Friday, August 15, 2008

பதிவர்கள் எழுதிக்கொண்டு இருக்கும் புத்தகங்கள்!!!

தமிழ்மணத்தில் பதிவர் புத்தகங்கள் என்று புது இடம் ஒதுக்கி இருப்பதும் , புத்தகம் எழுதி அதில் நம்முடைய பேரும் வரவேண்டும் என்று பகிரத முயற்சியில் பலர் இருக்கிறார்கள் யார் யார் என்ன என்ன புத்தகம் எழுதி கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு பார்வை.


புத்தகம் : தொழிலை மேம்படுத்த முத்தானான 30 ஆலோசனைகள்

ஆசிரியர்: லதானந்

பக்கம்: இதுவரை 2 பக்கம்

விமர்சனம்: தொழில் செய்பவர்கள் அல்லது ஆபிசில் கொஞ்சம் கூட வேலைப்பார்காதவர்கள் மனம் வேறு திசையில் வடக்கு,தெற்கு,கிழக்கு, மேற்கு இந்த திசை நீங்களாக வேறு திசையில் மனம் செலுத்துபவர்களின் மனம் திரும்ப தொழிலையை கவனிக்கும் பொருட்டு மிகுந்த அக்கரையுடன் எழுதி இருக்கும் புத்தகம். இதுவரை எழுதி இருப்பதை படித்த பலர் மனம் திருந்தி தொழிலையே விட்டு விட்டதாகவும் இது வெளிவந்தால் பலர் குடும்பத்தில் விளக்கு எரியும் என்றும் எதிர்ப்பார்க்க படுகிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: முத்தம் கொடுத்து கொலை செய்வது எப்படி?

ஆசிரியர்: பைத்தியகாரன்

பக்கம்:143 (I love you என்று வார்தைக்களின் எழுத்து எண்ணிக்கை)

பதிப்பகம்: கிழக்கு கீழ்பாக்க பதிப்பகம்

விமர்சனம்: கத்தியின்றி இரத்தம் இன்றி ஒரு கொலை செய்வது எப்படி என்று இந்த புத்தகத்தில் ஆசிரியர் பைத்தியகாரன் விளக்கமாக எழுதி இருக்கிறார், இதை படிக்க போகும்பலர் பத்து நாட்கள் பல் விளக்காமல் இருந்து பாலபாரதிக்கு முத்தம் கொடுத்து கல்யாணவாழ்த்து சொல்லபோவது நிச்சயம் என்று செய்திகள் கசிகின்றன.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: 10 நாட்களில் ஹிந்தி பிகரை மடிப்பது எப்படி!

ஆசிரியர்: ஆடுமாடு

பக்கம் : 15

வெளியீடு : கலைஞர் பதிப்பகம்

விமர்சனம்: ஹிந்தி தெரியாமல் ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனை கைப் வரை கோட்டை விட்ட என்னை போன்ற சிலரின் துயர் துடைக்கும் பொருட்டு ஆடுமாடு அவர்கள் எழுதி கொண்டு வரும் புத்தகம் இது, இது வெளிவந்த பிறகு பலர் ஹிந்தி பிளாக் ஆரம்பித்து ஹிந்தியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தபோவது உறுதி. அதை படிக்கும் பல ஹிந்தி பிகர்கள் அவர்கள் வலையில் விழலாம் என்று எதிர்ப்பார்க படுகிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம் : போண்டுவை நோண்டுவது ஏன்?

ஆசிரியர்: லக்கி லுக்

பக்கம்:100

பதிப்பகம்: விகடன்

விமர்சனம்: இதை ஒரு கிட்டதட்ட சுயசரிதை போலவே எழுதிக்கொண்டு வரும் லக்கி அதில் அவர் போண்டு நோண்டுவது ஏன் என்று அவர் சொல்லி இருக்கும் பலகாரணங்களை ஆதாரத்தோடு சொல்லி இருக்கிறார் அதில் பல இடங்களில் பிரிண்ட் ஸ்கிரீன் செய்யப்பட்ட அழகான பெண்கள் ஜட்டி தெரியும் படங்கள் அடங்கிய புத்தகமாக வருகிறது, ஆனால் புத்தகத்தின் கடைசி இரண்டு மூன்று பக்கங்களில் மீதியை படிக்கhttp://www.யூத்விகடன்.காம்/ சென்று படியுங்கள் என்று இருப்பதால் லாகின் ஐடி இல்லாத பலர் முடிவு தெரியாமல் குழம்பி போவதற்கு வாய்ப்பு இருக்கிறது!,மேலும் அவர் எழுதிக்கொண்டு வரும் உண்மையாரின் உண்மை முகம்,புத்தகமும் சக்கை போடு போடும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: மீந்த பஜ்ஜிகளை மீண்டும் உபயோகிப்பது எப்படி?

ஆசிரியர்: கோவி.கண்ணன்

பக்கம்: 1000( பஜ்ஜியை வைத்து சாப்பிட)

இலவச இனைப்பு: 1000ரூபாயில் ஷேவிங் செய்வது எப்படி?

பதிப்பகம்: குத்து கந்தசாமி பதிப்பகம்

விமர்சனம்: வீட்டில் செய்யும் பஜ்ஜிகளையும் ,மீந்து போகும் பல பொருட்களையும் எப்படி வீண் அடிக்காமல் உபயோகிப்பது எப்படி என்று பல முத்தான ஆலோசனைகளைஇதில் எழுதி இருக்கிறார், மேலும் அவர் சுயப்பரிசோதனைகள் மூலமே இந்த கருத்துக்களை எழுதி இருக்கிறார் அதற்கு ஆதாரமாக கடந்த முறை மீந்த பஜ்ஜியை பதிவர்களுக்குகொடுத்ததை பற்றியும் எழுதி இருக்கிறார்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: சென்ஷியை பிடிப்பது எப்படி?

ஆசிரியர்: பரிசல் காரன்

பக்கம்: 150

இலவசம்: ஒரு கொசுவலை கட்டிய கம்பு)

விமர்சனம்: ஷார்ஜாவில் ஒளிந்து இருக்கும் சென்ஷியை பிடிப்பது எப்படி என்று விளக்கமாக இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் அதோடு கூடுதலாக அவரை பிடிக்ககொசுவலை கட்டிய கம்பு ஒன்றையும் கொடுக்க இருக்கிறார்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: இன்கம்மிங் கால் அவுட் கோயிங் கால் ஒரு அலசல்

ஆசிரியர்: நந்து (போட்டோகிராபர்)

பக்கம்:555

பதிப்பகம்: ஏர்டெல்

இலவசம்: கால்குலேட்டர்

விமர்சனம்: இன்கம்மிங், அவுட் கோயிங் கால்களையும் வைத்து ஒரு ஒப்பிடு செய்து அதன் ஆராய்சி முடிவுகளை எழுதி இருக்கிறார் ஆசிரியர், பல இடங்களில்% பற்றி வருவதால் படிக்கும் பொழுது கணக்கு போட்டு பார்த்து படிக்க இலவசமாக ஒரு கால்குலேட்டர் வழங்க இருப்பதாகவும், இன்கம்மிங் பற்றி ஆராய்சியில்அவர் ஈடுப்பட்டதால் அவருக்கு அனில் அம்பானி கூட ஆரம்பிக்க இருந்த வியாபரமும் கை நழுவி போய் இருப்பதாகம் சொல்லி இருக்கிறார்.கடைசி சில பக்கங்களில்அவர் கதறி இருப்பதாகவும் அதை படிப்பவர்கள் குசேலன் படம் பார்த்த நிலைக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பொடியன் சஞ்சய் சொல்கிறார்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: ஆர்குட்டும் அதன் பயன்களும்

ஆசிரியர்: மங்களூர் சிவா

பக்கம் : 278

பதிப்பகம்: ஜெர்மன் புக் டெப்போ

விமர்சனம்: இதுவரை ஆர்குட் கண்டுபிடித்த google கூட இந்த அளவுக்கு அதன் பயன்பாடுகளை பற்றி தெரிந்து வைத்து இருக்குமா என்று என்னும் அளவிற்க்கு ஆசிரியர் ஆர்குட்டின் பயன்பாடுகளை பற்றி இதில் விளக்கமாக எழுதி இருக்கிறார், ஆர்குட்டின் மூலம் பெண் தேடும் டெக்னிக்கை பற்றி இவர் எழுதி இருப்பதை படிச்சால் சாதி டாட் காம், மேட்டரிமோனியல் டாட் காம்போன்ற தளங்களை பயன்படுதுவோர் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்று எதிர்ப்பார்க படுகிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: கேள்வியும் நானே பதிலும் நானே படிப்பவனும் நானே

ஆசிரியர்: டோண்டு

பக்கம்: 232

வெளியீடு: டோண்டுராகவன் பதிப்பகம்.

விமர்சனம்: கேள்விக்கேட்டு பதில் சொல்வது எப்படி அதை படிப்பது எப்படி என்று பலஉதாரணங்களோடும், பல மொழிகளோடும் வெளிவர இருக்கும் புத்தகம்.இலவசமாகசொந்த காரில் டோர் டெலிவரியும் செய்யப்படும்.

*******************************&&&&&&*******************************
புத்தகம்: பாலபாதிக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளும் வேண்டுதல்களும்.

ஆசிரியர்: ஆசிப் மீரான்

பக்கம்: 1000323

பதிப்பகம்: பா.குக.ச பதிப்பகம்

இலவச இனைப்பு: லக்கி, குசும்பனிடம் சொன்ன ஜோக்குகள்.

விமர்சனம்: கல்யாணம் செய்ய இருக்கும் பாலபாரத்திக்கு வலையுலக மக்களும்,பொதுமக்களும் செய்யவேண்டிய கடமைகளும், வேண்டுதல்களும் பற்றி எழுதி இருக்கிறார்புத்தகம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது கடமைகள் தனியாகவும், வேண்டுதல்கள் தனியாகவும் இருப்பதால் இருவர் ஒரே சமயத்தில் படிச்சு முடிச்சு கடமை, வேண்டுதல்களை நிறைவேற்றலாம்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: தொடர் விளையாட்டு ஆரம்பிப்பது எப்படி?

ஆசிரியர்: சர்வேசன்

பக்கம்: 140

பதிப்பகம்: ICCI

விமர்சனம்: இதுவரை கபடி,பம்பரம், கில்லி, கோலிக்கு மாற்றாக ஜென்டில்மேன் படத்தில் செந்தில் கண்டுபிடித்த விளையாட்டுக்களான டிக்கி லோனா, ஸ்பூன்லிங் விளையாட்டுக்களேமாற்றாக இருந்தன அந்த குறையை போக்கும் வகையில் புது புது தொடர்விளாயாட்டுக்களை கண்டுபிடித்து கொஞ்சம் நஞ்சம் வேலை பார்ப்பவர்களையும் இந்த தொடர்விளையாட்டில் கோத்துவிடுவது எப்படி என்று விளக்கமாக எழுதி இருக்கிறார் இதுவரை தான் கண்டுபிடித்த விளையாட்டுகள் லிஸ்டையும் கொடுத்து இருக்கிறார்.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: கடிதம் எழுதினா குத்தமா?

ஆசிரியர்: வெட்டிபயல் பாலாஜி

பக்கம் : 4 மெயில்கள்

மறு பதிப்பகம்: சாருநிவேதிதா

விமர்சனம்: கடிதம் எழுதி அதுக்கு பதில் வரவில்லை என்று திரும்ப கடிதம் எழுத நினைப்பவர்களுக்கும் , பதில் எழுதாதவர்களுக்கும் சாட்டையடி கொடுக்கும் வகையில் பல இடங்களில் பஞ்ச் டயலாக்கோடு எழுதி இருக்கிறார். கடித்தில் ஸ்டாம்ப் ஒட்டாமல் கடிதம் போய் சேரும் முன் பதில் கேட்டு கடிதம் எழுதிவிட கூடாது என்றுபல நுனுக்கமான குறிப்புகளையும் கொடுத்து இருக்கிறார்.


*******************************&&&&&&*******************************
புத்தகம்: வெள்ளை அறிக்கை விடுவது எப்படி?

ஆசிரியர்: நாமக்கல் சிபி

பக்கம்: 0

பதிப்பகம்: ஒயிட் பேப்பர் பிரஸ்

விமர்சனம்: ஒன்னும் கிடையாது(அவர் அறிக்கை போலவே )

*******************************&&&&&&*******************************

புத்தகம்: அன் செட்டில்ட் உமனோடு செட்டில் ஆகுவது எப்படி?

ஆசிரியர்: குஜால் சுந்தரி செல்லா

பக்கம் : 100

வெளியீடு: தமிழ்மண பூங்கா அச்சகம்

விமர்சனம்: அன் செட்டில்ட் உமனோடு செட்டில் ஆகுவது, கத்தி இன்றி பாலின் அறுவை சிகிச்சை இன்றி பெண்ணாக மாறுவது எப்படி என்றும் கூடுதலாக இந்த புத்தகத்தில்ஆசிரியர் விளக்கமாக விளக்கி இருக்கிறார், அது போல் பல பதிவர்கள் எழுதிய காதல் ரசம் சொட்டும் கடிதங்களையும் பொதுவில் வைக்கிறார். யார் யார் கடிதங்கள் அதில்வரபோகின்றனவோ என்று கலக்கத்தில் பலர் இருக்கிறார்கள். புத்தகம் வந்ததும் பல பதிவர்கள் டவுசர் கழட்டபடுவது உறுதி.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: வேளச்சேரி பயனக் குறிப்புகள்

ஆசிரியர்: CVR

பக்கம்:150

வெளியீடு: யுவான் சுவாங் பதிப்பகம்

விமர்சனம்: சைதாப்பேட்டையில் இருந்து வேளச்சேரி சென்று வந்த அனுபவத்தையும் போகும் வழியில் இருந்த குண்டு பல்பு, டியுப் லைட்டு, போஸ்ட் மரம் என்று அனைத்தையும் படங்களோடும் ஆசியர் இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார், இந்த புத்தகம் யுவான் சுவாங் பயன குறிப்புகளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க படும் என்று இப்பொழுதே தகவல்கள் கசிகின்றன.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: மொக்கை டூ குபீர் இலக்கியவியாதி

ஆசிரியர்: தம்பி உமா கதிர்

பக்கம் :232

வெளியீடு: அண்ணாச்சி பதிப்பகம்

இலவசம்: புத்தகத்தை ஆட்டை போடுவது எப்படி?

விமர்சனம்: மொக்கை போடும் பலர் தமிழையும் , தமிழ் வலையுலகையும் நாறடித்து வருவதாகவும் அவர்களை மொக்கையில் இருந்து இலக்கியவாதி ஆக்குவது எப்படி என்றும்ஆசிரியர் விளக்கமாக எழுதி இருக்கிறார். இலவச புத்தகத்தில் அய்யனார், அண்ணாச்சியிடம் இருந்து தான் ஆட்டை போட்ட புத்தங்களையும் அதை ரீசேல் செய்ததையும் விளக்கமாகஎழுதி இருக்கிறார், இதை படிப்பவர்களிடம் இருந்து மற்றவர்கள் புத்தங்களை காப்பது மிகவும் சிரமமான காரியமே!

*******************************&&&&&&*******************************
புத்தகம்: தியேட்டரை விட்டு வெளியே வரும் முன் பதிவு போடுவது எப்படி?

ஆசிரியர்: பினாத்தல் சுரேஷ்

பக்கம் :121

வெளியீடு: தசாவதார பதிப்பகம்

விமர்சனம்: எல்லோரும் மொக்கை என்று சொல்லும் படங்களை சூப்பர் என்று எழுதுவதும், எல்லோரும் சூப்பர் என்று சொல்லும் படங்களை மொக்கை என்று சொல்லுவதும்,10 மணிக்கு முடிந்த படத்துக்கு 10.01 க்கு பதிவு போடுவது எப்படி என்று விளக்கமாக எழுதி இருக்கிறார். இனி படம் பார்க்க செல்பவர்கள் கையில் லேப் டாப்போடு செல்வதுஉறுதி.

*******************************&&&&&&*******************************
புத்தகம்: சமையல் மூலம் கொலைகள்

ஆசிரியர்: தூயா

பக்கம்:424

வெளியீடு: மாங்காய் பதிப்பகம்

விமர்சனம்: கத்திரிக்காய் முதல் கையில் கிடைக்கும் பேப்பரை வரை அனைத்தையும் வைத்து சமைப்பது எப்படி என்று இந்த புத்தகத்தில் ஆசிரியர் எழுதி இருக்கிறார்,சமைக்கும் பொழுது நெருப்பு சுட்ட அனுபவத்தை படிக்கும் பலர் கதறி அழபோவது உறுதி. இந்த புத்தகத்துக்கு வித்தியாசமாக இலவச இனைப்பு இந்த புத்தகத்தை வாங்காதவர்களுக்கு தூயா சமைத்த ஸ்லோ பாயாசம் ஒரு கப்.

*******************************&&&&&&*******************************
புத்தகம்: விடாது லக்கி

ஆசிரியர்: பெயரிலி

பக்கம்:432

மொழி:பார்ஸி

இலவசம்: தமிழ் டிக்ஸ்னரி

விமர்சனம்: லக்கியும் அவரின் மறுபக்கமும் என்று விளக்கமாக எழுதி இருக்கிறார் ஒரு சில இடங்களில் தமிழிலும் எழுதி இருக்கிறார்.

*******************************&&&&&&*******************************
புத்தகம் : சிவபுராண கதை 45

ஆசிரியர்: ஜ்வோராம் சுந்தர்

பக்கம்: 45

வெளியீடு: அஞ்சரகுள்ள வண்டி பதிப்பகம்

இலவசம்: காமக்கதைகள் 45

விமர்சனம்: ஆசிரியர் இலவச புத்தகத்தை வெளியீட்டால் *** வரும் என்பதற்காக சிவபுராணம் புத்தகத்தை வெளியிட்டு அதோடு இலவசம் என்ற பெயரில் காமக்கதைகளை எழுதி இருக்கிறார்,இது வெளிவந்தால் இதை தமிழ்மண முகப்பில் இருந்து தடுப்பது எப்படி என்று பலர் ரூம் போட்டு யோசிக்க வாய்பு இருக்கிறது.

*******************************&&&&&&*******************************

புத்தகம்: இரண்டே நாட்களில் பாஸ்போர்ட் வாங்குவது எப்படி?

ஆசிரியர்: அய்யனார்

பக்கம் :259

வெளியீடு : இந்திய அரசு பதிப்பகம்

விமர்சனம்: விரைவில் பாஸ்போர்ட் வாங்குவது எப்படி என்றும், அதுக்கு செய்யவேண்டியவை எவை எனவும் ஆசிரியர் விளக்கமாக எழுதி இருக்கிறார். புதிதாய் கல்யாணம் ஆகி சீக்கிரம் மனைவியை வெளிநாடு அழைத்து செல்ல இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கும் ஆசிப் அண்ணாச்சி சொல்கிறார்.

*************************************************
சிறப்பு வெளியீடு ஆடியோ:

ஆடியோ: ரீமிக்ஸ் செய்வது குற்றமே!

ஆசிரியர்: கானா பிரபா

பகுதி: 3 கேசட்

பதிப்பகம்: பிரமீட் சாய்மீரா

விமர்சனம்: இப்பொழுது வரும் பாட்டுகளை பற்றியும், ரீமிக்ஸ் மூலம் அவர்கள் செய்யும் கொலைகள் பற்றியும் இவர் சொந்தமாக ஒரு பாட்டு எழுதி பாடி இருக்கிறார்.கேட்பவர்கள் கதிகலங்க போவது உறுதி என்று பலர் சொல்கிறார்கள்.

சிறப்பு வெளியீடு வீடியோ:

வீடியோ: எப்படி குறும்படம் எடுக்ககூடாது!

இயக்குநர்:உண்மை தமிழன்

நேரம்: 3 மணி நேரம்

தயாரிப்பு: ரொம்ப நல்லவன் புரோடக்ஸன்

வெளியீடு: கோவிந்தா இன்டர் நேசனல்

விமர்சனம்: இதை பார்த்துவிட்டு லக்கி எழுதுவார் அதுவரை வெயிட்டீஸ்

59 comments:

said...

கலக்குங்க குசும்பன். நீங்க என்ன புக் எழுதிட்டு இருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே..

said...

ஆஹா.. நிறைய பூக்ஸ் வாங்கணுமே.. குசும்பன் சார், நாங்க பூக்ஸ் வாங்குறதுக்கு பணம் நீங்க கொடுப்பீங்கதானே? ;-)

said...

வெண்பூ நான் எல்லாம் மொக்கை சாமி, என்னுடைய பதிவையே யாரும் படிக்க மாட்டேங்கிறாங்க இதுல நான் புத்தகம் வேறயா? அவ்வ்வ்வ்வ்

டமார்ன்னு மனைவியின் மனதை கவர சில டிப்ஸ் என்று வேண்டும் என்றால் உங்களுக்காக எழுதிகிறேன்.
முன்னோட்டம் இங்கே படியுங்க
http://kusumbuonly.blogspot.com/2007/10/blog-post_24.html

said...

ஐயா சாமி தாங்கலை.. எப்டி சாமி எப்டி? ஒரு பதிவை கூட விட்டு வைக்கிறதில்லை போல.. ( சகோதரி கவனிக்க)..

.. இப்படி ஒரு பதிவையும் விட்டு வைக்காம படிச்சி நேரத்தை வீணடிக்கும் குசும்பனுக்கு யாராவது எழுதுங்கய்யா ஒரு " பகிரங்க கடிதம்".. :))

said...

ஜமாலன், சுகுணா திவாகர், வினையானதொகை இவங்களையெல்லாம் விட்டுட்டீங்களே?

நல்லாருக்கு குசும்பு

said...

ஹா ஹா ஹா!
பதிவின் கடைசி வரை பயந்து கிட்டே படிச்சேன் அண்ணாச்சி! :))

//பக்கம்:555
பதிப்பகம்: ஏர்டெல்
இலவசம்: கால்குலேட்டர்//

இதுல சொல்லுற "இலவசம்" Co-author-ஆஆஆ அண்ணாச்சி? :)

said...

குசும்பனின் குசும்பிற்கு அளவேயில்லை..

சிறந்த, வித்தியாசமான நகைச்சுவை தொகுப்பு..

நன்றி குசும்பா..

said...

:))


சூப்பர் தம்பி!

கலக்குங்கா!

Anonymous said...

கலக்கலா இருக்கு. ஆமா நீங்க என்ன புக் எழுதறீங்க ?

said...

ஆஹா நானும் புஸ்தகம் போடுறேனா ;-) இருங்க ஒவ்வொரு புத்தகமா பார்ர்திட்டு வச்சுக்கிறேன் ;-)

said...

பட்டியல் முழுதும் அட்டகாசம். சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

அனுஜன்யா

said...

குசும்பரே...தாங்க முடியல....கலக்குங்க....:)

said...

கலக்கல்

Anonymous said...

கலக்கல் தல

அதுவும் கோவி பத்தி எழுதியிருந்தது
டாப்பு


வெடிகுண்டு முருகேசன் 1

said...

:-)))))))

Anonymous said...

//ஸ்லோ பாயாசம் ஒரு கப்.// நான் ஸ்லோ பாய்ஸன்னு படிச்சுட்டேன். ஹிஹி
உங்க புத்தகம் பேர் என்ன

said...

:))))))))))))))))

said...

//SanJai said...
ஐயா சாமி தாங்கலை.. எப்டி சாமி எப்டி? ஒரு பதிவை கூட விட்டு வைக்கிறதில்லை போல.. ( சகோதரி கவனிக்க)..
//

ம்ஹுக்கும்! நல்ல வேளா வேளைக்கு சகோதரி சோறு வடிச்சு கொட்டறாதாலதான் பயபுள்ள இப்படி ஆட்டம் போட்டுக்கிட்டிருக்கு! :)

said...

:-))))

said...

ஆடுமாடு அண்ணே ... ஏதோ போனாப்போது பச்சப்புள்ள பாவம்னு கருண காமிச்சு என்ன விட்டுட்டாரு குசும்பன் ... மாட்டி விட்டுடுவீங்க போலிருக்கே ... நொம்ப நன்னி குசும்பன் சாரே :)

said...

ஆடுமாடு அண்ணே ... ஏதோ போனாப்போது பச்சப்புள்ள பாவம்னு கருண காமிச்சு என்ன விட்டுட்டாரு குசும்பன் ... மாட்டி விட்டுடுவீங்க போலிருக்கே ... நொம்ப நன்னி குசும்பன் சாரே :)

said...

ஆகா! அடுத்த புத்தக கண்காட்சியில் நம்ம பதிவர்கள் புத்தகம் தான் அதிக சேல்ஸ் ஆகும் போல இருக்கு

said...

///வெண்பூ said...
கலக்குங்க குசும்பன். நீங்க என்ன புக் எழுதிட்டு இருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே..////

தங்கமணிகளிடம் அடிவாங்கும் ரங்கமணிகளுக்கு யோசனைகள்... அனுபவ அறிஞர் குசும்பன் எழுதும் மெகா புத்தகம்.... பக்கங்கள் 14578965485555

said...

//வெண்பூ said...
கலக்குங்க குசும்பன். நீங்க என்ன புக் எழுதிட்டு இருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே.//

// சின்ன அம்மிணி said...
உங்க புத்தகம் பேர் என்ன//

குட்டீஸ்கார்னருக்காக ஒரு புத்தகம் ரெடி பண்ணிகிட்டு இருக்காராம். பெயரா? அதெல்லாம் பொறந்து மூணு மாசத்துக்கு அப்புறம்தான் வைப்பாங்க.

said...

:))))))))))

said...

;-)))

said...

ஆஹா! அபாரம் குசும்பரே!

என் ஓட்டுப்பெட்டியில் உங்களுக்கு அதிக ஓட்டுகள் விழுவதில் தப்பே இல்லை!

நகைச்சுவையாக.. அதே சமயம் ஏதேனும் கண்டெண்ட்டுடன் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று (ஏதோ கொஞ்சம்) எனக்குத் தெரியும்.


நீங்கள் கலக்கி எடுத்து, காயப்போட்டுவிட்டீர்கள்!

இந்தப் பின்னூட்டம் நிஜமாகவே, சீரியஸாக எழுதபட்டது. தயவுசெய்து இதை நக்கலடிக்கவேண்டாம்!

சபாஷ் குசும்பரே!

said...

ஒரு உபரித் தகவல்...

நேற்றுதான் ‘பாலைவனத்தில் நீரைத்தேடி..' என்று சப்ஜெக்ட் போட்டு சென்ஷிக்கு ஒரு மெய்ல் அனுப்பினேன்.

கடைசியில் அதில் `நீர் எங்கே?' என்று சிலேடையாகக் கேட்டேன்.

அவரது பதிலும் வந்தது!

அதை வைத்து ஏதேனும் மொக்கை ரெடி பண்ணலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்..

இங்கே.. இப்படி..

வேணாம்... சென்ஷிய விட்டுடலாம்!

said...

அடேய்ய்ய் அடேய்ய்ய்ய்ய் அடங்க மாட்டிய்யா நீய்ய்ய்ய்ய்ய்ய்ய்யீ.......
:)

said...

இம்புட்டுப் புத்தகங்களா குசும்பன்? அதிலும் மங்களூர் சிவா எழுதப் போற புத்தகம் எனக்கு ரொம்பப் பிரயோசனமா இருக்கும்.எனக்கு அதுல ஒரு பிரதி இப்பவே எடுத்து வைங்கோ..டேங்கிஸ்ங்கோ :)

said...

ஆகா.. எல்லாமே அருமையா இருக்கு ..ரசிக்கும்படியா... சிவிஆர் கலக்கல்..குண்டுபல்பு போட்டோவா..:)

said...

கலக்கல் !! :)))))

said...

குசும்பா.. கல்யாணம் ஆன பின்னாடியாவது அடங்குவேன்னு பாத்தேன் அடங்க மாட்ட போல.. ஆட்டோ அனுப்பிட வேண்டியது தான்.

said...

:))

Anonymous said...

இந்தப் புத்தகத்துகெல்லாம் முன்னுரை நீங்கதான்னு சொன்னாங்க உண்மையா?

said...

நேற்றே படித்துவிட்டேன். கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் ஆகாததால் இன்றுதான் பின்னூட்டம் போட முடிந்தது..

கலக்கியெடுத்துட்ட.... என்னோட சாய்சா நான் மொதல்ல பைத்தியக்காரனையும், லக்கி புக்குக்கும் தான் அட்வான்ஸ் ரெஜிஸ்டர் செஞ்சு வைப்பேன்... :)) உண்மையிலேயே லக்கி புக்ல போட்டோவெல்லாம் இருக்குமுல்ல....

said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

வாய்விட்டு ரொம்பச் சிரிச்சுட்டேன்.

said...

கோவியார் தெரியாம 1000 ரூபாய் கொடுத்திட்டாராம். அதுக்காக அவரை இன்னும் எவ்வளவு நாள்தான் கிண்டல் பண்ணுவீங்கன்னு :))

ஓஹ், ஆடுமாடு இதுக்குத்தான் கிளாஸ் எடுக்கறாரா?? நந்து புத்தகமும் கலக்கல் :)

நல்லா எழுதியிருக்கீங்க குசும்பன்.

said...

:))))))))

said...

//
கோவி.கண்ணன் said...

அடேய்ய்ய் அடேய்ய்ய்ய்ய் அடங்க மாட்டிய்யா நீய்ய்ய்ய்ய்ய்ய்ய்யீ.......
:)
//
நீங்க முதல்ல தீபா வெங்கட் கூடப் போட்டோ எடுக்குறத நிறுத்துங்க.. அவர் அப்புறமா அடங்குவாரு...

said...

கலக்கல்.... :)

said...

adangaratha idea-ve illaiyaa?

varen!

said...

ஆகா - இத்தனை புத்தகங்கள் வரப் போகிறதா - எல்லாத்தெயும் வாங்கிடலாம்

said...

superb nanbaa

said...

மை பிரண்ட் புக்கை காசு கொடுத்து வாங்குவதா? என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு! :)))

***************************
SanJai said...
குசும்பனுக்கு யாராவது எழுதுங்கய்யா ஒரு " பகிரங்க கடிதம்".. :))//

மாம்ஸ் சில்வண்டுக்கு எல்லாம் யாரும் கடிதம் எழுதமாட்டாங்க, உங்களுக்கு என்றால் இருக்கவே இருக்காங்க....:)))
****************************
ஆடுமாடு அவர்களையும் சேர்த்துவிடலாம். மிக்க நன்றி

*****************************

KRS எப்படி உங்களை மறந்தேன்:(((
அரி vs கிரி அசம்பிளின்னு எழுதுறீங்கன்னு சொல்லிடலாமா?
******************************
மிக்க நன்றி உண்மை தமிழன் (உங்க நம்பரை சொல்லிதான் நன்றி சொல்லனும் என்று அவசியம் இல்லையே:)))

********************************
நன்றி சிபி தள
******************************
மது நான் புக்கு எல்லாம் எழுதும் அளவுக்கு பெரும் பதிவர் இல்லீங்க.
*******************************
கானா பிரபா நீங்க சிறப்பு ஆடியோ ரிலீஸ்
*********************************
நன்றி அனுஜன்யா
**********************************
நன்றி நிஜமா நல்லவன்
***********************************
நன்றி முரளி கண்ணன்
*********************************
நன்றி வெடிகுண்டு முருகேசன்
********************************
நன்றி லக்கி
**********************************
சின்ன அம்மிணி அப்படிதான் படிக்கனும் அதுதான் சரி:)))
***********************************
ஆமாம் ஆயில்ஸ் நீங்க சொல்வது சரிதான்.
********************************
நன்றி சந்தனமுல்லை

said...

வளர்மதி அவர்களே அப்படி எல்லாம் இல்லை சரியான வாய்ப்பு அமைய மாட்டேங்குது, வெயிட்டிங்:))

********************************
ஆமாம் தமிழ் பிரியன் தனியாகவே எக்ஸ்பிசன் வெச்சுடலாம்.

ஆமாம் என்னா யோசனை எப்படி மேலும் அதிகமாக அடிவாங்குவது என்றா?:))
*******************************
நந்து கொழந்தை பிறந்து 16 வது நாள் பெயர்வைப்பாங்க எந்த ஊரில் 3 மாதத்தில் வைப்பாங்க?:))) இது ஒரு புள்ளைக்கு அப்பா நீங்க:(((

********************************
நன்றி சிவா
********************************
பரிசல்காரன் said...
இந்தப் பின்னூட்டம் நிஜமாகவே, சீரியஸாக எழுதபட்டது. தயவுசெய்து இதை நக்கலடிக்கவேண்டாம்!
சபாஷ் குசும்பரே//

இதுக்காக ஒன்னும் சொல்லாம விடுகிறேன்:))) மிக்க நன்றி

///அதை வைத்து ஏதேனும் மொக்கை ரெடி பண்ணலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்..///

30%க்கு மேல யோசிக்க கூடாது:) இருக்கும் மூளையும் சூடாகி விடும்!

*****************************
ஏன் அடங்கனும் கோவி?:))))

***************************

எம்.ரிஷான் ஷெரீப் நண்பரே மங்களூர் சிவா எழுதும் புத்தகம் பல பகுதிகளை கொண்டது அதை வேறு ஒரு புத்தகத்தின் உள்ளேதான் வைத்து படிக்க முடியும்:)))

*************************
முத்துலெட்சுமி-கயல்விழி மிக்க நன்றி!
**************************
நன்றி பொன்வண்டு
*************************
கல்யாணம் ஆனா அடங்க வேண்டியவங்க கிட்ட அடங்கினா போதும் இது கூட தெரியாம நீ எல்லாம்....:)))
***************************
நன்றி கோபி நாத் உங்க இரு முறை சிரிப்புக்கு.
***************************

said...

வடகரை வேலன் ஏன் ஏன் இந்த கொலவெறி:)))
******************************
நன்றி சுந்தர்
******************************
சென்ஷி said...
உண்மையிலேயே லக்கி புக்ல போட்டோவெல்லாம் இருக்குமுல்ல....//

அட்ரெஸ் போன் நம்பர் கூட இருக்காம்:)))
********************************
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
வாய்விட்டு ரொம்பச் சிரிச்சுட்டேன்.//

மிக்க மகிழ்ச்சி, நன்றி
********************************
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கோவியார் தெரியாம 1000 ரூபாய் கொடுத்திட்டாராம். //
என்னது தெரியாமலா? எங்க அவரை சொல்ல சொல்லுங்க:))

அதுக்காக அவரை இன்னும் எவ்வளவு நாள்தான் கிண்டல் பண்ணுவீங்கன்னு :))//

வருடங்கள் ஆனாலும் அந்த ரணம் ஆறாது, எப்படிங்க அவரு கொடுக்கலாம் 1000 ரூபா, அதை பதிவாக எப்படிங்க போடலாம்:)))

//ஓஹ், ஆடுமாடு இதுக்குத்தான் கிளாஸ் எடுக்கறாரா?? ///
இதுவரை படிச்ச நானே ஓட்ட பிகரை உசார் பண்ணும் முயற்சியில் இருக்கேன்.

நந்து புத்தகமும் கலக்கல் :)

நல்லா எழுதியிருக்கீங்க குசும்பன்.//

நன்றிங்க!

*******************************
அதானே நல்லா சொல்லுங்க ஜெகதீசன்
******************************

நன்றி ராம்

******************************
விக்னேஷ்வரன் நன்றி
*****************************
பினாத்தல் சுரேஷ் ஏன் அடங்கனும்? அடங்க வேண்டியவங்க கிட்ட அடங்கியாச்சு:))

வாங்க வாங்க சீக்கிரம் வாங்க:)))

********************************
சீனா சார் எல்லாத்தையும் வாங்க வேண்டாம் குங்குமம் வாங்கினா எல்லாம் இலவசமாக வரபோகிறது.
*******************************
நன்றி இரவு கவி

said...

:-)))))))))))

said...

Sooperappu :))))

said...

என்னடா என் பதிவும் முதன் முதலாக பரிந்துரையில் வருகிறதே என்று நினைச்சேன்.

+ ஓட்டு போட்ட 4 பேருக்கும்,

- ஓட்டு போட்ட 3 பேருக்கும் நன்றிங்க.

- ஓட்டு போட்ட நல்லவர்களே நல்லா இருங்க.

said...

ஹா ஹா ஹா செம காமெடி (படிக்கிறவங்களுக்கு)

said...

கலக்கல்

said...

:)))

said...

கலக்கீட்டீங்க குசும்பரே..நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்.

ஆமா நீங்க கூட வளைகூட நாட்டில் வளைக்கும் பிகர்கள் என்று ஒரு புத்தகம் போட போகிறீர்களாமே அப்படியா??

said...

திஸ் இஸ் பார் இமெயில் பாலோ அப்

Anonymous said...

என்னையும் புத்தகம் எழுத வச்சிட்டிங்களே...இதற்காகவே ஒரு புத்தகம் எழுதணும்.. :P

said...

//வெளியீடு: யுவான் சுவாங் பதிப்பகம்//

ரொம்பவும் இரசித்துச் சிரித்தேன்.

ஒரு final touch..ஆ உங்க புத்தகம் பத்தியும் வரும்னு எதிர்பார்த்தேன்.

said...
This comment has been removed by the author.
said...

Super :))))))))