Friday, August 3, 2007

இன்னொரு உலகம்

பல் செட்டை கழட்டி வைத்துவிட்டு
என் அருகில் வந்து காலில் விழும்
ஒரு அறுபது வயது வாலிபர்.

குச்சியை ஊன்றிய படி எழுந்து
நின்று தத்தி தத்தி என் அருகில் வந்து
என் கையை தடவி தான் போட்டு இருந்த
மோதிரத்தை எனக்கு மாட்டி விடும்
இன்னொரு எழுபது வயது வாலிபர்.

கட்டு கட்டாக பணத்தை டோக்கனாக
மாற்றி வைத்து வீசும் மற்றொறு
ஐம்பது வயது விடலை.

முதல் வரிசை சில இருக்கைகள் இது
போன்ற வாலிபர்களுக்காகவே
முன்பதிவு செய்யபட்டு காத்திருக்கிறது.

கடைசி வரிசையில் அமர்ந்து ஆரஞ்சு பழ
சாராயம் குடிக்கும்இருப்பத்தைந்து
வயது பெரியவர்கள் கூட்டம்.
குடும்பத்தோடு வந்து ஆணுக்கு பெண்
சமம் என்று பீர் ஜூஸ் குடிக்கும் குலவிளக்குகள்.

உடை குறைச்சலாக இருக்கிறது
இன்னும் கொஞ்சம் அதிகமாக
உடுத்து அப்பொழுதான் செயின் கிடைக்கும்
என்று ஆலோசனை சொல்லும் சக தோழி.

இந்த உலகம் விந்தையாகவே
இருக்கிறது என்று அவள் உறங்கியும்
உறங்காமல் விடை தேடும்
நாட்டியகாரியின் மனசாட்சி.

9 comments:

MyFriend said...

me the firstuu..

Anonymous said...

ithu enna ulagamnu sollamalaye poyittiye chithappu?????

Anonymous said...

ooohhhhhh!!!!!!!!! ippo padichitten.....puriyuthu chithappu

ALIF AHAMED said...

சூப்பர் ஹைகூ

CVR said...

சந்தோஷம்!!!!
இப்போ நீங்களும் இது மாதிரி கொலை வெறி கவுஜை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?? :-((

கோபிநாத் said...

\\CVR said...
சந்தோஷம்!!!!
இப்போ நீங்களும் இது மாதிரி கொலை வெறி கவுஜை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?? :-(( \\

ரீப்பிட்டேய்

கண்மணி/kanmani said...

ஒன்னுமே பிரியலை ஆனா யாரோ மாட்டிக்கிட்டாங்க போல ஹும்...

Santhosh said...

kusumba enna prichanai unaku.. en intha kola veri?

நாமக்கல் சிபி said...

!?