Friday, November 16, 2007

அமீரகத்தில் இளையராஜா!

எனக்கு இளையராஜாவை விட ரஹ்மானை பிடிக்கும் ஆனால் அமீரகத்துக்கு வரும் பொழுது பிடிக்குதோ பிடிக்கவில்லையோ, கண்ணுக்கு தெரியுதோ தெரியவில்லையோ அதை ஸ்டேடியத்தில் கூட்டத்தோடு அமர்ந்து கேட்பது, அல்லது பார்பது என்பது ஒரு தனி சுகம்.(சென்னையில் ஸ்டேடியத்தில் அமர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்த அனுபவம்).

6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் என்று சொன்னாலும் 7.45க்குதான் ஆரம்பம் ஆனது ஆரவார டிரம்ஸ் இசைக்கு நடுவே இளையராஜா வந்தபொழுது அரங்கமே அதிர்ந்தது, எடுத்தவுடனே ஜனனி ஜனனி அகம் நீ... பாட்டு பாடி ஆரம்பித்தார் என்ன ஒரு குரல் அப்படியே எல்லாத்தையும் மறக்க செய்யும் இசை.

அடுத்து பவதாரனிக்கு அடுத்து SPB பாடிய இளைய நிலா பொழிகிறது...அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை இன்னும் அதே துள்ளல் அதே உற்ச்சாகம். ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் பேச்சு மனுசனுக்கு வயசே ஆகாது போல.

அடுத்து ஸ்ரேயா கோசல் காற்றில் எந்தன் தீபம் காணத ... இனி நான் தனியாக ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடலாம் என்று இருக்கேன் என்ன ஒரு அழகு. சின்ன குயில் சித்ரா புன்னகை மன்னன் படத்தில் இருந்து ஒரு பாட்டு பாடினாங்க இப்படி எல்லாமே ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கலக்கினாங்க.


ஆனால் என்னை போல் ஆளுங்களுக்காக அப்ப அப்ப ஒரு ஒரு குத்து பாட்டு போட்டு இருந்தால் இன்னும் நிறைவாக இருந்து இருக்கும் தளபதியில் இருந்து பாட்டு என்றவுடன் அடி ராக்கமா கைய தட்டு என்று நான் உற்சாகமாக ஆட ரெடியாகும் பொழுது...சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்று பாட்டு போட்டு ஏமாத்தினார்.

ஸ்ரேயா கோசல் சீனி கம் சீனி கம் என்று ஹிந்தி பாட்டை அந்த அழகு தேவதையும் SPB அதே பாட்டை மஞ்சம் வந்த தென்றலுக்கு அரங்கேற்றவேளை பட பாட்டை பாடும் பொழுது ஒரு கட்டத்தில் பொருமை இழந்து இளையராஜா ஸ்டாபிட் என்று கத்த அரங்கமே அமைதியானது பின்னனி இசை சரி இல்லாததால் கோப பட்டார் என்று SPB யால் விளக்கம் சொல்லபட்டது .அதன் பிறகு குஷ்பு வந்து ஸ்டேஜ் என்றாலும் ஒழுங்காக கொடுக்கவேண்டும் என்ற சின்சியாரிட்டிதான் உங்களிடம் பிடிச்சது என்று சொல்ல ஜெயராமும் ஆமா அதுதான் ராஜா என்று சொல்ல சின்சியாரிட்டி என்று நீங்க சொன்னா நான் அதுவாக இல்லை நான் அதுவாக இருந்தால் சின்சியாடிட்டி இருக்காது அதில் ஒழுங்கு இருக்காது ..இப்படி ஏது ஏதோ சொல்ல ஜெயராமுக்கும் ஒன்னும் புரியவில்லை எனக்கும் ஒன்னும் புரியவில்லை.

ஆனால் சங்கீதம் என்றால் என்னா சங்கீதாவா எவ அவ என்று கேட்கும் ஞானசூன்யம் ஆகிய எனக்கே இசையில் பட நெருடல்கள் பல தப்புகள் தெரிந்தது, உதாரனத்துக்கு அழகி படத்தில் வரும் ஒளியிலே தெரிவது.. பாட்டு இசை செம சொதப்பல்.
இப்படி பல இருந்தாலும் கொடுத்த 100Dhs க்கு மிகவும் உபயோகமாக இருந்தது.


நான் ரசித்தபாடல்கள்
ஜனனி ஜனனி---- இளையராஜா

இளையநிலா பொழிகிறது-------SPB

காற்றில் எந்தன் கீதம், சீனி கம் சீனி கம்---- ஸ்ரேயா கோசல்

சொர்கமே என்றாலும்----இளையராஜா, சாதனா சர்கம்.

ராசாத்தி உன்னை காணாத (வைதேகி காத்திருந்தாள்)-- மஞ்சரி, விஜய் ஏசுதாஸ்.

அறியாதவயது புரியாதமனசு ரெண்டும் இங்கே காதல் செய்யுது---இளையராஜா
அந்திமழை பொழிகிறது--- SPB
மதுரை மரிகொழுந்து வாசம் ---- மனோ

சொதப்பிய பாடல்கள்
ஒளியிலே தெரிவது ,ராகம்மா கையதட்டு ---இது கடைசியாக கிளம்பும் பொழுது போட்டாங்க செம சொதப்பல் இசை.

ஒரு சிரி கண்டால் ஒரு கனி கண்டால் அது மதி--- மலையாள பாட்டு

இப்படி பல பாட்டு இசை சொதப்பலாக தெரிந்தது.

நான் ரசித்த பாடல் அல்லாத சில விசயங்கள்.
SPB யின் பேச்சு + குறும்பு
சின்ன குயில் சித்ராவின் சிரிப்பு

ஸ்ரேயா கோசல், மஞ்சரியின் அழகு.

என்னை கோப படுத்திய சில விசயங்கள்.
எல்லோரும் மாமேதை, உலகம் காணாத இசையமைப்பாளர் என்று எல்லாம் புகழ்ந்து கொண்டே இருந்தது(அரசியல் மேடை போல), எல்லோரும் அவர் காலில் விழுந்தது,SPB, சித்ரா எல்லாம் இருக்கும் பொழுது தேவை இல்லாமல் பவதாரனியை முன்நிலை படுத்தியது அந்த பெண் சொதப்பியது வேறு விசயம்.சர்ப்ரைஸாக வந்த யுவனும், கார்த்திக்கும் என் பாட்டை பாடு என்று சொன்னதையே திரும்ப திரும்ப 10 நிமிசம் சொல்லி டென்சன் ஆக்கி ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்று அப்பாவுக்கு மேலும் புகழ் சேர்த்தார்கள்.

SPBயை தவிர மீதி அனைவரும் பாடும் பொழுதும் ஸ்கூல் HM முன்பு பயந்து நிற்க்கும் குழந்தை போல ஒரு வித இருக்கமாக இருந்தார்கள்.
சொர்கமே என்றாலும் பாட்டு வரியை மாற்றி சாதனா சர்கமும் இளையராஜாவும் பாடும் பொழுது பாட்டை நிறுத்தி சாதனா சர்கம் என்ன பாடுறாங்க புரியுதா அப்படின்னு கேட்டு விட்டு அவரே! மல்லி பூ போல பிச்சி பூ போல என்று பாடுறாங்க என்று இளையராஜா விளக்கம் கொடுத்தார் இதுபோல பல முறை செய்தார் அப்படி செய்து சாதனா சர்கத்தை அவமதிச்சு இருக்க வேண்டி இல்லை. தமிழ் உச்சரிப்பு சரி இல்லை என்றால் அவர்களை அழைத்து வராமலே இருந்து இருக்கலாம்.

நிகச்சிக்கு வந்தவர்கள்:

இளையராஜா, SPB, சித்ரா, மனோ,பவதாரனி, மதுபால கிருஸ்னன், மஞ்சரி, சாதனா சர்கம், ஸ்ரேயா கோசல், விஜய் ஏசுதாஸ், திப்பு.

தொகுத்து வழங்கியவர்கள் ஜெயராம், குஷ்பு.
நிகச்சிக்கு வந்த வலைபதிவர்கள்:
துபாயில் இருந்து ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் போய் இரவு அங்கிருந்து திரும்பி வந்து காலையில் ஆபிஸ் கிளம்புவது என்பது இயலாத காரியம் என்று போகவேண்டாம் என்று முடிவு எடுத்தபின்பு நான் கொண்டுவந்து விடுகிறேன் டிக்கெட் எடு என்று சொன்னதாலே டிக்கெட் எடுத்து இந்த நிகழ்ச்சிக்கு போனேன் அதற்கு காரணமான லொடுக்குக்கு நன்றி. இவரு VVIP சீட்டில் உட்கார்ந்து இருந்ததால் தப்பிச்சார்.
முன்னாடியே போயாச்சே பினாத்தலார் குடும்பத்தோடு வருகிறேன் என்று சொன்னாரே என்று இரண்டு சீட் பிடிச்சு வெச்சிட்டு எப்ப வர்ரீங்க உங்களுக்காக 2 சீட் பிடிச்சு வெச்சு இருக்கேன் என்று போன் போட்டு சொன்னா 2 சீட் எல்லாம் பத்தாது ஒரு 10 சீட் புடிங்க என்கிறார் எனக்கு தூக்கி வாரி போட்டது என்ன டா wifelogy பாடம் எடுக்கும் வாத்தியாரே இப்படியா என்று? பிறகு நான் அதிர்ச்சி ஆனது தெரிஞ்சு அவரே நண்பர் குடும்பமும் வருகிறார்கள் என்றார்.
சுல்தான் பாய் வந்து இருக்கிறார் ஆனால் பார்கமுடியாமல் போய்விட்டது.

25 comments:

said...

முதல் வரிக்குப் பின் நான் படிக்கவில்லை! :((

said...

இலவசக்கொத்தனார் said...
முதல் வரிக்குப் பின் நான் படிக்கவில்லை! :((///

என்ன கொத்ஸ் இளையராஜா பிடிக்காது என்று சொல்லவில்லையே! அவரையும் பிடிக்கும் அவரை விட எனக்கு ரஹ்மானை பிடிக்கும். என்றுதானே சொல்லி இருக்கேன்.:((((

said...

கொத்தனார் சொல்ல வந்தது...

அவரால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லையே... அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே.. நீங்க எல்லாம் போய் பார்த்து ரசித்ததும் இல்லாமல் இப்படி பதிவு போட்டு வெறுப்பேத்துறீங்களே... என்பதற்காக

கொத்தனாரே சரிதானே?

said...

நல்ல விரிவான அலசல் :)

//SPB அதே பாட்டை மஞ்சம் வந்த தென்றலுக்கு அரங்கேற்றவேளை பட பாட்டை பாடும் பொழுது ஒரு கட்டத்தில் பொருமை //

மன்றம் வந்த தென்றலுக்கு என ஆரம்பிக்கும் பாடல் மெளனராகம் படத்தில் வரும் இதை தான் இந்தியில் ரீமிக்ஸ் செய்தார்.. சீனி கம்

அரங்கேற்றவேளை ஆகாய வெண்ணிலாவே தான் எனக்கு தெரியும், மஞ்சம் வந்த தென்றலுக்கு என ஏதும் பாட்டு இருக்கா என்ன?

said...

நாகை சிவா said...
கொத்தனார் சொல்ல வந்தது...

அவரால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லையே... அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே.. நீங்க எல்லாம் போய் பார்த்து ரசித்ததும் இல்லாமல் இப்படி பதிவு போட்டு வெறுப்பேத்துறீங்களே... என்பதற்காக

கொத்தனாரே சரிதானே?///

அப்படி இருந்தால் நலம்:)

said...

நாகை சிவா said...
நல்ல விரிவான அலசல் :)

//SPB அதே பாட்டை மஞ்சம் வந்த தென்றலுக்கு அரங்கேற்றவேளை பட பாட்டை பாடும் பொழுது ஒரு கட்டத்தில் பொருமை //

மன்றம் வந்த தென்றலுக்கு என ஆரம்பிக்கும் பாடல் மெளனராகம் படத்தில் வரும் இதை தான் இந்தியில் ரீமிக்ஸ் செய்தார்.. சீனி கம்///

நீங்க சொல்வது சரிதான் புலி, நான் படம் பெயரை தவறாகதான் கொடுத்துவிட்டேன் போல!!!

said...

என்ன செய்யறது, குசும்பன்.
சில சமயம் இந்த மாதிரி ஆகிறது.

நாம நல்ல பாட்டை எம்பி 3யிலேயே கேட்டுக்கலாமோ என்னவோ:((

said...

எனக்கு ரஹ்மானை விட இளையராஜாவை ரொ.ரொ.ரொம்ப பிடிக்கும். இருந்தும் ரஹ்மான் துபையில் செய்த நிகழ்ச்சியில் கால் பங்கு கூட இது இல்லை என்பதை இரண்டும் நேரில் கண்டவன் எனக்கு உணர முடிந்தது. ராசாவுக்கு உண்மையிலேயோ வயசாயிருச்சோ?? :(

அப்புறம் நிகழ்ச்சியில் நடந்த சில குறைகளை தெளிவா சொல்லிட்டீங்க. இருந்தாலும் நிறைகளும் நிறைய இருந்தது.

ஒரு தமிழ் நிகழ்ச்சியை தொகுத்தளிக்க ஒரு தமிழன்/தமிழச்சி (குறைந்த பட்சம் தமிழ் நன்றாக பேசத்தெரிந்த இருவர்) கிடைக்காமல் போனது உருத்தலின் உச்ச கட்டம். :(

எனக்கென்னமோ இன்று வரை என்னை கட்டிப்போட்டிருக்கும் அந்த 80-களின் ராசாதான் பிடித்திருக்கு. :)

டிஸ்கி: ஓ.சி-யில டிக்கெட் வாங்கி பார்த்துட்டு குறை சொல்றான் பாருன்னு யாரும் சொல்லிடாதீங்கண்ணா!!

said...

அண்ணே இதையும் கொஞ்சம் பாருங்கள் ;)

இசையின் ராஜா...இளையராஜா

http://gopinath-walker.blogspot.com/2007/11/blog-post_17.html

said...

நான் தேடும் செவ்வந்திப் பூவிது . . .

பாட்டை கண்டிப்பா பாடி இருப்பாரே இளையராஜா. மறந்துட்டீங்களா. . .?

said...

nice coverage!wish i were there!

உங்களை கோப படுத்தின விஷயங்களை படிக்கும் போது எனக்கு நெருடலா தான் இருந்துச்சு!!!
இளையராஜா கிட்ட இருக்கற இந்த குணம் தான் எனக்கு சுத்தமா பிடிக்காதது!! :-(

said...

பின்ணணி இசைக்கு அவங்க own குரூப் வரலையா?

பின்ன ஏன் பின்ணணியில குளறுபடி!

காசு மட்டும் அவ்ளோ வாங்குறங்களே ஒரு தொழில் தர்மம் வேணாம்???//

Anonymous said...

"ஒரு தமிழ் நிகழ்ச்சியை தொகுத்தளிக்க ஒரு தமிழன்/தமிழச்சி (குறைந்த பட்சம் தமிழ் நன்றாக பேசத்தெரிந்த இருவர்) கிடைக்காமல் போனது உருத்தலின் உச்ச கட்டம். :(
"
உருத்தலின் --> உறுத்தலின்

ந்கைமுரணின் உச்ச கட்டம்?

said...

அது வந்து குசும்பன்ணே,

எனக்கும் தனியா பதிவு போட்டு "நானும் பாத்தேன்டா இளையராஜாவ"ன்னு சொல்ல ஆசைதான். அப்புறம் ஏற்கனவே இதப்பத்தி இதுவரைக்கும் 3 பதிவு வந்த நிலையில (இதயும் லிஸ்ட்ல சேத்துக்கிட்டேன்.. கோவமில்லியே) நான் வேற பதிவு போட்டு, அப்பால ஆசிப் அண்ணாச்சி 'விழுந்தது, விழாதது, விழா நடத்துனது' இது எல்லாத்துக்கும் தமிழ்மணத்துல தனியா எடம் ஒதுக்குங்கன்னு ஒரு மொக்கய போட்டு, வர்ற பின்னூட்டத்துல எத்தன ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குன்னு எண்ண ஆரம்பிச்சுடுவாரு. எதுக்கு நமக்கு வம்புன்னு நான் இந்த எடத்தையே எடுத்துக்கிட்டேன். கோச்சுக்காதே ராசா..

//குஷ்பு வந்து ஸ்டேஜ் என்றாலும் ஒழுங்காக கொடுக்கவேண்டும் என்ற சின்சியாரிட்டிதான் உங்களிடம் பிடிச்சது என்று சொல்ல ஜெயராமும் ஆமா அதுதான் ராஜா என்று சொல்ல சின்சியாரிட்டி என்று நீங்க சொன்னா நான் அதுவாக இல்லை நான் அதுவாக இருந்தால் சின்சியாடிட்டி இருக்காது அதில் ஒழுங்கு இருக்காது ..இப்படி ஏது ஏதோ சொல்ல ஜெயராமுக்கும் ஒன்னும் புரியவில்லை எனக்கும் ஒன்னும் புரியவில்லை.//

இது உங்களுக்கு புரியலன்னு போட்டிருந்தீங்க ராசா, எனக்கும் சரியா புரியாத மாதிரிதான் இருந்தது. அதுக்கப்புறம் நீங்க தெளிவா உள்வாங்கி எழுதுனத பாத்ததும் எனக்கு புரிஞ்ச மாதிரி ஆகிப்போச்சு. நம்ம பயப்புள்ளைங்க எல்லாம் சின்சியரா இருக்கறத நாம எல்லோருமே ஒரு கவுரவமா நினைச்சுக்கிட்டு இருக்கோம், எப்படி தோள்ல துண்டு போட்டுக்கறது, மீசை வச்சுக்கறது எப்படியோ அப்படி சின்சியாரிட்டின்னு குஷ்புலேந்து ஜெயராம்லேந்து இன்னும் மத்தவங்களும் நினைச்சுட்டாங்க. ஆனா பாருங்க ராசா சொல்றாரு, அதை என்னோட கௌரவமா மாத்தாதீங்கடான்னு.. எனக்கு தோணுதுங்க..
இன்னும் ஈசியா விளங்கனும்னா குணா படத்துல கமல் சொல்ற "நான் நானானதால சாகல.. நீ நீயானதால சாகல" (இதை உங்களால புரிஞ்சுக்க முடியுதா!). உங்க‌ளுக்கு தெளிவு பிறக்க மூணு பேர சஜெஸ்ட் பண்றேன்.

ஆப்ஷ‌ன் (அ) அய்ய‌னார் (ஆ) சுகுணா திவாக‌ர் (இ)டிரவுசர் கிழியாத ல‌க்கி

//சொர்கமே என்றாலும் பாட்டு வரியை மாற்றி சாதனா சர்கமும் இளையராஜாவும் பாடும் பொழுது பாட்டை நிறுத்தி சாதனா சர்கம் என்ன பாடுறாங்க புரியுதா அப்படின்னு கேட்டு விட்டு அவரே! மல்லி பூ போல பிச்சி பூ போல என்று பாடுறாங்க என்று இளையராஜா விளக்கம் கொடுத்தார்.இதுபோல பல முறை செய்தார் அப்படி செய்து சாதனா சர்கத்தை அவமதிச்சு இருக்க வேண்டி இல்லை. தமிழ் உச்சரிப்பு சரி இல்லை என்றால் அவர்களை அழைத்து வராமலே இருந்து இருக்கலாம்.
//

இதுல என்ன ராசா சொதப்பல கண்டு பிடிச்சீங்க... இப்ப நாம குழந்தைங்க கிட்ட பேசும்போது அது ஙங்ஙா... மஙஙா.. அப்படின்னு சொல்லி குழந்தைங்க சிரிக்கும்போதோ இல்ல உங்கள பாத்து அழும்போதோ என்ன சொல்ற நீன்னு அந்த குழந்தைய தூக்கி கொஞ்சும்போது அதுக்கென்ன அர்த்தமுன்னு அந்த குழந்தையோட அம்மா விளக்கம் தர்றதில்லையா.. இப்ப இதே பாட்ட அவங்க கேசட்ல பாடியிருந்தாங்கன்னா அத நீங்க நிறைய தடவ கேக்குறப்போ மொதோ தடவ புரியாத பாட்டு லைட்டா புரிய ஆரம்பிக்கும். அப்புறமா புடிக்கவும் ஆரம்பிக்கும். அந்த மாதிரி இப்ப நேரம் இல்லாததால அவங்க பாடுனத ராசாவும் பாடிக்காமிச்சாரு. இப்படி ஹிந்திக்கார புள்ளங்கள கூட நமக்காக கூட்டி வந்து இப்படி தமிழ் பேசவச்சு (நமீதா மாதிரி) கஷ்டப்படுத்தாம நேரா பாட சொல்லிடராரே அதுக்கு நாம என்னங்க செய்யப்போறோம்.. அப்படிப்பாத்தா பச்சத்தமிழன் நீங்க (சரி... கருப்பு தமிழன்) உங்க பதிவுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் வர்றத நாங்க ஏதாச்சும் சொல்லியிருக்கோமா...
அதுக்காக உங்க பதிவ படிக்காம விட்டுர்ரோமா என்ன...!

இப்ப‌டி இன்னும் கூட‌ சொல்லிக்கிட்டே போக‌லாம். ஆனா ப‌திவ‌ விட ஒரு பின்னூட்ட‌ம் பெருசாக‌க்கூடாதுங்க‌ற‌ த‌மிழ்ம‌ண‌ விதியின் ப‌டி (!?) நான் இத்தோட‌ நிறுத்திக்க‌றேன்.

ஆனா ஒண்ணுண்ணே உங்க பதிவுலேயே எனக்கு ரொம்ப புடிச்சதும் சரி, உங்க கருத்தோட ஒத்துப்போறதும் சரி அது ஷ்ரேயா கோஷல் பத்தி நீங்க ஜொள்ளியிருக்கறதுதாங்க.. ஆனா அதுல கூட ஒரு குறைய பாருங்க. அவங்க போட்டோ ஒண்ணு கூடவா உங்களுக்கு கிடைக்கல. எங்கள இந்த விஷயத்துலயும் ஏமாத்திப்புட்டியே ராசா :((

சென்ஷி

said...

எல்லாம் சரி அந்த 5 மணி நேரம்
பணியில் உக்காந்து பார்த்துவிட்டு வந்து
இப்ப ரெண்டு நாளா அவஸ்தை பட்டுகிட்டு
(ஜலதோஷம் ) இருக்கறதை என்ன சொல்றது

said...

வல்லிசிம்ஹன் said...
என்ன செய்யறது, குசும்பன்.
சில சமயம் இந்த மாதிரி ஆகிறது.////

ஆமாம் அம்மா , இருந்தாலும் இதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.

said...

லொடுக்கு said...
/// ராசாவுக்கு உண்மையிலேயோ வயசாயிருச்சோ?? :(//

கண்டிப்பாக அதில் சந்தேகமே இல்லை!

///ஒரு தமிழ் நிகழ்ச்சியை தொகுத்தளிக்க ஒரு தமிழன்/தமிழச்சி (குறைந்த பட்சம் தமிழ் நன்றாக பேசத்தெரிந்த இருவர்) கிடைக்காமல் போனது உருத்தலின் உச்ச கட்டம். :(///

என்னது குஷ்பு தமிழச்சி இல்லையா, யேய் கடைய அடைகங்கடா பஸ்ஸை கொளுத்துங்கடா!!!:)))

டிஸ்கி: ஓ.சி-யில டிக்கெட் வாங்கி பார்த்துட்டு குறை சொல்றான் பாருன்னு யாரும் சொல்லிடாதீங்கண்ணா!!///

ஆபிஸரை அப்படி யாராவது சொல்வோமா?

said...

வெங்கட்ராமன் said...
நான் தேடும் செவ்வந்திப் பூவிது . . .

பாட்டை கண்டிப்பா பாடி இருப்பாரே இளையராஜா. மறந்துட்டீங்களா. . .?///

இல்லை பாடியதாக நினைவு இல்லை, மூன்றாம் பிறை பாட்டையும் எதிர்பார்த்தேன் ஆனால் இல்லை:(((

said...

CVR said...
nice coverage!wish i were there!

உங்களை கோப படுத்தின விஷயங்களை படிக்கும் போது எனக்கு நெருடலா தான் இருந்துச்சு!!!
இளையராஜா கிட்ட இருக்கற இந்த குணம் தான் எனக்கு சுத்தமா பிடிக்காதது!! :-(////

ஆமா CVR பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது:(

said...

ஆயில்யன் said...
பின்ணணி இசைக்கு அவங்க own குரூப் வரலையா?

பின்ன ஏன் பின்ணணியில குளறுபடி!

காசு மட்டும் அவ்ளோ வாங்குறங்களே ஒரு தொழில் தர்மம் வேணாம்???///

என்னமோ காரணம் சொல்றாங்க, ஒரிஜினாலிட்டி, அவுட்டோர் என்றால் இம்புட்டுதான் என்று :((((

said...

ஆனா ஒண்ணுண்ணே உங்க பதிவுலேயே எனக்கு ரொம்ப புடிச்சதும் சரி, உங்க கருத்தோட ஒத்துப்போறதும் சரி அது ஷ்ரேயா கோஷல் பத்தி நீங்க ஜொள்ளியிருக்கறதுதாங்க.. ஆனா அதுல கூட ஒரு குறைய பாருங்க. அவங்க போட்டோ ஒண்ணு கூடவா உங்களுக்கு கிடைக்கல. எங்கள இந்த விஷயத்துலயும் ஏமாத்திப்புட்டியே ராசா :((///

சென்சி தனிபதிவா போடும் முன்பே அவசர பட்டுட்டியே செல்லம்:)
போட்டோ போடாம விட்டுவிடுவோமா?

said...

delphine said...
எனக்கு இளைய ராஜா...பிடிக்கும்.
குசும்பன்... உன்னுடைய விமர்சனமும் ரொம்ப நல்லா இருக்கு.///

நன்றிம்மா!

said...

valar said...
எல்லாம் சரி அந்த 5 மணி நேரம்
பணியில் உக்காந்து பார்த்துவிட்டு வந்து
இப்ப ரெண்டு நாளா அவஸ்தை பட்டுகிட்டு
(ஜலதோஷம் ) இருக்கறதை என்ன சொல்றது///

எனக்கு நேற்று ஜுரம் வந்து விட்டது ஆபிஸ் அரை நாள் லீவ் போட்டுவிட்டு வீட்டில் போய் படுத்துவிட்டேன், இன்னும் அப்படிதான் இருக்கு:(((

என்ன செய்ய கடமை அழைக்கிறது, இன்னும் பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் சொல்லவில்லை அந்த கடமைதான்:))))))))))))

Anonymous said...

குசும்பு சார்,,


//SPB பாடிய இளைய நிலா பொழிகிறது...அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை இன்னும் அதே துள்ளல் அதே உற்ச்சாகம். ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் பேச்சு மனுசனுக்கு வயசே ஆகாது போல.//

அதுதானா பாலுஜியோட ஸ்பெஷல். ஹ்ஹி..ஹி..ஹ்ஹி...

Anonymous said...

என்ன செய்ய கடமை அழைக்கிறது, இன்னும் பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் சொல்லவில்லை அந்த கடமைதான்:))))))))))))//ennathai solla?