Friday, July 13, 2007

ஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு

வியாழக் கிழமை
மாலை 4 மணி போல் மகேந்திரன்.பெ போன் செய்து இன்று இரவு சந்திக்கலாமா என்றார், சரி சந்திப்போம் அபி அப்பாவும் அவர் இருக்கும் அல்கூஸ் (அவர் தங்கி இருக்கும் இடம்)வர சொல்லி இருக்கிறார், நீங்க என் ஆபிஸ்க்கு மாலை 7 மணிக்கு வந்தால் நாம் இருவரும் அங்கு செல்வோம் என்று "பிளான்" செஞ்சு மகி சரியாக 9.45 க்கு வந்தார், 8 மணிக்கு வண்டி அனுப்புகிறேன் என்று சொல்லிய அபி அப்பா சரியாக 7.59 க்கு போன் செய்து நீங்க இரண்டு பேரும் ஒரு டேக்ஸியில் வந்து விடுங்க காலையில் இங்கிருந்து மின்னலை பார்க்க போகலாம் என்றார். அடிக்கடி தம்பி போன் செய்து அபி அப்பாவை நம்பி போகிறாயா உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது என்றார்.

ஒரு வழியாக என் ஆபிஸ் காரிலேயே அபி அப்பா இருக்கும் இடம் அடைய 10.15 ஆனது. அவர் காத்திருந்து எங்களை அழைத்து சென்றார், பின் சாப்பிட்டு விட்டு டைனிங் ஹாலில் உட்கார்ந்து மூன்று பேரும் பேசினோம், பல முறை "HOT" ஆனா விவாதங்கள் நடந்தது இது இப்ப முடியாது போல இருக்கு என்று நான் ஒரு இரண்டு மணி போல் கிளம்ப முயன்ற பொழுது வலை பதிவர் மாநாடு நடக்கும் பொழுது வெளி நடப்பு செய்தால் குசும்பனை கொளுத்துவோம் என்றார்கள், முதல் அதிர்சி இப்ப நாம பேசிக்கிட்டு இருந்தது மாநாட்டிலா என்று. பின் ஒரு வழியாக 3 மணிக்கு நான் போய் படுத்தேன், இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்று . இப்படியாக முதல் வலை பதிவர் (????) முடிந்தது.

வெள்ளி கிழமை

காலை சரியாக 7 மணிக்கு எழுந்து அபி அப்பாவை தேடினால் அபி அப்பா மாநாடு நடந்த இடத்திலேயே ரொம்ப டயர்ட் ஆகி படுத்து இருந்தார். போய் எழுப்பினால் குசும்பன் எப்ப வந்திங்க என்றார்(??? அவர நான் எழுப்ப பட்ட பாடு இருக்கே அத எழுதனும் என்றால் மூன்று பக்கம் ஆகும்). பின் ஒரு வழியாக எல்லாரும் வந்து புறப்பட மணி 11 மணி ஆகி விட்டது , பின் அங்கிருந்து அனைவரும் மின்னுது மின்னல் இருக்கும் அல் அலைன் போய் சேருவதற்குள் மணி 1 ஆகி விட்டது.

அங்கு மின்னல் வேலை செய்யும் fun city சென்றோம், மின்னல் லேசாக ஆட்டம் கண்டார் ஏன் ஏன்றால் போய் இறங்கியது 14 பேர். அனைவரையும் அங்கு இருக்கும் ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து சென்று முழு கோழி(கவிதாயினிக்கு கொடுக்கு) ஒன்றை சாதத்தில் புதைத்து வைத்து அவர் அன்பை அதில் போட்டு கலக்கி ஒரு விருந்து கொடுத்தார். (இது வரை நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு!!!)

சாப்பிட்ட பின் அய்யனார் நாம எல்லாம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும், என்றார் நானும் சாமிய வேண்டிக்கிட்டு தாய கட்டைய உருட்டி ஒரு "தாயம்" கேட்டேன் நான் கேட்ட படி தாயம் விழுந்தது அதனால் சொன்ன படி தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றோம்.

மின்னல் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ தெரியவில்லை எங்களை எல்லாம் ஒரு பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து சென்றார்.அப்பயே எனக்கு மாப்பு வைக்க போறான் ஆப்பு என்று தம்பியிடம் சென்னேன். உள்ளே போனால் உறை பணி விளாயாட்டு மைதானம் நாம எல்லாம் எங்க ஊர்லேயே கோடை காலத்தில் வாக்கிங்கும் குளிர் காலத்தில் ஸ்கேட்டிங்கும் போன ஆள் அதானால் சும்மா தில்லாக ஸ்கேட்டிங் டூல்ஸ் கேட்டால் அங்கு இருந்தவன் என் ஷூவை பிடுங்கி வைத்து கொண்டு கீழே இரும்பு பட்டை வைத்த ஷூவைக் கொடுத்தான்.

கால்ல மாட்டிக்கிட்டு போய் மைதானாத்தில் இறங்கினால் "டமார்" என்று சத்தம் என்னடான்னு பார்த்தா நான் கீழே விழுந்து கிடக்கிறேன்.சரி எழுந்திருக்கிலாம் என்று முயற்சி செய்து முயற்ச்சி செய்து ரொம்ப டையர்ட் ஆகி அப்பா முடியல மின்னல் ஏம்பா இப்படி செஞ்சிட்ட என்றால் நீ எட்டு போட என்னை ஏன் கூப்பிட்ட அதுக்கு தான் என்றார். எங்க இதுல ஒரு எட்டு போடு குசும்பா என்கிறார், நானே தவழ்ந்து கிட்டு இருக்கேன் என்ன போய்!!! உன்ன 8 போட கூப்பிட்டதுக்காக காதலன்ல பிரபு தேவாவுக்கு ஐஸ் படுக்கை போல என்னை வச்சுட்டியே என்று சொல்லி முடிக்ககிறதுக்குள் டமால் டமால் டமால்.... கோபி, அபி அப்பா, சென்சி எல்லாம் அப்பதான் நம்ம பொசிசனுக்கு வந்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு இரண்டு மணி நேரம் எழுந்து நிற்க போராடி போராடி "பாடி டோட்டல் டேமேஜ்" சரி எல்லாம் அப்படியே அங்கேயே உட்கார்ந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைய பற்றி பேசினார்கள். ஆக முதன் முதலில் ஐஸ் கட்டியில் படுத்து, உட்கார்ந்து கொண்டு மாநாடு நடத்திய பெருமையை அமீரகம் தட்டி செல்கிறது.

மின்னல் ஒரு சின்ன பையனை கூப்பிட்டு இவருக்கு எப்படி ஸ்கேட்டிங் போகனும் என்று சொல்லிகுடேன் என்றார் அவன் முதல்ல எழுந்து இவன ஒரு நிமிசம் நிற்க சொல் மிச்சத்த அப்புறம் பார்கலாம், இவனுக்கு சொல்லி கொடுக்க முடியாது என்னையும் சேர்த்து தள்ளி விட்டுவிடுவான் என்றான். உடம்பு தான் டேமேஜ் என்றால் என் இமேஜயும் டோட்டல் டேமேஜ்.

(அவன் தான் இவன்)


அடுத்து ஒரு ராட்டினத்துக்கு அழைச்சுக்கிட்டு போனார் ஏற்கனவே சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சி...முடியல மின்னல் இருய்யா என்று சொன்னால். ஒரு ஸ்ப்ரே எடுத்து அடித்து விட்டார் வீக்கம் குறைந்து, லேசா வலியும் குறைந்தது. இதுக்கு பேர் தான் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறது போல...

அடுத்து ஒரு கூண்டுக்கு அழைச்சிக்கிட்டு போனார். போய் உட்காந்ததும் அது சுத்த ஆரம்பிச்சு பாருங்க அம்மே...சொம்புக்குள் ஒரு கல்லை போட்டு உண்டியல் குலுக்கவது போல் குலுக்கி எடுத்துச்சு இறங்கி கெத்தா ஆங் இன்னொரு ரவுண்ட் போகலாமா என்று சொல்ல நான் பட்ட பாடு. யப்பா கண்ண கட்டிடுச்சு.

எல்லாருக்கும் ஆரத்தி தட்டு தான் சுத்துவாங்க ஆனா இவரு டிபிரண்டா, ஆரத்தி தட்டுல உட்கார வச்சி இப்படி பத்து சுத்து அப்படி பத்து சுத்து சுத்தி நிப்பாட்ட போகும்பொழுது என்னமோ போய் அந்த ஆப்ரேட்டர் கிட்ட காதில் கிசு கிசுத்தார்... அடிச்சான் பாருங்க அடுத்து இன்னொரு 20 சுத்து...எல்லாம் கலங்கி போச்சு..அப்புறமா அவன் கிட்ட போய் என்னய்யா சொன்னார் மின்னல் என்றால் ..எல்லாம் எனக்கு வேண்டியவுங்க நல்லா "கவனி" என்று சொன்னார் என்றான்..மின்னல் அம்புட்டு நல்லனாய்யா நீ...

இப்படி எல்லாரையும் நன்றாக கவனித்து பதிவர் சந்திப்பை சிறப்பு செய்த மின்னலை தனியாக எல்லாரும் வாழ்தினோம்.
அப்பொழுது கோபி மாயவரம் சந்திப்பை பற்றி சொல்ல நான் ரொம்ப மிஸ் செஞ்சுட்டேன் என்று பீல் செய்வதை பார்த்த அபி அப்பா,அங்கு சந்திப்புக்கு வந்த கண்மணி அக்கா, முத்துலெச்சுமி அக்கா, காயத்ரி பாட்டி, ஜெயந்தி, ராம் எல்லோருக்கும் டிக்கெட், விசா எடுத்து வந்து உனக்காக இங்கு ஒரு மாநாடு நடத்துகிறேன் குசும்பா கவலை படாதே என்றார். ஆகையால் சம்பந்த பட்டவர் அனைவரும் அபி அப்பாவுக்கு பாஸ்போர் காப்பி அனுப்பும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

மாலை புறப்படும் முன்பு முத்துகுமரன் போன் செய்து விசாரித்தார். காலையில் மங்கை அக்காவிடம் போனில் சந்திப்பு பற்றிய விவரங்களை சென்ஷியும், அபி அப்பாவும் சொன்னார்கள்.

இப்படியாக பல நல்ல விசயங்கள் பேசி (அது தனி பதிவு) முடிவுக்கு வந்தோம்.

ஏ ஏ எல்லாம் பாத்துக்குங்க பாத்துக்குங்க பாத்துக்குங்க நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் மாநாட்டுக்கு(????) எல்லாம் போய் வந்து இருக்கிறேன்.

சந்தித்தவர்கள்
அபி அப்பா, மகேந்திரன்.பெ ,அய்யனார்,தம்பி, கோபி ,சென்ஷி, மின்னல், லியோ சுரேஷ் ,நான், பிறகு அனானி 5 பேர்.

29 comments:

Anonymous said...

//ஏ ஏ எல்லாம் பாத்துக்குங்க பாத்துக்குங்க பாத்துக்குங்க நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் மாநாட்டுக்கு(????) எல்லாம் போய்ட்டு வந்து இருகிறேன்.///

இது தானா விசயம்???
ஹிஹிஹி

said...

என்ன கொடுமை சரவணா! இன்னிக்கு எப்படிப்பா டூட்டிக்கு வந்த! முடியல முடியல!

said...

//மகேந்திரன்.பெ ,அய்யனார்,தம்பி, கோபி ,சென்ஷி, மின்னல், லியோ சுரேஷ் ,நான், பிறகு அனானி 5 பேர். //

மகேந்திரன்.பெ ன்னு ஆளு நிஜமாகவே இருக்காரா ?

அவர் ஒரு போலி என்றல்லவா சொல்கிறார்கள்.

:))

said...

வாங்க தூயா, கோவி.கண்ணன் தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

"இது தானா விசயம்???
ஹிஹிஹி "

ஆமாங்க :))))

கோவி.கண்ணன் said...
"அவர் ஒரு போலி என்றல்லவா சொல்கிறார்கள்"

அப்படியா!!! மகி செல்லவே இல்ல ...

said...

அபி அப்பா said...
"இன்னிக்கு எப்படிப்பா டூட்டிக்கு வந்த! முடியல முடியல!"

இரவு ரெண்டு Brufin மாத்திரை, காலையில் ஒரு ஓவிரான் இப்ப கொஞ்சம் கை, கால அசைக்க முடியுது.
வீக்கம் லேசா இருக்கு.

said...

//மகேந்திரன்.பெ ன்னு ஆளு நிஜமாகவே இருக்காரா ? //


அதான? நல்ல கேள்வி

said...

//எல்லாம் போய்ட்டு வந்து இருகிறேன்.///


அட விழுந்துட்டு வந்திருக்கேன்னு சொல்லனும்பா

said...

//சாப்பிட்ட பின் அய்யனார் நாம எல்லாம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும், என்றார் நானும் சாமிய வேண்டிக்கிட்டு தாய கட்டைய உருட்டி ஒரு "தாயம்" கேட்டேன் நான் கேட்ட படி தாயம் விழுந்தது அதனால் சொன்ன படி தமிழை அடுத்த கட்டத்து எடுத்து சென்றோம். ///

செம குசும்புப்பா உனக்கு!! சிரிச்சி சிரிச்சி வாய் சுளுக்கிகிச்சு!!

(அபிஅப்பா.. சீக்கிரம் டிக்கெட் அனுப்புங்க!)

said...

நாங்க பாஸ்போர்ட் அனுப்பினா அபிஅப்பா ப்ளைட் டிக்கெட் அனுப்புவாரா..நல்லாருக்கே...உங்களுக்கே பக்கத்துல டேக்ஸி அனுப்பறேனு சொல்லிட்டு நீங்க ளே புடிச்சு வந்துடுங்கன்னு சொல்லிருக்கார்..அவ்வளவெல்லாம் கட்டுபடியாகுமா எங்களுக்கு..

முதல் முதலாக ஐஸ்கட்டி மேல உட்கார்ந்த வலைப்பதிவர் சந்திப்பா அடடா இந்த முத்ன் முதலாக என்கிற பதம் படுத்தும் பாடு பாருங்க.. :)


முழுதுமே படித்து ஒரே சிரிப்பு அதும் தெளிய வச்சு தெளிய வச்சு அடிச்சாங்கன்னீங்க்க பாருங்க..:))

said...

"செம குசும்புப்பா உனக்கு!! சிரிச்சி சிரிச்சி வாய் சுளுக்கிகிச்சு!! "

ஆமா எலும்பு இல்லாத இடத்துலதான் சுளுக்கு விழும் ஓளவை பாட்டிக்குதான் வாயில பல் இல்லையே அதான் உங்களுக்கு அங்க சுளுக்கா????

said...

முத்துலெட்சுமி said... "முழுதுமே படித்து ஒரே சிரிப்பு அதும் தெளிய வச்சு தெளிய வச்சு அடிச்சாங்கன்னீங்க்க பாருங்க..:)) "

முத்துலெட்சுமி அக்கா தங்கள் முதல் வருகைக்கு நன்றி,அவ்வை சண்முகியில் சொல்வது போல்தான் நடந்தது நேற்று...புல் பாடி டேமேஜ்... இப்ப நான் உட்கார்ந்து டைப் செய்யும் அழக பார்த்தீங்க...ஒரு வாரத்துக்கு சிரிப்பீங்க. பேரழகன் சூர்யா மாதிரி இருக்கேன்.

said...

//ு இது இப்ப முடியாது போல இருக்கு என்று நான் ஒரு இரண்டு மணி போல் கிளம்ப முயன்ற பொழுது வலை பதிவர் மாநாடு நடக்கும் பொழுது வெளி நடப்பு செய்தால் குசும்பனை கொலுத்துவோம் என்றார்கள், முதல் அதிர்ச்சி இப்ப நாம பேசிக்கிட்டு இருந்தது மாநாட்டிலா என்று.////சாப்பிட்ட பின் அய்யனார் நாம எல்லாம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும், என்றார் நானும் சாமிய வேண்டிக்கிட்டு தாய கட்டைய உருட்டி ஒரு "தாயம்" கேட்டேன் நான் கேட்ட படி தாயம் விழுந்தது அதனால் சொன்ன படி தமிழை அடுத்த கட்டத்து எடுத்து சென்றோம்.
//
Ultimate!!! :-D

//சரி எல்லாம் அப்படியே அங்கேயே உட்கார்ந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைய பற்றி பேசினார்கள். ஆக முதன் முதலில் ஐஸ் கட்டியில் படுத்து, உட்கார்ந்து கொண்டு மாநாடு நடத்திய பெருமையை அமீரகம் தட்டி செல்கிறது.//

இப்படி பல இடங்களில் வயிறு வலிக்க சிரித்தேன்!!!
உங்களுக்கு நகைச்சுவை எழுத்தில் நல்ல திறமை இருக்கிறது நண்பரே!!
வாழ்த்துக்கள்!! :-)

said...

வாங்க CVR
"இப்படி பல இடங்களில் வயிறு வலிக்க சிரித்தேன்!!!"

அதுதான் வேணும். எனக்கு அடிப்பட்டு வலி உங்களுக்கு சிரிச்சு வலி.

உங்களுக்கு நகைச்சுவை எழுத்தில் நல்ல திறமை இருக்கிறது நண்பரே!!
வாழ்த்துக்கள்!! :-)

நன்றி CVR

said...

Kalakkal Kusumba..
//வலை பதிவர் மாநாடு நடக்கும் பொழுது வெளி நடப்பு செய்தால் குசும்பனை கொளுத்துவோம் //
sonnatha seyya solluya pakalam. avanga ellam unmayana tamiz pathivarungala iruntha sonnatha seyya solluya..

said...

இவ்வளவு நடந்துருக்கு எப்படிய்யா அதுக்குள்ள பதிவ போட்ட...(ஒரு கையில மட்டும் தான் அடிபட்டதுனு சொல்லவேயில்லையே குசும்பா..?)

said...

ஒருத்தரோட வலியில தான் இன்னொருத்தரோட சிரிப்பு அடங்கி கெடக்குன்னு சொல்றீங்களா?? :P

said...

\\அனைவரையும் அங்கு இருக்கும் ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து சென்று முழு கோழி(கவிதாயினிக்கு கொடுக்கு) ஒன்றை சாதத்தில் புதைத்து வைத்து அவர் அன்பை அதில் போட்டு கலக்கி ஒரு விருந்து கொடுத்தார். \\

ஆமா....அருமையான விருந்து.....அப்புறம் ஆப்பு ;)))

said...

\\குசும்பன் said...
அபி அப்பா said...
"இன்னிக்கு எப்படிப்பா டூட்டிக்கு வந்த! முடியல முடியல!"

இரவு ரெண்டு Brufin மாத்திரை, காலையில் ஒரு ஓவிரான் இப்ப கொஞ்சம் கை, கால அசைக்க முடியுது.
வீக்கம் லேசா இருக்கு.\\

ம்ஹும்...உன் உடம்புக்கே இத்தனை மாத்திரைன்னா? ...சென்ஷியை கொஞ்சம் நினைச்சி பாரு ....அந்த உடம்பு தாங்குமா எத்தனை மாத்திரை ;(

said...

\\முத்துலெட்சுமி said...
நாங்க பாஸ்போர்ட் அனுப்பினா அபிஅப்பா ப்ளைட் டிக்கெட் அனுப்புவாரா..நல்லாருக்கே...உங்களுக்கே பக்கத்துல டேக்ஸி அனுப்பறேனு சொல்லிட்டு நீங்க ளே புடிச்சு வந்துடுங்கன்னு சொல்லிருக்கார்..அவ்வளவெல்லாம் கட்டுபடியாகுமா எங்களுக்கு..\\

;))))))))))))

said...

மின்னுது மின்னல் said...
இவ்வளவு நடந்துருக்கு எப்படிய்யா அதுக்குள்ள பதிவ போட்ட...

(ஒரு கையில மட்டும் தான் அடிபட்டதுனு சொல்லவேயில்லையே குசும்பா..?)

வா ராசா வா...நல்லா இருக்கியா.

said...

CVR said...
"ஒருத்தரோட வலியில தான் இன்னொருத்தரோட சிரிப்பு அடங்கி கெடக்குன்னு சொல்றீங்களா?? :P "

அடங்கி கெடக்கவில்லை CVR வீங்கி கிடக்குன்னு சொல்லுறேன்.

said...

சந்தோஷ் said...
"sonnatha seyya solluya pakalam. avanga ellam unmayana tamiz pathivarungala iruntha sonnatha seyya solluya.. "

யப்பா சந்தோஷ் நான் ஏற்கனவே கொலுத்திவிட்ட மாதிரிதான்ய்யா இருப்பேன் இன்னொரு தபா கொலுத்தினா உங்களுக்குதான்யா கஷ்டம்

said...

மகேந்திரன்.பெ said... "அட விழுந்துட்டு வந்திருக்கேன்னு சொல்லனும்பா "

விழுவது நான் ஆக இருப்பினும் எழுவது நாமக இருப்போம் :)

said...

:)))))))) ஆப்பு வைத்த மின்னல வாழ்க

said...

********************************
சந்தித்தவர்கள்
அபி அப்பா, மகேந்திரன்.பெ ,அய்யனார்,தம்பி, கோபி ,சென்ஷி, மின்னல், லியோ சுரேஷ் ,நான், பிறகு அனானி 5 பேர்.
********************************

அங்கையும் அனானியா. . . . .?

said...

:))) - இது உங்களுக்கு அடிபட்டதுக்கு

:))) - இது பதிவுக்கு..

said...

குசும்பா,

சூப்பர்... கலக்கலா எழுதியிருக்கீங்க.... :)

////சாப்பிட்ட பின் அய்யனார் நாம எல்லாம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும், என்றார். //

ஏன் அது சதுரம் செவ்வகம்'லாம் இருக்கக்கூடாதா???

பாலபாரதி கூட பதிவர் சதுரம்'ன்னு ஆரம்பிச்சு வைச்சிடாரு.. எல்லாரும் அவர் வழியே நடப்போம்... ;)

said...

இராம் said...
குசும்பா,

சூப்பர்... கலக்கலா எழுதியிருக்கீங்க.... :)

நன்றி ராம்.

////சாப்பிட்ட பின் அய்யனார் நாம எல்லாம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும், என்றார். //

ராம் நீங்க வேற அய்யனார் பேசின பேச்ச கேட்கவேண்டுமே!
அப்படி இருந்தது...அவரி கவிதை போலவே!!!(???) :)))

Anonymous said...

A片,A片,成人網站,成人影片,色情,情色網,情色,AV,AV女優,成人影城,成人,色情A片,日本AV,免費成人影片,成人影片,SEX,免費A片,A片下載,免費A片下載,做愛,情色A片,色情影片,H漫,A漫,18成人

a片,色情影片,情色電影,a片,色情,情色網,情色,av,av女優,成人影城,成人,色情a片,日本av,免費成人影片,成人影片,情色a片,sex,免費a片,a片下載,免費a片下載

情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

情色,AV女優,UT聊天室,聊天室,A片,視訊聊天室

一夜情聊天室,一夜情,情色聊天室,情色,美女交友,交友,AIO交友愛情館,AIO,成人交友,愛情公寓,做愛影片,做愛,性愛,微風成人區,微風成人,嘟嘟成人網,成人影片,成人,成人貼圖,18成人,成人圖片區,成人圖片,成人影城,成人小說,成人文章,成人網站,成人論壇,情色貼圖,色情貼圖,色情A片,A片,色情小說,情色小說,情色文學,寄情築園小遊戲, 情色A片,色情影片,AV女優,AV,A漫,免費A片,A片下載