Monday, August 25, 2008

போட்டி பரிசு முடிவுகள் - நன்றி லக்கி + சஞ்சய்

முதல் பார்வையில் என்னைக் கவர்ந்த கமெண்டுகள் :

தம்பி said...
கோவி:இந்த கட்டு கட்றாளுங்க. நமக்கு எதாச்சும் கெடைக்குமா...தீபா: என்னடி பின்னாடிருந்து ஒருத்தன் தட்டையே பாத்துகிட்டுருக்கான். திடீர்னு தட்ட தூக்கிட்டு ஓடிரபோறான். சீக்கிரம் சாப்பிடுங்க.

கார்க்கி said...
புகைப்படக்காரர் : கொஞ்சம் திரும்பி நில்லுங்க பெரியவரே(கோவி.கண்ணனைத்தான்)!! உங்க பின்னழக படம் புடிச்சிட்டு பார்த்து பார்த்து ரசிக்கிறாங்க அந்த ரெண்டு பொண்ணுங்களும்..அப்படி என்னத்தான் இருக்குனு பார்ப்போம்..

கோவி.கண்ணன் said...
கோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போதாவது நம்புங்க !:)

வெண்பூ said...
தீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா? தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌

பரிசல்காரன் said...
தேவதர்ஷினி: (ஃபோட்டோ எடுக்கும் தங்கமணியிடம்)"நீங்க குடுத்துவெச்சவங்க மேடம்! கண்ணன் அருமையா சமைச்சிருக்காரு!"


ஆசிப் மீரான் said...
தீபா வெங்கட்: ஏன் சார் அவ்வளவு பின்னால நிக்குறீங்க? பக்கத்துலேயே நிக்கலாமே?ப்ரியத்ர்ஷினி: அவர்தான் மூணு அடி தள்ளி நிக்குறார். அவர் தொப்பை என்னமோ உனக்கு மூணு அங்குல தூரத்துலதான் இருக்கு

சங்கர் said...
சிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க?

விஜய் ஆனந்த் said...
தயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ????


இந்த கமெண்டுகள் ஓரளவுக்கு புன்னகைக்க வைத்ததே தவிர மனம்விட்டு நகைக்க வைக்கவில்லை என்பது சோகம் தான் :-(

இருந்தாலும் இதிலிருந்தும் சிலவற்றை வடிகட்ட முயற்சிக்கிறேன். இரண்டாவது சுற்றுக்கு வந்திருக்கும் கமெண்டுகள் :



தம்பி said...
கோவி:இந்த கட்டு கட்றாளுங்க. நமக்கு எதாச்சும் கெடைக்குமா...தீபா: என்னடி பின்னாடிருந்து ஒருத்தன் தட்டையே பாத்துகிட்டுருக்கான். திடீர்னு தட்ட தூக்கிட்டு ஓடிரபோறான். சீக்கிரம் சாப்பிடுங்க.

கோவி.கண்ணன் said...
கோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போதாவது நம்புங்க !
:)

வெண்பூ said...
தீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா? தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌

சங்கர் said...
சிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க?

விஜய் ஆனந்த் said...
தயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ????

ஓக்கே ஃபைனல் ரவுண்டு. இதுபோல போட்டோக்களுக்கு ஃபுட் நோட்டு எழுதுவது ஒரு பெரிய கலை. நகைச்சுவையாக பெரியளவில் நம்மால் சிந்திக்க முடிந்தால் கூட நறுக்கென்று ஒரே லைனில் அடித்தாடுவதில் தான் அடுத்தவர்களை கவரமுடியும். அவ்வகையில் இப்போட்டிக்கு வந்த கமெண்டுகளிலேயே என்னை அதிகம் கவர்ந்தது :


சங்கர் said...
சிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க?

ஆனால் சங்கர் என்பவர் அதர்-ஆப்ஷனில் பின்னூட்டம் போட்டிருப்பதால் அவருக்கு பரிசளிப்பதில் சிரமம் ஏற்படலாம். பல பேர் அந்த கமெண்டை போட்டது தாங்கள் தான் என்று Claim செய்யமுடியும் என்பதால் முதல் பரிசுக்கு தகுதிபெற்ற கமெண்டாக இருந்தபோதிலும் இதுபோன்ற தடாலடிப் போட்டிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியை அந்த கமெண்டு இழக்கிறது :-(


ஓரிரு வாரங்களாக தினகரன் வாசிப்பவர்கள், சன் டிவி செய்திகள் பார்ப்பவர்கள் நிஜமாகவே இந்த கமெண்டை ரசிக்கமுடியும். அரசியல் ஜே.கே.ரித்தீஷ் ஆன தயாநிதியை கோவியாரோடு ஒப்பிட்டு கமெண்டிய விஜய் ஆனந்தின் டைமிங் சென்ஸுக்கு கட்டாயம் பரிசளிக்கலாம். இதுபோன்ற போட்டிகளில் டைமிங் சென்ஸ் மிக முக்கியம்.

விஜய் ஆனந்த் said...
தயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ????


சுய எள்ளல் ஒரு கலை. தன்னை தானே கலாய்த்துக் கொள்ளும் மனம் படைத்தவர்கள் பாக்கியசாலிகள். இந்த போட்டிக்கு கோவியாரே போட்டிருக்கும் கமெண்டும் பரிசுபெற தகுதியானது என்று எண்ணுகிறேன்.

கோவி.கண்ணன் said...
கோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போதாவது நம்புங்க !:)

ஒருவேளை கோவியாரின் கமெண்டு இந்தப் போட்டிக்கானது அல்ல என்றால் பரிசுபெற தகுதியான மற்றொரு கமெண்டு

வெண்பூ said...

தீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா? தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌..

பரிசினை வென்றவர்களுக்கும், போட்டியினை நடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

நடுவராக என்னை ஆக்கிவிட்டதால் போட்டியில் கலந்துகொள்ள இயலவில்லை என்பது எனக்கு வருத்தமே. இருப்பினும் நடுவர் பொறுப்பு தந்து எனக்கு பதவி உயர்வு தந்த குசும்பனுக்கு நன்றிகள். போட்டியின் ஒரு கமெண்டை கூட நேற்றுவரை நான் பார்க்கவில்லை, பார்க்க விரும்பவில்லை. போட்டிக்கு கமெண்டுகள் வந்துகொண்டிருக்கும் போதே பார்த்துவிட்டால் எந்த கமெண்டோடவாவ்து இம்ப்ரஸ் ஆகிவிடக்கூடிய ஆபத்து நடுவருக்கு இருப்பதால் இன்று தான் எல்லா கமெண்டையும் ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்தேன்.


என்னுடைய தேர்வு எல்லோருக்குமே திருப்தியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்
லக்கி


**************************&&&&&&&&&&&&&*******************

நன்றி லக்கி !
நடுவராக இருந்து அருமையாக தேர்வு செய்தமைக்கு. இதுக்கு உங்களின் போட்டோ கமெண்ட் அனுபவமும், சீரியஸ் பதிவுகளில் நீங்கள் போடும் கமெண்ட்ஸ்ம் இதுக்கு கைக்கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

போட்டி வைக்கலாம் என்றவுடன் புத்தங்களை யாரை விட்டு வாங்க சொல்வது என்று நினைவு வந்தவுடன் நினைவில் வந்தவர் தொழிலதிபர். சஞ்சய்(மார்கெட் போன நடிகைகள் தங்கள் ஜாதகங்களை அனுப்ப வேண்டிய முகவரி sanjaygandhi@gmail.com), கேட்டதும் செஞ்சுடலாம் மாம்ஸ் என்றதோடு மட்டும் இன்றி இரண்டு தினங்களில் புத்தங்களை வாங்கி வைத்துக்கொண்டு நான் ரெடி மாம்ஸ் என்ற அவரின் பொருப்புக்கு மிக்க நன்றி.

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றிகள்.

**************************&&&&&&&&&&&&&*******************

பரிசாக இரண்டு புத்தங்கள் :
அதில் ஒன்றான பாலபாரதியின் புத்தகத்தை பரிசாக பெறுகிறார் வெண்பூ.

மீதி ஒன்றை சிறப்பாக என் கவனத்தை ஈர்த்த தம்பிக்கு லிவ்விங் ஸ்மைல் வித்யாவின் புத்தகம் பரிசாக கொடுக்கப்படுகிறது.

”வடிவேல் கோவி: நான் நிக்கிறேன்... நிக்கிறேன்... நிக்கிறேன்...ஒருமணி நேரமா நிக்கிறேன்... ஒருத்தி கூட திரும்பி பாக்கலயே”

***********************************************
பரிசாக பாலபாரதி புத்தகம் என்று நான் எழுதினால் அது பா.க.ச பதிவாக ஆகிவிடும் என்பதால் முன்பே சொல்லவில்லை. அதுமட்டும் இன்றி அப்படி சொல்லி இருந்தால் அண்ணாச்சி ஆசிப் இந்த பக்கம் வந்து இருக்கவே மாட்டார்:)))

வெற்றிப்பெற்றவர்கள் தொழிலதிபர். சஞ்சய்காந்தியிடம் பரிசுகளை வாங்கிக்கலாம்.

18 comments:

said...

//பரிசாக பாலபாரதி புத்தகம் என்று நான் எழுதினால் அது பா.க.ச பதிவாக ஆகிவிடும் என்பதால் முன்பே சொல்லவில்லை. அதுமட்டும் இன்றி அப்படி சொல்லி இருந்தால் அண்ணாச்சி ஆசிப் இந்த பக்கம் வந்து இருக்கவே மாட்டார்:)))//
ஹிஹி.. சரியான நக்கல் நாரயணன் மாமா நீங்க.. :))

said...

//ஆனால் சங்கர் என்பவர் அதர்-ஆப்ஷனில் பின்னூட்டம் போட்டிருப்பதால் அவருக்கு பரிசளிப்பதில் சிரமம் ஏற்படலாம். பல பேர் அந்த கமெண்டை போட்டது தாங்கள் தான் என்று Claim செய்யமுடியும் என்பதால் முதல் பரிசுக்கு தகுதிபெற்ற கமெண்டாக இருந்தபோதிலும் இதுபோன்ற தடாலடிப் போட்டிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியை அந்த கமெண்டு இழக்கிறது :-(//

....வட போச்சே.. :(

said...

//கேட்டதும் செஞ்சுடலாம் மாம்ஸ் என்றதோடு மட்டும் இன்றி இரண்டு தினங்களில் புத்தங்களை வாங்கி வைத்துக்கொண்டு நான் ரெடி மாம்ஸ் என்ற அவரின் பொருப்புக்கு மிக்க நன்றி//

ஹய்யோ.. ஹய்யோ.. நான் சொன்னதெல்லாம் உண்மைனு நெனைச்சிட்டிங்க போல.. சும்மா தமாசுக்கு சொன்னேன்:))

said...

:-)))

said...

அடப்பாவி என்னைய வச்சி காமடி கீமடி பண்னலையேன்னு வெளையாட்டுக்குக் கூட இனிமே நெனக்க முடியாமல் பண்ணிட்டியே.

:)

நகைச்சுவை துணுக்கு எழுதியவர்கள் அனைவருக்கும், பரிசுபெற்றவர்கள் அனைவருக்கும் என் சார்பில் மிக்க நன்றி !

விரைவில் சைடு போசில் ஒரு புகைப்படம் வலையேற்றி எனக்கு தொப்பை இல்லை என்று நிரூபித்துவிட்டே இனி பதிவு எழுதுகிறேன் !
:))))))))))

said...

//விரைவில் சைடு போசில் ஒரு புகைப்படம் வலையேற்றி எனக்கு தொப்பை இல்லை என்று நிரூபித்துவிட்டே இனி பதிவு எழுதுகிறேன் !
:))))))))))//
அதான் சிங்கை பதிவர் சந்திப்புல வயித்தை நல்லா உள்ள இழுத்து வச்சிட்டு உக்காந்த மாதிரி கஷ்டபட்டு ஒரு போட்டோ எடுத்து போட்டிருக்கிங்களே.. இதுக்கு மேல என்னாத நிரூபிக்க போறிங்க? :))

said...

அண்ணா பதிவு போட்டுட்டு தமிழ் மணத்துக்கு அனுப்ப மறந்துட்டீங்க. நான் அனுப்பிட்டேன். (இது வெளாட்டு தானே??)

said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்... என் படைப்பை(?) முதல் ரவுண்டிற்கு தேர்வு செய்த லக்கிகு என் நன்றிகள். இரண்டாம் ரவுண்டில் விலக்கிய லக்கிக்கு என் கண்டனங்கள்

said...

// கோவி.கண்ணன் said...
அடப்பாவி என்னைய வச்சி காமடி கீமடி பண்னலையேன்னு வெளையாட்டுக்குக் கூட இனிமே நெனக்க முடியாமல் பண்ணிட்டியே. //

மன்னிக்கனும் கொவி. சார், கவலை படாதீர்கள், நாம நோர்வேக்கே உடையமல் கொணந்தவர்கள்.

குசும்பனை புன்னகைக்க முயற்சித்தவர்களில் முதலில் வந்ததே முதல் பரிசு, [மீசைலே மண்படல, நெசமா]

நீண்டகாலம் வலைஉலகில் மேய்ந்தலும் குசும்பனை புன்னகைக்க முயற்சி செய்ததே பின்னூட்டம்.

இப்போ முகவரி இருக்கிறது இனிவரும் கலங்களில் பார்க்கலாம்.

said...

// கோவி.கண்ணன் said...
அடப்பாவி என்னைய வச்சி காமடி கீமடி பண்னலையேன்னு வெளையாட்டுக்குக் கூட இனிமே நெனக்க முடியாமல் பண்ணிட்டியே. //

மன்னிக்கனும் கொவி. சார், கவலை படாதீர்கள், நாம நோர்வேக்கே உடையமல் கொணந்தவர்கள்.

குசும்பனை புன்னகைக்க முயற்சித்தவர்களில் முதலில் வந்ததே முதல் பரிசு, [மீசைலே மண்படல, நெசமா]

நீண்டகாலம் வலைஉலகில் மேய்ந்தலும் குசும்பனை புன்னகைக்க முயற்சி செய்ததே முதல் பின்னூட்டம்.

இப்போ முகவரி இருக்கிறது இனிவரும் கலங்களில் பார்க்கலாம்.

said...

இதனால் எந்த பதிவர் சந்திப்புக்கும் வரக்கூடாது என்பது தெரிகிறது. சில ரகசியங்கள் வெளியாகிவிடும் ஆபத்து உள்ளது.

said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தானொரு சிறந்த நடுவர் என்பதை நிரூபித்துவிட்டார் லக்கி!

said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

அனைவருக்கும் நன்றி
அப்படியே வெண்பூவை தேடி கண்டுபிடித்து கொடுங்களேன்:)

தாமிரா சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை என்றாலும் ”பானை” உடைக்கப்படும்:)))

said...

எனக்கில்ல எனக்கில்ல
சொக்க ரெண்டு புத்தகமாச்சே

said...

//
தொழிலதிபர். சஞ்சய்(மார்கெட் போன நடிகைகள் தங்கள் ஜாதகங்களை அனுப்ப வேண்டிய முகவரி sanjaygandhi@gmail.com),
//

இது மேட்டர்
:))))))))))))))

said...

போட்டியின் பரிசு வந்து சேர்ந்தது. போட்டி நடத்திய குசும்பனுக்கும், தேர்வு செய்த லக்கிக்கும், பரிசை அழகாக பேக் செய்து அனுப்பிய சஞ்சய்க்கும் நன்றி..நன்றி..நன்றி...