Saturday, February 19, 2011

கஞ்சாவா வெச்சிருந்தேன்?

மனைவியும் மகனும் இரண்டு மாசம் ஊருக்கு போய் இருந்தார்கள். அதைப்பற்றிய பதிவு.

ஊருக்கு கிளம்பும் பொழுது எப்படிடா தனியாப்போகப்போகிறார்கள் குட்டி பையனை வெச்சிக்கிட்டு தனியா சமாளிப்பது கஷ்டமாச்சேன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். சரியா ஏர்போர்ட்டுக்கு கிளம்பும் பொழுது நண்பன் சுபைரிடமிருந்து போன்...

சுபைர்: மச்சி எங்கடா இருக்க?

”நான் வீட்டுல இருக்கேன் டா”

சுபைர்: ”சரி ஏர்போர்ட்டுக்கு வரமுடியுமா?”

”ஏன் டா என்ன விசயம்?”

”ஆசிப் அண்ணாச்சிக்கிட்ட 200 திர்ஹாம் பணம் கொடுக்கனும்...நீ வெட்டியாதானே இருப்ப...வந்து வாங்கிக்க நான் இப்ப ஊருக்கு போறேன்...அவருக்கிட்ட கொடுத்துடு”

“எந்த ஏர்போர்ட் மச்சி? மனைவியும் புள்ளையும் ஊருக்கு போறாங்க” அவங்களை அனுப்ப போறேன்...அனுப்பிட்டு வருகிறேன்...

“டெர்மினல் 2”

பிளைட்?

”ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்- திருச்சி”

கடவுள் இருக்கான் கொமாரு கடவுள் இருக்கான்...மச்சி எவ்வளோ நேரம் ஆனாலும் உனக்காக வெயிட் செய்கிறேன்...மனைவியையும் புள்ளையும் அதே பிளைட்டில் தான் போறாங்க...கஷ்டம் பார்க்காம நீ அழைச்சிக்கிட்டு போய்டு.

“மச்சி இதுல என்ன டா கஷ்டம்...நான் பார்த்துக்கிறேன்”

சுபைர் கூட ஏர்போர்ட்டு உள்ளே அனுப்பிவிட்டு செக்கின் எல்லாம் முடிச்ச பிறகு...ஒரு 30 நிமிடம் கழிச்சி போன் செஞ்சேன். மச்சி பையன் ஜாலியா என் கூட விளையாடுறான்...நீ கவலைப்படாத.

டேய் நான் கவலைப்படுவது அவனை நினைச்சி இல்ல...உன்னை நினைச்சிதான் என்று வாய் வரை வந்த வார்த்தையை கடிச்சி மென்னு உள்ளே முழுங்கிவிட்டு....ஹி ஹி அப்படியா மச்சி ரொம்ப சந்தோசம் என்று விட்டு விட்டேன்.

அப்புறம் ஆரம்பிச்சிருக்கு அவனுக்கு...ங்கொயா ஒரு நிமிசம் அவனை உட்காரவிடல...போட்டு ட்ரில் வாங்கியிருக்கான்.

ஊருக்கு போய்ட்டு திரும்பி வந்தவன் போன் செஞ்சி சொன்னது....”மச்சி இனி எப்ப ஊருக்கு போனாலும் யாருக்கிட்டேயும் சொல்லிட்டு போகக்கூடாது மச்சி:))”

************
ஊருக்கு கிளம்பும் பொழுது என்னங்க ப்ரிஜ்ஜில் மாவு இருக்கு, வத்தக்குழம்பு மிக்ஸ் இருக்கு, இது மிளகு தூள்,சாம்பார் பொடி அதோ அதுல இருக்கு....

நிறுத்து நிறுத்து...2 வருசமாதான் நீ சமைச்சி போடுற. நாங்க எல்லாம் பத்துவருசமா சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம் விட்டா ...”சட்டியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்றவைக்கவேண்டும்” என்று சொல்ல ஆரம்பிச்சிடுவ போல. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்றேன்.

அதன்பிறகு இரண்டு மாசம் சாப்பாட்டு நாய்படதா பாடு பட்டேன்...ங்கொய்யால இந்த மலையாளி கடையில் போய் காலையில் சாப்பிட்டா மதியம் பசிக்காது...மதியம் சாப்பிட்டா மறுநாள் வரை பசிக்காது. இப்படி போச்சு இரண்டு மாசம். போன வாரம் எல்லாம் வருகிறார்கள் என்றதும் வீட்டை எல்லாம் கிளீன் செஞ்சி பக்காவா வெச்சிருந்தேன்.

கிளம்பும் பொழுது...”ஆமா என்ன கலர் ட்ரஸ் போட்டு இருக்க?”

”ஏங்க?”

“இல்ல ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வரும் பொழுது அடையாளம் கண்டுபிடிக்க”

“வந்து கவனிச்சிக்கிறேன்”மறுநாள் காலையில் ....”என்னங்க என்ன இது?”

”கடலமுட்டாய்”

”அது எதுக்கு பிரிஜ்ஜில் இருக்கு?”

”நமத்து போகாம இருக்க அங்க இருக்கு...”

”காலியான கடலமுட்டாய் கவர் நமத்து போனா என்ன போகாட்டி என்ன?”

“இது என்னங்க?”

” சிப்ஸ் ....ஸ்ஸ்ப்பா திரும்பவும் முதலேந்தா?....அவ்வ்வ்
என்ன நீ? என்னமோ ப்ரிஜிக்குள்ள கஞ்சா வெச்சிருந்த மாதிரி இப்படி என்கொயரி செய்யிற?” தனியா இருந்தா அப்படிதான்...

********
ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து பயபுள்ள ரவுசு தாங்கல. எதுவும் கோவம் வந்தா பத்த வெச்ச சங்கு சக்கரம் மாதிரி சுத்தி சுத்தி அழுவுறான். அதை பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருது, சிரிச்சா அதுக்கும் கோவம் வருது.

மொபைலை எடுத்து காதுல வெச்சிக்கிட்டு அல்லோ ....ம்...ம்...ம்... காவுனா...ம்ம்ம்ம்... என்று எது எதுவா வாய்க்கு வந்த வார்த்தைய சொல்லிட்டு நடு நடுவில் ம்ம்ம் என்று பெரிய மனுசன் மாதிரி ம்ம்ம் போட்டுக்கிறான். சில சமயம் கையால் பிடிச்சுக்காம கழுத்தை சாய்த்து பிடிச்சிக்கொண்டு நடந்துக்கொண்டே பேசுறான். சின்ன புள்ளைங்க செய்யும் பெரிய மனுச தனத்தை ரசிக்க முடியுது.

பெரியவங்க செய்யும் சின்னபுள்ள தனத்தை ரசிக்க முடியலையே ஏன்? ஏன் ? ஏன்?

மெசேஜ் சொல்லியாச்சு அவ்வளோதான் இன்னைக்கு கதை...கிளம்புங்க கிளம்புங்க...

25 comments:

said...

பாத்து... சங்கு சக்கரம் உஷார்

said...

எங்க வீட்டுல ரெண்டு பிள்ளைங்களும் மிட்டாய் சிப்ஸ் ந்னு எதுன்னாலும் சாப்பிட்டுட்டு கவரை ஃப்ரிட்ஜ்ல தான் வைக்கிறாங்க.. ஏன் வைக்கிறீங்கன்னு கேட்டா பதிலே கிடையாது.. :(

said...

::)))

said...

ரொம்ப நாள் கழிச்சு உண்மை பேசி இருக்க... :)))

said...

சின்னப்புள்ளைத்தனம்ங்கிறது குழந்தைகள் பண்ணாத்தானே நண்பா ரசிக்க முடியும்.. நல்ல கதை

said...

//எங்க வீட்டுல ரெண்டு பிள்ளைங்களும் மிட்டாய் சிப்ஸ் ந்னு எதுன்னாலும் சாப்பிட்டுட்டு கவரை ஃப்ரிட்ஜ்ல தான் வைக்கிறாங்க.. ஏன் வைக்கிறீங்கன்னு கேட்டா பதிலே கிடையாது.. :(
//

அக்கா இதென்ன கேள்வி? நமுத்து போகாம இருக்க வெச்சிருப்பாங்க.. ;)

said...

ஜீவ்ஸ் ரொம்ப டேஞ்சரோ?

முத்துலெட்சுமி & டாக்டர்.காயத்ரி எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கிறதே இல்லைன்னு திட்ட வேண்டியது...எடுத்ததை எடுத்த இடத்தில் வெச்சாலும் திட்டவேண்டியது என்ன கொடுமை சரவணன் இது?

நன்றி மின்னல்

நன்றி சுபைர்

நன்றி கவிதை காதலன்

said...

//
அக்கா இதென்ன கேள்வி? நமுத்து போகாம இருக்க வெச்சிருப்பாங்க.. ;)//

:-))))

said...

இந்த பதிவுகூட சின்னபுள்ளதனமா தான் இருக்கு ::))))

said...

//எங்க வீட்டுல ரெண்டு பிள்ளைங்களும் மிட்டாய் சிப்ஸ் ந்னு எதுன்னாலும் சாப்பிட்டுட்டு கவரை ஃப்ரிட்ஜ்ல தான் வைக்கிறாங்க.. ஏன் வைக்கிறீங்கன்னு கேட்டா பதிலே கிடையாது.. :(//

என் புள்ள அங்க வைக்கறது என் வேல "அதை எடுத்து போடறது உன் வேல" ன்னு சொல்லுவான். :)

//சங்கு சக்கரம் மாதிரி சுத்தி சுத்தி அழுவுறான்//

நீங்க புஸ்வானம் மாதிரி பொங்குங்க.... சுத்தறத நிறுத்திட்டு உங்களை பார்ப்பான். .அப்புறம் சுத்தவே மாட்டான் :)

said...

மெசேஜ் சூப்பர்.

said...

.”மச்சி இனி எப்ப ஊருக்கு போனாலும் யாருக்கிட்டேயும் சொல்லிட்டு போகக்கூடாது மச்சி:))”//
பொன்னெழுத்துகளில் பொறிக்க வேண்டிய வார்த்தைகள்.

said...

கஞ்சாவா வெச்சிருந்தேன்// ம்ம்கும் நினைப்புதான் பொழப்பை கெடுக்குது :))

said...

மச்சி உன் புள்ளைகிட்ட நான் இன்னமும் நிறைய எதிர்ப்பாக்குறேன்னு சொல்லுடா..

said...

//சுத்தி சுத்தி அழுவுறான்// - ரிவர்ஸ்ல சுத்தி அதை ந்யூட்ரலைஸ் கூட பண்ணிக்குவாங்களே?

அனேகமா சுபைர் இனிமே ஊருக்கு போகும்போது குட்டீஸ் போகாத பிளைட்ல போனாலும் போவாரு :)

//போன வாரம் எல்லாம் வருகிறார்கள் என்றதும் வீட்டை எல்லாம் கிளீன் செஞ்சி // - All rangamanis Same blood.

said...

//எதுவும் கோவம் வந்தா பத்த வெச்ச சங்கு சக்கரம் மாதிரி சுத்தி சுத்தி அழுவுறான்//
நினைச்சு பாத்தாலே சிரிப்ப அடக்கமுடியல.அப்ப நேர்ல பாத்தா?.அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமோ.

said...

\\எடுத்ததை எடுத்த இடத்தில் வெச்சாலும் திட்டவேண்டியது என்ன கொடுமை சரவணன் இது?//

சொல்பேச்சுக் கேக்கரதுங்கரது இது தானா.. நல்லபிள்ளைங்களப்பா.. :)

said...

”என்ன கலர் ட்ரெஸ் போட்டிருக்க?”//

:-)))

said...

//பெரியவங்க செய்யும் சின்னபுள்ள தனத்தை ரசிக்க முடியலையே ஏன்? ஏன் ? ஏன்?//
ம்... சும்மா எகனை மொகனைக்கா சொன்னதுக்கு போய்
நான்...... பஸ்ல... :(

said...

//
” சிப்ஸ் ....ஸ்ஸ்ப்பா திரும்பவும் முதலேந்தா?....அவ்வ்வ்
என்ன நீ? என்னமோ ப்ரிஜிக்குள்ள கஞ்சா வெச்சிருந்த மாதிரி இப்படி என்கொயரி செய்யிற?” தனியா இருந்தா அப்படிதான்...//

ஹி ஹி ஹி

said...

அருமை

said...

//வீட்டை எல்லாம் கிளீன் செஞ்சி பக்காவா வெச்சிருந்தேன்.// சரி.

//மறுநாள் காலையில் ....”என்னங்க என்ன இது?”
”கடலமுட்டாய்”
”அது எதுக்கு பிரிஜ்ஜில் இருக்கு?”
”நமத்து போகாம இருக்க அங்க இருக்கு...”
”காலியான கடலமுட்டாய் கவர் நமத்து போனா என்ன போகாட்டி என்ன?”//
ஆஹா...கிளீன் பண்ணும்போது பிரிஜ்ஜ தூக்கிப்போட மறந்துட்டீங்க போல...அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

ஃப்ரிட்ஜ்ல எத எத வெக்கறதுன்னு விவஸ்தையே இல்ல எங்க வீட்டு ஆளுக்கும் :)... காஃபி, ஃபோன் இதெல்லாம் எப்படியோ குழந்தைகளுக்கு பழகிடுது... இப்போவே 'ஆஆஆஆஅ'ன்னு அப்பாகிட்ட பேச்சு போன்ல... :))

said...

Tamil FM's Online & Tamil Kavithiagal ....... http://tamillovesms.blogspot.com/

said...

IPL Cricket Online...... http://ipl-worldcup-cricketonline.blogspot.com/