Tuesday, January 11, 2011

புத்தகம்போட & விற்க சில குறிப்புகள்!

கல்யாணம் ஆகி நாலு மாசத்திலேயே "என்ன விசேசம் இல்லீயா"ன்னு கேட்பது மாதிரி, ஒருத்தர் வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆயிட்டா...என்னாய்யா புக்கு ஏதும் போடலீயா என்று கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதுக்காக பதிவு எழுத ஆரம்பிக்கும் முன்பே எதிர்காலத்தில் எழுதப்போகும் புக்கின்னு எண்ணிக்கையை பொறுத்து அதன் விளம்பரத்தை போட பிளாக்கின் வலது மூலையிலோ, அல்லது இடது மூலையிலோ...அல்லது வாஸ்த்துப்படி ஈசானி மூலையிலோ கொஞ்சம் 5cm by 5cm க்கு காலியாக இடம் விட்டு வைப்பது நல்லது.

புத்தகம் உள்ளே என்ன எழுதப்போகிறோம் என்பதை விட...வெளியே அட்டைப்படமும், பின் பக்க அட்டையில் போட ஏதுவாக உங்கள் புகைப்படமும் கலக்கலாக இருக்கவேண்டியது அவசியம்.

பின்பக்க அட்டையில் போடப்போகும் உங்கள் புகைப்படம் எப்படியிருக்கவேண்டும் என்று முதலில் பார்த்துவிடுவோம்.

1) கேமிராவை நேருக்கு நேராக பார்க்க கூடாது.

2) ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈன்னு எல்லா பல்லும் தெரியிர மாதிரி இளிக்கக்கூடாது.

3) அதுக்காக உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு உராங்க் உட்டான் மாதிரி மூஞ்சை வெச்சிக்காம இருக்கனும்.

4) உடம்பை 45 டிகிரியும், தலையை லைட்டா 30டிகிரியும் திருப்பி அப்படியே ஸ்டைலா போஸ் கொடுக்கனும்.(பரிசல்காரனின் புகைப்படத்தை பார்க்கலாம்)

5) தலைவலி வந்தால் தலையை பிடிச்சிப்பது மாதிரி இல்லாமல் ஒரு விரலை மடக்கி அப்படியே ஸ்டைலாக கன்னத்தில் வைத்து போஸ்கொடுக்கனும்.

6) கண்ணாடி போட்டு இருந்தால் அதில் ஒரு பக்கம் பிரேம்மை இருவிரல்களால் ஸ்டைலாக பிடித்துக்கொள்ளலாம்.(டவுட் இருப்பவர்கள் கேபிள் புகைப்படத்தை பார்க்கவும்)

உங்களுக்கு வாசகர்கள் லட்சக்கணக்கில் இருந்தால் பதிப்பகங்கள் உங்களை தேடி வரும், இல்லை என்றால் கொஞ்சம் நீங்கள் செலவு செஞ்சு புக்கு போடுற மாதிரி இருக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விசயம்... புக்கு எழுத எடுத்துக்கிட்ட நாட்களை விட...புக்கு ரிலீஸ் செய்ய பிளான் செய்யும் நாட்கள் அதிகமாக இருக்கனும். யார் யாரை கூப்பிடனும், எப்படி கூப்பிடனும், எங்கே புத்தக ரிலீஸை வைக்கனும் என்று எல்லாம் பக்காவா பிளான் செய்யனும். ஏதும் ஒரு சினிமா பிரபலம் வருவது ரொம்ப முக்கியம்.

சரி புத்தகம் எல்லாம் பிரிண்ட் ஆகி வந்துவிட்டது அதை விற்க என்ன செய்வது?

புத்தக கண்காட்சியை ஒட்டி உங்கள் புத்தகங்கள் பிரிண்ட் ஆகி வருவது மாதிரி பார்த்துக்கவும்.

புத்தக கண்காட்சியில் உங்கள் புத்தகம் இருக்கும் ஸ்டாலுக்கு அருகிலிருக்கும் அக்கம் பக்கத்து கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரம் பார்த்து ஒரு பையனை அனுப்பி அண்ணே "அவரு" எழுதிய அந்த நாவல் இருக்கான்னு சத்தம் போட்டு கேட்கனும்...அவரும் இல்லை என்பார்...திரும்ப சத்தமாக ரொம்ப நல்லபுக்காம் வந்ததும் வித்துவிடுகிறதுன்னு சொல்றாங்கன்னு சத்தம் போட்டு சொல்லனும். (எப்படி சத்தம் போட்டு சொல்லனும் என்றால் களவானி படத்தில்...ஏஏஏஏஏ ராசு நம்ம பஞ்சாயத்து இல்ல பஞ்சாயத்து பால்டாயில குடிச்சிட்டானாம் என்று சொல்லுவாய்ங்களே அதுமாதிரி சொல்லனும்) திரும்ப அதுமாதிரி சிறிது இடைவெளி விட்டு, வேறு ஒரு ஆளை அனுப்பனும்.

கடையில் இருக்கும் பையனும் கொஞ்சம் சூதனமாக இருக்கனும், ஒருவர் 20 புக்கு வாங்கியிருந்தால் அதை பில் போடும் பொழுது சேஞ் இல்லை என்று சொல்லிட்டு உங்க புக்கையும் சேர்த்து கொடுக்கும் திறமை உள்ளவராக இருக்கனும். இல்லையென்றால் பில் போடும் பொழுது 20புக்குக்கு நடுவில் உங்க புக்கையும் வெச்சி 21க்கு பில்லு போடும் திறமை இருக்கனும். சரி அப்படியும் புக்கு விக்கவில்லை என்றால்...வலைப்பதிவர்கள் கல்யாணம் நடக்கும் பொழுது ஒரு கிப்ட் பேப்பரில் உங்க புக்கை வைத்து பேக் செய்து அவர்களுக்கு கிப்டாக கொடுத்துவிட்டு ஓடிவந்துவிட வேண்டும்.

எங்கயாவது சந்திப்புக்கு போகும் பொழுது யாராவது ஒருவர் தெரியாத்தனமாக பாஸ் உங்க புக்கு கிடைக்கவே இல்லை எங்க கிடைக்கும் என்று கேட்டுவிட்டால், உடனே உள்ளே வெச்சிருக்கும் புக்கை எடுத்து நீட்டிவிடக்கூடாது, முதல் எடிசன் பிரிண்ட் ஆகி வித்துட்டு.இப்ப செகண்ட் எடிசன் பிரிண்ட் செய்ய ஆர்டர் கொடுத்திருக்காங்க ஒரு வாரத்தில் வந்துடும்...உங்க அட்ரஸ் கொடுங்க வந்ததும் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அவர் அட்ரஸை மறக்காமல் வாங்கி வெச்சி, ஒருவாரம் கழித்து அவர் அட்ரஸ்க்கு போஸ்ட் செய்வதுவிடவேண்டும்.

இப்படி எல்லாம் செஞ்சால் நிச்சயம் வெற்றி நமதே!


Note: இவ்விடம் குறைந்த செலவில் புத்தக அட்டைகள், விளம்பர தட்டிகள், Flash விளம்பரங்கள் செய்து தரப்படும். புகைப்படங்களை மேலும் அழகுபடுத்தியும் தரப்படும்.

Note2: என்னுடைய கவிதை தொகுப்பு ஒன்றும், குறுநாவல் இரண்டும், ஒரு சிறுகதை தொகுப்பும், ஒரு நான்லீனியர் இலக்கியமும் அடுத்த வருட புத்தககண்காட்சியில் கிடைக்கும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பதிவும் இங்கே செய்யப்படும்.

38 comments:

said...

:):)

said...

இலவசமா அனுப்பிடுங்க

said...

தல நீங்க சொன்ன யோசனைகளை வைத்து தொடங்கிட வேண்டியதுதான் .

என்னனு மட்டும் கேட்டுறாதிங்க

said...

இந்த எளவெல்லாம் முன்னாடியே எங்கண்ணுல படலையே, இப்புடி ஒரு புண்ணியவான் அப்ப
பிளாக்கு எளுதலையே!
கண்ணைத் துடைத்துக்கொண்டு,
அபாக்கியவதி எளுத்தாளினி

said...

கேபிள் சினிமா வியாபரம் எழுதுன மாதிரி நாம ரெண்டு பேரும் சேர்ந்து புத்தக வியாபரம் எழுதுவோமா மச்சி?

நம்ம ஊர் பதிப்பகங்கள்ல ஆரம்பிச்சு அப்டியே இண்டர்நேசனல் பப்ளிஷர்ஸ் வரைக்கும் கவர் பண்ணி, ஆன்லைன் புக் ஸ்டோர் அமேசான், லைப்ரரி சேல்ஸ் இதையெல்லாம் போட்டு கலந்து கட்டி அடிச்சா சூப்பரா எழுதிடலாம் என்ன சொல்ற ? நான் மட்டுமே எழுதிருவேன், இருந்தாலும் எல்லா புகழையும் நானே எடுத்துக்காம உனக்கும் ஒரு பங்கு தரலாம்னு இருக்கேன். ஒகேன்னா சொல்லு.

said...

பதிவிறக்க எழுத்தாளர்களின் பொற்காலம். ( இன்றைய தினமணிநில் )

said...

புத்தக அட்டைகள், விளம்பர தட்டிகள், Flash விளம்பரங்கள் செய்து தரப்படும். புகைப்படங்களை மேலும் அழகுபடுத்தியும் தரப்படும்.//

எங்களுக்கு ஃப்ரீ தானே?

said...

ரு பையனை அனுப்பி அண்ணே "அவரு" எழுதிய அந்த நாவல் இருக்கான்னு சத்தம் போட்டு கேட்கனும்...அவரும் இல்லை என்பார்...திரும்ப சத்தமாக ரொம்ப நல்லபுக்காம் வந்ததும் வித்துவிடுகிறதுன்னு சொல்றாங்கன்னு சத்தம் போட்டு சொல்லனும்.//

என்னா டெக்னிக்கு?

said...

ஹி.. ஹீ. ஹீ..நன்றிங்க டிப்ஸ்க்கு :)

said...

ஹிஹி! நன்றிங்க! அடுத்த வருசம் புத்தகக் கண்காட்சியிலே சந்திப்போம். உங்க புத்தகத்தை நான் வாங்குறேன். என்னோட புத்தகத்தை நீங்க வாங்கணும். :-)

said...

பாஸ்! பாஸ் உங்களை நான் போட்டோ எடுக்குறேன் பாஸ் அந்த பாக்கியத்தை எனக்குத்தான் நீங்க தரணும்ன்னு கண்டிப்பா கெஞ்சி கட்டளையிட்டுக்கிடறேன்!

துபாய் வந்து போவும் செலவு உம்மோடது!


ஹைய்ய்ய்யா மீ த கோயிங்க் கோயிங்க் 2 டுபாய்

said...

இந்த நாசமா போன சமூகம்தான்,

//கண்ணைத் துடைத்துக்கொண்டு,
அபாக்கியவதி எளுத்தாளினி///

இப்படி எளுத்தாளினிகளின் கண்களிலிருந்து வரும் கண்ணீரை அவர்களே துடைத்துக்கொள்ளும் துர்பாக்கிய நிலைக்கு காரணம் !!

said...

கலக்கல். :-))

said...

குசும்பருக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் காசு வாங்காம ஐடியா குடுக்கற நல்ல மனசு இருக்கு.

அப்புறம் இப்போ இன்னொரு ஐடியா கூட இருக்கே.. பேயோன் மாதிரி ஒரு படமும் வித்தியாசமான பேரும் வெச்சுகிட்டு யாருன்னே தெரியாமலும் பொஸ்தகம் எய்தலாம். ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அவரு யாருன்னே தெரியாம பிரபலமானாரு; நம்மளும் யாருன்னே தெரியாம அடில இருந்து தப்பிச்சிக்கலாம்.

எப்பூடி?

said...

பிரதீபா, இம்புட்டு அப்பாவியா இருந்தா எப்பூடி? மொத்தல்ல நீங்க உலக புகழ் பெறோணும்.
பொறகு பூனை பெயருக்கு இஷ்டத்துக்கு எளுதிட்டு, ப்திப்பகத்துல ஒரு வார்த்த சொன்னா போதும்.
நீங்களும் நானும் பேயோன், பிசாசோன்ன்னு பேர வெச்சிக்கிட்டு இன்னாத்தா எளுதினாலும்
எந்த பதிப்பகம் சீண்டும்??? (வந்து வந்து என்னுடன், உங்களையும் சேர்த்துக்கிட்டது தப்பில்லைதானே)

said...

ramachandranusha(உஷா), //மொத்தல்ல நீங்க உலக புகழ் பெறோணும்//- நம்மன்னு தெரிஞ்சா மக்கள் ஓடிப்போயிருவாங்களே, அங்க தானுங்க பிரச்சனையே :)

//பொறகு பூனை பெயருக்கு// - :))))))

said...

//வலைப்பதிவர்கள் கல்யாணம் நடக்கும் பொழுது ஒரு கிப்ட் பேப்பரில் உங்க புக்கை வைத்து பேக் செய்து அவர்களுக்கு கிப்டாக கொடுத்துவிட்டு ஓடிவந்துவிட வேண்டும்.//

சூப்பர் ஐடியா சார்.

said...

அடடா.... இதையெல்லாம் நான் புத்தகம் எழுதறதுக்கு முன்னாலே சொல்லக் கூடாதோ!

http://kgjawarlal.wordpress.com

said...

இந்த ஐடியாவுக்கெல்லாம் ஏதாவது டிரேட் மார்க் கொடுத்து பேடண்ட் பண்ணிடலாமா? :))

said...

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பதிவும் இங்கே செய்யப்படும்.//அடப்பாவிங்களா???

said...

நன்றி Mr.குசும்பன் .
இப்பொழுது தான் எழுத ஆரம்பித்துளேன்.

அடுத்த புத்தக கண்காட்சிக்கு புத்தகம் ரெடி செய்து விடுகிறேன்.

Awesome ideas.

said...

அடிச்சுக்க ஆளே இல்ல குசும்பன்...அருமை.
ரசிக்க தெரியாதவங்க மனசு லேசா வலிக்குமோ என்ற எண்ணமும் வருது.

said...

மச்சி என்ன மாதிரி அழகா இருக்குறவங்க போட்டோவை கூடவா உன்னால அழகு படுத்த முடியுமா.. technology has improved so much..

said...

//தலைவலி வந்தால் தலையை பிடிச்சிப்பது மாதிரி இல்லாமல் ஒரு விரலை மடக்கி அப்படியே ஸ்டைலாக கன்னத்தில் வைத்து போஸ்கொடுக்கனும்.//

செஞ்சிருவோம்!

said...

குசும்பன் எங்கிருந்தாலும் ஸ்டாலுக்கு வரவும்..

கேபிள் சங்கர்

said...

மாப்பி, இதைப் படிக்கும்போது ஒண்ணு ரெண்டு பதிவர்கள் மனசுக்குள்ளே வந்து போறாங்களே!!!

said...

ஹிஹிஹி... அக்மார்க் குசும்பு ;)

said...

\\Note: இவ்விடம் குறைந்த செலவில் புத்தக அட்டைகள், விளம்பர தட்டிகள், Flash விளம்பரங்கள் செய்து தரப்படும். புகைப்படங்களை மேலும் அழகுபடுத்தியும் தரப்படும்.//

இதையாருமே கண்டுக்கலையே.. என் புக் போடும் போது உங்களிடம் தான் விளம்பர ஆர்டர் ..:)

said...

உன்னத இலக்கிய சேவையை பொதுப்புத்தியால் நையாண்டி செய்யும் உன்ன மாதிரி ஆட்கள் புழங்கும் மாசு பட்ட தமிழ் சூழலில் என் போன்ற படைப்பாளிகள் ஒதுங்கி நிற்பது காலத்தின் கட்டாயம்.

அனுஜன்யா

said...

நன்றி Samudra

நன்றி எல்.கே

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி உஷா மேடம், நீங்க எல்லாம் இந்த லிஸ்டில்
கிடையாது:))

சேசப்பு மச்சி அல்ரெடி ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரிக்காரன்
என்னை எழுத சொல்லி அட்வான்ஸ் 101 ரூபாயும் கொடுத்துட்டான்
உன்னை கூட்டு சேர்த்துக்க முடியாது!

நன்றி விருபா

நன்றி விஜி... அடிச்சதை வேற என்ன செய்யிறது...அப்படிதான்
கொடுத்து ஆகனும்.

நன்றி இராமசாமி

நன்றி சேட்டைக்காரன்..டீல் ஓக்கே!

நன்றி ஆயில்யன்...புக்கு அட்டைப்படத்துக்கு
பி.சி ஸ்ரீராம் போட்டோ எடுத்து தருவார்..
உள்ளே இருக்கும் படத்துக்கு வேண்டும்
என்றால் நீங்க எடுக்கலாம்...(அப்புறம்
போட்டோ ஷெசன் ஷூட்டிங் அயர்லாந்தில்)

நன்றி பிரதீபா...ஒழுங்கா சொல்லுங்க வித்தியாசத்தை...
அவரு யாருன்னே தெரியாம பிரபலமா இருக்காரு.
நாம யாருக்குமே தெரியாம பிரபலாமா இருக்கோம்:)))

நன்றி அமுதா கிருஷ்ணா

நன்றி ஜவகர்

நன்றி சுல்தான் பாய்


நன்றி ஜாக்கி சேகர்

நன்றி அருள்

நன்றி வடுவூர் அண்ணே

நன்றி சந்தோஷ்...(கொஞ்சம் கஷ்டம் தான் மச்சி)

நன்றி தருமி அய்யா

நன்றி கேபிள்...உங்க கடை கல்லாவில்தான் இருக்கிறேன்

நன்றி சித்தப்பு...அப்படியே கமுக்கமா இரு..வெளியில் சொல்லி
என்னை அடிவாங்க விட்டுவிடாத சித்தப்பு:)))

நன்றி செந்தில்வேலன்

நன்றி முத்துலெட்சுமி....அப்பாடா பதிவின் நோக்கம் நிறைவேறியாச்சு

நன்றி அனுஜன்யா..(உங்களை புக்கு எழுத சொல்லி
அப்துல்லாவை பதிவு எழுத வுட்டால் தான் நீங்க சரிவருவீங்க)

said...

செம நக்கல். அருமை.

//உன்னத இலக்கிய சேவையை பொதுப்புத்தியால் நையாண்டி செய்யும் உன்ன மாதிரி ஆட்கள் புழங்கும் மாசு பட்ட தமிழ் சூழலில் என் போன்ற படைப்பாளிகள் ஒதுங்கி நிற்பது காலத்தின் கட்டாயம்.//

இதற்கும் நல்லா சிரிப்பு வந்தது.

said...

//என்னுடைய கவிதை தொகுப்பு ஒன்றும், குறுநாவல் இரண்டும், ஒரு சிறுகதை தொகுப்பும், ஒரு நான்லீனியர் இலக்கியமும் அடுத்த வருட புத்தககண்காட்சியில் கிடைக்கும்//

பப்ளிஷர் கெடைக்காம வருவியில்ல? அப்போ வச்சுகிறேன் கச்சேரிய..

குடும்பத்துக்கும், ஜூனியருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

said...

// என்னுடைய கவிதை தொகுப்பு ஒன்றும், குறுநாவல் இரண்டும், ஒரு சிறுகதை தொகுப்பும், ஒரு நான்லீனியர் இலக்கியமும் அடுத்த வருட புத்தககண்காட்சியில் கிடைக்கும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ...//


இலவசமா அனுப்பிடுங்க.

said...

உங்களுக்கு மட்டும் தான் இப்படியான ஐடியாக்கள் வருகின்றது. இதனையே நீங்கள் ஒரு புக்காக போட்டு கல்லா கட்டலாம், இன்டெர்னசனல் மார்க்கெட்டிங் நான் செய்து தாறன் எனக்கு 50 உங்களுக்கு 50 (வருமானம் அல்ல மிகுதியாக இருக்கும் புத்தகங்கள்).

said...

அவர்களுக்கு கிப்டாக கொடுத்துவிட்டு ஓடிவந்துவிட வேண்டும் //

:)))))))))))))))))))))))))

புக்கை கிப்டா கொடுத்தவர் மாப்பிள்ளையோட ப்ரண்டா இருந்தா..

அய்யகோ.... இனி மாப்பிள்ளையோட நிலைமை.....

said...

அட்டகாசம் தலைவா... நகைச்சுவை பல்கலைக்கழகம் நீங்க...!!!!

said...

நல்ல இருக்கு.தெடர்ந்து எழுதுக.................

said...

super boss.nalla creativity.......