Sunday, November 18, 2007

நன்றி நன்றி நன்றி

ரொம்ப சந்தோசமாக இருந்தது நேற்று தினமணி கதிரில் உங்க பிளாக் என்று பாஸ்டன் பாலாவின் பின்னூட்டத்தை பார்த்தபொழுது, சரி என்று கிளிக் செஞ்சு பார்த்தா முதல் முதலாக இருந்தது தஞ்சாவூர் குசும்பு சரி ஊர் பேரும், நம்ம பிளாக் பேரும் ஒன்றாக இருந்ததால் தவறுதலாக என்னை சொல்லிவிட்டார் என்று நினைச்சேன் பிறகுதான் கீழே என் பெயரும் இருந்தது.


என்னாடா நம்மளை பத்தி சொல்லி இருக்காங்கன்னு பார்த்தா UAE வரும் முன் என்று எழுதிய பதிவை பற்றிசொல்லி இருக்காங்க. (இந்த பதிவு ஜமாலன் பதிவை படிச்ச பிறகுதான் எழுதனும் என்று தோனியது, அவருக்கும் வித்யாகலைவாணிக்கும் நன்றி)அட நம்ம பிளாக்கையும் கவனிக்கிறாங்களா என்று என்னும் பொழுது வரும் சந்தோசம் தனிதாங்க. நான் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை என்னுடைய வலை பதிவை பற்றி இருக்கும் பதிவுகளில் 99.9999% எல்லாம் யாரையாவது கலாய்ச்சது தான். நாம என்னா இலக்கியம் ,தமிழ் வளர்கவா பிளாக் ஆரம்பிச்சு இருக்கோம் படிக்கும் பொழுது ஏதோ ரெண்டு பேர் சத்தம் போட்டு அல்ல லேசாக புன்முறுவல் செஞ்சா கூட போதும் என்றுதான் ஆரம்பிச்சோம்.இதுவரை யாரிடம் இருந்து திட்டோ, அல்லது குட்டோ வாங்காமல் நிறைய பேரை கலாய்ச்சாச்சு, நிச்சயமாக இது வரை யாரையும் மனம் நோகும் படி செய்தது இல்லை, சம்மந்த பட்டவரே மிகவும் ரசிச்சு சிரிச்சேன் என்று சொல்லும் பொழுது மிகவும் மகிழ்சியாக இருக்கும்.


இதுவரை ஆனந்தவிகடனில், தினமலரில் அவரை பற்றி வந்து இருக்கு இவுங்களை பற்றி வந்து இருக்கு என்று பார்க்கும் பொழுது எல்லாம்ராசா ரொம்ப ஆசை படாத உன் லெவலுக்கு எல்லாம் நெட்டில் எழுத இடம் கொடுத்ததே பெருசு இதுல உங்க பேரு புக்கில் வேறவரனுமா என்று ஒரு குரல் ஒலிக்கும். அதுக்காக ஒழுங்கா உருப்படியா எழுதனும் என்ற தப்பான என்னம் மட்டும் வரவே இல்லை, இப்பொழுது வந்துவிட்டதாலும்வ்அது போல் என்னம் வரபோவதும் இல்லை எப்பொழுதும் போல நாம் கலாய்போம் .
சரிதானே:)நான் ஏதோ என் லெவலுக்கு துறைசார்ந்த பதிவில் என் பதிவு வர என்ன செய்யலாம் என்று யோசிச்சு பதிவு போட்டுக்கிட்டு இருக்கிறேன்.


பிறகு தஞ்சாவூரானுக்கும் ஜோ / Joe வாழ்த்துக்களை தகவலை சொன்னது மட்டும் அல்லாமல் தனி பதிவாக போட்ட பாலாவுக்கும் முக்கியமாக தினமணிக்கும், பாசகார குடும்பம் தனி பதிவு போட்டு கொண்டாடுகிறது அவர்களுக்கும் நன்றியை சொல்லிக்கிட்டு நன்றி உரையை முடிச்சுக்கிறேன்.

31 comments:

said...

வாழ்த்துக்கள்!!
:)))

said...

//இவுங்களை பற்றி வந்து இருக்கு என்று பார்க்கும் பொழுது எல்லாம்ராசா ரொம்ப ஆசை படாத உன் லெவலுக்கு எல்லாம் நெட்டில் எழுத இடம் கொடுத்ததே பெருசு இதுல உங்க பேரு புக்கில் வேறவரனுமா என்று ஒரு குரல் ஒலிக்கும்//

தன்னடக்காமாமாம்.....!!!!!!!

said...

சீரியஸா எழுதுனாத்தான் கவனிப்பாங்கன்னு சீரியஸா எழுதர தப்ப மட்டும் பண்ணிடாதிங்க மாமா. அதுக்கு இங்க நிறய ஆள் இரூக்காங்க.உங்க சப்ஜெக்ட்டுக்குத்தான் ஆள் ரொம்ப கம்மி,

இதயும் மீறி இனி சீரியஸ் பதிவு போட்டீங்கன்னா அத்தனை பதிவுலயும் கும்மியோ கும்மி நடந்துடும் ஜாக்கிரதை

said...

//ரொம்ப சந்தோசமாக இருந்தது நேற்று தினமணி கதிரில் உங்க பிளாக் என்று பாஸ்டன் பாலாவின் பின்னூட்டத்தை பார்த்தபொழுது, சரி என்று கிளிக் //

அண்ணாத்தே நீங்க லிங்க் பா.பாவுக்குல்ல கொடுக்கணும்??????????

said...

நன்றி ஜெகதீசன்,

****************

ஆயில்யன் தன்னடக்கம் எல்லாம் இல்லை நிஜம்தான், ஒரு வரி கவிதை வராது, ஒரு சிங்கிள் பேஜ் கதைவராது அப்புறம் எப்படி சொல்றது.

**********************

நிலா அதுமாதிரி தப்பை மட்டும் செய்யவே மாட்டேன், சுட்டு போட்டாலும் வராது, கவலைபடாதீங்க

************************

said...

//நிச்சயமாக இது வரை யாரையும் மனம் நோகும் படி செய்தது இல்லை//

கலாய்க்க நிறய பேரு இருக்காங்க. ஆனா காயப்படுத்தாம கலாய்ப்பது ஒரு கலைதான். அதுக்கு உங்கள மாதிரி ஒண்ணு ரெண்டு பேருதான் இருக்காங்க....

(அப்புறம் இந்தியா வந்த உடனே ட்ரீட்ன்னு சொன்னீங்க, அப்பா ட்ரீட்டுக்கான எல்லா ஏற்பாடூம் பண்ணீட்டாராமா. வந்து பில் மட்டும் செட்டில் பண்ணா போதும்னு சொல்ல சொன்னார்)

said...

நிலா said...
///கலாய்க்க நிறய பேரு இருக்காங்க. ஆனா காயப்படுத்தாம கலாய்ப்பது ஒரு கலைதான். அதுக்கு உங்கள மாதிரி ஒண்ணு ரெண்டு பேருதான் இருக்காங்க....///

:)))

(அப்புறம் இந்தியா வந்த உடனே ட்ரீட்ன்னு சொன்னீங்க, அப்பா ட்ரீட்டுக்கான எல்லா ஏற்பாடூம் பண்ணீட்டாராமா. வந்து பில் மட்டும் செட்டில் பண்ணா போதும்னு சொல்ல சொன்னார்)////

இல்லடா நிலா குட்டி அம்மா என்னா சொன்னாங்க தெரியுமா தம்பி நீ இங்கு வரும் பொழுது எல்லா செலவையும் அவர் உன் தலையில் கட்டலாம் என்று இருகார் சோ நீ இங்கு வரும் பொழுது சொல்லுப்பா அவருக்கு தெரியாம அவர் பர்ஸில் இருந்து ஒரு 10000 ஆட்டைய போட்டு தந்து விடுகிறேன் நீயும் டீரிட் வச்சுடு டா தம்பின்னு சொன்னாங்க, உனக்கும் அம்மாதானே பிடிக்கும் சோ அம்மா பேச்சு படி நம்ம நடப்போம் உன் அப்பாவுக்கு பட்டை நாமம் போட்டுவிடுவோம் டீல் ஓக்கேவா?

said...

அண்ணே எங்கள மறந்தீடீங்களெ....நாங்களும் தான் தனி பதிவு உங்கள வாழ்த்தி பொட்டோம். http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_17.html

said...

ஒரு 10000 ஆட்டைய போட்டு தந்து விடுகிறேன் நீயும் டீரிட் வச்சுடு டா தம்பின்னு சொன்னாங்க, உனக்கும் அம்மாதானே பிடிக்கும் சோ அம்மா பேச்சு படி நம்ம நடப்போம் உன் அப்பாவுக்கு பட்டை நாமம் போட்டுவிடுவோம் டீல் ஓக்கேவா?

என்னயும் ஆட்டைல சேத்துகோங்கப்பா...

said...

இந்த இம்சை தொல்ல தாங்கல குசும்பா, அவரும் என்னவோ உன்ன பத்தி பதிவு போட்ருக்காருப்பா.

said...

Baby Pavan said...
அண்ணே எங்கள மறந்தீடீங்களெ....நாங்களும் தான் தனி பதிவு உங்கள வாழ்த்தி பொட்டோம்.///

அதான் பார்த்தோமே எல்லோரும் போன் போட்டு கேட்கிறாங்க என்னய்யா கல்யாணமா என்று...மகனுங்களா கையில மாட்டுங்க அன்னை வாசிக்கிறேன் பாருங்க தவில்:)))

**************************

என்னயும் ஆட்டைல சேத்துகோங்கப்பா...///

அங்க வந்தும் நீ ங்கா ங்கான்னு அழுவ அதுக்கு பேசாம வீட்டில் பால் குடிச்சுட்டு படுத்து தூங்கு சம்த்து புள்ளையா, நான் போய்ட்டு வந்து உனக்கு கதை சொல்றேன் ஓக்கேவா?

******************************
இந்த இம்சை தொல்ல தாங்கல குசும்பா, அவரும் என்னவோ உன்ன பத்தி பதிவு போட்ருக்காருப்பா.///

இம்சை ரொம்ப நல்லவர் அவர் இது போல் தவறு எல்லாம் செய்ய மாட்டார்:)))
**************************

Anonymous said...

குசும்பன்,
வாழ்த்துக்கள். நன்றி-ன்னு பார்த்ததும் வலை உலக விட்டு போறீங்கலோன்னு நினச்சேன்.

said...

வாழ்த்துக்கள் !
:)))

முத்து குளிக்கும் போது வெறும் சிப்பிகூட அதிகமாக கிடைக்குமாம். மொக்கைக்காக வருத்தப்படாதிங்க.
100 சிப்பிகளில் ஒன்றும் இல்லையென்றாலும் எதோ சிப்பிக்குள் தான் முத்து இருக்கும் !

said...

ஆகா கலக்கீட்டிங்க.
சந்தோஷம்.

Anonymous said...

வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துகிறேன்

said...

நீங்களும் கெட்டுப் போயிட்டீங்களா? :(

said...

இன்னும் பல சந்தோஷ செய்திகளை பெற மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்.. குசும்பரே..
ஆமா மாம்ஸ்..உங்க வீட்டுல கல்யாணத்துக்கு ரெடி பண்ணரதா நம்ம பொடியன் கொளுத்தி போடராரே.. உண்மையா?..
அப்பிடின்னாக்கா டபுள் வாழ்த்துக்கள் மாமே......

said...

ரசிகன் said...
இன்னும் பல சந்தோஷ செய்திகளை பெற மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்.. குசும்பரே..
ஆமா மாம்ஸ்..உங்க வீட்டுல கல்யாணத்துக்கு ரெடி பண்ணரதா நம்ம பொடியன் கொளுத்தி போடராரே.. உண்மையா?..
அப்பிடின்னாக்கா டபுள் வாழ்த்துக்கள் மாமே......

ஆகா அருமை அருமை...இன்னும் புகையுதா

said...

ஜெகதீசன் said...
வாழ்த்துக்கள்!!
:)))
delphine said...
குசும்பன்,
வாழ்த்துக்கள்
கோவி.கண்ணன் said...
வாழ்த்துக்கள் !
:)))
jaseela said...
வாழ்த்துக்கள்!
நாகை சிவா said...
வாழ்த்துகிறேன்

இவங்க எல்லாம் கல்லாணத்துக்கு தானெ வாழ்த்திருக்காங்க.

said...

delphine said...
குசும்பன்,
வாழ்த்துக்கள். நன்றி-ன்னு பார்த்ததும் வலை உலக விட்டு போறீங்கலோன்னு நினச்சேன்.///


நீங்களுமா?:(((((((((

***********************
கோவி.கண்ணன் said...
வாழ்த்துக்கள் !
:)))

/////

நன்றி கோவி :)

முத்து எடுத்துடுவோம்:)))

**************************
வெங்கட்ராமன் said...
ஆகா கலக்கீட்டிங்க.
சந்தோஷம்.//////

நன்றி நண்பா:)

***************************
jaseela said...
வாழ்த்துக்கள்!///

நன்றி

****************************
நாகை சிவா said...
வாழ்த்துகிறேன்/////

நன்றி சிவா

*************************

லொடுக்கு said...
நீங்களும் கெட்டுப் போயிட்டீங்களா? :(///

ஆமாங்க நேற்று பிரிஜில் வைக்காம விட்டுட்டாங்க கெட்டு போய்ட்டேன்:)))

*************************
ரசிகன் said...
இன்னும் பல சந்தோஷ செய்திகளை பெற மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்..///

ரசிகன் நாம் எல்லாம் ஸ்ரேயா கோசல் மன்றத்தில் இருக்கோம் உங்களுக்கு சொல்லாம எப்படி இருப்பேன், அந்த குட்டி பிசாசுங்க கொளுத்திபோட்டது வெடி இல்லை புஸ்வாணம் அமுங்கி போச்சு:)))

**************************

said...

Baby Pavan said...

///இவங்க எல்லாம் கல்லாணத்துக்கு தானெ வாழ்த்திருக்காங்க.///

ஆமாம்:))

************************************

said...

வாழ்த்துக்கள் குசும்பரே.
மற்றவர்களை நோக வைக்காமல் குசும்பு பண்ணுறது எல்லாருக்கும் வராது. அது உங்களுக்கு அருமையாக வருகிறதே.

said...

mapi kalakita di ...

said...

வாழ்த்துக்கள்! புது செய்தியும் லொல்லும் நல்லா இருக்கு.

said...

மேலும் சிறக்க தாமதமான வாழ்த்துகள்.

said...

சுல்தான் said...
வாழ்த்துக்கள் குசும்பரே.
மற்றவர்களை நோக வைக்காமல் குசும்பு பண்ணுறது எல்லாருக்கும் வராது. அது உங்களுக்கு அருமையாக வருகிறதே.///

நன்றி சுல்தான் பாய்.

*********************

சந்தோஷ் said...
mapi kalakita di ...

நன்றி சந்தோஷ்

**************************

வித்யா கலைவாணி said...
வாழ்த்துக்கள்! புது செய்தியும் லொல்லும் நல்லா இருக்கு.///

நன்றி வித்யா:) உங்கள் கவனிப்புக்கும்:)

***************************

அருட்பெருங்கோ said...
மேலும் சிறக்க தாமதமான வாழ்த்துகள்.//

மிக்க நன்றி அருட்பெருங்கோ!!!

**********************************

said...

congrats!!

said...

வாழ்த்துக்கள் குசும்ப்ஸ்.. :) ரொம்ப சீக்கிரம் சொலிட்டேனோ? :)..

ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு தன்னடக்கம் இருக்கப் படாது மாம்ஸ். நீங்க இந்த பதிவ எழுதும் போது நான் தாய்னாந்துல இருந்தேன்( எப்டி எல்லாம் விளம்பரம் செய்ய வேண்டி இருக்கு? அவ்வ்வ்வ்வ் ). ஒரு போன் போட்டு சொல்லப் படாதா?என்னதான் தினமணிக் கதிர் மாதிரி மட்டி பேப்பர் புக்குல வந்திருந்தாலும் நம்ம மாம்சஸ்க்காக ஒரு வாழ்த்து சொல்லி இருப்போம்ல? :P

said...

//அதான் பார்த்தோமே எல்லோரும் போன் போட்டு கேட்கிறாங்க என்னய்யா கல்யாணமா என்று...மகனுங்களா கையில மாட்டுங்க அன்னை வாசிக்கிறேன் பாருங்க தவில்:)))//

நான் இல்ல.. நான் இல்ல.. :P

said...

//ரசிகன் said...

இன்னும் பல சந்தோஷ செய்திகளை பெற மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்.. குசும்பரே..
ஆமா மாம்ஸ்..உங்க வீட்டுல கல்யாணத்துக்கு ரெடி பண்ணரதா நம்ம பொடியன் கொளுத்தி போடராரே.. உண்மையா?..
அப்பிடின்னாக்கா டபுள் வாழ்த்துக்கள் மாமே......//

ஆஹா.. ரசிகன் அங்கிள்..இது உங்க வேலை தானா? :((