Wednesday, August 5, 2009

ட்விட்டர் அப்படின்னா???

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எல்லா ”பிரபல பதிவருங்க” பிளாக்கின் சைட் பாரில் நான் ட்விட்டுறேன் நீ ட்விட்டுறியா? என்னோடு ட்விட்ட, என்னோடு நொட்டன்னு ஏகப்பட்ட விளம்பரங்கள் சரி என்ன கருமாந்திரமோ இருந்துட்டு போவுட்டும் நமக்கு எதுக்கு அதெல்லாம் இங்க ஒரு கடைக்கே ஆள் சேர்க்கமுடியல இதுல எதுக்கு ட்விட்டு அது இதுன்னு எதுக்குன்னு பேசாம இருந்துட்டேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆயகலைகள் அனைத்தையும் கரைச்சு குடிச்சவரான அன்பு குருஜி சுந்தரும் ஒரு பதிவில் எனக்கு ட்விட்டர்
புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை என்று சொல்லி வேறு ஏதோ சொல்லப்போக சுரேஷ்கண்ணனுக்கும் அவருக்கும் சண்டை வந்தது.
என்னடா என் குருஜிக்கு வந்த சோதனை என்றும் நான் யோசித்துக்கொண்டு இருந்தபொழுது என் அறை நண்பர் சிவராமன் எப்பொழுதும் ட்விட்டுவார் , ட்விட்டரை பற்றி அடிக்கடி பேசுவார் சில பதிவுலக ஜாம்பாவான்கள் கூட அங்க சோபிக்கமுடியவில்லை என்றும் சொன்னார் அட நமக்கு எதுக்கு வம்பு என்று இருந்துவிட்டேன்.

திடிர் என்று ஒரு நாள் ஞானோதயம் வர அப்படி என்னதான் அதில் இருக்குன்னு பார்க்கலாம் என்று ஒரு யூசர் நேம் ஐடி கிரியேட் செஞ்சு பார்த்தேன் ஒன்னும் பிடிபடல அப்படியே விட்டுவிட்டேன், அப்புறம் பாலோயர்ஸ் சேர சேர என்னடா இது என்று எட்டிபார்க்க ஆரம்பிச்சேன் கொஞ்சம் கொஞ்சமாக சிவராமன் , புரூனோ, இளா எல்லாம் சொல்லி கொடுத்தாங்க புரிஞ்சுது அதான் உங்களுக்கு விளக்கமாக சொல்லலாமேன்னு இந்த பதிவு.

ஸ்கூல் படிக்கும் பொழுது ஒரு பாராகிராப் கொடுத்துட்டு அதை சுருக்கி அர்த்தம் மாறாமல் ஒரு 4 வரியில் எழுத சொல்வார்கள். அதுபோல் ஒரு சம்பவம் சொல்லி அதை டெலிகிராபிக் மெசேஜ்ஜாக எழுத சொல்வார்கள்

உதாரணத்துக்கு திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த குவாட்டர் கோவிந்தனின் மனைவியான பரமேஸ்வரி வயது 68 இன்று காலை எழுந்து தண்ணீர் பிடிக்க பைப்படிக்கு சென்ற பொழுது கால் வழுக்கி கீழே விழுந்து மண்டை உடைந்து கபால மோட்சம் அடைந்தார். என்ற செய்தியை டெலிகிராபிக் மெசேஜ்ஜாக எப்படி சொல்வது?


”குவாட்டர் கோவிந்தன் மனைவி பரமேஸ்வரி ”கோ”யிந்தா கோயிந்தா” ஸ்டார்ட் இமிடியட்லி


இவ்வளோ தான் இது எழுத தெரிஞ்சால் போதும் நீங்கள் ட்விட்டராக ஆகலாம்! ஏன் இப்படி என்றால் அங்க அதிகபட்சமாக 140 எழுத்துக்கள் தான் டைப் செய்ய முடியும்!

நாம எல்லாம் குறும்படத்தையே 1 மணி நேரம் எடுக்கும் ஆட்களை வெச்சு இருக்கிறோம், சிலர் எழுதும் பதிவை ஸ்குரோல் செஞ்சு பார்க்கவே 5 நிமிடம் ஆவுது(படிக்க இல்லை), இவர்களை எல்லாம் வெச்சுக்கிட்டு எப்படி ட்விட்டுவது என்று கேள்வி கேட்டால் பதில் என்னிடம் இல்லை:)

அப்புறம் என்னத்த ட்விட்டுவது?

எதை பற்றி வேண்டும் என்றாலும் ட்விட்டலாம் இதுதான் என்று வரைமுறை இல்லை

எடுத்துகாட்டாக

காலையில் எழுந்து ஆபிஸ் வந்தேன் பஸ்ஸில் கூட்டம் அதிகம்! இது ஒரு ட்விட்டர் மெசேஜாக போடலாம்

பாலோயர்ஸ் அதிகமாக இருந்தால் அச்சிச்சோ அது என்ன பஸ் என்று கேள்வி கேட்பார்கள்?

நீங்களும் அது 47A எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம்!

அவரும் கூட்டம் அதிகமாக இருக்கா ஏன் அரசு அதிக பஸ் விடவில்லையா என்பார்

நீங்களும் எத்தனை பஸ் இருந்தாலும் பத்தாது என்று சொல்லலாம்.

இப்படியே மாறி மாறி ட்விட்டலாம்.

என்னது? இத பேச எதுக்கு ட்விட்டனும் சாட் விண்டோவில் பேசிக்கலாமேன்னு கேட்டால் எனக்கு பதில் சொல்லதெரியாதுங்கோ!

நாலு பேரு பாலோயரா ஆவனும் என்றால்

நேற்று மன்மோகன் சிங் பேசிய அபத்தமான பேச்சு லிங் என்று அந்த செய்தி வந்த பக்கதுக்கு லிங் கொடுக்கனும். (மன் மோகன் பேச்சுன்னாலே அபத்தமாக இருக்கும் என்பது தெரிஞ்சதுதான் இருந்தாலும் லிங் கொடுக்கனும்),

லாலு பேசிய பேச்சுக்கு லிங் என்று லிங் கொடுக்கனும் (முக்கியமாக இவை எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பது நல்லது, அப்பொழுதுதான் ஒரு கெத்து கிடைக்கும்) நீங்க பாட்டுக்கு தினதந்திக்கு எல்லாம் லிங் கொடுத்தால் ஒன்னும் சொல்வதுக்கு இல்லை:)


இது என்னடா வம்பா போச்சு இப்படி படிச்சுதான் அதுக்கு லிங் கொடுக்கனுமா? அதெல்லாம் சரி வராது நான் தருமி பரம்பரை என்றாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை நீங்க கேள்வி கேட்கலாம். எதை பற்றி?

சுண்டைகாய் பொறியல் செய்முறை லிங் கிடைக்குமா?

மனைவி செய்யும் சாம்பாரின் ருசியை மாற்றுவது எப்படி?

ராக்கமா கைய தட்டு பாட்டு எங்கு டவுன் லோட் செய்யலாம்? இப்படி எல்லாம் தோன்றியதை கேட்கலாம்!

அப்புறம் முக்கியமான விசயம் நீங்க நாலு பேருக்கு பாலோயரா ஆவனும்
அப்படி ஆனா அவுங்க ட்விட்டுவது உங்க பேஜில் வரும் யார் யாரை பாலோயரா ஆக்கலாம் யார் யார் எப்படி எப்படி?

அங்கு நம்ம கேள்வி நாயகன் புருனோ வழக்கம் போல் புள்ளிவிவரங்களுக்கான லிங்கோடு ட்விட்டுவார். சமீபத்தில் விமான ஸ்ட்ரைக் பற்றி இவரும் பத்ரியும் காரசாரவிவதாம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க, நீ என்னா செஞ்சேன்னு கேட்குறீங்களா? இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். புள்ளி விவரங்கள், செய்திகள் வேண்டும் என்றால் இவர்களுக்கு பாலோயரா ஆவனும்...என்ன இளையராஜாவை பற்றி மட்டும் பேசாம இருக்கனும் புருனோவிடம்:)

அப்புறம் எழுத்துலக ஜாம்பாவான்கள் பா.ரா இருக்காக, சொக்கன் இருக்காக, எப்பவும் சீரியசாகவே பேசும் ஐகரன்பிரகாஸ், பாஸ்டன் பாலா, அன்புடன் பாலா இவுங்க எல்லாம் இருக்காக.


வில்லங்கமான டாப்பிக் ஆள் வேண்டும் என்றால் TBCD

கவிமடதளபதி பினாத்தலார்

அப்புறம் ஜாலியான்னா ஆளா வேண்டும் என்றால் இலவச கொத்தனார், கானா பிரபா

மொக்கையாக என்றால் அதிஷா, நான்:) இப்படி பலர் இருக்காங்க அப்ப அப்ப அய்யனார் நான் வெச்ச மீன் குழம்பை சாப்பிட வருகிறீர்களா என்று தலைய காட்டுவார் இப்பதான் ஜ்வோராம் சுந்தர், பைத்தியகாரன் எல்லாம் சேர்ந்து இருக்காங்க இவர்கள் எல்லாம் சீக்கிரம் பார்ம்க்கு வரும் முன்பே சேர்ந்துவிடுவது நல்லது.

தத்துவம்: நீயும் பிரண்டும் டைப்பினா அது சாட்டு, நீ மட்டும் டைப்பினா அது ட்விட்டு!

டிஸ்கி: சுரேஷ்கண்ணனுக்கு போட்டியாக பிளாக் ஆரம்பித்தேன் என்று அண்ணாச்சி போன சந்திப்பில் சொன்னார், (அவருக்காக இந்த டிஸ்கி) சுரேஷ்கண்ணன் ட்விட்டரிலும் ட்விட்டுகிறார் சீக்கிரம் வாங்க அண்ணாச்சி!

50 comments:

said...

ஏன் சிங்கம் ஏன் ;-))

said...

குரும்படம்,ஸ்குரோல் செய்து படிக்கவே 5 நிமிடம்....ஹூம்! உள்குத்து!!
:-))

said...

ஆஹா.. நல்லா எழுதியிருக்கீங்க குசும்பன். ஆனா, டிவிட்டர்ல நிறைய திண்ணைப் பேச்சுத்தான் நடக்கற மாதிரி இருக்கு :)

என்னோட சந்தேகம்... நம்ம உண்மைத் தமிழன் டிவிட்டர்ல இருந்தா எப்படியிருக்கும் :)

said...

//டிஸ்கி: சுரேஷ்கண்ணனுக்கு போட்டியாக பிளாக் ஆரம்பித்தேன் என்று அண்ணாச்சி போன சந்திப்பில் சொன்னார், அவருக்காக சுரேஷ்கண்ணன் ட்விட்டரிலும் ட்விட்டுகிறார்//

என்னது சுரேஷ் கண்ணனை அண்ணாச்சி திட்டுறாரா..!

(ட்விட்டர்ன்னாலே திட்டர்ன்னுதான் பி.ப. சொல்லியிருக்காரே)

said...

தத்துவம் கலக்கல்..

இப்ப எல்லாம் பெரிய பெரிய கம்பெனிங்க கூட டிவிட்டல தான் வேலை காலி இருக்குங்கறத சொல்றாங்களாம் :))

said...

அந்த கருமம் தான் இன்னும் செய்யலை அதை வேற பாக்க வேச்சுடுவீங்க போல இருக்கே..

said...

ரொம்ப உபயோகமான (??) அக்மார்க் குசும்பன் இடுகை.

ஆபீஸ்ல முடியாதே - என்ன பண்ணலாம் ?

அன்புடன்
மாசற்ற கொடி

said...

என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க..
ஏற்கனவே நான் ப்ளாக் எழுதி பத்தையா கிழிச்சாச்சு, அடுத்து டுவிட்ட ஆரம்பிக்கவேண்டியதுதான்

said...

//சுரேஷ்கண்ணனுக்கு போட்டியாக பிளாக் ஆரம்பித்தேன் என்று அண்ணாச்சி போன சந்திப்பில் சொன்னார்,//

இப்படியா அந்த சவத்து மூதி சொல்லிட்டு திரியுது? நம்பாதீங்க. அதுசரி குசும்பன். ஆசிப்பும் டிவிட்டர்ல ஏற்கெனவெ வந்து தொலைச்சுட்டாரே,கவனிக்கலையா? என்ன பிளாக்ல மொக்கையாச்சும் போடுவாரு. இங்க எனக்கு பயந்துக்கிட்டோ என்னமோ வெத்தா இருக்காரு. நான் இங்கயும் இருக்கேன்னு அவர் கிட்ட சொல்லி வையுங்க. http://sureshkannan.posterous.com/

மின்னுது மின்னல் said...

ஒரு சின்ன டவுட்டு ?


"ட்விட்டர் அப்படின்னா என்னா???"

said...

ரொம்ப உபயோகமான தகவல் /தொழில் நுட்பம் - அதை உங்க பாணியில சொல்லி நல்லா மொக்கு மொக்குன்னு மொக்கிடீங்க .... சூப்பர்

Anonymous said...

என்னை ஏம்பா வம்புக்கு இழுக்கறீங்க

மன்மோகன்சிங்

said...

எனக்கு ஒன்னும் புரியல!

சக்திவேல் பாசறை said...

”குவாட்டர் கோவிந்தன் மனைவி பரமேஸ்வரி ”கோ”யிந்தா கோயிந்தா” ஸ்டார்ட் இமிடியட்லி
//
சோ ஸ்டார்ட் இமிடியட்லி ட்டுவிட்டர் :)

வெடிகுண்டு முருகேசன் said...

என்னோட சந்தேகம்... நம்ம உண்மைத் தமிழன் டிவிட்டர்ல இருந்தா எப்படியிருக்கும் :)
//நல்லா டயம் பாஸ் ஆகும் !!!

காலையில் ஆரம்பிச்சாருனா ரெண்டு நாளைக்கு முடிக்க மாட்டாருல :)

வெடிகுண்டு முருகேசன் said...

தத்துவம்: நீயும் பிரண்டும் டைப்பினா அது சாட்டு, நீ மட்டும் டைப்பினா அது ட்விட்டு!

///

self hand is best hand ?
தமிழில் சொன்னா தப்பாதெரியுது :)

said...

ஆமா..இது தெரியாம பல தடவை நாம்பாட்டுக்கும் ட்விட்டிட்டேனேப்பா! :)

said...

ட்விட்டர்ல சண்டை, அரசியல், விடை பெறுகிறேன், ஆப்பு, சக்தி எல்லாம் உண்டா?

(சுவாரஸ்யமா இருக்குமா?)

said...

//எனக்கு ஒன்னும் புரியல!//

ரிப்பீட்டு !!!

said...

ஏதோ அறைகுறையா தெரிஞ்சுகிட்டு பெரிய உதார் விட்டு இருக்கீங்க. ட்வீர்டரில் நம் பதிவையும் இணைத்தால் நாம் பதிவு போஸ்ட் செய்யும் போது நம்ம பாலோவர்ஸுக்கு அங்கேயே பார்த்துக் கொள்ள முடியும்.

இப்பலாம் பெரிய நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான ஆட்களை விளம்பரப்படுத்தி தேடுவதில்லை. ஃபேஸ்புக், டிவீட்டரில் தேர்ந்தெடுக்கிறார்கள். தேவைகளை தேடினால் வந்து விழும். உங்களின் பயோடேட்டாவை அங்கே அப்டேட் செய்துவைத்தால் உங்களின் தகுதிகேற்ப அவரிடம் வேலையிருந்தால் தொடர்பு கொள்வார்கள். ஃபேஸ்புக் போய் பாருங்கள் நம்ம அய்யனார் கலர் கலரா பாடம் போட்டுக்கிட்டு இருக்கிறார்.

said...

இப்பெல்லாம் FACEBOOK தான் பட்டையைக் கிளப்புது !

என்னோட சீன நண்பர்கள் எல்லோரும் FACEBOOK தான்

said...

அய்ய.. ட்விட்டர்ல இப்போ தான் சேர்ந்தியா மாமா.. அதுல நானும் இருக்கேன்..பட் நோ மெசேஜி.. நம்மாளுங்களாவது மீன் கொழம்புக்கும் பஸ் கூட்டத்துக்கும் தான் யூஸ் பண்றாங்க.. அமெரிக்காகாரன் ஈரான்ல ஆட்சிய மாத்தவே அதை தான் யூஸ் பண்றான். பிபிசி. சி என் என் எல்லாம் அதுல போடற ஸ்டேட்டஸ் மெசேஜ் வச்சி தான் கவர்ஸ்டோரியே எழுதறாங்க.. பொய்களின் சரணாலையம் அது.. :))

என்னை பாலோ பண்றவங்கள எல்லாம் பார்த்தா அசந்துடுவ மாமா.. ப்ரிட்னி ஸ்பியர்ஸ் எல்லாம் என்னை பாலோ பண்றா.. :)))

Anonymous said...

//வில்லங்கமான டாப்பிக் ஆள் வேண்டும் என்றால் TBCD //

புதசெவி

said...

எ.கொ.வெ

மின்னுது மின்னல் said...

பிலாக்கர் ஒண்டே மேட்சினா (உ.த வுக்கு டெஸ்ட் மேட்ச்)


ட்விட்டர் 20 20 க்ரைட்டா.. :)

said...

//இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். //

ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி...

said...

அது சரி..

தமிழ் தெரிந்தவர்களைவிட, நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று புரிந்து கொள்ள முடியாத பிற மொழியினர் என்னைத் தொடர விரும்புவதின் நோக்கமென்ன?

நேத்து ட்விட்டர்ல கேட்டாங்க... தெரிந்தவர்கள் சொல்லவும்.

said...

குசும்பா !

என்னிடமும் வம்பா !

டிவிட்டரில் வா தெம்பா !

கருத்து போடுவாம் கம்பா !


:))

குசும்பன் கொலவெறி சொறி படை said...

ஏய் வாடா
என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி
உன் தோலை உறிச்சி
போட்டுவேன் பிச்சி

said...

அட ட்விட்டர் தெரியாத மச்சி உனக்கு?

எனக்கும் தெரியாது மச்சி. ஆனா எல்லாரும் கூப்புட்டாங்களேன்னு நானும் சேர்ந்துட்டேன். இப்ப கூட ஒரு நாளைக்கு ரெண்டு மெயில் என் பின்னாடி வர்றதுக்கு யாராவது அனுப்புறாங்க. அட நம்ம பின்னாடி வரக்கூட ஆளு இருக்கேன்னு நானும் சரின்னு சொல்லிடுவேன்.
ஆனா என்ன செய்யிறதுன்னு எனக்கு தெரியாது.

உனக்கு யாராச்சும் சொல்லிக் குடுத்தா எனக்கும் சொல்லிக்குடு.

said...

வாழவந்தான் said...
என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க..
ஏற்கனவே நான் ப்ளாக் எழுதி பத்தையா கிழிச்சாச்சு, அடுத்து டுவிட்ட ஆரம்பிக்கவேண்டியதுதான்//

ரிப்பீட்டு.!

பயப்புடாதீங்க தல.. நா வரவேமாட்டேன். இந்த ஒரு கடையை நடத்தவே நாக்கு தள்ளுது.

அப்புறம் ஃபேஸ்புக்,ஆர்குட்னாவே என்னன்னு தெரியாம ஐடி வெச்சுக்கிட்டு மண்டை காய்ஞ்சு போய் இருக்கையில் இது தேவையா எனக்கு? ஹூம்..

said...

//அதான் உங்களுக்கு விளக்கமாக சொல்லலாமேன்னு இந்த பதிவு//

இன்னும் ஆரம்பிக்கவே இல்லியா... ஆஆஅவ்வ்வ்

நல்ல தகவல் பரிமாற்றம்

said...

ஆப்பீஸ் டயம்ல வேலை செய்யறது எப்படின்னு ஒரு பதிவு போடுங்கண்ணா..

said...

எனக்கும் முதலில ட்விட்டர் புரியவில்ல, உங்க பதின் மூலம் கொஞ்சம் விளங்கி இருக்கு...
//நீயும் பிரண்டும் டைப்பினா அது சாட்டு, நீ மட்டும் டைப்பினா அது ட்விட்டு!//
:))))

said...

நானும் இருக்கேன் வேற பெயர்ல..
:))

said...

//நீயும் பிரண்டும் டைப்பினா அது சாட்டு, நீ மட்டும் டைப்பினா அது ட்விட்டு!//
good explanation.

said...

பக்கா குசும்பன் பதிவு.. :))

said...

SanjaiGandhi said...
என்னை பாலோ பண்றவங்கள எல்லாம் பார்த்தா அசந்துடுவ மாமா.. ப்ரிட்னி ஸ்பியர்ஸ் எல்லாம் என்னை பாலோ பண்றா.. :)))

ROTFL :D

said...

குசும்பனின் அட்டகாசம் ட்விட்டர்லயும் தாங்க முடியலப்பா!

நாங்கள்லாம் ட்விட்டர்ல குசும்பன விட சீனியரு....

said...

விட்டரிலும் ரகளையா?

said...

ரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். புள்ளி விவரங்கள், செய்திகள் வேண்டும் என்றால் இவர்களுக்கு பாலோயரா ஆவனும்...என்ன இளையராஜாவை பற்றி மட்டும் பேசாம இருக்கனும் புருனோவிடம்://

ஆஹா!! அங்கேயுமா?

said...

:))

said...

:)))) nice one

said...

சிலர் எழுதும் பதிவை ஸ்குரோல் செஞ்சு பார்க்கவே 5 நிமிடம் ஆவுது // சிரிச்சது அங்கே கேட்டுச்சா...?!

said...

இது தெரியாம பல தடவை நாம்பாட்டுக்கும் ட்விட்டிட்டேனேப்பா! :)

login செஞ்சே ரொம்ப நாள் ஆகுது. இன்னைக்கு login செய்யறேன் திரும்ப.

said...

கலக்கல் குசும்பா :))))


//செல்வேந்திரன் said...

சிலர் எழுதும் பதிவை ஸ்குரோல் செஞ்சு பார்க்கவே 5 நிமிடம் ஆவுது // சிரிச்சது அங்கே கேட்டுச்சா...?!
//

சூப்பரேய்ய்ய் ! :)

said...

எனக்கும் விளங்கிடுச்சு டுவீட்டர் பற்றி

said...

[[[நாம எல்லாம் குறும்படத்தையே 1 மணி நேரம் எடுக்கும் ஆட்களை வெச்சு இருக்கிறோம், சிலர் எழுதும் பதிவை ஸ்குரோல் செஞ்சு பார்க்கவே 5 நிமிடம் ஆவுது(படிக்க இல்லை), இவர்களை எல்லாம் வெச்சுக்கிட்டு எப்படி ட்விட்டுவது என்று கேள்வி கேட்டால் பதில் என்னிடம் இல்லை:)]]]

டேய் குசும்பு புடிச்சவனே..

எதா இருந்தாலும் பேர் போட்டு நேருக்கு நேரா பேசு..

இப்படி பொடி வைச்சு பேசுறது.. குத்திக் காட்டி எழுதறதெல்லாம் என்கிட்ட வேண்டாம்..

சொல்லிப்புட்டேன்..

said...

[[[ஜ்யோவ்ராம் சுந்தர் said...
என்னோட சந்தேகம்... நம்ம உண்மைத் தமிழன் டிவிட்டர்ல இருந்தா எப்படியிருக்கும் :)]]]

சுந்தர்ஜி..

மனதைத் தளரவிட வேண்டாம்..

நானும் டிவிட்டரில் இருக்கிறேன்.. ஆனால் எதுவும் எழுதுவதில்லை..! முடியற காரியமா அது..?!!!

said...

காப்பாத்திடீங்க தல! இந்த ஊரும் நம்பறதெ பிடிவாதமா நிறுத்த மாட்டேங்குது! நானும் எத்தனை நாளைக்கு டிவிட்டர தெரிஞ்சா மாதிரியே மெய்ண்டெய்ன் பண்றது! 18 பட்டிக்குள்லர்ந்து யாரவது ஒருத்தர் வந்து டவுடுட்ட கேக்கறதுக்குள்ள, குலதெய்வமே ; என்னை காப்பாத்தீட்டீங்கையா காப்பாத்தீட்டீங்க!