Tuesday, August 26, 2008

இந்த வார ஜூவி அட்டை படத்தில் பரிசல்காரன்

இந்த வார ஜூவியின் அட்டை படத்தை அழகாக அலங்கரித்து இருக்கிறார் நம் பரிசல்காரர். இதுபோல் புத்தங்களில் வருவது கொடுக்கும் உற்சாகம் மேலும் சிறப்பாக எழுத வைக்கும். எனவே மேலும் சிறப்பாக எழுதவும்.

TIMES இல் வரவும் வாழ்த்தலாம் வாங்க.




மேலும் விவரம் தெரிய ஜூவியை வாங்கி படியுங்கோ!!!


நன்றி: கலககாரார். ஜோசப் பால்ராஜ் (படத்தை அனுப்பியவர்)

டிஸ்கி: இது எப்படி அட்டை படம் என்று நீங்க கேட்டால் , ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி, நம் பரிசல் பற்றி இருக்கும் பக்கம் நமக்கு அட்டை படமுதல் பக்கம்!

Monday, August 25, 2008

டா டா பை பை சொல்பவர்களுக்கு:(((((((((

ஒரு படத்தில் கதவை மூடிக்கிட்டு உள்ளே இருக்கும் கவுண்டமணியை வெளியேகொண்டு வர வீட்டு கதவுக்கு அருகில் ஒரு 25 பைசாவை கீழே போடுவாங்க அந்த சத்தத்தில் கதவை திறந்துக்கிட்டு வெளியே வருவார்.(ஏதும் நடிகர் பேரை மாற்றிசொல்லி வரலாற்று பிழையாகி இருந்தால் கொஞ்சம் பொருத்தருள்க:))

திரும்ப பதிவுலகுக்கு வரமாட்டேன் என்று சொல்லிட்டு போகும் சிலரை வீட்டை விட்டு வெளியேவரவைக்க என்ன செய்யவேண்டும் என்று ஒரு கற்பனை...

கோவி.கண்ணன் எழுதமாட்டேன் என்று போனால் வீட்டுக்கு அருகில் இருந்துகட்டிங் செஞ்சா ஷேவிங் இலவசம், கட்டிங் செஞ்சா ஷேவிங் இலவம் என்று குரல் கொடுக்கனும். (குசேலன் படத்தில் வடிவேல் ரயில்வே கேட் முன்பு சொல்வது போல்).

வால்பையன் எழுதமாட்டேன் என்று சொல்லிட்டு போனால் அவர் வீட்டு கதவுக்கு அருகில் இருந்து ”சியர்ஸ்” சொல்லிட்டு கிளாஸை கிளிங் என்று சத்தம் வருவது போல்மோத வேண்டும்.

ஆயில்யன் எழுதமாட்டேன் என்று சொன்னால் அவர் வீட்டுக்கு முன்பு நின்றுக்கொண்டு ரஜினி வாழ்க என்று கூவ வேண்டும்.

லக்கிலுக் எழுதமாட்டேன் என்று சொன்னால் அவர் வீட்டுக்கு அருகில் நின்றுகொண்டு உண்மைதமிழன் எடுத்து இருக்கும் 8 மணி நேர குறும்பட "DVD"யை எடுத்துக்கிட்டுலக்கிய பார்க்க வருகின்றாரா? என்று சவுண்டாக பேசவேண்டும்.

நாமக்கல் சிபி அப்படி சொன்னால் அவர் வீட்டு கதவுக்கு அருகில் இருந்து நயன் தாரா ஷூட்டிங்குக்கு வருகிறார்களா?அப்புறம்நம்ம ஊரு எருமை குட்டையில் குளிக்க போறாங்களா என்று பேசிக்கனும்?

பரிசல்காரன் வீட்டுக்கு முன்பு போய் சார் போஸ்ட் from லதானந் என்று சொல்ல வேண்டும்.

ஜொள்ளுபாண்டி வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு வாவ் என்ன பிகர், என்ன பிகர் அடா அடா என்னா கலர்ன்னு பேசிக்கனும்.

ஜ்வோராம் சுந்தர் என்றால் சரோஜா தேவி வாங்கினா மருதம் இலவசம், மருதம் வாங்கினா சரோஜா தேவி இலவசம் இரண்டும் வாங்கினா காமசூத்ரா இலவசம் என்று கூவனும்.

இளயகவி என்றால் ”தமிழச்சி மீண்டும் தமிழ்மணத்தில்” என்று தலைப்பு செய்தி படிப்பது போல் சொல்லனும்.

மங்களூர் சிவா வீட்டுக்கு முன்பு போய் நின்றுக்கிட்டு ஆர்குட்டை பிளாக் செய்ய போறாங்களா? அல்லது ஜெர்மனிக்கு இலவசமா பேச செல்போன் அறிமுகமா என்று பேசனும்.

அபி அப்பா அப்படி சொன்னால் அவர் வீட்டுக்கு முன்பு எல்லோரும் போய்விடனும் ஆனால் சைலண்டா இருக்கனும்...அவரே கதவை திறந்துக்கிட்டு தானா வந்து யாராவது கூப்பிட மாட்டார்களா என்று பூனை போல எட்டிப்பார்பார் அப்பொழுதும் பேசாமல் இருக்கனும் பின் அவரே இது ஆவுறது இல்லை என்று தானே, ”திரும்ப வந்துட்டேன் திரும்ப வந்துட்டேன் யாரும் அழுவாதீங்க “ என்று கூவிகிட்டே வந்துவிடுவார்.

நந்து & ஜீவ்ஸ் என்றால் எருமை மாட்டு மூக்கு மேல என்ன அழகா ஒரு ஈ உட்காந்து இருக்கு இதை எப்படி? எந்த ஆங்கிளில் போட்டோ எடுப்பது? என்று பேசிக்கனும்!

நான் அப்படி சொல்லிட்டு வீட்டுக்குள் போனால் விவேக் வாஸ்து சொல்லி வாசலை அடைப்பது போல் அடைச்சுவிட தம்பி ரெடியாக இருப்பதால் நான் அப்படி எல்லாம் சொல்லமாட்டேன்.

போட்டி பரிசு முடிவுகள் - நன்றி லக்கி + சஞ்சய்

முதல் பார்வையில் என்னைக் கவர்ந்த கமெண்டுகள் :

தம்பி said...
கோவி:இந்த கட்டு கட்றாளுங்க. நமக்கு எதாச்சும் கெடைக்குமா...தீபா: என்னடி பின்னாடிருந்து ஒருத்தன் தட்டையே பாத்துகிட்டுருக்கான். திடீர்னு தட்ட தூக்கிட்டு ஓடிரபோறான். சீக்கிரம் சாப்பிடுங்க.

கார்க்கி said...
புகைப்படக்காரர் : கொஞ்சம் திரும்பி நில்லுங்க பெரியவரே(கோவி.கண்ணனைத்தான்)!! உங்க பின்னழக படம் புடிச்சிட்டு பார்த்து பார்த்து ரசிக்கிறாங்க அந்த ரெண்டு பொண்ணுங்களும்..அப்படி என்னத்தான் இருக்குனு பார்ப்போம்..

கோவி.கண்ணன் said...
கோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போதாவது நம்புங்க !:)

வெண்பூ said...
தீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா? தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌

பரிசல்காரன் said...
தேவதர்ஷினி: (ஃபோட்டோ எடுக்கும் தங்கமணியிடம்)"நீங்க குடுத்துவெச்சவங்க மேடம்! கண்ணன் அருமையா சமைச்சிருக்காரு!"


ஆசிப் மீரான் said...
தீபா வெங்கட்: ஏன் சார் அவ்வளவு பின்னால நிக்குறீங்க? பக்கத்துலேயே நிக்கலாமே?ப்ரியத்ர்ஷினி: அவர்தான் மூணு அடி தள்ளி நிக்குறார். அவர் தொப்பை என்னமோ உனக்கு மூணு அங்குல தூரத்துலதான் இருக்கு

சங்கர் said...
சிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க?

விஜய் ஆனந்த் said...
தயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ????


இந்த கமெண்டுகள் ஓரளவுக்கு புன்னகைக்க வைத்ததே தவிர மனம்விட்டு நகைக்க வைக்கவில்லை என்பது சோகம் தான் :-(

இருந்தாலும் இதிலிருந்தும் சிலவற்றை வடிகட்ட முயற்சிக்கிறேன். இரண்டாவது சுற்றுக்கு வந்திருக்கும் கமெண்டுகள் :



தம்பி said...
கோவி:இந்த கட்டு கட்றாளுங்க. நமக்கு எதாச்சும் கெடைக்குமா...தீபா: என்னடி பின்னாடிருந்து ஒருத்தன் தட்டையே பாத்துகிட்டுருக்கான். திடீர்னு தட்ட தூக்கிட்டு ஓடிரபோறான். சீக்கிரம் சாப்பிடுங்க.

கோவி.கண்ணன் said...
கோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போதாவது நம்புங்க !
:)

வெண்பூ said...
தீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா? தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌

சங்கர் said...
சிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க?

விஜய் ஆனந்த் said...
தயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ????

ஓக்கே ஃபைனல் ரவுண்டு. இதுபோல போட்டோக்களுக்கு ஃபுட் நோட்டு எழுதுவது ஒரு பெரிய கலை. நகைச்சுவையாக பெரியளவில் நம்மால் சிந்திக்க முடிந்தால் கூட நறுக்கென்று ஒரே லைனில் அடித்தாடுவதில் தான் அடுத்தவர்களை கவரமுடியும். அவ்வகையில் இப்போட்டிக்கு வந்த கமெண்டுகளிலேயே என்னை அதிகம் கவர்ந்தது :


சங்கர் said...
சிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க?

ஆனால் சங்கர் என்பவர் அதர்-ஆப்ஷனில் பின்னூட்டம் போட்டிருப்பதால் அவருக்கு பரிசளிப்பதில் சிரமம் ஏற்படலாம். பல பேர் அந்த கமெண்டை போட்டது தாங்கள் தான் என்று Claim செய்யமுடியும் என்பதால் முதல் பரிசுக்கு தகுதிபெற்ற கமெண்டாக இருந்தபோதிலும் இதுபோன்ற தடாலடிப் போட்டிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியை அந்த கமெண்டு இழக்கிறது :-(


ஓரிரு வாரங்களாக தினகரன் வாசிப்பவர்கள், சன் டிவி செய்திகள் பார்ப்பவர்கள் நிஜமாகவே இந்த கமெண்டை ரசிக்கமுடியும். அரசியல் ஜே.கே.ரித்தீஷ் ஆன தயாநிதியை கோவியாரோடு ஒப்பிட்டு கமெண்டிய விஜய் ஆனந்தின் டைமிங் சென்ஸுக்கு கட்டாயம் பரிசளிக்கலாம். இதுபோன்ற போட்டிகளில் டைமிங் சென்ஸ் மிக முக்கியம்.

விஜய் ஆனந்த் said...
தயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ????


சுய எள்ளல் ஒரு கலை. தன்னை தானே கலாய்த்துக் கொள்ளும் மனம் படைத்தவர்கள் பாக்கியசாலிகள். இந்த போட்டிக்கு கோவியாரே போட்டிருக்கும் கமெண்டும் பரிசுபெற தகுதியானது என்று எண்ணுகிறேன்.

கோவி.கண்ணன் said...
கோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போதாவது நம்புங்க !:)

ஒருவேளை கோவியாரின் கமெண்டு இந்தப் போட்டிக்கானது அல்ல என்றால் பரிசுபெற தகுதியான மற்றொரு கமெண்டு

வெண்பூ said...

தீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா? தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌..

பரிசினை வென்றவர்களுக்கும், போட்டியினை நடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

நடுவராக என்னை ஆக்கிவிட்டதால் போட்டியில் கலந்துகொள்ள இயலவில்லை என்பது எனக்கு வருத்தமே. இருப்பினும் நடுவர் பொறுப்பு தந்து எனக்கு பதவி உயர்வு தந்த குசும்பனுக்கு நன்றிகள். போட்டியின் ஒரு கமெண்டை கூட நேற்றுவரை நான் பார்க்கவில்லை, பார்க்க விரும்பவில்லை. போட்டிக்கு கமெண்டுகள் வந்துகொண்டிருக்கும் போதே பார்த்துவிட்டால் எந்த கமெண்டோடவாவ்து இம்ப்ரஸ் ஆகிவிடக்கூடிய ஆபத்து நடுவருக்கு இருப்பதால் இன்று தான் எல்லா கமெண்டையும் ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்தேன்.


என்னுடைய தேர்வு எல்லோருக்குமே திருப்தியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்
லக்கி


**************************&&&&&&&&&&&&&*******************

நன்றி லக்கி !
நடுவராக இருந்து அருமையாக தேர்வு செய்தமைக்கு. இதுக்கு உங்களின் போட்டோ கமெண்ட் அனுபவமும், சீரியஸ் பதிவுகளில் நீங்கள் போடும் கமெண்ட்ஸ்ம் இதுக்கு கைக்கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

போட்டி வைக்கலாம் என்றவுடன் புத்தங்களை யாரை விட்டு வாங்க சொல்வது என்று நினைவு வந்தவுடன் நினைவில் வந்தவர் தொழிலதிபர். சஞ்சய்(மார்கெட் போன நடிகைகள் தங்கள் ஜாதகங்களை அனுப்ப வேண்டிய முகவரி sanjaygandhi@gmail.com), கேட்டதும் செஞ்சுடலாம் மாம்ஸ் என்றதோடு மட்டும் இன்றி இரண்டு தினங்களில் புத்தங்களை வாங்கி வைத்துக்கொண்டு நான் ரெடி மாம்ஸ் என்ற அவரின் பொருப்புக்கு மிக்க நன்றி.

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றிகள்.

**************************&&&&&&&&&&&&&*******************

பரிசாக இரண்டு புத்தங்கள் :
அதில் ஒன்றான பாலபாரதியின் புத்தகத்தை பரிசாக பெறுகிறார் வெண்பூ.

மீதி ஒன்றை சிறப்பாக என் கவனத்தை ஈர்த்த தம்பிக்கு லிவ்விங் ஸ்மைல் வித்யாவின் புத்தகம் பரிசாக கொடுக்கப்படுகிறது.

”வடிவேல் கோவி: நான் நிக்கிறேன்... நிக்கிறேன்... நிக்கிறேன்...ஒருமணி நேரமா நிக்கிறேன்... ஒருத்தி கூட திரும்பி பாக்கலயே”

***********************************************
பரிசாக பாலபாரதி புத்தகம் என்று நான் எழுதினால் அது பா.க.ச பதிவாக ஆகிவிடும் என்பதால் முன்பே சொல்லவில்லை. அதுமட்டும் இன்றி அப்படி சொல்லி இருந்தால் அண்ணாச்சி ஆசிப் இந்த பக்கம் வந்து இருக்கவே மாட்டார்:)))

வெற்றிப்பெற்றவர்கள் தொழிலதிபர். சஞ்சய்காந்தியிடம் பரிசுகளை வாங்கிக்கலாம்.

Wednesday, August 20, 2008

புதிய கார்டூன் குசும்புகள்-21-08-08

அட்லீஸ்ட் நம்ம ஜீவ்ஸ் அல்லது நந்துவையாவது அனுப்பிவையுங்கப்பா!

அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவரை வழி அனுப்பிவைக்கும் வீரர்கள்

இந்த பென்குவின் அந்த நாட்டு ராணுவத்தில் கெளரவ உறுப்பினராம்.(நாடு பெயர் மறந்துவிட்டது)



தமிழகத்தின் ஏழை தோழிகள் குடும்ப அட்டைக்காக புகைப்படம் எடுத்துக்கிட்ட பொழுது எடுத்த படம்.







Monday, August 18, 2008

எம்.பி லஞ்ச விவகாரம்..பிரதமருக்கு தொடர்பு இல்லை!!!

அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தை விசாரிக்க விசாரனை குழு அமைக்கப்பட்டு விசாரனை நடந்து வருகிறது. இதில் நேற்று இடைத்தரகர் சோகைல் கூறுகையில் கொடுத்த சாட்சியம்..

//பா.ஜ.க எம்.பிக்களுக்கு பணம்கொடுப்பது பற்றி நான் அமர்சிங்கை சந்தித்துப் பேசினேன். அப்பொழுது அவர் யாரோ ஒருவரிடம் செல்போனில் பேசினார்.
மேலும் 3 பா.ஜ.க எம்.பிக்கள் நம் பக்கம் வந்துள்ளனர்” என்றார், பிறகு 3 பா.ஜ.க எம்.பிகளிடம் தொடர்பு கொண்டு “உங்களை பற்றி நான் பிரதமரிடம் கூறி விட்டேன்” என்றார்.


இதையடுத்து சோனியா அரசியல் ஆலோசகர் அகமதுபடேலை தொடர்பு கொண்டு பேசினார். அவருடம் பா.ஜ.க எம்.பிக்களை பேசவைத்தார். இவ்வாறு இடைத்தரகர் சோகைல் சாட்சியம் அளித்துள்ளார்.

அமர்சிங்குக்கு இந்த விவகாரத்தில் நேரடி தொடர்பு இருப்பதாக சோகைல் குறிப்பிட்டுள்ளார், அமர்சிங் செல்போனில் பிரதமருடன்தான் பேசினார் என்று பெருள்பட அவர் சாட்சியம் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
//

இந்த சாட்சியம் ஒன்றே போதும் பிரதமர் தவறு செய்யவில்லை என்று! எப்படி என்று கேட்கிறீர்களா? இதுபோல் மிகவும் முக்கியமான விவசயங்களை எல்லாம் மன் மோகனிடம் யாராவது பேசுவாங்களா? பேசினாலும் அவரால் முடிவுதான் எடுக்க முடியுமா? சீனா காரனுங்க ஒலிம்பிக் துவக்கவிழாவுக்கே யாரை கூப்பிடனும் யாரை கூப்பிட கூடாது என்று தெரிஞ்சுவெச்சு சோனியா அம்மையாரை கூப்பிட்டு இருக்கானுங்க. நம்ம அமர் சிங்குக்கா தெரியாது நம்ம மன் மோகன் சிங் “பவரை” பற்றி?

என்ன நான் சொல்வது சரிதானே!!!

Sunday, August 17, 2008

சூப்பர் கமெண்ட் அடிப்பவர்களுக்கு பரிசு







மேலே இருப்பவை எல்லாம் சாம்பிள், இனி போட்டிக்கு போகலாம் கீழே இருக்கும் படத்துக்கு பொருத்தமா சூப்பர் கமெண்ட் அடிப்பவர்களில் ஒருவருக்கு பரிசு வெயிட்டிங்.



போட்டி விதி முறைகள்:
1) ஒருவர் எத்தனை முறை வேண்டும் என்றாலும் கமெண்ட் எழுதலாம்.
2) வரும் வெள்ளி(22/8/2008) வரை கமெண்ட் எழுதலாம்.
3)போட்டி முடிவு திங்கள் அன்று வெளியிடப்படும்.
பரிசு: ரூ 250 மதிப்பிலான புத்தகம். (நிச்சயமாக போன பதிவில் சொன்ன புத்தங்கள் இல்லை)
வெற்றிப்பெற்றவர் வெளிநாட்டு நபராக இருப்பின் அவர் வேறு யாரையாவது இந்தியாவில் வாங்கிக்க சொல்லலாம்.
டிஸ்கி: போட்டோவில் இருப்பவர் கோவி.கண்ணன், அவர் அனுமதியுடன் தான் போட்டி நடைப்பெறுகிறது, ஆகையால் தயக்கம் வேண்டாம்.

Friday, August 15, 2008

பதிவர்கள் எழுதிக்கொண்டு இருக்கும் புத்தகங்கள்!!!

தமிழ்மணத்தில் பதிவர் புத்தகங்கள் என்று புது இடம் ஒதுக்கி இருப்பதும் , புத்தகம் எழுதி அதில் நம்முடைய பேரும் வரவேண்டும் என்று பகிரத முயற்சியில் பலர் இருக்கிறார்கள் யார் யார் என்ன என்ன புத்தகம் எழுதி கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு பார்வை.


புத்தகம் : தொழிலை மேம்படுத்த முத்தானான 30 ஆலோசனைகள்

ஆசிரியர்: லதானந்

பக்கம்: இதுவரை 2 பக்கம்

விமர்சனம்: தொழில் செய்பவர்கள் அல்லது ஆபிசில் கொஞ்சம் கூட வேலைப்பார்காதவர்கள் மனம் வேறு திசையில் வடக்கு,தெற்கு,கிழக்கு, மேற்கு இந்த திசை நீங்களாக வேறு திசையில் மனம் செலுத்துபவர்களின் மனம் திரும்ப தொழிலையை கவனிக்கும் பொருட்டு மிகுந்த அக்கரையுடன் எழுதி இருக்கும் புத்தகம். இதுவரை எழுதி இருப்பதை படித்த பலர் மனம் திருந்தி தொழிலையே விட்டு விட்டதாகவும் இது வெளிவந்தால் பலர் குடும்பத்தில் விளக்கு எரியும் என்றும் எதிர்ப்பார்க்க படுகிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: முத்தம் கொடுத்து கொலை செய்வது எப்படி?

ஆசிரியர்: பைத்தியகாரன்

பக்கம்:143 (I love you என்று வார்தைக்களின் எழுத்து எண்ணிக்கை)

பதிப்பகம்: கிழக்கு கீழ்பாக்க பதிப்பகம்

விமர்சனம்: கத்தியின்றி இரத்தம் இன்றி ஒரு கொலை செய்வது எப்படி என்று இந்த புத்தகத்தில் ஆசிரியர் பைத்தியகாரன் விளக்கமாக எழுதி இருக்கிறார், இதை படிக்க போகும்பலர் பத்து நாட்கள் பல் விளக்காமல் இருந்து பாலபாரதிக்கு முத்தம் கொடுத்து கல்யாணவாழ்த்து சொல்லபோவது நிச்சயம் என்று செய்திகள் கசிகின்றன.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: 10 நாட்களில் ஹிந்தி பிகரை மடிப்பது எப்படி!

ஆசிரியர்: ஆடுமாடு

பக்கம் : 15

வெளியீடு : கலைஞர் பதிப்பகம்

விமர்சனம்: ஹிந்தி தெரியாமல் ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனை கைப் வரை கோட்டை விட்ட என்னை போன்ற சிலரின் துயர் துடைக்கும் பொருட்டு ஆடுமாடு அவர்கள் எழுதி கொண்டு வரும் புத்தகம் இது, இது வெளிவந்த பிறகு பலர் ஹிந்தி பிளாக் ஆரம்பித்து ஹிந்தியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தபோவது உறுதி. அதை படிக்கும் பல ஹிந்தி பிகர்கள் அவர்கள் வலையில் விழலாம் என்று எதிர்ப்பார்க படுகிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம் : போண்டுவை நோண்டுவது ஏன்?

ஆசிரியர்: லக்கி லுக்

பக்கம்:100

பதிப்பகம்: விகடன்

விமர்சனம்: இதை ஒரு கிட்டதட்ட சுயசரிதை போலவே எழுதிக்கொண்டு வரும் லக்கி அதில் அவர் போண்டு நோண்டுவது ஏன் என்று அவர் சொல்லி இருக்கும் பலகாரணங்களை ஆதாரத்தோடு சொல்லி இருக்கிறார் அதில் பல இடங்களில் பிரிண்ட் ஸ்கிரீன் செய்யப்பட்ட அழகான பெண்கள் ஜட்டி தெரியும் படங்கள் அடங்கிய புத்தகமாக வருகிறது, ஆனால் புத்தகத்தின் கடைசி இரண்டு மூன்று பக்கங்களில் மீதியை படிக்கhttp://www.யூத்விகடன்.காம்/ சென்று படியுங்கள் என்று இருப்பதால் லாகின் ஐடி இல்லாத பலர் முடிவு தெரியாமல் குழம்பி போவதற்கு வாய்ப்பு இருக்கிறது!,மேலும் அவர் எழுதிக்கொண்டு வரும் உண்மையாரின் உண்மை முகம்,புத்தகமும் சக்கை போடு போடும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: மீந்த பஜ்ஜிகளை மீண்டும் உபயோகிப்பது எப்படி?

ஆசிரியர்: கோவி.கண்ணன்

பக்கம்: 1000( பஜ்ஜியை வைத்து சாப்பிட)

இலவச இனைப்பு: 1000ரூபாயில் ஷேவிங் செய்வது எப்படி?

பதிப்பகம்: குத்து கந்தசாமி பதிப்பகம்

விமர்சனம்: வீட்டில் செய்யும் பஜ்ஜிகளையும் ,மீந்து போகும் பல பொருட்களையும் எப்படி வீண் அடிக்காமல் உபயோகிப்பது எப்படி என்று பல முத்தான ஆலோசனைகளைஇதில் எழுதி இருக்கிறார், மேலும் அவர் சுயப்பரிசோதனைகள் மூலமே இந்த கருத்துக்களை எழுதி இருக்கிறார் அதற்கு ஆதாரமாக கடந்த முறை மீந்த பஜ்ஜியை பதிவர்களுக்குகொடுத்ததை பற்றியும் எழுதி இருக்கிறார்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: சென்ஷியை பிடிப்பது எப்படி?

ஆசிரியர்: பரிசல் காரன்

பக்கம்: 150

இலவசம்: ஒரு கொசுவலை கட்டிய கம்பு)

விமர்சனம்: ஷார்ஜாவில் ஒளிந்து இருக்கும் சென்ஷியை பிடிப்பது எப்படி என்று விளக்கமாக இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் அதோடு கூடுதலாக அவரை பிடிக்ககொசுவலை கட்டிய கம்பு ஒன்றையும் கொடுக்க இருக்கிறார்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: இன்கம்மிங் கால் அவுட் கோயிங் கால் ஒரு அலசல்

ஆசிரியர்: நந்து (போட்டோகிராபர்)

பக்கம்:555

பதிப்பகம்: ஏர்டெல்

இலவசம்: கால்குலேட்டர்

விமர்சனம்: இன்கம்மிங், அவுட் கோயிங் கால்களையும் வைத்து ஒரு ஒப்பிடு செய்து அதன் ஆராய்சி முடிவுகளை எழுதி இருக்கிறார் ஆசிரியர், பல இடங்களில்% பற்றி வருவதால் படிக்கும் பொழுது கணக்கு போட்டு பார்த்து படிக்க இலவசமாக ஒரு கால்குலேட்டர் வழங்க இருப்பதாகவும், இன்கம்மிங் பற்றி ஆராய்சியில்அவர் ஈடுப்பட்டதால் அவருக்கு அனில் அம்பானி கூட ஆரம்பிக்க இருந்த வியாபரமும் கை நழுவி போய் இருப்பதாகம் சொல்லி இருக்கிறார்.கடைசி சில பக்கங்களில்அவர் கதறி இருப்பதாகவும் அதை படிப்பவர்கள் குசேலன் படம் பார்த்த நிலைக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பொடியன் சஞ்சய் சொல்கிறார்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: ஆர்குட்டும் அதன் பயன்களும்

ஆசிரியர்: மங்களூர் சிவா

பக்கம் : 278

பதிப்பகம்: ஜெர்மன் புக் டெப்போ

விமர்சனம்: இதுவரை ஆர்குட் கண்டுபிடித்த google கூட இந்த அளவுக்கு அதன் பயன்பாடுகளை பற்றி தெரிந்து வைத்து இருக்குமா என்று என்னும் அளவிற்க்கு ஆசிரியர் ஆர்குட்டின் பயன்பாடுகளை பற்றி இதில் விளக்கமாக எழுதி இருக்கிறார், ஆர்குட்டின் மூலம் பெண் தேடும் டெக்னிக்கை பற்றி இவர் எழுதி இருப்பதை படிச்சால் சாதி டாட் காம், மேட்டரிமோனியல் டாட் காம்போன்ற தளங்களை பயன்படுதுவோர் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்று எதிர்ப்பார்க படுகிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: கேள்வியும் நானே பதிலும் நானே படிப்பவனும் நானே

ஆசிரியர்: டோண்டு

பக்கம்: 232

வெளியீடு: டோண்டுராகவன் பதிப்பகம்.

விமர்சனம்: கேள்விக்கேட்டு பதில் சொல்வது எப்படி அதை படிப்பது எப்படி என்று பலஉதாரணங்களோடும், பல மொழிகளோடும் வெளிவர இருக்கும் புத்தகம்.இலவசமாகசொந்த காரில் டோர் டெலிவரியும் செய்யப்படும்.

*******************************&&&&&&*******************************
புத்தகம்: பாலபாதிக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளும் வேண்டுதல்களும்.

ஆசிரியர்: ஆசிப் மீரான்

பக்கம்: 1000323

பதிப்பகம்: பா.குக.ச பதிப்பகம்

இலவச இனைப்பு: லக்கி, குசும்பனிடம் சொன்ன ஜோக்குகள்.

விமர்சனம்: கல்யாணம் செய்ய இருக்கும் பாலபாரத்திக்கு வலையுலக மக்களும்,பொதுமக்களும் செய்யவேண்டிய கடமைகளும், வேண்டுதல்களும் பற்றி எழுதி இருக்கிறார்புத்தகம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது கடமைகள் தனியாகவும், வேண்டுதல்கள் தனியாகவும் இருப்பதால் இருவர் ஒரே சமயத்தில் படிச்சு முடிச்சு கடமை, வேண்டுதல்களை நிறைவேற்றலாம்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: தொடர் விளையாட்டு ஆரம்பிப்பது எப்படி?

ஆசிரியர்: சர்வேசன்

பக்கம்: 140

பதிப்பகம்: ICCI

விமர்சனம்: இதுவரை கபடி,பம்பரம், கில்லி, கோலிக்கு மாற்றாக ஜென்டில்மேன் படத்தில் செந்தில் கண்டுபிடித்த விளையாட்டுக்களான டிக்கி லோனா, ஸ்பூன்லிங் விளையாட்டுக்களேமாற்றாக இருந்தன அந்த குறையை போக்கும் வகையில் புது புது தொடர்விளாயாட்டுக்களை கண்டுபிடித்து கொஞ்சம் நஞ்சம் வேலை பார்ப்பவர்களையும் இந்த தொடர்விளையாட்டில் கோத்துவிடுவது எப்படி என்று விளக்கமாக எழுதி இருக்கிறார் இதுவரை தான் கண்டுபிடித்த விளையாட்டுகள் லிஸ்டையும் கொடுத்து இருக்கிறார்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: கடிதம் எழுதினா குத்தமா?

ஆசிரியர்: வெட்டிபயல் பாலாஜி

பக்கம் : 4 மெயில்கள்

மறு பதிப்பகம்: சாருநிவேதிதா

விமர்சனம்: கடிதம் எழுதி அதுக்கு பதில் வரவில்லை என்று திரும்ப கடிதம் எழுத நினைப்பவர்களுக்கும் , பதில் எழுதாதவர்களுக்கும் சாட்டையடி கொடுக்கும் வகையில் பல இடங்களில் பஞ்ச் டயலாக்கோடு எழுதி இருக்கிறார். கடித்தில் ஸ்டாம்ப் ஒட்டாமல் கடிதம் போய் சேரும் முன் பதில் கேட்டு கடிதம் எழுதிவிட கூடாது என்றுபல நுனுக்கமான குறிப்புகளையும் கொடுத்து இருக்கிறார்.


*******************************&&&&&&*******************************
புத்தகம்: வெள்ளை அறிக்கை விடுவது எப்படி?

ஆசிரியர்: நாமக்கல் சிபி

பக்கம்: 0

பதிப்பகம்: ஒயிட் பேப்பர் பிரஸ்

விமர்சனம்: ஒன்னும் கிடையாது(அவர் அறிக்கை போலவே )

*******************************&&&&&&*******************************

புத்தகம்: அன் செட்டில்ட் உமனோடு செட்டில் ஆகுவது எப்படி?

ஆசிரியர்: குஜால் சுந்தரி செல்லா

பக்கம் : 100

வெளியீடு: தமிழ்மண பூங்கா அச்சகம்

விமர்சனம்: அன் செட்டில்ட் உமனோடு செட்டில் ஆகுவது, கத்தி இன்றி பாலின் அறுவை சிகிச்சை இன்றி பெண்ணாக மாறுவது எப்படி என்றும் கூடுதலாக இந்த புத்தகத்தில்ஆசிரியர் விளக்கமாக விளக்கி இருக்கிறார், அது போல் பல பதிவர்கள் எழுதிய காதல் ரசம் சொட்டும் கடிதங்களையும் பொதுவில் வைக்கிறார். யார் யார் கடிதங்கள் அதில்வரபோகின்றனவோ என்று கலக்கத்தில் பலர் இருக்கிறார்கள். புத்தகம் வந்ததும் பல பதிவர்கள் டவுசர் கழட்டபடுவது உறுதி.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: வேளச்சேரி பயனக் குறிப்புகள்

ஆசிரியர்: CVR

பக்கம்:150

வெளியீடு: யுவான் சுவாங் பதிப்பகம்

விமர்சனம்: சைதாப்பேட்டையில் இருந்து வேளச்சேரி சென்று வந்த அனுபவத்தையும் போகும் வழியில் இருந்த குண்டு பல்பு, டியுப் லைட்டு, போஸ்ட் மரம் என்று அனைத்தையும் படங்களோடும் ஆசியர் இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார், இந்த புத்தகம் யுவான் சுவாங் பயன குறிப்புகளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க படும் என்று இப்பொழுதே தகவல்கள் கசிகின்றன.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: மொக்கை டூ குபீர் இலக்கியவியாதி

ஆசிரியர்: தம்பி உமா கதிர்

பக்கம் :232

வெளியீடு: அண்ணாச்சி பதிப்பகம்

இலவசம்: புத்தகத்தை ஆட்டை போடுவது எப்படி?

விமர்சனம்: மொக்கை போடும் பலர் தமிழையும் , தமிழ் வலையுலகையும் நாறடித்து வருவதாகவும் அவர்களை மொக்கையில் இருந்து இலக்கியவாதி ஆக்குவது எப்படி என்றும்ஆசிரியர் விளக்கமாக எழுதி இருக்கிறார். இலவச புத்தகத்தில் அய்யனார், அண்ணாச்சியிடம் இருந்து தான் ஆட்டை போட்ட புத்தங்களையும் அதை ரீசேல் செய்ததையும் விளக்கமாகஎழுதி இருக்கிறார், இதை படிப்பவர்களிடம் இருந்து மற்றவர்கள் புத்தங்களை காப்பது மிகவும் சிரமமான காரியமே!

*******************************&&&&&&*******************************
புத்தகம்: தியேட்டரை விட்டு வெளியே வரும் முன் பதிவு போடுவது எப்படி?

ஆசிரியர்: பினாத்தல் சுரேஷ்

பக்கம் :121

வெளியீடு: தசாவதார பதிப்பகம்

விமர்சனம்: எல்லோரும் மொக்கை என்று சொல்லும் படங்களை சூப்பர் என்று எழுதுவதும், எல்லோரும் சூப்பர் என்று சொல்லும் படங்களை மொக்கை என்று சொல்லுவதும்,10 மணிக்கு முடிந்த படத்துக்கு 10.01 க்கு பதிவு போடுவது எப்படி என்று விளக்கமாக எழுதி இருக்கிறார். இனி படம் பார்க்க செல்பவர்கள் கையில் லேப் டாப்போடு செல்வதுஉறுதி.

*******************************&&&&&&*******************************
புத்தகம்: சமையல் மூலம் கொலைகள்

ஆசிரியர்: தூயா

பக்கம்:424

வெளியீடு: மாங்காய் பதிப்பகம்

விமர்சனம்: கத்திரிக்காய் முதல் கையில் கிடைக்கும் பேப்பரை வரை அனைத்தையும் வைத்து சமைப்பது எப்படி என்று இந்த புத்தகத்தில் ஆசிரியர் எழுதி இருக்கிறார்,சமைக்கும் பொழுது நெருப்பு சுட்ட அனுபவத்தை படிக்கும் பலர் கதறி அழபோவது உறுதி. இந்த புத்தகத்துக்கு வித்தியாசமாக இலவச இனைப்பு இந்த புத்தகத்தை வாங்காதவர்களுக்கு தூயா சமைத்த ஸ்லோ பாயாசம் ஒரு கப்.

*******************************&&&&&&*******************************
புத்தகம்: விடாது லக்கி

ஆசிரியர்: பெயரிலி

பக்கம்:432

மொழி:பார்ஸி

இலவசம்: தமிழ் டிக்ஸ்னரி

விமர்சனம்: லக்கியும் அவரின் மறுபக்கமும் என்று விளக்கமாக எழுதி இருக்கிறார் ஒரு சில இடங்களில் தமிழிலும் எழுதி இருக்கிறார்.

*******************************&&&&&&*******************************
புத்தகம் : சிவபுராண கதை 45

ஆசிரியர்: ஜ்வோராம் சுந்தர்

பக்கம்: 45

வெளியீடு: அஞ்சரகுள்ள வண்டி பதிப்பகம்

இலவசம்: காமக்கதைகள் 45

விமர்சனம்: ஆசிரியர் இலவச புத்தகத்தை வெளியீட்டால் *** வரும் என்பதற்காக சிவபுராணம் புத்தகத்தை வெளியிட்டு அதோடு இலவசம் என்ற பெயரில் காமக்கதைகளை எழுதி இருக்கிறார்,இது வெளிவந்தால் இதை தமிழ்மண முகப்பில் இருந்து தடுப்பது எப்படி என்று பலர் ரூம் போட்டு யோசிக்க வாய்பு இருக்கிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: இரண்டே நாட்களில் பாஸ்போர்ட் வாங்குவது எப்படி?

ஆசிரியர்: அய்யனார்

பக்கம் :259

வெளியீடு : இந்திய அரசு பதிப்பகம்

விமர்சனம்: விரைவில் பாஸ்போர்ட் வாங்குவது எப்படி என்றும், அதுக்கு செய்யவேண்டியவை எவை எனவும் ஆசிரியர் விளக்கமாக எழுதி இருக்கிறார். புதிதாய் கல்யாணம் ஆகி சீக்கிரம் மனைவியை வெளிநாடு அழைத்து செல்ல இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கும் ஆசிப் அண்ணாச்சி சொல்கிறார்.

*************************************************
சிறப்பு வெளியீடு ஆடியோ:

ஆடியோ: ரீமிக்ஸ் செய்வது குற்றமே!

ஆசிரியர்: கானா பிரபா

பகுதி: 3 கேசட்

பதிப்பகம்: பிரமீட் சாய்மீரா

விமர்சனம்: இப்பொழுது வரும் பாட்டுகளை பற்றியும், ரீமிக்ஸ் மூலம் அவர்கள் செய்யும் கொலைகள் பற்றியும் இவர் சொந்தமாக ஒரு பாட்டு எழுதி பாடி இருக்கிறார்.கேட்பவர்கள் கதிகலங்க போவது உறுதி என்று பலர் சொல்கிறார்கள்.

சிறப்பு வெளியீடு வீடியோ:

வீடியோ: எப்படி குறும்படம் எடுக்ககூடாது!

இயக்குநர்:உண்மை தமிழன்

நேரம்: 3 மணி நேரம்

தயாரிப்பு: ரொம்ப நல்லவன் புரோடக்ஸன்

வெளியீடு: கோவிந்தா இன்டர் நேசனல்

விமர்சனம்: இதை பார்த்துவிட்டு லக்கி எழுதுவார் அதுவரை வெயிட்டீஸ்

Sunday, August 10, 2008

18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்!!!

காலையில் குட்மார்னிங் என்று சொல்லி வரும் மெயில் இந்த படம் இருந்தா அந்த நாளு வெளங்குமாய்யா!!! எனக்கு என் நண்பர் சங்கர் அனுப்பினார், அதனாலா நானும் உங்களுக்கும் இந்த படத்தை போட்டு குட்மார்னிங் கொலைவெறியோடு சொல்லிக்கிறேன்.

(இதை செய்பவர்கள் அதிஷா, ராப் இருவரும்தான் என்பது கூடுதல் தகவல்)

Saturday, August 9, 2008

பாலபாரதிக்கு கல்யாணமுங்கோ!!!! பா.க.ச பதிவு

தல நேற்று ஒரு பதிவு போட்டு இருந்தார் அதில் கடைசியாக இந்த வருட இறுதிக்குள் கல்யாணம் செஞ்சுடலாம் என்று இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

நானும் இதை உண்மை என்று நம்பி அவருக்கு போன் செஞ்சு தல சீக்கிரம் தேதியை சொல்லுங்க என்று சொன்னேன் அதுக்கு என்னய்யா சொல்லிடலாம் என்றார்.


பின்பு ஆசிப் அண்ணாச்சியுடன் பேசும் பொழுது இதுபோல தல கல்யாணத்தை பற்றி ஒரு பதிவு போட்டு இருக்கிறார் என்றேன். அதுவரை ஒழுங்கா பேசிக்கொண்டு இருந்த அண்ணாச்சி எலேய் உனக்கு ஒழுங்கா பதிவுதான் எழுத வராது என்று நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா படிக்கவும் வராதாடா என்றார் கோபமாக:((


ஏன் என்று கேட்டதற்கு எலேய் குழந்தைக்கு காது குத்துன்னு சொல்லி இருப்பாரு ஒழுங்கா பாரு என்றார்.

நானும் திரும்ப ஒரு முறை பார்த்துவிட்டு இல்லை அண்ணாச்சி கல்யாணம் என்றுதான் போட்டு இருக்கிறார் என்றேன்.


அண்ணாச்சி டென்சன் ஆகி எலேய் ஒருத்தருக்கே எத்தனை முறைதான் டா கல்யாண மொய் வைக்கிறது. என்று டென்சன் ஆனார்.
(இருந்தாலும் அத்தனை டென்சனுக்கு இடையில் சென்னையில் லக்கியிடம் சொன்ன ஜோக் போல பாலபாரதியை பற்றியும் ஒன்னு சொன்னார், அது என்ன என்று தெரியவேண்டுபவர்கள் அண்ணாச்சியை கேளுங்க!!!)

பின்புதான் அதே பதிவை படிக்கும் பொழுது அதில் ஒரு உள்குத்துவை தல சூசகமாக சொல்லி இருக்கிறார்.

கீழே இருக்கும் போட்டோவை பாருங்க




அதாவது பதிவின் முதல் பத்தியிலேயே சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று ஒரு வரியை சேர்த்து அதை போல்ட் ஆக்கி, பின் கடைசி பத்தியில்
இந்த வருட இறுதிக்குள் தேதியை சொல்கிறேன் என்றால் என்ன அர்த்தம்.
மீதியை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன் இம்புட்டுதான் குறிப்பா சொல்லமுடியும்....
பா.க.ச வெறியர்களுக்காக கமெண்ட் மாடுரேசன் நீக்கப்படுகிறது.

Sunday, August 3, 2008

மக்களே உசார் உசார் புது வித வைரஸ் வருகிறது

இதுவரை மக்கள் கூடும் இடங்களில் மட்டுமே நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த தீவிரவாதிகள், உலகிலேயே முதல் முறையாக புதுவித வைரஸ் மூலம்...

மீதி செய்தி கடைசியில்

காட்சி 1- கதிர் வீடு

பரபரப்பாக அந்த அறை முழுவதும் தேடிக்கொண்டு இருந்தான் கதிர் எங்கே இங்க வெச்சு இருந்தது எங்கே போய் இருக்கும்? ராத்திரி எல்லோரும் படுத்த பிறகுதானே பார்த்துவிட்டு யாரு கண்ணிலும் பட கூடாது என்று இங்க ஒளிச்ச்ய் வைச்சிருந்தேன்.அப்படி இருந்தும் எப்படி? ச்சே விடியகாலையில எல்லோரும் கல்யாணத்துக்கு போறாங்களேன்னு அலட்சியமாக இருந்தது எவ்வளோ பெரிய தப்பாக போய் விட்டது!

ஒரு வேளை வேலைக்காரி எடுத்து போய் இருப்பாளோ இருப்பாளோ? பின் பக்கத்து வீட்டு ஸ்கூல் பையன் காலையில் பேப்பர் எடுக்க வந்தான் ஒருவேளை அவன் எடுத்து போய் இருப்பானோ!அய்யய்யோ அப்படின்னா அவன் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்னை பற்றி என்னா நினைப்பார்கள்! அம்மாவோடு வேற நல்லா பேசிக்கிட்டு இருப்பார்களே!இல்லையே அவன் திரும்ப பேப்பர் கொடுக்கவரும்பொழுது ஒண்ணும் அவனிடம் ஒரு பதட்டம் இல்லையே!

காட்சி 2- பாபு வீடு

டேய் பாபு! உன்னை எல்லாம் என்னமோ நினைச்சுக்கிட்டு இருந்தேன்! நீ...! இப்படி மட்டமான பையனாக இருப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை!
டேய்..! வயசுக்கு வந்த தங்கச்சி, இரண்டு வயசே ஆனா அக்கா குழந்தை, வயசான பாட்டி, தாத்தா எல்லாம் வீட்டில் இருக்கும் பொழுதுஎப்படிடா இப்படி செய்ய உனக்கு மனசு வந்துச்சு.

அம்மா.... தப்பா....நினை...

ச்சே பேசாதடா உன்னை பார்க்கவே அருவெறுப்பா இருக்கு.

தலையில் கை வைத்துகொண்டு உட்கார்ந்த பாபு ,கோபங்கொண்டு ஒரு முடிவோடு பையில் அதை எடுத்து வைத்துகொண்டு பாக்ஸரை ஒரு உதை உதைத்தான்... டுர்ர்ர்ர்ர்ர்ர் என்று பயங்கர வேகத்தோடு உறுமியபடி கதிர் வீட்டை நோக்கி சென்றான்.

காட்சி 3 - கதிர் வீடு

ச்சே..! உன்னை எல்லாம் நண்பன் என்று சொல்லிக்கவே வெட்கமாக இருக்கு,எப்படிடா இப்படி உனக்கு மனசு வந்தது என்று DVDயை கதிர் முகத்தில் தூக்கி எறிந்தான் பாபு. அட்டையில் "இருமுனை தாக்குதல்" குழந்தைகளுக்கான ஆங்கில படத்தின் தமிழ் பெயர், உள்ளே இருந்து கீழே விழுந்தது "அந்த" DVD.

மீதி செய்தி:



புதுவித வைரஸ் மூலம்... CD,DVDக்களை போட்டதும் டீவி, DVD பிளேயரை நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்து எடுத்துக்கொள்கிறது அதனால் அந்த அந்த DVDக்களில் இருக்கும்படம் ஓடி முடியும் வரை சத்தத்தை குறைக்கவோ கூட்டவோ, அல்லது நிறுத்தவோ முடிவது இல்லை, இதில் கொடுமையின் உச்சகட்டமாக குருவி, குசேலன் ஆகிய படங்களை இரு முறை பதிவு செய்யப்பட்ட DVDக்களையும் மாற்று பெயர்களில் உலவ விட்டு இருக்கிறார்கள்.

இதையடுத்து தமிழகஅரசு போர்கால அடிப்படையில் கீழ்பாக்கம் மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்களையும் படுக்கைகளையும் போட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Saturday, August 2, 2008

இலவச சாப்பாடு, இலவச புத்தகம், இலவச DVD வேண்டுமா உங்களுக்கு???

வியாழன் அன்று குசேலன் கும்மியதில் தலைவலியோடு வெளியே வந்த பிறகு நல்லா செம சாப்பாடு சாப்பிட்டுவிட்டு படுத்தா நல்லா இருக்கும் போல இருந்ததால் ஆசிப் அண்ணாச்சிக்கு போன் போட்டு அண்ணே பதிவர் மீட்டிங் என்று சொன்னீங்கள்ள இதோ வருகிறோம் என்று பதிவர் சந்திப்பில் கலந்துப்பது போல் சென்றோம்.



விஜய் டாக்டர் பட்டத்தை திரும்ப வாங்கி கொண்டதாக அய்யனார் உரையாற்றினார். உரை முடிந்ததும் என்னை எழுப்பி சாப்பிட அழைத்து சென்றார்கள்.



மலையாளி கடையில் முதன் முறையாக அருமையான சாப்பாடு

நாங்கள் சாப்பிட்ட மெனு



ஸ்விட் கார்ன் சிக்கன் சூப்

டிராகன் சிக்கன்

சில்லி சிக்கன்

சிக்கன் தந்தூரி மசாலா

எக் புர்ஜ்

ஆப்பம்

பரோட்டா

7 UP



பின் வழக்கம் போல அண்ணாச்சி தன் நூலகத்தை பதிவர்களுக்காக திறந்து விட நான் 2 புத்தகம் என் மனைவிக்கு 4 புத்தகம் ஆகமொத்தம் 6 புத்தகம் அவருக்கு தெரிந்தும் அவருக்கு தெரியாமல் அய்யனாரை போல் சட்டைக்குள் மறைத்து 4 புத்தகம் என்று எடுத்துவந்தோம்.

பின் தம்பி உமாகதிரு போன் செஞ்சு சந்திப்பு பற்றி கேட்டான் நானும் நாங்க சாப்பிட்ட ஐட்டத்தை பற்றி ஒன்னுவிடாம கரெக்ட்டாக சொல்லிமுடித்தேன் பின்பு நான் எடுத்துவந்த புத்தங்களை பற்றி சொன்னேன், தம்பி டேய் நீ படிச்சு முடிச்சதும் புத்தகத்தை திருப்பி அவரிடம் கொடுத்து விடாதே என்றான்.

ஏன் என்று கேட்டதற்கு நீ திருப்பி கொடுத்து புது பழக்கத்தை ஆரம்பிச்சு வெச்சுடாதே பின் அதவெச்சு என்னிடம் கொடுத்த புத்தகத்தை எல்லாம் கேட்க ஆரம்பிச்சுடுவார். இந்த கோவிலுக்கு எல்லாம் வசூல் செய்யும் பொழுது இத பாருங்க பக்கத்துவீட்டுகாரர் 50 ரூபாய் கொடுத்து இருக்கார் நீங்களும் கொடுங்க என்பது போல் இத பாருடா குசும்பன் எடுத்து போன 6 புத்தகத்தில் 1 புத்தகத்தை திருப்பி கொடுத்து இருக்கான், நீயும் கொடு என்று கேட்பார் அதனால் கொடுத்துவிடாதே என்றார்.

அப்ப DVDயை கொடுக்கவா என்று கேட்டதற்கு அடேய் அண்ணாச்சி ரொம்ப நல்லவரு அடுத்த முறை போனாலும் புது புது புத்தகமும் DVDயும் கொடுத்துதான் அனுப்புவார் அதனால் நீ திருப்பி கொடுக்கவேண்டாம் என்றார்.


இந்த காலத்திலும் சாப்பாடும் போட்டு, படிக்க புத்தகமும் கொடுத்து, பார்பதற்கு DVDயும் கொடுத்து, வழி செலவுக்கு 1000 Dhs முன் பணமும் கொடுக்க இந்த காலத்தில் யாரு அண்ணாச்சி இருக்கா! அண்ணாச்சி நீங்க ரொம்ப நல்லவருங்க!!!

அதுக்கு நன்றிகடனாக உங்களுக்கு ஒரு ஐடியா!உங்கள் புத்தகங்களை காப்பாற்றுவதற்கு

இனி புத்தங்களை திருப்பி கொடுக்காதவர்களுக்கு தல பாலபாரதி எழுதிய புத்தகத்தை ஒரு பார்சல் அனுப்புவேன் என்றும் அதை படிக்காமல் அலட்சியம் செய்த பாலவாக்கம் பாலு இரத்தம் கக்கி செத்தான் என்றும்
படிச்ச சின்னமலை சித்தப்பு சித்தம் கலங்கி அலைகிறார் என்று மிரட்டுங்க அப்பதான் உங்க புத்தம் உங்களுக்கு திரும்பி வரும்.

Friday, August 1, 2008

குசேலன் - குப்பைமுத்துசாமி


படத்துக்கு இதுக்கு மேல் விமர்சனம் தேவை இல்லை என்பதால் நாம் படத்தின் பட்ஜெட் பற்றி பார்க்கலாம்.

படத்துக்கு மொத்தம் செலவான தொகை ரஜினி சம்பளம் இல்லாமல் 1 கோடி ரூபாய் என்றால் 98 லட்சம் ரஜினியின் மேக்கப்புக்கும் கிராப்பிக்ஸ்க்கும்
செலவு ஆகி இருக்கிறது.


மீதி ஒரு லட்சம் மீனாவுக்கு புது புடவை வாங்கவே செலவாகி இருக்கிறது.
சன் டீவியில் செய்தி வாசிப்பவர்கள் போல் காட்சிக்கு காட்சி புது புடவையில் வலம் வருகிறார் ஆனால் வீட்டில் சமைக்க அரிசியும் ,டீ போட சர்கரையும் இல்லையாம்.


வீட்டுக்கு வந்த சிஸ்டர்கள் சர்கரை இல்லாததால் பிளாக் டீ போட சொல்லிவிட்டு அதை மீனா எடுத்து வரும் பொழுது குடிக்காமல் சென்றவகையில் மூன்று பிளாக் டீ க்கான செலவு வீன்.

வாசுவை ஒரு இடத்தில் பாராட்டியே ஆகவேண்டும் மீனாவுக்கு காஸ்டியும் செலவு அதிகம் ஆனதால் நயன் தாராவுக்கான காஸ்டியும் செலவை குறைத்ததால் அவரை பாராட்டியே ஆகவேண்டும். நயன் தாராவும் பில்லாவில் நடிச்சதில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை போல, காரில் இருந்து இறங்கியதுமே தொடை தெரிய கார் மேல் காலை தூக்கிவைத்து கொண்டு கொடுக்கும் போஸ் அட போட வைக்கிறது.

முக்கிய குறிப்பு : படத்தில் நயன்தாராவுக்கு என்று ஒரு தனி பாடல் இருக்கிறது அந்த மழை பாடலை வெளியில் சூட் செய்ததுக்கு பதில் அதே டிரஸ் போட்டு பாத்ரூம் சவரில் குளிக்கவிட்டு இருந்தால் மலையாள பிட் படம் பார்த்தது போல் இருந்து இருக்கும் அது மட்டும் இன்றி மழைக்காக ஆன செலவும் அதிகம் ஆனதால் இங்கு வாசுக்கு ஒரு குட்டு.
இந்த பாடலின் பொழுது நான் கண்ணை மூடிக்கிட்டேன், மனைவி அருகில் இருந்ததால்.

மிகவும் இயல்பாகவும் அருமையாகவும் நடிக்க கூடிய எம் எஸ் பாஸ்கரை வீண் அடித்தது மட்டும் இன்றி அவருக்கு ஒரு விக் கொடுத்து மேக்கப் செலவை அதிகபடுத்தி இருக்கிறார்.

அண்ணாமலை பார்ட் 2 என்று சொல்ல மட்டும் நிழல்கள் ரவியை நடிக்க கூப்பிட்டது.

ரஜினிக்கு போட்ட மேக்கப்பை கொஞ்சம் கூடவோ அல்லது குறைச்சோ போட்டு இந்த பசுபதி போல நடிக்கவெச்சு இருந்தால் பசுபதிக்கான சம்பள
செலவை குறைச்சு இருக்கலாம். தேவை இல்லாமல் பசுபதி இந்த படத்தில் ஒரு இடைசொருகல்.

படத்தின் சில கமெடிகள் :
இந்த பாடல் 75 ஆண்டு தமிழ் சினிமாவுக்கு என்று டெடிகேட் செய்து தமிழ் சினிமாவையே அசிங்க படுத்தியது.

ரஜினி அரபி போல் டிரஸ் போட்டுக்கிட்டு, விஜயகாந் போல் ஒரு மேடை மீது நின்று கொண்டு பேசுவது போல் காட்டுவார்கள் அதை பார்க்கும் கூட்டம் வேஸ்டி, துண்டோடு நிற்க்கும்.
சந்திரமுகி வேட்டையன் தன் தலையை தானே அறுத்துகொண்டபின் தலை மட்டும் தனியாக சுற்றி வரும், தலை இல்லாத முண்டம் மட்டும் ஓடிவிளையாடும் அதை பார்த்த நயன் தாரா மயங்கி விழுவார் அப்படி விழுந்ததும் வாசு கட் டேக் ஓக்கே என்பார்.

படத்தின் காமநெடிகள்:
பேரிச்சை பழம் சாப்பிட கொடுத்து விட்டு டேய் கொட்டைய எடுத்துவிட்டு சாப்பிடு மூன்றாகி விட போகிறது என்று சொல்வது.

நயன் தாரா ரூமில் இருக்கும் வடிவேலு நயன் தாரா டிரஸ் சரி செய்யதை பார்த்துவிட்டு மீசை நீள்வது போல் காட்டுவது.

லிவ்விங்ஸ்டன் 9 வது அதிசயத்தை பார்கிறாயா என்று வேஸ்டியை தூக்குவது போன்ற காம நெடிகள் அதிகம்.

ஆண்டவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்--- ரஜினி.
ரஜினியின் நண்பர் -வாசு