Friday, July 20, 2007

தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்...

கடைசியாக தீர்மானித்து விட்டேன் தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுவது என்று. இத்தனை நாள் நீங்கள் எனக்கு கொடுத்து வந்த ஆதரவையும் மீறி, உங்கள் அன்பையும் மீறி இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளபட்டு விட்டேன்.

பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு இந்த முடிவு,
பல நாள் இதனால் தூங்காமல் இருந்திருக்கிறேன்,
ஏன் இப்படி? எதனால்? எதற்கும் விடை இல்லை.

ஏன் இந்த முடிவு என்று பலருக்கு ஆச்சிர்யமாக இருக்கலாம்,
இருந்தாலும் வேறு வழி இல்லை.

பல பேர் பல முறையில் விடை பெற்று இருக்கிறார்கள், நான்
கொஞ்சம் வித்தியாசமாக விடை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் எனக்கு சந்தோசமாக விடை கொடுங்கள்.


1 + 1 = ???

தயவு செய்து விடை கொடுங்கள்.

(இளா போட்டோம்ல ஒரு மொக்கை)

36 comments:

said...

நல்ல முடிவு!திரும்பி வந்தா அடிகிடைக்கும்!

Anonymous said...

அப்பாடா,, போய்ட்டாங்கப்பா, பொழச்சோம். ஆகஸ்டு 5லதான் சனிப்பெயர்ச்சியாம்,, முன்னாடியே ஆகுது..
இளா

said...

மக்கா,

இதை ஒரு செண்டி+அரைபிளேடு+அறிவு ஜீவி மொக்கையாக பதிவுசெய்ய சிபாரிசு செய்கிறேன்.

குசும்பு... எப்பிடி.. எப்பிடி ராசா இதெல்லாம்... முடியல... அவ்வ்வ்வ்

said...

ஐ எஸ் ஓ வாங்கிக்க ராசா

said...

விடை வாங்கிக்கங்க 2

said...

delphine said...

மூளைய கொஞ்சம் நல்ல விஷயத்துக்கு உபயோகிங்கப்பா
//

சரியான விடை நீங்க கேட்குறியேனு சொல்லுகிறேன்


1+1= 3 போதுமா..?

கல்யாணம் ஆனவங்க சொல்லுங்க இதுசரியா..??

ஹி ஹி

said...

இன்னும் சங்கத்தின் ஐஎஸ் ஓ லோகோ போட்டுக்கொள்ளாத காரணத்தால் குசும்பன் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுவதில்லை என அமுக குமுக கழக செயற்குழு இன்று முடிவெடுத்திருக்கிறது

Anonymous said...

அத செய்யுங்க நீங்க,லக்கி எல்லாம் போனா மொக்கை ரொம்ப குறையும்

said...

குசும்ப்ஸ்,
என்னய்யா இப்படி? ச்சின்னப்புள்ளைத்தனமால்லெ இருக்கு!
1 + 1 = 8. இது தெரியாதா?
( அஷ்டமத்துலே * னியாம் )

said...

தமிழ் மணத்தை வைத்து ரொம்பத்தான் விளையாட்டுப் போடுறீங்கப்பா. பெயரைவிட இந்த பதிவு ரொம்ப குசும்பு. :-)

said...

//1 + 1 = ???

தயவு செய்து விடை கொடுங்கள்.//

1 + 1 = 15.

விளக்கம் :

71/2 + 71/2 = 15.

சரியா?...

said...

இதனை வ.வா.சங்க மொக்கை போட்டியில் சேருங்க...நிச்சய வெற்றியாகும்...

said...

1+1=???


இது சரியா?

1+1=?

இது சரியா அத மொதல சொல்லுங்க?

விடையை சொல்லுகிறேன் :)

said...

செந்தழல் ரவி said...

இதனை வ.வா.சங்க மொக்கை போட்டியில் சேருங்க...நிச்சய வெற்றியாகும்...
//

இது மொக்கை பதிவு கிடையாது

விடைதேடி..... போட்ட பதிவு
குசும்பனுக்கு இதுக்கு பதில் உண்மையிலையே தெரியாது..

said...

1+1=???

இதுக்கு விடை

1+1=222

:)1+1=?

எனில்
1+1=2

said...

1+1=1
அதாவது
1 கொலை+1 கொலை= 1கொலை (1 மரண தண்டனை)
இது சரியாங்க!!!

Anonymous said...

//1 + 1 = ???

தயவு செய்து விடை கொடுங்கள்.//


1+1= வெளியேப் போ

said...

1+1 = 11

said...

1 + 1 = ?

பாத்ரூம் அந்த பக்கம் இருக்குதுங்கோ !

said...

"விடை", "வடை" எல்லாமே குடுத்தாச்சி குசும்பா.. வேற எதாச்சும் வேணுமா?

said...

சீரியசாகச் சொல்கிறேன்
1)1+1=1எப்படின்னா அரியும் சிவனும் ஒண்ணு.அதை அறியாதவன் வாயில் மண்ணு..அப்படிங்கிறதாலே ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணு தான்.
2)1+1=11 எப்படின்னா,ஒரு ஒண்ணு போடுங்க.பக்கத்திலேயே இன்னொரு ஒண்ணு போடுங்க.இப்ப படிங்க பதினொண்ணு ஆகுதா?
1+1=0 எப்படின்னா எவ்வளோ ஒண்ணு சேந்தாலும் கடைசிலே ஒலகம் அழியப் போவுதாம்லே!அப்ப பூஜ்யந்தானே.
1+1=எண்ணிலடங்காதது.'infinitive'
எப்படின்னா ஆதாம்னு ஒண்ணும் ஏவாள்னு ஒண்ணும் சேர்ந்து தானே ஒலகத்திலெ மொதோ மொதோ ஆரம்பிச்சு இன்னிக்கு இம்புட்டு ஜனமாப் பெருகியிருக்கு.ஒரு இடத்துல நிக்கமாட்டாமெ இந்தியாவுல மட்டும் ஒன்றரை விநாடிக்கு ஒரு குழுந்தை பிறக்குதாம்.சரியா?
1+1=பாதி விடை தெரியுங்க.நிச்சயமா 1ம் 1ம் 2 இல்லீங்க.எது எப்படி இருக்கு.
சரியான விடை1+1=2தான்.எப்படின்னாமேலே சொன்ன அத்தனை விடைகளும் தத்துவார்த்தமானவை.இந்த விடை தான் கணக்கியல் சார்ந்தது.
ஓகே.வர்ர்ர்ட்டா.

said...

இன்னும் இரண்டு நெடியில் பின்னூட்டத்தை வெளியிடாவிட்டால் குசும்பனின் உடம்பு ரணகளம் ஆகும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

என்னதான் பதிவு மொக்கையாக தெரிந்தாலும் பின்னூட்டங்க அறிவியல்/கணக்கியல் சார்ந்த வகையை சேர்கின்றன. அதனால இந்தப்பதிவு மொக்கை என்ற இலக்கை தவறுவதால் மொக்கைப்போட்டியில் ரிஜக்ட் ஆகும் நிலைமை வரலாம். எனவே பின்னூட்டங்களில் கவனம் கொள்ளுமாறு மின்னல் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்

Anonymous said...

சாமி, போய் தொலையுங்க, மனசு மாறி திரும்பி வந்திடாதிங்க,
பெயரை மாத்தி வேறு பெயரில வந்திடாதீங்க.
திரும்பிப் பார்க்காம நேர போய் குளமோ குட்டையோ தேடுங்க.

புள்ளிராஜா

said...

உங்களுக்கு நான் விடை கொடுக்கிறேன்.

'bi' c u.

said...

மொக்க பதிவுக்கு மொக்க பின்னூட்டம் போட்டா சிறந்த மொக்க பதிவுன்னு பரிசு குடுக்கறாங்களாம். விட மாட்டோம்ல :-))

அட! எங்க கணக்கு வாத்தியார் கேட்ட கேள்விதாங்க இது. ஆனா அவர் மூணு விடை கொடுத்தாருல்ல...

1+1=2 (decimal number system)
1+1=10 (binary number system)
1+1=1 (discrete logic. TRUE and TRUE equals TRUE)

வேற ஏதாவது விடை வேணுமா?

said...

கடவுளே! தெரியாத்தனமா இங்கன வந்துட்டேன்.. என்னை மட்டும் காப்பாத்துப்பா!!! :(

said...

\\அபி அப்பா said...
நல்ல முடிவு!திரும்பி வந்தா அடிகிடைக்கும்!\\

அபி அப்பா சரிய சொன்னிங்க

said...

மொக்கைப் போட்டியின் முதல்வட்டத்தில் இருந்து ரெண்டாவது வட்டத்துக்குதேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள்.
வட்டம்- round

contestants=24
Selected to 2nd round=24

this is called mokkai pinoottam

said...

2

said...

அபி அப்பா விடை கேட்டா அடி கிடைக்கும் என்கிறார் என்ன உலகம்!!!

யாரோ சனி பெயர்சி என்கிறார்


இசை பாராட்டுகிறாரா இல்லை திட்டுகிறாரா என்று தெரியவில்லை..

said...

போங்க.. சொல்லிட்டு போகாதீங்க!!

said...

//"தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்..." //

இது மொக்கை தானுங்க ஒப்புக்கொள்கிறேன்.

போட்டியில் வெல்ல(ம்) வாழ்த்துக்கள் !

said...

விடை கொடுத்த அனைவருக்கும் நன்றி,

விடை கொடுக்காமல் போ, போய் தொலை, குளம் குட்டையை பார், சனி என்று எல்லாம் திட்டிய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

சும்மா காமெடி என்கிற பெயரில் உங்களை எங்கோ காய படுத்தி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். மண்ணிக்கவும்.

said...

//மண்ணிக்கவும்.//

இப்படி தமிழை கொலை பண்ணினா எப்படி மன்னிக்க முடியும்? :-))

//காய படுத்தி //

ரொம்பவே காயப்படுத்துகிறீர்கள் ஆனாலும்... :-))

said...

இன்னும் கிளம்பலையா நீயி? :)).....