Wednesday, August 29, 2007

தமிழ்மணத்திற்கு மனம் திறந்த மடல்

From:

குசும்பன்
கும்மி இல்லம்
துபாய்

To:
தமிழ்மண நிர்வாகம்



sub: ஒரு இரண்டு மூன்று நாட்கள் விடுப்பு வேண்டும்.


ஐயா:
வணக்கம், நான் இங்க தமிழை அடுத்த கட்டத்துக்கோ, அல்லது பலருக்கு கருத்து சொல்லவோ இங்குவரவில்லை, ஏதோ நாமும் சிரிக்கனும் மத்தவங்களையும் சிரிக்க வைக்கனும் அதுதான் நம்ம கொள்கை. ஆனா கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டும், சண்டை , போர், யுத்தம் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு நான் எல்லாம் 23ஆம் புலிகேசி இனம் ஆகையால் யுத்தம் எல்லாம் முடியும் வரை கொஞ்சம்
ஓய்வு வேண்டும்.

நிறையபேர் இதே மனநிலையில்தான் இருக்காங்க. பிளாக் எழுத பலர் வரவேண்டும் என்று பால பாரதி, பொன்ஸ் அக்கா,லக்கி போன்றோர் பதிவர் பட்டறை அது இது என்று நடத்தி கஷ்டப்படுகிறார்கள், ஆனால் இருக்கிற பல நல்ல தரமான பதிவர்கள்(நான் இல்லை)
இதை எல்லாம் பார்த்து போகிறேன் என்கிறார்களே அவர்களை எல்லாம் யார் திரும்ப அழைத்து வரபோகிறார்கள்???


அன்புடன்
குசும்பன்

Monday, August 27, 2007

சாதி மத சண்டைகளுக்கு எதிராக தமிழ் பதிவர்களே ஒன்று சேருங்கள்.

தமிழ் மணத்தில் வர வர சாதி மத சண்டைகள் திரும்ப தலை தூக்குகிறது, ஏன் நமக்கு அது அனைத்தையும் மறந்து வாருங்கள் ஒன்று சேருங்கள் புதுஉலகம் படைப்போம். இதோ இந்த விளையாட்டை விளையாடுங்கள் நீங்கள்உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த விளையாட்டு மூலம் நீங்கள்ஒன்று சேரபோவது நிஜம்.

கசப்புகளை மறந்து அனைவரும் ஒன்று சேருங்கள் கீழே இருக்கும் flash பகுதியின் மேல் கிளிக் செய்யுங்கள்







ஓணம் சேலை கட்டி ஓணம் கொண்டாடும் கேரள பெண்குட்டி...

இவ்வட எங்கேயும் ஓணம் கொண்டாட்டமாக இருக்கிறது. காலையில் ஓணம் சேலை கட்டிய கேரள பெண்குட்டிகளை பார்த்ததில் இருந்து ஆபிஸில் வேலை செய்ய முடியவில்லை.


மதியம் வேறு ரெட் பெப்பர் ஹோட்டலி 30 வகையுடைய சாப்பாடு ஏற்பாடு செய்து இருந்தார்கள் நானும் அங்கு போய் இருந்தேன், ஒரு இலையின் முன் அமர்ந்து இருந்த குழைந்தைக்கு ஒரு பெண்குட்டி சாப்பாடு ஊட்டி விட்டு கொண்டு இருந்தது ஞானும் அவ்வட உட்கார்ந்து...ஆஆஆஆ என்று வாயை open செய்துவைத்து கொண்டு இருந்தேன்... ஆனா அந்த பெண்குட்டி கடைசி வரை ஊட்டிவிடவே இல்லை :(( பிறகு நானே சாப்பிட்டு விட்டு வந்தேன்.


பிறகு சாப்பிட்டு விட்டு ஜி-டாக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜ் "ஓணம் சேலை கட்டி ஓணம் கொண்டாடும் கேரள பெண்குட்டிகளுக்கு மட்டும் என் ஓணம் வாழ்த்துக்கள்" என்று உடனே தம்பி கோபி ஏன் சேட்டனுக்கு எல்லாம் சொல்லமாட்டிங்களா என்று...


தம்பி இப்படி இருந்தா நீ யாருக்கு வாழ்த்து சொல்வாய்?











சில பூக்கள் பல பூக்களை வைத்து ஒரு கோலம் போடுகிறது அடடே கவிதை !!!( ஆச்சர்ய குறி)

Sunday, August 26, 2007

இளம் ஹீரோ பால பாரதி தலைவன் படத்திலிருந்து விலகினார்

அன்றைய தினம் எல்லா பேப்பர்களிலும் முதல் பக்கசெய்தி

"இளம் ஹீரோ பால பாரதி தலைவன் படத்திலிருந்து விலகினார். அவரின் பா.க.ச படை கொதிப்பு. அனைவரும் அமைதிகாக்கும் படி பால பாரதி வேண்டுகோள்."

நிருபர்: நீங்க ஏன் அந்த படத்தில் இருந்து விலகுகிறீர்கள் என்று சொன்னால் உங்கள் பா.க.ச ரசிகர்கள் சமரசம் அடைவர்கள்? என்ன நடந்தது சொல்லுங்க.



பால பாலதி: இல்லீங்க சொன்னாதான் அவுங்க கோபம் இன்னும் அதிகரிக்கும்.
நிருபர்: பரவாயில்லை சொல்லுங்க!!!
பால பாரதி: உங்களுக்காக இதை நான் விளக்கமாக என்ன நடந்தது என்று சொல்கிறேன்.
அன்று ஒரு நாள் படத்தின் தயாரிப்பாளர் போன் செய்தார், லோ பட்ஜெட் படம் ஒன்று தயாரிக்க போவதாகவும் பாலபாரதி தி பாஸ் டைரக்டர் சிபி தான் இந்த படத்தையும் டைரக்ட் செய்ய போவதாகவும் சொன்னார். நானும் சரி என்று சொன்னேன்.

கதைபடி நான் வக்கீலுக்கு படிக்கும் இளைஞன், நான் கல்லூரிக்கு சென்று வரும் பொழுது ஹீரோயினை பார்த்து காதல் வருகிறது, பின் ரவுடிகளால் அவள் கொல்ல படுகிறாள் அவளுக்காக நான் போராடி நீதி வாங்குகிறேன். சாட்சி சொல்ல பேய்கள் எல்லாம் வரும் என்றார்கள் சரி வித்தியாசமான கதை என்பதால் சரி சொல்லி இருந்தேன்.

முதல் நாள் ஷூட்டிங் நானும் பந்தாவாக கிளம்பி போனேன்.
அங்கு டைரக்டர் சிபி நீங்க கதை படி இன்று காலை காலேஜ்க்கு பைக்கில் கிளம்பனும், நீங்க வேளச்சேரியில் இருந்து நந்தனம் போவதாக இன்று ஷூட்டிங் செய்ய போகிறோம் என்றார், சரி பைக் கொடுங்க என்றால் இது லோ பட்ஜெட் படம் பைக் எல்லாம் கிடையாது , அதனால் நீங்க சும்மா வாயாலே டூர்ர்ர்ர்ர்ர்ர்என்று சத்தம் கொடுத்துக்கிட்டு ரெண்டு கையையும் வண்டி ஓட்டுவது போல் வைத்து கொண்டு ஓடி வாங்க நாங்க ஷூட் செஞ்சுக்கிறோம் என்றார். நானும் சரி என்று ரெண்டு கிலோ மீட்டர் சின்ன பிள்ளைங்க டூர்ர்ர்ர்ர் என்று வண்டி ஓட்டுவது போல் நானும் ஓடினேன்...
நடு நடுவே ஹாரன் அடி, பிரேக் அடி யூ டேர்ன் அடி அப்பதான் ஒரிஜினாலிட்டி கிடைக்கும் என்றார்கள் நானும் கஷ்டபட்டு எல்லாம் செய்தேன்.அப்பதான் டைரக்டர் கதை படி ஹீரோயினை நீங்க பெட்ரோல் பங்கில் தான் சந்திக்கிறீங்க அதனால் வண்டிய நிறுத்தி பெட்ரோல் போடுங்க என்கிறார். பெட்ரோல் பங்கு காரனும் வண்டிய திருப்புங்க பெட்ரோல் போடனும் என்கிறார்கள்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அடுத்த சீன் காலேஜ் எலக்செனில் வண்டி பிரேக்கை வில்லன் ஆட்கள் கட் செய்வார்களாம் எங்க எத கட் செய்வாங்கன்னு தெரியலை. இப்படி ஒவ்வொரு நாளும் வேதனையோடு போனது...

அதோட கொடுமை ஹீரோயினாக சொட்டை மனோகருக்கு பெண் வேசம் போட்டுவிட்டு ...லிப் டு லிப் கிஸ் வேற இருக்கு என்கிறார்கள்.
இத எப்படிங்க பொறுத்துகொள்வது.

அதான் வெளியேறிவிட்டேன்.

Friday, August 24, 2007

ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)

சிகப்பு கலரில் இருப்பது கண்மணி எழுதிய கவிதை அதற்க்கு கீழே இருப்பது நான் எழுதிய எதிர் கவுஜ:)

ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]

ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)

உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.
பிரிவோம் என நினைத்திருந்தால்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் வேர்விட்டிருக்காது
காதல் பூத்தும் இருக்காது
கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.

தடுக்கி விழுவோம் என அஞ்சியிருந்தால்
அஞ்சு பாபி ஜார்ஜ் ஓடாமலே இருந்திருக்க கூடும்.
உடைவோம் என நினைத்திருந்தால்
எனக்கு பிடித்த முட்டை
கோழி வயிற்றிலேயே இருந்திருக்க கூடும்.
முட்டை வெளியே வந்தும் இருக்காது
வந்து என் கையில் சிக்கியும் இருக்காது.
உடைந்து முட்டைகள் வெந்து தணிந்து
ஆம்லேட் ஆவதுபோல.
வாந்துமுட்டையும், ஆமை முட்டையும்
மண்ணுக்குள்ளே இருந்திருக்கும்.

இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
உன்னிடம் பேசும் வரை
பேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்
காரணமே தெரியாமல்.
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.

இந்த ஆம்லேட்டை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
அதை எடுத்து சாப்பிடும் வரை
சாப்பிட்ட பிறகோ என்னையே வெறுத்து கொள்கிறேன்
காரணமே தெரியாமல்..
வெந்த முட்டைகளை விட வேகாத ஆப் பாயில்கள்
ருசி அதிகம்.


கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்
எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோ
எனப் பார்த்திருப்பதும்
மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில்
எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத்
தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது


கவனமாக திருப்பி போடப்பட்ட ஆம்லேட்டுகளில்
பச்சைமிளகாய் எங்கேனும் ஒளிந்துருக்குமா
என பார்பதும்
அதன் மேல் மிளகு தூள் தூவபட்டு இருக்குமா
எனத் தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது.


இலையுதிர் காலங்களுக்குப் பிறகு
வசந்தம் வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை

எனக்கு முன் ஆடர் செய்த ஆம்லேட்டுக்கு பிறகு
ஆப்பாயில் வந்துதானே ஆகவேண்டும்
காத்திருக்கிறேன் வரும் வரை...(சாப்பிடாமல்)

டிஸ்கி: ....எனக்கும் காதல் கவிதை
டிஸ்கி: எனக்கான ஆப்பாயில்

Wednesday, August 22, 2007

கும்மி 2007 முறைகேடு நடப்பதாக செந்தழல் புகார்

நடந்துகொண்டு இருக்கும் கும்மி 2007 தேர்தலில் எதிர்கட்சிகள் கோல்மால் செய்வதாக செந்தழல் ரவி சர்வேசனிடம் புகார் கொடுத்து இருக்கிறார்.

சகவேட்பாளர் ஆன சிபி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாகவும் அதற்கான ஆதரத்தையும் வெளியிட்டு உள்ளார் செந்தழல் ரவி.

இங்கு போட்டோ மட்டும் வெளியிட்டு உள்ளார், வீடியோ ஆதாரத்தை விரைவில் வெளியிட போவதாக சொல்லி இருக்கிறார்.

வீடியோவில் என்ன இருக்கு என்பதை சொல்லி இருக்கிறார்.

சிபி: நந்தா எப்படி இருக்கீங்க?

நந்தா: நல்லா இருக்கே தள.

சிபி: வரபோகிற கும்மி2007 எலக்சனில் எனக்கு ஓட்டு போட்டு பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.

நந்தா: இப்பதான் ஓசை என்னை அழகா படம் எடுத்து தரேன் அதுக்கு பதிலா எனக்கு ஓட்டு போடனும் என்றார்.

சிபி: ம்ம்ம் வேற யார் யார் எல்லாம் கேட்டாங்க?

நந்தா: அய்யனார் தனக்கு ஓட்டு போடவில்லை என்றால் தன்னிடம் இருக்கும் புலியை அவுத்து விட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்...

சிபி: ம்ம்ம் கவலை படாதே தம்மி நாளை நமதே!!!

நந்தா: இந்த பால பாரதி என்னடான்னா ஓட்டு போடவில்லை என்றால் சொந்த குரலில் ஒரு ஆடியோ கேசட் முழுக்க பாட்டு பாடி அதை என்னை கட்டி போட்டு காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு கேட்கவைப்பேன் என்கிறார்.

சிபி: ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் அவுங்கள விடுங்க நந்தா!!! இந்தாங்க இந்த பையில் 1000 ரூபாய் பணம் இருக்கு வச்சிக்குங்க.ஓட்டை மட்டும் மறக்காம எனக்கு போட்டுவிடுங்க!!! சரி யாருக்குதான் உங்க ஓட்டு சொல்லுங்க???

நந்தா: பணம் எல்லாம் வேண்டாம் தளா, எல்லாருக்கு ஒரு ஓட்டு போட்டுவிடுகிறேன் தள!!!


குறிப்பு: நந்தா உங்க முகவரி என்னிடம் இல்லை அதனால் உங்களிடம் அனுமதி வாங்க முடியவில்லை. ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்க எடுத்துவிடுகிறேன்.!!!

Tuesday, August 21, 2007

கோபமுடன் புனிதர்களுக்கு = (சமவினை)

வம்பு, தும்பு, சந்தோசம், பிறப்பு விளிம்பிற்க்கு தானாகபோகும் வாழ்வின் அவலம்இவை எல்லாத்தையும் படித்துக்கொண்டோ அல்லது வீசிடி போட்டி டிவியில் முனியாண்டிவிலாஸ்ஆட்டுகால் சூப் குடித்துக்கொண்டோ சந்திரன் வழுக்கை மண்டை உச்சியில் விழுந்த தேங்காய் போல் மிகச் சக்தி வாய்ந்த புனிதர்கள் ஆரம்பித்த குழுமம் தான் கோபமுடன் என எனக்கு தெரியும்.

கோபு தந்த குட்டியை பிடித்து கொண்டு போனால் அங்கு ஒரு மாடு கட்டபட்டு இருந்தது,அதற்கு யூசுப் புல் வைத்து கொண்டு இருந்தார், என்னடா இவரு எல்லாம் மாட்டுக்கு புல் வைக்கிறாரா? என்ற ஆச்சர்யம் முதலில் எழுவே இல்லை!

அறிவுசூரியன் எழுதிய நாலு பக்கங்கள் கிழிக்கபட்டதுக்கு காரணம் எனக்கு இனிப்பை தந்தது. ஏன் ஏன்றால் அந்த பக்கத்தில் லட்டு இருந்தது ,தமிழை இங்குபில்லரில் வைத்து பாதுகாக்கும் இப்புனிதர்களின் பணி வாழ்க. தவறான நாலுபக்கம் என்று கிழிக்கபட்ட பக்கங்களை இங்கு வைக்கிறேன். கோபமுடன் பற்றியெல்லாம் சமவினையாற்ற என் வலைபக்கம் இருப்பிடமே!!!

-------------------X X X(அதான் சிம்பாளிக்கா சொல்றோம்ல்ல)---------------
கோணி இப்பொழுது ஆங்கில சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றார் ஆனால் அதே சம்பளம் தான் அந்த கம்பெணி கொடுப்பதாக தனியாக புலம்பினார்.ஏதோ "தெரிந்தும் தெரியாமலும்" எழுத வந்துவிட்டார்.

ஒரு டீச்சர்

+ குறி

- குறி

x குறி

% குறி

என்று வகுப்பில் குறி சம்மந்தபட்ட பாடத்தை எப்படி எடுக்கலாம். இது சம்மந்தமாக அவர் எழுதியதுதான் பிரச்சினையாகி இருக்கிறது, நிஜமாகவே கோணி கணக்கு வாத்தியார் அல்ல யாரும் திடிர் என்று 100323 x 1212121 பதில் என்ன வரும் என்று கேட்டுவிட்டால் அவர் கணக்கு வாத்தியாரை கேட்டே பதில் சொல்ல வேண்டி வரும். ஆகையால் இனி அவர் தெரிந்தும் தெரியாமலும் எழுதகூடாது.

-------------------XXX-------------------------






மேலே உள்ள செங்குத்தாக இருக்கும் எழுத்துக்கள் அய்யனார் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது.


டிஸ்கி: இது அய்யனாரின் எதிர் வினைக்கு, எதிர் வினை ஆகையால் இது சம வினை.

குறிப்பு: அய்யனாரின் அன்புடன்1 புனிதர்களுக்கு எதிர்வினையை படித்து இருந்தால் மட்டுமே இது புரியும்.