எவ்வளோ நாளைக்குதான் ஆனந்தவிகடனில் ஒரு துண்டு இடத்தில் வருவது இனி உலகையே திரும்பி பார்க்கும் படி ஒரு படம் எடுத்துவிடுவது என்று வலைபதிவர்கள் மீட்டிங்கில் கடைசியாக நடந்த கோவி கண்ணன் சந்திப்பில் முடிவு செய்யபடுகிறது. இனி அதன் தொடர்ச்சி.
லக்கி லுக்: பாலா அண்ணே நம்ம பிளான் படி படம் தயாரிக்க ஒரு புரொடியூசர் வேண்டுமே? அதுக்கு யாருன்னே கிடைப்பா அதுவும் நம்பள நம்பி பணம் போட!
பால பாரதி: இங்க இருக்கவனுங்க யாரும் நம்மை நம்பி ஒரு சல்லி காசு கொடுக்கமாட்டானுங்க, NRI யாரையாவதுதான் புடிக்கனும்.
லக்கி லுக்: அப்ப என்னுடைய கழக தோழர் அண்ணன் அபி அப்பா இருக்கிறார் அவரை புடிச்சு கேட்டு பார்க்கவா?
பால பாரதி: கோபமாக யோவ் அவரிடம் ஹீரோயின் வயசுக்கு வந்ததுக்கு புட்டு சுத்தனும், அதுபோல் ஒரு சீன் எடுக்கனும் பணம் கொடு என்றால் கரெட்டா ஹீரோயின் பொண்ணுக்கு புட்டு சுத்தும்பொழுது கொடுப்பார். நீ வேற!
லக்கி லுக்: அப்ப ஆசிப் அண்ணாச்சிய புடிக்கலாமா?
பால பாரதி: யோவ் அவரு கொஞ்சம் விவரமான ஆளு அதுமட்டும் இல்ல காசு வாங்கினா செவத்து மூதி அது இதுன்னு திட்டு வாங்கனும் எதுக்கு அது எல்லாம் ?
லக்கி லுக்: அப்ப அமீரகம் வேண்டாம், இந்த பக்கமா K.R.S, G.ராகவன் இவங்களை புடிக்கலாமா?
பால பாரதி: அட நீ வேற பில்லாவை ரீ மேக் செய்யலாமா என்றால்..வேண்டாம் ஒளவையார், கந்தன் கருனையை ரீமேக் செய்யலாம் என்பார்கள் அவர்களும் ஒத்துவராதுய்யா.
லக்கி லுக்: பாலண்ணே நம்ம கோவி கண்ணன் எப்படி?
பால பாரதி: அடேய் தம்பி சூப்பாரா சொன்னடா, அவருதான் நம்ம புரொடியுசர் அவருதான் ஒத்துவருவாரு.
லக்கி லுக்: எப்படினே!!
பாலபாரதி: தம்பி அவரு
ஷேவிங் செய்யவே 1000 கொடுத்தவரு, முடிவெட்ட 10000 கொடுப்பாரு அதுபோல படம் எடுக்க என்றாலும் அவரிடம் இருந்து செமயா காசு வாங்கிடலாம், அதும் இல்லாமா என்னத்த அடிச்சாலும் தாங்குறாரு அவரு ரொம்ப நல்லவரு!!!!
கோவி.கண்ணனும் சம்மதிக்க கதை விவாதத்துக்கு பதிவர்களை
அழைக்கிறார் பால பாரதி. பதிவர்கள் அனைவரும் ஒன்று சேருகிறார்கள்.
______________**********************_______________
எல்லாம் பாலபாரதியை திட்டுகிறார்கள் யோவ் உன் பேச்சை கேட்டுக்கிட்டு வந்தோம் பாரு வந்து 3 மணி நேரம் ஆகுது இன்னும் புரொடியூசரை கானும் என்று! பாலபாரதி கோவிக்கு போன்போடுகிறார். இதோ வந்துட்டேன் ஒரு சின்ன வேலையா போய் இருந்தேன் அதான் டிலே ஆகிட்டு என்று வருகிறார்.
பால பாரதி: என்ன கோவி? சிவாஜியில் ஒரு கூடை சன் லைட் பாட்டில் வரும் ரஜினி போல வருகிறீர்கள்.
கிளம்பும் பொழுதுதான் பார்த்தேன் முகத்துக்கு பவுடர் அடிக்கவில்லை என்று அடிக்க சோம்பேறி தனம் அதான் கூட வந்த நண்பனிடம் கேட்டேன் சரி என்று சலூனுக்கு கூட்டிட்டு போனார் அங்க அவன் முகத்துக்கு சாதா பவுடரா , ஸ்பெசல் பவுடரா என்றான் சாதா என்றால் கையில் கொட்டி அடிச்சு விடுவேன், ஸ்பெசல் என்றால் பிரஸ்ஸால் அடிச்சு விடுவேன் என்றான் சரின்னு ஸ்பெசலே சொல்லிட்டேன் பார்த்தா வீட்டுக்கு அடிக்கிற சுண்ணாம்பு பிரஸை வெச்சு சுண்ணாம்பு அடிச்சு விட்டு 100000 வாங்கிட்டான்.
பாலபாரதி: அதான் சுண்ணாம்பு அடிக்கிறான் என்று தெரியுதுல்ல அப்படியே ஓடி வரவேண்டியதுதானே?
கோவி.கண்ணன்: சுண்ணாம்பு அடிக்கும் பொழுது அவன் சொல்றான் என்னத்த அடிச்சாலும் தாங்குறார், இவர் ரொம்ப பழம் பெரும் வலைபதிவர் போலன்னு சொல்லிட்டான் . அவ்வ்வ்வ் என்று வடிவேலு ஸ்டைலில் அழுகிறார்.
அவரை சமாதன படுத்திவிட்டு இனி நடிகர்கள் தேர்வு:
___________________********************_____________________
படத்தின் டைரக்ட்டர்: நம்ம உண்மை தமிழன், இப்படா தம்பி கமல் பத்து வேடத்தில் நடிச்சு அசத்தி இருக்கிறார் அதைவிட பெட்டரா 12 கேரெக்ட்டரில் நடிக்க ஒரு ஆள் வேண்டும் என்னடா செய்யலாம் அப்படி செஞ்சாதான் உலகமே நம்மை திரும்பி பார்க்கும் என்று லக்கியிடம் சொல்ல.
லக்கி: 12 என்ன 24 விதமாகவும் திறமை காட்ட ஒரு ஆள் இருக்கிறார் அவரே பதிவும் போடுவார், அவரே கேள்வியும் கேட்டுப்பார், அவரே பதிலும் சொல்லிப்பார், அவரே பின்னூட்டமும் போட்டுப்பார்,அவரே பின்னூட்டத்துக்கு பதிலும் சொல்லிப்பார் என்று சொல்ல...
உண்மை தமிழன்: நீ அவரை விடவே மாட்டீயா, வேற யாரையாவது சொல்லு.(பால பாரதி உண்மை தமிழனிடம் வந்து அண்ணே மோர் வேணுமா, அண்ணே கூல் டிரிங்ஸ் வேணுமா, அண்ணே சுண்டல் வேண்டுமா? ரொம்ப கவனிக்கிறார்) பாலபாரதி: (லக்கியிடம் கண்ணை காட்ட!) அதை கவனிக்காதது போல் அந்த பக்கம் திரும்புகிறார் லக்கி, கடுப்பான பாலபாரதி லக்கி காலை மிதிக்க ஆஆன்னு கத்துகிறார் லக்கி.
லக்கி : அண்ணே நம்ம வலையுலகில், பார்க்க இளமையா, கொஞ்சம் அழகா, நல்ல கலரா , எல்லாவிதத்திலும் ஹீரோவுக்கு பொருத்தமாக இருக்ககூடிய ஒரே ஒரு ஆள் ....................நான்தான்னே!
பாலபாரதி: அடி ங்கொய்யாலே என்னை ரெக்கமெண்ட் செய்ய சொல்லி சொன்னா நீ உனக்கு சொல்லிக்கிறீயா இருடி...
கடைசியாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து பாலபாரதியே ஹீரோ என்று முடிவாகிறது.
_______________________****************_______________________
கதை விவாதம்:
எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன் என்று உண்மை தமிழன் சொல்ல அப்ப பணத்தையும் நீங்களே போட்டுக்குங்க என்று கோவி டென்சன் ஆகிறார்.
கதை,பாட்டு, பைட்டு எல்லாம் தனி தனியா விட்டு விடலாம் என்று யோசனையை சொல்கிறார்.
படம் திகில் படம் என்றால் வினையூக்கிய எழுத சொல்லிடலாம், காதல் கதை என்றால் சிபியை எழுத சொல்லலாம் ஆனா அவரு மார்கழி மாதத்தையே இன்னும் முடிக்கல. (அதுவும் இல்லாம இந்த ஹீரோவை வெச்சு காதல் கதையும் செய்ய முடியாது ) கிராமத்து கதை என்றால் ஆடுமாடுவை எழுத சொல்லலாம். என்று பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே மழை வர விவாதம் ஒத்திபோட படுகிறது.