Sunday, July 29, 2007

செய்திதாளுக்கும் சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இல்லை

ஏன்டா உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா? ஏதோ அதுங்கதான் தப்பு செஞ்சுதுங்கன்னா? அத போட்டோ போட்டு காட்சிகளுக்கு விளக்கும் கொடுத்து இப்படியா டா எழுதுவீங்க?

"இளம் ஜோடி கேபினுக்குள் சிரித்தபடி அமர்கிறார்கள், பக்கத்து கேபினில் உள்ளவர்கள் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்கிறார்கள், பின் அந்த மாணவர் மாணவியை லேசாக தொடுகிறார். அவர் சிணுங்குகிறார் பிறகு சம்மதம் தெரிவிக்கிறார், முடிவில் இருக கட்டி பிடித்து கொள்கிறார்கள்.................................................................................... "

மேலும் உள்ள மிச்ச காட்சிகள் இங்கு சென்சார் செய்ய பட்டு உள்ளது என்று சொல்லி விட்டு அவர்களின் அடுத்த அடுத்த படத்தை போட்டு பிசரிப்பது தான் பத்திரிக்கைதர்மமா?"


வீனாக அந்த செய்திதாள் பெயரை கொடுத்து அவர்களுக்கு விளம்பரம் தர விருப்பம் இல்லை.

இதை எல்லாம் தடுக்க சட்டம் இருக்கிறதா? இல்லையா?

13 comments:

said...

குசும்பா அடி விழும்.இப்ப உள்ளவங்களை விட சரோஜா தேவி நல்ல நடிகை அவங்கள ஏன் இழுக்கிற பேரு வைக்க.[ஒரு காலத்துல எவனோ வச்சிட்டான்]

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

எந்தப் பத்திரிகை எனச் சொல்ல கூகுள் டாக்குக்கு ஓடோடி வரவும்

said...

நோ டென்ஷன் ப்ளீஸ்.

said...

உங்கள யாரு அதெல்லாம் படிக்க சொன்னது?

said...

என்னத்த படிக்கனுமோ அதை விட்டுட்டு, வேற ஏதாவது படிச்சா இப்படிதான் பதிவு போடவேண்டி வரும் :)

said...

பூங்காவில் குசும்பன்


http://poongaa.com/content/view/1975/1/

வாழ்த்துக்கள்

said...

நக்கீரன், ஜீனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் இவற்றில் வரும் செய்திகள் சரோஜா தேவியை மிஞ்சிவிடும்.

said...

லொடுக்கு said...
நோ டென்ஷன் ப்ளீஸ்.


வெங்கட்ராமன் said...


கண்ணுல பட்டு விடுகிறது லொடுக்கு, அழகிகள் மாட்டும் பொழுது "கூட" இருந்த அழகன மட்டும் விட்டு விடுவாங்க, லார்ட்ஜில் மாட்டிய அழகிகள் ராதா வயது(23), பாபி வயது (32) ன்னு போட்டோ போடுவானுங்க...

13 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் கைது என்று அந்த பெண் போட்டவையும் போடுவார்கள் ஏன் இப்படி கொஞ்சம் கூட மணசாட்சி இல்லாமல்...

அதுங்க வாழ்கையை மேலும் சீரழிப்பானுங்க அதான் இத எல்லாம் தடுக்க ஒரு சட்டம் இல்லையான்னு ஒரு கோவம்?

said...

ILA(a)இளா said...
என்னத்த படிக்கனுமோ அதை விட்டுட்டு, வேற ஏதாவது படிச்சா இப்படிதான் பதிவு போடவேண்டி வரும் :)

என்ன செய்ய இளா நம்ம ஊர் செய்திகளை இங்கிருந்து தெரிஞ்சுகனும் என்ற ஆர்வம் அதனால இது எல்லாம் கண்னுல படுது.

Anonymous said...

ஏங்க சரோஜா தேவிக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம் ?????

said...

---ஏதோ அதுங்கதான் தப்பு செஞ்சுதுங்கன்னா?---

இதில் தப்பு எங்கே இருக்கு?

செய்தியின் தலைப்பை பார்த்து, ஆவலுடன் உள்ளே செல்பவர்களுக்குத்தான் அந்த நியூஸ். படித்தால் அவர்களுக்கு வியாபாரம்.

said...

Boston Bala said...
"ஏதோ அதுங்கதான் தப்பு செஞ்சுதுங்கன்னா?---

இதில் தப்பு எங்கே இருக்கு?"

ரூமில் செய்ய வேண்டியதை வெளியில் (கேபினில்) செய்வது தவறு இல்லையா?


"அவர்களுக்கு வியாபாரம்"

அவர்கள் வியாபாரத்துக்கு எதுக்கு மற்றவர்களின் அந்தரங்கங்களை எடுத்து போடவேண்டும். அட்லீஸ்ட் முகத்தை மறைக்கும் படி செய்தாவது போட்டோ போட்டு இருக்கலாமே!!!