வலைப்பதிவர்களை வைத்து ஏற்கனவே
மலரும் மொட்டு பகுதி எழுதியாச்சு, இனி வேற என்ன செய்யலாம் என்று குப்புற படுத்துக்கிட்டு யோசிக்கும் பொழுது வலைப்பதிவர்கள் பெப்ஸி உங்கள் சாய்ஸில் பேசி பாட்டு கேட்டால் என்ன என்ன பாடல்கள் கேட்பார்கள்.
(அவர்களின் கேரக்டர்கள் + தற்பொழுதைய சூழ்நிலைகளை வைத்து)
முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் புண்படுத்தவேண்டும் என்று தயாரிக்கபட்டது அல்ல இந்த நிகழ்ச்சி. (திரையில் தோன்றுகிறது).
நிகழ்சியில் முதல் பாடலை கேட்பவர் ஜெஸில்லா
ஹலோ பெப்ஸி உமாவா?
உமா: ஆமாங்க நீங்க யாரு பேசுறது?
ஜெஸில்லா: நான் ஆவி புகழ் கிறுக்கல்கள் ஜெஸில்லா பேசுறேங்க .
உமா: ஹோ அப்ப செத்துபோன எங்க ஆயா கூட பேசுவீங்களா?
ஜெஸில்லா: நான் சொல்றது அந்த ஆவி இல்லீங்க:(ஆவின்னா ஆனந்த விகடன்.)
உமா: ஹோ அப்படியா! சரி உங்களுக்கு என்ன பாட்டு போடனும்?
ஜெஸில்லா: அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை காலம் மாறி போச்சு கண்ணீர் மிச்சம் இல்லையே!!!
***************************************
அடுத்து ஓசை செல்லா
ஓசை: ஹலோ பெப்ஸி உமாவா?
உமா: ஆமாங்க நீங்க யாரு பேசுறது?
ஓசை: நான் போறங்க இனி வரமாட்டேங்க!!!
உமா: யாருங்க நீங்க? எங்க போகபோறீங்க? என்ன சம்மந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறீங்க
ஓசை: இல்லிங்க நான் வரமாட்டேன்ங்க, போறேங்க என்ன தடுக்காதீங்க!!!
உமா: ஒரு நிமிசங்க போகாதீங்க!!! லூசாப்பா நீ? இருப்பா!!!
ஓசை: அப்ப நீங்கதான் என்ன "லூசா" நீ என்று உரிமையோடு திட்டி திரும்ப வரசொன்னதா உங்க போட்டோ போட்டு ஒரு பதிவு போட்டுக்கட்டுமா?
உமா: என்னத்த வேண்டுமானாலும் செஞ்சுக்க ஆனா என்ன பாட்டு வேண்டும் என்று சொல்லு....
ஓசை : விடைகொடு எந்தன் நாடே என்று (பாடுகிறார் திடீர் என்று ரெண்டு குரல் ஒலிக்கிறது)
உமா: ஹலோ யாருங்க அது பக்கத்துல கிராஸ் டாக் ஆகுது ...
ஓசை: இல்லிங்க அவரும் என் பிரண்டுதான் பேரு சுகுணாதிவாகர் அவரும் கிளம்புறாராம்...
***************************
உமா: ஹலோ யாரு பேசுறது?
யாகூ ஊ ஹா ஹூஊஊஊஊஊஊ டிஷ்யும்.....
உமா: ஹலோ யாருங்க பேசுறது? உங்க டீவி வால்யூமை குறைங்க!!! ஏதோ சண்டை படம் பாக்குறீங்க போல!!!
ஹூஊஊஊஊஊஊ டிஷ்யும்.....
உமா: என்னங்க இது போன் போட்டு ஒரே அடிதடி எபெக்ட்டா கொடுக்குறீங்க யாருங்க நீங்க?
தமிழச்சி: ஹலோ யாருங்க லைன்ல!!!
உமா: நீங்கதாங்க போன் போட்டது நீங்கதான் சொல்லனும்?
தமிழச்சி: ஹோ என் பிரண்டுக்கு போன் போட்டேன் அது தப்பா ஆயிடுச்சி போல!!! என் பேர் தமிழச்சிங்க... நீங்க யார் பேசுறது?
நான் பெப்ஸி உமாங்க போன் போட்டா பாட்டு எல்லாம் போடுவேனே அந்த உமாங்க, என்னங்க உங்க டீவி வால்யுமை குறைங்களேன் ஒரெ அடிதடி சத்தம்மா இருக்கு
தமிழச்சி: டீவியில் இல்லைங்க அது, என் கிட்ட வாலாட்டின பொட்டீ கடை சத்தியா அடிவாங்குகிறார்...
உமா: உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்...
தமிழச்சி: யார பார்த்து பாட்டு வேணும்மான்னு கேட்கிற... கராத்தே அடி வேணுமா?
**********************
அடுத்து செந்தழல் ரவி
ஹலோ பெப்ஸி உமாவா?
உமா: ஆமாங்க நீங்க யாரு பேசுறது?
ரவி: நான் 007 செந்தழல் ரவிங்க,
உமா: அது என்னாங்க 007 செந்தழல் ரவி?
ரவி: நான் யாரு யாரு என்ன என்ன பேருல பதிவு போடுவாங்கன்னு கண்டு புடிக்கிறதுல புலிங்க!!!
நான் அதுக்காக அவுங்க கூடயே பிரண்டு மாதிரி சேர்ந்து அவுங்க எப்படின்னு கண்டுபிடிப்பேங்க
உமா: ஹோ விஜயகாந் படம் பார்த்து கெட்டு போன ஆளா நீங்க? சரி சரி என்ன பாட்டு வேண்டும் என்று சொல்லுங்க ...
ரவி: "டொடய்ங் டொடய்ங் டொடட் டொடய்ங்" ...
உமா: என்னங்க இது ?
ரவி: இது 007 படத்துல வரும் தீம் மியுஜிக்... அத போடுங்க
உமா: அதெல்லாம் போட முடியாது ஏதாவது பாட்டு கேளுங்க..
ரவி: அப்ப எனக்கு ஒன்னும் வேண்டாம் போங்க!
***********************
அடுத்து அபி அப்பா
அபி அப்பா: ஹலோ ஹலோ ஹலோ ....
உமா: யாருங்க நீங்க?
என் பேரு அபி அப்பாங்க?
உமா: எங்கேந்து பேசுறீங்க?
அபி அப்பா: நீங்க இருக்கிற ரூமுக்கு அடுத்த ரூமில் இருந்துதான் பேசுறேன்...
உமா: அதுக்கு எதுக்கு போன் போட்டு பேசுறீங்க?
அபி அப்பா: அட நீங்க வேற என்கிட்ட யாராவது கை கொடுத்து ஹலோ சொன்னா கூட நான் கை கொடுத்து விட்டு எட்டி போய் நின்னு போன் போட்டுதான் ஹலோ சொல்லுவேன்...
உமா: ஏன் இப்படி?
அபி அப்பா: அது அப்படிதாங்க... போன்ல யாரு கூடயாவது பேசலன்னா கை கால் எல்லாம் நடுங்கும்.
உமா: சரி என்ன பாட்டுவேனும் ...
அபி அப்பா: பாட்டு எல்லாம் வேண்டாம் நீங்க ஒரு 24 ஹவர்ஸ் என் கூட பேசிக்கிட்டு இருங்க அதுபோதும்..
உமா: அதெல்லாம் முடியாது நீங்க முதல்ல பாட்டு கேட்டுவிட்டு லைன கட் செய்யுங்க...
அபி அப்பா: ஹலோ ஹலோ ஹலோ...(டி.ஆர் என் பக்கத்து வீடு அதனால் அவர் படத்து பாட்டு போட்டுவிடுங்க)
***************************
அடுத்து நம்ம கோபி
ஹலோ நான் கோபி பேசுறேங்க!!!
உமா: ஹாய் கோபி எப்படி இருக்கிங்க?
கோபி: என்ன கொடுமைங்க இது நான் ஹாய் கோபி இல்லிங்க? நான் ஹாய் கோபி இல்லிங்க? நான் ஹாய் கோபி இல்லிங்க?(நான் நிக்கிறேன் நிக்கிறேன் என்று பலாசுலாக்கி கத்துவது போல் கதறுகிறார்)
உமா: என்ன ஒரு பேச்சுக்கு ஹாய் சொன்னா இப்படி கோப படுறீங்க?
கோபி: இல்லீங்க நான் எங்க போனாலும் என் பேர்ல ஹாய் கோபின்னு ஒருத்தர் இருக்கிறார் அவர்தான் நான் என்று என்னிடம் பேசி வெறுப்பேத்துறாங்க!!!
உமா: சரி விடுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் ?
கோபி: ரிப்பீட்டேய்...
உமா: என்னங்க இப்படி ஒரு பாட்டே இல்லீங்க?
கோபி: அட உங்களுக்கு தெரியலைங்க!!! ரஜினி படத்தில் !!! தேவுடா தேவுடா பாட்டில் நடுவில் வரும்ங்க...அந்த வரியை மட்டும் போடுங்க...
உமா: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
********************************
அடுத்து TBCD
ஹலோ
உமா: யாரு பேசுறீங்க? உங்க பேரு என்ன?
TBCD: நான் உங்க பேர கேட்டேனா? எதுக்கு என் பேர கேட்குறீங்க..நான் பேர சொல்ல மாட்டேன்..
உமா: சரி விடுங்க எங்கேருந்து பேசுறீங்க?
TBCD :உங்க ஊர் எந்த ஊர் என்று நான் கேட்டேனா? எதுக்கு என் ?ஊர் பேர கேட்குறீங்க
உமா: சரியான மொக்கை கேசாக இருக்கும் போல!!! சரி என்ன பாட்டுதான் வேண்டும் அதயாவது சொல்லுங்க!!!
TBCD: பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா?
***************************
அடுத்து மகேந்திரன்.பெ
ஹலோ
உமா: யாரு பேசுறீங்க?
மகேந்திரன்: நான் மகேந்திரன்
உமா: ஹோ டைரக்டர் மகேந்திரன் அவரா நீங்க?
மகேந்திரன்: இல்லை நான் அவர் இல்லை!!! எங்கபோனாலும் இதே கொடுமை!!
உமா: சரி சரி உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்?
மகேந்திரன்: இந்த பாட்டு சூடான பக்கத்தில் வருமா?
உமா: அப்படின்னா?
மகேந்திரன்: விளங்கிடும் அப்ப உன்கிட்ட பேசுறது வேஸ்ட்..
நான் அவன் இல்லை படத்தில் இருந்து நான் அவன் இல்லை பாட்டு போடுங்க!!!!
***************************
உமா: நிறையபேர் கூட பேசனும் என்ற ஆசை இருந்தாலும் அதுக்கு நேரமும் காலமும் போதவில்லை!
ஆனால் பல பேர் இந்த பாட்ட குசும்பனுக்கு டெடிக்கேட் செய்ய சொல்லி
லெட்டர் வழியாகாகவும் SMS வழியாகாகவும் கேட்டு இருக்காங்க, இந்த பாடல்
குசும்பனுக்காக....திரையில் தோன்றும் பாடல்.....
அழகு நீ நடந்தால் நடை அழகு... (பேக்ரவுண்ட் கோரஸ்) அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு (பேக்ரவுண்ட் கோரஸ்) அழகு
நீ பேசும் தமிழ் அழகு (பேக்ரவுண்ட் கோரஸ்) அழகு
நீ ஒருவன்தான் அழகு....
****************************