வருசம் முழுவதும் நடக்கும் கொள்ளை பத்தாதுன்னு அட்சயத்ருதியைன்னு ஒரு நாள் ஒன்னை பிக்ஸ் செஞ்சு ஊர்ல இருக்கிறவங்க எல்லோரையும் மொட்டை அடிக்க என்றே விளம்பரம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.8கிராம் தங்க நகை வாங்கினால் 1 கிராம் சேதாரம் என்று ஒன்னு போடுறாய்ங்க, என்னடா சேதாரம் என்றால் நகையை செய்யும் பொழுது கொஞ்சம் தங்கம் வேஸ்டா போவுமாம் அதுக்குதான் போடுவது சேதாரம் என்கிறார்கள், நகை செய்யும் பொழுது 0.01 மில்லி கிராம் தங்கத்தை கூட வேஸ்ட் ஆகவிடமாட்டார்கள். சரி அந்த வேஸ்டேஜையாவது கொடுங்க நாங்க உருக்கி தங்க பஸ்பம் சாப்பிட்டாவது கொஞ்சம் கலரை மெருகேத்திக்கலாம் என்றால் அதையும் கொடுக்க மாட்டார்கள்.
எல்லா பொருட்களுக்கும் இருக்கும் எடைக்கு மட்டுமே நாம் காசு கொடுத்து வாங்குகிறோம் ஆனா தங்கம் வாங்கும் பொழுது மட்டும் இருக்கும் எடையை விட எக்ஸ்ட்ரா காசு கொடுக்கிறோம்.
இங்கு (துபாயில்)நகை வாங்கும் பொழுது இருக்கும் எடைக்கு மட்டுமே காசு கொடுக்கிறோம் சேதாரம் என்ற ஒன்னுமே இல்லை, ஒரு கிராம் தங்கத்தின் விலையிலும் வித்தியாசம் இல்லை, இந்தியாவில் என்ன விலையோ அதே விலைதான் கிட்டத்தட்ட இருக்கும். அது எப்படி இங்கு மட்டும் இப்படி விற்பனை செய்யமுடிகிறது???? இவ்விங்களுக்கு மட்டும் சேதாரம் ஆவது இல்லையா?
கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா? நம்ம ஊரில் மட்டும் ஏன்? இந்த கொள்ளையை கோர்ட்டில் ஏதும் வழக்கு மாதிரி போட்டு தடுக்க முடியுமா? இதில் இருக்கும் சூது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.
டிஸ்கி: என்னது துபாயில் சேதாரம் இல்லையா வரும் பொழுது எனக்கு தங்கம் வாங்கி வான்னு யாரும் சொன்னா, அப்படியே என்னையே நானே எடைபோட்டு மொத்தமாக கொடுத்துவிடுவேன் ஜாக்கிரதை!:)))
அதிஷாவுக்கு: பிளாக்குன்னு ஒன்னு வெச்சிருந்தா பொதுநலனுக்காக பொங்கனும் என்று பித்தானந்தசாமிகள் சொல்லிக்கொடுத்திருக்கிறார் இல்லாட்டி பிளாக்கரா சேத்திக்கமாட்டாய்ங்களாம், அதுக்காகதான் இந்த பொங்கலூர் பழனிசாமி அவதாரம். இன்னும் பல அவதாரம் எடுக்கலாம் என்று ஐடியா இருக்கு உங்கள் மேலான ஆலோசனைகள் வேண்டும்:)))) (மகனே இதுக்கு நன்றி நல்ல பதிவு கேபிள்ஜின்னு பின்னூட்டம் போட்ட கொன்னுபுடுவேன் கொன்னு)

சரி இப்ப எதுக்கு இந்த ப்ளாஸ் பேக் என்று கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கு, இப்படி ஊசி பின்னாடி போட்டுக்கவே கூச்சப்படும் நம்ம ஹீரோ வாழ்வில் ஒரு புயல் அடிச்சு அவன் கட்டி காத்து வந்த கற்பு காற்றில் பறந்து போச்சு.. எப்படின்னு சொல்றேன் கேளுங்க.











(இமேஜ் நேம் என்னன்னு பார்த்து ஷாக் ஆவுறவங்களுக்கு இந்த போட்டோ 10 அனுப்பி மயக்கம் தெளியவைக்கப்படும்)










