Thursday, November 15, 2007

முதன் முதலாக துறைசார்ந்த பதிவில் என்னுடைய பதிவு வர சிறு முயற்சி

முதன் முதலாக துபாய் பற்றியும் விசா பற்றியும் ஒரு பதிவு எழுதினேன் அது அனைவருக்கும் பிடித்துவிட்டது எல்லோரும் முதன் முதலாக ஒரு உருப்படியான பதிவு எழுதி இருப்பதாக சொன்னார்கள், எனக்கும் பல மாதமாக துறைசார்ந்த பதிவு பக்கத்தில் வருவது போல் ஒரு பதிவாது எழுதிவிடவேண்டும் என்று நினைத்தேன் அந்த பக்கத்தில் எப்பொழுது மா.சிவக்குமார், தீபா, இப்படி ஒரு சிலரை மட்டும்தான் காணமுடிகிறது.
இனி அங்கும் என் பெயரை தெரியவைக்க ஒரு சிறுமுயற்ச்சி.


தமிழக போக்குவரத்து துறை கடந்த ஆட்சியில் செய்த நல்ல செயல்:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கட்டுபாட்டில் இயங்கும் அனைத்து போக்குவரத்து கழக்நிறுவனங்களின் சார்பாக வழங்கப்பட்ட மொத்த நன்கொடைத் தொகையான ரூ5,31,57,00 க்கான காசோலையை மாண்புமிகுபோக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் திரு இரா.விசுவநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களிடம்4-1-2005 அன்று வழங்கினார். அவ்வமயம் அரசு போக்குவரத்து துறை செயலாளர் திரு.இரா,கற்பூரசுந்தரபாண்டியன் உடன் இருந்தார்.

http://www.tn.gov.in/transport/tpt-tsunami1.htm

இந்த பதிவு போக்குவரத்து துறை சார்ந்தது இது ஏதேனும் எதிரிகள் சூழ்சியினால் துறை சார்ந்த பதிவில் வராமல் போனால்,அடுத்து
படகு துறை
விமான போக்குவரத்து துறை
கப்பல் போக்குவரத்து துறை
பற்றி எல்லாம் எழுதவேண்டி இருக்கும்.

இனி நானும் சீரியஸ் பதிவர்தான் ஓய்!!! யாரு யாரு எல்லா போட்டிக்கு ரெடி!!!

36 comments:

said...

பின்னே.... நான் எப்போதும் நானாக தான் இருக்கேன்'னு ஜென் கதையிலே படிச்சது பொய் ஆகுமா என்ன? :)

said...

இது துறை சார்ந்த பதிவு தான்..பதிவு தான், பதிவு தான்...

எங்க ஊர் ஓச்சாக்கிழவி மேலே சத்தியமா..இது துறை சார்ந்தப்பதிவு தான்..

இந்தப் பதிவு துறை சார்ந்தப் பதிவிலே வரவில்லை என்றால்,

எல்லா தடைகளையும் மீறி, எ.ஏ.தி.க போரட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம்..மேற்க்கொள்ளும்..எனக்கு வேலை அதிகம் இருப்பதால், ஜெகதீசன்..தலைமை தாங்கி நடத்துவார்..

தேவைப்பட்டால், தீக்குளிப்பார்.

said...

யாருப்பா சொன்னது. எங்க குசும்பன் அண்ணன் துறை சார்ந்த பதிவு போட மாட்டாருனு. பாருங்க கலக்குறாரு.
(அண்ணாத்தே ஆனாலும் இவ்வளவு சீக்கிரமா போடக்கூடாது இதை. நாங்க இன்னும் 1945 மேட்டர்லயே இருக்கம். நீங்க வேகமா வர்றிங்களே)

said...

//
எல்லா தடைகளையும் மீறி, எ.ஏ.தி.க போரட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம்..மேற்க்கொள்ளும்..எனக்கு வேலை அதிகம் இருப்பதால், ஜெகதீசன்..தலைமை தாங்கி நடத்துவார்..

தேவைப்பட்டால், தீக்குளிப்பார்
//
ம்க்கும்.... பொட்டி வாங்க மட்டும் நீ.. தீக்குளிக்க நானா? அதெல்லாம் கிடயாது போ.... நான் ஒரு வாரத்துக்கு முன்னாடியே எ.ஏ.தி.க ல இருந்து ரிசைன் பண்ணீட்டேன். ம.எ.ஏ.தி.க ன்னு ஒரு புதுக் கட்சி ஆரம்பிச்சுட்டேன்... வேணுமின்னா சொல்லு அடுத்த தேர்தல்ல கூட்டணி வச்சுக்கிரலாம்...(ஆனா ஒரு சீட்டு குறையாக் கொடுத்தாலும் அணி மாறிடுவேன்)....
:)

said...

துறைசார்ந்த பதிவு போட்ட அண்ணன் குசும்பன் அவர்கள் வாழ்க!!!!
:)))

said...

அப்படியே படகுத்துறை மவுண்ட்பேட்டன் துரை அல்லாத்தையும் பத்தி எழுதுங்க. நம்ம அண்ணாத்துரையை பத்தி எழுதும் போது மட்டும் ஜாக்கிரதையா எழுதுங்க. தப்பா எழுதினா பெண்டு நிமித்திடுவாங்க. :))

(இது அக்மார்க் துறை / துரை சார்ந்த பின்னூட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.) :))

said...

மாமா கலாய்க்கறதும் ஒரு துறைதானே

அதுல நீங்கதான் ராஜா

Anonymous said...

//
TBCD said...
இது துறை சார்ந்த பதிவு தான்..பதிவு தான், பதிவு தான்...

எங்க ஊர் ஓச்சாக்கிழவி மேலே சத்தியமா..இது துறை சார்ந்தப்பதிவு தான்..

இந்தப் பதிவு துறை சார்ந்தப் பதிவிலே வரவில்லை என்றால்,

எல்லா தடைகளையும் மீறி, எ.ஏ.தி.க போரட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம்..மேற்க்கொள்ளும்..எனக்கு வேலை அதிகம் இருப்பதால், ஜெகதீசன்..தலைமை தாங்கி நடத்துவார்..

தேவைப்பட்டால், தீக்குளிப்பார்.
//
அப்படி அவர் தீக்குளிக்க மறுத்தால் கொளுத்த ஏற்பாடு செய்யப்படும்

குசும்பன் துறைசார்ந்த
பதிவு ரசிகர் மன்றம்
மங்களூர் கிளை

said...

ஒரு பழமொழி சொல்லணும் போல இருக்கு - சொன்னா ஒதைப்பாரோன்னு பயமா இருக்கு.

இது துறை சார்ந்த பதிவுதான்
இது துறை சார்ந்த பதிவுதான்
இது துறை சார்ந்த பதிவுதான்
இது துறை சார்ந்த பதிவுதான்
இது துறை சார்ந்த பதிவுதான்.

தமிழ் மணத்துக்கு சிபாரிசு - போட்டுடுங்களேன்

said...

கடவுளே...முடியல :(

said...

என்னாச்சி மாம்ஸ்..ஏனிந்த கொலவெறி.. யேய் யாருப்பா..அது சும்மா இருந்த குசும்பர சீண்டி விட்டது.?..

said...

அப்படியே,

வண்ணாந்துறை
படித்துறை
சின்னத்துரை

பற்றியும் எழுதவும்.

முடியல. . .

Anonymous said...

எச்சுக்கிச்சுமீ,
வேகமா கமெண்ட்ஸ் ரிலீஸ் பண்ணப் போறீங்களா இல்லைன்னா TBCD யைத் தீக்குளிப்பார்.

said...

//இலவசக்கொத்தனார் said...
அப்படியே படகுத்துறை மவுண்ட்பேட்டன் துரை அல்லாத்தையும் பத்தி எழுதுங்க. நம்ம அண்ணாத்துரையை பத்தி எழுதும் போது மட்டும் ஜாக்கிரதையா எழுதுங்க. தப்பா எழுதினா பெண்டு நிமித்திடுவாங்க. :))

(இது அக்மார்க் துறை / துரை சார்ந்த பின்னூட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.) :))//

நாங்கள் எல்லாம் ஒரே துறை/துரை யை சார்ந்தவர்கள் என்பதால் இதை வழிமொழிவதை தவிர வேறு வழி இல்லை என்றக் காரணத்தால் அதை நான் வழிமொழிகிறேன்.

Anonymous said...

:))

Anonymous said...

இந்தத் துறை சார்ந்த பதிவுக்கு "மொக்கை" என்று லேபிள் போட்டுள்ளதற்கு கடுமையான கண்டனங்கள்!

said...

நான் ஒரு நிமிசம் ஷாக் ஆகிட்டேன்... வழக்கம்போல தலைப்பு பார்த்தே கண்டுபிடிக்கற நான் எதோ வேலை நியாபகத்துல உண்மைன்னே நம்பி போய் துறைசார்ந்த பதிவு லிங்க் ல கூட குசும்பன் பேரு இருக்கான்னு பாத்துட்டு வந்தேன்.. அட போப்பா.. முடியல...

said...

இராம்/Raam said...
பின்னே.... நான் எப்போதும் நானாக தான் இருக்கேன்'னு ஜென் கதையிலே படிச்சது பொய் ஆகுமா என்ன? :)//

ஆமாம் தல சரிதான்:)

said...

TBCD said...
இது துறை சார்ந்த பதிவு தான்..பதிவு தான், பதிவு தான்...
////

உங்கள் ஆதரவுக்கு நன்றி

/////எல்லா தடைகளையும் மீறி, எ.ஏ.தி.க போரட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம்..மேற்க்கொள்ளும்..எனக்கு வேலை அதிகம் இருப்பதால், ஜெகதீசன்..தலைமை தாங்கி நடத்துவார்..

தேவைப்பட்டால், தீக்குளிப்பார்.////

போராட்டம் அமைதியான வழியில் நடக்கட்டும், அராஜகம் வேண்டாம்.

said...

வித்யா கலைவாணி said...
யாருப்பா சொன்னது. எங்க குசும்பன் அண்ணன் துறை சார்ந்த பதிவு போட மாட்டாருனு. பாருங்க கலக்குறாரு.///

அது!

said...

ஜெகதீசன் said...
//ம்க்கும்.... பொட்டி வாங்க மட்டும் நீ.. தீக்குளிக்க நானா? அதெல்லாம் கிடயாது போ..../////

அவர் என்னிடம் வாங்கியது தீபெட்டி அண்ணா, இது என்ன கொடுமை நீங்க கொளுத்திக்க நீங்களே பொட்டி வாங்கனுமா?:((((((


///ஆனா ஒரு சீட்டு குறையாக் கொடுத்தாலும் அணி மாறிடுவேன்)....
:)///

:)))))))))))))))

said...

ஜெகதீசன் said...
துறைசார்ந்த பதிவு போட்ட அண்ணன் குசும்பன் அவர்கள் வாழ்க!!!!
:)))////

இது என்னா விளையாட்டு:))))

said...

///குசும்பன் துறைசார்ந்த
பதிவு ரசிகர் மன்றம்
மங்களூர் கிளை////

சிவா உங்க வேலைதானா இது????

said...

இலவசக்கொத்தனார் said...
அப்படியே படகுத்துறை மவுண்ட்பேட்டன் துரை அல்லாத்தையும் பத்தி எழுதுங்க. நம்ம அண்ணாத்துரையை பத்தி எழுதும் போது மட்டும் ஜாக்கிரதையா எழுதுங்க. தப்பா எழுதினா பெண்டு நிமித்திடுவாங்க. :))

(இது அக்மார்க் துறை / துரை சார்ந்த பின்னூட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.) :))////

நல்ல ஐடியா கொடுத்ததுக்கு நன்றி கொத்ஸ், அடுத்த பதிவு உங்களுக்கு டெடிகேட் செஞ்சுடுறேன்:))))

said...

cheena (சீனா) said...
ஒரு பழமொழி சொல்லணும் போல இருக்கு - சொன்னா ஒதைப்பாரோன்னு பயமா இருக்கு. /////

என்னா நாய் பழமொழியா?
நான் நாய் எல்லாம் இல்லீங்கோ:)))))

said...

நிலா said...
மாமா கலாய்க்கறதும் ஒரு துறைதானே

அதுல நீங்கதான் ராஜா////


:) நிலா குட்டி ஊருக்கு வரும் பொழுது உனக்கு ஸ்பெசல் ட்ரீட்:))))

said...

கோபிநாத் said...
கடவுளே...முடியல :(///

ஆரம்பத்திலேயே டாக்டரை பார்கவும்:)))))

said...

ரசிகன் said...
என்னாச்சி மாம்ஸ்..ஏனிந்த கொலவெறி.. யேய் யாருப்பா..அது சும்மா இருந்த குசும்பர சீண்டி விட்டது.?..///


எல்லாம் இந்த சக பதிவருங்கதான் ரசிகன், அந்த பதிவு சூப்பர் என்று எல்லாம் சொல்ல சொல்ல எங்க நானும் புகழுக்கு ஆசைபட்டு நல்ல பதிவா போட்டுவிடுவேனோ என்ற பயம் எனக்கு வந்துட்டு, நமக்கு எதுக்கு அந்த கெட்ட பேரு, நாம் மொக்கை பதிவராகவே இருக்கலாம் அதுக்காகதான் இந்த பதிவு.

said...

வெங்கட்ராமன் said...
அப்படியே,

வண்ணாந்துறை
படித்துறை
சின்னத்துரை

பற்றியும் எழுதவும்.

முடியல. . ./////


எழுதிடலாம் நண்பா:)

said...

abcd said...
எச்சுக்கிச்சுமீ,
வேகமா கமெண்ட்ஸ் ரிலீஸ் பண்ணப் போறீங்களா இல்லைன்னா TBCD யைத் தீக்குளிப்பார்.///

உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் தாமதம் , மன்னிக்கவும்.

said...

துறை சார்ந்த பதிவர்கள் சங்கம் said...
இந்தத் துறை சார்ந்த பதிவுக்கு "மொக்கை" என்று லேபிள் போட்டுள்ளதற்கு கடுமையான கண்டனங்கள்!///

அவ்வ்வ்வ்வ்
அப்ப இது மொக்கை இல்லையா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

முத்துலெட்சுமி said...
நான் ஒரு நிமிசம் ஷாக் ஆகிட்டேன்... வழக்கம்போல தலைப்பு பார்த்தே கண்டுபிடிக்கற நான் எதோ வேலை நியாபகத்துல உண்மைன்னே நம்பி போய் துறைசார்ந்த பதிவு லிங்க் ல கூட குசும்பன் பேரு இருக்கான்னு பாத்துட்டு வந்தேன்.. அட போப்பா.. முடியல...//////

ஹி ஹி ஹி

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்று சொல்லுவாங்கல்ல அதுபோலதான் :))))

said...

ஆஹா..வாழ்த்து சொல்ல வந்தா இப்படி ஆயிறுச்சே.சரி சிக்கிறம் வேற ஏதாவது வாய்ப்பு குடுங்கப்பா..வாழ்த்து சொல்றதுக்கு...

:-))

said...

மங்கை said...
ஆஹா..வாழ்த்து சொல்ல வந்தா இப்படி ஆயிறுச்சே.சரி சிக்கிறம் வேற ஏதாவது வாய்ப்பு குடுங்கப்பா..வாழ்த்து சொல்றதுக்கு...

:-))////

கொடுத்துவிடுவோம், இன்னும் இதுபோல பதிவு வராமலா போய்விடும்?:))))

ஆமாம் அப்ப இந்த துறை சார்ந்த பதிவுக்கு வாழ்த்து இல்லையா:((((

said...

துபாய் பதிவு பார்த்து பரவசமடைந்து தட்டச்ச தொட்டா முரண்டு பிடிக்குது. துறை சார்ந்த பதிவுக்குத்தான் கொடுப்பினை போல உங்களுக்கு!

said...

குசும்பன் ஸார்.. திருத்தவே முடியாது உங்களை.. தயவு செஞ்சு திருந்திராதீங்க.. எங்களுக்குப் பொழுது போவணுமில்லே..