இந்த முறை ஏமாற்றப்பட்டது நான்:((
இதுக்கு முடிவு கட்ட போவது யார்?:((
ஐஸ்வர்யா ராய் அடித்த கல்யாணபத்திரிக்கையில் என் பெயருக்கு பதிலாக அபிஷேக் பட்ச்சன் பெயர் வந்த பொழுது எவ்வளோ மனசு கஷ்டமா இருந்தது தெரியுமா? இதை விவேக் ஓபராய் கூப்பிட்டு சொன்ன பொழுதுதான் தெரியவந்தது. நீங்கள் ஆசை ஆசையாக சைட் அடித்த பிகர் கல்யாண பத்திரிக்கையில் வேற ஒருவர் பெயர் வரும் பொழுது வரும் வலி..அதை அனுபவித்தால் தான் உங்களுக்கு புரியும், அட்லீஸ்ட் பத்திரிக்கையில் இந்த பிகரை குசும்பனிடம் இருந்து ஆட்டைய போட்டேன் என்று ஒருவரி சொல்லியிருந்தாலாவது பரவாயில்லை. ஒன்னுமே சொல்லாமல் என்னமோ சொந்தமாக தேத்தி கரெக்ட் செஞ்சு கல்யாணம் செய்வது போல் பத்திரிக்கை அடித்தது மட்டும் அல்லாமல், என் பெயரை வேறு இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். இத்தனைக்கும் அபிசேக் பட்சன் அடிக்கடி பேசுபவர்தான், அப்பொழுதுதாவது சொல்லியிருக்கலாம் உங்க பிகரை ஆட்டைய போட போறேன் என்று.
வேதனையோடு, தாடியோடு
குசும்பன்
பின்னூட்டங்கள்1 to 25 பின்னூட்டங்கள்: கடுமையான கண்டனங்கள்
26) பல்வெட்டு said: இதுவரை யாரும் எந்த கல்யாணம் ஆன பிகரையும் சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் ஊசி போடும் நர்ஸை சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் கல்யாணம் ஆன நடிகையை ரசித்தது இல்லையா? அவர்கள் மட்டுமே இதுக்கு கண்டனம் தெரிவிக்கலாம்!!!
*********
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar -
ஊதாப்பூ said: முதல்லயே அபிஷேக் பச்சன் உங்ககிட்ட சொல்லியிருந்தா பரவாயில்லை. விவேக் கூப்பிட்டு சொன்ன பிறகுதான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அப்புறம் நல்லா மாட்டிகிட்ட பிறகு ஆமாம்னு ஒத்துக்கறாரு அபிஷேக். சே, என்ன மனுஷன். என்னுடைய கடுமையான கண்டனங்கள்
***********
கண்ணா K - அபிஷேக் பச்சன் படங்களை புறக்கணிப்போம்.....
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஜிக்கி said : இல்லை கண்ணா, புறக்கணிப்பெல்லாம் பெரிய விஷயம். அபிஷேக் உணர்ந்து திருந்திவிட்டாலே போதும்.
*************
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஏன், எல்லாரும் கடுமையான கண்டனங்கள்னே சொல்றாங்க. அப்ப லேசான, மந்தனமான கண்டனங்கள் எல்லாம்கூட இருக்கா?
************
கண்ணா K -
அபிஷேக் பச்சன் said...அண்ணே, அந்த இதழில் நன்றி -குசும்பன் என வரவேண்டியது,மிஸ் ஆகி விட்டது.அடுத்த இத்ழில் வரும்.நான் ஆசிரியரிடம் பேசி விடுகிறேன்.விடுபட்டமைக்கு வருந்துகிறேன்.அதே சமயம் நான் வேண்டுமென்றே செய்ததாக நினைக்க வேண்டாம்.நீங்கள் உரிமையாக ஃபோன் பண்ணியே கேட்கலாம்.
************
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar -
டாக்டர் க்ரூனோ said : அபிஷேக், நீங்கள் இதற்குமுன் திருமணம் செய்திருக்கிறீர்களா? அப்போது எல்லாம் அறிவித்துவிட்டுத்தான் செய்தீர்களா? சரி, குசும்பன் பெயரே பத்திரிகையில் இருந்தாலும், இது தெரியாமல் அவர் வேறு யாரையாவது திருமணம் செய்ய இருந்து அந்தப் பத்திரிகையிலும், குசும்பன் பெயர் போட்டே அடித்துவிட்டால், ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் திருமணம் என்றால் குசும்பனை என்ன நினைத்துக் கொள்வார்கள். இது குறித்து நான் முன்னர் எழுதிய பதிவின் சுட்டி .................. இது இவ்வளவு வருடங்கள் சைட் அடித்த உங்களுக்குத் தெரியாது என்பதை நம்ப கஷ்டமாக இருக்கிறது.
************
குசும்பன் kusumbu - அலோ இரண்டாப்பு தமிழ்வாத்தியார் சுப்பையா இருக்காங்களா?
ஆமாம் சுப்பையாதான் பேசுறேன்
அய்யா நான் மும்பையில் இருந்து அபிசேக் பேசுறேன்.. நன்றி குசும்பன் என்று வரவேண்டிய இடத்தில் என் பெயர் வந்துட்டுய்யா..
அதை ஏன்யா என்கிட்ட சொல்ற...
ஆசிரியர் கிட்ட சொல்லிடுறேன் என்று பொதுவுல சொல்லிட்டேன் அதை காப்பாத்தனுமுல்ல ஐய்யா!
************
நடந்து முடிந்த பத்திரிக்கை பிரச்சினையும் என் தரப்பும்....
நேற்றிலிருந்து கண்டனத்தையும், காண்டத்தையும் தொடர்ந்து வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி. தலைவர் பொய் தமிழன் போல் நான் எலி அல்ல, சும்மா சும்மா திரும்ப அதே கமெண்டை காப்பி செய்து ஒவ்வொரு கமெண்டுக்கும் வேற வேற கலர் கொடுத்து வந்தது 50 பின்னூட்டம் என்றால் அதுக்கு 100 பின்னூட்டம் போட்டு விளக்கம்சொல்ல.. ஆகவே தனியா பதிவு போடுறேன்.
நான் நிறைய முறை சொல்லியிருக்கிறேன்... நான் காப்பி அடிச்சு பாஸ் செய்தவன் என்று, அதுக்காக அப்படியே புக்கில் இருப்பதை போல் படம் 1.1ல் இருப்பது போல் என்று எழுதியது இல்லை, அப்படி எழுதியிருந்தால் அதுக்கு பெயர் ஈ அடிச்சான் காப்பி, நானே சொந்தமாக படம் வரைந்து பாகம் குறிச்சிருக்கிறேன். என் எழுத்தில் வ.சே.சுவும், மா.பொ.சியும் கால் ஆட்டிக்கிட்டு படுத்திருப்பதை உத்து உத்து பார்த்து படிப்பவர்களுக்கு தெரியும்.
கல்யாண பத்திரிக்கை பத்தி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கும் அபிசேக் ..ஒரு வார்த்தை அண்ணே உங்க சைட்டை நான் ஆட்டைய போடுகிறேன் என்று சொல்லியிருந்தா நான் வேண்டாம் என்றா சொல்லபோறேன்.
பலர் நான் மன்னிப்பேன் ..என்று என் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்லியிருக்கிறார்கள் . நான் ஒன்றும் சர்ச்சில் பாவ மன்னிப்பு வழங்கும் பாதர் அல்ல. என் குழந்தைக்கு பாதர்.
சிலர் சொல்கிறார்கள் இது பிரபலம் ஆக செய்யும் ட்ரண்ட் என்று, எல்லோருக்கும் சொல்கிறேன்..பிரபலம் என்றால் என்ன தெரியுமா? முக்காடு போட்டு ஜெயிலுக்கு அழைச்சிக்கிட்டு போனாலும் ஓடி வந்து போட்டோ எடுக்கிறானுங்க பாரு அப்ப சொல்லலாம் நீங்க பிரபலம் என்று.
மூனு மாதத்துக்கு ஒருமுறை டாய்ய்ய் நீதானே குசும்பன் என்று கெட்டப்பை மாத்தினாலும் சரியா கண்டுபிடிச்சு கொடுத்த கடனை கேட்கிறார்கள் அதை தவிர வேறு யாருக்கும் என்னை தெரிவது இல்லை.
ஒரு அட்டுபிகரை கரெக்ட் செய்ய குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, டீ அதோடு மட்டும் இல்லாமல் டூரிங்டாக்கிஸ் அழைச்சிக்கிட்டு போவது இடைவேளை நேரத்தில் முறுக்கு, கடலை மிட்டாய் என்று வாங்கி கொடுப்பது ஒருவாரம் போவதோடு செலவும் ஆகிறது.
இதே ஒரு உலகபிகரை கரெக்ட் செய்ய கப்பசினோ, பஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரிம் முதல் ஸ்டார்பக்ஸ் காப்பி வரை செலவு செய்யவேண்டியிருக்கு, மாயாஜால், சத்யம் என்று அழைச்சிக்கிட்டு செல்லும் பொழுது பர்ஸ் காலியாகிடுது, இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு கரெக்ட் செய்வதால் என்ன பலன்? அட பார்றா சூப்பர் பிகருன்னு நம் கூட வரும்பொழுது நாலு பேரு திரும்பி பார்த்தா நமக்கு ஒரு மெதப்பா இருக்கு. இதை தவிர இதில் சாதிக்க ஒன்னும் இல்ல. ஆனா ரொம்ப சுளுவா டக்குபுக்குன்னு யாரோ ஆட்டைய போட்டுவிட்டு நன்றின்னு என் பெயர் கூட போடாம இருப்பது எவ்வளோ கஷ்டமாக இருக்கு தெரியுமா?
இனி இந்த விசயத்தை பற்றி பேசவோ, பாட்டாக பாடவோ விரும்பவில்லை.
நன்றி வணக்கம்! இன்றுடன் இப்படம் கடைசி!
பீ ஹேப்பி!