Tuesday, March 8, 2011

புதுமனைவியின் சமையலறை அனுபவங்கள்!

லேபர் வார்டுக்குள் மனைவியை அனுப்பிவிட்டு பதட்டத்துடன் இருக்கும் கணவனைப்போல் மிகுந்த பதட்டத்துடன் காத்திருந்தான் சஞ்சய். 4 மணிநேரம் ஆச்சு எந்த தகவலும் இல்லை சத்தம் இல்லை என்றதும் பதட்டம் அதிகம் ஆனது...கடிகராத்தில் மணி 2யை நெருங்கிய பொழுது என்னங்ங்ங்ககன்னு ஒரு குரல் வந்த திசையை நோக்கி ஓடும் பொழுதே...அந்த என்னங்க குரலில் இருப்பது பதட்டமா? இல்லை அபயமான்னு கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்தவனாக ஓட்டமாக ஓடிப்போய் நின்றான்...ஒருகையில் புளியும் ஒருகையில் எலும்பிச்சையுமாக நின்ற புது மனைவி...என்னங்க ஒரு ஸ்கேல் வேண்டும் என்றாள்.

எதுக்கும்மா ஸ்கேல் என்று வாய் வரை வந்த கேள்வியை மென்னு முழுங்கிவிட்டு ஸ்கேல் எடுத்துவரப்போனான் சஞ்சய். போகும் பொழுது ஒருவாரத்துக்கு முன்பு நடந்த சம்பவம் அவன் நினைவில் வந்து சென்றது.

மனைவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கையில் கறுப்பு கலர் திரவம் தளும்பிய பாத்திரத்தை சஞ்சய் முகத்துக்கு நேராக காட்டியப்படி என்னங்க என்னா ஊருங்க இது? எங்க ஊரில் எல்லாம் இட்லி மாவு வெள்ளைக்கலராக இருக்கும். இங்க மட்டும் கறுப்பு கலராக வருது என்றாள் புது மனைவி... அடுப்பில் வைத்து செய்யும் பதார்த்தம் எதார்த்தமாக கருகி போய் கறுப்பாக மாறினால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கு...ஆனால் புதிதாக வாங்கிய கிரைண்டரில் அரைத்த மாவு எப்படிங்க கறுப்பாக போகும்? என்று டெக்னிக்கலாக சஞ்சையை மனைவி மடக்கிய பொழுது சஞ்சய் விக்கித்து போனான்...

இந்த டெக்கினிக்கல் கேள்விக்கு பதிலை கண்டுபிடிப்பது கடமையாகி போனதால்...முதல் நாள் மனைவி அவுங்க அம்மாவிடம் போனில் பேசி இட்லி செய்வது எப்படின்னு கேட்டது முதல் எல்லாத்தையும் விசாரித்து பார்த்தான். அவுங்க அம்மா சொன்னதிலும் தப்பு இல்லை எல்லாம் சரியாக இருந்தது. பிறகு எப்படி கறுப்பாக மாறியது...சட்டென்று உளுந்தை கழுவி போட்டு அரைத்தாயா என்றான்? ஆமாங்க நல்லா கழுவிட்டுதான் போட்டேன் என்று மனைவியிடமிருந்து பதில் வந்தது. உளுந்தில் இருந்து எடுத்த தோல் எங்கே என்றான்? தோலா? அப்படின்னா? என்று பதில் வந்தது.

எங்கு தப்பு நடந்தது என்று கண்டுபிடித்த மகிழ்ச்சியில்...இந்த பாரும்மா உளுந்தை ஊறவெச்சி பிறகு அதன் கறுப்பு தோல் போற மாதிரி கழுவனும் என்றதும் மனைவியின் கோவம் ஹல்ப் லைனில் வந்து ஒழுங்கா சொல்லிக்கொடுக்காத அம்மாமேல் திரும்பியது. கடையில் விற்கும் இட்லி 10 ரூபாய் என்றால் இட்லி செய்வது எப்படின்னு கேட்டு போன் செஞ்ச காசுக்கு ஒருவாரம் கடையில் வாங்கி சாப்பிடலாம் என்பது மறைக்கப்பட்ட தகவலாகவே போனது.

பிறகு அடுத்த நாள் ஆபிஸ் போய் இருந்த பொழுது போன் வந்தது...மகிழ்ச்சி பொங்க மனைவி என்னங்க இட்லி மாவு வெள்ளையாகவே வந்துட்டுங்க என்றாள். இன்னைக்கு இரவு இட்லிதான் டிபன் ஓக்கேவா என்றாள். அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் கூட இத்தனை சந்தோசப்பட்டு இருப்பானா என்பது சந்தேகமே! இட்லி மாவு வெள்ளையாகவே வந்ததுக்கு சந்தோசப்படும் புது மனைவியை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று சந்தேகத்திலேயே பொழுது போனது... 6 மணிக்கு வீட்டுக்கு போனதும்...கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்று போன மனைவி மணி 8 ஆகியும் வெளியில் வரவில்லை. இப்பொழுது என்ன பிரச்சினை என்று தெரியவில்லையே என்று காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்தவனாக என்ன நடக்கிறது என்று உள்ளே எட்டிப்பார்த்தான்...இட்லி பானையை மூடுவது தீக்குச்சி வெச்சி குத்திப்பார்ப்பதுமாக மனைவி பதட்டத்துடன் இருந்தாள். என்னம்மா என்ன பிரச்சினை என்றவனிடம்...இட்லி வேகவே மாட்டேங்குதுங்க என்றாள்...

இட்லி பானையை அடுப்பில் வைக்க சொன்ன உங்க அம்மா ஸ்டவ்வை பத்தவைக்க சொல்ல மறந்திருப்பாங்க என்று மனசுக்குள் நினைத்தப்படியே அடுப்பு எரிகிறதா என்று பார்த்தவனுக்கு பகீர் என்று இருந்தது...கார்த்திகைக்கு கொளுத்தும் சொக்கப்பானையை போல் அடுப்பு கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருந்தது. அப்படியும் இட்லி வேகவில்லையா என்ற சந்தேகம்
மேலோங்க இட்லி பானையினுல் எட்டிப்பார்த்தவனுக்கு மயக்கமே வந்துவிட்டது...இந்த பாரும்மா இது தண்ணியை விட தண்ணியாக இருக்குமா...இதை ஒருவாரம் அடுப்பில் வெச்சி வேகவிட்டாலும்
இட்லியா வராதும்மா...அதை அப்படியே அடுப்பில் வெச்சி கிண்டி வத்தமாவு மாதிரி கூழா ஆக்கிக்கொடு ஒரு டம்ளர் குடிச்சிட்டு படுக்கலாம் என்றான்...முதன் முதலாக இட்லி கூழ் குடிச்சவன் என்ற பெருமைக்கு சொந்தக்காரன் என்ற பந்தா கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தான் சஞ்சய்.

தினம் தினம் இப்படி புதுப்புது அனுபவங்கள் கிடைத்தன சஞ்சய்க்கு... இன்று விடுமுறை ஆகவே வீட்டில் இருந்தவனிடம் கூப்பிட்டு ஸ்கேல் கேட்டதும் ஸ்கேல் எடுத்து வந்தான்...என்னதான் செய்கிறாள் மனைவி என்று பார்த்தவன் விக்கித்துப்போனான்...எலும்பிச்சை பழ அளவு புளி என்று அம்மா சொல்லியதால் எலும்பிச்சை பழம் என்ன அளவுன்னு அளக்க ஸ்கேல் கேட்டு இருக்கிறாள் என்று புரிந்தது...என்னங்க கை புளியா இருக்கு...கொஞ்ச அளவு சொல்றேன்
அந்த பேப்பரில் எழுதுங்க விட்டம் 6செ.மீ. உயரம் 5 செ.மீ என்று சொல்லிக்கொண்டே போய்கொண்டு இருந்தாள் மனைவி...

துபாயில் இருந்த நண்பர் சரவணனுக்கு போன் செய்து மாமா இதுக்கு எல்லாம் எப்ப மாமா விடிவு வரும் என்று கேட்டான் சஞ்சய்...மாமா காப்பி குடிக்கிறவங்களை கேட்டு இருக்க கடித்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் சித்தார்த் பற்றி கேள்வி பட்டு இருக்கியா? மிளகாய் தூள் போட்ட ரசம் சாப்பிடும் கென் இவர்களுக்கு மத்தியில் நீ தேவலாம் மாமா...என்று அவன் சொன்ன ஆறுதலைக்கேட்டு நிம்மதியாக தூங்கப்போனான் சஞ்சய்.


மகளிர் தின வாழ்த்துக்கள்!


36 comments:

said...

:))))))))))))))

said...

உன்னைக்கொன்னா என்ன :)

said...

ஹாஹா.. சக்க லொள்ளு..

ஆனாலும்.. அந்த ஸ்கேல் எடுத்துட்டுப்போனது கொஞ்சம் ஓவர் தான்.. ஹிஹி..

said...

//என்னங்ங்ங்ககன்னு ஒரு குரல் வந்த திசையை நோக்கி ஓடும் பொழுதே...அந்த என்னங்க குரலில் இருப்பது பதட்டமா? இல்லை அபயமான்னு கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்தவனாக ஓட்டமாக ஓடிப்போய் நின்றான்...//

இந்த விவரிப்பு.. கலக்கல் ;)

said...

பஸ்-ல ஒரு தகவல் சொன்னா தப்பா! இப்பிடியா....

said...

மகளிர் தின வாழ்த்துகள் :)

said...

:))))))))

மகளிர் தின வாழ்த்துகள்

said...

உங்க குழுவில் இன்னொருத்தர விட்டுட்டீங்களே?

said...

haa haa..............

said...

:)))

said...

மகளிர் தின வாழ்த்துகள்.

said...

//முதன் முதலாக இட்லி கூழ் குடிச்சவன் என்ற பெருமைக்கு சொந்தக்காரன் என்ற பந்தா கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தான் சஞ்சய். //

சார் உப்புமாவ குடிக்க குடுத்தவரு. மேடம் இட்லிய குடிக்க குடுத்துருக்காங்க.
நல்ல ஜோடிப் பொருத்தம்டா மச்சி.

ஆனா நெக்ஸ்ட் நீ கேயமுத்தூர் போறப்ப அண்ணப்பூர்ணாலயே சாப்பிட்டுட்டு போ, இந்நேரம் பய பதிவ வீட்ல காட்டிருப்பான். எப்ப போனாலும் உனக்கு ஒரு ஸ்பெசல் இட்லி ஜூஸ் கிடைக்கும்டே.

said...

மாமா.. உன் தங்கச்சியும் படிச்சிட்டா மாமா படிச்சிட்டா.... அடுத்து நீ வரப்போ, அவ கையால தான் சமையலாம். இருக்குடி மவனே உனக்கு.. :))))

said...

:))))))))))))

முடியல, குசும்பா....;))))))

said...

அப்ஜக்சன் யுவர் ஆனர்... மகளிர் தினமும் அதுவுமா தங்கமணியை degrade செய்யும் இந்த பதிவை அப்பாவி தங்கமணிகளின் பிரதிநிதி என்ற வகையில் வன்மையாக கண்டிக்கிறேன்... ரங்கமணிகள் இட்லி செஞ்சு பழகக்கூடாதுனு எந்த இ.பி.கோ'ல இருக்கு, சொல்லுங்க பாப்போம்...செஞ்சு பாத்தால்ல தெரியும் சங்கதி....:-))))

ஹும்ம்.... என் இட்லி கதையா விட இது பெரிய வம்பா இருக்கும் போலியே... நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க மிசஸ் சஞ்சய், இது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல, ஒரு கை பாத்துடுவோம்...:))

இனிமே வீட்டுக்கு வீடு வாசப்படினு சொல்றதுக்கு பதிலா... வீட்டுக்கு வீடு இட்லி கடினு வெச்சுக்கலாம்னு தோணுது...ஹி ஹி ஹி....:))

அது சரி... உங்களுக்கு கோயமுத்தூரா? இல்ல குசும்பு கொஞ்சம் தூக்கலா இருக்கேனு கேட்டேன்... :))
(நம்மளுக்கும் கோயமுத்தூர்தானுங்க அண்ணே...:)))

said...

என்னமோ சஞ்சய பெரிய நளபாகன் ரேஞ்சில வெக்கிற பெரிய கொடுமை. அந்தப் புள்ள பாவம், நல்லா சமைக்கிது எல்லாரும் சொல்றாங்க. நல்லா உக்காந்து கட்டிபுட்டு உங்க பேர்ல சஞ்சய் பதிவு போடுறது ஒரு பெரிய துரோகம்.(இந்து ஒரு நள்பாகி- நாள பின்ன சோறு வேணாமா?). குசும்பா உனக்கு ஊருக்கு போனா வயித்தால போவும், சாக்கிரதை

said...

குசும்பரே கலக்கல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

said...

சமையல் தெரியாமல் சமையல் புத்தகத்தை வச்சு சமைச்சு கணவனின் வயிற்ரை நெருப்பில வாட்டுரவங்களும் இருக்கு
http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_5363.html

said...

தல நீங்க பீல் பண்ணி எழுதிருக்கரத பாத்தா உங்க சொந்த கதையா இருக்குமாட்ட தெரியுதே :-))

said...

http://www.youtube.com/watch?v=CDznvLtwbzY&feature=fvwrel

said...

//என்னங்ங்ங்ககன்னு ஒரு குரல் வந்த திசையை நோக்கி ஓடும் பொழுதே...அந்த என்னங்க குரலில் இருப்பது பதட்டமா? இல்லை அபயமான்னு கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்தவனாக ஓட்டமாக ஓடிப்போய் நின்றான்...//
sema ragalai , my god , u made my day , i kept laughing,imagining this with Sanjai and his wife.

said...

அடங்கொன்னியா... உம்ம அக்கிரமத்துக்கும் அழிச்சாட்டியத்துக்கும் ஒரு அளவே இல்லையா :)))

said...

சஞ்சய் வீட்டுக்காரம்மா மட்டும் இதைப் படிச்சுது, இந்த மாதிரி நண்பர்களை வைத்திருப்பதற்காகவே இரண்டு நாளுக்கு அவருக்கு எல்லாமே கட். :)))))))))))))

said...

ஹா, உங்களால மட்டும் தான் இப்படி நேர்ல பாத்தாப்புல சிரிக்க வெக்க முடியும்.. லொள்ளி ஒதறிட்டீங்க போங்க ..

என்னிக்காச்சும் சஞ்சய் வீட்டுக்கு போறப்போ அவர் மிசஸ் இல்லாத நேரத்த விசாரிச்சுட்டே போங்க.. :)

said...

:))))))))))))))))))

said...

ROTFL :))))))

said...

ஹா ஹா ...சூப்பரு...

Anonymous said...

அண்ணே இதுவே பாராவா இல்ல ..,எங்கூட்ல என் தங்கை செய்ஞ்ச மைசூர் பாக்க ...,கூக்கர் ல ஐஞ்சு விசில் விட்டு தான் தின்ன முடிஞ்சது ..,நல்லா நல்லி எலும்பு மாதிரி

said...

:))))))) Supeeeeerrrr

said...

லொல்ளா...

said...

ROTFL :))))))

said...

ஹா... ஹா.ஹா... சஞ்ஜய்க்கு திருமண வாழ்த்தே சொல்லல...

இப்ப சொல்லிக்கிறேன்...

வாழ்த்துகள் சஞ்ஜய்...

said...

:)))))))))))))

said...

நன்றி விஜி

நன்றி கென்

நன்றி செந்தில்வேலன்

நன்றி இரா.சிவக்குமரன்

நன்றி சுபைர்

நன்றி ராஜசூரியன்

நன்றி கேபிள்

நன்றி மேனகா

நன்றி விதூஸ்

நன்றி முகிலன்

நன்றி ஜோசப்பு

நன்றி தஞ்சாவூரான்

நன்றி அப்பாவி

நன்றி இளா

நன்றி சக்தி

நன்றி tamilbirdszz

நன்றி கார்த்திக்

நன்றி டாக்டர்

நன்றி விந்தைமனிதன்

நன்றி சுல்தான் பாய்

நன்றி பிரதீபா

நன்றி மங்சிங்

நன்றி சீனி

நன்றி பனங்காட்டு நரி

நன்றி ராம்குமார்

நன்றி காவேரி கணேஷ்

நன்றி சாந்தப்பன்

நன்றி அறிவிலி

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

said...

Sema soooperappu... Kalakkiteenga...

said...

ROFL :)