Monday, March 14, 2011

வைகோ போட்டோ டூன்ஸ் 15-3-2011

பீ கேர்புல்...என்னைய சொல்லிக்கிட்டேன்
எவ்வளோ கொடுத்தாலும் வாங்கிப்பாரு...வைகோ ரொம்ப நல்லவருன்னுட்டாங்கய்யா அம்மா!

தாயகம் தாய்கழகத்துடன் இனைகிறது!

சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு...

கூடவே இருக்கனும் என்று நினைக்கும் எங்களுக்கு இதுமாதிரி நெருக்கடியை கொடுக்குறீயே இது நியாயமா? உனக்கு என்ன பாவம் செஞ்சோம்!

************

டரியள் டக்ளஸ்

செய்தி: 1993ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த வைகோ இன்று வரை தனது கட்சியை பெரிய அளவில் சிந்தாமல், சிதறாமல் கட்டிக் காத்து வருகிறார்.

டரியள் டக்ளஸ்: சிந்தாம சிதறாமய்யா?யோவ் அவரு என்னா பழனிக்கு பால்காவடியா எடுத்துக்கிட்டு வராரு...கட்சி நடத்துறாருப்பா கட்சி நடத்துறாரு.


செய்தி:இடையில் எத்தனையோ பெரிய தலைகள் எல்லாம் கட்சியை விட்டு வெளியேறியபோதும் கட்சி உடையாமல் காத்து வந்துள்ளார் வைகோ.

டரியள் டக்ளஸ்: ஆமா ஆமா அவரே இன்னும் கட்சியை விட்டு வெளியேராம கட்சிக்கு உண்மையா இருக்காருன்னு சொல்லுங்கப்பா!


15 comments:

சமுத்ரா said...

அனைத்தும் அருமை..

Unknown said...

வைகோ நெலம உங்களுக்கு காமடியா போச்சு இல்ல?

இருந்தாலும், சரத்குமாருடன் சீட் பங்கீடு ஓவர் குசும்பு :))

Unknown said...

:))

settaikkaran said...

கலக்கலுங்க கலக்கல்! :-))

வித் யுவர் பர்மிஷன், நானும் இது மாதிரி ட்ரை பண்ணலாமுன்னு இருக்கேன். :-)

Anonymous said...

சகோதரி பெரிய மனசு பண்ணி எங்களுக்கு எட்டு சீட் கொடுத்தாலும், அவ்வளவு தொகுதியில் நிற்க வேட்பாளருக்கு நாங்கள் எங்கே போவது. இந்த அவமானத்தை ஏற்படுத்தியதாலையே நாங்கள் அதிமுகாவில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளோம்.

விஜி said...

:))))))))

Unknown said...

:-)))))))))

ttpian said...

அட படுபாவி!
எதற்கு இந்த பிழைப்பு?
இதைவிட மயிர்………… வேலைக்கு போகலாம்!

Bairave said...

ஜெயா செய்தது தெரிந்தோ? தெரியாமலே? ஆனால் எந்த கூட்டணியில் இருந்தாலும் தன்னுடைய கொள்கையை கூட்டணி தர்மமம் என்ற பெயரில் அடகு வைக்காமல் இருந்த ஒரே அரசியல்வாதி வைகோ மட்டும்தான். அவரை கலாய்க்கும் முன்பு ஈழத் தமிழர்களுக்கான அவரது போராட்டத்தையும், பிரிட்டன் பார்லிமெண்ட்டில் உரையாற்றிய போது அவர் சிந்திய கண்ணீரையும் ஒரு நிமிடம் நினைவு கூர்வதுதான் முறை. முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் அவரது போராட்டமும் குறைவானதல்ல. தமிழன் என்ற உணர்வு எதேனும் நமக்குள் மிச்சம் இருந்தால் அவர் தனிபோட்டி என்று முடிவு செய்யும் பட்சத்தில் நம் கரங்களையும் அவர்க்காக நீட்டுவதுதான் அவரது தமிழ்ப்போராட்டங்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவாக இருக்கும், யோசியுங்கள் சகோதரர்களே, இது சிந்திக்க வேண்டிய வேளை.

உண்மைத்தமிழன் said...

வைகோ அண்ணன் பாவம்டா தம்பி..! ஏன் இந்த நேரத்துல போயி நீயும் சேர்ந்து கொடுமைப்படுத்துற..? நாட்டுல நல்லவங்களுக்கு காலமில்லை..! அவ்ளோதான் சொல்வேன்..!

Unknown said...

கலாய்க்க போட்டோ இருந்தா அனுப்ப சொல்றீங்க..உங்க போட்டோவை போட்டு கலாய்க்கலாமே!!

ஜோதிஜி said...

அரசியலுக்கும் எப்போதும் தேவை சந்தர்ப்பவாதம். அதிலும் தெளிவான சந்தர்ப்பவாதம்.

FARHAN said...

ஹஹஹஹாஹ்

அப்துல்மாலிக் said...

பாவம் ஒரு புலியை எலியாக்கிட்டீங்க குசும்பா :) :)

தறுதலை said...

வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)