கும் பொழுது போகும்../////

எக்ஸ் கூயுஸ் மீ பினத்தலார் வீட்டு மேடம் இங்க இவர கொஞ்சம் கவனியுங்க என்னான்னு? யார் யாரோ போன் செஞ்சு பேசுறாங்க, அவர் மொபைல் வேற எப்ப பார்த்தாலும் பிஸியா இருக்கு.

said...

சரா
சரா
......
.....
....
...
கூப்பிட்டு பார்த்தேன்....!

said...

ஆனாலும் ரேஷ்மாகிட்ட கோபியோட நம்பர கொடுத்தியே.. அதத்தான் எல்லோரும் கொலைவெறின்னு சொல்வாங்களா :))

Anonymous said...

kuppura vilunthalum meesaiyil mannu ottala - aamaa ottala

Anonymous said...

சரத்குமார்: மக்கள் கருத்து கேட்ட பின்பே கட்சி ஆரம்பித்தேன்.

டவுட்: மக்கள் என்று நீங்க சொல்வது மனைவி, மக்கள் என்று சொல்லுவாங்களே அந்த மக்களை தானே?

good joke in deed..nalla presence of mind

said...

பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் அழகாய்ப பேசி கவுத்துடுறாங்கப்பா.

ஒரு பர்செண்ட் என்கிறார். 5300திர்ஹத்துக்கு 97 திர்ஹம் போடுகிறார். கேட்டால் என்னென்னவோ கணக்கு சொல்றார். போன மாதம் வரை வட்டி வாங்கியாச்சு. அப்புறம் ஏனய்யா பழைய கணக்கை சொல்கிறீர் என்றால் கிரெடிட் கார்டு அப்படித்தான் என்கிறார்.

அப்படியே பத்திரமா, எடுக்காத இடத்தில, அடி பெட்டியிலே போட்டு வையுங்க குசும்பு.

உபயோகிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது - நிரந்தரக் கடன்காரனாகி விடுவோம்.

said...

இப்பவே எங்ககிட்ட மூணு கார்டு சேந்துடுச்சி மாமே...ஹிஹி..

said...

ஹாஆஆஅ ஈக்குன தொப்புனா அகுன விழுமா

said...

உங்க சொந்த கதையா?? :ஓ
:-(

said...

உங்க க்ரேடிட் கார்ட் நம்பர் என்னவோ? :-P

Anonymous said...

ஹை...ஜாலி, உங்களையும் கவுத்துட்டாங்களா? அந்த கார்டை வச்சுகிட்டு நீடூழி வாழ்க.

said...

\\என்னிடம் கடைசியாக அவள் கேட்டால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் அவளுக்காக அதை செய்தேன்,\\

என்ன குசும்பன் இது, குரலிலேயே கவுந்துட்டீங்க......

said...

ஆயில்யன் said...
///கூப்பிட்டு பார்த்தேன்....!///

நாங்க எல்லாம் திரும்ப கூட மாட்டோம்ல:)))

***************************
சென்ஷி said...
ஆனாலும் ரேஷ்மாகிட்ட கோபியோட நம்பர கொடுத்தியே.. அதத்தான் எல்லோரும் கொலைவெறின்னு சொல்வாங்களா :))///

இதுக்கு பேருதான் சொ.செ.சூ என்கிறது தானா சனியனுக்கு அப்ளிகேசன் போடுறீயே சென்ஷி உனக்கு போன்ல கண்டம் என்பது மறந்து போச்சா , நாளையில் இருந்து வரும் பாருடி உனக்கு கால்ஸ்.

************************

Anonymous said...
kuppura vilunthalum meesaiyil mannu ottala - aamaa ottala///

அதே அதே...:)))

*************************
சுல்தான் said...
பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் அழகாய்ப பேசி கவுத்துடுறாங்கப்பா.///

நம்ம கிட்ட நோ சான்ஸ்:))
கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்று சொல்லிடுவேன்.

////உபயோகிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது - நிரந்தரக் கடன்காரனாகி விடுவோம்.///

அல்ரெடி ஆயாச்சு:)))

*****************************

ரசிகன் said...
இப்பவே எங்ககிட்ட மூணு கார்டு சேந்துடுச்சி மாமே...ஹிஹி..///

அட நம்ம கூட்டாளி:))

*****************************

நாகை சிவா said...
ஹாஆஆஅ ஈக்குன தொப்புனா அகுன விழுமா///

சூப்பர் புலி:) (யப்பா யாரும் என்னா சொல்லி இருக்கார் என்று கேட்டுவிடாதீங்க நான் சாட்டில் கேட்டு விட்டு அசிங்க பட்டது போதும்:(((

**************************

CVR said...
உங்க சொந்த கதையா?? :ஓ
:-(////

ஆமாம் ஆமாம்

*****************************
.:: மை ஃபிரண்ட் ::. said...
உங்க க்ரேடிட் கார்ட் நம்பர் என்னவோ? :-P////

நம்பர் 0000 0000 0000 0000
(நான் வாங்கிய மார்க் அல்ல)

**************************

இஞ்சிமொரப்பா said...
ஹை...ஜாலி, உங்களையும் கவுத்துட்டாங்களா? அந்த கார்டை வச்சுகிட்டு நீடூழி வாழ்க///

நன்றிங்கன்னா:))

***********************

Divya said...
///என்ன குசும்பன் இது, குரலிலேயே கவுந்துட்டீங்க......///

இளகிய மனசு, சின்ன பிள்ளை வேற எல்லாம் ஏமாத்துறாங்க:(((

***************************