Sunday, November 11, 2007

பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அது தப்பா?

எங்க பள்ளிகூடம் கோ-எஜிகேசன், கூட பல ஊரில் இருந்தும் பல பொண்ணுங்க இருந்தாங்க அப்பொழுதில் இருந்து நமக்கும் பொம்பள புள்ளைங்களுக்கும் ஆகவே ஆகாது எப்ப பார்த்தாலும் முதல் மார்க் அது இதுன்னு வாங்கிட்டு நம்மை ஏகத்துக்கும் டென்சன் ஆக்குவாளுங்க, அது கூட பரவாயில்லை எங்களை பார்த்து வாடா போடான்னு கூப்பிடுவாளுங்க அங்கதான் ஆரம்பிச்சிது வினை. ஏய் எங்களை வாடா போடான்னு கூப்பிட்ட நல்லா இருக்காது ஆமா, ஒழுங்க பேர் சொல்லி கூப்பிடு என்று சுமதியிடம் நான் சொல்ல முடியாது டா அப்படிதான் டாகூப்பிடுவேன் டா என்று சொன்னதும் ஏய் அப்புறம் நானும் வாடி போடின்னு கூப்பிடுவேன் டி என்று சொல்ல வாய் பேச்சு கை கலப்பானது.

அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன்,கிளாசுக்கு போனா சங்கு சத்தம், ஊர்ல மதியம் ஒரு மணிக்குதானே சங்கு ஊதும் ஆனா என்ன டா அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா அடிவாங்கின சுமதி கத்துறா, என்ன டா இது அவளும் தான் அடிச்சா நாம என்னா இப்படியா ஊரகூட்டினோம் என்று நினைச்சுக்கிட்டு இருக்கும் பொழுதே அப்படியே கொத்தா கோபால் சார் தூக்கிட்டு போனதுதாங்க தெரியும் சட சடன்னு ஒரே சத்தம், டின்னு கட்டுவது என்று கேள்வி பட்டு இருக்கேன் அன்னைக்குதான் பார்த்தேன் சரி விடு விடு போர் வீரனுக்கு இது எல்லாம் சகஜம் என்று வந்து பார்த்தா இஇன்ன்னு சிரிக்கிறா அவ,அடி பாவி நடிச்சியாடின்னு மனசுக்குள்ளே கருவிக்கிட்டு.

உடனே நண்பர்களை எல்லாம் கூட்டி டேய் இது ஒட்டு மொத்த ஆண் சமுகத்துக்கே வந்த இழுக்கு இனி அவளுங்க யாரும் டா போட்டு கூப்பிட்டா நீங்களும் டீ போட்டுகூப்பிடனும் என்று சொல்லி சபதம் எடுத்து விட்டு கலைந்தோம்.

கொஞ்சநாட்களில் சுமதி, கவிதா, புனிதவள்ளி என்று எதிரிகள் லிஸ்ட் அதிகமாகிட்டே போனது டெய்லி அவளுங்களும் அடிவாங்கமா இருக்க மாட்டாளுங்க,அவுங்க வீட்டுபாட நோட்டில் இங்கை ஊற்றி மூடி வைத்து விடுவது புஸ்த பையில் இருக்கும் புத்தகத்தை வேறு யாரோட பைக்காவது மாற்றிவிட்டு அந்த பையில் மண் குப்பை எல்லா கொண்டு நிரப்பி வைப்பேன்.கிளாஸ் சாரிடம் போய் புகார் கொடுப்பாங்க ஆனால் குற்றத்தை நான் தான் செஞ்சேன் என்பதற்கு போதிய சாட்சிகள் இல்லாததால் நான் விடுதலை ஆகிவிடுவேன்,இப்படியே ஒரு ரெண்டு வருசம் ஆனது 7 வது 8 வது படிக்கும் பொழுது பேச்சு வார்த்தை கட் ஆனது பேசிக்க மாட்டோம். கிளாசுக்கு வரும் நடராஜ் சார் என்ன செய்யவார் கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்றால் பொண்ணுங்களை விட்டு குட்ட சொல்லுவார் அது அப்ப பெரிய அவமானம். ஒரு பொண்ணு கையால அடிவாங்குறியே புத்திவரவில்லை என்றுவேறு திட்டுவார்.

நம்ம எப்ப கரீட்டா பதில் சொல்லி இருக்கோம் அங்க பொண்ணுங்க எப்ப டா நான் மாட்டுவேன் என்று காத்துக்கிட்டு இருப்பாளுங்க,அங்கேருந்து வந்து முக்கி முக்கி ஓங்கி வேகமா குட்டுவாளுங்க அது அவளுங்களுக்கு வேகம் ஆனா நம்ம மண்டை தான் ஸ்டாராங்கான மரமண்டையாச்சா அதனால் வலி இருக்காது.என்னமோ ஒரு சிங்கத்தை குட்டி சாச்சுட்ட நிம்மதியில் போய் உட்கார்ந்து இருப்பாளுங்க.

அடுத்த முறை அவுங்க பதில் சொல்லாத பொழுது அதிகமாக கொட்டு வாங்கியது யார் என்ற தகுதியின் அடிப்படையில் நமக்குதான் அவுங்களை குட்ட வாய்பு கிடைக்கும், விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சும்மா நங்குன்னு ஒரு குட்டுவைப்பேன் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் வரைக்கும் அழுகை நிறுத்தாதுங்க. மண்டைய தடவி தடவி பார்த்துக்கிட்டு இருக்குங்க வீங்கி இருக்கான்னு மற்ற பொண்ணுங்கஎல்லாம் குட்டி வாங்கியவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு என்னை ஒரு முறை முறைப்பாங்க பாருங்க அப்ப நமக்கு அது ஏதோ ஆஸ்கார் அவர்ட் கொடுத்த மாதிரி.

நம்ம கூட்டதில் சில குள்ள நரிங்க இருப்பானுங்க போய் குட்டுங்கடான்னா அந்த பக்கம் போய் காசு கொடுத்தா யானை தும்பிக்கையை தலையில் வைக்கும்ல்ல அதுபோல நைசா வலிக்காம குட்டுவது போல் நடிச்சுட்டு வந்துடுவானுங்க. அவளுங்களும் அந்த நன்றி கடனை கிளாஸ் டெஸ்டில் காட்டுவாளுங்க பெஞ்சின் இரு மூலையிலும் இரண்டு பெண்கள் நடுவில் ஒரு பையன்என்று உட்கார வெச்சு டெஸ்ட் வைப்பாங்க, அப்பொழுது குட்டுவது போல் நடிச்ச குள்ள நரிங்களுக்கு மட்டும் பேப்பரை காட்டிடுவாளுங்க.

அப்புறம் 9வது படிக்கும் பொழுது தனி தனி கிளாசில் போட்டுவிட்டானுங்க,பிறகு ரெண்டு வருசம் கழிச்சு 11ல் திரும்ப ஒன்னா படிக்கும் பொழுதுதான் வாழ்கையில் எத்தனை பெரிய தப்பை செஞ்சு இருக்கோம் என்று புரிஞ்சது, ஆமாங்க அழகா தாவணி போட்டுக்கிட்டு அம்சமா இருந்தாளுங்க போய் பிரண்ட் ஆகிக்கலாம் என்று பார்த்தால் அப்பயும் நம்ம மேல இருந்த கோவம் தீரல போல! பேச மாட்டாளுங்க சரி இப்ப யாரும் குட்ட சொன்னா போய் நானும் குள்ள நரி ஆகி சமாதானம் ஆகிடலாம் என்று பார்த்தா கடைசிவரை அதுக்கு வாய்பே இல்லாம போச்சுங்க.

அப்புறம் காலேஜ் தஞ்சை பூண்டி கலை கல்லூரி அது ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி அதனால் எனக்கு கேர்ள் பிரண்டு என்ற ஒன்று வாழ்கையில் அமையவே இல்லை. நான் எப்படா காலேஜ் முடிப்பேன் என்று பிரின்ஸ் காத்துக்கிட்டு இருந்தார் போல நான் முடிச்ச அடுத்த வருடத்தில் இருந்து கோ-எஜிகேசன் ஆக்கிட்டார்:((( என்ன கொடுமை சார் இது, நான் அப்படி என்ன பாவம் செஞ்சேன்.

தலைப்புக்கு பதில் கேர்ள் பிரண்டு கிடைக்காமல் போகும்.

42 comments:

said...

அய்யாவுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டதோ!
வூட்டுல சொல்லியாச்சா இல்லையா :))

said...

பாரி.அரசு said...
அய்யாவுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டதோ!
வூட்டுல சொல்லியாச்சா இல்லையா :))///


பாரி அப்படி எல்லாம் இல்லைங்க, இப்ப ஸ்கூல் படிக்கும் "பொடியன்" எல்லாம் பிளாக் ஆரம்பிப்பதால் அவுங்க வாழ்கையிலும் இதுபோல் ஒரு துக்க சம்பவம் நடக்க கூடாதேன்னு ஒரு அக்கரைதான்.

இப்படிதான் என் மாப்பிளை நான் ஊருக்கு போய் இருக்கும் பொழுது விளையாட போனவன் சமத்தா என் மடியில் திரும்ப வந்து உடகார்ந்துக்கிட்டான் என்னாடான்னு பார்த்தா பக்கத்து வீட்டு பொண்ணை நொங்கிட்டு வந்து இருக்கான். அப்புறம் அவனிடம் நீயும் என்னை போலவே இருக்காத டான்னு சொன்னேன். எல்லாம் ஒரு சமூக சேவைதான் என்ன நான் சொல்வது?

said...

அண்ணனுக்கு ஒரு கேர்ள் பிரண்டு வேனும்.

said...

நீங்க 12-வது வரை ஒரே ஸ்கூலா?

அதான் இந்த பிராபளம். பட் நாங்க அப்பப்ப மாறிட்டோம்ல.

said...

பாரி அப்படி எல்லாம் இல்லைங்க, இப்ப ஸ்கூல் படிக்கும் "பொடியன்" எல்லாம் பிளாக் ஆரம்பிப்பதால் அவுங்க வாழ்கையிலும் இதுபோல் ஒரு துக்க சம்பவம் நடக்க கூடாதேன்னு ஒரு அக்கரைதான்.

மாம்ஸ் வேண்டாம் எங்க கூட மோதாதீங்க....இப்பவே சொல்லிட்டென்...அப்பிறம் இந்த பாம்பு எல்லாம் உங்க ஜோபிகுள்ள விட்டிடுவோம்....

http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_10.html

said...

கடைசி வரைக்கும் என்னால கோ எஜுகேஷன்ல படிக்க முடியலையே நான் இன்னா பண்றது நண்பா...!!!

said...

J K said...
அண்ணனுக்கு ஒரு கேர்ள் பிரண்டு வேனும்///

இந்த பாட்டை நானும் பாடினால் காலான கடைசியில் சங்கரா சங்கரான்னு சொல்லுவது போல் என்று சொல்லி என்னை அமுக்கிபோட்டுவிடுகிறார்கள் JK :((((

said...

J K said...
நீங்க 12-வது வரை ஒரே ஸ்கூலா?

அதான் இந்த பிராபளம். பட் நாங்க அப்பப்ப மாறிட்டோம்ல.///

எங்க அப்பாவும் ஆபிசரா இருந்தா மாறி இருக்கலாம்:)

said...

Baby Pavan said...
///மாம்ஸ் வேண்டாம் எங்க கூட மோதாதீங்க....இப்பவே சொல்லிட்டென்...அப்பிறம் இந்த பாம்பு எல்லாம் உங்க ஜோபிகுள்ள விட்டிடுவோம்....///

பார்டா உங்க நல்லதுக்கு சொன்னா,படிச்சி பொண்ணுங்க கூட சண்டை போடாம சமாதனமாக போங்கன்னு சொன்னா! என் பாக்கெட் குள்ள பாம்பவிடுவேன்னு சொல்லி பயம் காட்டுவதை. ம்ம்ம் உங்களுக்கு என்னை போல் கேர்ள் பிரண்டு என்று ஒன்று அமையாமல் போக வாழ்த்துக்கள்:)))

said...

ஆயில்யன் said...
கடைசி வரைக்கும் என்னால கோ எஜுகேஷன்ல படிக்க முடியலையே நான் இன்னா பண்றது நண்பா...!!!//

துபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு வாங்க ஒரு முறை , ரெண்டு பேரும் ஓஓஓஓஓஓஓன்னு அழலாம்:(
வேற என்னா செய்யமுடியும் இனி.

Anonymous said...

நான் எப்படா காலேஜ் முடிப்பேன் என்று பிரின்ஸ் காத்துக்கிட்டு இருந்தார் போல நான் முடிச்ச அடுத்த வருடத்தில் இருந்து கோ-எஜிகேசன் ஆக்கிட்டார்:((( என்ன கொடுமை சார் இது//ayyo paavam......co_ed la padicha kottu waanganuma??nalla welai thappichen.

said...

அவங்கள குட்டின்னுதானே விளிக்கிறோம். அதனால குட்டு குடுத்து, வாங்கிக்கிறதில தப்பே இல்ல குசும்பன்.

said...

//குசும்பன் said...
எங்க அப்பாவும் ஆபிசரா இருந்தா மாறி இருக்கலாம்:)//

அப்பா ஆபீஸரா இருக்கனுங்கரது முக்கியமில்ல. நாம ஆபிஸர் மாதிரி இருந்தா அவங்களே வேற ஸ்கூலுக்கு அனுப்பி வச்சுடுவாங்க.

said...

மாமா வாங்க வந்து நீங்களும் உங்க கருத்த பதிஞ்சிட்டு போங்க....

http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_12.html

said...

அடேங்கப்பா வருங்கால மனைவி கிட்ட பின்னாடி எனக்கு கேர்ல் ஃபிரெண்ட் யாருமே இல்லைன்னு சொன்னா நம்ப சாட்சியம் ரெடி பண்ரீங்களாக்கும்

ஆல்ரெடி அபிஅப்பா அந்த குத்தாலம் பொண்ணு பின்னாடியே நீங்க சுத்துனதெல்லாம் சொல்லிட்டாரு. இதெல்லாம் அத்தை வந்தவுடனே போட்டு கொடுக்கத்தான் போறேன்

said...

அவுங்களை குட்ட வாய்பு கிடைக்கும், விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சும்மா நங்குன்னு ஒரு குட்டுவைப்பேன் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் வரைக்கும் அழுகை நிறுத்தாதுங்க.
mm....குசும்பன்


பாரி அப்படி எல்லாம் இல்லைங்க, இப்ப ஸ்கூல் படிக்கும் "பொடியன்" எல்லாம் பிளாக் ஆரம்பிப்பதால் அவுங்க வாழ்கையிலும் இதுபோல் ஒரு துக்க சம்பவம் நடக்க கூடாதேன்னு ஒரு அக்கரைதான்.
adaa adaaa daaa......

said...

jaseela said...
//ayyo paavam......co_ed la padicha kottu waanganuma??nalla welai thappichen.///

ஹலோ குட்டு வாங்க சில குவாலிபிகேசன் வேண்டும் அதுக்கு பேசிக்கா மக்கு மூட்டையா இருக்கனும் நீங்க அப்படி இல்லை சோ நீங்க கோ-எஜிகேசனில் படிச்சு இருந்தாலும் குட்டு வாங்கி இருக்க மாட்டீங்க:))

*******************

ஏவிஎஸ் said...
அவங்கள குட்டின்னுதானே விளிக்கிறோம். அதனால குட்டு குடுத்து, வாங்கிக்கிறதில தப்பே இல்ல குசும்பன்./////

குட்டின்னு மட்டும் அல்ல சில சமயம் குட்டி சாத்தன் என்று கூட அழைப்பது உண்டு:)))

*********************

Baby Pavan said...
மாமா வாங்க வந்து நீங்களும் உங்க கருத்த பதிஞ்சிட்டு போங்க....

http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_12.html///

அங்க ஆப்ப ரெடிமேடா செஞ்சு வெச்சுட்டு என்னை கூப்பிடும் பேபி உன்னை பாவன்(ம்) என்று விட்டுவிடுகிறேன்.

*************************

said...

நிலா said...
அடேங்கப்பா வருங்கால மனைவி கிட்ட பின்னாடி எனக்கு கேர்ல் ஃபிரெண்ட் யாருமே இல்லைன்னு சொன்னா நம்ப சாட்சியம் ரெடி பண்ரீங்களாக்கும்////


ம்ம்கும் மொச புடிக்கிற மூஞ்ச பார்த்தா தெரியாதாக்கும், இதுக்கு சாட்சிவேற ரெடி செய்யனுமா.அய்யோ அய்யோ!!!


////ஆல்ரெடி அபிஅப்பா அந்த குத்தாலம் பொண்ணு பின்னாடியே நீங்க சுத்துனதெல்லாம் சொல்லிட்டாரு. இதெல்லாம் அத்தை வந்தவுடனே போட்டு கொடுக்கத்தான் போறேன்///

ஆங் அப்படியே குத்தாலம் பொண்ணோடு குற்றாலத்தில் டூயட் பாடினேன் என்றும் சொல்லுங்க அப்படியாவது சில விசயங்கள் வாழ்கையில் நடக்குதான்னு பார்ப்போம்.

said...

/விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சும்மா நங்குன்னு ஒரு குட்டுவைப்பேன் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் வரைக்கும் அழுகை நிறுத்தாதுங்க. மண்டைய தடவி தடவி பார்த்துக்கிட்டு இருக்குங்க /

அடப் பாவி, இத மாதிர்ல்லாமா கொட்டுவீங்க. அதனால தான் பேபி பவன் பதிவுக்குப் போய் உங்களை நல்லா கலாய்க்கச் சொல்லி வோட்டுப் போட்டுட்டு வந்தேன்.

said...

//துபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு வாங்க ஒரு முறை , ரெண்டு பேரும் ஓஓஓஓஓஓஓன்னு அழலாம்:(
வேற என்னா செய்யமுடியும் இனி.
//

நண்பா அழுவறது கூட அரபு உலகத்தில்தானா? வாங்க ரெண்டு பேருமே "மல்லு" உலகத்திற்கு போய் அழலாம்!

said...

நளாயினி said...
///adaa adaaa daaa......//

என்ன ஒரு நல்ல மனசுன்னுதானே சொல்லவந்தீங்க!

said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
//அடப் பாவி, இத மாதிர்ல்லாமா கொட்டுவீங்க. அதனால தான் பேபி பவன் பதிவுக்குப் போய் உங்களை நல்லா கலாய்க்கச் சொல்லி வோட்டுப் போட்டுட்டு வந்தேன்.//

முதலில் நன்றி
அதுக்கு தண்டனைதான் அவுங்களே கொடுத்துடாங்களே(கேர்ள் பிரண்ட் இல்லாம), நீங்க வேற ஓட்டு போடுறீங்களா?
நல்லா இருங்க

said...

சூப்ப்ர்
சூப்பர் பதிவு

பள்ளி வாழ்க்கையில் இது போல ஏராளமான சம்பவங்கள ஆனால் பலரின் பெயர்கள் மறந்துவிட்டது.

//
துபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு வாங்க ஒரு முறை , ரெண்டு பேரும் ஓஓஓஓஓஓஓன்னு அழலாம்:(
//
:-))))))

said...

//பாரி அப்படி எல்லாம் இல்லைங்க, இப்ப ஸ்கூல் படிக்கும் "பொடியன்" எல்லாம் பிளாக் ஆரம்பிப்பதால் அவுங்க வாழ்கையிலும் இதுபோல் ஒரு துக்க சம்பவம் நடக்க கூடாதேன்னு ஒரு அக்கரைதான்.//

டேய் மாப்ல பவன்.. நாம ஆப்பு வைக்க ஒருத்தர் சிக்கிட்டாருனு சொல்லி, அவர் வேற யாருமில்ல.. நம்ம குசும்பன் மாமா தான்னு நீ சொன்னப்ப நான் கொஞ்சம் யோசிச்சேன். இவர் எங்கடா வந்து நம்ம வலைல சிக்கினார்னு பாத்தேன். ஆனாலும் நீ பாசக்கார பயடா.. நம்ம சங்கத்து ஆள அடிச்சாலும் சரி அவமான படுத்தினாலும் சரி சிங்கமாட்டம் சீரிக் கெளம்பிடற.. :)

( அரே ஓய் குசும்பன் மாமோய்.. நாங்க எல்லாம் சங்கம் வச்சி ப்ரண்ட் புடிக்கிற ஆளுங்க.. எங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு :P )

said...

குசும்பன்,

நெடு நேரம் சிரிக்க வைத்த பதிவு. எங்கள சிரிக்க வைத்த உங்களுக்கு என்னத்தச் சொல்றது ...

ஔவை style-ல் சொல்லனும்னா ... "சோகம் தவிர்"

girl friend எப்படி கிடைக்கனும்னு ஆசைப் பட்டிங்களோ, அதே போல வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள். ஆனா ஒன்னு, குட்டு மட்டும் வச்சிறாதீங்க ;=)

said...

ஆயில்யன் said...
///நண்பா அழுவறது கூட அரபு உலகத்தில்தானா? வாங்க ரெண்டு பேருமே "மல்லு" உலகத்திற்கு போய் அழலாம்!////
எனக்கு ஆபிசில் ஆப்பு வைத்துகொண்டு இருக்கும் அந்த மல்லு ஊருக்கா நோ நோ இனி வாழ்கையில் நோ மல்லு!!!

*******************

மங்களூர் சிவா said...
சூப்ப்ர்
சூப்பர் பதிவு

பள்ளி வாழ்க்கையில் இது போல ஏராளமான சம்பவங்கள ஆனால் பலரின் பெயர்கள் மறந்துவிட்டது.

//////////////////////
நன்றி சிவா!!!

*******************

said...

//எனக்கு ஆபிசில் ஆப்பு வைத்துகொண்டு இருக்கும் அந்த மல்லு ஊருக்கா//

அந்த மல்லு ஊருக்கு நான் போறேன் நீங்க பக்கத்து ஊருக்கு போங்களேன் நண்பா..!!!!!!

said...

~பொடியன்~ said...
( அரே ஓய் குசும்பன் மாமோய்.. நாங்க எல்லாம் சங்கம் வச்சி ப்ரண்ட் புடிக்கிற ஆளுங்க.. எங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு :P )//

மச்சான் நீ வேற பொடியன் அதனால் சொன்னால் எல்லாம் புரியாது:)

said...

சதங்கா (Sathanga) said...
குசும்பன்,

நெடு நேரம் சிரிக்க வைத்த பதிவு. எங்கள சிரிக்க வைத்த உங்களுக்கு என்னத்தச் சொல்றது ...

ஔவை style-ல் சொல்லனும்னா ... "சோகம் தவிர்"

girl friend எப்படி கிடைக்கனும்னு ஆசைப் பட்டிங்களோ, அதே போல வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள். ஆனா ஒன்னு, குட்டு மட்டும் வச்சிறாதீங்க ;=)///////


மிக்க நன்றி சதங்கா, உங்கள் வாழ்த்துபடியே நடக்கட்டும். கல்யாணம் செஞ்சா குட்டு எல்லாம் வைக்க மாட்டேன்.....:)))))

said...

குசும்பன் said...
~பொடியன்~ said...
( அரே ஓய் குசும்பன் மாமோய்.. நாங்க எல்லாம் சங்கம் வச்சி ப்ரண்ட் புடிக்கிற ஆளுங்க.. எங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு :P )//

மச்சான் நீ வேற பொடியன் அதனால் சொன்னால் எல்லாம் புரியாது:)

அப்பொ நாங்க தான் தப்பு பண்ணிட்டொமா...சரி சரி...எல்லாம் நல்லதுக்குதான்...girl friend எப்படி கிடைக்கனும்னு ஆசைப் பட்டிங்களோ, அதே போல வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள்...அப்படியெ சீக்கிரம் ஜுனியர் குசும்பனும் எங்க சங்கத்தில சேர வாழ்த்துக்கள்.

said...

''குசும்புகொட்டு"ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.

said...

// அப்புறம் காலேஜ் தஞ்சை பூண்டி கலை கல்லூரி அது ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி அதனால் எனக்கு கேர்ள் பிரண்டு என்ற ஒன்று வாழ்கையில் அமையவே இல்லை. நான் எப்படா காலேஜ் முடிப்பேன் என்று பிரின்ஸ் காத்துக்கிட்டு இருந்தார் போல நான் முடிச்ச அடுத்த வருடத்தில் இருந்து கோ-எஜிகேசன் ஆக்கிட்டார்:((( என்ன கொடுமை சார் இது, நான் அப்படி என்ன பாவம் செஞ்சேன்.//
ஹா..ஹா...... நா குடுத்து வைச்சவன் தான் மாமே........

said...

// அது அப்ப பெரிய அவமானம்//
மாம்ஸ். உங்களுக்கு யாரோ தப்பு தப்பா சொல்லிக்குடுத்து ஏமாத்தியிருக்காங்க..ஹிஹி....

said...

// "பெண்களை குட்டினால் என்ன ஆகும்? கேர்ள் பிரண்டு கிடைக்காமல் போகும்.//
ஹா..ஹா.. கடைசி பஞ்ச் டாப்ப்ப்ப்ப்ப்ப்பு...

said...

//சதங்கா
ஆனா ஒன்னு, குட்டு மட்டும் வச்சிறாதீங்க ;=)///////
மிக்க நன்றி சதங்கா, உங்கள் வாழ்த்துபடியே நடக்கட்டும். கல்யாணம் செஞ்சா குட்டு எல்லாம் வைக்க மாட்டேன்.....:)))))//

நீங்க ஒன்னு .கல்யாணத்துக்கப்பறம் அவிங்ககிட்ட, நம்ம குசும்பர் மாம்ஸ் அடிவாங்காம இருந்தாக்கா பத்தாதா?..ஹா..ஹா..

said...

எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமுன்னு ஒப்பனாக சொல்ல வேண்டியது தானே இதுக்கு இம்புட்டு பில்டாப்பா :)

said...

குசும்பன் சார்,

//பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அது தப்பா? //

தவறு செய்தால் குட்டினால் தப்பு இல்லையா ? தெரியலை. ஆனால்

பெண்களை குட்டி - என்றால் தப்புதான்.

:)

said...

Baby Pavan said...
//அப்பொ நாங்க தான் தப்பு பண்ணிட்டொமா...சரி சரி...எல்லாம் நல்லதுக்குதான்...girl friend எப்படி கிடைக்கனும்னு ஆசைப் பட்டிங்களோ, அதே போல வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள்...அப்படியெ சீக்கிரம் ஜுனியர் குசும்பனும் எங்க சங்கத்தில சேர வாழ்த்துக்கள்.//

ரைட்டு செஞ்சிட்டா போச்சு:)

*****************************

aadumadu said...
''குசும்புகொட்டு"ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.///

:)) நன்றி ஆடுமாடு

****************************
ரசிகன் said...
//ஹா..ஹா...... நா குடுத்து வைச்சவன் தான் மாமே........//

நல்லா இருங்க:(

****************************
ரசிகன் said...
///தப்பா சொல்லிக்குடுத்து ஏமாத்தியிருக்காங்க..ஹிஹி....///

ஆமாம் ரசிகா சின்னபுள்ளயா நானு அதனால் ஏமாத்திட்டாங்க:((

*************************
ரசிகன் said...
//நீங்க ஒன்னு .கல்யாணத்துக்கப்பறம் அவிங்ககிட்ட, நம்ம குசும்பர் மாம்ஸ் அடிவாங்காம இருந்தாக்கா பத்தாதா?..ஹா..ஹா..//

அப்படியே வாங்கினாலும் வெளியே வரும் பொழுது அப்படியே மேக்கப் கலையாம வந்துடுவோம்ல:)

****************************
கோபிநாத் said...
எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமுன்னு ஒப்பனாக சொல்ல வேண்டியது தானே இதுக்கு இம்புட்டு பில்டாப்பா :)/////

சொன்னா மட்டும் கிடைச்சிடவா போகுது போப்பா:(

****************************
கோவி.கண்ணன் said...
குசும்பன் சார்,

தவறு செய்தால் குட்டினால் தப்பு இல்லையா ? தெரியலை. ஆனால்

பெண்களை குட்டி - என்றால் தப்புதான்.

:)
************************

கோவி உங்க பின்னூட்டத்தை படிச்சவுடன் நினைவுக்கு வந்தது புதுப்பேட்டை படத்தில் தனுஷ் அடிவாங்கி தலையில் கட்டு போட்டு இருக்கும் பொழுது அன்பு வந்து விரட்டுவார், அப்பொழுது தனுஷ் "சார்" இங்க ஒரு வேலை இருந்தா போட்டு கொடுங்க "சார்" என்று சொல்வார், சுத்தி இருக்கும் எல்லோரும் செம சிரிப்பு சிரிப்பானுங்க, அன்புவுக்கும் ஒன்னும் சொல்லமுடியாம என்ன படிச்சு இருக்கியா என்று கேட்பார். அதுதான் நினைவுக்கு வந்தது. உங்கள் முதல் வரியை பார்த்தவுடன்:)))

குட்டி என்பது அழகான வார்த்தை அதை ஆபாசமாக்கி விட்டனர்.
***********************

said...

யோவ் உனக்கு கிடைக்கலனா மத்தவங்களுக்கும் கிடைக்காதா...

குட்டிட்டு அதையே சாக்கா வச்சி... சரி.. உனக்கு வயசு ஆகி போச்சு.. இனிமே தெரிஞ்சு என்ன பண்ண போற..

10 வதில் இருந்த தர்ம அடி எங்க ஸ்கூலில் :)

said...

ரசிக்கும் படியான நகைச்சுவை பதிவு!

\\அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன்\

இப்படி கும்மினதுக்கு அந்த 'டின்' கட்டினதெல்லாம் பத்தவே பத்தாது........

said...

நான் வேணும்னா பூண்டி காலேஜ்ல ஒரு அப்ளிகேஷன் போடவா உங்களுக்கு . . . . .?

said...

நாகை சிவா said...
"குட்டிட்டு அதையே சாக்கா வச்சி... சரி.. உனக்கு வயசு ஆகி போச்சு.. இனிமே தெரிஞ்சு என்ன பண்ண போற.."////

தெரிஞ்சு வருங்கால என் சந்ததிங்களுக்கு சொல்லி கொடுப்போம்ல:) சொல்லு புலி..

///10 வதில் இருந்த தர்ம அடி எங்க ஸ்கூலில் :)////

அப்பொழுதில் இருந்து உரம் போட்டு வளர்த்த உடம்பாய்யா அது?

******************************

Divya said...
ரசிக்கும் படியான நகைச்சுவை பதிவு!///

இதுக்கு நன்றி:))

///இப்படி கும்மினதுக்கு அந்த 'டின்' கட்டினதெல்லாம் பத்தவே பத்தாது........////

இதுக்கு சொன்ன நன்றி வாபஸ்:))))

*********************

வெங்கட்ராமன் said...
நான் வேணும்னா பூண்டி காலேஜ்ல ஒரு அப்ளிகேஷன் போடவா உங்களுக்கு . . . . .?/////

வேண்டாம் சித்தப்பு வயசாகி போச்சு:)

***************************