Saturday, April 24, 2010

கிராமத்தானுங்க என்றால் இளப்பமா?

கருப்பை வாய் புற்றுநோய்த் தடுப்பூசி போடப்பட்டதில், ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த, 10-14 வயதுள்ள சிறுமிகள் நான்கு பேர் இறந்தனர். 120 பேர் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரு தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டியது. ஆனாலும், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டார்.


கொடிய நோய்களுக்குத் தீர்வு காணும் தடுப்பூசிகள் மனிதர்களுக்குப் பரிசோதனை அடிப்படையில் போடப்படுவது புதிதல்ல. இத்தகைய சோதனைகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்தினாலும், விலங்குகளுக்கு ஏற்படும் அதே விளைவுகள் மனிதர்களுக்கும் ஏற்படும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆகவே, இந்தச் சோதனைகளை மனிதர்களிடம்தான் நடத்தியாக வேண்டும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (உங்க வீட்டிலும் பொண்ணுங்க இருப்பாங்களே அவுங்களுக்கும் போட்டு டெஸ்ட் செய்ய வேண்டியதுதானே???)

அதேசமயம், இதை ரகசியமாக நடத்துவதும், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வோருக்குத் தெரிவிக்காமல் இருப்பதும், இவை யாவற்றுக்கும் மேலாக, இந்தச் சோதனைக்கு உள்ளாகும் நபர்களுக்கு உடனடி மருத்துவச் சேவை அல்லது மருத்துவக் கண்காணிப்பு இல்லாததும்தான் ஆட்சேபணைக்குரியவை.

குலாம் நபி ஆசாத் கூறியுள்ள மறுப்பு, எந்தவித மறுசிந்தனைக்கும் இடமளிக்காத தட்டையான வாதம். இந்த மருந்தினால் அந்த நான்கு பேரும் சாகவில்லை என்று மறுப்பது ஆளும்கட்சிக்கே உரித்தான நெளிவுசுளிவு. யானைக்கால் நோய்த் தடுப்பு மருந்து சாப்பிட்டு இறந்தாலும், தட்டம்மை தடுப்பூசியில் குழந்தை இறந்தாலும், போலியோ சொட்டு மருந்தினால் ஏதோ ஒரு குழந்தை இறக்க நேரிட்டாலும், தடாலடியாக வரும் பதில் இது ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதைத்தான் அவரும் செய்திருக்கிறார்.


கம்மம் மாவட்டத்தில், மலைவாழ் மக்களிடம் நடத்தப்பட்ட இந்தத் தடுப்பூசி பரிசோதனை மாநில அரசாலும், இந்திய மருத்துவ ஆய்வுக் குழுமத்தாலும் அனுமதிக்கப்பட்டுத்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் தொடர்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த பாத் இன்டர்நேஷனல் என்பதாகும். இந்த நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் பார்மசூடிக்கல் என்ற நிறுவனத்துக்காக இந்த மருந்து சோதனையைக் கையில் எடுத்துக்கொண்டு, அதை இந்தியாவில், செயல்விளக்கத் திட்டமாக மேற்கொண்டது என்கிற உண்மைகள்தான், மரணங்களைவிட கொடூரமானதாக இருக்கின்றன.
எச்பிவி எனப்படும் ஹியூமன் பாப்பிலோ வைரஸ் மானுடக் கலவி வழியாகப் பரவுகிறது. பெண்களில் கருப்பைவாய், ஆசனவாய் புற்றுநோய்க்கும், ஆண்களில் பிறப்புறுப்பு புற்றுநோய்க்கும் காரணமாக உள்ளது. இதனால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 74 சதவீதம் பேர் எச்பிவி பாதிப்பு உள்ளவர்கள் என்பதுதான் உண்மை நிலவரம்.

அமெரிக்காவில் இந்தச் சோதனை இருபத்தியொரு ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது என்று அமைச்சர் கூறுவது, அமெரிக்க நிறுவனம் தரும் புள்ளிவிவரமே தவிர, இதைச் சரிபார்க்க நமக்கு இயலாது. அப்படியே அமைச்சர் சொல்வதைப்போல 21,000 அமெரிக்கப் பெண்களுக்கு எந்தப் பின்விளைவும் இல்லாமல் மிகச் சரியான மருந்தாக இருக்கும் என்றால், அதை வெளிப்படையாக உலகம் அறிய அறிவித்து, அம்மருந்தை சந்தைப்படுத்தியிருப்பார்களே தவிர, இவ்வாறு ரகசியமாக, ஆந்திர மாநிலத்திலும் குஜராத்திலும் கேள்விப்படாத ஊர்களில் வாழும் அப்பாவி மக்களிடம் சோதித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.


அமெரிக்கப் பெண்களை இந்த மருந்து கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து தடுத்துக் காப்பாற்றும் என்றால், இந்தியப் பெண்களுக்கு மட்டும் செயல்பட மறுத்துவிடுமா என்ன?

அதிக மக்கள்தொகை மற்றும் சுகாதார விழிப்புணர்வு இல்லாமை ஆகிய காரணங்களால் இந்தியாவிலும் எச்பிவி பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயினால் இறக்கிறார்கள் என்பதுதான் இந்திய மருத்துவர்கள் தரும் புள்ளிவிவரம்.

இந்த மருந்து வெற்றிகரமானதாக அமையும் என்றால் இது இந்தியர்களுக்கும், ஏன் உலகம் முழுவதற்கும் பயன்தரப் போகிறது என்பதால், இதை இந்தியர்களிடம் சோதித்துப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதை முறையாகச் செய்யாததுதான் தவறு.

அமெரிக்க மருந்து நிறுவனம் தனது மருந்தைச் சோதனை அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கும் முன்பாக, அந்த மருந்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தருவதற்காக கணிசமான தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு பிறகுதான் அவர்களைக் களத்தில் இறக்க வேண்டும்.

அவ்வாறு சோதனைக்கு அனுமதிக்கும்போது அத்தகைய நபர்களை மருத்துவமனை அருகிலேயே, மருத்துவர்களின் நேரடி பார்வையில் தங்க வைத்து பின்விளைவுகள் ஏதாகிலும் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளை, உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ள நிபந்தனைகளின்படி மத்திய அரசு செய்ய வேண்டும்.

பொது விற்பனைக்கு முன்பாக, நான்காவது கட்டமாக 24 ஆயிரம் பேரிடம் இந்த மருந்து சோதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவர்களுக்கு இந்த மருந்தை அளிக்கும் முன்பாக, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் பின்விளைவுகளுக்கான இழப்பீடு தொகையை உறுதி செய்து கொண்டு அனுமதிப்பதும், தற்போது பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதும் இந்திய அரசின் கடமை.
இந்த தடுப்பூசி உண்மையிலேயே எச்பிவி-யை எதிர்க்கும் வல்லமை தந்து, பெண்களை கருப்பைவாய் புற்றுநோயிலிருந்து காப்பாற்றுமானால் நமக்கு மிக்க மகிழ்ச்சிதான்.

நன்றி தினமணி

மலைவாழ் மக்கள்,படிப்பறிவு இல்லாத மக்களை ஆயுவு கூட எலிகளாக மாற்றிக்கொள்ளும் அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார்? மோடி, சரத் பவார் விக்கெட் விழவேண்டும்? என்று பிரச்சினை செய்யும் எதிர்கட்சிகள் ஏன் இதை எல்லாம் கண்டுக்கொள்வது இல்லை? இதுபோல ஆய்வுகளை எழை மக்களை வைத்து செய்யாமல் தடுப்பது எப்படி?

42 comments:

said...

இதைப்பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத நினைத்துக்கொண்டிருந்தேன்.

நல்ல பகிர்வு

said...

எதுவும் தானாக மாறாது... நீங்கள் இங்கே பதிந்ததே... மாற்றத்திற்காண அறிகுறியே...

said...

:(

said...

எங்களைப் பொறுத்தவரை இளிச்சவாயன் பொதுஜனம் தான். (தேர்தல் நேரத்தில் நாங்க தர்றத இளிச்சுகிட்டே வாங்கறீங்க இல்ல, அதான் நீங்க இளிச்சவாயன் புரியுதா?)

said...

கொடுமையான ஒன்று...

அந்த ஊசியில் ஒன்றை ஆசாத்திற்கும் போட வேண்டும்...

அப்போதுதான் அவனுக்கும் அந்த வலி புரியும்...

said...

ஒரு விரிவான பதிலாக இந்த பதிவுக்கு பதிலெழுத வேண்டும். ஆனால் தங்களின் நியாயமான கோபத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு நகர்கிறேன்.

said...

இந்த தடுப்பு மருந்து பற்றி தெரியாது

ஆனால் நீங்கள் அத்துடன் சேர்த்து எழுதிய சில விஷயங்கள் குறித்து தெளிவு படுத்த விரும்புகிறேன்

//யானைக்கால் நோய்த் தடுப்பு மருந்து சாப்பிட்டு இறந்தாலும், தட்டம்மை தடுப்பூசியில் குழந்தை இறந்தாலும், போலியோ சொட்டு மருந்தினால் ஏதோ ஒரு குழந்தை இறக்க நேரிட்டாலும், தடாலடியாக வரும் பதில் இது ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதைத்தான் அவரும் செய்திருக்கிறார்.//


ஆனால் யானைக்கால் நோய் தடுப்பு மருந்து சாப்பிட்டு யாரும் அந்த மருந்தினால் இறக்க வில்லை என்பது உறுதி. அது இயல்பான மரணம் தான் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது

அதே போல் தான் போலியோ சொட்டு மருந்தினால் யாரும் இறக்கவில்லை. அது இயல்பான மரணம் தான் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது. இரண்டும் ஊடகங்களால் பரப்பப்பட்டவை

தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட பின்னர் குழந்தை இறந்தற்கு காரணம் ஒவ்வாமை

மேலும் விபரங்களுக்கு

தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!

இந்த நான்கையும் ஒரே கோணத்தில் அணுக வேண்டாம்

குசும்பன் குறிப்பிட்ட கருப்பை வாய் புற்றுநோய்த் தடுப்பூசி குறித்து நான் எதுவும் கூறவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்

said...

அதே போல் இந்த பரிசோதனையும் ஏற்கனவே ஏய்ம்சில் நடந்த பரிசோதனைகளையும்சேர்த்து குழப்பி கொள்ள வேண்டாம்

எய்ம்சில் நடந்தது வேறு
இங்கு நடந்துள்ளது வேறு

இங்கு நடந்துள்ளது எந்த வித நோயும் இல்லாத ஒரு நபருக்கு நடத்தப்பட்ட ப்ரிசோதனை

மேலும் விபரங்களுக்கு புள்ளியியல், குட்டை பாவாடை, ஏ.ஐ.ஐ.எம்.எஸில் 49 குழந்தைகளின் மரணம் – ஊடகங்களில் சொல்லப்படாத உண்மை என்ன

said...

//அமெரிக்கப் பெண்களை இந்த மருந்து கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து தடுத்துக் காப்பாற்றும் என்றால், இந்தியப் பெண்களுக்கு மட்டும் செயல்பட மறுத்துவிடுமா என்ன?//

பொதுவான தகவல்

சில மருந்துகள் அமெரிக்கர்களுக்கு (அதாவது பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு) பலத்த பின் விளைவை ஏற்படுத்தும். நம் ஆட்களுக்கு (அதாவது பெரும்பான்மை ) எதுவும் செய்யாது

அதேப்போல் சில மருந்துகள் அமெரிக்கர்களை பாதிக்காது இந்தியர்களை அதிகம் பாதிக்கும்

--

இது பொது தகவல் மட்டும் தான். இந்த திட்டத்திற்கு வக்காலத்து அல்ல !!!!

said...

//அமெரிக்க மருந்து நிறுவனம் தனது மருந்தைச் சோதனை அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கும் முன்பாக, அந்த மருந்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தருவதற்காக கணிசமான தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு பிறகுதான் அவர்களைக் களத்தில் இறக்க வேண்டும்.//

இதை முழுவதும் வழிமொழிகிறேன்

said...

பரிசோதனைகள் குறித்து மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜமாலன் பதிவில் நான் எழுதியது

தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் கை நரம்புகளின் திறனை சோதிக்கஒரு பரிசோதனை செய்யஅமேரிக்க மருத்துவர்கள் எண்ணினார்கள். அதன் பிறகு என்ன நடந்தது ???

said...

ஈ படம் பார்த்தீர்களா

மறுபடியும் பாருங்கள்

said...

நன்றி அதிஷா

நன்றி கற்றது கை மண் அளவு

நன்றி சென்ஷி

நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை

நன்றி அகல்விளக்கு

நன்றி சுபைர்

said...

நன்றி ஆல்ரவுண்டர் சார்
//ஆனால் நீங்கள் அத்துடன் சேர்த்து எழுதிய சில விஷயங்கள் குறித்து தெளிவு படுத்த விரும்புகிறேன்//

இதில் நான் எதுவும் சேர்த்து எழுதவில்லை, சிகப்பில் இருப்பவை மட்டுமே நான் எழுதியவை, மற்றவை அப்படியே தினமணியின் தலையங்கம்.

ஈ படம் பார்த்தேன் தலைவரே, அதுபோல் தான் இருக்கு இந்த விசயமும்.

said...

ஆல்ரவுண்டர் புருனோ சார், மீதி நீங்க கொடுத்த லிங்கை எல்லாம் படிச்சுக்கிட்டு இருக்கேன்.

said...

I agree With Dr.Bruno. Generally vaccines are very safe. most deaths due to some other reason rather than due to vaccine.

It is very sad to know deaths due to HBV vaccines. it needs further investigation.. we cant just like that come to a conclusion.

Effects of vaccines may vary from people to people. As Bruno said some tablets are better tolerated by indians but not by americans.

Anyway poor people should not be used as a quinea pig.

Thanks for the post..everybody should know about this..

said...

புருனோ,
ஒவ்வாமை குறித்து உங்களின் பதிவை (http://www.payanangal.in/2009/08/blog-post_27.htmlபடித்துவிட்டே இந்தக் கேள்வி.

1,000,000 த்தில் ஒரு குழந்தை என்றாலும் அந்த பெற்றோருக்கு அது ஒரே குழந்தையாக இருக்கலாம் என்ற உணர்வுடன் மட்டும் இந்தக் கேள்வி.

//தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட பின்னர் குழந்தை இறந்தற்கு காரணம் ஒவ்வாமை/

எந்த ஒரு தடுப்பூசிக்கு முன்னரும் ஒவ்வாமைக்கான சின்னச் சோதனை ஒவ்வொருவருக்கும் செய்ய முடியாதா?
1.பணம் தட்டுப்பாடா? அல்லது 2. டெக்னாலஜி இல்லையா?

(குழந்தைகளுக்கு பேஸ் பெயிண்டிங் face painting என்று பொழுது போக்கிற்காக வரைவது உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் வரயும் முன் சின்ன டெஸ்ட் செய்யலாம்)

said...

குசும்பன்,
மனிதர்கள் ஒரு வகையில் சோதனை எலிகள் போலத்தான்.
வறுமையும் பணத்தேவையும் இப்படி பலரை தெரிந்தே இதில் ஈடுபடச் செய்யும். வளர்ந்த நாடுகளிலும் இது நடக்கிறது. தினந்தோறும் புதிய மருத்துவ/மருந்து ஆராய்ச்சிக்காக சோதனைக்காக மனிதர்கள் தேவை என்று வெளிப்படையாக ஒளிவு மறைவு இல்லாமல் பாதகங்களுடன் விளம்பரங்கள் உண்டு.

Medical Drug Trial Volunteer
Get paid to undergo medicine and health care trials

http://www.gpgp.net/

http://www.ppdi.com/study_volunteers/

http://www.findextrawork.co.uk/drugvolunteer.php

Testing new drugs--the human volunteer.
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1154640/

இந்தியாவில் உள்ள பிரச்சனை..
உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் சோதனை எலியாக்கப்படுவது மற்றும் ஏழைகளை மனிதர்களாகவே நினைக்காத ஒரு அரசியல்/ஆன்மிக பரசவ நிலைச் சமுதாயம்.

said...

//எந்த ஒரு தடுப்பூசிக்கு முன்னரும் ஒவ்வாமைக்கான சின்னச் சோதனை ஒவ்வொருவருக்கும் செய்ய முடியாதா?
1.பணம் தட்டுப்பாடா? அல்லது 2. டெக்னாலஜி இல்லையா?
//

அனைத்து ஊசிகளுக்குமே ஒவ்வாமை சிகிச்சை செய்யலாம்.

டெக்னாலஜி (தொழில்நுட்பம்) உள்ளது. தேவை ஒரு ஊசி மட்டுமே. அந்த மருந்தை எடுத்து 1:100 அல்லது 1:1000 ஆக dilute செய்து அதை தோலில் செலுத்தி பார்க்க வேண்டும்

அவ்வளவே.

பெனிசிலின் ஊசி போடும் முன் டெஸ்ட் டோஸ் போடுவார்களே

அதே போல் தான்

இதில் பணம் என்றால் ஒரு ஊசி (ஒரு ரூபாய் தான்)

ஏன் செய்யவில்லை என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை.

said...

//இந்தியாவில் உள்ள பிரச்சனை..
உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் சோதனை எலியாக்கப்படுவது மற்றும் ஏழைகளை மனிதர்களாகவே நினைக்காத ஒரு அரசியல்/ஆன்மிக பரசவ நிலைச் சமுதாயம்.
//

வருதப்பட வேண்டிய உண்மை

said...

நன்றி டாக்டர் !

**

said...

இன்னும் திரைமறைவில் என்னென்ன நடந்துகொண்டிருக்குமோ என்ற தொடர் சிந்தனையும் எழுகிறது, இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளால். டாக்டர் புருனோவின் தகவல்கள் பயனுள்ளவை.!

said...

இது போன்ற கொடுமைகளை ஜீரணிக்கவே முடியவில்லை. மிக வேதனையாக இருக்கிறது. ஜனநாதனின் 'ஈ' திரைப்படம் இந்தக் கொடுமையைத்தான் தோலுரித்துக் காட்டியது. மிக முக்கியமான பகிர்வு குசும்பன்.

said...

கிராமத்தான்களும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த குடிசைவாசிகளும் எந்தக் காலத்திலுமே இவர்களுக்கு இளப்பம் தான் நண்பரே. அரசியல்வாதிகள் என்னும் இனம் உள்ளவரை தீராத துயரம் இது.

said...

வயிறு எரியுது :((

said...

இதை விட 'ஏழைகள் என்றால் இளப்பமா?' அப்படின்னு போட்டு இருக்கலாம்.. காசு இல்லனா எங்க இருந்தாலும் நிலைமை ஒன்னு தான்..

Anonymous said...

இங்கே ஆஸ்திரேலியாவிலும் புளூ தடுப்பு மருந்துக்கு குழந்தைகள் reaction மோசமா இருந்தது. சிலசமயம் மருந்துகளில் ஒரு பேட்ச் இப்படி ஆகிவிட வாய்ப்பு இருப்பது மிகவும் வருத்தமான விஷயம். இங்கே அரசு உடனேயே தடுப்பூசிகளை நிறுத்தி விட்டது.

http://au.news.yahoo.com/thewest/a/-/newshome/7098968/wa-kids-in-flu-vaccine-alert/

said...

இது பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள். இதை பதிவு செய்தது நல்லது. நானும் என்னுடைய வருத்தத்தை பதிவு செய்கிறேன்.

(இதை தவிர வேறு ஓன்றும் செய்ய இயலாத கையாலாகாதவன் :(

said...

மிக நல்ல பகிர்வு.

said...

முக்கியமான தகவல்

தெரியபடுத்தியதற்கு நன்றி

said...

விழிப்புணர்வுக் கருத்துக்கள்.
சோதனை எலிகளாக பயன்படுத்தும் முன் அவர்களிடம் விரிவாக விளக்கப்பட்டு முன் அனுமதி பெற வேண்டியது மிக அவசியம். கல்வியறிவு குறைந்த கிராமங்களுக்குள் இது போன்ற சோதனை முறைகள் தடை செய்யப்படுதல் வேண்டும்.

said...

:(

said...

நீங்க இங்க பதிஞ்சிடிங்க நான் பதியல .. ஆனால் கோவம் மட்டும் மாறவில்லை ..

said...

:(

said...

:((
தடுப்பூசி ஒவ்வாமை மரணங்களின் போது பையனுக்கு ஊசி போட்டு இரண்டு நாட்கள் பயத்துடனே நகரும்.

said...

:(

said...

//இதைப்பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத நினைத்துக்கொண்டிருந்தேன்.

நல்ல பகிர்வு//

நல்ல வாசிப்பு அனுபவம் தோழர் அதிஷா

said...

:(

said...

எந்த ஒரு தடுப்பூசிக்கு முன்னரும் ஒவ்வாமைக்கான சின்னச் சோதனை ஒவ்வொருவருக்கும் செய்ய முடியாதா?
1.பணம் தட்டுப்பாடா? அல்லது 2. டெக்னாலஜி இல்லையா?

(குழந்தைகளுக்கு பேஸ் பெயிண்டிங் face painting என்று பொழுது போக்கிற்காக வரைவது உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் வரயும் முன் சின்ன டெஸ்ட் செய்யலாம்)
April 24, 2010 7:52 AM-----


நார்வேயில் நான் வசிக்கும் ஊரில் குழந்தைக்கு ஊசி போடுவதற்கு முன் தோலில் சிறிய அளவில் டைலியூட் செய்து போட்டு பார்ப்பார்கள்.

நல்ல இடுகை குசும்பன்.

said...

நல்ல பகிர்வு... :(

said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

said...

நன்றி இரவி
புருனோவும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.