Wednesday, August 29, 2007

தமிழ்மணத்திற்கு மனம் திறந்த மடல்

From:

குசும்பன்
கும்மி இல்லம்
துபாய்

To:
தமிழ்மண நிர்வாகம்

sub: ஒரு இரண்டு மூன்று நாட்கள் விடுப்பு வேண்டும்.

ஐயா:
வணக்கம், நான் இங்க தமிழை அடுத்த கட்டத்துக்கோ, அல்லது பலருக்கு கருத்து சொல்லவோ இங்குவரவில்லை, ஏதோ நாமும் சிரிக்கனும் மத்தவங்களையும் சிரிக்க வைக்கனும் அதுதான் நம்ம கொள்கை. ஆனா கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டும், சண்டை , போர், யுத்தம் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு நான் எல்லாம் 23ஆம் புலிகேசி இனம் ஆகையால் யுத்தம் எல்லாம் முடியும் வரை கொஞ்சம்
ஓய்வு வேண்டும்.

நிறையபேர் இதே மனநிலையில்தான் இருக்காங்க. பிளாக் எழுத பலர் வரவேண்டும் என்று பால பாரதி, பொன்ஸ் அக்கா,லக்கி போன்றோர் பதிவர் பட்டறை அது இது என்று நடத்தி கஷ்டப்படுகிறார்கள், ஆனால் இருக்கிற பல நல்ல தரமான பதிவர்கள்(நான் இல்லை)
இதை எல்லாம் பார்த்து போகிறேன் என்கிறார்களே அவர்களை எல்லாம் யார் திரும்ப அழைத்து வரபோகிறார்கள்???

அன்புடன்
குசும்பன்

24 comments:

Anonymous said...

அடுத்த பதிவா தமிழ்மனத்திடம் டாக்டர் பட்டம் கேட்டு திரந்த மடல் போடுவீங்கலா குசும்பா

Anonymous said...

ஆமா என்ன நடக்குது?

Anonymous said...

இரண்டு மூன்று நாட்கள் விடுப்பு வேண்டும்.

Anonymous said...

ரெண்டுநாள் தமிழ்மணத்துக்கு லீவு போடுங்க.

- உங்களோடு சாட் செய்து கொண்டிருப்பவன்

Anonymous said...

கருமம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மத்த பசங்க படிக்கலன்னா என்ன உங்க புத்தகத்தை எடுத்து வச்சு ஒழுங்கா படிக்க வேண்டியது தான?
லீவ் லெட்டர் கேட்டுக்கிட்டு....

கதிர் said...

ரெண்டு நாள் என்ன? ரெண்டு வருசம் ஆனாலும் சரிதான் மெதுவா வா.
மன அமைதிதான் முக்கியம்.

நீ லீவ் போடறேன்னு சொன்னவுடனே அய்யனார் சந்தோஷத்துல ட்ரீட் தரன்னு சொல்லிட்டாரு.

அப்படியே நீயும் லீவ் போட்டதுக்காக ட்ரீட் வச்சிட்டன்னா சந்தோஷமா இருக்கும்.

குசும்பன் said...

Anonymous said...
அடுத்த பதிவா தமிழ்மனத்திடம் டாக்டர் பட்டம் கேட்டு திரந்த மடல் போடுவீங்கலா குசும்பா

:))) இல்லீங்க

குசும்பன் காதலி said...
ஆமா என்ன நடக்குது?

என் கூட ரெண்டு சூப்பர் பிகர் நடக்குது.

குசும்பன் said...

முத்துலெட்சுமி said...
மத்த பசங்க படிக்கலன்னா என்ன உங்க புத்தகத்தை எடுத்து வச்சு ஒழுங்கா படிக்க வேண்டியது தான?
லீவ் லெட்டர் கேட்டுக்கிட்டு....

:(((( படிப்பா? அவ்வ்வ்வ்

குசும்பன் said...

தம்பி said...
"அப்படியே நீயும் லீவ் போட்டதுக்காக ட்ரீட் வச்சிட்டன்னா சந்தோஷமா இருக்கும்."

இது என்னா சொந்த செலவில் சூன்யமா? லியோ கொடுத்த ட்ரீட்டுக்கு என்ன அடிச்ச, இப்ப ட்ரீட்டும் நான் கொடுத்து அடியும் வாங்கனும்மா? போய்யா போ.

maruthamooran said...

நண்பர் குசும்பரே,
நீர் இவ்வளவு சீக்கிரம் நல்ல முடிவை எடுப்பீர் என்று கானவில் கூட நினைத்ததில்லை… (சும்மா சும்மா………..)
நீங்கள் ஏன், பதிவுலகில் இருந்து விடுப்பு(உங்கட தமிழில் லீவு) எடுக்க வேண்டும்… நீர் மொக்கைப்பதிவுகளாய் போட்டுத்தாக்கும்,…. நாங்கள் அலுவலக அலுப்புக்களை உங்களின் பதிவுகளிலேயே தீர்த்துக்கொள்கின்றோம்…..

கோபிநாத் said...

\\ தம்பி said...
ரெண்டு நாள் என்ன? ரெண்டு வருசம் ஆனாலும் சரிதான் மெதுவா வா.
மன அமைதிதான் முக்கியம்.\\

ரீப்பிட்டேய்....

Anonymous said...

ஆமா என்ன நடக்குது?

என் கூட ரெண்டு சூப்பர் பிகர் நடக்குது.

kusumputhaappaa

athenna letter thalai keela

generally, from then to..

here, to. then from

enna aachi

ILA (a) இளா said...

லீவ் லெட்டர் எல்லாம் எதுக்கு குசும்பா வாங்கிகுங்க. இப்படி அடிச்சுக்கிறது அவுங்க இஷ்டம். அதுக்காக நீங்க கவலைப்பட்டா என்ன ஆகப்போவுது?

வல்லிசிம்ஹன் said...

Kusumban,
thamizh maNaththai aduththakattathukku eduththup pokum vazhimuRaiyaa ithu:)))))))

கண்மணி/kanmani said...

எலே குசும்பா உனக்கு லீவு கிடையாது.முதல்ல லீவு லெட்டர் எப்படி எழுதுறதுன்னு கத்துக்க.
பிரம் அட்ரஸ் போட்ட பின்ன தான் டூ அட்ரஸ் எழுதனும்.
ஆமா உங்க வாத்தி யாரு?
என்னை மாதிரி டீச்சர்கிட்ட படிச்சிருந்தா உருப்பட்டு இருப்பே.
இந்த தப்பான லெட்டருக்கு 13 பின்னூட்டம்.
கண்ணாடி போட்ட டீச்சர்

குசும்பன் said...

மருதமூரான். said...
நண்பர் குசும்பரே,
நீர் இவ்வளவு சீக்கிரம் நல்ல முடிவை எடுப்பீர் என்று கானவில் கூட நினைத்ததில்லை… (சும்மா சும்மா………..)

அவ்வ்வ்வ்வ்வ் நீங்களுமா?:((((((

நீங்கள் ஏன், பதிவுலகில் இருந்து விடுப்பு(உங்கட தமிழில் லீவு) எடுக்க வேண்டும்… நீர் மொக்கைப்பதிவுகளாய் போட்டுத்தாக்கும்,…. நாங்கள் அலுவலக அலுப்புக்களை உங்களின் பதிவுகளிலேயே தீர்த்துக்கொள்கின்றோம்…..

மொக்கைபதிவாகவா அவ்வ்வ்வ்வ்வ் இத கேட்க யாருமே இல்லையா?

குசும்பன் said...

கோபிநாத் said...
\\ தம்பி said...
ரெண்டு நாள் என்ன? ரெண்டு வருசம் ஆனாலும் சரிதான் மெதுவா வா.
மன அமைதிதான் முக்கியம்.\\

கோபிதம்பி நீயுமா?:(((

குசும்பன் said...

"ILA(a)இளா said...
லீவ் லெட்டர் எல்லாம் எதுக்கு குசும்பா வாங்கிகுங்க. இப்படி அடிச்சுக்கிறது அவுங்க இஷ்டம். அதுக்காக நீங்க கவலைப்பட்டா என்ன ஆகப்போவுது? "

கவலை இல்ல இளா வருத்தம் :(((

குசும்பன் said...

வல்லிசிம்ஹன் said...
Kusumban,
thamizh maNaththai aduththakattathukku eduththup pokum vazhimuRaiyaa ithu:)))))))

அடுத்த கட்டமா ? கீழே போகாம இருந்தா சரி:)))

குசும்பன் said...

கண்மணி said...
எலே குசும்பா உனக்கு லீவு கிடையாது.முதல்ல லீவு லெட்டர் எப்படி எழுதுறதுன்னு கத்துக்க.
பிரம் அட்ரஸ் போட்ட பின்ன தான் டூ அட்ரஸ் எழுதனும்.
ஆமா உங்க வாத்தி யாரு?
லெட்டர் எல்லாம் எழுதி வருட கணக்கா ஆவுது இதுல எது முன்னாடி வரும் பின்னாடி வரும் என்று எல்லாம் மறந்து போச்சுங்க டீச்சர், நான் ஒழுங்கா படிக்காததுக்கு அவரு என்னா செய்ய முடியும்???

என்னை மாதிரி டீச்சர்கிட்ட படிச்சிருந்தா உருப்பட்டு இருப்பே.

உங்களுக்க காமெடி நிறைய வரும் என்று கேள்வி பட்டு இருக்கேன் ஆனா அத இப்பதான் பார்க்கிறேன்:))))
இந்த தப்பான லெட்டருக்கு 13 பின்னூட்டம்.
கண்ணாடி போட்ட டீச்சர்

Anonymous said...

ayyo sandaya?enge?eppo? konja naal thamizhmanam pakkam warama onnum puriyala..........

Anonymous said...

jaseela said...
ayyo sandaya?enge?eppo? konja naal thamizhmanam pakkam warama onnum puriyala..........

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(((((

Unknown said...

//ayyo sandaya?enge?eppo?//
கோஷ்டி சண்டையிலே கூடுதலாக அடி பட்ட (குசும்பர் மாதிரி) ஒருவரிடம்
ராபி: பாவம் செல்வத்துக்குதான் ரொம்ப அடி
செல்வம்: என்னை எவன் அடிப்பான்? என்னை ஒருத்தனும் அடிக்கல
ராபி: அப்ப சரி.
செல்வம்: அடிக்கல. எல்லாமா சேர்ந்து துவைச்சு கும்மியில்ல விட்டானுங்க
ராபி: !?!

யார் யாரோ - யார் யாரையோ
கொலைவெறி. ஒரே அளும்பா இருக்குது.