Sunday, August 26, 2007

இளம் ஹீரோ பால பாரதி தலைவன் படத்திலிருந்து விலகினார்

அன்றைய தினம் எல்லா பேப்பர்களிலும் முதல் பக்கசெய்தி

"இளம் ஹீரோ பால பாரதி தலைவன் படத்திலிருந்து விலகினார். அவரின் பா.க.ச படை கொதிப்பு. அனைவரும் அமைதிகாக்கும் படி பால பாரதி வேண்டுகோள்."

நிருபர்: நீங்க ஏன் அந்த படத்தில் இருந்து விலகுகிறீர்கள் என்று சொன்னால் உங்கள் பா.க.ச ரசிகர்கள் சமரசம் அடைவர்கள்? என்ன நடந்தது சொல்லுங்க.பால பாலதி: இல்லீங்க சொன்னாதான் அவுங்க கோபம் இன்னும் அதிகரிக்கும்.
நிருபர்: பரவாயில்லை சொல்லுங்க!!!
பால பாரதி: உங்களுக்காக இதை நான் விளக்கமாக என்ன நடந்தது என்று சொல்கிறேன்.
அன்று ஒரு நாள் படத்தின் தயாரிப்பாளர் போன் செய்தார், லோ பட்ஜெட் படம் ஒன்று தயாரிக்க போவதாகவும் பாலபாரதி தி பாஸ் டைரக்டர் சிபி தான் இந்த படத்தையும் டைரக்ட் செய்ய போவதாகவும் சொன்னார். நானும் சரி என்று சொன்னேன்.

கதைபடி நான் வக்கீலுக்கு படிக்கும் இளைஞன், நான் கல்லூரிக்கு சென்று வரும் பொழுது ஹீரோயினை பார்த்து காதல் வருகிறது, பின் ரவுடிகளால் அவள் கொல்ல படுகிறாள் அவளுக்காக நான் போராடி நீதி வாங்குகிறேன். சாட்சி சொல்ல பேய்கள் எல்லாம் வரும் என்றார்கள் சரி வித்தியாசமான கதை என்பதால் சரி சொல்லி இருந்தேன்.

முதல் நாள் ஷூட்டிங் நானும் பந்தாவாக கிளம்பி போனேன்.
அங்கு டைரக்டர் சிபி நீங்க கதை படி இன்று காலை காலேஜ்க்கு பைக்கில் கிளம்பனும், நீங்க வேளச்சேரியில் இருந்து நந்தனம் போவதாக இன்று ஷூட்டிங் செய்ய போகிறோம் என்றார், சரி பைக் கொடுங்க என்றால் இது லோ பட்ஜெட் படம் பைக் எல்லாம் கிடையாது , அதனால் நீங்க சும்மா வாயாலே டூர்ர்ர்ர்ர்ர்ர்என்று சத்தம் கொடுத்துக்கிட்டு ரெண்டு கையையும் வண்டி ஓட்டுவது போல் வைத்து கொண்டு ஓடி வாங்க நாங்க ஷூட் செஞ்சுக்கிறோம் என்றார். நானும் சரி என்று ரெண்டு கிலோ மீட்டர் சின்ன பிள்ளைங்க டூர்ர்ர்ர்ர் என்று வண்டி ஓட்டுவது போல் நானும் ஓடினேன்...
நடு நடுவே ஹாரன் அடி, பிரேக் அடி யூ டேர்ன் அடி அப்பதான் ஒரிஜினாலிட்டி கிடைக்கும் என்றார்கள் நானும் கஷ்டபட்டு எல்லாம் செய்தேன்.அப்பதான் டைரக்டர் கதை படி ஹீரோயினை நீங்க பெட்ரோல் பங்கில் தான் சந்திக்கிறீங்க அதனால் வண்டிய நிறுத்தி பெட்ரோல் போடுங்க என்கிறார். பெட்ரோல் பங்கு காரனும் வண்டிய திருப்புங்க பெட்ரோல் போடனும் என்கிறார்கள்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அடுத்த சீன் காலேஜ் எலக்செனில் வண்டி பிரேக்கை வில்லன் ஆட்கள் கட் செய்வார்களாம் எங்க எத கட் செய்வாங்கன்னு தெரியலை. இப்படி ஒவ்வொரு நாளும் வேதனையோடு போனது...

அதோட கொடுமை ஹீரோயினாக சொட்டை மனோகருக்கு பெண் வேசம் போட்டுவிட்டு ...லிப் டு லிப் கிஸ் வேற இருக்கு என்கிறார்கள்.
இத எப்படிங்க பொறுத்துகொள்வது.

அதான் வெளியேறிவிட்டேன்.

9 comments:

Anonymous said...

DEAR KUSUMBU
POST PADITHTHU
KANGALIL KANNEER VANTHUVITTATHU
SIRITHUTHAN....

RAMESH V

said...

வாங்க ரமேஸ் தங்கள் வருகைக்கு நன்றி.

said...

பின்னீட்டிங்க. .

பா.க.ச போட்டில பரிசு வாங்கியே தீரனும்னு முடிவு பண்ணீட்டிங்களா. . ?

said...

வெங்கட்ராமன் said...
பின்னீட்டிங்க. .

நன்றி

பா.க.ச போட்டில பரிசு வாங்கியே தீரனும்னு முடிவு பண்ணீட்டிங்களா. . ?

ஏதோ நமக்கு என்ன வருமோ அதுக்கு ஏத்த மாதிரி போட்டி வச்சு இருக்காங்க அதனால ஒரு ஆர்வம் தான். அறிவு சம்மந்தபட்ட போட்டின்னா நாம ஏன் அங்க போக போகிறோம்:))))

said...

:))))))))))))))))))))))))

said...

நன்றி தேவ்:)))))

said...

நல்லாதான் கட் பண்றீரு. :)))))))))

said...

பா.க. ச இதை கடுமையாக கண்டித்தாலும் ...

மறுகணம் இதில் இருக்கும் உண்மை கருதி ஆதரவு தருகிறது .

said...

வாவ். ரியலி கலக்கல்.

மங்களூர் சிவா.